ஈரவிழிகள் 33 (final)

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“நான் ஒருபோதும் எதையும் அவமானமாக கருதியதில்லை.
ஏனென்றால் வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்!”
ஜெயகாந்தனின் வரிகள்.

என்றோ வாசித்த இவ்வரிகளை எப்போதும் நினைவு கூறுவார் சுந்தரம். அதனால் தான் அவர் வாழ்வில் நடந்த இத்தனை பிரச்சனைகளையும் கடந்து இந்த வயது வரை வந்துள்ளார். அப்படி பட்ட அவர் வாழ்வில் இன்று.. என்றோ அவர் கண்டு நேசித்த பெண் தடம் பதிக்க இருக்கிறாள்...

இவருக்கும் அதில் விருப்பம் தான். ஒருசில நேரங்களில் இந்த ஆண்மகனின் மனது... அவரையும் மீறி தாய் மடிக்கு ஏங்கியது என்னமோ உண்மை தான்... அந்த ஏக்கமே இன்று அவரின் மனதில் ஒரு மெல்லிய சாரலை நுழைத்துள்ளது என்றால் அது தான் நிதர்சனம்.

மீனாட்சிக்கு ஆயிரம் தயக்கங்கள்... அதை இவள் குமரனிடம் வெளிப்படுத்த.. “அக்கா.. இதையெல்லாம் நாங்களும் யோசித்திருக்க மாட்டோமா.. அத்தான் யாருடைய கட்டாயத்தின் பேரில் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல... உன்னைய யாராவது பிடிக்கலன்னு சொல்லுவாங்களா...

நான் முன்னமே சொல்லிட்டேன்... இப்பவும் சொல்றேன்... இருபத்தைந்து வருஷத்துக்கு முன்ன அத்தான் உன்னைய சில வினாடியாவது பார்த்திருக்கார். அப்பவே உன் மேலே நேசம் கொண்டிருக்கார். பெறகு அவர் வாழ்வில் எவ்வளவோ நடந்து போச்சு... அதில் உன்னைய மறந்துட்டார்...

இப்போ உனக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதால் பேசுறாங்க... இதுதான் விஷயம். இன்னும் உனக்கு என்ன தெரியனும்.... அத்தான் எப்படி இருப்பார்ன்னு தெரிஞ்சிக்க நீயே அவர் கிட்ட பேசிப் பாரேன்... உனக்குள்ள இருக்கிற தயக்கம் விலகும்..”

“என்னது... அவரைப் பார்த்து நான் பேசவா... ம்ஹும்... நான் மாட்டேன் ப்பா..” பெரியவள் படபடப்புடன் மறுக்க

“இப்படி சொன்னா எப்படி க்கா... வீட்டிலும் சரி... நம்ம உறவுகளுக்குள்ளும் சரி... இன்னும் யாருக்கும் தற்போது உனக்கு கல்யாணம் பேசுற விஷயம் தெரியாது.. அதனாலே வள்ளியையும்.. குழந்தைங்களையும்... பார்க்கப் போகிற மாதிரி... தோட்ட வீட்டுக்குப் போயிட்டு வா... இங்க இவங்க எதிர்க்க வேணாம்.. வெளியில் சந்திக்கிறதும் சரி வராது... அதனால் தான் சொல்றேன்...”

“டேய்... நான் போகலன்னு சொல்றேன்.. நீ என்ன டா இப்படி திட்டம் எல்லாம் போடுற...”

தமக்கையை ஒரு பார்வை பார்த்தவன், “இன்னும் எத்தனை நாளைக்கு... என் பேச்சை மறுக்க நினைச்சிட்டு இருக்க... நான் சொன்னது ஞாபகம் இருக்கில்ல.. பெறகு உன் விருப்பம்...” கடுமையான குரலில் சொல்லியவன் பின் அங்கிருந்து விலகியிருந்தான் குமரன்.

அதன் பின் யோசிக்காமல் கிளம்பி விட்டாள் மீனாட்சி. இவள் வாசலை மிதிக்க…. உள்ளே குழந்தைகளின் குரல் ஆரவாரத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது... ‘திரும்பி போயிடலாமா?...’ இவளுக்குள்.. மறுபடியும் தயக்கம் குடிகொள்ள..

“யாரு.. யாரு வந்திருக்கறது...” வாசலில் தான் கண்ட நிழலைக் கண்டு சுந்தரம் கேட்கவும்... இவள் தான் தான் என்பது போல் விலகி நிற்க...

அதில் “வாங்க.. வாங்க... உள்ளே வாங்க..” சுந்தரத்தின் குரலை அடுத்து... யார் என்று சமையலறை வாசலிலிருந்து எட்டிப் பார்த்த ரேகாவும்.. வள்ளியும், “வாங்க.. அண்ணி...” என்று ஒரு சேர வரவேற்க...

அஸ்மியும், தட்சனும்... “அத்த...” என்ற அழைப்புடன் ஓடி வந்து இவளின் காலை கட்டிக் கொள்ள... தனக்கு கிடைத்த வரவேற்பில் திக்கு முக்காடி தான் போனாள் மீனாட்சி. அதிதி மட்டும்.. சுந்தரத்திடம் ஒட்டி நின்றது. அதைக் கண்டவள்... அவளை அழைக்க... தன் தாயை ஒரு பார்வை பார்த்து விட்டு... பின் பெரியவளிடம் வந்து அவள் நிற்கவும்... மூன்று பேரையும் அணைத்த படி... அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் மீனாட்சி.

“இருங்க அண்ணி.. காபி.. எடுத்துட்டு வரேன்...”

ரேகாவின் வார்த்தையில், “இல்ல எதுவும் வேணாம்..” இவள் மறுக்க

“நீங்க அமர்ந்து பேசிட்டு இருங்க. பாப்பா.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்...” என்ற சுந்தரம் சமையல் அறையில் நுழைய...

“அண்ணா நான் போட்டு எடுத்திட்டு வரேன்.. நீங்க போங்க..” வள்ளியின் பதிலில்..

“அவங்க அமைதியற்று.. பதட்டமா தெரியறாங்க பாயி கெசில்.... நான் அங்கே இருந்தா அது இன்னும் சங்கடமா இருக்கும். நீ போய் அவங்க கூட பேசிட்டு இரு.. நான் காபி போட்டு எடுத்திட்டு வரேன்...”

தான் வள்ளியுடன் சேர்ந்து காபி போடுவதாக சொல்ல வந்த மீனாட்சி.. சுந்தரம் மொழிந்த இவ்வார்த்தைகளை அறை வாயிலேயே நின்று கேட்டு விட... இதம் பரவியது அவளுள்.

சுந்தரம் காபியுடன்... மாலை நேரத்திற்கு கொறிக்க சிற்றுண்டியையும் எடுத்து வந்து வைக்க.. “அண்ணா... காத்தாட.. நாங்க குழந்தைகளோட பின்னாடி தோட்டத்துக்குப் போறோம்...” என்ற அறிவிப்புடன்... இருவருக்கும் தனிமை கொடுத்து ரேகா.. வள்ளி இருவரும் பிள்ளைகளுடன் சென்று விட...

மீனாட்சியினுள் மறுபடியும் தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் ஆண்மகனுக்கு அப்படி எதுவும் இல்லை போல...
“காபி எப்படி ஸ்ட்ராங்கா... சீனி எவ்வளவு போட... இது போதுமா பாருங்க...” இப்படி தனித் தனியாய்... பால்... டிகாஷன்... சீனி என்று கொண்டு வந்ததை... இவர் அவள் விருப்பத்திற்கு ஏற்ப கேட்டு கலந்து.. கலந்ததை அவள் முன் வைத்தவர்...

“நீங்க இப்பவும் மேகமலைக்குப் போவீங்களா...” என்று அவர் திடீரென கேட்கவும் இவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

அதில் இவள் விழிக்க... “இருபத்தைந்து வருடத்திற்கு முன்னே... உங்களை மேகமலை எஸ்டேட்டில் உங்க தாத்தாவோட பார்த்திருக்கேன்... இரட்டை ஜடையிலே தலை நிறைய பூவோட.. பாவாடை சட்டையில்... உங்க தத்தா கிட்ட நீங்க ஏதோ வம்பு வளக்க... அதுக்கு அவர் பொய்யா உங்க காதைப் பிடித்து திருகினார்..” சுந்தரம் அன்று நடந்ததை அச்சு பிசகாமல் அப்படியே சொல்லவும்..

‘என்ன.. எதையும் மறக்காம ஞாபகம் வச்சு சொல்கிறார்...’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள் உடல் வெடவெடக்க அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டாள் மீனாட்சி...

அவள் முகத்திலிருந்தே அதைப் படித்த சுந்தரம், “அச்சோ! அப்படி எல்லாம் தினமும் ஞாபகத்தில் இல்லைங்க... மறந்து போன விஷயத்தை... இங்கே வந்து உங்களைபா பார்த்த பிறகு அவங்க தான் நீங்கன்னு தெரிந்த பிறகு தாங்க... கஷ்டப்பட்டு ஞாபகப் படுத்திகிட்டேன்...” இப்படி அவர் அவசரமாய் விளக்கிய விதத்தில் இவள் சிரித்து விட... அதில் “அப்பாடா...” என்ற முணுமுணுப்புடன் தன் மூச்சை இழுத்து விட்டார் சுந்தரம்.

“உட்கார்ந்து.. காபியை குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...” என்றவர் தன் கைப்பேசியில் எதையோ தேட.. கடந்த காலத்தைப் பற்றியோ.. அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ பேசாமல்.. இப்படி இயல்பாய் பேச்சை ஆரம்பித்த சுந்தரத்தை மீனாட்சிக்கு பிடித்திருந்தது. அதே நேரம் சுந்தரத்தின் கைப்பேசியில் இந்த வரிகள் ஒலித்தது..

நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா நான் வாடும்
நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா
ஏதோ ஏதோ
ஆனந்த ராகம் உன்னால்
தானே உண்டானது கால்போன
பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய்
சேர்த்த மாது

அதைக் கேட்டுக் கொண்டே காபியை பருகியவள், “நல்லா இருக்கு... நான் சொன்ன மாதிரியே... எல்லாம் அளவா கலந்து இருக்கீங்க..” இப்போது மீனாட்சியிடம் தயக்கம் தூரப் போயிருந்தது.

“அப்படியா.. அப்போ நாளைக்கு உங்களுக்கு இங்கே தான் மதிய உணவு.. நான் நல்லா சமைப்பேங்க... அதையும் ருசி பார்த்திட்டு சொல்லுங்க...”

“ஓ.... அப்படியா...” வியப்பாய் கேட்டுக் கொண்டாள் மீனாட்சி. பின்ன.. இவள் வீட்டில் தான் ஆண்கள் யாரும் சமையல் அறை பக்கமே போகமாட்டார்களே...

“ஒரே நாளில் அப்படி என்னங்க கைமணம் தெரிஞ்சிசிடப் போகுது... காலம் முழுக்க என்னில் சரிபாதியாய் என் கைமணத்தை சாப்பிட்டுப் பாருங்களேன்.. அப்ப தான் ருசி இன்னும் தெரியும்...” சுந்தரம் நாசுக்காய் தன் விருப்பத்தைச் சொல்ல.. அதைப் புரிந்து கொண்டவளோ படபடக்க....

“முதலில் நாளைக்கு விருந்தாளியா உங்க கைபக்குவத்தை ருசிக்கிறேன்... பெறகு பதிலை சொல்றேன்...” இவளும் நாசூக்காக பதில் தர

அதில் வாய் விட்டு சிரித்த சுந்தரம், “இன்னும் நிறைய வேலை எனக்கு தெரியுங்க...” என்று பீடிகையுடன் ஆரம்பிக்க

‘என்ன.. வீடு கூட்டுறது... பாத்திரம் விலக்குறது... துணி துவைக்கிறது அதானே...’ தனக்குள் கேட்டுக் கொண்டவள் அமைதியாய் இருக்க..

இதையும் அவள் முகத்திலிருந்தே படித்த சுந்தரம், “அதுக்கும் மேலங்க..” என்று சொல்ல... இவள் அது என்ன என்பது போல் பார்க்கவும்

“நல்லா கால் பிடித்து விடுவேங்க... இன்னும் சொல்லணும்னா இப்ப நீங்க கேட்ட இந்த பாடல் வரிகளை என்றோ நான் எதேச்சையா கேட்கும் போது உண்மையில் நானுமே அப்படி தான் ஏங்குவதாக தோணும்.. ஆனா இன்னைக்கு நீங்க என் வாழ்க்கைகையில் இணைந்தா நிச்சயம் நானே இந்த வரிகளை சந்தோஷமா பாடுவேங்க..” தன் மனதிற்கு பிடித்தவளிடம் மட்டும்... வெட்கமே இல்லாமல் இப்படி அசடுவழிவதில்... எந்த வயதிலும் ஆண்மகன் இப்படி தான் என்பதையும் தன் மனதில் உள்ளதை மறையாமல் சொல்வதும் அவர்களே என்பதையும் நிரூபித்தார் சுந்தரம்.

அதில் கடந்தகாலத்தைப் பற்றிய துயரம் இல்லாமல்... எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல்... இந்த நிமிடத்தை... ரசித்து வாழும் சுந்தரத்தை இன்னும் இன்னும் பிடித்துப் போனது மீனாட்சிக்கு. அவர் வார்த்தையில் கலகலவென்று சிரித்தவள், “அப்போ எனக்கு கணவர் என்ற பதவியை உங்களுக்கு தரேன்.. காலம் முழுக்க அந்த வேலையை சரியா செய்ங்க...” இவள் பட்டென்று தன் சம்மதத்தை சொல்லி விட...

“காத்திருக்கிறேன் தேவி...” என்று இளநகை புரிந்தவர்.. அவளின் முகத்தில் யோசனையின் ரேகையை காணவும், “இன்னும் வேற ஏதாவது என் கிட்ட சொல்லணும்னு நினைக்கிறீங்களா..” என்று கேட்க

“அது... அப்பாவை தனியா விட முடியாது.. ஆண்பிள்ளைங்களை விட அவர் என்னையே தான் அண்டி வாழ்ந்துட்டார்... அதனால...” இவள் சற்றே இழுக்க

“என்னுடைய மாமா... நம்ம கூட மலேசியாவில் இருப்பார்... சரியா....” அந்த பதிலில் இவள் மகிழ்ந்த நேரம்...

“இந்த சமஸ்தானத்தின் பட்டத்து மகாராணி வள்ளியும்.. அவளின் குட்டி இளவரசி அஸ்மியும்... வருகை தருகிறார்கள்... பராக்... பராக்..” என்ற படி இடது கையில் அஸ்மியை ஏந்திக் கொண்டு வலது உள்ளங்கையைத் தன் விழிகளின் மேல் வைத்து மறைத்துக் கொண்டு... தன் வருகையை வள்ளி தெரிவிக்க.. அவளைப் போலவே தாயின் கையிலிருந்த அஸ்மியும்.. தன் பிஞ்சு கரத்தால் இரண்டு கண்களையும் பொத்திக் கொண்டவள் “பரார்... பரார்...” என்று அறிவிக்க...

இவர்களின் செய்கையைக் கண்ட சுந்தரம், “ஹேய்... போக்கிரிங்களா... என்ன இது...” போலியாய் அதட்ட

“லவ்வர்ஸ்குள்ள ஆயிரம் இருக்கும் ணா...” வள்ளியின் பதிலில் மீனாட்சி முகம் சிவக்கவும்... அதை கண்டவளுக்கு

‘ஹா.. ஹா... அப்போ எல்லாம் பேசிட்டாங்களா...’ என்று நினைத்தவள் அண்ணனைக் காண... அதை ஆமோதிப்பது போல் சுந்தரம் தலை அசைக்கவும்..

“ஹே... ரேகா இங்க வாயேன்... சீக்கிரம் வந்து இங்கே அண்ணிய பாரேன்... அச்சோ! அழகா வெட்கப்படறாங்க டி...” மகிழ்ச்சியில் வள்ளி செய்த கலாட்டாவில் அந்த இடமே கலகலத்தது.

மீனாட்சி கிளம்பும் நேரம்.. “பாயி கெசில்... இருட்டிடுச்சு... அண்ணியை அழைச்சிட்டு போய் விட்டுட்டு வா...” சுந்தரம் சொல்ல

“அண்ணா நீங்க கூட போய்ட்டு வாங்க ணா...” வள்ளி அண்ணனை அனுப்ப

“இது கிராமம் ம்மா... அது சரி வராது... நீ போயிட்டு வா...” என்று இவர் முடித்து விட...

வாசல் வரை சென்ற மீனாட்சிக்குள்.. தான் இங்கு வரும் போது இருந்த தயக்கம்... படபடப்பு.. எதிர்காலத்தை குறித்த அச்சம் எல்லாம் பனி போல் தற்போது விலகி விட்டதை உணர்ந்தவள்.... அதனால் உண்டான இனம் புரியாத உணர்வில் திரும்பி சுந்தரத்தைக் கண்டவள்.. ‘நான் போய் வரவா..’ என்பது போல் தலையை அசைக்க.. அதில் தன் கண்ணில் காதலை தேக்கி... நான் இருக்கிறேன் என்பது போல்... விழிகளை மூடி... திறந்து சுந்தரம் தலையை அசைக்க

எந்த வயதிலும் காதலர்களுக்குள் நிகழும் இந்த பார்வை பரிமாற்றம் அழகு தான்... அதைக் கண்டும் காணாதது போல்... அகம் மகிழ்ந்து போனார்கள் ரேகாவும்... வள்ளியும்.

இருவரும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவும்... அடுத்தடுத்து திருமண வேலைகள் துரித வேகத்தில் நடந்தேறியது. அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல்... தோட்ட வீட்டிலேயே... இரு வீட்டு சொந்தங்கள்... உறவுகள் சூழ... திருமணம் நடத்தலாம் என முடிவானது. முகூர்த்தம் காலை ஒன்பது மணிக்கு என்பதால்... அவசரம் இல்லாமல் அனைவரும் கிளம்பினார்கள். அண்ணனுக்கு திருமணம் நடக்க உள்ளதை பிடிக்காத கலா... வேண்டா வெறுப்பாய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவள்.... இதில் மணப்பெண்ணான மீனாட்சியை கேலி கிண்டலும்... பேச்சும் சிரிப்புமாய்... அலங்கரித்துக் கொண்டிருந்த தங்கைகளைக் கண்டவளுக்கு வயிறு எரிந்தது.

அதில் உள்ளே வந்தவள், “இதென்ன நகைகள் எல்லாம் இவ்வளவு தக்கையா இருக்கு... எல்லாம் சுத்த தங்கம் தானே?...”

“நீ என்ன இவ்வளவு குண்டா இருக்க...”

“ஒன்னும் பெருசா படிக்கல போல...”

“கல்யாணம் நடந்தா... *** இப்படி வேணா இருக்கலாம்... ஆனா குழந்தை பெத்துக்க முடியாது...” தன் வன்மத்தை அவள் அசிங்கமாய் கொட்ட... துடித்துப் போனாள் மீனாட்சி. அதில் அவளுக்கு கண்களே கலங்கி விட்டது...

எல்லாவற்றிக்கும் அமைதியாக இருந்த ரேகாவால் கடைசி வார்த்தையில் அமைதியாக இருக்க முடியவில்லை... “இங்க பார்.. என் அண்ணா கேட்டுகிட்டதாலே தான்... நீ பேசின பேச்சுக்கு இவ்வளவு நேரமும் நான் அமைதியா இருந்தேன். அதுக்காக எப்போதும் இப்படியே இருப்பேன்னு நினைக்காத... என் கையால் செருப்படி வாங்குறதுக்குள்ள மரியாதையா இங்கிருந்து ஓடிப் போயிடு....” என்று எச்சரிக்க

“பரதேசி நாய்ங்க... எங்கயோ அனாதையா இருக்க வேண்டியதுங்களை... வளர்த்தேன் பார்... அதென்ன இவளை சொன்ன மாதிரி.. இவ இந்த பேச்சு பேசுறா... நன்றி கெட்ட நாய்ங்க..” கலா தனக்கு கிடைத்த அவமானத்தில் இன்னும் என்னென்னமோ பேச...

“ரமேஷ் மாமா.. இளா இரண்டு பேரும் இங்க வாங்களேன்...” வள்ளி கலாவை முறைத்துக் கொண்டே அறை வாயிலில் நின்று அவர்களை அழைக்க...

‘ஐயோ! பிரச்சனை பெருசா ஆகிடும் போலவே...’ என்ற பயத்தில் அங்கிருந்து விலகினாள் கலா.

சுந்தரம் முன்பே சொல்லி விட்டார்... ‘கலாவுக்கு பணம் தான் முக்கியம்... நாம் பாசமா ஒத்துமையா இருந்தா அதுக்கு பிடிக்காது... அதனால் வந்த இடத்தில் கலா ஏதாவது பேசினாலும் அமைதியா போங்க... எல்லோர் முன்னேயும் ரசாபாசம் வேண்டாம்..’ இப்படி அவர் கேட்டுக் கொண்டதின் விளைவே வள்ளியும்... ரேகாவும்... நிறைய இடத்தில் அமைதியாக போக காரணம்.

“அண்ணி மணவறைக்குப் போகிற நேரத்தில் எதுக்கு இப்படி கண்ணைக் கசக்கிட்டு... அழாதீங்க அண்ணி...” ரேகா அவளை சமாதானம் செய்ய

“வள்ளி... ரேகா இதை நான் யார் கிட்ட எப்படி கேட்கிறதுனு தெரியல... நான் அஸ்மியை வளர்த்துக்கவா... எனக்கு அவளைத் தருவீங்களா...” மீனாட்சி கெஞ்சலுடன் தயங்கித் தயங்கி கேட்கவும்

“அண்ணி... என்ன கேள்வி இது.. அவளுக்கு நீங்க தான் அம்மா... இன்றிலிருந்து நீங்களே அவளைப் பார்த்துக்கோங்க...”

ரேகாவின் பதிலில், “வேணாம்.. வேணாம்... நான் அவளுக்கு அத்தையாவே இருக்கேன்... ஆனா பட்டுவை வளர்த்த மாதிரி இவளையும் வளர்க்கணும்.. அதுக்கு தான் கேட்டேன்...” மீனாட்சி சொல்லவும்

“அண்ணி, இதெல்லாம் அநியாயம்.. ஏற்கனவே பட்டுன்ற பேரில்... ஒரு சாமியார வளர்த்து அழகு பார்த்திட்டு... இப்போ மறுபடியும் இன்னோர் சாமியார நீங்க உருவாக்க நினைக்கிறீங்களா?..” வள்ளி இடக்காய் கேட்கவும்

எல்லாம் மறக்க, “போக்கிரி.. என் தம்பி உனக்கு சாமியாரா...” என்று கேட்ட படி மீனாட்சி வள்ளியின் காதைத் திருகவும்...

அந்நேரம் அறைக்குள் வந்த குமரன் இதையெல்லாம் கேட்டு.. ‘நான் உனக்கு சாமியாரா.. இன்னைக்கு ராத்திரி இருக்கு டி உனக்கு...’ வந்தவன் தன்னவளை கண்களாலேயே மிரட்ட.. இன்று தான் இருவரும் தங்கள் வாழ்வை ஆரம்பிக்க முடிவு செய்ததால்... கணவன் அதைக் கோடிட்டு காட்டி கண்ணால் மிரட்டவும்... வெட்கத்தால் முகம் சிவந்தாள் வள்ளி.


வாசலில் கட்டியிருந்த ஒலி பெருக்கியில், “நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழணும்” என்று பாட.. உள்ளே மணவறையில் ஐயர் மந்திரங்கள் சொல்லி திருமாங்கல்யத்தை சுந்தரத்திடம் கொடுக்க... கெட்டி மேளங்கள் முழங்க... திருமாங்கல்யத்தை மீனாட்சியின் கழுத்தில் பூட்டி அவளைத் தன்னில் சரிபாதியாய் ஆக்கிக் கொண்டார் அவர்.

பின் அனைத்து சடங்குகளும் முடிய.. திருமணமும் இனிதே நடந்து முடிந்தது. மறுநாள் காலையில் சில உறவுகள் திருமண அசதியில் இன்னும் உறங்கி கொண்டிருக்க... முகத்தில் மஞ்சள் பூசி... பொட்டு வைத்து... தலையைத் தளர பின்னி பூ வைத்து... முகம் கொள்ளா புன்னகையுடன் அம்மன் சிலையென தங்கள் அறையிலிருந்து வெளியே வந்த மகளைக் கண்ட கார்மேகத்தின் உள்ளமோ குளிந்தது..

“வா டா மீனா.. வா வா... மாப்ள எழுந்திருச்சிட்டாரா... அவருக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்க டா...” அவர் சொல்ல

“ம்ம்ம்... சரி ப்பா... உட்காருங்க.. பலகாரம் வெக்கவா...” மீனாட்சி கேட்டுக் கொண்டிருந்த நேரம் அங்கு சுந்தரம் வரவும்...

“முதலில் மாப்பிளைக்கு வைம்மா...” கார்மேகம் சொல்லவும்

“மீனா... எங்க இரண்டு பேருக்கும் சேர்ந்தே வை.. வாங்க மாமா நீங்களும் சாப்பிடுங்க...” என்று சுந்தரம் அவரை அழைக்கவும்.. தானும் அமர்ந்து கொண்டார் கார்மேகம்.

அப்போது அங்கு வந்த வள்ளி... “அண்ணி... நீங்களும் அண்ணன் கூட உட்காருங்க... நான் பரிமாறுறேன்...” என்க

அவர்கள் மூவரும் அமர.. வள்ளி பரிமாற அந்நேரம் கையில் அஸ்மியுடன் அங்கு வந்த குமரன்... மனைவியையே காதலோடு காண.. அவளோ அவன் பக்கம் கூட திரும்பவில்லை.

நேற்று தான் இருவரும் தங்கள் வாழ்வை ஆரம்பித்தார்கள்… அதன் விளைவு விடிந்த பின்னும் இவன் மனைவியைத் தேட… அவளோ அங்கு இல்லை… சரி காபியாவது எடுத்து வருவாள்.. கொஞ்சம் பேசி பார்க்கலாம் என்று இவன் நினைத்திருக்க… அவன் மனைவியோ.. எதேச்சையாக கூட அறையினுள் கால் வைக்கவில்லை… அதனால் இவன் மனைவியே குறுகுறு என்று தற்போது பார்க்க… கணவனின் பார்வை அறிந்தும் அறியாததைப் போல் நின்றாள் அவள்…

பின் இவன் அனைவருடனும் அமர்ந்து தானும் உண்டு மகளுக்கும் ஊட்டி விட...

அப்போது அங்கு வந்த ஒரு உறவுக்கார பெண், “மீனா, சாப்பிட்டதும் நீயும் மாப்பிள்ளையும் கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க ம்மா...” என்க...

“ஆமா மீனா கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க... அப்படியே பொழுது சாய்ந்ததும்... நம்ம தோட்டத்து பக்கம் போய் வாங்க. முடிஞ்சா... நம்ம மேகமலை எஸ்டேட்டுக்கும் போய் வாங்க மாப்ள...” மகளிடம் ஆரம்பித்து கார்மேகம் மருமகனிடம் முடிக்க

“அதற்கு என்ன மாமா... போயிட்டு வரோம்... இப்போ நீங்களும் எங்க கூட கோவிலுக்கு வாங்களேன் மாமா..” எனவும்

மருமகன் அழைத்து எந்த மாமனார் மறுப்பார்... “சரிங்க மாப்ள இதோ சாப்பிட்டு கிளம்பறேன்...” அவர் சொல்லி முடிக்கவும்

“வள்ளி, நான் அஸ்மியை கூப்டுகிட்டு போகவா...” மீனாட்சி இப்படி கேட்கவும்

“சரிங்க அண்ணி.. அழைச்சிட்டு போயிட்டு வாங்க. இருங்க.. அவளுக்கு டிரெஸ் மாற்றி விடுறேன்...”

“வேணாம் வள்ளி.. நானே பார்த்துக்கிறேன்...” என்ற மீனா உண்டு முடித்து அஸ்மியையும் தூக்கிக் கொண்டு கிளம்பி விட... யாருமற்ற அந்த இடத்தில் தற்போது குமரனும்.. வள்ளியும் மட்டுமே தனித்திருந்தார்கள்.

இவள் கணவனுக்கு பரிமாற... தான் உண்டு முடித்ததும் கை கழுவி வந்தவன்... தன்னவளின் கரம் பற்றி இழுத்து சேரில் அமர வைத்து.. அவள் முன்னே தட்டு வைத்து பலகாரங்களைப் பரிமாறியவன்..
“ஒழுங்கா நேரத்திற்கு சாப்பிடு..” என்று இவன் மிரட்ட

அதில் கணவனை நிமிர்ந்து பார்த்தவள்... பின் தலை குனிந்து சாப்பிட ஆரம்பிக்க... எதுவும் வாயடிக்காமல் அமைதியாய் இருக்கும் மனைவியை வியப்பாய் பார்த்தவன், “ஹேய்... டாக்டரம்மா என்ன நைட் ரொம்ப படுத்திட்டனா...” இவன் ரகசிய குரலில்... தன்னவளின் காது மடலில் மீசை உரச கேட்கவும்.. இன்னும் தலையை தட்டில் புதைத்துக் கொண்டாள் வள்ளி.

‘அச்சோ! இந்த மனுஷன் என்ன இப்படி எல்லாம் கேட்கிறார்...’ என்று சன்னமாய் இவள் தனக்குள் முணுமுணுத்த நேரம்

அவள் பக்கத்தில் உள்ள சேரில் சட்டமாய் அமர்ந்தவன், “ஹே... இசை எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. சொல்லு டி... நிஜமா படுத்திட்டனா...” சுட்டு விரலால்... தன்னவளின் முகத்தை நிமிர்த்தி இவன் கேட்க... வெட்கத்தில் தன் கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள் வள்ளி.

காலையிலிருந்து இவள் கணவனைத் தவிர்க்க இந்த வெட்கம் தான் காரணம். இது தெரியாமல் அழும்பு செய்து கொண்டிருந்தான் குமரன். தங்களின் சங்கமத்திற்கு பிறகு... இதமாய் அணைத்து... காதலோடு நெற்றியில் இதழ் ஒற்றி.. தன்னவளின் காதுக்குள் ரகசியமாய் கேட்க வேண்டியதை... இப்படி வெட்ட வெளியில் அதுவும் சாப்பாட்டு மேஜையில் கேட்கிறான் குமரன். பாவம்.. அவனும் தான் என்ன செய்வான்... காதல் பாடத்தில் இன்னும் அவன் அரிச்சுவடி கூட கற்றுத் தேறவில்லையே!

மனைவியின் முக சிவப்பை... ஏதோ அவளுக்கு தான் கஷ்டம் கொடுத்ததால் உண்டானது என்பதாய் தவறாய் புரிந்து கொண்டவன் அவள் கஷ்டத்தை தானும் அனுபவித்து, “சாரி.. டி.. சாரி... டி... ஏதோ ஒரு வேகத்தில்...” இவன் பாட்டுக்கு நல்ல பிள்ளையாய் விளக்கம் கொடுத்துக் கொண்டு போக...

‘அச்சச்சோ!..’ என்று உள்ளுக்குள் அலறிய வள்ளி... தன்னவனின் வாயை அடைக்க... இரண்டு இட்லியையும் ஒன்றாய் சேர்த்து அவன் வாய்க்குள் தள்ளியவள்...

“ஒழுங்கா போயிடுங்க.. இல்ல இன்னைக்கு நைட் உங்களை நான் கடித்து வச்சிடுவேன்..” என்று தன்னவள் புன்னகையோடு சொல்லிய தினுசில் இவனுக்கு புரையேறியது. கண்கள் நீர் கோர்க்க.. அதில் இவனும் இரண்டு இட்லியை எடுத்து தன்னவளின் வாயில் அடைக்க... யாரும் இல்லை என்ற தைரியத்தில் பின் அங்கு குட்டி கலாட்டாவே கணவன் மனைவிக்குள் அரங்கேறியது.

மீனாட்சி.. அஸ்மியுடன் முன்னே கோவில் பிரகாரத்தை சுற்றி வர.. அவர்களுக்கு சற்றே பின் தள்ளி மாமனாரும் மருமகனும்.. சுற்றி வந்தார்கள்.

“மாமா... எங்களுக்கு அங்க மலேசியாவில் பெரியவங்கன்னு யாரும் இல்ல... நீங்க எங்களுக்கு துணையா அங்க வந்திடுங்களேன்... அஸ்மி எங்க கூட தான் இருக்கப் போறா.. நீங்களும் வந்தா நல்லா இருக்கும்... மாட்டேன்னு சொல்லிடாதீங்க மாமா... இது உங்க பொண்ணோட விருப்பம்.. மீனாவுக்காக பாருங்க மாமா...” சுந்தரம் கார்மேகத்திடம் கேட்டுக் கொள்ள... அமைதியாய் இருந்தார் அவர்.

முன்பே குமரன் தந்தையிடம் சொல்லி விட்டான்... இப்படி ஒரு கண்டிஷனை அக்கா, அத்தானிடம் சொன்ன பிறகு தான்... திருமணத்திற்கு சம்மதித்தாள் என்று. அதை ஏதோ என்று நினைத்த கார்மேகம் இன்று மாப்பிள்ளையின் வாயிலிருந்து நாசூக்காய் இப்படி வந்த கேள்வியில்... மகளின் பாசத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி தான் போனார் அந்த தந்தை.

கோவில் படிக்கட்டில் கார்மேகமும் மீனாட்சியும் அமர்ந்து கொள்ள.. சுந்தரம் அஸ்மியுடன் கீழ் படிக்கட்டில் நீரில் நின்றிருந்தார்... அப்போது கார்மேகம் மகளின் தலையை வருடி விட... அதில் நிமிர்ந்தவள், “என்ன ப்பா...” என்று கேட்க

“நீ என் அம்மா ம்மா...” என்று நெகிழ்ந்து போனார் அவர். அதன் பிறகு ஊரில் உள்ளவர்களிடம் எல்லாம் என் மகளுடன் நான் மலேசியா போறேன் என்று சந்தோஷமாக சொல்லி வந்தார் அவர்.

ரேகாவும்... ரமேஷும் முன்பே கிளம்பி விட.. கார்மேகத்தின் பாஸ்போர்ட் விசாவுக்கு என்று பார்க்க இருந்ததால் இங்கு சுந்தரமும்... மீனாட்சியும் கிளம்ப தாமதம் ஆனது... கார்மேகம் தன் மகன்களுக்கு சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார்.

குமரனுக்கு அசையா சொத்துக்களைக் கொடுத்தவர் அதற்கு ஈடாக... மற்ற இருவருக்கும் பணமாய் தந்து விட்டார்... மீனாட்சியின் பங்கை அவள் பெயரிலும் வங்கியில் போட்டு விட்டார். இதில் சதீஷுக்கும் பங்கு போகவும் கடுப்பாகிவிட்டான் புருஷோத்தமன். சேரன், அவர் மாமனார் இறந்து விட.. வீட்டோட மாப்பிளையாய் சென்று விட்டான்.

பிறகு இவன் தான் என்னும் போது.... மூத்தவன் என்ற முறையில் முழுக்க தனக்கே வரும் என்று இவன் நினைத்திருக்க... இப்படி பாகம் பிரித்து அவனுக்கு உள்ளது மட்டும் வரவும்... கோபமானவன், “என்ன.. புதுசா கல்யாணம் ஆகிடுச்சின்னு ரொம்ப ஆடுற போல... எங்க சம்மதம் இல்லாம தான் இது நடந்திருக்கு... உன் புருஷனுக்கு ஏதாவது ஆச்சுன்னா... திரும்ப நீ என் கிட்ட தான் வந்து நிற்கணும் ஞாபகத்தில் வச்சிக்க...” என்று மீனாட்சியை இவன் தனிமையில் சந்தித்து தான் சென்னை கிளம்புவதற்கு முன் எச்சரிக்க...

ஒரு வித நிமிர்வுடன் தம்பியை எதிர்கொண்டவள், “நான் யாருக்கு என்ன பாவம் டா செஞ்சேன்... எனக்கு அப்படி நடக்க... என் புருஷனோட... நான் நூறு வருசம் வாழுவேன்... எங்க அறுபதாம் கல்யாணத்துக்கு தவறாம வந்துடு...” என்று இவள் பதில் கொடுக்க... ஆச்சர்யமாய் வாய் பிளந்தவன்.. பின் கோபமாக வாயில் எதையோ முணுமுணுத்தபடி அங்கிருந்து விலகி விட்டான் அவன். சில பேரை மாற்ற முடியாது. அதில் இந்த கல்பனா... புருஷோத்தமன்... கலா எல்லாம் ஒரே ரகம்.

இந்த ஊரில் கார்மேகத்துக்கு அடுத்தபடியாய்... மரியாதைகள் எல்லாம் குமரனுக்கு வழங்கப்பட... அழகுமலை.. சதீஷ்... இருவரும் குமரனுடன் தங்கிக் கொள்ள... கார்மேகம் அஸ்மியுடன் தங்கள் கூட்டை நோக்கிப் பயணித்தார்கள் சுந்தரமும்... மீனாட்சியும்.

ஏர்போர்டில்... கிளம்பும் நேரம் எல்லோரையும் விட்டுப் பிரிகிறோம் என்பதில் மீனாட்சியின் முகம் வாடியது. என்ன தான் வள்ளி முன்பே பிரிந்து வந்திருந்தாலும் அவளாலும் சிரித்த படி சகஜமாக வழியனுப்ப முடியவில்லை. ஏன்.. குமரன் முகத்தில் கூட.. தன் தமக்கை கணவரோடு தான் செல்கிறாள் என்பதையும் மீறி.. பிரிவுத் துயர் நெஞ்சை நிறைக்க.. கண்களில் குளம் கட்டியது. அனைவரையும் தேற்றும் பொருட்டு.. சுந்தரமே பேச்சை ஆரம்பித்தார்.


வள்ளியின் தலையை வருடியவர், “பாயி கெசில்.. இல்ல இல்ல.. நீ பாயி கெசில் இல்ல.. எனக்காக நீ எவ்வளவு கஷ்டத்தையும் அவமானத்தையும் ஏத்துகிட்டு.. எப்பேர்ப்பட்ட காரியத்தை செய்திருக்க.. உண்மையில எனக்கு ரொம்ப பெருமையா.. சந்தோஷமா இருக்கு டா..” என்க

“இல்ல ணா.. நீ எங்களுக்காக பட்டதை விட இது ஒண்ணும் பெரியது இல்ல. அப்புறம்.. நான் உனக்கு எப்பவும் பாயி கெசில் தான்..” என்றவள் அண்ணன் தோள் சாய..

“இல்லையே.. என் பாயி கெசில் இப்படி கிடையாதே.. இந்நேரம் இந்த இடமே எவ்வளவு கலகலப்பா இருந்திக்குமே.. எங்கே.. சந்தோஷமா சிரிச்சுகிட்டே எங்களை வழியனுப்பு பார்ப்போம்” என்க

“சரி ண்ணா.. “ வள்ளி சிரிக்க

வள்ளியின் வலது கரத்தை எடுத்து குமரனின் வலது கரத்தில் வைத்தவர், “நல்லா பார்த்துக்கோங்க மாப்ள இந்த தேவதையை...” எனவும், அவர் கரத்தைப் பற்றி அதை ஏற்றுக் கொள்வதாய் தலையசைத்தான் குமரன்.

அடுத்து மீனாட்சியிடம் திரும்பியவர், “என்ன மீனா இது... ஏன் இப்படி இருக்க... ஆறு மாதத்திற்கு ஒரு தடவை இவங்க மலேசியா வரப் போறாங்க... அடுத்த ஆறு மாதத்திற்கு ஒரு தடவை நாம இந்தியா வர போறோம்... ஆக மொத்தம் வருஷத்தில் இரண்டு தடவை நாம எல்லாரும் சேர்ந்தே தான் இருப்போம் மீனா... சந்தோஷமா பாய் சொல்லு எல்லாருக்கும்...” என்று மனைவிக்கு எடுத்துச் சொல்லவும்.. அவள் சற்றே தெளிய

“ஆமா ம்மா.. மாப்ள சொன்ன மாதிரி ஆறு மாசம் தான்.. அடுத்த நாளே நீ எங்கள பார்க்கப் போற.. சந்தோஷமா போய் வா ம்மா” என்று அழகுமலை தாத்தா சொல்ல..

“தாத்தா..” என்று அவர் தோளில் சாயவும்.. பேத்தியின் தலையை வருடினார் அவர்.

விமான புறப்பாடு பற்றி அங்கு அறிவிக்கவும்... அதில் தம்பியையும் வள்ளியையும் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே தான் சென்றாள் மீனாட்சி. குமரன் வாயே திறக்கவில்லை... தன் அக்காவை அவன் ரொம்ப காலம் பிரிவது இது தான் முதல் முறை.. என்ன கணவன் வீட்டுக்குப் போவதால் இவனுக்குள் சந்தோசம்.. ஆனாலும் எங்கே வாயைத் திறந்தால் தன்னை மீறி அழுது விடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக நின்றிருந்தான் அவன்.

சுந்தரத்தின் இடது புறம் மீனாட்சி நின்றிருக்க.. அவளின் இடது புறம் கார்மேகம் நிற்க... சுந்தரத்தின் வலது கை அஸ்மியை தாங்கியிருக்க... தான் கண்ட இந்த காட்சி குமரனின் மனதிற்குள் நிறைவாய் இருந்தது.

கீர்த்தி, சதீஷ்.. பரஞ்சோதி வாத்தியார்.. என்று அனைவரும் சந்தோஷமாய் வழியனுப்ப.. அவர்களுக்கும் கையசைத்து விட்டு வரிசையில் சென்று நிற்கவும்..

ஒரு நிமிடம் கூட தாண்டவில்லை.. மீனாட்சி சட்டென கண்ணீருடன் இவர்களை நோக்கி குழந்தையென ஓடி வந்தவள்... “என்னைக்கும் நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும். பட்டு.. என் செல்லத்தைப் பார்த்துக்ககோ. செல்லம்.. என் பட்டுவை பார்த்துக்கோ..” என்றவள் தன் தம்பியின் நெற்றியிலும்... பின் வள்ளியின் கன்னத்திலும் இதழ் பதித்து தன் மகிழ்ச்சியையும்.. அன்பையும் தெரிவித்தவள்... பின் பிரிய மனமில்லாமல் இவர்கள் இருவரையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அங்கிருந்து விலகினாள் அவள்.

தமக்கையின் மகிழ்ச்சியைப் பார்த்தவனுக்குள்ளும் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. அதில் தன் இடது கையைத் தன்னவளின் தோளைச் சுற்றி படரவிட்டவன்... தன் கரத்தில் இருக்கும் மனைவியின் கரத்தைப் பிரித்து அவளின் உள்ளங்கையில் இதழ் பதித்தவனோ, “ஐ லவ் யூ.. டி...” என்றான் கண்ணில் நீர் தேங்க... காதலோடு... ஆத்மார்த்தமாக... அவளின் இளா.

இதை தூரயிருந்து பார்த்து தங்கள் கண்ணில் நிரப்பியபடி பறந்தார்கள் மீனாட்சியும்... சுந்தரமும்.

தங்கள் இன்பத்தை மட்டும் பெரிதென எண்ணாமல் பிறரது மகிழச்சிக்காவும் பாடுபடும் வள்ளி.. குமரன் போன்றோர் சிலரே.. அவர்கள் இருவரும் வாழ்வாங்கு வாழ.. நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்நிறைவுற்றது.

பி. கு :
வணக்கம் தோழமைகளே...

உங்கள் அனைவரின் அன்பாலும்... அமோக ஆதரவாலும்... என்னுடைய எட்டாவது படைப்பை எப்படியோ... தட்டுத் தடுமாறி.. தத்தகா பித்தகானு முடிச்சிட்டேன்... நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.. என்னேரமும் வானத்துக்கும்.. பூமிக்கும் குதிக்கிற ஹீரோ இல்லாம எழுத நினைத்தேன். அதுவும் இல்லாம என்பதுகளில்.. நாம் திரைப்படமாய் பார்த்த நாயகன் நாயகி.. அவர்களின் குடும்ப அங்கத்தினருடன் பின்னிப் பிணைந்த கதையைக் கொடுக்க நினைத்தேன்... அதன் தாக்கமே இக்கதை. காதலை விட.. அக்கா - தம்பி.. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்தே இக்கதையை கொண்டு செல்ல நினைத்தேன். நிச்சயமா நான் நினைத்ததை தந்தேனா தெரியல... எப்படியோ கதையை முடிச்சிட்டேன். இன்று முதல் இளங்குமரனும்♥️ஏழிசைவள்ளியும் என்னிடமிருந்து விடை பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் உங்கள் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நான்கு மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே... அதுவரை நாம் அன்பால் இணைந்திருப்போம்💖💖💖

நன்றி
என்றும்
உங்கள்
ஆதரவுடன்
உங்கள்

யுவனிகா💞
 
Last edited:

UMAMOUNI

Member
Wow superb . உண்மையான பாசத்தை அழகாகவும் , அருமையாகவும் விளக்கி உள்ளீர்கள்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wow superb . உண்மையான பாசத்தை அழகாகவும் , அருமையாகவும் விளக்கி உள்ளீர்கள்
கேட்கவே சந்தோஷமா இருக்கு♥️♥️♥️ thanks for your support uma sis🤗💞🌺😘😘
 
R

Rukkurajr

Guest
ஒரு குடும்பம் எப்படி.இருக்க வேண்டும் என்பது உங்கள் கதையில் அழகா காட்டி விட்டீர்கள்.சுயநலம் பிடித்த புருஷோத்தமன், கலா மாதிரி மனிதர்களும் இருக்காங்க.சுந்தரம் மீனாக்ஷி மாதிரி தன்னலம் கருதாத நல்லவர்களும் இருக்காங்க.அருமையான கதை
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு குடும்பம் எப்படி.இருக்க வேண்டும் என்பது உங்கள் கதையில் அழகா காட்டி விட்டீர்கள்.சுயநலம் பிடித்த புருஷோத்தமன், கலா மாதிரி மனிதர்களும் இருக்காங்க.சுந்தரம் மீனாக்ஷி மாதிரி தன்னலம் கருதாத நல்லவர்களும் இருக்காங்க.அருமையான கதை
Wow😍😍 ம்மா... உங்க பாணியில்... அழகா நச்சின்னு சொல்லிட்டிங்க💖💖💖💖 மிக்க நன்றிகள் ம்மா🤗🤗🤗💞💞💞🌺🌺🌺🌺🌺🌺💚💚💚💚💚
 
C

Chitra Purushothaman

Guest
Wow.😍❤.. Manasukku niraiva irukku! Romba azhaga irundhudhu story🎊💖! But, mudinjiduche num kashtama irukku😞
Excellent writing! Best wishes for your future writings💟💟💟
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Wow.😍❤.. Manasukku niraiva irukku! Romba azhaga irundhudhu story🎊💖! But, mudinjiduche num kashtama irukku😞
Excellent writing! Best wishes for your future writings💟💟💟
மிக்க நன்றி... உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் சிஸ்... சீக்கிரம் வந்துடறங்க🤗🤗💚💚💚💚🙏🙏🙏🙏💞💞💞💞💞💞
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN