பூ 41

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

வீட்டில் நடந்த சம்பவத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மனநிலையில் இருந்தனர். வீட்டில் அமுதாவுடன் பேசிவிட்டு வெளியே சென்ற விசாகன் நாளை அவள் என்ன மாதிரியான முடிவை எடுக்கப் போகிறாள் என்று வருத்தத்துடன் அமர்ந்து இருக்க, வெகுநேரம் அவனுக்காக காத்திருந்த தேவாவிற்கு தான் நிலை கொள்ளவில்லை... எப்போதடா தனிமையில் அவனை காண்போம் என்று இருந்தது… ஆனால் அவனை சந்திக்கும் போது அவனை எதிர்க்கொள்ள முடியாமல் தடுமாறப்போவது அறியாமல் அவனை காண வேண்டும் என்று ஆவலாக இருந்தாள்.


விசாகன் வீட்டில் இருந்து வரும் போது மாலையாகி இருக்க இப்போதோ இருள் மெல்ல சூழத்தொடங்கி இருந்தது. காற்றில் இருந்த ஈரப்பதம் மனதை சென்றடையவில்லை ஒருவிதமான வெம்மை குடிக்கொள்ள கண்களை மூடி மாந்தோப்பில் மாமரங்களுக்கு இடையில் கயிற்று கட்டிலில் படுத்து இருந்தவனுக்கு நண்பனை நினைத்து பெருமையாகவும், அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. மதியம் போன் செய்து பார்க்க வேண்டும் என்று கூறியவனின் சொல்லிற்கிணங்க அவனை சென்று பார்த்தவனுக்கு அமுதாவை விரும்புவதாக கூறி இன்ப அதிர்ச்சியினை பரிசாக வழங்கி இருந்தான் சுந்தரன்.


"என்ன டா சொல்ற மாப்ள? உண்மை தானா!" என்றான் தன் காதுகளால் கேட்டதை நம்ப முடியாமல் சந்தேகமாக.


"டேய் ஏண்டா நானெல்லாம் அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாதா??? ஏதோ கேட்க கூடாததை கேட்ட மாதிரி இவ்வளோ சந்தேகமா கேக்குற!!" என்றான் கோபமாக


"அட டேய் யப்பா….. அடங்குடா ஒரு வார்த்தை உண்மையான்னு கேட்டேன்…. தப்பாடா யார் சொன்னா... என் பங்காளிக்கு அமுதாவை கட்டி தர மாட்டேன்னு, நாளைக்கே வந்து பொண்ணு கேளு அவளுக்கும் புடிச்சி இருந்தா நேரா கல்யாணம் தான்" என்றான் மகிழ்வாய்.


சுந்தரன், "உனக்கு ஒன்னும் என்று" ஆரம்பிக்கும் போதே அவனை இடைமறித்த விசாகன், "அடிங்க உனக்கு அமுதாவை கட்டிக் கொடுக்க எனக்கு என்னடா கஷ்டம்…. அவ விஷயத்துல நான் ஆராயமா எந்த முடிவும் எடுக்க மட்டேன்னு உனக்கு தெரியும் தானே.. உன்னை நம்புறேன்... அமுதா இனியாவது நல்லா இருப்பான்னு நினைச்சதாலதான் நீ விரும்பி கட்டிக்கிறேன்னு சொன்னதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன்" என்றான் நண்பனின் மேல் கொண்ட நம்பிக்கையில்


"ரொம்ப தேங்கஸ் டா.. எங்க நீ கோவப்பட்டு வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு பயமா இருந்தது" என்றதும்


"அட நான் ஏண்டா கோவப்பட போறேன்??... எனக்கு சந்தோஷம் தான்... சரி அமுதா விஷயத்தை வீட்டுல சொல்லிட்டியா என்ன சொன்னாங்க உங்க அப்பா சரின்னு சொல்லிட்டாரா" என்று கேள்விகளை அடுக்கிட


"எல்லாம் பேசியாச்சி... நான் கல்யாணத்துக்கு ஓக்கே சொன்னா போதும்னு இருந்தவங்க பொண்ணு இவதான்னு சொன்னதும் கொஞ்சம் சலசலப்பு இருந்துச்சி... அப்புறம் இவனை மாத்த முடியாதுன்னு சரின்னு சொல்லிட்டாங்க" என்றவன் "எங்க அய்யாவுக்கு உன் குடும்பத்துல சம்பந்தம்னு சொன்னதும் மறுப்பே சொல்லல" என்றான்


"மச்சான் ரொம்ப சந்தோஷம் டா இப்பதான் அமுதாவோட கவலை இல்லாம நிம்மதியா இருப்பேன் அவ கிட்ட உன் விருப்பத்தை சொன்னியா" என்றான்.


"யாரு அவ கிட்டயா…... அவ ஒரு பொம்பள விசாகன் டா... கொஞ்ச நாள் முன்ன ஒருத்தன் லவ்வை சொன்னானிட்டு செருப்பால அடிச்சவ, அவளுக்கு காதல், கல்யாணம் இது மேல சுத்தமா விருப்பம் இல்ல... இதுல நான் போய் லவ்னு சொன்னேன்னு வைச்சிக்க அங்க விழுந்த அடி இங்கேயும் விழும் பாரபச்சம் பாக்கமாட்டாட உன் அத்தை பொண்ணு" என்றான் கடுப்பாக


"டேய் அதுக்கு" என்றான் முறைப்புடனே


"முறைக்காத மாப்ள…. முதல்ல சொல்றதை கேளு நீ அவளுக்கு மாமன்றதை விட அவ மதிக்கிற ஆள் நீ சொன்னா கண்டிப்பா யோசிக்கவாவது செய்வா... நான் சொன்னேன்னு வச்சிக்க, வீம்புக்கு முறிக்கிகிட்டு போவா" என்று அவனுக்கு விளக்கமாக கூறினான்.


"என்னமோ பண்ணி தொலை... நானே பேசுறேன்" என்றவன் வீட்டிற்கு வந்து பேச நடந்தது எல்லாம் கண் முன்னால் காட்சிகளாக வந்து சென்றது. மெல்ல சூழ தொடங்கி இருந்த இருள் இப்போது கருமையே பூசியது போன்று மையிருட்டாகி இருக்க அவனின் போன் அடித்ததில் தன்னிலைக்கு வந்தவன் நேரத்தை பார்க்க வெகு நேரமாகி இருந்தது. போனை எடுத்து யார் என பார்க்க தில்லை தான் அழைத்து இருந்தார்.


"தில்லை, அய்யா நான்தேன் பேசுதேன்" என்றிட


"சொல்லு அப்பத்தா"


"எங்கயா போயிட்டா உன் பொஞ்சாதி நீ வந்தாதான் சாப்புடுவேன்னு சட்டமா உட்காந்து இருக்கு" என்று அவனிடம் குறைபடவும்


"பச்" என்று தலையில் அடித்துக்கொண்டவன் "நேரத்தை கவனிக்கல அப்பத்தா... இதோ, இதோ கிளம்பிட்டேன்" என்று போனை அணைத்தவன் "இவளை ஒரு நாள் முன்ன பின்ன ஆனா சாப்பிட மாட்டாளா நான் வர வரையும் வைட் பண்ணிக்கிட்டு இருக்கா" என்று கடுகடுவென இருந்தவன் "சனா சனா" என்று அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.


" வாய்யா வா …. என்னத்த புருஷன் பொஞ்சாதியோ சொல் பேச்சை ஒருத்தரும் கேக்குறது இல்ல என் பேச்சிக்கும் இந்த வீட்டில் மரியாதை இல்லை" என்று அமுதாவையும் சேர்த்தார்ப்போல் முனுமுனுத்துக்கொண்டே பொன்னியை இருக்கும் சாப்பாடை எடுத்து வைக்க சொல்லிக்கொண்டு இருந்தார்.


ஒருவரும் அறையை வீட்டு வெளியே வரவில்லை அமுதா நல்ல பதிலை சொல்ல மாட்டேன் என்கிறாளே என்ற ஆதங்கம், தேவா உணவை மறுக்கிறாளே என்று கோவம், இன்னும் விசாகன் வீடு திரும்பாபல் இருக்கிறானே என்று வருத்தம் என அவரை பேச வைத்திருக்க வீட்டிற்குள் வந்தவனோ சாப்பாடு எடுத்து வை அப்பத்தா இதோ வறேன் என்று கை கால்களை சுத்தபடுத்திக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.


வந்துட்டிங்களா என்பதை போல் அவனை கண்டவுடன் ஆவலாக வந்தவளை "நீ என்ன சின்ன குழந்தையாடி?... நேரமாகுது சாப்பிட கூட ஒரு ஆள் வரனுமா?..." என்றான் அவள் இன்னும் சாப்பிடமால் இருக்கிறாளே என்ற கோவத்தால்


"அது நீங்க" என்று பேச வரவும்


"நான் தான்... நானே தான்.. போனா வரதானே போறேன்… அதுக்காக நான் வரவரையும் வைட் பண்ணுவியா??? உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா இப்போ தான் உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வருது அதையும் கெடுத்துடு" என்று திட்டியவனை கண்டவளுக்கு சொல்ல வந்த அனைத்தும் தொண்டையில் சிக்கிய முள்ளாக அப்படியே நின்றுவிட்டது.


"ஹீரோ" என்று அருகில் வர


"பச்… போ போய் முதல்ல சாப்பிட உட்காரு" என்று அதட்டியவன் "அவ வேண்டான்னு சொன்னா மிரட்டி சாப்பிட வைக்காதிங்க கூடவே நீங்களும் தாளம் போடுங்க... அவளோட அட்டகாசம் அதிகமாக நீங்களும் ஒரு காரணம்" என்று தில்லையையும் திட்டியவன் மறந்தும் அமுதாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை அவளும் அமைதியாக வந்து அமர்ந்துவிட்டாள். தேவா பெயருக்கு சாப்பிட்டேன் என்று எழுந்துக்கொள்ள அதற்கும் திட்டியவனை கண்டவளுக்கு கண்களில் நீர் திரையிட்டு பளபளப்பாகியது


சாப்பிட்டதும் அறைக்குள் நுழைந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை அழக்கூடாது என்று நினைத்தாலும் அவளையும் மீறி கண்ணீர் கோடுகள் கன்னத்தில் வழிந்தவண்ணம் இருக்க அவளுக்கு மாத்திரைகளை எடுத்துக்கொடுக்க வந்தவன் அவள் அழுவதை கண்டு "இப்போ எதுக்கு அழற... செய்யுறது ஏடாகூடம் இதுல எதுவும் கேட்க கூடாதோ" என்று பேசினாலும் கைகள் மனைவியின் கன்னத்தை துடைத்தது.


"ஒன்னும் வேண்டாம் போங்க" என்று கோபத்துடன் அவள் திரும்பிக்கொள்ளவும்


"போட்டேன்னா... திரும்பு டி ஏதோ சின்ன பொண்ணா இருக்கியேன்னு இடம் கொடுத்தா... ரொம்ப ஓவரா போறா…" என்று மெத்தையில் அமர்ந்து அவளை தோளோடு சாய்த்துக்கொண்டவன் இவ்வளவு நேரம் ஆகுது மருந்து மாத்திரை எடுத்துக்குறவ நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா உடம்பு என்னத்துக்கு ஆகுறது... ஏற்கனவே டல்லா இருக்கடி... இங்க பாரு நான் வந்தாலும் சரி இல்ல லேட்டானாலும் சரி நீ டையத்துக்கு சாப்புடுற... இல்ல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று கூறியபடி பிரித்த மாத்திரையை அவளிடம் கொடுத்தவன் தண்ணீர் டம்பளரையும் கொடுத்து போடு என்றான்.


இதை கொஞ்சம் சிராச்சிக்கிட்டே சொன்னாதான் என்னவாம் என்று முகத்தை தூக்கி வைத்தபடியே அதை போட்டுக்கொண்டவள் தரையில் விரிப்பை விரித்து அதில் படுக்கை போட வித்தியாசமாய் அவளை பார்த்தவன் "இது எதுக்கு" என்றான்.


"இப்போ எனக்கு பரவாயில்லை நான் இங்கயே படுத்துக்குறேன் நீங்க மேல படுத்துக்குங்க" என்றாள்.


"ஏண்டி படுத்துற' என்றவன் அவளது போர்வையை எடுத்து கட்டில் மேல் போட்டுவிட்டு "இன்னொருமுறை பெட்சீட் கீழே போச்சி நம்ம ரூம்ல கட்டிலே இருக்காது பாத்துக்க…" என்றிட 'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல எவ்வளவு ஆசையா பேச காத்துட்டு இருந்தேன்... எதுவுமே பேச முடியாதபடி பண்ணிட்டிங்க' என்று மனதிலே அவனை வைதவள் அமைதியாக திரும்பி படுத்துக்கொள்ள மருந்தின் வீரியத்திலும் அழுத களைப்பிலும் சில நிமிடங்களிலேயே உறங்கி இருந்தாள்.


கட்டிலின் மறுபக்க மெத்தையில் படுத்தவனுக்கு தூக்கம் என்பது கண்களுக்கு எட்டவே இல்லை நாளை என்ன மாதிரியான பதில் அமுதாவிடம் இருந்து வருமோ என்று சிந்தித்து இருந்தவனுக்கு தூக்கத்தில் தேவா அவன் மீது கைகளை போடவும் அனைத்து சிந்தனைகளும் பின்னுக்கு போய்விட மனையாளே கருத்து முழுவதிலும் பதிந்து இருந்தாள்... 'சரியான அடாவடி நீ... உன்கிட்ட எல்லாம் கண்ணே மணியேன்னு கொஞ்சினா வேலைக்கு ஆகாது... கொஞ்சினா மிஞ்சுவ மிஞ்சினா கெஞ்சுற உன்னை என்ன தான் செய்றதுன்னே தெரியலடி... இவ்வளவு வளந்தும் ரொம்ப சிறுபுள்ள தனமா இருக்க... என்று அவள் கைகளை எடுத்து முத்தம் கொடுத்தவன் ஒவ்வொரு விரல்களாய் உதட்டில் ஒத்தி எடுத்தவனுக்கு தன்னையும் மீறி தூக்கம் தழுவிட அவளை அணைத்தபடியே உறங்கிப்போனான்.


💐💐💐💐


அத்த…. அத்த என்று குரல் கொடுத்தபடி தேவாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் மேகலா இதுவரை தேவா என்று அழைத்துக்கொண்டு வந்தவளுக்கு அவள் இல்லையென்றதும் எப்படி அழைத்துக்கொண்டு வருவது என்று தெரியவில்லை ஒருமுறை சௌந்தரலிங்கம், வீட்டில் இருக்கும் போது தேவா, என்ற பெயரை உச்சரித்து அவரிடம் திட்டு வாங்கியதில் இருந்து கவனமாக உறவுமுறையை வைத்து அழைக்க பழக்கி இருந்தாள் மேகலா. இன்றும் அதுபோல வெகு ஜாக்கிரதையாக அத்தை என்று அழைத்துக்கொண்டு வந்தாள்.


"யாரு மேகலாவா... வா புள்ள பாத்து ரொம்ப நாள் ஆயிடுச்சி ஊர்ல இருக்கியா இல்லையா" என்று கேட்டபடியே பின்கட்டில் இருந்து வந்தார் மரகதம்.


"நான் எல்லாம் இங்க தான் இருக்கேன்... நீங்க தான் காணல உடம்புக்கு ஏதும் சரியில்லையோ" என்றபடி தாய் கொடுத்து அனுப்பிய பலகாரத்தை கொடுத்தாள்.


"நான் நல்லாத்தான் இருக்கேன் புள்ள, எனக்கென்ன குறை வந்திட போகுது" என்று அவளிடம் கூறினாலும் தன் பெண் உரிமையாய் வீட்டிற்கு வந்து செல்ல முடியவில்லையே என்று வருத்தம் இருக்க செய்ய அது குரலிலும் வெளிப்பட்ட போதும் கை தன் போக்கில் தூக்கில் பணியாரத்தை போட்டு "இந்தா புள்ள இதுல பணியாரம் இருக்கு... உனக்கு புடிக்கும்ல எடுத்துட்டுப்போ... அவளை பாத்தாக்க உடம்பை பாத்துக்க சொல்லு... எப்படியும் காலேஜ் தொறக்க இன்னும் ஒரு 20 நாள் ஆகுமா"... என்றார் சந்தேகமாக


"அதுக்கு மேலயும் ஆகும் அத்த.… இதுதானே கடைசி வருசம்" என்றாள் மேகலா "இப்போ என்னத்துக்கு இப்படி வருத்தமா பேசிறிங்க... நீங்களும் அவளும் பாத்துக்கிட்டு தானே இருக்கிங்க... அப்புறம் என்ன?" என்றாள் எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல்.


"அடி கிறுக்கி... சத்தமா சொல்லி தொலையாதே…." என்று அவசரமாக அவளை அங்கிருந்து நகற்றி பின்கட்டிற்கு கூட்டிச் சென்றவர் "உள்ள உன் மாமா இருக்காரு... அவளை போய் பாத்தேன் தெரிஞ்சிது என்னை வகுந்துடுவாறு


பேசாம பொத்திக்கிட்டு இறுடி... உன் வாயி இங்க காட்டாத என்னதான் நான் போய் பாத்தாலும் கூட்டி வந்து சீராட முடியலையே" என்று அடிக்குரலில் பொங்கிட


"அத்த…. முதல்லியே மாமா உள்ள இருக்காருன்னு சொல்லி இருந்தா, நான் ஏன் வாய தொறக்க போறேன்.... உங்க வீட்டுல யாரை கண்டாலும் பயமாத்தான் இருக்க ஆளாளுக்கு சண்டியராட்டும் விரப்பா திறியறாங்க" என்று தோளில் இடித்துக்கொண்டாலும் மரகதத்தை பார்க்க பாவமாகத்தான் இருந்தது "நீ ஏன் அத்த கலங்குற, அங்க அவளை நல்லா பாத்துக்குறாங்க அதும் விசாகன் அண்ணே அவளை தாங்கு தாங்கன்னு தாங்கறாரு நாமெல்லாம் அவளுக்கு இரண்டாம்பச்சம் தான்" என்று உண்மையை விளக்களமாக கூறி இருந்தாள்.


மனது அதை கேட்டு சமன்பட்டாலும் "அவளை நினைத்து வருத்தப்படமால் இருக்க முடியுமா?? என்னதான் இருந்தாலும் பெத்த வயிறு அவ்வளவு சீக்கிரம் மறக்காது" என்றவரது குரல் நலிந்து போயிருந்தது.


"அத்த இதுக்கு போய் கவலைப்படுறியே... சீக்கிரமே உன் புள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சியாம் வரப்பொண்ணை மகளா பாத்துட்டு போவியாம்…. எப்போ அவ வரனும்று விதி இருக்கோ அப்போ வரப்போறா... அதுவரை இந்த பொண்ணை பாரு" என்று பெரிய மனிஷி போல அவருக்கு யோசனை கூறியவள் பணியார தூக்கை தூக்கிக்கொண்டு உள்ளே வர இருந்த சந்திரனை தாண்ட ஓடி இருந்தாள். அவள் ஓட்டத்தை பார்த்தபடி வந்தவன் "இந்த வாயடி எங்க இங்க" என்றான் தாயிடம்


"யாரு மேகலாவையா கேக்குற??? அவ பலகாரத்தை கொடுக்க வந்தா அப்படியே நல்ல யோசனைய சொல்லிட்டு தான் போயிருக்கா... இத்தனை நாளா இது எனக்கு தோனாமா போயிடுச்சி பாறேன்" என்றார் மிகுந்த ஊற்சாகத்துடன்.


அவனுக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை "அப்படி நீ சந்தோஷப்படுற அளவுக்கு எனம்மா சொன்னா" என்றான் சந்தேக கண்ணோடு


"அதுவா எல்லாம் நல்லா விஷயம் தான்" என்றார் பீடிகையுடன்


"புரியல"


"அட உன் கல்யாணம் தான்டா… முதல் வேளையா உன் அப்பாருக்கிட்ட இதை சொல்லுனும்... அங்க இங்கன்னு தாக்கலு சொல்லி விட்டாதான் நாலு வரன் வரும்" என்றவாறு "என்னங்க" என்றபடி உள்ளே செல்ல முயன்றவரை ஒரே எட்டில் பிடித்தவன் முகத்தில் சற்றே எரிச்சல் மண்டி இருந்தது.


"அவளை" என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தவன் "மா ஒரு நிமிஷம் சொல்றதை கேளுங்க... அந்த பெரிய மனுஷி சொல்லிட்டான்னு உடனே அப்பாகிட்ட போயிடுறிங்க... இப்போ எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை தயவு செய்து இந்த விஷயத்துல தொல்லை பண்ணாதிங்க" என்று திட்டவட்டமாக மறுத்து பேசவும் ஜீவனே இழந்து விட்டது போல் இருந்தது மரகதத்திற்கு


"ஏய்யா வயசு ஏறிக்கிட்டே போது யா உனக்கும்" என்று ஆரம்பிக்க


"அம்மா நான் ஒரேயடியா வேண்டாம்னு சொல்லல... இப்போ வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் நானே சொல்றேன் அப்போ பாருங்க இப்போ எதையும் அப்பா கிட்ட எடுத்துட்டு போகாதிங்க" என்றான் மன்றாடும் குரலில்.


மரகதம் அதில் என்ன கண்டாரோ "சரிப்பா உன் இஷ்டம்…. நான் வற்புறுத்தல" என்றபடி அங்கிருந்து சென்றுவிட்டார்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN