ஈரவிழிகள் 24

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுந்தரம் ஒன்றும் பரம்பரை பணக்காரர் அல்ல... இந்தியாவில் அதுவும்.. தமிழ்நாட்டில் போடிநாயக்கனூரில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தினமும் கஷ்ட ஜீவனில் வாழ்க்கையைத் தள்ளிய ரத்தினம் – கோமதி தம்பதியரின் மூத்த மகன். ரத்தினம் உழைப்புக்கு அஞ்சாதவர். ஆனால் அவர் உடல் தான் அதற்கு ஒத்துழைக்காது. ஏலக்காய் எஸ்டேட்டில் தினக்கூலிக்கு வேலை செய்யும் அவர் பிள்ளைக் குட்டிகளை வளர்க்க உழைப்பாரா... இல்லை திருமணத்திற்கு முன்பே வாங்கி வைத்திருந்த கடன் எல்லாம் வட்டி போட்டு குட்டி போட்டி அவர் பின்னால் நாய் குட்டியாய் திரிவதை அடைப்பாரா... இதில் மனிதர் உடல் நோக உழைக்கும் அளவுக்கு அதைப் போக்க குடிக்கவும் செய்வார்.

அப்படி பட்டவருக்கு மூத்த மகனாய் சுந்தரம் பிறந்த அன்று குழந்தையைக் கையில் வாங்கிய போது அவர் சொன்ன வார்த்தை, “அப்பாடா.... என்னை உட்கார வச்சு சோறு போட... எனக்குன்னு ஒரு சிங்கக்குட்டி பொறந்துட்டான்....” இது தான்.

அவர் சொன்னமாதிரியே ஐந்தாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தவர் தான் சுந்தரம். சுந்தரத்தின் ஏழாவது வயதில் மூத்த தங்கை கலா பிறக்க... அதன் பிறகும் கஷ்ட ஜீவனம் தான். ஆயிற்று.. அப்படி இப்படி என்று காலங்கள் உருண்டோட.. ஒரு நாள் மலேசியாவில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று இந்த ஊர் எஸ்டேட் முதலாளி அறிவிக்க... முதல் ஆளாய் முண்டியடித்துக் கொண்டு ஓடிச் சென்று வரிசையில் நின்ற சுந்தரத்தின் அப்போதைய வயது பதினேழு.

தாய் கோமதி அப்போது உண்டாகியிருக்க... “ய்யா சுந்தரம், இந்த நேரத்தில உன் அப்பா கடல் தாண்டக் கூடாது அதான்...” இது தாயின் வார்த்தை.

“எனக்கு நோய் இல்லனா நான் போயிருப்பேன் சுந்தரம்...” இது தந்தை. இருவரும் பேருக்கென்று மகனை அனுப்புவதிலே குறியாய் சமாதான வார்த்தைகளை சொல்ல.. இவர்களுக்கு முன்பே முடிவு செய்து விட்ட சுந்தரம் பெற்றோரின் வார்த்தையை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

ரப்பர் எஸ்டேட்டில் வேலை என்று அழைத்துச் சென்ற சுந்தரத்தை அந்த வேலையை தவிர எல்லா வேலையையும் செய்ய சொன்னார்கள். இருபது மாடி கட்டிடமாக இருந்தாலும் பெருக்கித் துடைக்க வேண்டும். ஹோட்டலில் வேலை என்றால்.. அங்குள்ள கட்டில் விரிப்பையும்.. திரைச்சீலைகளையும் துவைத்து எடுக்க வேண்டும்.. ஒரு நாள் மரம் வெட்ட வேண்டும்.. இப்படி ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வேலை. சில நேரத்தில் கழிவறையைக் கூட சுத்தப்படுத்த வேண்டும்.

சில நேரங்களில் முதலாளிகளின் வீட்டிற்குச் சென்று அவர்கள் இடும் வேலையையும் செய்ய வேண்டும்.. அதில் அவர்கள் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு பல் தேய்த்து விடும் வேலையும் ஒன்று. சுந்தரத்தைப் போல் படிப்பறிவில்லாத முக்கால் வாசி ஜீவன்களின் வெளிநாட்டு வாழ்க்கை இப்படி தான்.

சுந்தரத்திற்கு மட்டும் இப்படி என்றால் ஏதோ தட்டி கேட்கலாம்... கூட வந்தவர்கள் அனைவருக்கும் சுந்தரத்தின் நிலை தான் என்றால்... காற்று கூட புக முடியாத சிறிய பொந்து போன்ற ஒரு அறையில் நல்ல திடகாத்திரமான ஆண்கள் பத்து பேர் தங்கியிருக்க.. கையை காலை நீட்டி கூட படுக்க முடியாத நிலை. மேற்கொண்டு இதில் தானே சமைத்து உண்ணும் உணவு அவர்களுடையது... அதில் மணமோ.. ருசியோ இருக்காது. ஒரு கேளிக்கை இல்லை... விழா.. பண்டிகை... நாள் நட்சத்திரத்தில் குடும்பத்துடன் கொண்டாட பாக்கியம் இல்லை.

இந்த வயதிற்கே உள்ள விருப்பங்களான மது.. புகை..... ஏன் பெண்கள் வரை ஒதுக்கி வைத்தார் சுந்தரம். இவர்கள் வருமானத்திற்கு ஏற்ற சில கேளிக்கை இடங்கள் இருக்க.. அதற்கு கூடயிருப்போர் போனாலும் இவர் போக மாட்டார். அங்கு போகவும் காசை தானே செலவு செய்யணும். அது இருந்தா இந்த மாதம் கூடுதலாய் ஊருக்கு அனுப்பலாம்… ஆசைப்பட்டதை சாப்பிட மனமில்லாமல் வயித்தைக் கட்டி வாயைக் கட்டி என்று வாழ்ந்து கொண்டிருந்த சுந்தரத்தின் வாழ்வில் அப்போது நுழைந்தார் சொக்கலிங்கம்.

மலேசியாவில் மூன்று தலைமுறையாய் வாழும் தமிழர்.. பெரும் செல்வந்தர். சுந்தரத்தின் உழைப்பைக் கண்டு மெச்சியவர் அவனை அரவணைத்துக் கொண்டார்... அதற்காக பணத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல் இல்லை அவர். அதே உழைப்புக்கேற்ற ஊதியத்தை நியாயமாய் தருபவர்.

அவர் தயவால் ஐந்து வருடம் கடந்து சுந்தரம் தாய் மண்னை மிதிக்க... அவனை வரவேற்றது... பிறந்து பத்து நாட்களே ஆன அவனின் கடைசி தங்கை தான்... அவளுக்கு ஏழிசைவள்ளி என்று பெயர் வைத்ததே சுந்தரம் தான். தான் உண்டானதையோ இல்லை மகள் பிறந்ததையோ பெற்றவர்கள் அவனிடம் சொல்லவில்லை. இப்போது மாதிரி அப்போதெல்லாம் என்ன கைப்பேசியா இருந்தது போனில் நேரலையில் பேசிக் கொள்ள… மகன் வந்த பிறகும் அவர்கள் மகள் விஷயத்தில் அலட்டிக் கொள்ளவில்லை.

சுந்தரமும் எதுவும் கேட்கவில்லை… தான் வாங்கி வந்த பொருட்களில் தாய்க்கு உரிய புடைவையைத் தந்தவன்... தந்தைக்கு கைக்கடிகாரத்தை தந்து.. பெரிய தங்கைக்கு தங்கத்தால் ஆன சங்கிலியைத் தர... “என்ன ணா... இது… பவுனா... என்னமோ ஆட்டு ரோமம் கணக்கா... இத்தனை மெல்லிசா இருக்கு... வாங்கிட்டு வந்தது தான் வந்த... கனத்து தெரியற மாதிரி நல்லா பெருசா காசு மாலையா வாங்கிட்டு வந்திருக்க கூடாது...” இப்படி நொடித்துக் கொண்ட அவனின் தங்கைக்கு அப்போது வயது பதினைந்து. தங்கையின் பேச்சில் இவன் பெற்றோரைக் காண... அவர்களோ நல்லா கேளு என்பது போல் தான் அமர்ந்திருந்தனர்.

சின்ன தங்கை ரேகா பிறந்தது அவனுக்கு தெரியும்... அதனால் அவளுக்கு சில உடைகள் வாங்கி வந்திருந்தான். ஆனால் வள்ளி பிறந்திருப்பது அவனுக்கு தெரியாதே... பாயில் படுத்திருந்த அவளைக் கண்டவன், “குட்டி பாப்பா... நீ பொறந்தது அண்ணனுக்கு தெரியாது டா... அதான் செல்லம் உனக்கு எதுவும் வாங்கி வரல... நாளைக்கு டவுனுக்கு போய் உனக்கு விளையாட்டு பொம்மை வாங்கி வரேன்...” பிறந்து பத்து நாட்களே ஆன வள்ளியிடம் இவன் பேச்சு கொடுக்க... பொம்மை என்றதும் இவனிடம் தயங்கித் தயங்கி வந்து நின்றாள் ஐந்து வயதேயான ரேகா.

அவள் முகத்தில் ஆசையைப் பார்த்தவன், “என்ன சின்ன பாப்பா உனக்கும் விளையாட்டு பொம்மை வேணுமா.. நாளைக்கு என் கூட டவுனுக்கு வா... அண்ணா வாங்கி தரேன்...” இவன் சொல்லவும்... சந்தோஷத்தில் பாவாடையை வாயில் வைத்து கடித்தபடி சிரித்தாள் அவள்.

தான் சொன்ன மாதிரியே டவுனுக்கு போய் இவன் வங்கி வந்து பொருட்களை குவிக்க.. வயிறு எரிந்தது கலாவுக்கு. எந்நேரமும் ரேகா சட்டையில்லாமல் பாவாடையுடனே இருக்கவும்.. “ஏன்... பெரிய பாப்பா... நான் எவ்வளவு உடுப்பு வாங்கி வந்தேன்... அதில் ஒன்றை சின்ன பாப்பாவுக்கு போட்ட தான் என்ன...” இவன் பெரிய தங்கையிடம் கேட்க

“இவ மண்ணுல புரண்டு அழுக்கு பண்றா ண்ணா... அதான்...”

“பரவாயில்லை பாப்பா... போட்டு விடு...” சுந்தரம் இதமாய் சொல்ல

“என்னத்த பரவாயில்ல... அழுக்கானா நான் தான் துவைக்கணும்... வேணும்னா துணி துவைக்க வெளிநாட்டிலே எல்லாம் மிசின் இருக்காமே.. அது ஒண்ணு வாங்கி தா... அப்போ வேணா இவளுக்கு போட்டு விடுறேன்... சும்மா.. சும்மா.. துணியை போடு.. தலை சீவு… சோறு ஊட்டுனு என்னை ஏவிக்கிட்டு..” கலா சத்தம் போட...

‘எதைப் பேசினாலும் தங்கை பணத்திலே வந்து நிற்குதே...’ என்ற எண்ணதில் இவன் தாயைக் காண... அவரோ இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தார்.

அதன் பின் சுந்தரம் வாயை திறப்பதே இல்லை... வெளி திண்ணையில் பாயை விரித்து.. மற்ற இரண்டு தங்கைகளுடன் கலந்து விடுவான். அண்ணன் இரண்டு தங்கைகளுடனும் சிரித்து பேசுவதைப் பார்த்து... அதற்கும் வயிறு எரிவாள் கலா.

“ஏன் ணா... நாள் முச்சூடும் இதுங்க கூடவே இருக்கீயே.. ஏன் கழனி காடுன்னு நீ வேலைக்கு போனா தான் என்ன.. லீவில் வந்த இதுங்க கூடவே இருக்கணுமா...” தங்கை இப்படி சொன்ன வார்த்தையில்.. அப்போ நாம் இங்க அதிகப்படியோ என்ற எண்ணம் அப்போது தான் சுந்தரத்துக்குள் எழுந்தது.

ஒரு நாள் இவன் வெளி திண்ணையில் வள்ளியை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க... அந்த பக்கம் போன சில பெருசுகள், “என்ன சுந்தரம்.. உன் வயசுலே இருக்கிற நம்ம ஊர் பயலுங்க எல்லாம் கல்யாணம் கட்டி தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போயிருக்கானுங்க... நீ என்ன ணா உன் தங்கச்சியை வச்சு கொஞ்சிகிட்டு இருக்க போல...” என்று கேட்க

இன்னும் ஒரு சிலர் “உன் அப்பன் சொல்லிகிட்டே இருப்பான்... என் பையன் வெளிநாட்டிலே வேலை செய்யறான்... நான் கால் மேலே கால் போட்டுகிட்டு சும்மா உட்கார்ந்து சாப்பிட்டாலே போதும்னு... சும்மா சும்மான்னு சொன்னவன் இப்படி ஒரு வேலை செய்வான்னு நெனைக்கல..” வள்ளியை சுட்டிக் காட்டி கேலி செய்து சிரிக்க... சுந்தரத்திற்குள் எந்த சலனமும் இல்லை. இந்த இருபத்திரண்டு வயதில் ஓங்கு தாங்குவாய் இருந்த சுந்தரத்தின்... உள்ளமோ ஐந்து வயது ரேகாவை ஒத்துதான் இருந்தது.

அன்று உள்ளே நுழைந்த ரத்தினம், “கோமதி... இன்னைக்கு என்னமோ உடம்பு அதிகமா படுத்தி எடுக்குது... இந்த கருப்பனை (அவர்கள் வளர்க்கும் ஆடு) துண்டு போட்டு... கொஞ்சம் நெஞ்செலும்பு சூப்பு வச்சு குடு...” என்க... கணவனின் பேச்சுக்கு தடபுடலாய் அன்று சமையல் நடந்தேறியது.

தந்தைக்காக கறி சோறு சமைத்ததை பற்றி சுந்தரத்திற்கு வருத்தம் இல்லை. ஆனால் வந்த இத்தனை நாளில் ஒரு நாள் கூட மகனுக்காக தாய் கோழியோ.. ஆட்டையோ அடித்தது இல்லை.. அதைவிட சமைத்து கொடுத்து அன்பாய் பரிமாறியது இல்லை. இதையெல்லாம் விட சாப்பிடும் போது தந்தை சொன்ன வார்த்தை தான் சுந்தரத்தை சுட்டது.

“இதெல்லாம் என்ன கறி சுந்தரம்... அங்கே நீ வாழுற நாட்டிலே.. தினந்தினம் மீனு.. கறி தானாமே... எல்லாமே இந்த இந்தா தடிசுக்கு இருக்குமாமே. மூணாவது தெரு மூர்த்தி சொல்வான். உன்னைய மாதிரி இல்ல... நாங்க எல்லாம் எப்போவாது தான் இப்படி கறி சோறு பார்க்கிறோம்...” அவர் சொன்ன வார்த்தையில் வாரத்தில் நான்கு நாள் கஞ்சி சோறு தின்றது எல்லாம் சுந்தரத்திற்கு நினைவு வந்தது.

‘வெளிநாட்டு வாழ்க்கைனா.. சொகுசு வாழ்க்கை!’ இதை தானே இவர்கள் எல்லாம் நினைத்திருக்கிறார்கள். மூன்று மாத விடுமுறையில் வந்த சுந்தரத்தால் ஒரு மாதம் கூட கடக்க முடியவில்லை. அதனால் விடுமுறையை ரத்து செய்து விட்டு சுந்தரம் ஊருக்கு திரும்ப போவதாய் அறிவிக்க... உடனே ஆளாளுக்கு பட்டியலியிட்டனர்.

“சுந்தரம் இந்த எதிர் பல்லு ஆடுது... அதான் பல்லு கட்டலாம்னு இருக்கேன்... மூர்த்தி கூட சொன்னான்... உன் பையன் வெளிநாட்டிலே இருக்கிறதுக்கு... நீ தங்கப் பல்லே கட்டலாம்னு... அதுக்கு கொஞ்சம் காசு அனுப்பிடுப்பா...” இது தந்தை.

“அண்ணா நான் பள்ளிக்கூடம் போக எனக்கு சைக்கிள் வாங்கி தந்துட்டு போ ண்ணா...” இது மூத்த தங்கை கலா.

“யப்பா சுந்தரம்.. உன் அப்பா உறவில் மூணாம் பங்காளி.. முறைனு பார்த்தா உனக்கு அவ அத்தை உறவு... எனக்கு அவ நாத்தி முறை ஆகுது... ஏதோ கெப்பு கல்லு அட்டிகையாம்... காசு ஜாஸ்தின்னு பீத்திக்கிறா... நான் விடுவேனா.. என் புள்ளை வெளிநாட்டில் இருக்கான்... நானும் வாங்குவேன்டினு சொன்னேன்... அத வாங்க செத்த காசு அனுப்பிடுப்பா...” இது தாய்... இதை எல்லாம் கேட்டார்களே தவிர.. உனக்கு வேலை சிரமமா இருந்தா இங்க எங்களோட இரு என்று சொல்லவில்லை… வெளிநாட்டு வாழ்க்கை சிரமம் என்று யாராவது சொல்லி கேட்டாலும்.. அட கை நிறைய காசு தரான் அப்போ சிரமம் கொஞ்சம் இருந்தா.. பதமாதான் போகனும் என்று நினைத்தார்கள் அவனின் பெற்றோர்.. எல்லோரும் கேட்டதற்கு இவன் சரி சரி என்று சொல்ல.. கடைசியில் இவனுக்கு என்று பார்க்க அங்கு யாருமே இல்லை.

இவன் ஊருக்கு திரும்பி மறுவாரமே பெரிய பட்டியலுடன் கடிதமே வந்தது தாயிடமிருந்து... “சுந்தரம்... கலாவுக்கு இப்போ வயசு பதினஞ்சு.. இன்னும் நாலு வருஷத்திலே அவளைக் கட்டி குடுக்கணும்... வரன் தேடிட்டு இருக்கேன்... அதுக்கு முன்னாடி கல்லு வச்சு வீட்டை கட்டிடணும் சுந்தரம். இப்படி ஓலை வீடும் மண் தரையுமா இருந்தா.. பொண்ணு கேட்டு எப்படி வருவாங்க... அதுக்கு காசு அனுப்பிடு... அப்படியே அரசாங்கத்துகிட்ட எழுதிக் கொடுத்தா... கரண்ட் தந்துடுவாங்களாமே.. நாமளும் எத்தனை நாளைக்கு சுந்தரம் சிமிழ் விளக்குலேயே வாழறது. முன்னாடி எப்படியோ இப்போ என் புள்ள வெளிநாட்டில் இருக்க... இது ஏன்... அதுக்கும் காசு வேணும் சுந்தரம்...” இப்படியாக ஒரு நீண்ட கடிதம்.

‘நல்ல மாதிரி ஊருக்கு போய் சேர்ந்தியா... சாப்பிட்டியா... உடம்பை பார்த்துக்கோ... கவனமா இரு...’ இப்படியான அன்பான வார்த்தைகளோ.. அனுசரணையான பேச்சுகளோ அந்த கடிதத்தில் இல்லை. சுந்தரத்திற்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.

சுந்தரத்தின் பெற்றவர்களும்... உடன்பிறப்புகளும்... உறவினர்களும்... நண்பர்களும்.. இப்படி அனைவரும் எண்ணியது சுந்தரம் வெளிநாட்டில் சொர்க்க புரியில் வாழ்கிறான் என்று தான். ஆனால் அவன் பணமிருந்தும்.. உறவுகள் இருந்தும் ஏழை என்பதை யாரும் அறியவில்லை.. அறிந்து கொள்ள விழையவும் இல்லை.

ஆயிற்று... தாய் கேட்டபடியே இவன் பணத்தை அனுப்ப... பெரிய மச்சு வீடு இல்லை என்றாலும் சிறிய ஓட்டு வீட்டைக் கட்டினார்கள். வீட்டுக்கு குடி போக கூட சுந்தரம் வரவில்லை.. “பரவாயில்லை சுந்தரம் நீ அங்கேயே இருந்துக்க... நானும் அப்பாரும் பார்த்துக்குறோம்...” இப்படி தாய் சொன்ன பிறகு அவன் என்ன செய்வான்.

அடுத்து தங்கைக்கு திருமணம் முடிவாகியிருக்கு என்று கடிதம் வர... அப்போது மட்டும் ஊர் போஸ்ட் ஆபீசில் உள்ள போனுக்கு தாயை அழைத்துப் பேசினான். தங்கையை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டுமே என்ற கவலை அவனுக்கு.

“சுந்தரம், மாப்பிள்ளை.. நம்மளை மாதிரி கூலி வேலை செய்றவர் இல்ல யா... சிங்கப்பூர் எஸ்டேட்டில் கணக்கு பார்க்கிறவரு... ஒரே பையன்... அக்கா ஒருத்தி... அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத வரன். மாமியார் மட்டும் தான்.. அதான் கொஞ்சம் கூட குறைய ஆனாலும் பரவாயில்லைனு பேசி முடிச்சிட்டேன்.

ம்ம்ம்… கலாவுக்கு புடிச்சிருக்கு… நம்ம கலாவுக்கு ஒரு நாப்பது சவரன்... மாப்பிள்ளைக்கு ஒரு வண்டி... அப்புறம் சீர் செனத்தி... இது இல்லாம கலா நிறைய சலங்கை வச்ச கொலுசு கேக்கிறாப்பா. அப்படியே நறுவுசா... வெளியே தெருவுக்கு கட்டிகிட்டு போக... பகட்டா நல்ல விலையில ஐந்து.. ஆறு காஞ்சிபுரம் பட்டு கேக்குறா யா. அதென்னமோ அவளுக்கு பொழுது போகனுமாமே.. ஒரு டிவி பொட்டியும் கேக்குறா சுந்தரம். நீ யாருக்கு சம்பாதிக்கிற.. உன் தங்கச்சிங்களுக்கு தானே.. அதான் வாங்கி தந்துடலாம்னு இருக்கேன்.

ம்ம்ம்... என்னது உன்னாலே வர முடியாதா... சரி... சரி... இருக்கட்டும் இருக்கட்டும்.. நமக்கு பொழப்பு தான் முக்கியம் யா. ஆங்... இதான் இதத் தான் நான் உன் தங்கச்சி கிட்ட சொன்னேன்... உன் அண்ணனாலே வர முடியலனாலும்.. உனக்கான பணங்காசை எண்ணி வச்சிடுவான்... அவன் எங்கே இருந்தாலும் காசு மட்டும் வந்துடும்னு சொன்னேன். சரி சுந்தரம் அனுப்பிடு... நாங்க இங்க பார்த்துக்கிறோம்...” மகன் திருமணத்திற்கு வரவில்லையே என்ற விசனம் இல்லாமல்... கோமதி பணம் பற்றியே பேச.. வேதனையுடன் அழைப்பைத் துண்டித்தான் சுந்தரம்.

தமையன் வராமலே தங்கை கலாவின் திருமணம் நடந்தேறியது. பெண்ணின் திருமணத்தை முடித்த மறுவருடமே ரத்தினம் மாரடைப்பில் இறந்துவிட.. தந்தையின் இறுதி காரியத்திற்காக தாய் மண்ணை மறுபடியும் மிதித்தான் சுந்தரம்.

தந்தையின் பதினாறாம் நாள் காரியம் முடிவதற்குள் தாய் கோமதியும் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் இறந்துவிட... இருவரின் அன்பில் சிலிர்த்தவனோ... ஒரு சேர இருவருக்கும் செய்யவேண்டிய அனைத்தும் செய்து முடித்து நிமிர... வீட்டின் மேல் கடன் என்றார்கள். இன்னும் சிலர் எங்களுக்கு கடன் பாக்கி என்று சொல்லி வந்து நின்றார்கள்.

சுந்தரத்திற்கே அதிர்ச்சி தான்.. ‘நான் இவ்வளவு நாள் அனுப்பின பணம் எல்லாம் எங்க போச்சு?!’

அவனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த ஒரு உறவுக்கார பெரியவர், “சுந்தரம் எதிலுமே விரலுக்கேத்த வீக்கம் வேணும் யா... பையன் வெளிநாட்டில் இருக்கான்னு பகட்டுக்காக வாழறதும்... அதே பகட்டைக் காட்ட... உறவு முறைகளுக்கு வாரி கொடுக்கறதும்... அதே பகட்டுக்காக சபையை நிறைக்க சீர் செய்யறதும்... இதெல்லாம் தேவையா சுந்தரம்..

இதை தான் உன்னைய பெத்தவங்க செய்தாங்க. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்வாங்க. நீ அளந்து போடாம... கொட்டி தான் கொடுத்த... அதனாலே வாரத்துக்கு ரெண்டு சினிமா.. நெனச்சதை வாங்கி பூட்டிக்கிறது... இது உன் தங்கச்சி.

எவனோ முகம் தெரியாதவனுங்க கிட்ட எல்லாம் கொள்ள பணத்துக்கு ஆசைப்பட்டு... சீட்டு கட்டி ஏமாறது... இது ஒரு தடவை இல்ல... பல தடவை. யாரு பேச்சை தான் ரத்தினமும்... கோமதியும் கேட்டாங்க.. ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிட்டாங்க யா.. இது தான் நடந்துச்சு சுந்தரம்... பொறுப்பற்ற பெற்றோர்க்கு இப்படி ஒரு பிள்ளையானு… உன்னைய நெனச்சு பெருமைப் பட்ட நானு இப்போ வருத்தப்படறேன் யா” அவர் சொல்லி முடிக்க... சுந்தரத்திற்கும் புரிந்தது.

ஆனால் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் என்பது போல் இப்போது புரிந்து என்ன... பெற்ற தாய் தந்தையரை நம்பி எதையும் கேட்காமல் நடந்து கொண்டது தப்போ என்று காலம் கடந்து உணர்ந்தான் அவன். அதன் பிறகு இரண்டு தங்கைகளையும் கலாவிடம் விட்டு விட்டு மறுபடியும்... உழைக்க கானகம் ஓடினான் அவன். அப்படி எல்லாம் ஓடி உழைத்த சுந்தரம் இன்று கோடீஸ்வரன். ஆனால் இவைகளை அடைய அவன் இழந்தவைகள்?...
 
Last edited:
C

Chitra Purushothaman

Guest
Adadaa... Ippadiyum sila petror! Very nice epi.
Romba wait pannen, daily edhirpaathen!😁
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Adadaa... Ippadiyum sila petror! Very nice epi.
Romba wait pannen, daily edhirpaathen!😁
அதீத வேலை சிஸ் அதான் தர முடியலங்க.. இனி epi வந்துடுங்க ம்மா.. நன்றிங்க சிஸ்🤗🤗♥️♥️🌹🌹
 
V

Veera

Nice epi
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN