மூங்கில் நிலா -12

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இதற்கும் மேல் இந்த கண்ணாமூச்சியாட்டம் வசிக்கு தாங்கவில்லைதான். சலனமே இல்லாமல் வளைய வருவது வனமோகினிக்கு எளிதாய் இருப்பது போல வசியால் இருக்க முடியவில்லையே. எப்படி முடியும்? சதா எதாவது சேட்டைகள் பண்ணிக் கொண்டிருப்பது வனியின் DNA பாட்டேர்ன் ஆச்சே. அதோடு அவள் சமையல், வீட்டை கவனிக்கும் பாங்கு அனைத்தும் வசியை கட்டிப் போட்டது.

அவனுக்கு தெரிந்த வனி பெண் வரிசையில் இயல்பாய் சேர்த்து கொள்ள முடியாதவள். நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் வனி.மருந்துக்கும் வெட்கம் எட்டிப் பார்க்காத வனி, வீட்டு வேலைகள், சமையல் எதுவும் கருத்தாய் கற்றுக் கொள்ளாத வனி இப்படிதான் அவனுக்கு அவள் நேற்றுவரை தெரியும். இன்று கதையே வேறு அல்லவா? காதலை பிறகு கடையேற்றி விடலாம். இருக்கும் நட்பை இறுக்கி விட்டால்தானே தன் வனமோகினி தன் வசம் வருவாள். வசிக்கு நன்கு தெரியும் காதலை விட நட்பை உயிர் போல சுவாசிப்பவளாயிற்றே வனமோகினி. நேரத்தை கடத்தாமல் வசி காரியத்தில் இறங்கினான்.

வேலை முடிந்து வீடு வந்தவன், வனியை தேடி தோட்டத்திற்கு சென்றான். வசி அம்மா நட்டு வைத்து போயிருந்த ரோஜாக்கள் மலர்ந்து மனம் பரப்பிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு ரோஜாக்களாய் மென்மையாக தொட்டுப் பார்த்து பார்த்து வனி இரசித்துக்கொண்டிருந்தாள். மலர்களை வேர் வரை உற்று உற்று பார்த்து ரசிப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.இறைவனின் படைப்புகளை விந்தை போல வனி வேறு கோணத்தில் பார்ப்பாள், இரசிப்பாள். அதை தான் அப்பொழுதும் செய்துகொண்டிருந்தாள்.

ஓசை படாமல் அவள் அருகில் வந்தவன் "போங்"என்று சத்தம் எழுப்பினான். திடீர் சத்தத்தினால் மிரண்ட வனமோகினி தடுமாறி வசி மேல் விழுந்தாள்.அவளை தாங்கிக் கொள்ள முயன்ற வசியும் கை வழுக்கி வனியின் பாரம் தாங்காமல் மண்ணில் சரிந்தான்.
"அவ்வ்வ் அம்மா வலிக்குதே !ஏன்டா எருமை, எந்த நேரத்தில் பொறந்து தொலைச்சே? இப்படியா காதுல வந்து கத்துவே? கோவத்தில் வனி மூக்கு சிவந்து விட்டது.

கீழே விழுந்ததில் வனி கையில் லேசாய் சிராய்ப்பு வேற . அந்த எரிச்சல் வேற அவளுக்கு மண்டைக்கு ஏறியது.
"ஏண்டி குண்டாம்மா எந்த கடையிலடி அரிசி வாங்கி திங்கற? இந்த கனம் கணக்குக்குற? விழாம புடிக்கலாம் னு பார்த்தால், இந்த சிங்கத்தையே சாட்சிட்டியேடி ராட்சசி " பதிலுக்கு வசியும் வனியை சீண்டினான்.

"கிராதகா நீ என் காதுல கத்தாம இருந்தா நா ஏன் உம்மேல விழுந்து வைக்கிறேன்? என் உசுர வாங்குறதே உம் பொழப்பா போச்சு "வனியும் மல்லுக்கு நின்றாள். சண்டைக் கோழி போல சிலுர்த்து நிற்பவளைப் பார்த்து வசிக்கு சிரிப்பு வந்து விட்டது.சிரித்தால் குதறி எடுத்துவிடுவாள் என்று அவனுக்கே தெரியும். எதுவும் பேசாமல் வனி கையில் சிராய்ப்பு ஏற்பட்ட இடத்தைப் பார்த்தான்.

"சோரி செல்லம், நா சும்மா விளையாட்டுக்கு பண்ணேன், இப்படி ஆயிடுச்சு. வா மருந்து போட்டு விடறேன் " வசி சொல்லிக்கொண்டே
வனியின் கைப்பற்றி அழைத்துச் சென்றான்.காயத்தை அழகாய் துடைத்து வனிக்கு அதிகம் எரிச்சலில்லாமல் மருந்தும் பூசி விட்டான்.சண்டைக் கோழி இன்னும் சிலிர்த்துக் கொண்டுதான் நின்றது.

"என்னடா கண்ணா இன்னும் மாமா மேலே உனக்கு கோவம் போகலையா? தெரியாமதானே செஞ்சேன். மன்னிச்சிக்கோடி பட்டுக் குட்டி"ஆறடி உயர ஆண்மகன் வனி முன் சிறுப்பிள்ளைப் போல கெஞ்சினான்.வனிக்குமே அவன் போக்கு வித்தியாசமாய் பட்டது.
எப்போ எப்படி இந்த சிடுமூஞ்சி சிங்காரம் இப்படி மாறிச்சுனு யோசிக்க ஆரம்பித்தாள்.

வனியின் கைகளைப் பற்றிக் கொண்டு,
"வேணிம்மா நான் அப்படி அடாவடியா உனக்குத் தாலி கட்டினது தப்புதான். உம் மனசுல என்ன இருக்கும்னு கூட தெரிஞ்சிக்காம ஏதோ ஒரு கோவத்தில் பண்ணிடேன்.
நான் இப்போ உங்கிட்ட காதல யாசிக்க வரல.மனைவியா என்கூட குடும்பம் நடத்தக் கூட சொல்லல.பட், எனக்கு நீ எப்படி நம்ப ஸ்கூல்டைம் ல இருந்தோமோ அப்படி இருந்தா போதும்.அதே மாதிரி பாசம், நட்புனு என்னோட பெஸ்ட் பிரண்ட்டா இரு. இயல்பா இரு.இது உன் வீடு வனி.உனக்கு பிடிச்ச மாதிரி இரு. இட்ஸ் மை ஹம்பல் ரிக்குவெஸ்ட் " மென்மையாக வனியின் கையை அழுத்தியவாறு கூறினான்.

வனிக்குமே நடந்தவைகளை ஜீரணிக்க அவகாசம் தேவைப்பட்டது.வசியின் வார்த்தைகளுக்கு மதிப்பு குடுப்பது போல சரியென தலையாட்டினாள். அதுவே வசிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.எளிமையான இரவு உணவோடு அந்த நாள் நிறைவுப் பெற்றது.நீண்ட நாட்களுக்கு பிறகு வனி நிம்மதியாய் உறங்கினாள்.

மறுநாளிலிருந்து வசி வனியை நெருங்கும் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டான்.காலையிலே "டேய் கண்ணா இந்த டைய கட்டி விடறயா? இன்னிக்கு பிஸ்னஸ் கான்பரன்ஸ் இருக்குடா, வெளி நாட்டு ஒப்பந்தம் வேற.ஸ்மார்ட்டா போகணும்ல. ப்ளீஸ்டா கட்டி விடறயா? வசி செல்லமாய் கெஞ்ச வனிக்கு ஸ்கூல் டைம் வசியைப் பார்ப்பது போல இருந்தது.

அவன்தான் அப்போ அவளை பொண்ணாவே பார்த்ததே இல்லையே. அதனாலே அவளை செல்லமாய் ஆண்பிள்ளைப் போல டா போட்டு விளிப்பதே வசியின் வழக்கம். எதாவது அவளிடம் காரியம் சாதிக்க வேண்டியிருந்தால் வசி "டேய் கண்ணா கண்ணானு " சொல்லியே வனியை மடக்கிடுவான். அவன் அப்படி கூப்பிடுவது வனிக்கு குஷியாகிவிடும். ரொம்ப ஸ்பெஷல் மாதிரி உணருவாள். கையில் அவன் தந்த மெரூன் கலர் ஜாகுவார்ட் டையை வாங்கியவள்,


"ஏன்டா கழுதை வயசாச்சு, இன்னுமா நீ டை கட்டிக்க கத்துக்கல? Omg!"வனி வசியை கேட்டாள்.
"ஹ்ம்ம்ம், நான் கத்துக்கவே இல்லடா கண்ணா.நீ தானே எனக்கு எப்பவும் கட்டி விடுவே. அதுக்கு அப்புறம் நான் டை கட்டிக்கறது ரொம்ப குறைவு. ரெடிமேட் டை இருக்கும். பட் நீ கட்டி விடற மாதிரி இல்லையே "வசி அப்பாவியாய் சொல்ல வனி சிரித்து விட்டாள்.

"நல்லா சாக்கு சொல்ல கத்துக்கிட்ட வசி "சிரித்துக் கொண்டே வசியின் சட்டை காலரை சரி செய்து டையை கட்டி விடத் தொடங்கினாள். அவள் உயரத்துக்கு ஏற்றவாறு அந்த வளர்ந்து கெட்டவன் குனிந்து நின்றான்.பல வருடங்களுக்கு பிறகு அவன் அருகாமை வனியை ஏதோ செய்தது. அவன் அணிந்திருந்த பெர்பியூம் வாசனையை மீறி அவன் ஆண் வாசனையை முதல் முதலில் மிக அருகினில் உணர்ந்தாள். பள்ளி பருவத்தில் அரும்பு மீசையுடன் அலைந்தவன், இன்று 30 வயது ஆண்மகனாய் முழுமை பெற்றல்லவா நிற்கிறான்.

பெண்களைக் கண்டாலே பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் வசி இப்பொழுது எவ்வளவு மாறி விட்டான்.அவனை இப்பொழுது பார்த்தால் அவளுக்கல்லவா வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கின்றது? தன் பெரிய விழிகளை மலர்த்தி வசியை தலை முதல் கால் வரை இரசித்தாள்.வசியம் செய்யும் அவன் வசீகர தோற்றம் தெரிந்துதான் இவன் பெற்றோர்கள் இவனுக்கு வசீகரன் என்று பெயர் வைத்தார்களோ? வனியின் பார்வையை உணர்ந்தவன் போல "என்னடா அப்படி முழுங்கற மாதிரி பார்க்கிற? மாமா அம்புட்டு அழகா இருக்கேனா என்ன? வசி மோகமாய் கண்ணடித்தான்.

ஐயோ கண்டுப் பிடிச்சிட்டானேனு வனிக்கு வெட்கமாய் போயிற்று. மழுப்பும் விதமாய்,
"அதெல்லாம் இல்லையாம், எத தின்னு நீ இப்படி நெடுமரமாய் வளர்ந்து நிக்கிறேன்னு பார்த்துட்டு இருந்தேன்.உடனே ஓவர் பீல் ஆயிடாதே, டைம்கு கிளம்பி ஆபிஸ்க்கு போடா "அப்படியே வனி எஸ்கேப் ஆயிட்டாள்.

வசியும் சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டான்.வனியும் பூவேலிக்கு கிளம்பி விட்டாள். வசியுடன் இயல்பாய் பழக ஆரம்பித்தலிருந்து வனி முன்னத்தை விட இன்னும் மகிழ்ச்சியாய் உலா வந்தாள். வித விதமாய் வித்தியாசமாய் நிறைய பூக்கூடைகளும் பொக்கேகளும் செய்ய ஆரம்பித்தாள். கூடவே மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெய்களும் விற்பனைக்கு வைத்தாள். பல சமயங்களில் வேலை முடிந்து தளர்ந்து வரும் வசிக்கு அவள் கைப் பட தயாரித்த 'essential oil' குளியல் தயார் செய்து வைப்பாள்.
வாசனை தைலம் சேர்த்த சூடுநீரில் குளிக்கும் வசிக்கு அசதியெல்லாம் பறந்து போய்விடும். அதை வனியிடமே நிறைய முறை கூறவும் செய்திருக்கிறான்.

வனியும் தூக்கத்தில் உளறுவது பெருமளவில் குறைந்திருந்தது.அன்று ஞாயிற்றுக்கிழமை.வனிக்கு வசியின் தேயிலை எஸ்டேட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் போல இருந்தது.வசியும் சந்தோசமாய் ஒத்துக்கொண்டான்.
"வா வா இப்பவாச்சும் நம்ப பேக்ட்ரிய பார்க்கணும்னு தோணுச்சே உனக்கு"வசி வனியை கூட்டிக் கொண்டு ஜீப்பில் தேயிலை எஸ்ட்டேட்க்கு பயணமானார்கள்.

குளு குளுவென காற்றும் காலைப் பனியும் வனிக்கு சுகமாய் இருந்தது. ஆழ மூச்செடுத்து சுவாசித்தவள் இயற்கை அழகில் மனம் கிறங்கித்தான் போனாள். "வசி இந்த பச்சை பூமி எவ்ளோ அழகாயிருக்கு பாரேன். மனசே கொள்ளை போயிடுதே.வாழும் சொர்கம் இப்படித்தான் இருக்கும் போல "வனி உற்சாகமாய் பேசிக்கொண்டே வந்தாள்.

வசியும் கேட்டுக் கொண்டே வந்தான். 1000 பேர்கள் வேலை செய்யும் வசியின் தொழிற்சாலையை வனி அதிசயமாய் பார்த்தாள்.
வசியின் அயரா உழைப்பு அந்த தொழிற்சாலையில் நன்றாகவே தெரிந்தது.அன்று விடுமுறை யென்பதால் யாருமே அங்குயில்லை. வசி தேயிலை பறிப்பத்திலிருந்து அதை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் வரை உள்ள முறைகளை தெளிவாய் அவளுக்கு புரியும்படி அழகாய் விளக்கினான்.

"பரவாயில்லை வசி ரொம்பவே தேறிட்ட நீ, எப்படியெல்லாம் பேசுற நீ" வனி மெச்சுதலாய் கூற, வசி புன்னகையித்தான்.

"என் சேர்க்கை அப்படி, என்ன பண்றது?" வனியை நோக்கி கைக் காட்டினான்.

வனி "படவா என்னாலதான் நீ கெட்டுப் போனியா? "என கேட்க, வசி ஆமாம் என்பது போல தலையாட்டினான்.

"யெஸ் மை டியர் செல்லக்குட்டி, ஸ்கூல் டைம் நீ வாயடிக்கறத பார்த்துதானே நான் உன் பிரண்ட் ஆனேன், காலேஜ் டைம் கூட நான் ரிசெர்வேவ் டைப்தானே,உன்னை விட்டு போன அப்புறம் மலேஷியாக்கு படிக்க போனனேன்.அங்க பல தர மக்களோட பேசி பழக நான் மாறிப் போயிட்டேன் வனி. நீ பேசற மாதிரி பேசி பேசி அங்க யூனிவர்சிட்டில வசி சீனியர் னாலே ஜுனியர்ஸ்கு குஷி கெளம்பிடிடும்.அவ்ளோ பேமஸ்.என் குருவே நீதாண்டா கண்ணா " வசி சந்தோசமாய் சொல்ல வனி புன்னகையித்தாள். அவளும் தானே மாறிப் போனாள். வசீகரன் முன்பு இருந்ததைப் போலதானே வனி மெல்ல மெல்ல மாறிப்போனாள்.

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN