பாகம் 13

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சற்றே சுருள் கேசம்,மாநிறம்,கன்னத்தில் குழியும் அண்ணன் தம்பிகள் அட்டகாசமாய் இருந்தனர்.அதற்குள் கிளம்பி வந்தவன் அவள் அருகில் வந்து"ஹேய் பொண்ணே அவங்க என் அண்ணா அனிஷ் அண்ட் என் தம்பி மித்ரன்,விளக்கம் போதுமா?மணியாச்சு கிளம்பு கிளம்பு".
விரைந்து கிளம்பியவர்கள் ஒட்டலை அடைந்தனர்.

ப்ரோம் நைட் ஆரம்பமாகியது.சிஸ்டத்தில் இசை கசிய மாணவர்கள் கலந்து ஆட ஆரம்பித்தனர்.அர்மியும் அரவிந்தனும் கூட்டதில் கலந்து ஆட ஆரம்பித்தனர்.ஆள் மாற்றி ஆள் ஆண் பெண் மாறி மாறி குதூகலமாய் ஆடிக்கொண்டிருக்க கடைசியில் அரவிந்தனும் அர்மிதாவும் ஜோடி சேர்ந்தனர்.

அவளுகேற்றவாறு இலாவகமாய் அவன் அசைவுகள் இருக்க,அவர்கள் கண்களில் ஒன்றில் ஒன்று கலக்க,உலகமே மறந்துவிட்டது இருவருக்கும். "ஒரு வார்த்தை, ஒரு பார்வை தந்தாலும் போதும் கண்ணா" எதோ ஒன்று அர்மிக்குள் நிகழ்ந்தது.நண்பர்கள் அனைவரும் ஆடுவதை நிறுத்திவிட்டு இவர்களின் நடனத்தை இரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இடையில் அரவிந்தன் மேல் ஆசை கொண்ட ஹீரா நடுவில் புக முயற்சித்தாள். ஆனால் அரவிந்தனின் நண்பர்கள் அவளை தடுத்து விட்டனர். வன்மம் அவமானம் ஹீராவைத் தாக்க, அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.விழா முடிந்து வீடு திரும்புகையில் அர்மிதா அரவிந்தனின் காரில் செல்லும்படி ஆகிவிட்டது. மீண்டும் இவனுடன் ஒரு பயணமா?மனதிற்குள் அதிர்ந்தாலும் அர்மிக்கு அரவிந்தன் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தது.

தன்னை போல் விஷமம் செய்பவன் அல்ல என்ற தெரிந்திருந்ததால் அவனுடன் ஹாஸ்டலுக்குச் செல்ல ஒத்துக்கொண்டாள்.அது மழைக் காலம் ஆதலால்,கார் ஓட்டலை விட்டு நகரும் பொழுதே தூற்றலுடன் மழை ஆரம்பமாகியது.சற்றைக்கெல்லாம் மழை வலுக்கவே,அர்மி உற்சாகமானாள்.கார் கதவோடு ஒட்டிக் கொண்டு கண்ணாடியில் பட்டுத் தெரிக்கும் மழை நீரை கண் மூடி ஏதோ தவம் செய்யும் தவசி போல் அர்மி ரசித்திருந்தாள்.

அவளை ஜாடையாக அரவிந்தன் இரசிக்க ஆரம்பித்தான். வாய் ஓயாமல் பேசும் வானரம் அர்மி,மழையில் மயங்குவது அவனுக்கு புதிதாய் இருந்தது.சாலையில் எங்கோ ஓரிரண்டு கார்களைத் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.சாலையோரமாய் தன் காரை நிறுத்தி விட்டு அரவிந்தன் யாருடனோ செல்லில் பேசிக்கொண்டிருக்க அர்மிதா காரை விட்டு இறங்கினாள். அவளுக்கு பிடித்த மழை,நனைந்தால் காதைப் பிடித்து திறுகும் தாய் இங்கு இல்லை.

அவளுடைய சுதந்திரம் தானாய் சிறகு விரித்துக்கொண்டது. கண்களை மூடி மழை நீரை அணு அணுவாய் அனுபவித்தாள்.ஒரு பத்து நிமிடம் மழை தந்த சுகத்தில் மனம் நிறைந்தவள், திரும்ப எத்தனிக்கையில் தன் அருகில் நின்ற அரவிந்தனைக் கண்டாள்.மழை, இரவில் வந்த மஞ்சள் நிலா,அருகில் பருவக்கொடியாய் அர்மிதா. அரவிந்தனுக்குள் எதோ ஒன்று நிகழ்ந்தது.

அவன் கரம் தன்னிச்சையாய் அர்மிதாவின் இடை வளைக்க,கண்களாலே அவளை ஆட அழைத்தான். மறுப்பேதும் சொல்லாத அர்மிதா அவனோடு இணைந்து ஆடலானாள்.யாருடனும் அர்மிதா எல்லை மீறியது இல்லை.ஏனோ அரவிந்தன் மேல் ஒரு வித ஈர்ப்பு, தன்னிலை மறந்தவளாய் அரவிந்தனை தடுத்து தன் இதழோடு அவன் இதழ் பதித்தாள்.

அரவிந்தன் அதிர்ந்தாலும்,அர்மிதாவின் முத்ததிற்கு பதிலளித்தான்.என்னதான் கனாடாவாசியென்றாலும் அர்மிதா தன் கலாச்சாரங்களை மீறியது இல்லை. அவளை நிலைக்குலைய செய்தவன் அரவிந்தன் ஒருவனே.அரவிந்தன் நிலையும் அதுவே.
சற்றைக்கெல்லாம் தன்னுணர்வு பெற்றவர்களாய் இருவரும் விலக,அர்மிதா காரை நோக்கி நடக்கலானாள். மழையும் வந்த வேலை முடிந்தது போல் நின்றுவிட்டிருந்தது. காரில் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.

அர்மிதாவிற்கோ எப்படி இவனை முத்தமிட்டோம் என்ற குழப்ப ரேகை முகத்தில் படர்ந்த வண்ணம் வாய் பேசாதிருந்தாள். அர்மியை ஹாஸ்டல் வாசலில் இறக்கி விட்டு அரவிந்தனின் கார் சிட்டென பறந்தது. அதற்கு பிறகு வந்த நாட்களில் இருவரின் மோதல்கள் குறைந்தது. மௌனத்துடன் அர்மி தலை குனிந்து செல்லவதும்,அதை கள்ளத்தனமாய் அரவிந்தன் இரசிப்பதும் வாடிக்கையாயிற்று

இதனால் வயிறு எரிந்தது என்னவோ ஹீராவிற்குத்தான்.சமயம் பார்த்து அர்மியை பழி வாங்க காத்திருந்தாள். அன்று கல்லூரி இறுதி நாள். இந்த நாளில்தான் அர்மி தன் மனதை அரவிந்தனுக்கு தெரிவுப்படுத்தக் காத்திருந்தாள். ஆனால் விதி அவளுக்கு வேறு மாதிரி வலைப்பின்னி வைத்திருந்ததை பாவம் அந்த பேதை அறியாள்.

அரவிந்தனும் அதே நிலையில் அர்மியை சந்திக்க கல்லூரி காண்டீனில் காத்திருக்க, சமயம் பார்த்து ஹீரா வந்து தொலைத்தாள்.
"ஹேய் அர்வின் இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க?. "
கேள்வியோடு அவன் எதிரில் அமர்ந்தவளை நோக்கி சினேகமாய் புன்னகையித்தான்.

"வெல் ஹீரா, நா அர்மிக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு நான் என் மனசுல உள்ளதை அவக்கிட்ட சொல்லப்போறேன். ஐயாம் இன் லவ் வித் ஹெர்."
ஹீரா முகம் கடுமையாகியது. "ஆர் யூ ஜோக்கிங் அர்வின்? அர்மி பத்தி தெரிஞ்சிருந்துமாய் அவ மேல் லவ் வருது சொல்ற? பெட்டுக்காக அவ என்ன வேணும்னாலும் செய்வா. இன்பெக்ட் இதுவும் பெட்டுக்காகதான் செஞ்சிருப்பா."
அரவிந்தன் மனம் சலனமுற்றது.எத்தனையோ தடவை அவளுடைய சேட்டைகளுக்கு பலியானவன் அவன் தானே. அவனுக்கு கோவம் தலைக்கேறியது.

அர்மிதாவைத் தேடி அவள் வகுப்பறைக்கே சென்று விட்டான். அப்பொழுது அவன் கேட்ட குரல் அவனை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.
"செம்ம ஆளுப்பா நீ,அந்த அரவிந்தனையே மடக்கிட்டியே,"இந்த நாங்க கட்டின பெட் பணம் மீனா தன் பர்சிலிருந்து 100 டாலர்களை அர்மியின் கைகளில் திணித்தாள்.

வெற்றிப்புன்னகையோடு அர்மி அதைப் பெற்றுக்கொண்டது அரவிந்தனின் கேள்விகளுக்கு பதிலளிப்பது போல் இருந்தது.
"ஷபாஷ் அர்மிதா,நீ இவ்வளவு கேவலமாய் இருப்பேனு நான் நெனைச்சிக்கூட பார்க்கல. சீ! நீயும் ஒரு பொண்ணா? காசுக்காக காதலை விலை பேசுவியா நீ? ச்சே உன்னை போயா நான் காதலிச்சேன்?" வெறுப்பாய் உமிழ்ந்துவிட்டு அரவிந்தன் அகல, அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் அர்மி.
என்ன வார்த்தைப் பேசி விட்டான் அரவிந்தன். தன்னை தன் காதலை தெரியாமல் எப்படியெல்லாம் மட்டம் தட்டி விட்டான்.
கோவம் தலைக்கேற அரவிந்தனை, பின் தொடர்ந்தவள், அவன் தோள் பற்றி நிறுத்தினாள்.

"மிஸ்டர் அரவிந்தன் உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுங்கிற மாதிரி பேசிட்டிங்க இல்ல? ஆமா, நான் பெட் கட்டினேன், இல்லனு சொல்லல,பட் என் லவ் நிஜம்.இன்னிக்கு உங்ககிட்டு வந்து என் மனச சொல்லறதுக்குள்ள எப்படி பேசிட்டிங்க. ஒகே, இனியும் இது சரிவராது. என் காதல் காசுக்குதான்! இந்தாங்க அத நீங்களே வச்சுக்குங்க."
அரவிந்தன் கைகளில் ஒரு பெட்டியை வலுக்கட்டாயமாய் திணித்து விட்டு அர்மிதா கண்களில் நீர் வழிய ஓடிவிட்டாள்.எதுவும் பேசாத நிலையில் அரவிந்தன் நிற்க, அர்மி பின் வந்த மீனா அரவிந்தனை நோக்கி முறைத்தாள்.

"வாட்ஸ் வ்ரோங்க் வித் யூ அர்வின்? அர்மி பத்தி எதுவும் தெரியாம,அங்க என்ன நடந்துச்சுனு தெரியாம எப்படி உங்கலால இது முடிஞ்சது அர்வின்? அவ நெருப்பு மாதிரி,அவ லவ்னு வந்து சொன்னதும் உங்கல மட்டும்தான். அர்மிக்கு லவ் வருமா? வராதானு பெட் வெச்சது நானும் என் ப்ரண்ட் ரேமாதான்.இது அர்மிக்கு கூட தெரியாது.எதுவும் சரியா தெரிஞ்சிக்காம உங்க லவ்வ நீங்களே கொன்னுட்டிங்க.

இனிமே உங்க பக்கம் அவ திரும்புவானு நினைக்காதிங்க.அர்மி பிடிவாதம் வேற மாதிரி. ஐயாம் சாரி அரவின்." மீனா நகர அரவிந்தனுக்கு தலை சுற்றியது.

அருகிலிருந்த பென்ஞ்சில் அமர்ந்தவன், அர்மி தந்த பாக்ஸை திறந்துப்பார்த்தான். அழகாய் ஒரு ஸ்டெஸ்தெஸ்கோப் பளபளக்க ,அதன் இதய பகுதியில் வித் லவ் அர்மி என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதனூடே கவிதைகள் அடங்கிய ஸ்கிராப் புக் ஒன்றும், இது வரை அவர்களிருவருக்கும் இடையில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும்,சித்திரங்களாய், புகைப்படங்களாய் கதை சொல்வது போல் புத்தகம் ஒன்றும் செய்து வைத்திருந்தாள். அரவிந்தனின் இதயம் கனத்தது. பாவி ஹீராவால் தன் காதலை கருகவைத்துக் கொண்ட தன் மதியீனத்தை எண்ணி நொந்தான். ஹீராவை தேடிச்சென்றான்.

ஆத்திரத்தில் அவளை உலுக்கி எடுத்தவனை ஹீரா,"உன் காதல் போச்சேனு பதறிக்கிட்டு வர்றியே, எனக்கும் அப்படிதான் இருந்துச்சி,நீ என் காதலை உதாசினப்படுத்திட்டு போனப்ப. அண்ட் அர்மி பத்தி எனக்கு நல்லா தெரியும். இனி ஜென்மத்திற்கும் உன் பக்கம் வரவே மாட்டா." ஹீரா விஷமமாய் புன்னகையித்தாள்.

அதற்கு பிறகு அர்மியை பற்றி எந்த தகவலும் அரவிந்தனுக்கு கிடைக்கல. மனசு கனக்க கனக்க ரேயனோடு வந்த இந்தியா வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அர்மிதா அவனை விட்டுச் சென்று விட்டாள். கொஞ்ச நாள் அவனை மறந்திருந்தவள் போல் தன்னை ஆர்வமாய் பைன் ஆர்ட்ஸ்ஸில் ஈடுப்படுத்திக் கொண்டாள். அவ்வப்பொழுது ஸ்க்ய்ப்பில் தொடர்பு கொள்ளும் தோழிகளும் ரேயனும் மட்டுமே அவளுக்குத் துணை.

அன்று ரேயனின் பிறந்த நாளை ஓட்டல் மாயாஜாலில் ஸ்ர்ப்ரைசாய் அர்மிதா கொண்டாட திட்டம் வைத்திருந்தாள்.அதன் படி ரேயனும் வந்து சேர ,இருவரும் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளை, அர்மிதாவுக்கு எதோ ஓர் உணர்வு தோன்றியது.
உயிருக்கு நெருங்கிய உறவு ஒன்று அருகிலிருப்பது போல் தோன்ற, தன்னிச்சையாய் திரும்பி பார்த்தவள்,அதிர்ந்தாள்.

அங்கே அரவிந்தன் ஒரு அல்ரா மாடர்ன் பெண்ணுடன் வந்து கொண்டிருந்தான்.அவன் கை அவள் இடைப் பற்றியிருக்க,அர்மிதா அவனை சந்தித்தாள்.அர்மியை பார்த்ததும் அருகில் அரவிந்தன் வர,அர்மி அவசரமாய் ஓட்டலை விட்டு வெளியேறினாள்.அவளை பின் தொடர்ந்து அரவிந்தனும் வெளியே வர,ரேயனும் பின்னே ஓடி வந்தான்.

"அர்மி ப்ளீஸ் கொஞ்சம் நில்லு, நான் உங்கிட்ட பேசணும். நில்லு அர்மிதா!" அரவிந்தன் வலுக்கட்டாயமாய் அவள் கைப்பற்றி நிறுத்த அர்மிதா திணறினாள்.

பின்னே வந்த ரேயன் "ஹேய் மிஸ்டர் யார் நீ? எதுக்காக அர்மிகிட்ட வம்பு பண்ற? போலீஸ கூப்பிடவா?" ரேயன் அரவிந்தனை நோக்கி முன்னேற, அர்மிதா அவனைத் தடுத்தாள்.

"வேணாம் ரேயன்,வா நாம போயிடலாம்" அவள் கண்கள் கெஞ்ச ரேயனுக்கு எதோ ஒன்று புரிந்தது.
"அப்போ இவர் அரவிந்தன்? ரேயனின் கேள்விக்கு அர்மிதா பலவீனமாய் தலையசைத்தாள். அர்மியின் கதை அவனுக்கு தெரியும் என்பதால், அரவிந்தன் மேல் வெறுப்பு கூடியது.


"இடியட்,இன்னொருத்திய கூட்டி வந்திட்டு அர்மிய கஷ்டப்படுத்தறான்," மனதிற்குள் அரவிந்தனை கறுவினான்.
"வா அர்மி நாம போகலாம்"அர்மியை தோளோடு அணைத்தவாறு ரேயன் நடக்க, அடிப்பட்ட புலியாய் அரவிந்தன் நின்றிருந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN