ஹாய்!!! கண்மணிஸ்...!! இந்த தலத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து எங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறோம்... இந்த தலத்தில் போடும் அனைத்து எழுத்தர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் .

நம் கதையின் தலைப்பு:

* யாசிக்கிறேன் உன் காதலை... *

"பேபிடால்!! நாம இப்பப் போற பிளேஸ்ல நிறைய சொந்தங்கள் உனக்குக் கிடைப்பாங்க", என்றார் அகிலா பொறுமையாக.

"சொந்தங்கள் மீன்ஸ் வாட்??".

"ரிலேஷன்ஸ் டா, அம்மாக்கு ஒரு அண்ணா மட்டும் தான் டா, அவங்க பேபி தான் ரவீந்தர்", என்றார் குணசேகரன்.

"அப்பா சைட் அப்படி இல்ல பேபிடால், மூனு தாத்தா பாட்டி, இரண்டு சித்தப்பா சித்தி, மூனு அத்தைங்க, அவங்க எல்லாரோட பசங்க, எல்லோரும் இப்ப அங்க இருப்பாங்க, உனக்கு ஃப்ரெண்ட்ஸ் நிறைய கிடைப்பாங்க", என்றார் பொறுமையாக.

"ஓகே!! மீ", என்றாள் சிரிப்புடன்.

" மாமா பொண்ணுன்னு சொல்லி ஒரு டால அழச்சுட்டு வந்துருக்காரு டா ", என்றான் விரு மெதுவாக.

"ஆமா!! என்ன அழகு!!! அமெரிக்கால இருந்து தானே வந்துருக்கா, ஒரு ஹக் பண்ணுறாளா பாரு", என்று ரிஷி மெதுவாகப் புலம்பினான்.

"டேய்!! தள்ளுங்க டா முதல்ல, தங்கச்சி!!! ", என்று இருவரையும் தள்ளிவிட்டு வந்தான் சந்தோஷ். பேபிடால் குழப்பமாகப் பார்த்தாள்.

"பெரியப்பா!! நா தான் சந்தோஷ், பேபிமா!! உன் அண்ணா டா", என்றான். பேபிடால் அவனை அணைத்து விடுவித்தாள். இருவர் காதிலும் புகை வந்தது.

"மாமா!!", என்று ஓர் இளைஞன் வந்தான்.

"நீ துருவா தானே?!", என்று அணைத்தார்.

"ஆமா மாமா!! வாங்க அத்த!! ஹாய் அபி!! ", என்றான் விலகிச் சிரிப்புடன்.

"இவ அபி இல்ல, என் இரண்டாவது பொண்ணு பேபிடால், பேபிடால்!! இவங்க எல்லாரும் உன் கசின்ஸ் ", என்று அறிமுகம் செய்தார்.

" நீ ஆசைப்படுவதோ தங்கம், உனக்குக் கிடைக்கப் போறதோ வைரம், பார்த்து கவனமா கையாழு, வைரத்தை உடையாமப் பார்த்துக்கோ", என்றார் பூசாரி, சாமி ஆடியபடி. துருவன் குழப்பமாகப் பார்த்தான்.

"நீ நினைத்தது கிடைக்கப் பல கஷ்டங்களை அனுபவிப்பாய், வர கஷ்டத்தில் இருந்து வெளிவந்து போராடு, உன் மனதைத் திடப்படுத்திக் கொள்", என்றார் பூசாரி.

"டாட்!! இவங்க என்ன சொல்லுறாங்க?? ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்", என்றாள் பேபிடால் குழப்பமாக.

"பேபிடால்!! உன் கண்ணுல தெரிர காதலுக்கானப் பிரதிபலிப்பு துருவா கண்ணுல தெரியல டா, அவன் கண்ணுல குழப்பம், கோவம், வருத்தம் தான் இருக்கு", என்றார் குணா வருத்தமாக. பேபிடால் கலங்கிய கண்களுடன் துருவாவைத் திரும்பிப் பார்த்தாள், அவன் கோவமாக வெளியே சென்றான். அவள் அழுகையுடன் நிற்க முடியாமல் அப்படியே கீழே உட்கார்ந்தாள்.

யாசிப்பு தொடரும்.......

யாசிக்கிறேன் உன் காதலை-1

Author: Ramya Anamika
Article Title: 💖அறிமுகம் 💖
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.