ஈரவிழிகள் 29

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கணவன்.. மனைவி இருவருக்குள்ளும் இருந்த பிணக்கங்கள் மறைந்து.. இணக்கம் நிறைய.. அடுத்து வந்த நாளை... தங்களுக்கான நாளாக அமைத்துக் கொண்டான் குமரன்.

“அக்கா, நானும் வள்ளியும் வெளிய கிளம்பறோம்... நீ கொஞ்சம் பட்டுவ பார்த்துக்கோ... வள்ளி கிட்ட சொல்லிட்டேன்... இன்றைக்கான நாள் அவளுக்கான நாளுன்னு... அதனால் நாங்க அந்தி சாய்ந்த பெறகு தான் வருவோம் சரியா...” என்று இடது கையில் கடிகாரத்தைக் கட்டிய படியே குமரன் தமக்கையிடம் சொல்லிக் கொண்டிருக்க

“நீங்க போயிட்டு வாங்க டா... நான் பட்டுவை பார்த்துக்கிறேன்...”

“ஹ்ம்... வரும்போது ஏதாவது வாங்கிட்டு வரணுமா க்கா...” இவன் பொறுப்பாய் கேட்க

“ஒண்ணும் வேணாம்... நீ இப்படி உன் பொண்டாட்டி கூட வெளியே போறதே எனக்கு போதும். பட்டு.. நீ உன் பொண்டாட்டி கூட ராசி ஆகிட்டியா டா...” தம்பியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து பெரியவள் கேட்க

அமர்ந்திருந்தவளின் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்றவன், “ராசியா மட்டும் ஆகல க்கா... பொண்டாட்டி தாசனாவே மாறிட்டேன்...” இவன் சொல்ல..
அதில் அவளின் முகம் பூவாய் மலர...

“இப்போ தான் டா என் மனசு நெறஞ்சிருக்கு... சந்தோசம் டா...” பெரியவளோ உள்ளார்ந்த அன்பில் சொன்னாள்

“உன் மனசு மட்டும் நிறைந்தா போதுமா க்கா.. என் மனசு நிறைய வேணாமா... இந்த ஜென்மத்தில் வள்ளி தான் என் மனைவி... அதில் எந்த மாற்றமும் இல்ல... அவளே நினைத்தாலும் அவ என் வாழ்க்கையிலே இருந்து விலக முடியாது... ஆனா உனக்குனு ஒரு வாழ்வு அமைந்தா தான்... நாங்க எங்க வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்ற முடிவில் இருக்கோம்... அதனாலே சமத்தா... நான் கை காட்டுறவர் பக்கத்திலே.. மனையில் உட்கார்.. சரியா...” இவன் தன்மையாய் தமக்கையின் நெற்றி முட்டி சொல்ல

அந்நேரம் அங்கு வந்த வள்ளி.. இருவரையும் கண்டவள், “செல்லாது... செல்லாது... இதெல்லாம் கள்ளாட்டம்... இந்த வீட்டில் நான் தான் குட்டி புள்ள... அதனாலே என்னை தான் நீங்க கொஞ்சனும்...” குமரனை மீனாட்சி கொஞ்சுவதாக நினைத்து... இப்படியான அறிவிப்புடன் இவர்களை அவள் நெருங்க

இதில் கொஞ்ச நேரம் முன்பு தம்பி சொன்ன வார்த்தையை மறந்து சிரித்த மீனாட்சி, “நீ தான் டா... குட்டி பிள்ள.. நீ என் கண்ணு டா..” என்க

“அப்போ நான் என்ன பன்னா?” குமரன் ரைமிங்காய் கேட்க

அதில் தம்பியை முறைத்தவள், “ஹாங்.. நீ கழனி தண்ணீ டா...” என்றபடி பெரியவள் அவனின் காலை வாரவும்...

வள்ளி வாய் விட்டு சிரிக்க... இவனோ, “அக்கா...” என்று சிணுங்கினான்..

“பின்ன என்ன டா... என் செல்லத்த கொஞ்சும் போது நீ ஏன் குறுக்க வர...”

“குறுக்கா.. மறுக்கா… எல்லாம் இங்க யாரும் வரல... அவளை கொஞ்சத் தான் நான் இருக்கேன் இல்ல... அதனாலே நீ என்னைய மட்டும் கொஞ்சு...” இப்படியாக குமரன் உரிமைப் போராட்டத்தில் இறங்க

“பொய்... பொய்... பொய்.. நம்பாதிங்க அண்ணி... இவர் டம்மி பீஸ் அண்ணி.... உலகத்தில் இருக்கற ஒட்டு மொத்த சாமியாரும் இவர் தான். இதுவரை இவர் என்னைக் கொஞ்சினதே இல்லை அண்ணி... நம்பாதிங்க...” வள்ளி கணவனை மாட்டிவிட

அதில் ரோஷம் வரப் பெற்றவனாக... தமக்கையின் இரண்டு காதையும் பொத்திய குமரன்.. தன் உதட்டை மனைவியின் காதருகே கொண்டு சென்று அவளிடம் ஏதோ சொல்லி சீண்ட... அடுத்த நொடி... கண்களை மூடி, “அய்ய...” என்று விளித்த அவளின் முகமோ வெட்கத்தைத் தத்து எடுத்திருந்தது.

“எங்க இப்போ நான் கொஞ்சலன்னு... சொல்லு பார்ப்போம்...” குமரன் குறும்பு மிளிரும் குரலில் தன்னவளிடம் சவால் விட

தம்பியின் இந்த புதிய பரிமாணத்தைக் கண்டு மீனாட்சி வியந்து போனாள் என்றால்... வள்ளியோ சின்ன சினுங்கலுடன் வெட்கப் புன்னகையுடன்... தன்னவனின் புஜத்தை அடித்துக் கொண்டிருந்தாள்... வலிக்காத அவளின் அடியில் அவள் கையை மடக்கி.. தன்னவளைத் தன் தோளோடு சேர்த்து தோள் அணைத்தவன்...

“என்னை சாமியார்னு சொன்னா நான் சும்மா இருப்பேனா க்கா அதான்...” இவன் தமக்கையிடம் புகார் படிக்க.. பெரியவள் முகத்திலோ அதை ஆமோதிப்பது போல் புன்னகை விரிந்தது. இருவரின் அன்னியோன்யத்தைக் கண்டு கண்கள் பனித்தது.

“சரிங்க அண்ணி... நீங்க பட்டுவைப் பார்த்துக்கோங்க நாங்க வெளியே போயிட்டு வரோம்..” வள்ளியும் தன் பங்குக்கு சொல்ல.. பெரியவள் தலையசைக்க

அதில் கணவன் மனைவி இருவரும் அவளின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பினார்கள்.

தேனியை சுற்றிப் பார்க்க இடமாயில்லை... திகட்ட திகட்ட அவ்விடங்களைக் காண நமக்கு கோடி கண்கள் வேண்டுமே... ஒரே நாளில் பார்க்க வேண்டிய அனைத்தையும்... தன் மனைவிக்கு சுற்றிக் காட்டினான் குமரன்.

நிறைந்த மனதுடன் மாலை இருவரும் வீடு திரும்ப... முதலில் தூறலாய் ஆரம்பித்த மழை... பின் சாரலாய் அதிகரிக்க... அதுவே நேரம் செல்ல செல்ல பெரும் மழையாய் மாறவும்... இருவரும் பைக்கில் சென்றிருந்ததால்.. வீடு செல்வதற்குள் நனைந்து விடுவோம் என்ற எண்ணத்தில் இவன் தன் காட்டுக்குள் வண்டியை செலுத்தி நிறுத்தியவன்..

“வள்ளி... மேலே போ... அங்க என்னோட ஒரு செட் உடையும் துண்டும் வச்சிருப்பேன்... எடுத்து தலையைத் துவட்டிக்கோ... நான் இதோ வந்திடறேன்...” குமரன் மனைவிக்கு கட்டளையிட

அங்கிருந்த காட்டை மேலேயிருந்து மேற்பார்வையிட அமைத்திருந்த குடிலைக் கண்டவள்... கணவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவசரமாய் மேலே செல்ல.. மர ஏணியில் ஏறினாள் வள்ளி.

நடுங்கும் குளிரில் தன் மேனியில் ஒட்டியிருந்த ஆடையுடன் இவள் கணவன் சொன்னதைச் செய்ய... தானும் மேலே வந்தவன் தாங்கள் பேசி வைத்த முடிவு எல்லாம் மறக்க... தன்னவள் மேலுள்ள காதலில்... அவளைக் கண்டதும் தன் கட்டுப்பாட்டைத் துறந்தவனாக, “ஹேய்... டாக்டரம்மா...” என்ற கொஞ்சலுடன் தன்னவளைப் பின்புறமாய் அணைத்திருந்தான் இவன்.

வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. இவனுக்குள் மாற்றம் எழ... தன்னவளின் கழுத்தில் முகம் பதித்தவன்... பின் தன் தேடலை ஆரம்பித்து மனைவியைத் தன்புறம் திருப்பி கீழே சரித்தவன் ஒரு கணவனாய் அவளுள் புதைய... கணவனின் ஒரு பார்வைக்கே கிறங்கிப் போகிறவள். வள்ளி.. இப்போது அவன் காதலோடு தன் தடத்தைப் பதிக்கவும்... மொத்தமாய் கணவனுள் சுருண்டு கரைந்து போனாள் பெண்ணவள்.

அதெல்லாம் கொஞ்ச நேரம் தான்.. அதன் பின்னான அவனின் செயலில்... மறுக்கவும் முடியாமல்... ஏற்கவும் முடியாமல் திண்டாடியவள்... பின் சற்றே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு... கணவனின் கேசத்துக்குள் தன் விரல்களைக் கோதியவள், “இளா... நம்ம திருமணத்தை.. அண்ணன் ஏத்துக்கிற வரைக்கும்..” மேற்கொண்டு சொல்ல முடியாமல் பெண்ணவள் திணற...

அதில் இவ்வளவு நேரமிருந்த மயக்கம் மறைய... அப்போதும் தன்னவளை விட்டு விலக மனம் இல்லாதவன் போல்... அவளின் கழுத்து வளைவில் தன் முத்திரையை அழுந்தப் பதித்தவன் அடுத்த நொடி ஒரு நெடு மூச்சுடன் தன்னவனை விட்டு விலகி அமர்ந்திருந்தான் குமரன்.

தானும் எழுந்து அமர்ந்தவள் தன்னுள் ஓடிய நடுக்கத்தை சீர்செய்து கொண்டு.. இவள் கணவனைக் காண... அவன் முகமோ இறுகி இருந்தது. அதில் இவளுக்குள்ளும் வருத்தம் மேலிட.. தன்னவனை நெருங்கி அமர்ந்தவள்... கணவனின் பக்கவாட்டு தோற்றத்தில்... ஈர்க்கப்பட்டவளாக செவி வடிவிலிருந்து தாடை வரை சுண்டு விரலால்... தன்னவனின் முகவடிவை அளந்தவள்...

பின் அவனின் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தவள், “கோபமா...” என்று இவள் கெஞ்சலாய் கேட்க

இல்லை என்று தலை அசைத்தவனின் முகமோ இன்னும் இறுக்கத்துடன் தான் இருந்தது.. “அது வந்து இளா... அண்ணா...”

மேற்கொண்டு தன்னவளைப் பேச விடாமல்... அவளின் உதட்டில் விரல் வைத்து தடுத்தவன்... “அத்தான்... சம்மதிக்கலனா என்னை விட்டுப் போயிடுவியாடி...” இவன் அதே இறுக்கத்துடன் கேட்க. முன்பு எப்படியோ… இப்போ மனைவி மேல் கரைகாணாத காதலை வைத்திருக்கும் அவனால் அப்படி பிரிந்திருக்க முடியுமா…

கணவனின் திடீர் சஞ்சலம் எதற்கு என்று தற்போது பெண்ணவளுக்கும் புரியவும்... “ச்சேச்சே... என்ன பேச்சு இது... முதலில் என் அண்ணன் என் விருப்பத்துக்கு சம்மதிக்காமல் இருக்க மாட்டார்... நானும் உங்களை விட்டுப் போக மாட்டேன் இளா... என்னாலையும் அது முடியாது....” என்றவள் இன்னும் தன்னவனை நெருங்கி அவன் புஜத்திற்குள் தன் வலது கையை நுழைத்து... தன் இரு கரங்களையும் கோர்த்தவள்... வாகாய் அவன் தோளில் தலை சாய்த்துக் கொள்ள... அவனுக்குள் இருந்த சஞ்சலம் சற்றே விலகியது.

‘இன்று இப்படி கேட்கும் கணவன்... அன்று என்ன பத்திவிட்டுடுவேன்னு தானே சொன்னார்?’ என்ற கேள்வி இவளுக்குள் திடீரென்று எழவும்... அன்றைய நாளின் நிகழ்வில் தற்போது இவளுக்குள் சஞ்சலம் குடிபுக...

“ஆனா... ஆனா அன்று நீங்க தானே இளா.. என்ன பத்திவிட்டுடுவன்னு சொன்னீங்க...” இதை சாதாரணமாக கேட்க நினைத்தவளுக்கோ... ஏனோ வார்த்தைகள் கரகரப்பாய் தான் வெளிவந்தது.

இந்த கேள்வியில் ஒரு நிமிடம் திடுக்கிட்டவனோ.. அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் முகம் கண்டவனோ... அடுத்த நொடி எப்போது என்று கேட்காமல்,
“அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிக்கும்னு தெரியும் டி... ஆனா அப்போ அக்காவுக்கு மட்டும் தான் வலிக்கும்னு நினைச்சிட்டேன்... உன்னை யோசிக்கல... அப்போ உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு இப்போ தெரியுது... சாரி டி...” இவன் உணர்ந்து சொல்ல

அதை ஏற்றுக் கொண்டவள், “நானும் உங்க கிட்ட சாரி கேட்கணும்... அன்று இந்த ஊர் முன்னாடி உங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தேடி தந்தேன்... நான் அப்படி ஒரு பொய்யை சொல்லியிருக்க கூடாது... ஆனா எனக்கு வேற வழி தெரியல இளா. எப்படியாவது உங்க மனைவியா உங்களோட இணையனும்னு நினைத்தேன்.

அதே போல் வேற வழியில்லாம கடமைக்காகவோ... அண்ணா அண்ணிக்காகவோ... நீங்க என்னை ஏத்துக்க கூடாதுன்னு நினைத்தேன். அதுக்காகவே யாரும் உங்க கிட்ட உண்மையை சொல்லக் கூடாதுன்னு பிடிவாதம் பிடித்தேன்... மீறி சொன்னா... நான் ஏதாவது செய்துக்குவேன் மிரட்டி வச்சேன்... அதனால் தான் சாரி இளா...” இவள் மன்னிப்பை வேண்ட... புரிந்தது என்பதாய் தன்னவளை அணைத்துக் கொண்டான் குமரன். இருவரின் மனதைப் போல.. மழையற்ற வானமோ நிர்மலமாய் இருந்தது.

“அக்கா சீக்கிரம் கிளம்பு...” காலை உணவுக்குப் பிறகு தன் தமக்கையை இப்படியாக விரட்டிக் கொண்டிருந்தான் குமரன்.

“என்ன டா... என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு இம்புட்டு புடிவாதம் புடிக்கிற... நான் வரல நீ கெளம்பு..”

மீனாட்சியின் பதிலில், “அண்ணி அவர் பிடிவாதம் பிடிக்கிறாரா இல்ல நீங்களா... எழுந்து கிளம்புங்க அண்ணி...” வள்ளியும் தன் பங்குக்கு மீனாட்சியை விரட்ட...

“இப்போ அங்க போய் நான் என்ன செய்யப் போறேன்...” பெரியவள் சலித்துக் கொள்ள

“என்ன.. என் பேத்திக்கு எதுக்கு இப்படி ஒரு சலிப்பு...” என்று கேட்டபடி அங்கு உணவு மேஜையில் வந்து அமர்ந்தார் அழகுமலை.

குமரன் என்ன என்று சொல்ல வர.. அதற்குள் மீனாட்சி,
“இவனுடைய பண்ணைங்களையும்... திராட்சை தோட்டத்தையும்... அரிசி ஆலையையும் மேற்பார்வை பார்க்கறதுக்காக இவன் போறானாம்... கூட என்னைய வான்னு சொல்றான்... நீங்களே சொல்லுங்க தாத்தா.. அங்க போய் நான் என்ன செய்யப் போறேன்..” பெரியவள் இப்போது வெளிப்படையாக தயங்க

“நீ எதுவும் செய்ய வேணாம் மா... ஆனா நீ வளர்த்த பிள்ள... இன்னைக்கு ஆயிரம் பேருக்கு வேலை தந்திருக்கிறதை நீ பார்க்க வேணாமா மீனா.. அதுக்காச்சும் போய்.. வா ம்மா...”

பெரியவர் எடுத்து சொல்லவும்... அந்த வார்த்தைகளில் “சரி தாத்தா...” என்றவள், தான் கிளம்ப தன் அறைக்குள் சென்று மறைந்தாள் மீனாட்சி.

தன் தாத்தாவிடம், அவர் கொடுத்த வாக்கு பொய்யாகாது என்பதையும் வள்ளி தான் இந்த பிறவில் தன் மனைவி என்ற வாக்குறுதியையும்... தாத்தாவை சந்தித்து பேசி வாக்கு தந்திருந்தான் குமரன்.

மீனா கிளம்பி வெளியே வர, “அய்யோ அண்ணி...” என்ற அலறலுடன் தன் நெற்றியில் அறைந்து கொண்டாள் வள்ளி. பின்னே.. தலையை மட்டும் ஒதுக்கிக் கொண்டு தேமேன்னு வந்து நின்றால்... மீண்டும் மீனாட்சியை உள்ளே அழைத்துச் சென்று.. அவளின் சேலைக் கட்டை மாற்றி... ஜடை பின்னி பூ வைத்து வெளியே அழைத்து வர... பெரியவளின் தோற்றம் தற்போது அம்சமாய் இருந்தது.

மூவரும் வெளியே வர... எதிர்ப்பட்டனர் கார்மேகமும்... கீர்த்திவாசனும். இன்னும் தன் மனதில் தயக்கம் இருக்க,
“அப்பா... பாருங்க ப்பா பட்டுவை... என்னை வரச் சொல்லி அடம்புடிக்கிறான்...” தந்தையிடம் பெரியவள் புகார் படிக்க...

இருவரில் விஷயம் என்னவென்று அறிந்த கீர்த்திவாசன், “வள்ளி... அண்ணி முதல் நாள் என்றதாலே தயங்குறாங்க... நீ கூட போயிட்டு வா...” என்று அவன் எடுத்துச் சொல்ல

“அஸ்மியை... வச்சிகிட்டு எப்படி ணா... அதுவும் இல்லாம மாமாவுக்கு சாப்பாடு...” வள்ளி தயக்கத்தோடு நிறுத்தவும்

“அஸ்மியை நாங்க பார்த்துக்கிறோம்... பூரணி சமைச்சு வெச்சா நான் எடுத்து போட்டு சாப்புட போறேன்... நீயும் கூட போயிட்டு வா வள்ளி...” இதைக் கேட்ட கார்மேகம் முழுமனதாய் சம்மதிக்கவும்

“ம்ம்ம்... நீயும் வா வள்ளி...” மீனாட்சி ஆர்ப்பாட்டமாய் தலையசைக்க

இதற்கு வள்ளி சம்மதித்து கிளம்பி வர விலகிய நேரம்... “இந்த கத்திரிக்கா ஒட்டுப் புல் போல ஒட்டிகிட்டு வருவதிலே என் அண்ணிக்கு தான் எம்புட்டு சந்தோசம் டா சாமி...” கீர்த்தி மீனாட்சியை ஓட்ட...

‘களுக்கு’ என்று சிரித்தவள், “ஆமா.. இதென்ன அண்ணி! நீ எப்போதும் என்னைய அக்கான்னு தானே சொல்லுவ... இப்போ என்ன புதுசா.. அண்ணி.. வச்சி கூப்பிடுற...” பெரியவள் கேள்வியில்

“என் தங்கச்சிக்கு அண்ணினா.. அப்போ எனக்கும் அண்ணி தானே... அதான் சொன்னேன்...” கீர்த்தி விளக்கம் தர.. அந்நேரம் வள்ளி கிளம்பி வெளியே வரவும்... மூவரையும் சுமந்து கொண்டு புறப்பட்டது கார்.

கீர்த்திவாசனும்.. பரஞ்சோதி வாத்தியாரும்... சுந்தரம் விஷயமாய் அனைத்தையும் கார்மேகத்திடம் பேசியிருந்தார்கள்.

அதில் ‘தன் மகளுக்கு சம்மதம் என்றால் தனக்கும் சம்மதம்’ என்று அவர் சொல்லியிருக்க.. தற்போது அனைவரும் சுந்தரத்தின் வரவுக்காக காத்திருந்தார்கள். கூடவே நேரம் பார்த்து மீனாட்சியிடம் சொல்லவும் காத்திருந்தார்கள்.

ஆடு... மாடு... கோழிகளுக்கென்று குமரன் தனித்தனியாய் பண்ணை வைத்திருந்தான். அங்கு மட்டுமில்லாமல்... தேனைப் பதப்டுத்தும் கூடத்துக்கும் தமக்கையை அழைத்துச் சென்றான் அவன். எல்லா இடத்திலும் தம்பிக்கு கிடைத்த மரியாதையைப் பார்த்து இவளுக்கு பெருமை தான். ஒருசில அதிகாரிகள் இவளையும் மதித்துப் பேச... கூச்சத்தில் புடவைத் தலைப்பை கை விரல்களில் சுற்றிக் கொண்டு பேச திணறியவளை... நேர் கொண்ட பார்வையில்... திருத்தமாய்.. நிமிர்வாய் பேச கற்றுத் தந்தாள் வள்ளி. முதலில் மீனாட்சி தடுமாறினாலும்... பிறகு இயல்பாய் பேச அவளுக்கே ஆர்வம் வந்தது.

மாலை இவர்கள் வீட்டுக்கு வர... வாசலிலே மகனின் காரைக் கண்டு விட்டு காருக்காக இரும்பு வாயிலைத் திறந்து விட்டார் கார்மேகம். தந்தையைக் கண்டதும்... மீனாட்சி இறங்கி அவரிடம் ஓட... “என்ன ம்மா.. இன்றைய நாள் எப்படி இருந்தது...” அவர் சிறு முறுவலுடன் கேட்க

“நல்லா... நல்லா.. இருந்துச்சு ப்பா...” ஏதோ முதல் நாள் பள்ளி சென்று வந்த சிறுமி அங்கு நடந்ததை எல்லாம் ஒப்பிப்பது போல் இவள் முகம் விகாசிக்க அவரிடம் ஒப்பிக்க..

மகளின் புன்னகை முகத்தைக் கண்டவர் “தினமும் போய் வரீயா மீனா... சும்மா மேலோட்டமா.. அங்க என்ன நடக்குதுன்னு பாரேன்...” மகளை இப்படியே விட்டுவிட்டோமே... இனியாவது அவள் வெளி உலகை காணட்டுமே என்ற நிலையில் அவர் கேட்க..

“ஓ... சரி ப்பா...” என்று முகம் மலர்ந்தவள்... பின் “ஆனா.. உங்களுக்கு சாப்பாடு குடுக்கணுமே...”

“அதுக்கு என்ன டா... அதான் வள்ளி இருக்கே.. நீ போய் வா...”

சிறிதே யோசித்தவள், “சரி ப்பா... போறேன்... ஆனா மதியம் வந்துடறேன்... எனக்கு அரை நாள் போதும்... உங்களுக்கும் நான் பரிமாறினாதானேப்பா புடிக்கும்...” மகளின் பதிலில் அவளின் தலையைக் கோதினார் கார்மேகம்.

தான் ஒட்டி வந்த காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திய குமரனின் மனதோ நிறைந்திருந்தது. மனைவி இறங்க முற்படவும்... அவசரமாய் தன்னவளின் கரத்தைப் பற்றியவனோ... அவள் எதிர்பாராத நேரம் அவளின் கன்னத்தில் இதழ் பதித்து.. “தாங்க்ஸ் டி..” என்றான் உள்ளம் நெகிழ.

மன்னவன் அத்தி பூத்தார் போல் கொடுக்கும் அச்சாரம் என்பதால்.. அதை பெண்ணவளும் சிறு வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டாள். ஆனால் மனதில் ஏதோ பயப்பந்து உருள.. அண்ணன் வந்த பிறகும் இதே நிலை.. இப்படியே தொடரவேண்டும் என்று அவளையும் மீறி அவளின் ஆழ்மனது வேண்டியது. ஆனால் அவளின் வேண்டுதல் பலிக்குமா..
 
P Bargavi

Member

Nice
 
shankamal68

New member
ஏன் மா ?இப்போதான் இவ்ளோ பிரச்சனைக்கு பிறகு புருஷன் பொண்டாட்டி கொஞ்சமே கொஞ்சம் நெருங்கினாங்க .அது பொறுக்கலியா குல்பி ?
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஏன் மா ?இப்போதான் இவ்ளோ பிரச்சனைக்கு பிறகு புருஷன் பொண்டாட்டி கொஞ்சமே கொஞ்சம் நெருங்கினாங்க .அது பொறுக்கலியா குல்பி ?
😁😁😁😁
நாம எல்லாம் அப்படி தான் க்கா🤗🤗💜💜🌺🌺
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN