பாகம் 16

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க மித்திரன்?இப்படியா பயமுறுத்துவது?"மாயா கேட்க மித்திரன் புன்னகையித்தான்.

"ரிலாக்ஸ் மாயா,தனியா நமக்குத் தெரிஞ்ச பொண்ணு போகுதே,சரி துணையா வரலாம்னு வந்தா,அம்மணிக்கு எப்படி கோவம் வருது பாரு." மித்திரன் வருகையின் நோக்கத்தை விளக்க மாயா கன்னம் சிவந்தாள்.

"நான் சிறுமியல்ல மித்திரன்,என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும்" முகத்தை திருப்பியவள் வெளியே தெரிந்த பனிமலைகளில் பார்வையைப் பதித்தாள்.

மித்திரனுக்கு மாயாவைப் பற்றி தெரியுமாதலால் எதுவும் பேசாமல் வந்தான்.அப்பொழுது மாயாவின் காலை எதுவோ பிராண்ட, மாயா திடுக்கிட்டுப் போனாள்.கீழே குனிந்து பார்த்தாள்.அழகான பஞ்சு பொமெரியன் குட்டி சினேகமாய் இவளைப் பார்த்தவாறு நின்றிருந்தது.
கண்களில் பயம் பரவ ஒரே எட்டில் மித்திரனின் பின்னால் ஒளிந்துக் கொண்டாள். மித்திரன் தடுமாறினான்.மாயாவின் தளிர் கரங்கள் அவனை இறுக்கப் பற்றிக் கொண்டன.

"மித்ரன் அந்த டாக் அ போக சொல்லுங்க,எனக்கு டாக்னா போபியா," மாயாவின் குரல் நடுங்கியது. சற்று முன் வீராங்கனைப் போல பேசியவள் சின்ன பொமெரியன் குட்டிக்கு பயப்படுவது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அதை அடக்கிக் கொண்டு மாயாவை சமாதனப்படுத்தினான்.

"ஒன்னும் இல்ல மாயா,இது சின்ன குட்டி உன்னை ஒண்ணும் பண்ணாது, இரு இந்த வாண்டோட ஓனர்கிட்ட இவனை கொடுத்திட்டு வர்ரேன். "மித்திரன் பொமெரியனை கையிலெடுக்க , இவர்களை நோக்கி ஒரு கனடிய பெண் வந்தாள்.
மித்திரனை நோக்கி புன்னகையித்தவள், பொமெரியனை கையில் பெற்றுக் கொண்ட பொழுது,அவன் பின்னே ஒளிந்திருந்த மாயவைக் கண்டு விட்டாள்.

உடனே "ஹேய் நீ மாயா இல்ல, என்ன மறந்திட்டியா நீ, நாந்தான் ஜாஸ்மின்!," உற்சாகமாய் அவள் குரல் வெளிப்பட, மாயா ஜாஸ்மினை கட்டிக் கொண்டாள்.

"உன்னைப் பார்த்து வருடங்கள் ஆச்சு,அந்த இரவுக்கு அப்புறம்..ஓ ஜாஸ்மின் ரொம்ப நன்றி" உணர்ச்சிப் பெருக்கில் மாயா கண்கலங்க, ஜாஸ்மின் மாயாவை அணைத்துக் கொண்டாள்.

"ஹேய் மாயா, என்ன இது சின்னப்பிள்ளையாட்டம்?நான் உன்னைக் காப்பாத்தல, நீதான் உன்னை காப்பாத்திய ஹீரோ பக்கத்தில் இவ்வளவு நேரம் ஒண்டிக்கிட்டு இருந்திருக்க,"தெளிவான பதிலால் ஜாஸ்மின் மாயா மற்றும் மித்திரனையும் அதிர வைத்தாள்.

"நீங்க மிஸ்டர் விஸ்வாமித்திரன் ராஜ் தானே? என்னை உங்களுக்கு நினைவு இல்லையா? சில வருடங்களுக்கு முன்பு, உங்க நண்பர் ஓட்டலில் கல்சுரல் ப்ரோகிராமில் தப்பா நடந்துக்கப் பார்த்த ஒரு ராஸ்கல் கிட்ட இருந்து ஒரு பொண்ணை காப்பாற்றினீர்களே நினைவிருக்கா?"ஜாஸ்மின் கேட்க, மித்திரனுக்குள் குழப்ப ரேகை படர்ந்தது.சிறிது யோசனைக்குப் பின் தலையாட்டியவனைப் பார்த்து ,

"நீங்க காப்பாத்தின பொண்ணு என்னோட மாயாதான்" ஜாஸ்மின் முடிக்க, இருவரும் அதிர்ந்து விட்டனர்.
"அப்போ மதன் சொன்ன விஸ்வா ..மித்திரன்னா?" அதனால்தான் அன்று அவனை ஓட்டலில் கண்ட பொழுது மதன் தடுமாறினானோ?
காத்தவன் அருகில் இருந்தும், அவனுக்கு நன்றி கூட சொல்ல வில்லையே, மாயாவின் கண் கலங்கிற்று. மித்திரனும் இதே நிலையில் இருந்தான்.

என்றோ இவளைக் காத்த காரணத்தினால் தானோ, மனம் மாயாவை கண்ட நொடிப்பொழுதில் மயங்கி இவள் பக்கம் சாய்ந்ததோ?
இவள் தனக்குரியவள் என்ற எண்ணம் அன்று ஏற்பட்டதால்தானோ, அவளை கண்ணின் மணிப் போல காக்கத் தோன்றியதோ?
என் தேவதையை கசக்கி எறியப் பார்த்தவனை அப்பொழுதே அடையாளம் கண்டிருந்தால், ஹ்ம்ம்ம்ம் மித்திரன் மாயாவைப் பார்க்க,ஜாஸ்மின் குறுக்கிட்டாள்.

"நீங்க அப்புறமாய் நன்றி சொல்லி சந்தோசப்பட்டுக்குங்க, நான் மாயாகூட கொஞ்சம் பேசணும்."
மித்திரன் வழி விட, தோழிகளிருவரும் மலை முகடுகளை இரசிப்பதை விடுத்து, குசலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். கொண்டோலா பயணம் முடிவுறவும் மாயாவும் மித்திரனும் ஜாஸ்மினிடமிருந்த்து விடைப் பெற்றுக் கொண்டு தங்கள் குடிலுக்கு நடையைக் கட்டினர்.
பிரமிப்பு விலகாமல் மாயா மித்திரனுடன் நடக்கையில்,மனதார தனக்கு உதவியவனை கண்ணில் காட்டிய ஜாஸ்மினுக்கும் அவளுடைய பொமெரியனுக்கும் நன்றி தெரிவித்தாள்.

காட்டேஜில் மயக்கம் தெளிந்த சிம்மி, தன் உடைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டு திடுக்கிட்டாள்.மாலை மங்கிய ஒளியில் அறையில் பிரதான விளக்குகள் உயிர்ப்பிக்கப்படாமல் இருப்பது கண்டு புருவம் சுளித்தாள்.கண்கள் அனிஷை தேடவும்,அவளை அலைய விடாமல் அறைக்கு அவனும் வந்து சேர்ந்தான். கண்களில் குறும்பு மின்ன "என்னம்மா மகாராணி, இப்பத்தான் கண் விழித்தீர்களோ? மூச்சு பேச்சு இல்லாம இருந்தீயா, நான் பயந்திட்டேன்.உன் மந்திகள் கூட உதவிக்கு வரலை.அப்புறம் நான்தான் உனக்கு சிகிச்சை அளித்தேன்."இல்லாத காலரை இழுத்து விட்டுக்கொண்டான்.சிம்மிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
தோழிகள் சதித்திட்டத்தால்,

தன்னந்தனியே அனிஷிடம் மாட்டிக் கொண்டு அவதிபட நேர்ந்ததை எண்ணி அவளுக்கு கோவம் வந்து விட்டது.எதுவும் பேசாமல் உம்மென்று அமர்ந்திருக்க,அனிஷிற்கு எதோ செய்தது.
"சிம்மி நெஜமா நான் ஏதும் பண்ணல,உனக்கு டிரஸ் சேன்ச் பண்ணிவிட்டது சமையல்காரிதான்.
பயண அலுப்பு,எதுவும் சாப்டாதனால வந்த மயக்கம்.அதான் மயங்கிட்ட." சரி வா,கொஞ்சம் காலார நடந்திட்டு வரலாம்.அதுக்குள்ள டின்னர் ரெடி ஆயிடும்".

அனிஷ் சிம்மியின் ஸ்வட்டரை எடுத்துக் கொடுத்தான்.காட்டேஜ் வெளியே சிறிய
தோட்டம் போல அமைத்திருந்தனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN