மூங்கில் நிலா -11

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆவலோடு வனியைத் தேடி வீட்டிற்கு ஓடியவனை, வாசலில் கேட்ட சிரிப்பு சத்தம் திடுக்கிட வைத்தது.
ஹாலில் அவனோடு மலேசியாவில் படித்த அவன் ஜுனியர் மாலதி செல்லம்மாவை கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
வசியைப் பார்த்ததும் ஆவலாய் தாவி வந்தாள்.

"ஹலோ மை டியர் சீனியர், ஹொவ் ஆர் யூ? எங்க உங்க பொண்டாட்டி ஷைலு? சாரி சீனியர், நேத்துதான் நம்ம ஊருக்கே வந்தேன். உங்க மேரேஜ்க்கு வர கூட முடியல, அதான் வந்ததும் ஊட்டிக்கு ஓடி வந்திட்டேன் " பட படனு சரவெடிப் போல மாலதி பேசினாள்.

"ஹேய் ரிலாக்ஸ் ஜுனியர், ஏன் இவ்ளோ பதட்டம், மெதுவாத்தான் பேசேன், அது சரி தனியாவ வந்தே நீ " வசி வினவினான்.

"நோ சீனியர், கூட அந்த டப்பா காமெரா கதிரையும் கூட்டிக் கொண்டுதான் வந்தேன். அந்த லூசு எங்கயோ சினரி நல்லா இருக்கும் னு, அந்த டப்பா கமெராவை தூக்கிட்டு போயிடுச்சு "மாலதி கூற வசி சிரித்துவிட்டான்.
ஏதோ கூற எத்தனிக்கையில் அந்த கதிரே வந்து சேர்ந்தான்.

"ஹாய் சீனியர் நல்லயிருக்கிங்களா, என்ன மாதிரி ஊரு இது, ஜிலு ஜில்லுனு செம்மையாயிருக்கு போங்க, வழியில் ஒரு தேவதையை சந்திச்சேன், என்ன ஒரு அழகு, நளினம். எவ்ளோ நீண்ட கூந்தல். யாருனு தெரியல சீனியர், பொண்ணு காவிய தேவதை மாதிரி இருந்தா, பார்த்ததும் மனச பறிக்கொடுத்துட்டேன். நீங்க தான் அது யாரு எவருன்னு கண்டுப்பிடிச்சு தரணும் ". கதிர் அப்போவே கனவுலகில் மிதக்க..

அப்பொழுதுதான் வனி வீட்டிற்குள் பிரவேசித்தாள். அவளைக் கண்டதும் கதிருக்கு பேச்சு வரவில்லை.
பூவேலி ஏரிக் கரையோரம் இயற்கையை இரசித்தப்படியிருந்த வனமோகினியைதான் அவன் சந்தித்ததே.

உடனே "சீனியர் கண்டேன் என் வனமோகினியை!, இப்பதானே சொன்னேன், அதுக்குள்ளே வந்து நிக்கறாங்க பாருங்கள் "கதிர் பரவசமாய் கூவ வசி கடுப்பாகி விட்டான்.

"டேய் எருமை, அது என் வனமோகினிடா... "

மாலதியும் கதிரும் ஒரு சேர கூவினார்கள்.
"என்னது உங்க வனமோகினியா? "
மாலதி "சீனியர் உங்க குள்ள வாத்து இவங்கதானா?" இதைக் கேட்ட வனமோகினி மாலதியை முறைத்தாள்.

"ஐயோ அக்கா மன்னிச்சிடுங்க, மலேஷியாவில் படிக்கறப்ப கேர்ள்ஸ் மத்தியில வசி சீனியர் ரொம்ப பேமஸ்,

அவள் அவள் இவர் பின்னாடி அலைய சீனியர் யாருக்குமே பிடிக்குடுத்ததே இல்லை. கல கலனு அவர் இருக்கற இடமே ஆர்ப்பாட்டமாய் இருக்கும். அப்போதான் அடிக்கடி அவர் ஸ்கூல் லைப் பத்தி சொல்லுவாரு."

"அவர அப்படி அறந்தவால் சீனியர்ரா மாத்தின அவரோட குள்ள வாத்தைப் பற்றி டெய்லி சொல்லிக்கிட்டே இருப்பாரு.
சும்மாவே எங்க சீனியர் ஹண்ட்ஸம், இதுல இப்படி கலாட்டாப் பண்ணா எந்த பொண்ணுக்குத்தான் புடிக்காம போகும்னு சொல்லுங்க?

ஆனா வசி சீனியர் எந்த பொண்ணுகிட்டயும் ரொம்ப வெச்சுக்க மாட்டாரு. யாராச்சும் போரொபோஸ் பண்ணாக் கூட சிரிச்சுக் கிட்டே நழுவிடுவாரு.ரொம்ப நெருக்கமானவங்களுக்குக் மட்டும்தான் உங்க லவ் ஸ்டோரி தெரியும். "

"வெரி சாரி அக்கா, நீங்க அவர விட்டு போனதுக்கு நாங்க ரொம்ப பீல் பண்ணோம். உங்க மேலே கோவம் கூட வந்துச்சு. பட் இப்ப உங்கள இங்க அவரோட வைவ்ப் பா பார்க்கறப்போ ரொம்ப ஹாப்பியா இருக்கு
" மாலதி கண் கலங்கினாள்.

வனமோகினி திருதிருனு விழித்தாள்.ஒரு பக்கம் ஜொள்ளு விட்டபடி கதிர், மறுபக்கம் கல கலனு வெள்ளிக் காசை இறைச்சாப்ல பேசுற மாலதி. இவர்களிடையே அசடு வழிந்தபடி நின்றுக் கொண்டிருந்த வசீகரன்.
பின் வசியே தொடர்ந்தான்,

"சாரி செல்லம், இவங்க என் ஜுனியர்ஸ். மலேசியாவில் படிச்ச அப்போ பழக்கம்.

வாய் தான் கொஞ்சம் நீளமே ஒழிய நல்ல புள்ளைங்க.என் மேரேஜ்க்காக வந்திருக்காங்க.
இது மாலதி, இவன் கதிர் "என்று அவர்களை அறிமுகப்படுத்தினான்.வனியும் சிநேகமாய் புன்னகையித்தாள்.

"நீங்க பேசிட்டு இருங்க, நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன் "வனி பேசியவாறே கிச்சனுக்குள் சென்றாள்.
அவள் தலை மறைந்ததும், மாலதி வசியின் காதைக் கடித்தாள், "சீனியர் உங்க வாத்து அறந்தவாலு அது இதுன்னு சொன்னிங்க, பார்த்தால் அப்பாவி மாறி இல்ல இருக்காங்க." பார்த்த மாத்திரத்தில் வனியை அவளுக்கு பிடித்துவிட்டது.

வசி மனதுக்குள், "அவள் அப்பாவி இல்ல பெண்ணே, உலக மகா கேடி, மக்கு ஜுனியர் உனக்கு எங்கே இது தெரிய போகுது " என்று பெருமூச்சு விட்டான். கையில் சுவையான பானத்துடன் வனமோகினி அவர்களை எதிர்க் கொண்டாள்.லெமன் கிராஸ் தட்டி போட்டு, கொஞ்சம் புதினா இலைகளை சேர்த்து, லெமன் சாறு பிழிந்து சோடாவுடன் கலந்து ஐஸ் துண்டங்களை வாகாய் அதில் சேர்த்து துளி உப்பும் கலந்து செய்த அந்த பானம் பயணத்தினால் களைத்திருந்த மாலதி கதிருக்கு தொண்டையில் அமிர்தம் போல இறங்கியது.

"வாவ் அக்கா ஜுஸ் சூப்பர் கா, வித்தியாசமான சுவையோட ஜோரா இருக்குக்கா " மாலதி மனம் திறந்து பாராட்டினாள்.

"இது என்ன பிரமாதம் மதி, நெட் ல இதுமாதிரி ரெசெபிஸ் நிறைய இருக்கும், அதுல கத்துக்கிட்டதுதான் " மனதில் எந்த விகல்பமும் இல்லாமல் வனமோகினி கூற மாலதி அசந்து விட்டாள்.

"வசி சீனியர் சொன்ன மாதிரியே இருக்கீங்க அக்கா " மாலதி கூற வனி புன்னகையித்தாள்.
இவர்கள் முன் வசியிடம் பாராமுகம் காட்டுவது சரியில்லையே. எனவே அவர்கள் அங்கு இருந்த வரைக்கும் வனி அவர்களை நன்கு கவனித்தாள்.இவர்கள் புண்ணியத்தில் வசிக்கும் வனமோகினி கையால் சமைத்த உணவுகளை உண்ணும் வாய்ப்பும் கிட்டியது.

அவனுடைய அறந்தவால் வாத்து எப்படி இவ்வளவு ருசியாய் சமைக்க கத்துக் கொண்டிருந்தாள் என்று எண்ணி வியக்கும்படி வனியின் கைப்பக்குவம் இருந்தது.தனக்கு தெரிந்தவள் இன்னும் என்ன என்ன வித்தைகளை கற்று வைத்திருக்காளோ என்று வசி தள்ளி நின்று வனியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். வனியை தவறாய் சைட் அடித்தற்காய் கதிர் அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.அவர்கள் அங்கிருந்தவரை வனி வசியோடு இயல்பாவே பேசினாள். ஜோக் சொல்லி சிரித்தாள். வசிக்கே இது தன் மனைவிதானானு சந்தேகமே வந்துவிட்டது. சிறு சிறு பரிசுகளோடு கதிர் மாலதி இவர்களிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டனர்.

-தொடரும் -
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN