மூங்கில் நிலா -21(சுபம்)

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலோடு அவளை அணைத்தவன், அவள் காதருகே கிசுகிசுத்தான்.
"பேபி மழை தூறல் போடுது, இப்படியே இங்க இருந்தா ஜன்னி வந்தே செத்திடுவோம், கெளம்பு கெளம்பு "வசி துரிதப் படுத்த,

"Aik மழை, மாயலோகத்தில் மழை மாமா, ஜோரா இருக்குது பாருங்கள் "வனி வசி அணைப்பிலிருந்து விலகி மழை வசம் சாய்ந்தாள். துள்ளி துள்ளி புள்ளி மான் போல அவள் மழை நீரை கையில் ஏந்தி ஆட, அவனுக்குதான் திண்டாட்டம் ஆயிற்று.

"பேபி வந்திடு நல்ல புள்ளை தானே நீ "வசி அழைக்க அவள் அவனுக்கு போக்கு காட்டினாள்.
"போ மாமா ஸ்கூல் டைம் கூட என்னைய மழையில் நனைய விடமாட்டே. இழுத்துக்கிட்டு வந்திடுவ.
இப்போ பாரு இந்த மாதிரி மழையில் மலைல ஆடற சுகம் வருமா? நா வரல
"சின்ன பிள்ளைப் போல மழையோடு வனி விளையாடிக் கொண்டிருந்தாள்.

இவள் சரிபட்டு வரமாட்டாள் என்று வசிக்கு தோன்ற, பின்னாலிருந்து அவளை இறுக்கப் பற்றி தன் அணைப்பினில் நிறுத்தினான்.
"மக்கு மக்கு ஸ்கூல் டைம் உன் யூனிபோர்ம் வெள்ளை க
லர் தானே, மழைல நனைஞ்சு உடம்போடு ஒட்டிக்குமேனு கூட தோணாம நனைவ, பக்கத்தில் உன்னை மழை மோகினியா பார்த்திட்டு நா பட்ட அவஸ்த்தை உனக்கு எங்க தெரிய போகுது.
இதுல அந்த குண்டு சீனியர் வேறே உன்னை முழுங்குற மாரி பார்ப்பான். ஆண் பிள்ளை பார்வைக்கும் பெண் பிள்ளை பார்வைக்கும் வித்தியாசம் இருக்குடி.

அதுக்குதான் எந்த அவஸ்தையும் வேணாம்னு உன்ன நான் மழைல நனைய விட்டது இல்லை. இப்போ நனைஞ்சிக்கோ. நான் கூட இருக்கேன் உரிமை உள்ளவனாய்."வனியை கை வளைக்குள் வைத்துக் கொண்டே அவளோடு ஜோடி போட்டுக் கொண்டு வசியும் மழையில் நனைந்தபடி நடந்தான்.

கனத்து தூராமல் மழையும் இவர்களை வாழ்த்துவது போல தூறிக்கொண்டிருந்தது. ஒரு வாரம் இயற்கையோடு உல்லாசமாய் இருந்துவிட்டு ஊட்டி திரும்பினார்கள். முன்னேற்பாடாய் வசி அவர்களது முதலிரவை கூட தயார்ப்படுத்தி வைத்திருந்தது அந்த மர வீட்டில்தான். தன் தாயாரின் ஆசியோடு இல்லற வாழ்க்கையை தொடங்க வசி விரும்பியது வனிக்கும் சந்தோசமே.
லேசான ஒப்பனையில், பெர்கண்டி நிற சாரியில், தளர பின்னிய கூந்தலில் மல்லிகைச் சரம் மணக்க வசியை எதிர்கொண்டவளை காதலோடு அவன் கண்களும் எதிர்க்கொண்டன.

"மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ. எப்ப பாரு பெண்களே தான் விழனும் மா? கம் கம்" வனி கட்டிலில் அமர்ந்த படி கால்களை நீட்டி காட்ட, சட்டென அவள் காலடியில் மண்டியிட்டு அமரவும், வனி அதிர்ந்து போனாள்.
காலை உயர்த்த எத்தனித்தவளை தடுத்து, கையோடு கொண்டு வந்திருந்த வெள்ளி மெட்டியை அவள் கால் விரல்களில் அணிவித்தான்.

"அப்பாடா இப்போதான் கம்ப்ளீட் ஆச்சு. என்னதான் அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உனக்கு செய்ய வேண்டியதை சரியா செஞ்சுடுவேன் குட்டிமா "வசி கண்ணடிக்க, வனி அவன் கேசத்தை கலைத்து விட்டாள்.

"பேபி ஒரே ஒரு வாட்டி கண்ணன் மாதிரி மோகமாய் மாமாவை பாரேன், ப்ளீஸ் ப்ளீஸ் "
வசி கெஞ்ச,

"கண்ணன் மாதிரி என்ன, கன்னி மாதிரியே பார்க்கறேனே மாமா " மனதில் நிஜமான காதலோடு வசியை மோகமாய் பார்த்தாள் அந்த மோகினி.

அதற்கு மேலே மொழிகள் அங்கு ஊமையாகி போக, ஒளியும் தன்னை இருட்டித்து கொள்ள, வசி தன் வனமோகினியின் மூச்சுக் காற்றில் ஐக்கியமானஇல்லறம் எனும் நல்லறம் அங்கே இனிதாய் தொடங்க, இவர்களின் காதலுக்கு சாட்சியாய் பால் ஒளி வீசும் நிலாவில் நனைந்து நின்ற மூங்கில்கள் தென்றலோடு உரசி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டன.

வன மோகினியோடு வசீகரன் வாழ்வு இனிதாய் இயற்கையின் மடியில் கவிதைப் போல் ஆரம்பம் ஆகியது.
விதி இணைத்து பார்க்க விரும்பிய காதல் பட்டியலில் இவர்களும் இடம் பெற்று விட்ட மகிழ்ச்சியில் நானும் விடைப்பெறுகிறேன்.

நிஜத்தில் நடக்க சாத்தியம் இருக்கலாம், இல்லாமல் போகலாம், நடந்தால் இப்படி ஒர் இனிய உறவாக அமைய வேண்டும் என்ற விருப்பத்தில் எழுந்த கதை. நிறைவு செய்து விட்டேன். இதுவரை எங்களோடு பயணித்த அனைவருக்கும் எனது மன மார்ந்த நன்றிகள். தவறுகள் இருந்தால் மன்னித்து விடுங்கள். கதை பிடித்து இருந்தால் இரசித்து படியுங்கள்.

நன்றி *கணி*
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN