மாற்றம் -7

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -7
(இன்று என்ன மாற்றம் வாருங்கள் கதை உள்ள போகலாம்)

பெங்களூர் சென்றுவிட்ட நிலையில் தனது அன்றாட பணியில் மூழ்கியவன் காதலை மறக்கவில்லை என்றாலும் அதை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் போனது,இடைஇடையில் அவளிடம் அழைப்பேசியில் உரையாடுவதும் உண்டு ஆனால் கல்யாணம் பற்றி இன்னும் எதுவும் பேசவில்லை.

இதற்கிடையில் தான் தூரத்து உறவு என்ற பெயரில் ஆராதனாவை பெண் பார்க்க வந்திருந்தனர்.
"ஆரு, உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா" என்றார் பரிமளம்.

"மா ப்ளீஸ் இப்ப எதுவும் கேக்காத,எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்"

"ஏண்டி புரிந்து தான் பேசுறியா,உனக்கு அடுத்து அன்பரசி வேற இருக்கா..நீ கல்யாணம் பண்றது தாமதம் ஆனால் அவளோட வாழ்க்கை பாதிக்கும்" என்றார் பரிமளம்.

"அப்ப அன்பரசிக்கு முதல்ல மாப்பிள்ளை பாருங்க" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். எப்படியோ ஜாதகத்தில் மாப்பிள்ளைக்கு ஏதோ தோஷம் இருக்கு என்று அந்த சம்மதம் தள்ளி போயின...
'எப்படியோ தப்பித்தோம் பிழைத்தோமே' என்ற மனநிலையில் ஆராதனா சகஜநிலைக்கு வந்தாள்.
.......
அன்று வழமையான கல்லூரி வகுப்பு கலைக்கு துவங்கியது. உடன் படிக்கும் ஆர்யாவோ அன்று நண்பர் கூட்டத்துடன் அரட்டை அடித்து கொண்டிருக்க...

"ஏய் கலை உன் கிட்ட நான் பேசனும்" என்றான் தன் நண்பர்களிடமிருந்து சற்று நகர்ந்தபடியே..

"சொல்லு ஆர்யா"

"அது வந்து.. உன்னோட ப்ரண்டு ரோஜா" என்றிழுக்க.

"ஏன் அவளை பற்றி கேக்குற ஆர்யா"

"இல்லை நான் அவளை விரும்புறன் இதை நேரடியாக சொல்ல தைரியம் இல்லை அதான் உன் மூலமாக சொல்லிடலாம் னு " என்று வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போக...

"ஆர்யா, அப்படினா நீ என் கிட்ட பேச நினைச்சது எல்லாம் ரோஜாவுக்காக தானா"? என்றாள் எதுவும் புரியாமல்.

"ஆமாம் கலை ஸாரி " என்றான் தயங்கியபடி. இதைக்கேட்ட அவளுக்கோ கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அவளால் சுயநினைவுக்கு வரமுடியவில்லை.. சுற்றி இருப்பவை எல்லாம் இருட்டாகவே தெரிந்தது..அடேய் நான் இத்தனை நாள் உன் மனதில் நான் தான் இருக்கிறேன் என்று பைத்தியக்காரி போல் நினைத்தேனே என்னை நினைத்தால் எனக்கே கோபமாக தான் இருக்கிறது. என்று மனதினுள் புழுங்கிக்கொண்டு அவனிடம் விடைப்பெற்று நடக்க துவங்கினாள்.

"கலை...அவள் கிட்ட சொல்லிடுவீங்க தானே"? என்றவனிடம் போலியான புன்னகையை வரவழைத்து கொண்டு அந்த நேரம் விலகினால் போதும் என வகுப்பறைக்கு சென்றாள். முகம் வாட்டமோ தோழிகளிடம் காட்டிகொடுத்துவிட்டது. நடந்தவற்றை கூறி ஆறுதல் தேடிக்கொண்டு சகஜமானாள் வகுப்பும் துவங்கியது.

"நாம ரோஜாவை காதலிக்கிற விஷயம் கலை கிட்ட சொன்ன அடுத்த நொடி ஏன் அவள் முகம் மாறியது" என்று ஆர்யா யோசித்தான். ஆனால் பதில் கிடைக்கவில்லை....
வகுப்பறையில் மாணவர்கள் எல்லாம் கலைந்து விட்டனர் இருவர் மட்டுமே தங்களது இருக்கையில் அமர்ந்திருக்க..

"கலை..." என்ற அழைப்பில் நிமிர்ந்தவள் அவனையே உற்றுநோக்கினாள்.

"உன் முகம் வாட்டத்துக்கு என்னடி காரணம்" என்றான் ஆர்யா

"ஒன்றுமில்லை ஆர்யா விடு"

"அப்படியெல்லாம் விடமுடியாது"

"முடியாது னா போ"

"ஏய் ஏய் கோபப்படாத..இங்கபாரு நீ எனக்கொரு நல்ல ப்ரண்டு அதே போல உனக்கு ரோஜா நல்ல ப்ரண்டு.. ஸோ உன் மூலமாக அவள்கிட்ட சொல்லிடனும் னு நினைச்சன்,இதுல உனக்கு எதாவது பிரச்சினை னா சொல்லவேண்டாம் நானே நேரம் வரப்ப சொல்லிக்கிறேன்" என்றவனிடம்...

"ஓகே..உன் விருப்பம் நான் கிளம்புறன்" என்று தன் பையை எடுத்து மாட்டியவள் விருவிருவென நடக்கலானாள்.

எதுவும் புரியாது இவனோ பைக்கை கிளப்பிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். வீடோ கலேபரமாக இருந்தது...

"என்ன விஷயம்" என்றான் தன் தாயை நோக்கியபடி.

"எல்லாம் நல்ல விஷயம் தான்" என்றார் புதிர் போட்டபடி.

"அக்கா என்னதான் ஆச்சு சொல்லேன்" என்றான் ஆராதனாவிடம்.

"ஹாஹா... ஒன்றுமில்லை டா தம்பி நம்ப பங்கஜம் மாமி ரொம்ப வருஷம் கழித்து இப்ப மாசமா இருக்காங்க. அந்த சந்தோஷத்துல தான் வீடே ஒரே கூத்தாக இருக்கு" என்றாள் சிரித்துக்கொண்டே.

"ம்ம்ம் ரைட்டு அப்படினா இன்னைக்கு மாமி வைக்க போது ட்ரீட்" என்றானே ரைமிங்கில் அங்கிருந்த அனைவருக்கும் மேலும் உதட்டில் புன்னகையை வரவழைத்தது.

"மாமி..கங்க்ராட்ஸ்" என்றான் ஆர்யா.

"தாங்க்ஸ் டா அம்பி. இரு நோக்கு குலாப் ஜாமுன் எடுத்துட்டு வரேன்"

"மாமி இப்படி குலாப்ஜாமுன் கொடுத்து எல்லாம் சரிசெய்ய நினைக்காதிங்க எங்களுக்கு டின்னர் ஹோட்டலிலில் வாங்கி தரனுமாக்கும்" என்றான்.

"உனக்கில்லாததா டா" என்றார் பங்கஜம் மாமியின் கணவர்.

"என்ன மாமா..இதுவரைக்கும் ஒரு பர்பி கூட எனக்கு வாங்கி கொடுத்தது இல்லை.. இன்னைக்கு ட்ரீட் வைக்க ஓகே சொல்லிட்டிங்க" என்றான் புன்னகையித்தபடி...

"டேய் ஆர்யா இன்னைக்கு எது கேட்டாலும் தருவேன்" என்றார் மாமா..

"அப்படினா அந்த விரலில் இங்கிட்டும் அங்கிட்டும் ஆடிட்டு இருக்க தங்க மோதிரம்" என்று வினவ..

"ஆங் தரேன் டா அம்பி நீ எங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆயிடு எனக்கு பொண்ணு பிறந்தா,அப்றம் பாரு"...

"ஓ...நைஸ்ஸா வெறும் கையோட உன் பொண்ணை எனக்கு பொண்டாட்டி ஆக்கிட முயற்சி பண்றீங்க செல்லாது செல்லாது" என்றான் வம்பிழுத்தபடி.

'இது எத்தனை நாள் கனவு, இன்று தான் வாழ்வில் ஒரு நல்ல செய்தி, இந்த செய்தி யாருக்கு மகிழ்ச்சி தருகிறதோ என்னவோ எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. இவ்வளவு தாமதமாக கிடைத்ததே என்று வருத்தப்படவில்லை ஆனால் பிறக்கும் குழந்தை நல்லபடியா பிறக்கனும். மலடி என்று பட்டம் கட்டியா ஊர் வாயை அடைக்க வேண்டும் இறைவா' என மனதினுள் வணங்கியவள். ஆர்யாவும் தன் கணவரும் போட்டி போட்டு பேசிக்கொண்டு இருப்பதை ரசிக்கவும் செய்தாள்.

தொடரும்.
 

Attachments

  • PicsArt_06-26-04.42.50.jpg
    PicsArt_06-26-04.42.50.jpg
    167.2 KB · Views: 0

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் -7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN