பாகம் 1

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெண்ணிற மூடுபனியில் அழகாகவே விடிந்தது டொரோந்தொ நகரின் காலைப்பொழுது. கனடாவின் பிரசித்திப் பெற்ற டொரோந்தொ நகரம் மக்களின் துரித நடவடிக்கைகளில் மெல்ல சோம்பல் முறித்து, காலை சூரியனின் தரிசனத்தில் தன்னை மெல்ல மெல்ல ஈடுப்படுத்திக்கொண்டது.

நகர சாலைவீதியில் குடைப்பிடித்தாற் போல் நிற்கும் மேபல் மரங்களின் அழகு மனதை கொள்ளை செய்வதாய், கலவையாய் மக்கள் கூட்டம் நகர மையப்பகுதியை மொய்த்திருக்க,எதிலும் மனம் இலயிக்காமல் தன் ஔடியை விரைந்து செழுத்தினாள் சிம்ரதி .

சிக்கென்ற சால்வாரில் செதுக்கி வைத்த சிற்பம் போல் இருக்கும் 25 வயது சிம்ரதி @ சிம்மி நகரில் பிரசித்திப்பெற்ற நகை வடிவமைப்பாளர்களில் ஒருத்தி. மிகவும் இரசனையோடு வித்தியாசமான முறைகளில் சிம்மி வரையும் டிசைன்கள் கன்னடிய தமிழ் இளம் பெண்களிடம் மிகவும் பிரபலம்.

அப்படி இவள் டிசைன்களில் மனதை பறிக்கொடுத்த பிரபல மாடல் அழகி மிஸ். சாராவை சந்திக்கவே சிம்மியிடம் இத்தனை வேகம். நகரின் முக்கிய இந்திய பிரமுகர்கள் கூடும் அந்த ஆடம்பர தங்கும் விடுதியின் பார்கிங் இடத்தில் இலாவகமாய் தன் ஔடியை சொருகிவிட்டு விடுதிக்குள் நுழைந்தாள்.

அப்சரா விலா என்று பித்தளை எழுத்துக்களில் பளபளத்த விடுதியின் பெயரைப் போலவே வாசலில் வரவேற்ற அப்சரஸ் சிலைகள் சிம்மியை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.பல இன மக்கள் கலந்து வாழும் கனடாவில் இந்தியர்களும் பெருமளவில் இருக்கத்தான் செய்கின்றனர்.இன மத பேதமின்றி மக்கள் ஒருமித்து வாழும் நாடுகளில் கனடாவும் ஒன்று.

விடுதியின் உள் அலங்காரத்தில் தமிழ் மணம் கவிழ்ந்தது.செயற்கை நீர் ஊற்றின் நடுவில் நாயகனாய் அமர்ந்திருந்த மரகத பிள்ளையார்,சுற்றிலும் வர்ண ஜாலங்கள் காட்டும் கிரிஸ்டல் விளக்குகளின் ஒளியில் அந்த இடமே சொர்கம் போல் இருந்தது. மெல்லிய வீணையின் நாதம் வேறு காற்றில் மிதந்து வந்து சிம்மியின் செவிகளை வருடியது.

இவள் தேடி வந்த சாரா இன்னும் வரவில்லை. நேரம் தவறுவது சிம்மிக்கு பிடிக்காதது. இருந்தாலும் ராஜீவ்காக இவளை பொறுத்துப்போகும்படி ஆகிவிட்டது.அவளின் பொறுமையை அதிகம் சோதிக்காமல் ஒயிலாக வந்து சேர்ந்த சாரா செயற்கை ஒப்பனையில் அழகாகவே இருந்தாள்.

அவள் பேச்சில் இழைந்த பணக்கார தோரணை சிம்மிக்கு பிடிக்கவில்லை.இருந்தாலும் பொறுமையை இழுத்துப் பிடித்து கொண்டு தான் கொண்டு வந்த நகை டிசைன்களை சாராவிற்கு காண்பித்தாள்.

"இந்த டிசைன் உங்களுக்கு பிடிச்சிருக்கா மிஸ்.சாரா?"இந்தியாவின் நூதன நகை வடிவமைப்பை கொண்ட மாதிரி வரைப்படத்தை சாராவின் பார்வைக்கு கொண்டு வந்தாள்.கழுத்தை சுற்றி கொடிப்போல் படர்ந்த நகையில் பூக்களும் சங்கும் இணைந்து நுனியில் மூன்று வைரங்கள் மின்னின.

"வாவ் இவ்வளவு அழகா இருக்கே சிம்மி,ரொம்ப அழகான டிசைன்.எனக்கு இதையே செஞ்சிடு.வெள்ளை அப்புறம் சிவப்பு வைரங்களை பதிச்சிடு.விலை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை" உற்சாகத்தில் சாரா கூறினாள்.

"பட்,ஐயாம் வொரி சாரி மிஸ்.சாரா,இது அபூர்வ இரக வைரங்கள்,இங்க கிடைக்கறது அரிது. நான் வேணும்னா ரூபிகளை பதிக்கட்டுமா?அதுவும் பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாய் இருக்கும் மிஸ் சாரா" சிம்மி தன் நிலையை சாராவிற்கு விளக்கினாள்.
சாராவின் தாமரை முகம் வாடிவிட்டது.

"உன்னால முடியாவிட்டால் எதுக்கு இப்படி டிசைன் பண்ணே? உன்ன நம்பி நான் வேற எங்கேயும் ஆர்டர் பண்ணுல"ஆத்திரத்தில் வந்தது வார்த்தைகள்."மிஸ் சாரா..." சிம்மியின் வார்த்தைகள் சாராவின் செவிகளை எட்டவில்லை போலும், அவள் கண்கள் வேறு எங்கோ அலைப்பாய்வதாய் இருந்தது.

"ஹாய் மிஸ்டர் அனிஷ்" கையை உயர்த்தி யாரையோ சாரா அழைத்தாள்.

"ஹெல்லோ மிஸ் சாரா" இவளை அழைத்தவாறே அந்த புதியவன் வந்து சேர்ந்தான்.சிம்மிக்கு மனதில் எரிச்சல் மண்டியது.
இவள் இன்னிக்கு நமக்கு பிஸ்னஸ் கொடுப்பாளா ? அந்த எண்ணமே அவள் மனதில் வளைய வந்தது.இந்த இலட்சணத்தில் புதிதாய் ஒரு நெடியவன் அருகில் வேறு.

சற்றே தன் பார்வையை உயர்த்தி அந்த புதியவனை நோக்கினாள். சராசரி இந்திய ஆண்மகனை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் உயரம்.கூர் நாசி. முகத்தில் இரண்டு நாள் சேவ் செய்யாத தாடி.தீர்க்கமான பார்வை.இறுகிய உதடுகள்.பணக்கார தோரணையும் அலட்சியமும் அவன் கண்களில்.ஏனோ அவனை சிம்மிக்கு பிடிக்கவே இல்லை.

"என்ன சாரா..இந்த பக்கம் உன் காற்று வீசுது" பார்வையால் சிம்மியை அளந்தவாறே சாராவை கேட்டான்.

"இந்த சிம்மிகிட்ட நகை டிசைன் பார்க்க வந்தேன் அனிஷ், பட் நா கேட்ட மாதிரி செய்ய முடியாதுனு சொல்லிட்டா" குரலில் கொஞ்சம் தேனை குழைத்து சாரா பேசினாள்.

"இந்த மாதிரி ஸ்மால் ஸ்கில் பிஸ்னஸ் பண்றவங்க இப்படிதான் செய்வாங்க.நீ ஆன்லைன்லஆர்டர் பண்ணிருக்கலாம். அலுங்காம குலுங்காம இந்நேரம் உன் நகை ரெடியாயிருக்கும்"சிம்மியை ஒரு ஏளன லுக் விட்டான் அனிஷ்.
சிம்மிக்கு ஆத்திரம் தலைக்கேறியது. இவன் முகத்தை உடைத்தால் என்ன? என்று எண்ணம் கூட தோன்றியது.இனியும் இந்த டீல் முடியாது என தோன்றவும், தன் பொருட்களை எடுத்துக்கொண்டு சிம்மி வெளியேறினாள்.

"என்ன திமிர் பார் இவளுக்கு,இந்த மாதிரி டிசைனர்ஸ் கூட டீலிங் வெச்சுக்காத சாரா" இலவச அறிவுரையை அனிஷ் சாராவிற்கு வழங்கினான்.அதுவும் சிம்மி காதில் எட்டவே செய்தது.
எல்லாம் இந்த ரஜீவ்னால வந்தது.இரு மவனே உன்னை வந்து கவனிச்சிக்கிறேன். மனதிற்குள் கணவனை அர்ச்சித்தாள்.

ரஜீவ் நகரின் பிரபல கிரிமினல் லாயர்.இவர்கள் திருமணமும் சமீபத்தில்தான் நடந்தேறியது.பால்ய வயது நண்பனே கணவனாய் கிடைத்தது சிம்மிக்கு கனவு போல் இருந்தது.அவளுடைய முதுகெலும்பாய் இருப்பவனே ரஜீவ்தான்.சுயமாய் இந்த ஜுவல்லரி டிசைனிங் கடைத் திறக்க வைத்தவனும் அவனே.சிம்மி எனும் பெண்ணின் வெற்றிகளுக்கு பல பாராட்டுகளுக்கு பின்னால் இருக்கும் ஒரே ஆண்மகன் ரஜீவ் மட்டும்தான்.

நகர்ந்து சென்ற நாட்களின் பரபரப்பில் அந்த நெடியவனை சிம்மி மறந்துவிட்டிருந்தாள்.அதே சமயம் சாராவின் நடவடிக்கையும் ரஜீவ் காதுகளுக்கு எட்டும்படி செய்திருந்தாள். சிறு புன்னகையுடன் அவளை எதிர்க்கொண்டவன் ,அழகாய் அவளை சமாதானப்படுத்தவும் செய்தான்.வார இறுதியில் நகரின் பெரும்புள்ளி தந்த உல்லாச இரவு விருந்தில் கலந்து கொள்ள ரஜீவ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அங்கே திரும்பவும் அந்த திமிர் பிடித்த அனீஷை சந்திப்போம் என்று சிம்மி நினைக்கவே இல்லை.
அந்த ஆடம்பர ஓட்டல் அவனுடையது என்பதும் ரஜீவ் வாயிலாக தெரிந்துக்கொண்டிருந்தாள். இடையில் தெரிந்த தொழில் தொடர்பு நண்பரோடு இணைந்த ரஜீவ் கூட்டத்தில் மறைந்து போனான். தனிமையில் விடுபட்ட சிம்ரதி,விருந்திற்கு வந்திருந்த மேல் தட்டு வர்கத்தினர் வீட்டு பெண்களின் ஆடை ஆபரணங்களை இரசித்துக் கொண்டிருந்தாள்.பல வித இரகங்களில் மின்னிய வைரங்களும் ரூபிகளும் லஸ்தர் விளக்குகளின் ஒளியில் வர்ணஜாலம் புரிந்து கொண்டிருந்தன.

இடையில் சிம்மியின் செவிகளில் திராவகம் ஊற்றுவது போல் ஒலித்தது அந்த குரல்.நண்பர்களுடன் ஒயிலாக வந்தவள் சாராவே.
"என்னசிம்மி, இங்க என்ன பண்ணிகிட்டுயிருக்க? ஒ உன் பிசினஸ்கே கஸ்டமர் தேடலாம்னு வந்தியா? இங்க உள்ளவங்க ஸ்டேட்டஸ் உனக்கு தெரியுமா? கோடிகளில் புரள்ரவங்க இங்க பல பேர் இருக்காங்க.இணையத்தில் வேண்டியதை வாங்கற வர்கம் இது.உனக்கு இதெல்லாம் தோது படாது சிம்மி", உதட்டில் ஏளன சுழிப்புடன் சாரா சிம்மியை சாடினாள்.

அருகில் அந்த வளர்ந்தவன் வேறு.அப்படியே அவள் கன்னத்தில் ஒன்று வைத்தால் என்னவென்று சிம்மிக்கு தோன்றியது. அவமானத்தால் குறுகிப்போனாள். என்றாலும் ரஜீவ்காக இந்த சாராவை பொறுத்துக்கொள்ளும்படி ஆயிற்று.அவளால் அவன் இமேஜ்க்கு பங்கம் வரக்கூடாது என்பதில் சிம்மி எப்பவும் கவனமாய் இருப்பவள்.

"ஹெல்லோ மிஸ்டர் அனிஷ்,நைஸ் டு மீட் யு மேன்,ஹை சாரா,மீட் மை வைப் சிம்ரதி ரஜீவ்" ரஜீவ் சிம்மியை அனிஷிற்கும் சாராவிற்கும் அறிமுகப்படுத்தினான்.அந்த நொடி சிறு அதிர்வு மின்னலென அனிஷ் கண்களில் தோன்றி மறைந்தது. சிம்ரதி அவனை கண்டு கொண்டதாய் தெரியவில்லை.

"என்னது உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? எங்கிட்ட சொல்லவே இல்லையே ரஜீவ் "சாரா அதிர்ச்சியுற்றாள்.

"பட்,ஏன் சிம்மியை செலக்ட் பண்ணிங்க,நா உங்கள ப்ரபோஸ் பண்ணேன் தானே ரஜீவ்"சாராவின் கண்களில் வன்மமும் ஏளனமும் தெரிந்தது.அனிஷ் முகத்திலோ எந்த சலனமும் இல்லை.

"வெல் சாரா,சிம்மி போன்ற அழகான தேவதை மனைவி மற்றும் உயிர்த்தோழியாய் கிடைக்க இந்த ரஜீவ்தான் லக்கி, எல்லோருக்கும் அது அமையாதுபெண்ணே .எனக்கு எல்லாமே சிம்மிதான்,கம் டார்லிங்"
அழகாய் அவள் கரம் பற்றி ரஜீவ் நடந்து செல்வதையே சாரா பார்த்தாள். சிம்மிக்கோ மனம் மகிழ்ச்சியாய் இருந்தது.

"தாங்ஸ் ரஜீவ்".மகிழ்வோடு அந்த இரவு முற்றுப்பெற்றது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN