ஈரவிழிகள் 32

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“இந்த.. நிமிஷம்... நீ சொன்னா... இவரை விட்டுட்டு உன் வீட்டுக்கு வந்திடுறேன் ணா…” மனைவி உதிர்த்த இவ்வார்த்தைகள் குமரன் மனதை வலிக்கத் தான் செய்தது... ஆனால் மனைவி மேல் இவனால் கோபம் கொள்ள முடியவில்லை... இப்படி ஒரு சூழ்நிலையில் சுந்தரம் இடத்தில் மீனாட்சி இருந்தாலும் இதை தானே இவனும் சொல்லியிருப்பான்.

ஆனால் அவன் எதிர்பார்க்காத ஒன்று சுந்தரம் வள்ளியிடம் சொன்ன வார்த்தையும்... அதனால் அவளுக்குள் உண்டான அதிர்ச்சியும் தான்.

எப்போதுமே சுந்தரம் பாசத்துக்கு கட்டுப்பட்டவர்... அதனாலேயே எல்லோரையும் அனுசரித்துப் போகிறவர் அவர். அதிர்ந்து ஒரு வார்த்தையும் யாரையும் பேசாதவர்… இப்படியான அவரின் பாசத்தை நம்பி தான் வள்ளி இப்படி ஒரு காரியத்தை செய்தாள். எப்படியாவது அண்ணன் தன்னைப் புரிந்து கொள்வார் என்ற எண்ணம் அவளுடையது. ஆனால் இங்கு நடந்தது... அண்ணன் அப்படி ஒரு வார்த்தையை சொல்லவும்... வள்ளியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியை அப்படி காணவும்... குமரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘அப்படி என்ன நாங்க தப்பு செய்திட்டோம் காதலித்தது ஒரு குத்தமா...’ இப்படியாக கோபம் எழ... இதுவே.. மனைவி மேல் அவனுக்குள்ள நிலைப்பாட்டை நிலை நிறுத்தியது அவன் மனது. அதன் விளைவு இவன் மனைவிக்கு ஆதரவாய் பேசப் போக...

வள்ளியைத் தன் மகளாய் வளர்த்த சுந்தரமோ... முழுவதுமாய் அவளுக்கு தந்தையாய் மாறிப் போனார்.... ‘நான் தூக்கி வளர்த்த பெண்ணுக்கு.. என் தங்கைக்கு இவன் ஆதரவாய் பேசிட்டு வருகிறான்... இவன் யார் எங்களுக்கு இடையில்...’ இதனால் உண்டான பாசப் போராட்டத்தின் விளைவே... அவர் குமரனைத் தன் தங்கை வாழ்விலிருந்து விலகச் சொல்ல காரணமானது.

அதன் பிறகு மவுனமே அங்கு ஆட்சி செய்ய.. இருவரும் தோட்ட வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அஸ்மி இப்போது சுந்தரத்திடம் தாவ... குழந்தையை அவரிடம் தந்தவன்... “இன்னைக்கு ஒரு நாள் வீட்டிலிருந்து உணவு வரும் அத்தான்... நாளைக்கு வேலைக்காரங்க வந்து உங்களுக்கு பிடித்த மாதிரி சமைத்து தருவாங்க...” இவன் சொல்ல... சுந்தரத்திடம் அதே மவுனம்.

அங்கிருந்து கிளம்பியவன்... வீட்டுக்கு செல்லாமல் எங்கெங்கோ சுற்றினான். அது எப்படி அத்தான் அப்படி சொல்லலாம்... வள்ளியை விட்டு விலகுன்னு சொல்கிறாரே... அது என்னால் எப்படி முடியும்... என்னுடைய இசைக்குமே முடியாதே! இவன் அந்தி சாய்ந்த பிறகே வீட்டுக்கு வர.. தம்பியைக் கண்டதும் சத்தம் போட்டாள் மீனாட்சி.

“காலையிலிருந்து எங்க டா இருந்த.. வள்ளியோட அண்ணன் வந்திட்டு போனதுலயிருந்து... இந்த புள்ள எங்கையோ வெறிச்சி வெறிச்சி பார்த்துகிட்டு இருக்கா... பேசினாலும் பேச மாட்டேங்கிறா... சாப்புட வச்சாலும் சாப்புட மாட்றா... செத்த வந்து என்னனு பாரு டா...” தமக்கையின் பேச்சில்.. அப்போது தான் காலையில் நடந்த களேபரத்தில்... இவன் வீட்டிலேயே கைப்பேசியை வைத்து விட்டு சென்றது நினைவு வந்தது.

இவன் மனைவியின் அறைக்குள் நுழைய... எங்கோ வெறித்தபடி படுக்கையில் அமர்ந்திருந்தாள் அவள். தன்னவளை உலுக்கியவன், “இசை..” என்று இரண்டு முறை அவளை அழைக்க... அவளிடம் அதே வெறித்த பார்வை.

“கீர்த்தி கூட வந்து எவ்வளவோ பேசிப் பார்த்தான்... வள்ளி அண்ணன் கிட்டவும் போய் சொல்லிப் பார்த்தானாம்... இவளும் மாறல... அவரும் அசரல... இப்படியே இருந்தா எப்படி டா...”

இவ்வார்த்தையில் மனைவியின் கன்னம் தட்டியவன், “இங்க பார்... இப்போ சொல்றேன்… உன் இளா சொல்றேன்... அத்தானை உன் கிட்ட பேச வைக்க வேண்டியது என் பொறுப்பு... நிச்சயம் அவர் உன் கிட்ட பேசுவார்... நான் சொல்றேன் இல்ல என்னைய பாரு டி...” இவன் பலமாய் இன்னும் அவளின் கன்னம் தட்டி மனைவியை உலுக்க

‘அத்தான் உன் கிட்ட பேசுவார்..’ என்ற வார்த்தையில் தன் நிலையிலிருந்து மாறியவள், “இளா...” என்ற கூக்குரலுடன்... கணவனின் இடுப்பைக் கட்டிக் கொண்டாள் பெண்ணவள்.

“சாப்பிடு...” இப்படியான கணவனின் வார்த்தைகள் எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை அவள். பொறுத்தவன், “சரி கிளம்பு... அத்தானைப் போய்... பார்க்கலாம்...” என்றவன் அவளை இழுத்துச் செல்ல.. அதற்கு மட்டும் அசைந்து கொடுத்தாள் வள்ளி.

கூடத்தில் அமர்ந்திருந்த சுந்தரத்தின் செவிகளில்... வாசலில் வந்து நின்ற காரின் ஓசை எட்டவும் வெளியே வந்தவர்... அங்கு காரிலிருந்து இறங்கிய வள்ளியையும்... குமரனையும் கண்டவர்... முகம் இறுக, “நான் தான் என் முடிவை சொல்லிட்டனே... பிறகு ஏன்.. நான் இந்த ஊரில் இருக்கிற வரைக்கும்... உங்க மனைவி என் திசை பக்கம் கூட திரும்பக் கூடாதுன்னு சொல்லி வைங்க..” இவர் தன் பிடிவாதத்திலே நின்று.. அதையும் தன் குரலில் காட்ட

“அவ என் மனைவியா இப்போ வரல.. உங்க தங்கையா வந்திருக்கா...” குமரனின் பதிலில் இவர் அவனை நம்பாமல் காண..
வள்ளிக்கோ பூமி நழுவவது போலிருந்தது.

“உண்மை தான் அத்தான்... நீங்க கேட்டுகிட்ட மாதிரியே நான் உங்க தங்கை வாழ்க்கையிலிருந்து விலகறேன். அதை சொல்லிட்டு.. உங்க தங்கையை உங்க கிட்ட ஒப்படைச்சிட்டு போகத் தான் வந்தேன்...” பிசிறில்லாமல் ஒலித்த கணவனின் குரலில் வெளிப்படையாகவே வள்ளியின் உடல் குலுங்கியது. அதை இரு ஆண்களும் இருவேறு மனநிலையில் கண்டார்கள்.

‘என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எப்படி இந்த முடிவை இவர் எடுக்கலாம்.. அவரைப் பிரிந்து வெறும் கூடாய் நான் எப்படி இருப்பேன்.. எனக்கு என் அண்ணன் முக்கியம் தான்.. அதே சமயம் என் இளாவும் எனக்கு வேணும்.. இவர்கள் இருவருமே என் கண்கள்.. எப்படி ஒன்றை இழப்பேன்.. என் மனசு இவருக்கு தெரிந்தும் இப்படி செய்யலாமா? எப்படி என்னை விட்டுக் கொடுக்கலாம்’ இவ்வாறு ஆதங்கம்.. கோபம்.. விரக்தி என்று பல உணர்வுளும் மனதுக்குள் ஒருசேர சங்கமிக்க.. கண்களில் நீர் முட்ட குமரனை வெறித்தாள் வள்ளி.

“நம்பலாமா..” சுந்தரம் கேட்க

“என் இசை தான் எனக்கு எல்லாம்... ஆனா இப்போ அவ நல்லா இருந்தா போதும்னு நினைச்சிட்டேன்... இது அவளைக் கேட்காமலே நான் எடுத்த முடிவு. அதனால் நீங்க என்னைய நம்பலாம் அத்தான்..” என்று தொண்டை அடைக்க சொல்லியவன் அடுத்த நொடி.. அவனுடைய உயிரையே இங்கு விட்டு விட்டு அங்கிருந்து விலகியிருந்தான் குமரன்.

குமரனின் கார் கிளம்பி மறையவும்... “உள்ளே வா பாயி கெசில்...” இவர் தங்கையை அழைக்க... அப்போது தான் வள்ளி என்ற சிலைக்கு உயிர் வரவும்... மற்றவை எல்லாம் மறந்தவள் “அண்ணா...” என்று அவரிடம் ஓடினாள் இவள்.

“ஏன் ணா அப்படி சொன்ன... என்னை இன்னும் நாளு அடி வேணாலும் அடி.. ஏத்துகிறேன்… ஏன் என்னை செத்துப் போ கூட சொல்லு... நான் செத்துப் போறேன்... ஆனா... ஆனா... நீ...” இவள் தேம்ப

தங்கையின் தலையை வருடிய சுந்தரமோ எதுவும் பேசவில்லை… தன் தங்கையை.. அவள் கணவனிடம் கூட விட்டுக் கொடுக்க அவர் தயாராக இல்லை. சுந்தரம் மட்டுமல்ல பல அண்ணன்மார்களும்.. தந்தைமார்களுமே இப்படி தான்..

என்ன தான் பெண் பிள்ளைகள் கணவன் வீட்டுக்குச் சென்றாலும் தனக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதான அவர்களின் உள்ளக்கிடக்கை. இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு திண்டாடுவது.. இப்படியாக பாசம் வைத்த பெண் பிள்ளைகள் தான்.

நேரங்கள் நகர... அண்ணன்... தங்கை இருவரும் குமரன் பெயரைத் தவிர்த்து சகஜமாக பேசிக் கொண்டார்கள். வள்ளியும் தன் நிலையிலிருந்து மாறி இருந்தாள். வழமை போல இரவு தன் கருமை நிறத்தை மெல்ல மெல்ல பூசிக் கொள்ள... அந்நேரம் ஒருக்களித்திருந்த வாசல் கதவை யாரோ தட்டவும்... “யாரு... கதவு திறந்து தான் இருக்கு.. உள்ள வாங்க...” வள்ளி தன் கைவேலையில் இருந்த படியே குரல் கொடுக்க

வெளிவாசலிலோ கனத்த அமைதி... “அதான் சொல்றேன் இல்ல வா...” இவள் வாசலுக்கு விரைந்து யாரென்று காண... அங்கு கணவனைக் காணவும்.. கோபம் மேலிட.. பேச வந்த வாக்கியங்களை முடிக்காமல் நிறுத்தி விட்டவளின் பார்வையிலும்.. முகத்திலும் ஒரு அந்நியத்தன்மை குடிவந்தது… அதன் பிறகு வந்தவனை வாவென்றும் அழைக்க வில்லை.. ஏறெடுத்தும் காணவில்லை இவள்.

ஆனால் குமரன் கண்ணிமைக்காமல் மனைவியை தான் வருடிக் கொண்டிருந்தான்... அவனுடைய மனது நிலை கொள்ளவில்லை. அவள் படும் வேதனையைக் காண சகிக்காமல் தான்.. அவளிடம் கூட சொல்லாமல் தானே முடிவெடுத்து.. இங்கு அழைத்து வந்து தன்னவளை விட்டுச் சென்றான். ஆனால் நொடிக்கு நொடி தன்னவளைக் காண முடியாமல் அங்கு இவன் தான் வேதனைப்பட்டான்.

“யாரு பாயி கெசில்...” சுந்தரத்தின் கேள்வியில்... வள்ளி விலகி நிற்க... அங்கு குமரனைக் கண்டவர், “அட நீங்களா வாங்க.. தம்பி...” எதுவும் நடவாதது போல் வந்தவனை இவர் வரவேற்க

மனைவியிடமிருந்து தன் பார்வையை வலுக்கட்டாயமாய் விலக்கியவன், “உங்களுக்கு இரவு ஆகாரம் எடுத்துட்டு வந்திருக்கேன். அத்தான்.. நீங்க வாங்கிகிட்டீங்கனா நான் கிளம்பிடுவேன்...” அவன் குரல் தேய்ந்து தோய்ந்து ஒலித்தது.
உணவை வேலையாட்களிடம் தந்து விட்டிருந்தால் முடிந்தது. ஆனால்... மனைவியைக் காண தற்போது இவனே உணவை எடுத்து வந்திருந்தான்.

“ஓ... அப்ப நீங்களும் எங்க கூட சாப்பிடுங்க தம்பி.. உள்ள வாங்க...” சுந்தரம் சகஜ நிலைக்கு வந்து விட்டார் என்பது அவரின் இவ்வழைப்பிலேயே இவனுக்கு தெரியவும்...

“இல்ல அத்தான் இருக்கட்டும்...”

“அட வாங்க... பாப்பா, தம்பிக்கும் தட்டு வை...”

அண்ணனின் கட்டளையில் இவள் அவர் முன் தட்டு வைத்து அவருக்கு மட்டும் பரிமாற... “தம்பிக்கு வைம்மா...” அவர் மறுபடியும் சொல்ல...

‘ஆமா.. என்னை தள்ளிவிட்டு போனவருக்கு என் கையால வயிறு முட்ட சாப்பாடு வேற நான் போடணுமா?’ என மனதுக்குள் முணுமுணுத்தாளே தவிர.. அண்ணன் சொன்னது எதுவும் தன் காதில் விழவில்லை என்பது போல் இவள் நிற்க..

உணவு மேஜையில் அமர்ந்த குமரன், “இருக்கட்டும் அத்தான்... நானே எடுத்து வச்சிக்கிறேன்...” என்று சொன்னவன்.. சொன்னது போல்... தட்டில் பேருக்கென்று ஒரு இட்லியை எடுத்து வைத்தவனின் விரல்களோ.. அதன் பின் அதை தொடவும் இல்லை.

“பாயி கெசில்.. நீயும் சாப்பிடு...”

அவள் தன்னுடன் சேர்ந்து சாப்பிட மாட்டாளா என்ற சின்ன ஆசையில் குமரன் மனைவியை ஆவலாய் காண... அவளோ இவன் பக்கம் கூட திரும்பாமல், “இருக்கட்டும் ணா... நீங்க சாப்பிடுங்க.. நான் பிறகு உணவை எடுத்துக்கிறேன்...”

‘அங்கே தான் எந்த ஆகாரமும் எடுத்துக்கலை... இங்கே வந்த பிறகாவது ஏதாவது சாப்பிட்டாளா இல்லையா...’ குமரனின் மனம் தவித்தது.

அதற்கு விடையாக, “வந்ததிலிருந்து நீ எதுவும் சாப்பிடலை... உட்கார் பாப்பா...”

அண்ணனின் வார்த்தையை ஸ்திரமாய் மறுத்த படி இவள் நிற்கவும்... தன் கை விரல்களை இறுக்க மூடிக் கொண்டான் குமரன். வெறும் வயிறோடு இருக்கும் தன்னவளை வைத்துக் கொண்டு இவனால் உணவைத் தொடக் கூட முடியவில்லை.

“நீங்க சாப்பிடுங்க தம்பி... இருந்த சூழ்நிலையில் உங்க பேர் கூட நான் தெரிஞ்சுக்கல...”

“இளங்குமரன்...” இவன் பட்டும் படாமல் பதில் தர அங்கு அமைதியே நிலவியது.

தான் உண்டு முடித்து.. எழுந்து கை கழுவி வந்த சுந்தரம்... குமரன் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதையும்... தங்கை அங்குள்ளவைகளை ஒதுக்கி விட்டு விலகுவதையும் கண்டவர், “மாப்ள... உங்க பொஞ்சாதி இங்கே வந்ததிலிருந்து பச்சை தண்ணீ கூட குடிக்கல... ஏதாவது... வள்ளியை சாப்பிட வைத்து உங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க மாப்ள...” மிக இயல்பாய் ஒலித்த சுந்தரத்தின் குரலில்.. கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சியோடு அவரைக் கண்டார்கள்.

‘அண்ணா என்னை நிரந்தரமாக போகச் சொல்கிறாரோ?’ என்ற பயம் கலந்த அதிர்ச்சி வள்ளிக்கு.

‘இப்போ இவர் என்ன சொன்னனர்... நான் தான் ஏதோ தப்பா கேட்டுட்டனா...’ என்ற ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி குமரனிடம்.

“மாப்ள... என் தங்கச்சியை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து வளர்த்தவன் நான்.. என்னால அவளோட மனசை படிக்க முடியும். நான் வள்ளியை கவனிச்சுகிட்டு தான் இருந்தேன். வந்திருந்த இந்த இரண்டு மணி நேரத்தில் கூட உங்களை விட்டிருக்க முடியல வள்ளியால்... அப்புறம் காலம் முழுக்க அந்த புள்ள எப்படி இருக்கும் மாப்ள... என்ன தான் வள்ளி அண்ணன் வேணும்னு வந்திருந்தாலும்... அது கிட்ட ஜீவனே இல்ல. சும்மா மேல்கட்டுக்காக என் கூட சிரிச்சு பேசுதே தவிர அதிலே முழுமையே இல்ல. என் தங்கைக்கு நானும் வேண்டும்.. நீங்களும் வேண்டும்.. அது எனக்கு நல்லா புரிந்தது.

எனக்கு தெரியாம இப்படி நடந்துடுச்சேன்னு.. எனக்குள் இருந்தது எல்லாம் கோபம்... ஆதங்கம்... அவ்வளவு தான். அதுவும் இல்லாம.. நீங்க என் தங்கைக்கு ஆதரவா என் கிட்டவே பேசவும்... ஒரு உரிமை கலந்த கோபம் தான் உங்க கிட்ட நான் சொன்ன வார்த்தைகள். அதுக்காக என் தங்கச்சிக்கு நான் தண்டனை எல்லாம் தந்திட மாட்டேன் மாப்ள..

அவ பிறந்ததிலிருந்து இன்னைக்கு தான் பாப்பாவை அடிச்சிருக்கேன்.. அதுவே எனக்கு மனசு ஆறல.. என்னோட கோபமெல்லாம் இந்தளவுக்கு தான்.. இதுக்கு மேல் என் வள்ளிக்கிட்ட நீடிக்காது. அவ எனக்கு குழந்தை மாதிரி.. அந்த குழந்தையைக் கஷ்டப்படுத்தி நான் நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியுமா.. அதுக்கு பிடித்ததை அது கையிலே கொடுத்து சிரிக்க வைப்பது தான் எனக்கு உண்மையான சந்தோஷம்..” என்றவர் ஆதரவாய் குமரனின் தோளை அழுத்த... அடுத்த நிமிடம் அவர் கையை அழுந்தப் பற்றியிருந்தான் குமரன்.

“தேங்க்ஸ்... அத்தான் தேங்க்ஸ்...” அவன் குரல் நெகிழ்ந்து ஒலித்தது. இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் நின்றிருந்த வள்ளி... இப்போது

“அண்ணா..’ என்று அவர் தோள் சாய...

தங்கையின் வலது கரத்தை பிடித்து... குமரனின் வலது கரத்தில் வைத்து அழுத்தியவர், “வள்ளி எங்க வீட்டு கடைக்குட்டி பொண்ணு... கொஞ்சம் இல்ல துடுக்குத் தனம் ரொம்ப அதிகம் கிட்ட… எதுவா இருந்தாலும் நீங்க அனுசரித்துப் போங்க மாப்ள.. எனக்காக...” இவர் ஒரு அண்ணனாய் முன்னின்று மனதார சொல்ல... நெகிழ்ந்தே போனார்கள் கணவன் மனைவி இருவரும்.

“வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க...” இறுதியாய் அவர் முடிக்க

“இல்ல அத்தான்... அவ ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்க்கிறா.. இங்கேயே இருக்கட்டும்..”

“வேணாம் மாப்ள.. ஒரு இரவு தானே... நான் இருப்பேன்... நாளைக்கு ரேகாவும் ரமேஷ் மாப்ளையும் வராங்க... அதனால் நாளையிலிருந்து ... வள்ளி இங்க இருக்கட்டும்...” என்றவர் விலகி விட

இவன் மனைவியைக் காண அவளோ முகம் திரும்பிக் கொண்டாள்.... அவளுக்கு அவள் கோபம்.. இவன் மனைவியின் கையைப் பற்ற... “என்னை தொடாதீங்க...” என்றவள் விலக

“அப்போ நான் கட்டியே பிடிப்பேன் டி...” என்று முணுமுணுத்தவன்.... சொன்னது போலவே தன்னவளை அணைத்துக் கொள்ள... அவளின் கோபம் எல்லாம் கணவனின் பிடிவாதத்தில் தோற்றுப் போக... ஒரு முறைப்புடன் அவனுள் அடங்கினாள் இவள்.

“என்னை வேண்டாம்னு சொல்லிட்டிங்க தானே?...”

“நான் அப்படி சொல்வேனா டி.. இல்ல அப்படி சொல்லிட்டு தான் என்னால் இருக்க முடியுமா?... உன்னை என்னாலே தேற்ற முடியல... அதான் இங்க கூட்டி வந்து விட்டேன். எப்படியோ நீ இங்கே இருந்தா அத்தான் மனசு மாறும்னு நினைத்தேன்... ஆனா நீ இரண்டு மணி நேரத்திலேயே அத்தான் மனச மாற்றியிருக்க...”

கணவனின் பதிலில் அதுதானே நடந்தது என்ற நிலையில் இவள் நிற்கவும்... “நான் உன்னை விட்டுக் கொடுத்திடுவேனு கனவிலும்.. நீ நினைத்துப் பார்க்காதே..” இவன் அதிகாரமாய் சொல்ல

“ஏன் கொடுத்து தான் பாருங்களேன்... கொலை பண்ணிடுவேன் உங்களை...” இவள் வடிவேல் பாணியில் மிரட்ட.. இளநகையுடனும்.. நிம்மதியுடனும்.. தன்னவளை அணைத்துக் கொண்டான் குமரன்.

வள்ளியின் அண்ணன் தங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும்... அன்று இரவே தமக்கையின் திருமணத்தைப் பற்றி பேசி விட்டான் குமரன். அதிலும் வள்ளி எதற்கு இந்த வீட்டுக்கு வந்தாள்... ஏன் வந்தாள்... தங்கள் காதலையும் மீறி அவள் அண்ணனுக்காக அவள் செய்தது எல்லாம் என்ன என்ன.. அனைத்தும் இவன் சொல்ல... கேட்ட மீனாட்சியோ தன் இமைகளைக் கூட அசைக்கவில்லை... அவ்வளவு அதிர்ச்சி!

அதிலும் பெரியவள் வீட்டு வேலைகளை செய்யாமல் தடுக்க.. முதலில் இவளுக்கு பேதி மாத்திரை கொடுத்தது... பின் கீழே எண்ணையைக் கொட்டி கால் உடைத்து அமரவைத்தது... என்று வள்ளி செய்த அனைத்தையும் இவன் சொல்ல...

“அடி ஆத்தி!” வாய் பொத்தி அமர்ந்து விட்டாள் மீனாட்சி.

குமரன் சாதாரணமாக திருமணம் என்று பேசியிருந்தால் கூட மீனாட்சி ஸ்திரமாய் மறுத்திருப்பாளோ... ஆனால் வள்ளி செய்ததை எல்லாம் கேட்ட பிறகு.. மறுப்பும் சொல்லாமல்... சம்மதமும் சொல்லாமல்.. முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள் இவள். முன்பெல்லாம் ஒவ்வொரு முறையும்.. தன் திருமணத்தைப் பற்றி தனக்காக வள்ளி தன்னிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம்... இப்போது பெரியவளின் மனதில் மறுபடியும் சுற்றி சுழன்றது. இங்கு இப்படி என்றால் மறுநாள் வந்த ரேகாவோ அங்கு அவள் அண்ணனைப் பிடித்துக் கொண்டாள்.

விஷயமறிந்து, “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்.... திருமணம் செய்துகிட்டா... நீங்க எல்லாம் அவ்வளவு பெரிய மனுஷியா.... முதலில் யாரை கேட்டு இப்படி செய்தீங்க... இதெல்லாம் சரிப்பட்டு வராது...” சுந்தரம் ஸ்திரமாய் மறுத்தது மட்டும் அல்லாமல்... வானத்துக்கும் பூமிக்கும் அவர் குதிக்க.. ரேகா விடவில்லை. அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் இவளிடம் பதில் இருந்தது.

“யாரை கேட்கனும் ணா.. என்னை கேட்டு தான் எனக்கு திருமணம் நடத்தி வச்சிங்களா...”

“ஏன்.. நாங்க இப்படி ஒரு முடிவு எடுக்க கூடாதா இல்ல எங்களுக்கு அந்த உரிமை இல்லையா...”

“உங்க உழைப்பை எல்லாம் பிடிங்கி தின்னுட்டு... கடைசி வரை... அரக்கத்தனமா எங்களை வாழ சொல்றியா...”

“முதலில் நீங்க ஏன் திருமணம் வேண்டாம்னு சொல்றிங்க.. அதை சொல்லுங்க... இல்ல நாங்க பார்த்த மீனாட்சி அண்ணிய உங்களுக்கு பிடிக்கலையா...”

இப்போது மட்டும் “அப்படி இல்ல பாப்பா..” இவர் மறுக்க

“அப்பறம் என்ன ணா... எங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணனுக்கு... அவர் வாழ்வு நிறைவா இருக்கிறதை.. நாங்க பார்க்கணும்னு நினைக்கிறோம்.. ஏன் எங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருக்க கூடாதா.. இது தப்பா? நாங்க முடிவு செய்துட்டோம் ணா... குறித்த நாளில்.. உங்க திருமணம் நடக்கும்... எங்க அண்ணன் எங்க மேல் வச்ச பாசம் உண்மைனா.. இதுக்கு மறுப்பு சொல்ல மாட்டார்...” ரேகா இறுதியாய் உறுதியாய் முடிக்க...

வியந்து தான் போனார் சுந்தரம்... ‘நான் வளர்த்த பெண்ணா இது... எப்படி எல்லாம் பேசுது... மிரட்டுது!’

ஒரு நாள் ரமேஷ் சுந்தரத்திடம், “மச்சான் உங்களுக்கு அவங்களை பிடித்திருக்கு... அவங்களுக்கும் உங்களை பிடித்திருக்குனு தான் நினைக்கிறேன்... பிறகு எதற்கு தயக்கம்? உறவுகளுக்காகவா இல்லை இந்த சமூகத்துக்காகவா... நீங்களும் உங்க தங்கைகளும் கஷ்டப்படும் போது... இந்த சமூகமோ... உறவுகளோ யாரும் வரல... பிறகு என்ன... அதுவும் இல்லாம...” ரமேஷ் சிறிதே நிறுத்த

“என்ன மாப்ள.. சொல்லுங்க..”

“நடு சாமத்துல தூக்கம் இல்லாம ரேகா எத்தனையோ முறை அழுதிருக்கா... நான் காரணம் கேட்டது இல்லை அவளும் சொன்னது இல்லை... அந்த அழுகை உங்களை நினைத்து மட்டும்னு எனக்கு தெரியும்... நான் என்ன செய்வேன் அவளை சமாதானம் செய்யறது தவிர... இனியும் அந்த அழுகையை உங்க தங்கச்சிக்கு தராதீங்க... ஏதோ இப்போ அதற்கு நேரம் வந்திருக்கு... யோசிக்காதிங்க மச்சான் சரின்னு சொல்லுங்க...” இப்படியாக ரமேஷும் தன் பங்குக்கு சொல்ல, யோசிக்க ஆரம்பித்தார் சுந்தரம்.

இங்கு ரேகா மீனாட்சியை சந்தித்து பேசிய போது.. மீனாட்சியின் பயம் அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.. மேற்கொண்டு பேசுவதற்குள் பதற்றமடைந்தவள்.. “இல்ல ரேகா.. எனக்கு இது மெனோபாஸ் வயசு.. போன தடவையே நான் உடம்பாலும்.. மனசாலும் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதை இப்ப நெனச்சாலும் என் உடம்பே நடுங்குது ரேகா. இதில் நான் எப்படி புதுசா ஒரு குடும்ப வாழ்க்கைய பத்தி யோசிக்க?” மீனாட்சிக்கு வள்ளியின் குடும்பத்தை பிடித்திருந்தது. அதனால் ரேகாவிடம் தன் பிரச்னையை தயக்கத்துடன் பெரியவள் சொல்ல,

“அண்ணி இதுக்கு ஏன் இவ்வளவு தயங்குறீங்க... இந்த நேரத்தில் தான் கணவனோட அன்பும்.. அரவணைப்பும் உங்களுக்கு தேவை... தாம்பத்யம் எல்லாம் ஒரு வயது வரைக்கும் தான் அண்ணி.. ஆனால் அதன் பிறகு வரும் இந்த வயது காதல் தான் அண்ணி ரொம்ப புனிதமானது. என்ன தான் உங்களை சுத்தி நாங்கெல்லாம் இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா கடைசிவரை தோள் சாய.. ஒரு துணை அவசியம் அண்ணி.

இதை நீங்க என் அண்ணனை திருமணம் செய்துக்கணும் என்றதுக்காக நான் சொல்லல... உங்களுக்கு ஒரு வாழ்க்கை வேணும்.. அதனால் நீங்க யாரை திருமணம் செய்தாலும் எனக்கு சந்தோஷம்.... யோசித்துப் பாருங்க... இந்த உலகத்திலே மண் புழுவில் ஆரம்பித்து.... காக்கா... குருவின்னு... இன்னும் கடவுள் படைப்பில் உள்ள எல்லா ஜீவன்களும் இணையோட வாழுது.. அப்போ மனித பிறப்பில் உள்ள நாம் மட்டும் எதற்கு மறுக்கனும்.

உங்க வயதை வைத்து மறுக்கறிங்களா... இல்ல மத்தவங்க என்ன சொல்வாங்கனு பயப்படுறீங்களா.. அப்படி நினைத்தா அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க.. நீங்க எவ்வளவு தான் நல்லவங்களா இருந்தாலும் சுற்றி இருப்பவர்களை எல்லாம் திருப்தி படுத்த முடியாது.. பேசுறவங்க ஏதாவது பேசிகிட்டே தான் இருப்பாங்க.. அவங்களை விட்டுத் தள்ளுங்க.. நீங்க உங்களுக்காக மட்டும் யோசிச்சு முடிவெடுங்க..

உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கிறது உங்களோட உரிமை.. அதை நீங்க இந்த வயதில் செய்றதிலே என்ன தப்பு இருக்கு?” இன்னும் ரேகா என்னென்னமோ பேச.. அதில் கிராமத்துவாசியான மீனாட்சியோ அதிசயத்து தான் போனாள்.

என்ன தான் சுந்தரமும்... மீனாட்சியும் எல்லோருடைய பேச்சையும் கேட்டுக் கொண்டாலும்... இருவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் நூலிழை தயக்கம் இருந்து கொண்டு தான் இருந்தது. அந்த தயக்கத்தை உடைப்பவர் யார்...
 
V

Veera

Guest

Super
 
P Bargavi

Member

Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN