இறுதி அத்தியாயம்

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

காலை பத்து மணிக்கே வெயில் மண்டையை பிளந்துக் கெண்டிருந்தது. தேவா விசாகனின் செல்வ மகள் பிரணவி பிறந்து ஏழாம் மாதம் தொடக்கத்தில் இருக்க, அவள் பிரசவத்தின் போது தில்லை வேண்டிக் கொண்டதன் பேரில், அந்த சாமுண்டி தாயிக்கு பொங்கல் வைத்து வழிபட இரு வீட்டாரும் வேனில் செல்வதால் தேவா, மேகலாவை அடம் பிடித்து தன்னுடன் அழைத்து வந்திருந்தாள்.


தேவசேனாவின் கையில் இருந்த குழந்தை அழவும், தேவா மா நீ கொஞ்சம் நல்லா உட்காந்துக்க பாப்பாவை கொடு நான் வைச்சிக்கிறேன். என்று அவளிடமிருந்து குழந்தையை லாவகமாக வாங்கிக்கெண்டான் சந்திரன்.


இப்போதெல்லாம் பிரணவியின் ஆஸ்தான இடம் மாமன் மடிதான் என்றானது, அவளை போலவே அவளுடைய பிள்ளையும் அவனை நன்கு அறிந்து வைத்திருந்தது. இவ்வளவு நேரம் அழுதுக்கொண்டு இருந்த குழந்தை அவனை பார்த்ததும் தன் பொக்கை வாயை திறந்து கிளுக்கி சிரிக்க, அதனை கொஞ்சியபடியே வர அவன் அருகில் அமர்ந்திருந்த விசாகனும் இதை பார்த்து வந்தான்.


"என்ன மாப்ள….. குடும்பஸ்தனுக்கு வேண்டிய அத்தனை பொருப்பும் வந்துடுச்சி... அடுத்தது கல்யாணம் தான்... எப்போ கல்யாண சாப்பாடு போட போறிங்க"... என்று அமுதாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த சுந்தரன் கேட்கவும்,


விரிந்த புன்னகையே பதிலாய் கொடுத்த ஜெயசந்திரன், குழந்தையிடம் கவனத்தை வைத்தபடியே "அதை பத்தி இன்னும் யோசிக்கல மச்சான்"... என்றான். இப்போதெல்லாம் அவர்களுக்குள் உறவுமுறைசொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமும் நட்பும் கூடியிருந்தது.


"என்ன பட்டுன்னு இப்படி யோசிக்கலன்னு சொல்லிட்டிங்க…. நல்ல வேலைஇருக்கு.... நல்லா சம்பாத்தியம் இருக்கு... இப்போ தானே பண்ணனும்... நாங்கலெல்லாம் அனுபவிக்கும் போது, என்பதில் அழுத்தம் கொடுத்து "நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கலாமா?" என்றான் கிண்டலுடன்,


அவன் கேட்டதும் அங்கே சிரிப்பலை எழ, அர்த்தம் புரிந்த அமுதா, அவனை தொடையில் கிள்ளியதும் ஆவென்று அலறியவன், "உசிருக்கு உத்ரவாதம் இல்லைடியோ" என்று முனுமுனுக்க "என்ன மாப்ள ஏதோ அலறுன சத்தம் கேட்டது" என்றான் விசாகன் நக்கல் சிரிப்புடன்.


"அது ஏதோ கொசு மாப்ள என்னையே சுத்திசுத்தி கடிக்குது என்றான் அமுதாவை பார்த்தபடி "வாடி உனக்கு இருக்கு" என்று உதடு கூறினாலும் கணவனின் அவஸ்த்தையான முகம் பார்த்து சிரிப்புதான் வந்தது அவளுக்கு.


இத்தனைப் பேச்சுகளுக்கும் பெரியவர்கள் சிரித்தபடி வர, அமைதியாய் அமர்ந்திருந்த தேவசேனாவின் முகம் யோசனையில் இப்பதை பார்த்த விசாகன் "ஏதோ பிளான் பண்றா போல இருக்கு... நேத்துலருந்து அண்ணனை பத்தி புலம்பிட்டு இருந்தா... இன்னைக்கு ஒரு முடிவை எடுத்துட்டா போல" என்று தான் நினைத்தான்.


பக்கத்தில் அமர்ந்த மேகலாவும் தோழியின் முகம் பார்த்து இருந்தாள். இன்று அவளோடு மல்லுக்கட்டி வம்படியாய் அழைத்து வந்ததன் காரணம் புரியாமல் அமர்ந்திருந்தாள். இருந்தும் மனது இன்றோ ஏதோ ஒன்னு நடக்கப்போகிறது என்று அவளுக்கு ஆருடம் சொன்னது.


புன்னகையுடன் அமர்ந்திருந்த தில்லை ஏத்தா அமுதா பொங்க சாமன்லாம் எந்த பேகுல இருக்கு .


அது எல்லாம் டிரைவர் சீட்டு முன்னாடி இருக்கு அம்மத்தா பொன்னியக்கா எடுத்து வைச்சிடுச்சி என்றாள் அமுதா.


"ஆத்தா மரகதம், நீ பொங்க வைக்க பொங்கபானைய தயார் பண்ணிடுத்தா…" என்றவர் விசாகனிடம் திரும்பி "நீயும் சுந்தரனும் அபிஷேகத்துக்கு கொடுத்து வங்துடுங்கய்யா" என்றதும், இருவரும் அமோதிப்பாக சரி என்றனர்.


மகனின் பதிலில் மணம் சுணங்கிய மரகதம் இன்றாவது சந்திரனிடம் திருமண பேச்சை எடுக்க வேண்டும் என்று நினைத்தார்.


அரைமணி நேரத்தில் கோவிலை அடைந்திட, மரகதம் பொங்கல் வைக்க செல்ல, குழந்தையை தமையனிடம் கொடுத்த தேவா தானும் உதவுகிறேன் என்று கூறி அவருடன் சென்றாள்.


அமுதாவும் குழந்தையை சுந்தரனிடம் விட்டுவிட்டு மேகலாவுடன் தண்ணீரை எடுக்க குளக்கரைக்கு சென்றிருந்தாள்.


பொங்கல் வைக்க ஏற்பாடு செய்தபடி "அடியேய் என்னடி இவன்... கல்யாணத்துக்கு ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறான்... அமுதா புருஷன் கேட்டதுக்கும் யோசிக்கலாங்கறான் " என்றார் மரகதம் வருத்தமாக


"நீ எதுக்கு மா கஷ்டப்படுற அதுல்லாம் நடக்கும்… நான் சொல்றா மாதிரி மட்டும் பேசு, இன்னும் ஒரே வாரத்துல கல்யாண தேதிய குறிச்சிடலாம்…" என்றாள் நம்பிக்கையாக


"என்ன பேச சொல்லுறடி" என்றதும் எவரும் வருகின்றனறா என்று பார்த்தவள் மெதுவாக அன்னையிடம் விளக்கிவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல அமர்ந்தாள்.


தண்ணீரை எடுக்க சென்ற மேகலாவும் அமுதாவும் வந்ததும். அவர்களிடம் கோவில் உள்ளே பழங்களை நறுக்கி அபிஷேகத்துக்கு கொடுக்க சொல்லி, ஒரு வேலையை கொடுத்து அரைமணி நேரம் வராமல் பார்த்துக்கொண்டவள், அண்ணன் தன்னை நோக்கி குழந்தையுடன் வருவதை பார்த்துவிட்டு, பேசுமா என்று தாயை ஊக்கினாள்.


"என்னடி அந்த மேகலாப்பொண்ணு இப்படி சொல்லிடுச்சி" என்றார் வருத்தமான குரலில்.


"பின்ன உம்பையன் அந்த பொண்ணை எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பான்... அதான் பார்த்தாலே அலறுறா... இதுல கட்டிக்க வேற அவுக வீட்டுல போயி கேப்பியாக்கும்" என்றாள் வேண்டுமென்றே


"நான் என்னத்தடி கண்டேன்... உங்கண்ணனுக்கு மாமா மக, ஒன்னக்குள்ள ஒன்னு நாள பின்ன உனக்கு அவ ஒத்தசையாவும், அவளுக்கு நீ ஒத்தாசையாவும், இருப்பன்னு பார்த்தா... புள்ள பட்டுன்னு உன் பையனை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிப்புட்டா பச் எனக்கு மனசே விட்டுப்போச்சி" என்றார் கலக்கமாக,


"அடியாத்தி!!!….. நீ ஏன்மா அவள கேட்ட? அவ வீட்டுல கேக்கலையா? அதான் நான் கூப்பிட்டா கோவிலுக்கு வரமாட்டேன்னு அடம் புடிச்சாளா!" என்றாள் ஒன்றும் அறியதவள் போல


"அவ அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுல விருப்பம் தான்... கேட்டதும் சரின்னு சொல்லிட்டாங்க... இவளுக்குத்தான் உன் அண்ணனை கண்டிக்க முடியாதுன்னு சொல்லிட்ட... அவ அம்மா நேத்து சொன்னா" என்றார் உள்ளே சென்ற குரலில்


இவையனைத்தும் கேட்டவனுக்கு கோவம் சுறுசுறுவென ஏற அங்கிருந்து நொடியில் அகன்ற


ஜெயசந்திரன், முகத்தை சாதரணமாக வைத்துக்கொள்ள அரும்பாடுபட்டான். "என்ன தைரியம் இருந்தா, இந்த ஆழாக்கு என்னை வேண்டான்னு சொல்லி இருப்பா" என்று உள்ளுக்குள் கருவினான்.


"என்ன மாச்சா போனவுடனே திரும்பிட்ட?" என்று சந்திரனிடம் விசாகன் விசாரிக்கவும் "ஒன்னுமில்ல மாப்ள ஒரே புகைச்சலா இருக்கு…. குழந்தைக்கு மூச்சி முட்டுன்னு வந்துட்டேன்... நீங்க தேவாவை கூப்பிடுங்க குழந்தை பசியில் அழறா" என்றான் அந்நிலையிலும் மருமகளை விடாமல்,


"இரு மச்சான் நான் போறேன்…" என்று அவளை அழைத்து வந்து குழந்தையை கொடுத்துவிட்டு அமுதாவை மரகதத்துடன் இருக்க வைத்தான்.


சுந்தரனும் குழந்தைக்கு விளையாட்டை காட்டியபடி இருந்தான். மரநிழலில் விரித்திருந்த பெட்ஷிட்டில் தில்லையும், சௌந்தரலிங்கமும் அமர்ந்திருந்தனர்.. ஆக, மொத்த குடும்பமும் இங்கேதான் இருந்தது மேகலா ஒருவளை தவிர


அவளை தேடி கோவிலுக்குள் சென்ற சந்திரன் படியில் அமர்ந்து பழங்களை வெட்டிக் கொண்டு இருந்தவள் முன்னே போய் நின்றான்.


தன் முன்னால் நிழலாடவும் என்வென்று நிமிர்ந்தவளுக்கு அய்யனார் அறுவாளுடன் நிற்பது போல இருக்க, எதற்கு இப்படி கோவத்துடன், கடுகடுவென நிற்கிறான் என்று தான் தோன்றியது.


அதே கேள்வியுடன் அவனை பார்க்க


"என்னை வேண்டாம்னு சொன்னியாம்" என்றான் கடுப்பாக


அவன் கூறியதில் தலையும் புரியாது காலும் புரியாது நின்றவள், தானே ஒன்றை யூகித்தவளாக "ஓ…. இந்த பழம் வெட்டுறதை சொல்றிங்களா!... வாங்க வந்து வெட்டுங்க யார் வேண்டாம்னு சொன்னா" என்றாள் மேகலா சற்று மரியாதையாகவே, சந்திரன் தேவாவுடன் ராசியானதிலிருத்து அவன் மீது கொஞ்சம் மரியாதை வந்திருந்தது.


"பழத்தை வெட்டனுமா! வா பேசின உன் நாக்கை இழுத்து வைச்சி வெட்டுறேன்... என்னை பார்த்தா கிண்டலா தெரியுதாடி... நான் என்ன கேக்குறேன் நீ என்ன பதிலை சொல்ற" என்றான் கோபமாக


அவன் டி போட்டு பேசிட கோவம் வந்தாலும் இருக்கும் இடமறிந்து அதை அடைக்கியபடி "இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி தையதக்கான்னு குதிக்கிறிங்க... வந்திங்க நின்னிங்க நீங்களா ஒன்னை நினைச்சி திட்டுறிங்க" என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்.


"என்னமோ என்னை கட்டிக்க மாட்டேன்னு சென்னியாம்.. மகாராணிக்கு என்னை கட்டிக்க கசக்குதா, உன் முகரகட்டைக்கு நானே அதிகம்டி" என்றான் குத்தலாக


அவன் கல்யாணம் என்று சொன்ன செய்தியில் அதிர்ந்து நின்றவள் அடுத்ததாக அவன் கூறிய வார்த்தைகளில் சண்டை கோழியாக சிலுப்பிக் கொண்டு நின்றாள்.


"அட என் முகர கட்டைக்கு என்ன குறைச்சல கண்டிங்க... நான் ம் சொன்னா எட்டு ஊரு ஜில்லால இருந்து, எங்க அப்பா உங்கள விட நல்ல மாப்ளைய இறக்குவாறு... உங்களை கட்டிக்கிட்டு வாழ்க்கை பூரா கண்ணை கசக்க எனக்கு என்ன பைத்தியமா?" என்றாள் நக்கலாக


"அடிங்க... என்னை கட்டிக்கிட்டா நீ நல்லா இருக்க மாட்டியோ?... அப்படி என்னடி குறைய கண்டுட்ட என்கிட்ட சொல்லுடி... சொல்லு…" என்று அவன் சீறினான்.


"ம்கூம் உன்னை தெரிஞ்சிக்க ஒரு வருசா கோர்ஸா பண்ணனும் பக்கத்துல இருந்து பாத்தேனே இது பத்தாது" என்று முனுமுனுத்தவள்


"உங்கள கட்டிக்கிட்டு ஒருத்தி சந்தோஷமா இருந்துட முடியுமா?... எந்நேரமும் அதட்டலு, மிரட்டலு, என்னைய பார்த்தாலே கிள்ளுகீரைய பாத்தா மாதிரி இளப்பமா பாக்குறது... எடுத்ததுக்கு எல்லாம் கோவம் வர்றது...


அடுத்த ஆள் என்ன பேசுறாங்கன்னு தெரியாம மேல கைய வைக்கிறது... வீண் பிடிவாதம் வீம்பு இது எல்லாம் போதாக்குறைக்கு காதலுன்னு சொன்னாலே வேட்டிய மடிச்சி கட்டிக்கிட்டு மல்லுக்கு நிக்குறது... அப்புறம் நான் எப்படி உங்கள கல்யாணம் கட்டிக்கிட்டு நிம்மதியா இருப்பேன்…" என்றாள் பட்டியலிட்டு


"ஹோ… காதலிக்க தெரிஞ்சவனை தான் கல்யாணம் பண்ணிக்குவ... என்னை கட்டிக்கிட்டா நல்லா இருக்க மாட்ட... கஷ்டப்படுவ ல …" என்று யோசிப்பவன் போல பேசியவன்,


"எனக்கு காதலிக்க தெரியுதோ... தெரியலையோ... என்னை கட்டிக்கமாட்டன்னு சொன்ன நீ தான் அந்த கஷ்டத்தை அனுபவிக்கனும்… எனக்கு வேற யாருக்கும் அந்த கஷ்டத்தை கொடுக்க விருப்பம் இல்ல" என்றான் வம்படியாக அவன் குரலில் அத்தனை அழுத்தம்.


"ஹாங்…". என்று அதிரந்தவள் "அது முடியாது" என்றாள் சட்டென


"அப்போ, உனக்கு என்னை கண்டா பயம்... அதை ஒத்துக்க அதனால தானே என்னை கட்டிக்க முடியாதுன்னு சொல்ற... இதுல பேச்சை பாரு சவடாலா" என்றான் எள்ளலாக


"பயமா…! அதுவும், உங்கள பார்த்தா... அதுக்கு வேற ஆளை பாருங்க எதுவந்தாலும் என்னை ஒன்னும் செய்யாது... என்னை கட்டிக்கிட்டா நீங்கதான் கஷ்டப்படனும்... அதுக்குதான் சொன்னேன்" என்றாள் வீறுகொண்டு உனக்கு நான் எப்பவும் அடங்கமாட்டேன் என்பது போல்


"அப்படியா சொல்றா ... அதையும் பாத்துடுவோம்... உன்னால நான் கஷ்டபடுறேனா? இல்ல என்னால நீ கஷ்டபடுறாயான்னு…" என்றான் சவால் விடுவதை போல


"அதுக்கு…. அதுக்கு" என்று தயங்கியவளை


"அதான் என்னை, ஒத்தை கைய்யால வாறி சுருட்டி போடுற அளவுக்கு நீதான் தைரியமானவளாச்சே…. அப்புறம் என்னை கட்டிக்க எதுக்கு தயங்கற" என்றான் அவளை உசுப்பேற்றுவது போல


|எனக்கு என்ன தயக்கம் அய்யோ பாவமேன்னு உங்களுக்காக தான் பார்த்தேன்... நீங்களே அது தேவையில்லன்னு போது நான் என்ன சொல்றது" என்று அவள் கிண்டலாக கூறவும்


"அப்போ ரெடியாயிட்ட… சரி நான் போயி கல்யாணத்துக்கு நாளை குறிக்க சொல்றேன்... நீயும் என்னை வாறி சுருட்டி போட தயாரா இரு" என்று நக்கலாக அவளை பார்த்து கூறியவன் அங்கிருந்து அகன்றான்.


அப்போது தான் கூறிய வார்த்தைகளின் வீறியத்தை உணர்ந்து எச்சிலை கூட்டி விழுங்கியவளுக்கு, முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்த்து வழிந்தது. வந்தான், பேசினான் என் வாயலையே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைச்சிட்டான்... என்று உறைந்து நின்றவளை கலைத்தது தேவாவின் குரல்


"அண்ணன் பேசிய பேச்சுக்களில் விதிர்த்து நின்ற மேகலாவிடம், "கலா, கோவமாடி அவன் பேசினதுல?" என்றாள் தோழியின் முகம் போன போக்கை கண்டு,


தேவாவை பார்த்ததும் சற்று இயல்பானவள் "இல்லடி ஐஸ்கட்டில குளிச்சா மாதிரி, குளு குளுன்னு இருக்கேன்... ஏண்டி வயித்தெரிச்சல கிளப்புற" என்று நக்கலாய் கூறியவளின் கையை பிடித்த தேவா


"சாரிடி உனக்கு அவனை பிடிக்கும்னு நினைச்சுதான் இப்படி ஒரு பொய்யை சொன்னேன்... உனக்கு பிடிக்கலன்னா இப்பவே அவன்கிட்ட சொல்றேன்… நான் சொன்னா அவன் கேட்டுக்குவான்... என்று சென்றவளை தடுத்து நிறுத்தினாள் மேகலா.


"பிடிக்காதுன்னு இல்ல…. ஆனா... ஏதோ கொஞ்சம் பயமா இருக்கு" என்றாள்


"நீ பயப்புடுற அளவுக்கு எல்லாம் அவன் கெட்டவன் இல்லடி"


"ஹலோ போதும் உன் நொண்ணனுக்கு வக்காலத்து வாங்கினது... எனக்கும் தெரியும் அவன் கொஞ்சம் நல்லவன்னு... ஆனா என்னை பார்த்தாலே எரிஞ்சி எரிஞ்சி தானே விழுவான்... இப்போ கூட அதுதானே செஞ்சிட்டு போனான்…" என்றாள் விழுந்துவிட்ட முகத்துடனே


"அதெல்லாம் அப்போடி... என் மேல இருந்த கோவத்துல அப்படி நடந்துக்கிட்டான்… ஆனா உன்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்... அதனால தான் உன் கிட்ட மட்டும் உரிமையா நடந்துக்குறான்... நீ கட்டிக்க மாட்டன்னு சொன்னதும் கோவம் வந்துடுச்சி அதான் இப்படி ஆடிட்டு போறான்…" என்றாள் அவளை தெளிவிக்கும் பொருட்டு


"அந்த ஈரவெங்காயம் எனக்கும் தெரியும்... உன் அண்ணன் மேல ஒரு டவுட் இருந்துச்சி... இன்னைக்கு அது கிளையர் ஆகிடுச்சி" என்றதும்


"என்ன டவுட்டு" என்றாள் தேவா ஆர்வமாக


"ஆன் அந்த நல்லவன், என்னை சைட்டு அடிச்சாங்குறது" என்று மேகலா கூறியதும்


" ஹோ… அப்போ நீங்க மேடம்…. நீங்க என் அண்ணனை சைட் அடிக்கல…. இதை நான் நம்பணும்… அங்க எவளாவது காதுல பூ வைச்சிருப்பா, போய் சொல்லு உன் கதையை…." என்று அவளை வாறியவள்


"மேடம் போன்ல என் அண்ணன் பேரை சேவ் பண்ணி இருக்க லட்சணத்தை பார்த்துட்டுதான், இந்த கல்யாணத்தை முடிவு பண்ணேன்…" என்று மேகலாவின் குட்டை உடைக்க


தோழி கண்டுக்கொண்டாள் என்றதும் சிதறி ஒட இருந்தவளை இழுத்து பிடித்த தேவா "மாட்டினியா என்கிட்டயே மறைக்கிற இருடி உனக்கு நாத்தனார் கொடுமைய காட்டுறேன்…" என்று தேவா மிரட்டலாக கூறிட "தெய்வமே" என்று மேகலா விழி விரிக்க தோழிகள் இருவரும் கலகலத்து சிரித்தனர்.


ஒருவழியாய் சாமுண்டி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிப்பட்டவர்கள் மனதிருப்தியுடனே வீட்டிற்கு திரும்பினர்.


💐💐💐💐


கடிகார முள் 5.30.. நெருங்கி இருக்க


அதிகாலைச் சூரியன் கிழக்கில் தோன்றி ஒளி கதிர்களை வீச தொடங்கியிருந்தது, மெல்ல இருள் விலகி வானம் சற்றே வெளுக்க தொடங்கி இருந்த சமயம் அது, வண்ண மலர்களின் வாசம் மேடை எங்கும் மணந்தது. மங்கள வாத்தியங்கள் இசையை முழங்கிட, சொந்த பந்தங்கள் பட்டாடை நகைகள் சகிதம் மண்டபத்தில் நுழைந்துக் கொண்டு இருந்தனர்.


உறவுக் கூட்டம் ஒரு பக்கம் சபையை நிறைத்து இருக்க, மறுபக்கம் காலை உணவு கமகமத்து நாசியை தீண்டி சென்றது…


அய்யர் மந்திரத்தை ஓத அக்னிகுண்டத்தில் இருந்து எழுந்த புகையில் சற்றே கண்கள் சிவந்து நீரில் பளபளத்த நிலையில் அமர்ந்து இருந்தாள் மேகலா.


அவளின் அருகில் வெண்பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவர்களை தலையசைத்து வரவேற்று அமர்ந்திருந்த சந்திரனுக்கு அவளின் நீர் நிறைந்த கண்களை கண்டு முகம் இறுகியது.


எப்போதும் வம்பு பேசுபவள் இப்போது ஏன் இப்படி இம்சிக்கிறாள், இன்னும் அவளின் மனம் மாறவில்லையோ! என்று கோவத்துடன் அமர்ந்திருந்தான். நிச்சயமானதில் தொடங்கி இன்று வரை இருவருக்குள்ளும் ஏட்டிக்கு போட்டிதான்... புடவை கடையில் ஆரம்பித்த பனிப்போர் இன்று வரையிலும் தொடர்ந்துக் கொண்டு இருந்தது… மேகலாவிற்கு அவனை உசுப்பேற்றுவது சவாரஸ்யம் நிறைந்ததாய் இருக்க அவனுக்கு தான் கொஞ்சம் கடுகடுத்தது.


மேகலாவிடம் பேசிய அடுத்த வாரமே இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் கோவிலில் நிச்சயம் செய்திருத்தனர். மேகலாவின் வீட்டில் ஜெயசந்திரன் தான் மாப்பிள்ளை என்றதும் வேறு பேச்சுக்கள் ஏதுமின்றி சம்மதத்தை தெரிவித்து இருக்க நிச்சயம் நடந்த அடுத்த முப்பது நாட்களில் திருமணம் என்று உறுதியாகிருந்தது.


புடவை எடுப்பது முதல் பத்திரிக்கை விநியோகிப்பது வரை அனைத்திலும் விசாகனையும் தேவசேனாவையும் முன் நிறுத்தி இருந்தார் சௌந்தரலிங்கம். அவர்களை தள்ளி வைத்து செய்த தவறை இதில் ஈடுகட்டி தன் மனதிற்கு நிம்மதியை தேடிக்கொண்டார்.


ஜெயசந்திரனும் அனைத்திற்கும் விசாகனிடம் தான் ஆலோசித்தான்.. அண்ணனின் திருமணத்தையொட்டி தேவா பிறந்த வீட்டிற்கு பத்து நாட்களுக்கு முன்னமே வந்து அனைத்து வேலைகளிலும் பங்கெடுத்துக் கொண்டாள். தன் உயிர் தோழியின் திருமணமும் அல்லவா முழு சந்தோஷத்துடன் ஈடுபட்டாள்.


இதோ அதோவென அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருமண நாளும் வந்துவிட கல்யாண பரப்பரப்புடன் இருந்தாள் தேவா.


"சனா, இங்க என்னடி பண்ற?"


"அம்மா இந்த சீர் தட்டை கொடுக்கனும்னு சொன்னாங்க... அதான் எடுத்து வைக்க வந்தேன்... என்னங்க என்ன வேணும்"


"நீதான் வேணும்" என்றான் விசாகன் சட்டென


"ஹான்" என்று அதிர்ந்தவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துவிட்டு "என்ன பேசுறிங்க?" என்றாள் பல்லை கடித்து


"நான் ஒழுங்காதான் பேசுறேன்டி... உன் யோசனைத்தான் அங்க போகுது…." என்று தலையை ஆட்டிவிட்டவன் "அவன் ஏன்டி இப்படி அலும்பு பாண்றான்" சலிப்பாக


"ம் நம்பிட்டேன்…. போதும் நீங்க எதுவும் பேசல... நானும் எதுவும் நினைக்கல... சும்மா சும்மா வம்பு பண்ணாதிங்க" என்று கணவனை முறைத்தவள் "யாரு என்ன பண்றா எதுக்கு இந்த சலிப்பு" என்று கேட்டபடியே தட்டில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.


"உன் பாசமலர் தான்... அப்போல இருந்து உன்னை தேடுறான்... சொன்னா கேட்க மாட்டுறான்… நானே போய் பாக்குறேன்னு மனையிலிருந்து எழுந்து வம்படிக்குறான்".


"எதுக்கு தேடுறான்"


"தெரியல வா" என்று அவளை கையோடு இழுத்துச் செல்ல


அதில் சங்கோஜப்பட்டவள் "கைய விடுங்க எல்லாரும் பாக்குறாங்க" என்று அவனிடம் கையை விலக்கிக் கொண்டு மணமேடையை நோக்கி சென்றுவிட,


"ரொம்ப பண்ற... உன்னை அப்புறம் கவனிச்சிகுறேன் டி" என்று உள்ளுக்குள் மனைவியை செல்லமாய் கடிந்தவன் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.


"என்ன ணா எதுக்கு கூப்பிட்டா?" என்று சந்திரனின் காதில் கேட்க


இழுத்து பிடித்த பொருமையுடன் அமர்ந்திருந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "அங்க பாரு அவளை... எதுக்கு இப்போ கண்ணை கசக்கி அழுதுகிட்டு இருக்கா? என்னன்னு கேளு அவளை?" என்றான் கடுப்பான குரலில்.


தோழியிடம் நகரந்தவள் "என்னடி ஆச்சி உனக்கு ஏன் இப்படி அழுது வடியுறா?"


"மனசாட்சி இருக்கா டி உங்களுக்கெல்லாம்... விடியகாலை 3 மணிக்கு எழுப்பிவிட்டு புகை முன்னாடி உட்கார வைச்சா, அழுது வடியாம சிரிக்கவா முடியும்…. ஏன்டி கடுப்பேத்தறிங்க உங்களுக்கு எல்லாம், ஒரு 6.00, 7.30… 7.30.9.00 ன்னு முகூர்த்தமெல்லாம் கிடைக்கலையா? 4.30…. 6.00 தான் கிடைச்சுதா!!" என்றாள் அழாக்குறையாக


"அடிப்பாவி... அதுக்குதான் இப்படி முகரைய வைச்சிக்கிறியா!!! அவன் நீ என்னமோ அவனை வேண்டான்னுதான் அழறயோன்னு நினைச்சிட்டு இருக்கான்… பாவம்… இரு அவன்கிட்ட சொல்றேன்". என்று அண்ணன் பக்கம் போக இருந்தவளை கைபிடித்து நிறுத்தியவள்,


"கதை அப்படி போகுதா... வாயை தொறந்த அவ்வளவுதான் சொல்லிட்டேன்… எவ்வளவு கடுப்படிச்சி இருக்கான் என்னை... இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இப்படியே இருக்கட்டும் உங்க நொண்ணன்…. அவர் ரியக்ஷனை நான் பாக்கனுமே…." என்று மெதுவாக தலையை திருப்பி அவனை பார்த்தவள் அவன் பார்க்கும் சமயம் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனை கடுப்பேத்தினாள்..


சுற்றி இருந்த சொந்தமும் பந்தமும் அட்சதை தூவ, தேவாதி தேவரும் மூவரும் வாழ்த்த, மங்கள வாத்தியங்கள் இசை முழங்க, மேகலாவின் கழுத்தில் பொன்மஞ்சள் தாலியினை சூட்ட இனிய திருமண வாழ்வில் புகுந்தனர் இளம் தம்பதியினர்.


🌺💞💞🌺


இதயம் எப்போது நிற்கும் என்று தெரியாமல் தட்டு தடுமாறி துடித்துக்கொண்டு இருந்தது. கையில் வைத்திருந்த பால் சொம்பை கெட்டியாக பிடித்து தன் நடுக்கத்தை மறைத்து ஒருவாறு அவன் முன் நின்றாள் மேகலா.


அறையில் வாசலில் வரும் வரை தேவாவின் கிண்டலிலும் தோழியரின் சிரிப்பிலும் சிவந்தவளுக்கு அறைக்குள் நுழைந்ததுமே குப்பென்று வியர்த்து கைகால்கள் சில்லிட்டு வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.


அதுவும் அறையின் அலங்காரமும் ஜெயசந்திரனும் அவளை பீதிக்கொள்ள வைத்திருந்தார்கள்..


ஜெயசந்திரன் அவள் கையில் இருக்கும் பால் சொம்பை வாங்கி வைக்கவும், மேகலா மயங்கி விழவும் சரியாய் இருந்தது. கீழே சரிந்து விழுஶ்ரீந்தவளை அள்ளியவன் மெத்தையில் கிடத்தி


"ஏ மேகலா… மேகா…. என்னாச்சி" என்று அவளின் கன்னம் தட்டி


குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்தான். சட்டென அவள் மயங்கவும், அவனுக்கும் பதற்றம் தொற்றியிருந்தது.


மயக்கம் தெளிந்து கண்விழித்தவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது. கண்களை கசக்கி தன்னை நிலைபடுத்தியவள் சந்திரனை கண்டு திருதிருவென விழித்தாள்.


அவள் பார்வையும் பதட்டமும் அவனை சாந்தப்படுத்த மேகலா கொண்டு வந்த பாலை அவளிடமே கொடுத்து "இந்தா குடி" என்றான் அனுசரனையாக.


"இல்ல வேணா…" என்று எழ முயற்சித்தவளை அமரவைத்தவன்


"முதல்ல இதை குடி… கொஞ்சம் பெட்டரா இருக்கும்…" என்றான். அவன் குரலில் என்ன கண்டாளோ


அதை தவிர்க்க முடியாமல் ம் என்று வாங்கிக் கொண்டவள் கடகடவென குடித்துவிட்டு சொம்பை அவனிடமே கொடுத்தாள். அதை வாங்கி டேபிள் மேல் வைத்தவன் என்ன ஆச்சி என்றான் சவகாசமாக அவள் பக்கத்தில் அமர்ந்து.


அவன் பக்கத்தில் அமர்ந்ததும் குரல் தந்தியடிக்க "அது வந்து... அது வந்து…" என்று திக்கியவள் "இதை எல்லாம் பார்த்து மயக்கமே வந்துடுச்சி" என்றாள் உள்ச்சென்ற குரலில்


ஏதோ ஜோக்கை கேட்டவன் போல ஹா…. ஹா… சிரித்தவன் ஏதோ "என்னை வாரி சுருட்டி முந்தானையில் முடிஞ்சிடுவன்னு சொன்ன நீயா பயப்புடுற" என்றான் கிண்டலாக அவன் பார்வையில் ஏகத்திற்கும் நக்கல் தெரிந்தது.


அவன் கிண்டலில் வெகுண்டவள் "பயம்னா!.... அது இந்த அறையை பார்தது வந்தது... உங்களை பார்த்து இல்ல" என்றாள் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற


"அப்போ என்னை பார்த்து பயமா இல்ல"


"எதுக்கு பயப்படனும்.. நீங்க இரண்டு கை கால் இருக்க மனுஷன் தானே" என்றாள் கொஞ்சம் நக்கலாக


"அப்போ பயமில்ல ரெம்ப தைரியமாதான் இருக்க... சரி நான் உன்னை ஒன்னு கேக்கட்டுமா?"


"கேளுங்க"


"நான் வம்பு பண்ணதுனாலதானே என்னை கட்டிக்கிட்ட" என்றான் சந்தேகமாக


"அப்படின்னு யார் சொன்னது"


"நான் தான்… அப்படி தானே என்னை கட்டிக்கிட்ட…"


"முகரகட்டை...அட என் மண்டு புருஷா இந்தா உன் போன் எனக்கு கால் பண்ணு"


என்னது மண்டு புருஷனா என்று வாயை பிளந்தவன் "எதுக்குடி நீதான் இங்க இருக்கியே"


"பச் பண்ணுயா"


" என்னடி வாய் நீளுது"


" அது அப்படித்தான்….


ஒவ்வொன்னுத்துக்கும் வாய பிளக்காம கால் பண்ணுயா…"


'என்னது யா வா போக போக வாடா போடான்னு கூப்பிடுவா போல இருக்கு' என்று பெருமூச்சை விட்டவன் அவளுக்கு போன் செய்ய தன் போனை எடுத்து அவனுக்கு கண்பிக்க அது மை மூன் என்ற பெயரை தாங்கி வந்தது


"ஹேய்… என் பெயர் சந்திரன்... இதுல வேற இருக்குடி"


"ஆமா .. சந்திரனுக்கு இங்கிலிஷ்ல என்ன?"


"மூன்"


"இப்போ இதை படிச்சி பாருங்க"


"என் சந்திரன்"


"புரியுதா" என்றாள் வெட்கத்தோடு


இனிதாக அதிர்ந்தவன் "அப்போ பார்க்கும்போதெல்லாம் முறைஞ்சிக்கிட்டே சுத்தினது"


"சும்மா உங்களை சீண்டி பார்த்தேன்... நீங்க எத்தனை வாட்டி என்னை வம்புபண்ணி இருப்பிங்க அதான் இப்போ நான் பண்ணேன்".


"அப்போ காலைல தாலி கட்டும் முன்னாடி அழுதது என்னை பிடிக்காம இல்லையா"


"அட என் மக்கு புருஷா... ஓம குண்ட புகை கண்ணுல பட்டு ஒரே தண்ணீ அதை போய் அழுதேன்னு, அவளை கூப்பிட்டு என்ன பாடுபடுத்தினிங்க…" என்று கிண்டலாக கூறியவள் அவன் முகம் போன போக்கை கண்டு அடக்க மட்டாமல் சரித்துவிட்டு


"நீங்க தான் ஒரு பீலிங்சும் இல்லாம கிணத்துல போட்ட கல்லாட்டம் இருந்திங்க... உங்க தங்கச்சி மட்டும் உக்களை உசிப்பிவிடாம இருத்திருந்தா என்னை கல்யாணம் கட்டிருப்பிங்களா?| என்றாள் ஆதங்கமாக


"கட்டியிருக்க மாட்டேன்" என்றதும் அவள் முகம் வாடிவிட "உன்னை தவிர வேற யாரையும் கட்டியிருக்க மாட்டேன் டி" என்று கூறி அவளை மலரவைத்த சந்திரன்.


அவள் மலர்ந்த முகத்தை கண்டவன் "தட்ஸ் குட்… மை பேபி... இப்படியே இருக்கனும்" என்று அவளின் கன்னத்தை தட்டியவன் "நீதானேடி சொன்ன எனக்கு காதலிக்கவே தெரியாதுன்னு... அப்புறம் எப்படி உன்கிட்ட இது எல்லாம் சொல்றது" என்று யோசிப்பவன் போல பேசிட அவள் கண்கள் கொண்ட காரத்தில் "சரி சரி சொல்றேன்" என்று கூற ஆரம்பித்தான்.


"தேவா சொன்னான்னு மட்டும் உன்னை தேடி வரல மேகா... எப்படியாவது உன்னை சம்மதிக்க வைக்கனும்னு தான் உன்னை தேடி வந்து வலுக்கட்டாயாம பேசினேன்... உன்னை சம்மதிக்கவும் வைச்சேன்...."


அவன் சொல்லிய விதத்தில் விழிவிரித்து கணவனை பார்த்தாள் மேகலா.


"என்ன பாக்குற… என்னடா இந்த கல்லு இப்படி உருகுறான்னு ஆச்சர்யமா இருக்கா?..


என்றான் அவளின் உணர்வுகளை படித்தது போல


ஆம் என தலை அசைத்தவளின் நாடியை நிமிர்த்தியவன் அவள் கண்களை தன் கண்களோடு மோத விட்டு "திமிரா பாக்குற இந்த கண்ணுல நான் எப்பவோ விழுந்துட்டேன் மேகா... பட்டு பட்டுன்னு நினைச்சதை பேசற உன் உதட்டுல நான் சொக்கி நின்னு இருக்கேன்.. ஆனா இது எல்லாம் சொல்ல மனசு வரல... என் தேவா வை பழி சொன்னா என்னால உன் மேல இருக்க விருப்பத்தை சொல்ல வார்த்தை வரல… குற்றவுணர்வா இருந்துச்சி மேகா",


"எனக்குள்ளயே முடி வைச்சிக்க பார்த்தேன்... ஆனா ஏதோ ஒரு விதத்துல அது வெளிப்பட்டு என்னையே ஆட்டி படைக்க ஆரம்பிச்சிது... அப்போதான் காதலோட வலியையும் அதோட ஆழமும் புரிஞ்சுதுடி... என் தேவாவை பத்தியும் புருஞ்சிது…" என்றான் அழ்ந்த வேதனையான குரலில்.


அவன் குரலில் இருந்த வேதனையை புரிந்தவள் "சாரி உங்கள காயப்படுத்தனும்னு பேசல


என்னை பிடிக்காதேன்னு தான் கேட்டேன்" என்றாள் தவறு செய்துவிட்டவளை போல்


மனைவியின் குரலில் தன்னை இயல்பாக்கி கொண்டவன் "ஹேய் மேகா... என்ன இது இப்படி எல்லாம் சட்டுன்னு அடங்கிப் போயிட்டா... எப்படி என்னை வாரி சுருட்டிக்குவ உனக்குள்ள வைச்சிக்குவ" என்றான் சற்றே துள்ளலான குரலில் மனைவியின் கன்னங்களை வருடியபடி


"பச்... போங்க என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கிங்க" என்று கணவனின் கைகளை பற்றி தடுக்க "இது கிண்டல் இல்ல மேகா... உண்மையா தான் சொல்றேன்…" என்று அவள் இதழ்களை வருடவும் கண்மூடி அவன் தொடுகையில் சிவந்தவளை இன்னும் முன்னேறி சிவக்க வைத்தவன் அவளை காதல் என்னும் ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து அன்பு என்னும் முத்தை விதைக்க தொடங்கி இருந்தான்.


❤️❤️❤️💞❤️❤️❤️


வெப்பம் நிறைந்த ஆதவன் சிறது ஓய்வை எடுத்துக்கொள்ள குளிர்ந்த நிலவுமங்கை வான வீதியில் ராஜபவனி வந்தாள். இரவும் குளிர்ந்த காற்றும் மனதை அமைதிக்கொள்ள வைக்க, கட்டிலின் ஒரு புறம் தன் மடிக்கணிணியுடன் அமர்ந்திருந்தான் விசாகன்.


கையில் பாலுடன் அறையில் நுழைந்தவள் உறங்கிய குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு கணவனிடம் பாலை நீட்டினாள்.


"இந்தாங்க மாமா…"


"அப்படி வைச்சிடு.."


"குடிச்சிட்டு வேலைய பாருங்க"


"வைச்சிட்டு போடி" என்று சிடுசிடுத்தான்.


"எதுக்கு இப்போ சிடு சிடுன்னு இருக்கிங்க"


"காரணம் தெரியாதா உனக்கு?"


"தெரியாததுனாலதான் கேக்குறேன்... என்ன காரணம் சொல்லுங்க"


"இரண்டு நாளா அப்பிளிக்கேஷனை வைச்சிக்கிட்டு உக்கிட்ட போராடுறேனே. இப்பவும் தெரியலையா…" என்று கடுப்புடன் கூறினான் அவனும் மேல் படிப்பிற்கு விண்ணப்பத்தை வாங்கி வைத்து இரண்டு நாட்களாகிறது… என்ன சொன்னாலும் வேண்டாம் என்பவளை என்ன செய்வது என்று கோபமானான்.


"அதுதானா... நீங்க இன்னும் விடலையா அந்த பேச்சை... புரிஞ்சிக்க மாமா... இவளை வைச்சிக்கிட்டு எப்படி படிக்க முடியும்... அது ,அது அப்போ அப்போ நடந்து இருக்கனும்... எனக்கு இப்போ இன்டிரஸ்ட்டே இல்ல| என்றாள் அதை நிராகரித்தவளாக,


"குழந்தைய காரணம் சொல்லாத சனா... அது எல்லாம் படிக்கலாம்… படிக்க படிக்க தன்னால இன்டிரஸ்ட் வந்துடும் டா... என்றான் கோபத்தை கைவிட்டு கனிவாக,


"மாமா என்று சிணுங்கியவளின் கைகளில் காகிதத்தை திணித்தவன் ஒழுங்கா கையெழுத்தை போடு... நான் எல்லாம் பில் பண்ணிட்டேன்…. இப்போவே எல்லாம் முடிஞ்ச பாட்டி மாதிரி பேச வேண்டியது... உன்னோட கனவையே மறந்து தொலைச்சிட்டல…


"ஒரு குழந்தை பிறந்துட்டா இது எல்லாம் பண்ண முடியாதுன்னு யாரு டி சொன்னா உனக்கு குழந்தை தான் கஷ்டம் னா அதை நான் பாத்துக்குறேன் நீ படி என்று கூறினான்.


அவள் அப்போதும் அப்படியே நிற்க


அதில் கோவம் கொண்டவன் "என்னை கட்டினதுனால தான் உன்னோட கனவே கலைஞ்சிடுச்சின்னு, எனக்கு கில்டியா இருக்குடி ... பரவாயில்லை இப்படியே இருக்கட்டும்… உனக்கு என்ன வந்தது, நீ போமா... போய் உன் பாட்டி கிட்ட சொல்லிட்டு... பண்ணயம் பாரு" என்றான் கடுப்பாக"


அவனுக்கு சங்கடமாக இருக்கு என்று கூறியதும் மறுப்பேதும் கூறாமல் அவன் நீட்டிய இடங்களில் தனது கையெழுத்தை இட்டவள் அகமும் முகமும் கணவனின் அன்பை எண்ணி இப்போதும் வியந்தது. சாரி சாரி மாமா நான் படிக்கிறேன் உனக்காக நான் படிக்கிறேன். என்று அவனை சாமாதனம் செய்திட


எனக்காக இல்ல உனக்காக உன்னோட கனவுக்காக படிக்கனும் டி என்றிட


ரொம்ப தெங்கஸ் மாமா என்று தன் இதழால் அவன் கன்னத்தில் கவி எழுதினாள்.


தெங்கஸ் இப்படி சொல்லக்கூடாது டி என் செல்ல பொண்டாட்டி என்று அவளை இழுத்து அணைத்தவன் அவள் இதழ்களில் முத்த கவி எழுதி மொத்தமும் அவளுள் கரைந்தான்.


இவர்களின் வாழ்வில் எப்போதும் சந்தோஷமும் நிம்மதி மட்டுமே நிறைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாமும் விடை பெறுவோம்


நன்றி வணக்கம்…..


🌺🌺🌺🌺


ஆறு வருங்களுக்கு பிறகு


சுந்தரனுக்கும் அமுதாவிற்கும் 7 வயதில் பூஜிதாவும் 4 வயதில் முகேஷ் என்ற மகனும் இருந்தனர். தொழிற்சாலையில் விசாகனுடன் பங்குதாரராக இருந்தாலும் அவர்கள் குடும்ப தொழிலான பைனான்ஸ் கம்பெனியையும் நடத்தி வந்தான். அமுதா அரிசி ஆலை மற்றும் விசாகனுடைய தோப்பு பண்ணை வரவு செலவு கணக்கை பார்த்துக்கொண்டாள்.


சந்திரனுக்கும் மேகலாவிற்கும் இரண்டு மகன்கள் மூத்தவன் மயூரன் 5 வயதிலும் இளையவன் பவன் 2 வயதிலும் இருந்தனர். ஜெயசந்திரன் பணியின் காரணமாக சென்னையில் இருந்ததால் மேகலாவின் வாஸஸ்தலமும் சென்னை என்றானது. ஊர் பாசம் போகாததால் அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றுக்கொண்டு இருக்கிறாள்.


இவர்களெல்லாம் இப்படி இருக்க விசாகனும் தேவாசேனாவும் வாழ்க்கையில் பல மாறுதல்களை அடைந்திருந்தனர். இந்த ஆறு வருடத்தில் விசாகனின் தொழிற்சாலை ஒருசில சறுக்கல்களை கண்டாலும் இப்போது நல்ல வளர்ச்சியை அடைந்திருந்தது. தேவாவின் ஊரில் கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான். தோப்பு துறவு பண்ணை என்று சொத்துக்கள் பெருகியிருந்தது... தேவாசேனா தன் கல்லூரி படிப்பை முடித்தவள் தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக வேலைக்கு சேர்ந்து இத்தோடு ஒருவருடம் ஆகியிருந்தது


"நில்லு பிரணவி இத ஒழுங்கா சாப்பிடு"


"மா ப்ளீஸ் எனக்கு வேண்டாம் இது நல்லாவே இல்ல"


"என்னடி நல்லா இல்ல... உடம்புக்கு நல்லது.. நீ சாப்பிட்டே ஆகனும்" என்று ஆறு வயது மகள் பிரணவியுடன் மல்லுக் கட்டிக்கொண்டு இருந்தாள் 5 மாத கருவை வயிற்றில் சுமந்த தேவசேனா...


தொழிற்சாலைக்கு செல்ல கிளம்பி வந்த விசாகன் கீழே மகளிடம் மனைவியின் போராட்டத்தை கண்டு சிறு புன்னகையுடனே அவர்கள் அருகில் வந்தவன் "நீ போ சனா உனக்கு காலேஜிக்கு டைம் ஆகல"


"ஆகுது மாமா… இவள பாருங்க ஒரு வாய் கூட சாப்பிட மாட்டுறா"


"நான் பாத்துக்குறேன்... நீ போ போய் கிளம்பு" என்றவன் அவளை ஓரிடத்தில் அமரவைத்து உணவை சாப்பிட வைத்தான்.


"பாருடா இந்த புள்ளைய... என் பேத்திய சாப்பிட அந்த பாடு பாடுத்தினா... இப்போ அப்பன் வந்தவுடனே அவ்வளவு அடக்கமா உட்கார்ந்து சாப்பிடுது" என்று வாயில் கையை வைக்க


"பாட்டி அம்மான்னா கொஞ்சம் ஏமாத்தலாம்... அப்பாவை ஏமாத்த முடியாது.. அதுவும் சாப்பிடலன்னா ஐஸ்கிரீம் வாங்கி தரமாட்டாரே" என்று பாவம் போல் முகத்தை வைத்து கூறிட


கல்லூரிக்கு கிளம்பி வந்த தேவா "அதானே பார்த்தேன்... உன் அடம் எப்படி டா அவர்கிட்ட செல்லுபடியாகலன்னு... ரெண்டு பேரும் திருட்டு வேலையா பண்றிங்க.. " என்று அவளின் பேகை சரிசெய்து கொண்டே "உனக்கு நான்னா கிள்ளுக்கீரை டி.. அடுத்த வாட்டி ஜூரம்னு வந்து நில்லு டாக்டர் கிட்ட சொல்லி பெரிய ஊசியா போட சொல்றேன்" என்று மகளிடம் செல்ல கோபம் கொள்ள


மனைவியின் சொல்லில் தேவாவின் கடந்த காலம் விசாகன் கண் முன்னே வர சட்டென எழுந்த சிரிப்பை அடக்கியவன் மகளிடம் திரும்பி "பிரணவி மாதிரியே இன்னொருத்தருக்கும் ஊசின்னா பயம்... அது யாருன்னு உனக்கு தெரியுமா பிரணவிமா" என்றான் மனைவியை பார்த்து நமுட்டு சிரிப்புடன்


தில்லைக்கும் அந்த நாளின் நினைவில் வாய் கொள்ளா சிரிப்புத்தான்... இருந்தும் தேவாவின் கோபம் அறிந்து அடக்கிக் கொண்டார்.


"யாரு... யாருப்பா?... "அது என்றது குழந்தை தெரிந்துக் கொள்ளும் ஆவலில்


"உங்களுக்கு நேரமாகலையா... ஏன்டி உனக்கும் நேரமாகலையா... மேக்ஸ் ஹோம் ஹோர்க் முடிச்சியா… தமிழ் எழுதினியா…" என்றாள் தேவா யாரையும் பேசவிடாமல்


அவள் அதட்டலில் வாயை முடிய குழந்தை விசாகனின் காதில் "அப்பா இவினிங் சொல்லுங்க நான் தமிழ் கொஞ்சம் எழுதனும் இப்போ தெரிஞ்சா அம்மா அதுக்கும் திட்டுவாங்க" என்று கூறி சாப்பிடும் வேலையை தொடர்ந்தாள் பிரணவி.


கணவனை கண்களால் எச்சரித்தவள் தில்லையின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.


மனைவியின் பதட்டம் அவனுக்கு சுவாரஸ்யம் கூட்ட அவளையே பார்த்தவன் தன் உண்ணும் வேலையையும் தொடர்ந்தான்.


"ஏத்தா இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகனும்னு சொன்னியே டா" என்றார் தில்லை பேத்தியை திசைதிருப்பும் பொருட்டு


"ஆமா பாட்டி இவினிங் தான் அப்பாய்ண்மெண்ட்... அவர் காலேஜிக்கு வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டாரு"


"அப்படியா … சரித்தா கொடுக்குற சாப்பாட்ட நல்லா சாப்பிடு... இன்னைக்கு உனக்கு புடிச்ச புளிப்பு கீரை தொக்குதான்" என்று கூற


மகளுக்கும் தனக்கும் எடுத்துக்கொண்டு வந்தாள்.


"சனா பிரணவியும் ரெடி" என்று மகளை அழைத்துக்கொண்டு வர


மகளை காரில் ஏறச்சொல்லியவள் கணவனிடம் குனிந்து "என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?"


"சிரிச்சா என்னடி?"


"என்னை பார்த்து தானே சிரிச்சிங்க?"


"ஏய் சும்மா தானடி சிரிச்சேன்"


"இல்ல பிரணவிகிட்ட என்னை பத்தி சொல்லதானே வந்திங்க"


"ஏய் சும்மா டி... உன்னை பத்தி சொல்லுவேனா... ஆனா பிரணவி மாகிட்ட ஊசின்னு சொன்னியா, உன்னை மாதிரியே பிரணவியும் ஊசியை கண்டு அடிக்கிற கூத்தை நினைச்சி சிரிச்சேன்... அதான் சும்மா உன்னை உசுப்பேத்தலாம்னு சிரிச்சேன்"


"நினைச்சேன் இப்படி தான் இருக்கும்னு"


ஹா… ஹா… என்று மேலும் சிரிக்க


"போதுமே சிரிப்பு... பிரணவி முன்னாடி இதை சொல்லிடாதிங்க என் மானமே போகும்"


"டிரை பண்றேன் செல்லக்குட்டி"


அதற்குள் காரில் அமர்ந்த குழந்தை இரண்டு முறை ஹாரனை அலறவிட


"ஏய் வறேன் டி எதுக்கு இப்படி அலும்பு பண்ற"


"அப்பா... அம்மா… எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சி" என்று கத்திக்கொண்டு இருந்த பிரணவி "அதுதான் உங்களை என் ஸ்கூலுக்கே டிச்சரா வரச்சொன்னேன்… நான் லேட்டா போனா கூட எதுவும் சொல்ல மாட்டாங்க… இப்போ நான் பயந்து பயந்து போகனும்" என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு


"அடிங் உன் லொல்லுக்கு நான் ஆள் இல்லடி…" என்று காரில் அமர்ந்தவள் "வண்டிய எடுங்க எனக்கும் பஸ்ட் அவர் கிளாஸ் இருக்கு" என்றாள் தேவா.


"அப்பா…"


"மாமா… "


என்று இருவரும் ஒரே நேரத்தில் அழைக்க இவர்களின் செல்ல சண்டையை ரசித்தபடி பயணத்தை தொடர்ந்தான் விசாகன்.


தன்னை நெருங்கவிடாமல் நெருப்பாய் தகித்தவனின் வாழ்வில் குளிர் தென்றலாய் வீசியவள் அவன் வாழ்வை பூ பூக்கும் நந்தவனமாய் மாற்றினாள் அவனின் இதயத்தை பூ போல் கொய்த தேவசேனா…..


நன்றி…. வணக்கம்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN