ஈரவிழிகள் 31

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வள்ளி எதற்கு வந்திருக்கிறாள் என்ற விஷயத்தை அறிந்ததும்... கார்மேகத்துக்கு அதிர்ச்சி தான். அண்ணன் மேலுள்ள பாசத்தாலும்... தன் மகன் மேலுள்ள காதலாலும் இந்த புள்ள என்ன எல்லாம் செய்திருக்கு என்று வியக்க... இந்த இரு வேறு உணர்வுகளையும்... அவர் தள்ளி வைத்துப் பார்த்த போது... அவரின் முன் தற்போது அவர் மகள் தான் முன்னிருந்தாள்.

சின்ன வயதிலிருந்து தன் மகளுக்கு அவர் எதுவுமே செய்தது இல்லை... இது தான் உண்மை. அதனால், தான் இறப்பதற்குள்... மகளுக்கு ஒரு வாழ்வையாவது அமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்று வேண்டியது அவர் உள்ளம். சுந்தரத்தைப் புகைப்படத்தில் காணவும்... அவருக்குள் திருப்தி.

தான் பார்த்த தங்கராசு, சுந்தரத்தின் கால் ஓரத்திற்கு வர மாட்டான் என்பது தெரிந்தது அவருக்கு. தங்கராசுவைப் பற்றி நினைக்கும் போதுதான்... முத்தரசியைப் பற்றியும் நினைவு வர... கடைசியாய் அவர்கள் இருவரும் இவரிடம் பேசி சென்றது நினைவில் சூழ்ந்தது கார்மேகத்துக்கு.

“யாரோ டிவி நடிகையாம்.. அம்மா இறந்துட்டதாலே... கல்யாணம் கட்டிக்காம ஒத்தையா நிக்குது. இப்போ எல்லாம் நம்ம தங்கராசு தான் அதுக்கு ஆறுதல்.. நீங்க தான் உங்க பொண்ணை அவனுக்கு தர மாட்டேன்னு சொல்லிட்டீங்களே.. அதான் அவன் பட்டணம் போறேன்னு சொல்றான்...

இனி ஒத்தையா எனக்கு மட்டும் இங்க என்ன சோலி கெடக்கு... அதான் அவன் கூடவே நானும் பட்டணம் போறேன்...” இப்படியாக அறிவிப்பு போல் சொல்லிய முத்தரசி... கார்மேகத்தின் வாழ்வை விட்டுத் தானாய் விலகிச் சென்று வெகு நாட்களானது. காலம் போன காலத்தில் இதில் ஒன்றும் பெரிய கஷ்டமும் இல்லை அவருக்கும்.

குமரன் ரமேஷிடமும்... ரேகாவிடமும் பேசியிருக்க... இவனின் நிதானமான வார்த்தையில்... அனுசரணையான பேச்சில்... இவனின் அணுகுமுறையில்... ரேகாவுக்கு... குமரன் மேல் முன்பிருந்த அபிப்ராயம் எல்லாம் விலக.. தற்போது தங்கையின் வாழ்வை நினைத்து அவளுக்குள் நிம்மதியே பரவியது.

இந்நேரத்தில் தான் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல்... மலேசியா வந்து சேர்ந்தார் சுந்தரம். தங்கையை நலம் விசாரித்தவர்... பின் வள்ளியைப் பற்றி பேச்செடுத்து அவள் படிப்பைப் பற்றியும் விசாரிக்க.. இங்கு தான் அவருக்குள் சின்ன சறுக்கல் உருப்பெற்றது. அதாவது... வள்ளிக்கு இனி அடுத்த வருடம் தான் படிப்பு என்பது உறுதியானதால்.... இந்த வருடம் இந்தியாவில் தங்கி... மேல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளதாக இவள் சுந்தரத்திடம் சொல்லியிருக்க... இங்கு ரேகாவோ மாற்றி சொல்ல... விழித்துக் கொண்டார் சுந்தரம்.

அண்ணிடம் ரேகா எதையும் மறைத்தவள் இல்லை.. பொய் சொல்லியவளும் இல்லை. போனில் வள்ளி விஷயமாய் அண்ணனிடம் பேசும்போதே இவளுக்கு உதறும். இப்போது நேரில் அண்ணனைக் காணவும்... தத்துபித்தென்று தன்னையும் மீறி உண்மையை இவள் உளற... அதில் சுந்தரம் இன்னும் அழுத்திக் கேட்கவுமே... மொத்தத்தையும் உளறி விட்டாள் ரேகா.

கேட்டவர் இடிந்து போய்விட... அதன் பிறகு ஒரு வார்த்தை கூட தங்கையிடம் சுந்தரம் பேசவில்லை. இப்போது எதுவும் வேண்டாம்.. காலையில் அண்ணனிடம் பொறுமையாய் எடுத்து சொல்லி பேசிக் கொள்ளலாம் என்று ரேகா நினைத்திருக்க.. இதன் காரணமாகவே இவள் வள்ளியிடமும் அண்ணன் வந்துள்ள விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாமல் விட்டுவிட...

சுந்தரமோ காத்திருக்க நேரமில்லாமல்... அடுத்த நொடியே விமானத்தைப் பதிவு செய்து இந்தியா வந்து சேர்ந்து விட்டார். வந்தவர் கீர்த்தியை அழைத்து... கார்மேகத்தின் விலாசம் கேட்டு இதோ வீட்டுக்கும் வந்து விட்டார்... இவரைப் பார்த்த அதிர்ச்சியில்.... கீர்த்தி கூட இவர் வந்த தகவலை யாரிடமும் சொல்லவில்லை.

வீட்டிற்குள் நுழைந்தவர்... வள்ளியின் பேரிட்டு அழைக்க... அதில் அதிர்ச்சியிலும் அண்ணனைப் பார்த்த சந்தோஷத்திலும் தன் முன் வந்து நின்றவளை அறைந்தவர்... அப்போதும் மனது ஆறாமல் இவர் மறுமுறையும் அறைய... அதில் வள்ளி சுழன்று தடுமாற... இப்போது அவளின் பின்னே வந்த குமரன் மனைவியைத் தாங்கிப் பிடித்ததோடு மட்டுமல்லாமல்... மறுமுறையும் ஓங்கிய சுந்தரத்தின் கையை இவன் தடுத்துப் பிடித்து விட... அதிர்ந்தே போனார் சுந்தரம்.

அவரின் அதிர்ந்த முகத்தைக் கண்ட பிறகு தான்.. தான் செய்த செயலை உணர்ந்தான் குமரன். அதில்.. “அத்தான்... உங்களுக்கு வள்ளியை அடிக்க எல்லா உரிமையும் இருக்கு.. நான் அதுக்காக உங்களை தடுக்கலை. அவ ரொம்ப பலவீனமா இருக்கா அத்தான்.. நீங்க அடித்து அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா...” மேற்கொண்டு பேச முடியாமல் தயக்கத்துடன் நிறுத்தினான் இவன்.

அவனாலேயே அவன் செயலுக்கு சமாதானம் சொல்ல முடியவில்லை. அவரை அவமதிக்க இவன் தடுக்கவில்லை.. கண் முன்னே மனைவி அடி வாங்குவதைக் காணவும் தான்... அவனையும் மீறி இப்படி நடந்து கொண்டான் குமரன். ஆனால் அதை சுந்தரம் நம்பவேண்டுமே...

குமரனின் அணைப்பும்... வார்த்தையுமே வள்ளியிடம் அவன் கொண்டுள்ள உரிமையை இவருக்கு பறைசாற்ற... அவனிடமிருந்து தன் கரத்தை உதறிய சுந்தரம் கணவனின் கையணைப்பில் இருந்த தங்கையை தன் நேர் கொண்ட பார்வையால் நோக்கியவர்,

“உன்னை வளர்த்து ஆளாக்கினதுக்கு... எனக்கு நல்ல பேரு வாங்கி கொடுத்துட்ட மா... எனக்கு மனசு நிறைஞ்சிடுச்சு...” என்று அவர் வேதனையோடு சொல்ல

வழக்கம் போல.. புருஷோத்தமன் குடும்பமும்... சோழன் குடும்பமும் அவர்களுக்கான அலுவலுக்கு சென்றிருக்க... அதன் பொருட்டு வேலையாட்களைத் தவிர.. வீட்டில் வேறு யாரும் இல்லையென்றாலும் இருக்கும் அனைவர் முன்னிலையில் அண்ணன் இப்படி வேதனையோடு மொழியவும்...

“அண்ணா...” என்ற அழைப்புடன் கணவனிடமிருந்து பிரிந்து அவர் முன் மண்டியிட்ட வள்ளி... கண்ணீருடன் அவரின் வலது பாதத்தின் விரல்களைத் தொட... அச்செயலில் சுந்தரம் தன் பாதங்களைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளவும்... “தப்பு தான் ணா... தப்பு தான்... நான் செய்தது... பெரிய துரோகம் தான்... என்னால் இளாவை விட்டுக் கொடுக்க முடியல ணா... அதிலும் அன்றியிருந்த சூழ்நிலையில்...”

மேற்கொண்டு அவளைப் பேச விடாமல் தன் கையமர்த்தி தடுத்த சுந்தரம், “என்ன சூழ்நிலை... ஹ்ம் என்ன சூழ்நிலை... இந்த அண்ணனை விட உனக்கு உன் சூழ்நிலை பெருசா போச்சு இல்ல? படிப்பறிவு இல்லாத... சாதாரண... கூலிக்காரனான... பாசம்ங்கிற பேரில் கிறுக்கனாக இருக்கற இந்த சுந்தரத்தால்... அப்படி என்ன செய்திட முடியும் என்ற நினைப்பில் தானே இப்படி ஒரு காரியத்தை நீ செய்திருக்க.

உன் கண்ணுக்கு இவன் எல்லாம் ஒரு ஆளான்னு... நான் உனக்கு தெரிஞ்சிருக்கேன்... நான் உன்னை என் உயிரா நினைத்திருக்க... நீ என்னை முட்டாளா நினைத்திருக்க பாரு...” அவரின் மனவேதனை... அவரின் ஆத்திரம்... அவரின் குமுறல்... அவரின் ஆற்றாமை... தன் தங்கையால் தான் முட்டாள் ஆக்கப்பட்டோமே என்ற வலி.... இவை எல்லாம் சேர்த்து சுந்தரத்தை இப்படி எல்லாம் பேச வைக்க

“இல்ல ணா அப்படி இல்லை ணா...” இவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விசும்ப.. மனைவிக்கு ஆறுதலாய்... குமரன் அவளின் தோள் தொடவும்.... இதைக் கண்ட சுந்தரத்திற்கு இன்னும் ஆத்திரம் அதிகமானது, “ஹ்ம்... சரி தான் புது உறவு வந்த பிறகு... என்னை எல்லாம் உனக்கு தெரியுமா ம்மா...” இதை சொல்லும் போது சுந்தரத்தின் குரல் அவரையும் மீறி.. மெலிந்து கரகரத்து ஒலித்தது.

அதில் விசுக்கென்று நிமிர்ந்து தன் அண்ணனைக் கண்ட வள்ளி, “அப்படி இல்ல ணா... எப்போதுமே எனக்கு நீ தான் ணா முதலில்... அப்புறம் தான் ணா இவரு...”

தங்கையின் பதிலில், “ஓஹோ... அப்படியா...” சுந்தரம் விரக்தியாய் கேட்க

அந்த விரக்தி சின்னவளைத் தாக்க, “உண்மை தான் ணா... எனக்கு என் அண்ணன் தான் முக்கியம்... எனக்கு என் அண்ணன் தான் வேணும்... இ.. இந்த.. நிமிஷம்... நீ சொன்னா... இவரை விட்டுட்டு உன் வீட்டுக்கு வந்திடுறேன்... ஆனா சாகும் வரை... நான் உன் தங்கையாவும்... இவர் மனைவியாவும் தான் இருப்பேன்...” அண்ணனின் மனதைக் குளிர்விப்பதற்காக இவள் இப்படி சொல்ல... இந்த வார்த்தைகளே சுந்தரத்தை வேறு விதத்தில் தாக்கியது.

“நம்ம வீடு.. இப்போ உன் வீடா மாறிடிச்சு! சந்தோஷம்.... நல்லா இரு.. ஆனா நான் செத்தாலும் இனி என் முகத்தில் முழிக்காத...” அவர் அதே வலியோடு... உறுதியாய் சொல்லவும்.. அதிர்ச்சியில் கால் மடிய தரையில் அமர்ந்து விட்டாள் வள்ளி.

அவள் இதயமோ ‘என்ன வார்த்தை சொல்லிட்டார் அண்ணா...’ என்று தான் கூக்குரல் இட்டது. குமரன் மனைவியைத் தாங்க...

மறுபேச்சுயின்றி தான் வந்த வேலை முடிந்தது போல் சுந்தரம் வெளியேற நினைக்க.. தன்னைக் கண்டும் காணாமல் போகும் மாமனைக் காணவும்... உதடு பிதுங்க, “மாமா....” என்ற அழைப்புடன் அவரிடம் தாவினாள் அஸ்மி.

இவ்வளவு நேரமும் பார்வையாளராய்... இங்கு நடப்பதை எல்லாம்... இடுப்பில் அஸ்மியை வைத்துக் கொண்டு மீனாட்சி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். முதலில் வள்ளிக்கு அண்ணன் இருக்கிறாரா என்ற அதிர்ச்சி இவளுக்கு. அவர் வள்ளியை அடிக்கவும்.. பிறகு நடந்த சம்பாஷணையைக் கண்டவள்..
‘ஓ... இவர்களின் காதலை வந்தவர் ஏற்றுக் கொள்ளவில்லையே’ என்ற கவலை இவளுக்கு எழுந்தது.

அந்நேரம்... அஸ்மி அவரை நோக்கித் தாவவும்... அவரும் அஸ்மியை நோக்கி கையை நீட்டவும்..

‘ஐயோ! குழந்தையை வாங்கிட்டு போய்விடுவாரோ?’ என்ற பயத்தில் மீனாட்சி... அஸ்மியைத் தராமல் கலவரத்துடன் பின்னடைய... அதில் சுந்தரத்தின் முகமோ கூம்பி விட்டது.

அவர் முகத்தைக் கண்ட குமரன், “அக்கா அவர் கிட்ட பட்டுவை கொடு...” இவன் கட்டளையிட

“இல்ல டா குமரா... அது வந்து...” பெரியவள் இன்னும் தயங்க..

“தா க்கா...” என்றவன் தானே அஸ்மியை வாங்கி சுந்தரத்திடம் தந்தான்... அதில் அவர் முகமோ இன்னும் இறுகிப் போனது. சுந்தரம் தற்போது இருக்கும் மனநிலைக்கு... அவரைத் தனியாக விட மனமில்லாமல்... அஸ்மியுடன் அவரை இருக்க வைக்க விழைந்தது குமரனின் மனது... அதன் விளைவு தான் இச்செயல்.

அவர் அஸ்மியுடன் வெளியேற... வாசலிலே சுந்தரத்தைப் பிடித்துக் கொண்டார்கள் அழகுமலையும்.. கார்மேகமும். இதுவரை அவர்கள் இருவரும் வீட்டில் இல்லை. அதனால் இங்கு நடந்தது எதுவும் அவர்களுக்கு தெரியாது.

“வாங்க... வாங்க... தம்பி... எப்படி இருக்கீங்க... பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது...” இது அழகுமலை தாத்தா.

“வாங்க தம்பி.. அடடா... நாங்க இல்லைனு கிளம்பிட்டிங்களா... உள்ள வாங்க... உங்களைப் பற்றி என் மருமக வள்ளி நிறைய சொல்லியிருக்கு. அது சம்மந்தமாய் உங்க கிட்ட பேசணும் உள்ளே வாங்க...” இப்படியாக சுந்தரத்தை கார்மேகம் வரவேற்க...

சுந்தரம் இப்போதும் தயங்க... அப்போது அங்கு வந்த பரஞ்சோதி வாத்தியார், “என்ன சுந்தரம் எப்படி இருக்க..” என்று விசாரிக்க

இவ்வளவு நேரமிருந்த இறுக்கம் தளர... அவரிடம் ஓடிய சுந்தரம், “நல்லா இருக்கேன்... வாத்தியார் ஐயா... நீங்க எப்படி இருக்கீங்க...” பணிவாய் கேட்க

“அட... என்ன சுந்தரம் இது... நீ என் மாணவனா... இல்ல நான் தான் உன் வாத்தியாரா... இப்போ நீ தொழில் அதிபன் டா... அதற்கு ஏத்த மாதிரி நில்லு...” வாத்தியார் கட்டளையிட... தலையை சொரிந்தார் சுந்தரம்.

பின் எல்லோரும் கூடத்தில் வந்து அமர.. சுந்தரத்தின் மனதை மாற்ற ஆளாளுக்கு ஒன்று பேசினார்கள்.

“வள்ளி மேலே எந்த தப்பும் இல்ல சுந்தரம்... சூழ்நிலை அப்படி அமைந்து போச்சு.... அதுக்கு நானும் ஒரு காரணம் என்னும் போது... உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்...” இது அழகுமலை.

“அண்ணா... குமரன் மேலுள்ள நேசத்தில் வள்ளி இப்படி செய்துட்டா.... என்ன இருந்தாலும் அவ சின்னப் பிள்ளை தானே... உங்க கோபத்தைக் கொஞ்சம் குறைத்துங்கோங்க...” இது கீர்த்திவாசன்.

“தம்பி, ஏதோ சின்னஞ்சிறுசுங்க... விருப்பபட்டு இப்படி ஒரு முடிவு எடுத்துடுச்சிங்க... விடுங்க தம்பி... பெரியவங்க நாம தான் அனுசரித்துப் போகணும்...” இது கார்மேகம்...

குமரனும்... வள்ளியும்.. விரும்பினதால்.... குமரனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்த இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொண்டதாகவும் தான்... ரேகா சொல்லியிருந்தாள். இன்னும் வள்ளி செய்த தகிடுதத்தோம் எல்லாம் சுந்தரத்திற்கு தெரியாது... அதே போல் மீனாட்சி விஷயமும் அவருக்கு தெரியாது.

எல்லோரும் பேச.. இறுதியாக பரஞ்சோதி வாத்தியார் பேசினார், “அட... விடுங்க ப்பா... சுந்தரம் நம்ம புள்ள... அவன் தங்கச்சிங்க மேலே உசுரையே வச்சிருக்கான்... வள்ளி செய்ததும் தப்பு தானே... கொஞ்ச கொஞ்சமா அவன் மனசு மாறும்... அதை விடுங்க. இவனுக்கு குடிக்க ஏதாவது தாங்க... சுந்தரம் நீ போய் தங்கி ஓய்வெடு...” முதலில் எல்லோருக்குமாய் சொன்னவர் இறுதியாய் சுந்தரத்திடம் முடிக்க...

“நம்ம தோட்ட வீட்டிலே தங்கிகட்டும்...” என்று அதற்கான வேலையில் இறங்கினார் கார்மேகம்.

இதுவரை ஒரு வார்த்தை கூட சுந்தரம் யாரிடமும் பேசவில்லை… அதே போல் இவர்கள் வார்த்தைக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

எங்கோ வெறித்த படி அமர்ந்திருந்த மனைவியை அதட்டி அவளின் அறையில் கொண்டு விட்டு... பின் இவர்களின் பேச்சில் கலந்து கொண்ட குமரன்... இறுதியாய் சுந்தரம் தங்கள் தோட்ட வீட்டில் தங்குவது தெரிந்ததும்... தானே அவர் முன் நின்றவன்.. “வாங்க அத்தான்... நான் உங்களை தோட்ட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன்...” என்க

அவரோ அமைதியாய் முகம் இறுக அமர்ந்திருக்க... ஆனால் அவரின் மடியில் இருந்த அஸ்மியோ, “ப்பா...” என்று அழைப்புடன் குமரனை நோக்கி கை நீட்ட... இவன் “பட்டு..” என்ற அழைப்புடன் பாசமாய் மகளைத் தூக்கி உச்சிமுகர... இதை கண்ட சுந்தரத்தின் முகமோ சுருங்கியது.

பின் வேண்டா வெறுப்பாய் குமரனுடன் வெளியே வந்த சுந்தரம்... தான் வந்திருந்த வாடகை காரை நோக்கி செல்ல...
“அத்தான், இங்கேயிருந்து தோட்டம் பக்கத்திலே தான்.. வாங்க நடந்தே போகலாம்...” என்று அவரிடம் அறிவித்தவன்... பின் கீர்த்தி பக்கம் திரும்பி… “அத்தான் பொருளை எல்லாம் நம்ம தோட்ட வீட்டில் இறக்கிட்டு… காரை அனுப்பிடு கீர்த்தி…” என்க, நண்பன் சொன்னதை செய்ய ஆயத்தமானான் அவன்.

கையில் மகளை ஏந்திய படி... சுந்தரத்துடன் ஒட்டியே நடந்தான் குமரன்.

எந்த முகவுரையும் இல்லாமல் “அத்தான் நாங்க செய்தது தப்பு தான்... இப்படி நடக்கும்னு நினைச்சு பார்க்கல... பெரும்பாலும் தப்பு என்னுடையது தான்... அவ தப்பு எதுவும் இல்லை அத்தான்...” குமரன் சொல்லிக் கொண்டே வர.. எதையும் தான் கேட்கவில்லை என்பது போல் நடந்த சுந்தரம் அவனின் கடைசி வரியில் நின்று குமரனை முறைக்க...

அதில், ‘இப்போது இவர் ஏன் என்னை முறைக்கிறார்?’ என்ற நிலையில் இவன் யோசிக்க... அப்போது தான் அவன் தற்போது சொன்ன கடைசி வரி இவனுக்குள் பிடிபடவும்... ‘என் பொஞ்சாதிய அவனு சொன்னா இவருக்கு கோபம் வருதுடா சாமி!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்... ‘நீங்க என்ன தான் முறைத்தாலும்... என் பொஞ்சாதியை... நான் இப்படி தான் விளிப்பேன்’ என்ற உறுதியைத் தனக்குள் எடுத்தவன்... அதை செயல்படுத்தும் விதமாக

“ஆமா அத்தான்... அவ மேல் எந்த தப்பும் இல்ல.. முழுக்க முழுக்க என் மேலே தான் தப்பு... சும்மா இருந்த அவ கிட்ட... நான் தான் பேசிப் பேசி அவ மனசை மாற்றினேன்... அப்பவும் அவ உங்களுக்கு பயந்தா தான்... நான் தான் ஏதாவது செய்துக்குவேன்னு மிரட்டி... அவளை சம்மதிக்க வைத்தேன். அதனால் நீங்க தண்டனை தரணும்னு நினைத்தா எனக்கு தான் தரணும்... அவளுக்கு தராதீங்க.

இப்பவும் நாங்க இருவரும் காதலித்ததை தப்புன்னு நான் சொல்ல வரல... உங்களுக்கு தெரியாம நாங்க திருமணம் செய்து கிட்டதை தான் தப்புன்னு சொல்றேன். ஏன் அத்தான் காதலிக்கிறது என்ன மகா பாவமான செயலா?” இவன் இறுதியாய் கேட்க...

எதற்கும் அசராமல் இவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்போது இருந்தது போல் தற்போதும் இருந்தார் சுந்தரம்.

“கல்லிலும் மண்ணிலும் உழன்று என் வாழ்க்கை மக்கிப் போயிருக்கும் அத்தான்... இன்னும் சொல்லணும்னா... ஸ்வரங்கள் அறியா கருவியா நான் எங்கோ கிடப்புல இருக்க வேண்டியவன். அப்படியான என் வாழ்வுக்கு இசையைத் தந்தவ என் இசை! அவ இல்லன்னா நான் இல்லன்னு சினிமா வசனம் எல்லாம் நான் பேச மாட்டேன் அத்தான். ஆனா நிச்சயம் என்னை மீட்ட அவ வேணும். அவளுக்கும் நான் அப்படி தான்.

எங்களை மன்னிச்சிடுங்க அத்தான்.. அப்படி எங்களை மன்னிக்க முடியலனா எனக்கு தண்டனை தாங்க. அவளைப் பார்க்காம அவ கிட்ட பேசாம இருக்காதீங்க... அவ தாங்க மாட்ட. இப்போ நீங்க இறுதியா சொல்லிட்டு வந்த வார்த்தைக்கே அவ உடைந்து போயிட்டா அத்தான்...” குமரன் தான் சொல்ல நினைத்ததை எல்லாம் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க

நின்று அவனை தீர்க்கமாய் பார்த்த சுந்தரம், “என் தங்கச்சியை நான் பார்த்துப் பேசணும்னு நீ நினைக்கிறது உண்மைனா... இப்போ நீ சொன்னது எல்லாம் உண்மைனா... உண்மையாவே நீ தண்டனை ஏத்துக்க தயார்னா... அப்போ என் தங்கச்சி வாழ்வை விட்டு நீ விலகு... எனக்கு என் தங்கச்சி... என் தங்கச்சியாகவே வேணும்....” அலட்டிக்கொள்ளாத குரலில் இது தான் என் முடிவு என்பது போல் அவர் அறிவிக்க…

அவர் வார்த்தை கொடுத்த அதிர்ச்சியில் மேற்கொண்டு சுவாசிக்க மறந்தவனாக ஸ்தம்பித்து நின்று விட்டான் குமரன். இனி குமரனின் முடிவு...
 
P Bargavi

Member

Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN