மூங்கில் நிலா -8

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை அங்கே விரைவில் இருட்டத் தொடங்கிவிடும். சில சமயங்களில் மழைக் கூட பொழியும். வனிக்கு மழையென்றால் கொள்ளை குஷி.எவ்வளவுதான் மழையில் நனைந்தாலும் காய்ச்சல் சளி என்று அவள் அவதிப்பட்டது இல்லை. சில மனிதர்களைப் போல இயற்கை அவளை என்றுமே காயப்படுத்துவது இல்லைதான்.

விழித்தவள் குளித்துவிட்டு சாமி கும்பிட்டு விட்டு, பிறகு தான் வீட்டையே சுற்றிப் பார்த்தாள். 80 வருட பழமை வாய்ந்த கட்டிடம். வசி தாத்தா காலத்தில் ஆங்கிலேயர் பாணியில் கட்டிய வீடு அது. அதன் புரதானமே வனியை மயக்கும். பழமை விரும்பி ஆயிற்றே அவள்.

வசி அன்னை இருந்த வரைக்கும் ஜொலித்த அந்த பங்களா இப்பொழுது பொலிவின்றி இருந்தது.
வசி காலேஜ் முடிக்கும் வரை அவர்கள் அங்கேதான் இருந்தார்கள். பிறகுதான் தொழில் படிப்பு நிமித்தம் சென்னைக்கு சென்று விட்டனர்.இந்த வீடும் வேலையாட்கள் பொறுப்பில் இருந்து,இப்பொழுது வசி தங்கும் இடமாய் மாறிவிட்டது . அடிக்கடி தொழில் நிமித்தமாய் அலைபவனுக்கு இதை போஷாக்காக வைத்து கொள்ள நேரமேது.

கலாரசிகையான வனிக்கு அந்த வீட்டை அப்பொழுதே சுத்தம் செய்ய கை பரப்பரத்தது. இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாய் இருந்து விட்டாள். செல்லம்மாவும் வேலைகளை முடித்து விட்டு சென்றிருக்க, வனி மட்டுமே வீட்டிலிருந்தாள்.

8 மணி போல வேலை முடிந்து வந்த வசி, ஹாலில் படம் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து புன்னகையித்தான். வனி முகத்தை திருப்பிக்கொண்டாள். மனதில் கனன்று கொண்டிருந்த கோவம் இன்னும் அவளுக்கு அடங்கவில்லையே. குளித்து விட்டு வந்தவன், வனியை சாப்பிட அழைத்தான்.

"நியாயமா நீதான் மாமாவுக்கு சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்கணும், பரிமாறியிருக்கணும், இங்க என் கெரகம் எல்லாமே நானே செய்யவேண்டிய தா இருக்கு, வேணிம்மா வா வந்து சாப்பிடு, சாப்பிட்டு அப்புறம் தெம்பா சண்டை போடலாம் வா " வசி குறும்பாய் அவளை அழைத்தான்.

வனிக்கு பற்றி கொண்டு வந்தது. "டேய் என்னை அப்படி கூப்பிடாதே ராஸ்கல், கொன்னுடுவேன் உன்னை.
மாமாவாம் மாமா மண்ணாங்கட்டி, உனக்கு பசிச்சா நல்லா கொட்டிக்கோ, எதுக்கு என் உயிர வாங்கற?"
வனி பொரிந்து தள்ளினாள். பழைய வசியாய் இருந்திருந்தால் கதையே வேறு. உலகம் சுற்றி, கலவையாய் மனிதர்களை சந்தித்தவனின் மனசும் புத்தியும் இப்பொழுது விசாலப்பட்டிருந்தது.

வனியிடம் மட்டுமே அவன் குணம் மாறுபடுமே ஒழிய மற்றவர்களுக்கு அவன் மிகவும் நல்லவன், அருமையான மனிதன். எழுந்து அவள் அருகில் வந்தவன், வனியின் வெண்டை விரல்களைப் பற்றிக் கொண்டான். நேற்று இருந்த கோவத்தின் சுவடு கூட அவன் கண்களில் இப்பொழுது இல்லை.

"வேணி செல்லம், நீ பசி தாங்க மாட்ட, சுட சுட ஆயா பூரி கிழங்கு பண்ணி வெச்சிருக்காங்க, உனக்குதான் ரொம்ப புடிக்குமே. வா வந்து ஆறுவதற்குள் சாப்பிடு. அப்புறம் தெம்பா எங்கூட சண்டை போடலாம் " மென்மையாய் வசி கூறவும் வனி இளகி விட்டாள்.பாவி சரியா சாப்பாட்டை காமிச்சு கவுத்திடறான்.

வனி வீக்னஸ் அவனுக்குத் தெரியாத என்ன?.

கையை வெடுக்கென்று அவனிடமிருந்து உருவிக்கொண்டவள் தானாகவே சாப்பாடு மேஜைக்கு சென்றாள்.
ஹாட் பாக்சில் பூரியும் உருளை கிழங்கு பிரட்டலும் ஆவியடித்தன .அவனை முறைத்துக் கொண்டே இரண்டு பூரிகளை விழுங்கி வைத்தாள்.அவனும் புன்னகை மாறாமலே சாப்பிட்டு முடித்தான். உணவிற்கு பின் திரும்பவும் டிவி முன் அமர்ந்துக் கொண்டாள். அவள் அருகே அமர்ந்த வசி, " ஹ்ம்ம்ம் இப்பொழுது உன் கச்சேரிய ஆரம்பிக்கலாம் தாயே " என கண் சிமிட்டினான்.

அவ்வளவு தான், அதற்காய் காத்திருந்தவள் போல வனி அவன் மேல் பாய்ந்தாள்.

" ஏன்டா எருமை, எனக்கு தாலி கட்ட சொல்லி நான் உன்னை கேட்டேன்னா? உனக்கும் அவளுக்கும் பிரச்சனைனா அத அவள்கிட்ட எடுத்து சொல்லியிருக்கணும், அத விட்டுட்டு சினிமால வர்ற மாறி பொசுக்குன்னு தாலிய எடுத்துக் கட்டிட்ட, என்ன கொழுப்பு இருக்கும் உனக்கு? எனக்கு இதுல சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டியா?ஆண்பிள்ளை னு அவ்வளவு திமிரா உனக்கு? இல்ல நம்மல காதலிச்சவ தானே என்ன செஞ்சாலும் பணிஞ்சிடுவானு இளக்காரமா? வசீகரனை வனமோகினி உலுக்கிவிட்டாள்.

அதற்கும் பொறுமையாய் வசீகரன் அவள் அருகில் வந்து," நிஜமா என்னை நீ லவ் பண்ணலயா வேணி?
அந்த வயசிலே பத்தி பத்தியாய் நாம எதிர்காலத்தில் அப்படி வாழனும் இப்படி வாழனும் நீதாண்டி கிறுக்கி வைச்சுருக்க. அந்த டைரிய படிச்சதாலே தானே ஷைலு என்ன வேணாம்னு போயிட்டா, அப்போ எனக்கு நீதானே வாழ்க்கை கொடுக்கனும்? நீ கேடினு எனக்கு தெரியும், என்னைய அம்போனு விட்டறலாம்னு நெனச்சியா?
அதான் டக்குனு அந்த வாய்ப்பை பயன்படுத்தி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
" ரொம்ப கூலாய் வசி சொல்ல வனமோகினி ரௌத்தினியாகி இருந்தாள்.

"டேய் எனக்கே தெரியாம என் டைரிய சுட்டது நீ, அவள் கண்ணுல படற மாதிரி வெச்சது நீ, தேமேனு கல்யாணத்துக்கு வந்தவளுக்கு தாலி கட்டினது நீ. எல்லாம் உன் தப்பு, என்ன எதுக்குடா குற்றம் சொல்ற கிராதகா"அவன் சட்டையை பற்றி உலுக்கினாள். வசி மோகனமாய் ஒரு புன்னகை சிந்தியவாறே அவள் கைகளை பற்றிக் கொண்டான். அவன் பார்வையின் வீச்சை தாங்காது வனி தலையை குனிந்துக் கொண்டாள்.

மனதில் "இவன் என்ன இப்படி லுக் விடறான்? வசிக்கு எப்பயிருந்து இந்த பழக்கம்? இவன்கிட்ட நின்னா ஏன் என் இதயம் இப்படி துடிக்குதே"வனி கலவரமானாள். கையை வெடுக்கன்று உருவிக் கொண்டு தன் அறைக்கு ஓடிவிட்டாள். அவள் போவதையே ஒரு வித ஏக்கப் பெருமூச்சுடன் வசீகரன் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN