மூங்கில் நிலா -17

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறு நாள் ஒரு வித இறுக்கத்துடனே இருவருக்கும் விடிந்தது. வசி வனி முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான்.
வழக்கமான அவன் புன்சிரிப்பு கூட தொலைந்து விட்டிருந்தது. வசியின் இறுக்கம் வனிக்கு புரிந்தது. அவளே அவனோடு வலிந்து சென்று பேசலானாள்.

"மாமா இன்னிக்கு சண்டே, ரெண்டு பேருக்கும் ஓய்வு நாள்தானே, வாங்க பூவேலி போய்ட்டு வரலாம். ப்ளீஸ் எனக்காக வருவீங்கதானே " வனி அப்படி அழைக்கவும் மறுப்பு எதுவும் சொல்லாமல் வசி கிளம்பி விட்டான்.
அவனுக்கும் எங்கேயாவது சென்றால் தேவலாம் என்ற மனநிலைதானே அப்பொழுது.

பூவேலி வழக்கமான பசுமையோடு அவர்களை வரவேற்றது. தோட்டத்திற்கு நடக்கும் பாதை தவிர்த்து வசியின் கைகளைப் பிடித்து வனி கொஞ்சம் காட்டுப் பகுதி போல இருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றாள்.
இதுவரை வசி அங்கே சென்றது கிடையாது. சுற்றிலும் பார்வையை ஓட்டியவன், "டேய் எங்கடா என்ன கடத்திட்டு போக பார்க்குற? இந்த இடம் புதுசா இருக்கே, இங்க நீ என்னை கூட்டிக் கொண்டு வந்ததாய் கூட ஞாபகம் இல்லையே "வசி கேட்க வனி முறுவலித்தாள்.

"பேசாம வாங்க மாமா, வாழும் சொர்கம் இங்கதான் மாமா இருக்கு. நீங்க அத பார்க்கனும்ணு எனக்கு விருப்பம் மாமா " பேசியவாறே அவன் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்தாள்.

ஒரு இடத்தில் அவன் கண்களை துணி கொண்டு கட்டி விட்டாள்."என்னடா கண்ணா இது விளையாட்டு உனக்கு? என் மன நிலை தெரிஞ்சும் இப்படி விளையாடறியே?"வசி குரல் வருத்தமாய் ஒலிக்க, வனி அவனை கட்டிக் கொண்டாள்.

"ப்ளீஸ் மாமா எனக்காக, நான் உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்.என் கூடவே வாங்க " வனி வசியை பற்றிக் கொண்டே நடந்தாள்.
அதற்கு மேல் பேசாமல் வசி நடக்கலானான்.கொஞ்சம் மேடு போல ஏறி, ஏதோ தொங்கு பாலத்துல நடப்பது போல இருந்தது வசிக்கு.
மெல்ல வனி வசியின் கண் கட்டைப் பிரித்தாள்.கண்களை கசக்கி பார்வையை நேராக்கியவனுக்கு எதிரில் ஒரு அழகிய மூங்கில் வீடு இருந்தது.

அது ஒரு மர வீடு. ஓங்கி அடர்ந்து வளர்ந்திருந்த அரச மர கிளையில் ஒய்யாரமாய் அமைந்திருந்த வீடு அது. சுற்றிலும் மஞ்சள் பல்பு விளக்குகள் கண் சிமிட்டிய படி ஜொலிக்க, அந்த மர வீடு வசிக்குள் ஏதோ ஒரு உணர்வை உண்டு பண்ணியது.

"உள்ளே வாங்க மாமா.. இது உங்க வீடு. உங்க கல்யாணதிற்கு நான் ரெடி பண்ணி வெச்ச உயிர் உள்ள ஒரு பரிசு, அப்போது அத குடுக்க முடியல, அதான் நம்ம கல்யாணமமா மாறிடுச்சே.இப்போ இதற்கு அவசியம் வந்திருக்குணு எனக்கு தோணுச்சு. அதான் அழைச்சிட்டு வந்தேன்.நீங்க போய் உள்ளே பாருங்க மாமா. நான் இதோ வந்துடறேன் "வசியை தனியே அங்கேயே விட்டு விட்டு வனி அகன்றாள்.

ஏதோ ஒன்று வசியம் செய்வது போல, ஏதோ ஒரு பழகிய வாசனை தன்னை பின் தொடர்வதைப் போல வசி உணர்ந்தான்.
2 அறைகளும், சின்னதாய் ஹாலும், கிட்ச்சனும் பார்க்கவே அழகாய் இருந்தது அந்த வீடு. முதல் அறை படுக்கை அறைப் போல இருந்தது. இரண்டாவது அறையில் கால் வைத்தவன் ஸ்தம்பித்து நின்று விட்டான். நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தக அலமாரிகள் இரண்டு ஓரங்களில் நிற்க நடுவில் ஆளுயர தங்கப் ப்ரேமில் சிரித்தபடி நின்றிருந்தது அவனுடைய தாயாரும் அவனுமே.

அது அவன் அண்ணா கல்யாணத்தில் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட படம். இங்கே எப்படி? வசி புரியாமல் குழம்பினான்.
பின்னாலிருந்து காலடி சத்தம் கேட்டு திரும்பியவன் , வனி நின்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தான். "இதெல்லாம் என்னடா கண்ணா.. ஒன்னும் புரியலடி"வசி கேட்க,

வனி "மாமா உங்க அம்மா இங்க இருக்காங்க. உங்களுக்காக இருக்காங்க.
அவங்க எங்கயும் போகவே இல்ல மாமா.இந்த அரச மரம் அம்மா நட்டது.என்னோட கண்ணம்மா அத்தை நட்டது மாமா
"வனி கூற வசி அதிர்ந்தான்.

"என்ன சொல்றே வனி? "


"இங்க நீங்கள் இருந்த அப்போ, தாத்தா நர்சரிக்கு அத்தை எப்பவும் வருவாங்க. நெறைய செடிகள் நம்ம கடையிலதானே வாங்குவாங்க.அப்போ எனக்கும் அவங்களுக்கும் நல்ல பழக்கம் மாமா.
பெண் பிள்ளை இல்லைணு என்னை ரொம்ப கொஞ்சுவாங்க.ஓரளவு அந்த வயசில உங்கள நெறைய தெரிஞ்சிக்க அத்தைதான் காரணம். அப்படி அவங்க பர்த்டே அப்போதுதான் நான் தான் ஒரு மரம் நட்டு வைங்க அத்தை ணு கேட்டுக்கிட்டேன் "

"அவங்க அரச மரம் நடணும் சொன்னாங்க. தாய் தன் மூச்சை பிள்ளைக்கூட பகிரற மாதிரி அரச மரம் அதிக அளவில் பிராண வாயுவை நமக்காக தருது இல்லையா, அது அந்த தாயே அந்த பிள்ளைக் கூட இருக்கறதுக்கு சமம்ணு சொன்னாங்க "

"அப்போ அப்போ இந்த மரத்தை வந்து பார்ப்பாங்க. நாங்க நெறைய கதைக்கள் பேசிய இடம் இதுணு கூட சொல்லலாம். அத்தை இறந்திட்ட பிறகு தான், அவங்க நினைவா இதை உங்களுக்கு தரலாம்ணு தயார் பண்ணி வெச்சேன்.
அந்த புத்தகங்கள் எல்லாமே உங்கள் அம்மாவோட மாமா. மொத்தமா நீங்க சென்னை க்கு கிளம்பரப்ப அவங்க எனக்கு பரிசா குடுத்தது மாமா "
வனி சொல்ல வசி ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான்.

"யாருமே அம்மாவுக்கு செய்ய முடியாத ஒரு நினைவு பரிசை நீ தந்திருக்க செல்லம்.

லூசு மாதிரி மரம் காடுனு நீ அலையறது பார்த்து நானே உன்னை கிண்டலாய் நினைச்சது உண்டு.பட் உன்னோட இந்த நூதன இரசனைகள் என் அம்மாவை நான் திரும்ப அடைஞ்சிட்ட மாதிரி உணர வைக்குது.
ரொம்பவே நன்றி செல்லம் "வனியின் கன்னத்தைப் பற்றி முத்தங்களைப் பதித்தான்.

"இனிமேல் குடிக்க மாட்டிங்க தானே மாமா? அழுவ மாட்டிங்க தானே? "குழந்தைப் போல கேட்டவளை,

"இல்லடா தங்கம், இல்லவே இல்லை, அழுவ கூட மாட்டேன் . அம்மா தான் நம்ப கூடவே இருக்காங்களே. அப்புறம் நான் ஏன் அழுவறேன்."

"அப்போ இது
"வனி வசி கண்களை நோக்கி கை நீட்ட,

"அது.. அது கண்ணு வேர்க்குது கண்ணா " சொல்லி விட்டு சிரித்தான்.

"அய்யோடா.. இப்போதான் என் ராசா முகத்துல சிரிப்பே வருது.. வாங்க இன்னிக்கு இங்கயே நாம பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம். ரொம்பவே பசிக்குது மாமா"

"ஹ்ம்ம்ம் எனக்கும் பசிக்குது பேபி, ஆனால் நாம வெறும் கையை தானே வீசிட்டு வந்தோம்?
"
வனி குறும்பாய் சிரித்தாள்.

"இல்லையாம் வணிமா அவள் மாமாவுக்கு தோசை, சட்னி, டீ எல்லாமே செஞ்சி தருவாளாம் " வாசலில் இருந்த அடுக்கை சுட்டிக் காட்டினாள்.

அதில் தோசை மாவு , டீ தூள், இதர உணவு பொருட் களும் இருந்தன. நெய் விட்டு முறுகலாய் நான்கு தோசைகளும் தொட்டுக்க கடலை சட்னியும், சுட சுட டீயும் நொடிக்குள் தயார் செய்து விட்டாள். வசியை அமர வைத்து ஒவ்வொரு தோசையாய் ஊட்டியும் விட்டாள்.வசிக்கு தன் தாயை நேரில் பார்ப்பது போல இருந்தது. இவளை இழக்க நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்னு அவனுக்கு அப்பொழுது விளங்கியது. தான் அவளை சரி செய்ய முனைந்தால், அவள் தன்னை அல்லவா மீட்டு எடுத்து விட்டாள்.தன் வலிகளுக்கு கூட அவள் அவன் புறம் சாய வில்லை. அவனல்லவா அவளை தஞ்சம் அடைந்திருக்கிறான்.
வசிக்கு வனியை பார்க்கவே பெருமையாய் இருந்தது.மனிதன் செய்ய தவறிய விஷயங்களை அவளுடைய மரங்கள் அல்லவா அவளை தாங்கிப் பிடிக்கும் வேர்களாய் நின்று சரி செய் திருக்கின்றன.

அம்மாவின் ஸ்பரிசங்களை அவளுடைய புத்தகங்களில் உணர்ந்தான்.அம்மா புத்தக புழுதான்.அவளை மாதிரியே ஒத்த இரசனைகள் அம்மாவிற்கும்.இயற்கையும் எழுத்தும் அல்லவா வனியையும் அவன் அம்மாவையும் இணைத்திருக்கின்றது.இந்த சிறு பொறிதானே வனமோகினி மேல் மையலுடைத்தது. வசி வனி மடியில் தலை சாய்ந்துக் கொண்டே அம்மாவின் புத்தகங்களைப் புரட்டினான்.அப்படியே சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டான். வனியும் அவன் தலைக் கோதியவாறே அவன் உறங்கும் அழகை இரசித்திருந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN