நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

மாற்றம் -6 👍

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -6
ரோஜா வீட்டிற்கு வந்து பேசிட்டு போனதிலிருந்து ஆர்யாவின் மனது அவளை இன்னும் ஆழமாக காதலிக்க வைத்தது. கண்களை எதிர்நோக்கியபடி பேசும் அவளுடைய தைரியமும், பிரச்சனைக்கு தீர்வு காணும் அவளுடைய நல்ல உள்ளமும் அவனுக்கு பிடித்துபோயிற்று.

'ரோஜா..ஐ..லவ்.யூ' என்று அவளிடம் சொல்லனும் போல இருந்தாலும் அவனால் தற்போதைக்கு சொல்ல முடியாது ஏனெனில் ராஜேஷின் பிரச்சனையே இன்று தான் முடிந்தது. இன்னும் என் பங்குக்கு காதல் அது இது என அவளிடம் போய் நின்றால் அவ்வளவு தான் குடும்பமே தறுதலை என்று நினைத்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை எனவே இப்போதைக்கு எதுவும் சொல்லாமல் மௌனமாகவே ஒருதலையாய் காதலிப்பது நல்லது..

என்று நினைத்தவாறு செமஸ்டர் தேர்வுக்கு படிக்க புத்தகத்தை புரட்டினான்.
எப்படியோ ரேகாவின் வாழ்வில் விடிவுகாலம் வந்துவிட்டது என்பதை நினைத்து த்ரிப்தி அடைந்தவளாய் நிம்மதி பெருமூச்சு விட்டவள் தன் வேலையை கவனிக்க துவங்கினாள். திடிரென அய்யோ அம்மா என்ற சத்தம் கேட்டவள் ஓடிச்சென்று பார்க்க அங்கு கழிவறையில் வயிற்றை பிடித்துக்கொண்டு நின்ற ராதாவை கண்டாள்...

"ராதா..என்னம்மா ஆச்சு" என்றாள் கண்ணத்தில் கை வைத்து.

"அக்கா..அக்கா..எனக்கு " என்று ரத்தம் கசிந்த தனது ஆடையை எடுத்து காட்ட ரோஜாவிற்கு எல்லாம் புரிந்து போனது ,தனது தங்கை புஷ்பவதி ஆகிவிட்டாள் என்று. சந்தோஷத்தில் சிரிப்பு துளிர்விட்டது.

"அக்கா...எனக்கு பயமா இருக்கு" என்று அழுத தங்கையை தேற்றியவள் "இங்க பாருடா உனக்கு ஒன்றுமில்லை நீ நல்லா தான் இருக்க..இது எல்லா பெண்பிள்ளைகளுக்கும் நடக்குற இயல்பான விஷயம். அழாத டா அக்கா இருக்கேன்ல...

வயது பதிநான்கு (14) ஆகிவிட்டது, போக போக அவளுக்கே எல்லாம் விளங்கிவிடும் என்பதை நினைத்தவள், முதல் நாள் மஞ்சள் தண்ணீர் ஊற்ற ஏற்பாடு செய்தாள் பக்கத்து வீட்டில் இருக்கும் கலை,கலையின் தாயின் துணையுடன்.

கலையின் தாயோ எண்ணெய் நிலங்கு வைத்து பின்பு ஜல்லடையில் தலைமேல் பிடித்து சுற்றி நின்றவாறு கலையும், ரோஜாவும் நீராட்டினர். ராதாவை அலங்காரம் செய்த கலை

"ஆத்தி,என்ன அழகு டி நீ" என்றாள் சிரித்துக்கொண்டே..

"ஏன் நான் அழகு இல்லையாடி" என்றாள் செல்லமாக கடிந்து கொண்டபடி ரோஜா.

"அடியேய் ரோஜா நான் என்னமோ உலக அழகி போட்டி நடத்துற மாதிரியும் அதுல உன் தங்கச்சியை செலக்ட் பண்ணி உன்னை ரிஜக்ட் பண்ணிட்ட மாதிரியும்..போடி போ..போய் ராதாவுக்கு பால் கொண்டு வா சூடா என்றாள்.

ம்ம்ம் க்கும் என்று முகத்தை சுளித்தவாறு சமையலறைக்கு சென்று பால் காயவைத்தவள்..
'ச்ச இந்த அழகான நிகழ்வு எல்லாம் பாக்குறதுக்கு அப்பா அம்மாவுக்கு கொடுத்து வைக்கல..அப்பா நீ இல்லாமல் தனி ஆளா நின்று கண்டிப்பாக தங்கச்சியை பத்ரமா பாத்துக்கிட்டு அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்ததும் கல்யாணம் பண்ணி வைப்பேன் பா, அம்மா நீ இருக்க வேண்டிய இடத்துல இருந்து ரவிக்கும் ராதாவுக்கும் அன்பு காட்டி வளர்ப்பேன் மா.." என்று கண்ணீர் சிந்தியபடி மனதினுள் சொல்லியவள்...பால் பொங்குவதை கண்டு சுயநினைவுக்கு வந்து அடுப்பை அணைத்து ஒரு குழுவையில் பால் ஊற்றி எடுத்து வந்து ராதாவிற்கு தந்தாள்.

"அம்மாடி ரோஜா நம்ப ராதா தூங்குறப்ப தலைமாட்டில் அடுப்புக்கரி வை.. உள்ளங்காலில் கண்மை வச்சிவிடு..அப்பத்தான் இந்த மாதிரி நேரத்தில் கெட்டது எதுவும் அண்டாது" என்று கலையின் தாய் கூறிவிட்டு...

"ஏய் கலை நீயும் வா நைட்டுக்கு சமைக்கனும்" என்று அழைத்துக்கொண்டு செல்ல தற்போது ரோஜா, ராதா, ரவி மட்டும் தனியாக இருக்க...

"அக்கா..இன்னைக்கு நான் சமைக்கட்டுமா" என்றான் ரவி.

"ஏண்டா"

"இன்னைக்கு முழுக்க வேலையா இருந்த அதான் என்றான்"

"பரவாயில்லை டா நீ ராதாவோட பேசிட்டு இரு நான் பத்து நிமிஷத்துல சமைச்சு எடுத்து வரேன்" என்று கூறிவிட்டு செல்ல...

"ராதா அக்கா"

"என்னடா ரவி"

"உனக்கு என்ன நடந்துச்சு என்று எனக்கு தெளிவாக புரியவில்லை ஆனால் ரோஜா அக்கா சந்தோஷமா இருக்கிறத பாக்குறப்ப ஏதோ நல்லது நடந்துருக்கும் என்று புரியுது. நம்ப வீடு எப்பவுமே இப்படி சந்தோஷமா இருக்கனும்" என்றான்.

"அடேய் பெரிய மனுஷா..உனக்கு இவ்வளவு எல்லாம் பேச வருமா" என்று நகைத்தாள் ராதா.

"ஹாஹா"
.......

நாட்கள் மெல்ல நகர துவங்கியது. ஆகாஷ் தனது ஊருக்கு புரப்பட ஆயுத்தமானான். தனது காதல் விவகாரத்தை இன்னும் பங்கஜமிடமோ அல்லது தனது தாயிடமோ உரைக்கவில்லை...

போகுவதற்கு முன் ஒருமுறை ஆராதனாவிடம் பேசிவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்தவன்,அவளை தனியே சந்திப்பதற்காக ரயில்வே நிலையத்திற்கு வரவழைத்தான். முதலில் இவன் சென்றுவிட ரயில் கிளம்ப இன்னும் கால்மணி நேரம் இருக்கும் பட்சத்தில் விரைந்து வந்தாள் ஆராதனா

"வந்துட்டியா..ப்பா எங்க உன்னை பார்க்க முடியாதோனு பயந்துட்டேன்" என்றான் ஆகாஷ்.

"ஆகாஷ் திரும்பி எப்ப வருவீங்க"என்றாள் ஏக்கத்துடன்

"திரும்பி வரப்ப என் அப்பா அம்மாவோட வருவேன் உன்னை சம்மந்தம் பேச" என்றான் தன் இதழ்களில் புன்னகையை விரித்தபடி.

"கண்டிப்பாக வருவீங்கள"?"

"வரலைனா நான் செத்துட்டேனு நினைச்சுக்க" என்றான் சமாதனம் செய்ய...

"ச்சு என்ன பேச்சுங்க இது அபசகுணமா" என்றாள் புருவத்தை சுருக்கியபடி.

"பின்ன என் மேல் நம்பிக்கை வர நான் என்ன செய்றது, இங்கபாரு அடுத்த மாசம் நான் அப்பா அம்மாவை கூட்டிட்டு வரேன் நீ தைரியமா இரு." என்றான்...

ஜன்னல் இம்பிகளில் கை வைத்திருந்த அவளது கையை தனது கைக்குள் வைத்தவன்...

"லவ் யூ ஆராதனா" என்றான். அவளது கண்களில் ஏக்கங்கள் மிகுந்திருந்தது. ரயில் கிளம்ப ஒலி எழுப்பியது. அவனது கைகளை விலக்கிக்கொண்டான். அவளும் தன் கைகளை தன் பக்கம் எடுத்துக்கொண்டு கையசைக்க துவங்கினாள். ரயில் கிளம்பியது. ஜன்னல் இருக்கையில் அமர்ந்தபடி கையசைத்தான் ஆகாஷ்.

ஆகாஷ் ஆராதனா ஒன்று சேர்வார்களா விதி என்ன செய்ய போகிறது.

தொடரும்
 

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் -6 👍
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Note:DONT NOT POST YOUR STORY HERE,ONLY COMMENTS SHOULD BE POST HERE

All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top