மூங்கில் நிலா -18

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூவேலி சென்று வந்ததிலிருந்து வசிக்குள் பெரும் மாற்றங்கள் உண்டாக்கின. அவன் அம்மா அவனோடு இருப்பதை போன்ற உணர்வே அவனது மாற்றங்களுக்கு காரணி ஆனது. வார இறுதியில் இருவரும் சென்னைச் சென்று வசியின் அப்பாவையும் அண்ணன் அண்ணியையும் கண்டு வந்தனர். வசி இறுக்கம் தளர்ந்து முன்பு போல அவன் அப்பாவுடன் பேச ஆரம்பித்தான்.

தன் இரு மகன்களும் இரு குணவதிகளை மருமகள்களாய் கொண்டு வந்ததில் பரமனுக்கு சந்தோசமே. இதை ஆசை தீர காண கண்ணம்மா இல்லாது போனது அவருக்கு வருத்தமே.கண்ணம்மா உயிரோடு இருந்திருந்தாலும் அவரின் தேர்வு வனமோகினியாய் இருந்திருக்கும் என்பதில் அவருக்கு சந்தேகமில்லை. வனியின் மர வீட்டைப் பற்றி வசி சிலாகித்து கூற பரமனுக்குமே அந்த வீட்டை சென்று காண ஆவல் வந்தது. வனியும் மகிழினியோடு ஒட்டிக் கொண்டு விட்டாள்.

ஒத்த வயது என்பதால் இருவரும் சகஜமாக பேசிக் கொண்டனர். சமையலறையில் கை வேலையாக வனி உதவி கொண்டிருக்க மகிழினிதான் பேச்சை ஆரம்பித்தாள்.

"சினிமால வர்ற மாதிரி ஆயிடுச்சுல உங்க கல்யாணம். இவளதான் காதலிக்கிறேன், கட்டி வைங்கனு சொன்னா மாமா மறுத்திடவா போறாரு? வீம்புக்கு அந்த ஷைலு தாலி கட்டின பிறகு இதை சொல்லியிருந்தா வசி நிலை என்ன ஆயிருக்கும்? நெனைச்சாலே பயமாயிருக்கு வனி "

"பெருசா என்ன ஆயிருக்கும் அக்கா, அந்த அலட்டல் இராணியை இந்த மங்கி கட்டியிருக்கும்,
அவ ஆடுறா ராமா ஆடுறானு சாட்டையை சொடுக்கியிருப்பா, இதுவும் ஜங் ஜங்குனு ஆடியிருக்கும்"
வனி குதித்து கொண்டே சீரியஸாக சொல்ல மகிழினி விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவ்வேளை அந்த பக்கம் வந்த வசி காதில் இது விழுந்து தொலைக்குமா, வகையாய் மாட்டிக் கொண்டாள் வனி.
வசி முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு,
"அண்ணி ஷைலுவாச்சும் ஆட்டிதான் படைப்பா அவளை கல்யாணம் பண்ணியிருந்தா ,
ஆனா இந்த கிரதாகி ஸ்கூல் டைம்ல இருந்தே அவள் கொடுமைகளை ஸ்டார்ட் பண்ணிட்டா."


"என் இடுப்பு இவளுக்கு நமீதா இடுப்பு மாதிரி தெரியும் போல, டெய்லி கிள்ளி கிள்ளி வெச்சிடுவா தெரியுமா? சிவந்து அங்க அங்க மார்க் இருக்கும். என் கற்புக்கு இவள்கிட்டே பாதுகாப்பே இல்லையாம். அவ்ளோ கொடுமை பண்ணுவா.
ஆனால் மூஞ்சிய மட்டும் பாருங்க நல்ல பிள்ளை மாதிரி வெச்சுக்குவா. நம்பிடாதீங்க இவளை. வெரி டான்ஜெராஸ் வாத்து இது "
வசி அவன் பங்கிற்கு வாரி விட,

மகிழினி நம்பமாட்டாமல் வனியை திரும்பி பார்க்க, அதற்குள் வனி கைகள் வசி இடுப்பை பதம் பாத்திருந்தன. "டேய் எதுக்குடா வாத்து னு சொன்ன? அறந்தவால் குரங்கே "வசி முடியை பற்றி இழுத்தாள்.

வசி அலறிக் கொண்டே "அண்ணி சொன்னேன் தானே, இது வனமோகினி இல்லை, வன இராசட்சினு ! பாருங்க உங்க கண்ணு முன்னுக்கே என்னை என்ன பன்றானு.என் இடுப்பு நாஸ்தி ஆச்சு.. பார்த்துட்டே இருக்கீங்க.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க !"
அலறிக் கொண்டே வசி சமையலறை மேஜை சுற்றி வட்டமடிக்க, வனி விடாமல் துரத்தினாள்.
மகிழினி எங்க வசியை காப்பாத்தறது.இவர்களின் சேட்டைகளை பார்த்து பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள் .
நீண்ட நாளுக்கு அப்புறம் மீண்ட அவளுடைய சிரிப்பு. கண்ணம்மாவின் மறைவுக்கு பின் வீடு மறந்த வசியின் வருகை, வனியின் சேட்டைகள், அந்த வீட்டின் பழைய சிரிப்பை மீட்டிருந்தது.
"போதும் போதும் ரெண்டு பேரும் நிறுத்துங்க, கொஞ்ச நேரத்தில் இவ்வளவு அமளி துமளினா, ஸ்கூல் டைம் ரெண்டு பேரும் எப்படி இருந்திருப்பிங்க.. அப்பாடா அசந்து போகுதே, வனா இதை நான் எதிர்ப்பார்க்கலயே " மகிழினி பெருமூச்சு விட,

"அதுக்கு தானே இப்ப லைவ்வா இந்த பிசாசு ஷோ காட்டினாள் அண்ணி. இப்படி அடியும் உதையுமாத்தான் இவள்கிட்ட காலம் தள்ளினேன் அண்ணி."
"ஏண்டி ஷைலு, ஒழுங்கா என்னை கட்டி இருந்திருக்கலாம், இப்படி காலத்துக்கும் உதை வாங்க வெச்சிடியேடி
"ஷைலுவையும்இழுத்துக் கொண்டான். வசி இராகம் போட்டு இழுக்க,

"என்ன பண்றது உன் கிரகம், இப்படி வந்து மாட்டிகிட்டியே மனோகரா"வனி பதில் கொடுக்க, மகிழினிக்கு வேடிக்கையாய் இருந்தது.நல்ல வேளை வீட்டில் ஆதிரனும் பரமனும் இல்லை. வெளி வேலையாய் சென்று திரும்பியவர்களிடம் இவர்களின் சேட்டைகளை சொல்லி சொல்லி மகிழினி சிரித்தாள்.

தன் பிள்ளைகள் சந்தோசமாகதான் இருக்கிறார்கள் என்ற நிறைவு இப்பொழுது பரமனுக்கு வந்திருந்தது.
அவருமே, "இப்படி பேசி பேசி ரெண்டு பேரும் ஜகா கொடுக்கலாம்னு பார்க்காதீங்க, அடுத்த வருஷம் ஆளுக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து குடுத்திடனும்.. எனக்கும் வயசு ஆகுது இல்லை, இந்த வண்டிங்க கூட மாறடிக்க முடியல " மருமகள்களுக்கு அன்பு கட்டளை விடுத்தார்.இது வரை வசி வாழ்க்கை, வியாபாரம் என பிள்ளைப் பேற்றை தள்ளி வைத்திருந்த ஆதிரன் - மகிழினி சம்மதமாய் தலையசைத்தனர்.

வசிக்கும் வனிக்கும் தான் திண்டாட்டம் ஆயிடுச்சு.வசி உடனே "தமையன் எவ்வழியோ அடியேனும் அவ்வழியே " என கூறியவாறு வனியை ஜாடையாய் பார்த்து கண்ணடித்தான். நல்ல வேளை, இந்த முறை வனி அடிக்கவில்லை, மும்முரமாய் சோற்தை வயிற்றுக்கு ஈந்துக்கொண்டிருந்தாள். வசியோடு மல்லு கட்டியதில் பாவம் அவளுக்கு பசி வந்து விட்டிருந்தது.நமக்கு சோறுதாம்ல முக்கியம். வசியை பிறகு கவனித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் உண்டு கொண்டிருந்தாள். அந்த தைரியத்தில்தான் நம்ப வசி உறுதி கொடுத்துக் கொண்டிருந்தது.

தனிமையில் அவளை சந்தித்தவன், மனதார நன்றி கூறினான்.
"நன்றி பேபி, நீ இல்லாட்டி, தனிமையில என்னையும் தொலைச்சிக்கிட்டு நம்ம குடும்பத்தையும் கஷ்டப்படுத்தி இருந்திருப்பேன்".


"என்னால தான் ஆதி அண்ணா அண்ணி குழந்தை கூட பெத்துக்கல. எனக்கு ஒரு லைவ்ப அமைச்சு தந்திட்டுத்தான் அவங்க லைப் அ தொடங்கனும்னே இருந்தாங்க. இப்ப சந்தோசமா அவங்க வாழ்க்கைய வாழ்வாங்க. நிஜமா நீ இருக்கற இடமே சந்தோச பூங்காவாதான் இருக்குது ", வனியின் கைகளைப் பற்றி இதழ் பதித்தான்.

"அவ்வ்வ்வ்... மாமா மீசை குத்திங் " கைகளை உருவிக் கொண்டு ஓடி விட்டாள்.
"ஷாப்பா இவளை வெச்சிகிட்டு, கொஞ்ச நேரம் கொஞ்ச விடறாளா? விலுக்குனு நழுவி ஓடிருவாளே.
டாடி உங்க ஆசைக்கு அவ்வ்வ்தான் போ ல
"வசி ஏக்கப் பெருமூச்சோடு நகர்ந்தான்.

ஒட்டியும் ஒட்டாமலும் வனி அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.
இவளை இப்படியே விட்டால் சரி வராது என வசிக்கு தோன்ற, ஊட்டிக்கு திரும்பியதும் வனியின் அறையை காலி செய்து, அவள் பொருட்களை தன் படுக்கையறைக்கு மாற்றிவிட்டான்.வனி கேள்வி கேட்டால், பதில் சொல்லவா அவனுக்கு தெரியாது.
வனி பொன்னியை பார்க்க சென்றிருந்த சமயமாய் பார்த்து தன் வேலையை கச்சிதமாய் முடித்து விட்டான்.

வீடு திரும்பிய வனி, அறையில் தன் பொருட்கள் காணாதிருக்க கண்டு திகைத்தாள். அந்த அறையை வசி முழுவதுமாய் அவளும்கென மெடிடேஷன் அறையாகவே மாற்றிவிட்டான்.வசியை தேடி சென்றவள், அவன் ஹாயாக கிட்சனில் எதையோ கிண்டிக் கொண்டிருக்க , இடுப்பில் கை வைத்தவாறே முறைத்து நின்றாள். அவளை கண்டவன்,

"என்னடா கண்ணா மாமாவை தேடிட்டு இங்கே வந்திட்ட, என் சமையல் வாசனை அவ்ளோ தூரம் வரைக்குமா வீசுது "
என கேட்க,

"ஏன்டா என் திங்ஸ்லாம் உன் அறைக்கு மாத்தி வெச்சிருக்க. ஜாலியா நான் என் ரூம்ல இருக்கறது உனக்கு புடிக்கல தானே "கோவம் தெறிக்க வனி கேட்டாள்.

வசியோ அதை காதில் வாங்கிக்கவே இல்லை. கை பரோட்டா தட்டி எடுத்து மசாலா சேர்த்து சட்டியில் வதக்கிக் கொண்டிருந்தது.மசாலா பரோட்டா வனிக்கு பிடிக்கும்னு அவனுக்கு தெரியும். மலேசியாவில் தங்கி படிக்கும் பொழுது ஹாஸ்டலில் சமைக்கவும் கற்றுக் கொண்டவன், இங்கேயும் சில சமயங்களில் சமைப்பான் பொழுதுபோக்கு போல.

"முதலில் சாப்பாடு செல்லம், அப்புறம் உன் கேள்விக்கு பதில். உனக்கு புடிச்ச பரோட்டா , கேட்டாலும் இப்படி குளிருக்கு சுட சுட கிடைக்காது. வா வந்து சாப்பிடு. "வனியை அழைத்து மேஜை முன் அமர வைத்தவன் , அவனே பரிமாறினான்.
வாசனை ஜோராய் நாசியை கிள்ளிச் செல்ல, வனிக்கும் நல்ல பசிதான்.

இருந்தாலும் இறுக்கமாகவே உணவை தொடாதிருந்தாள்.அதை பார்த்த வசி, மெல்ல பரோட்டாவை வில்லையாய் பிய்த்து அவள் வாயருகே கொண்டு சென்றான்.
"வேணிமா உன் ஹெல்த் கண்டிஷன் எனக்கு நல்லாவே தெரியும், எத்தனையோ நைட் நீ

தூக்கத்தில் உளறுவே, சத்தம் கேட்டு நான் வந்து உன்னை அணைச்சிட்டேதான் தூங்குவேன்."

"வசி போயிடாதே போயிடாதேனு நீ அழுவறது, எனக்கு உயிரை பிச்சு எடுக்கற மாதிரி இருக்கும்.
பட் என்கூட சேர்ந்து நீ தூங்கன இரவுகளில் நீ அமைதியா தூங்கிடுவே.இத உங்க வீட்டுக்கு போன அப்பவும், மலேஷியா போன அப்பவும் தான் உணர்தேன்.
கொஞ்சம் கொஞ்சம் மா உன்னை சரி பண்ண இதான் வழினு உன் டாக்டர் கூட என்கிட்ட சொல்லியிருக்காங்க" பேசிக்கொண்டே வசி ஊட்டிவிட வனி சாப்பிட்டாள்.

"நம்ப ரூம்ல தூங்க உனக்கு எந்த ப்ரோப்லேமும் இல்லைதானே? " வசி மென்மையாய் கேட்க, வனி இல்லை என்பது போல தலையசைத்தாள்.அவளுக்குமே இந்த கனவுகளின் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்தி விட்டால் தேவலை என்றிருந்தது.
"தாங்ஸ் பேபி " அவள் முன்னுச்சியில் இதழ் பதித்து நகர்ந்தவனின் கைகளை பற்றினாள் வனி.

"தேங்க்ஸ் மாமா, பரோட்டா சூப்பர் " வனி கண்களில் கோவம் இல்லை. பசி அடங்கிய குழந்தையின் அமைதியே இருந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN