பாகம் 15

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"அம்மா தாயே! விட்டா என் பரம்பரையே வானரப் பரம்பரைனு பறைச்சாற்றிடுவே. வா நம்ம வீட்டு வானரங்களைத் தேடலாம்." அனிஷ் அழைக்க சிம்மிக்கு சிரிப்பு வந்தது.

காட்டேஜ் அருகிலேயே 'ஸ்கி' விளையாட்டுத் தளம் இருக்க சிம்மி பனிச்சறுக்கு விளையாட ஆசைப்பட்டாள்.அவள் கண்களில் தெரிந்த ஆர்வம் அனிஷை தொற்றிக் கொள்ள, "ஹேய் போய் விளையாடலாமா? உனக்கு ஸ்கி பண்ண வருமா?" சற்று கேலியாய் கேட்டான்.

"ஹால்லோ மிஸ்டர்,பார்த்து பேசுங்க, நாங்கெல்லாம் காலேஜ் டைம் ஸ்கி விளையாட்டில் கலந்திருக்கோம்.தைரியம் இருந்தா இப்ப போட்டிக்கு வாங்க பார்க்கலாம்.", சிம்மி சவால் விட்டாள்.

" ம்ம்ம்,இந்த மித்திரன் கூட சேர்ந்து சேர்ந்து, உனக்கு வாய் ஜாஸ்தி ஆச்சு சிம்மி.சரி போட்டிக்கு நான் ரெடி,நீ ரெடியா? "அனிஷ் அழைக்க சிம்மி சம்மதம் என தலையசைத்தாள்.

சிம்மியும் அனிஷும் தயார் ஆக, போட்டி ஆரம்பமாகியது. சிம்மியை முதலில் விட்டு ,அவள் இலாவகமாய் ஓடும் அழகை இரசித்தவன்,இரண்டே எட்டில் அவளை எளிதில் பிடித்து விட்டான்.அனிஷ் ஸ்கி விளையாட்டில் சாம்பியன் என்பது பாவம் சிம்மிக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவனுக்கு இணையாய் அவளும் விளையாடத்தான் செய்தாள்.இடையில் எதிரே இருந்த மரக்கட்டை மேல் மோதாமல் இருக்க சற்றே விலகியவள், உடலை சமன் செய்ய இயலாமல் தடுமாறி பனியில் விழுந்து உருண்டாள்.காலையில் எதுவும் சாப்பிடாமல் வந்தது, விழுந்த அதிர்ச்சியில் சிம்மி மயக்கமானாள்.சிம்மிக்கு முன் சென்றிருந்த அனிஷ் பின்னே அவள் வராதது உணர்ந்து, தன் வேகத்தை மட்டுப்படுத்தினான்.

சற்று தொலைவில் சிம்மி உருண்டு வருவதை கண்டவன் பதறிப்போய், ஓடிச்சென்று அவளை இரு கைகளிலும் தாங்கிக்கொண்டான்.
மூச்சு பேச்சற்று முகம் வெளுத்திருந்த சிம்மியை கண்டதும் அனிஷிற்குள் பதற்றம் அதிகமாகியது.
தன் செல்லில் இளவல்களுக்கு தொடர்பு கொள்ள, சிக்னல் பிரச்சனையால் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று.
வேறு வழியின்றி சிம்மியை தூக்கிக் கொண்டு காட்டேஜ் நோக்கி நடந்தான். அதிக தூரம் செல்ல நேராததால்,சிம்மியை பத்து நிமிடத்தில் அறைக்கு கொண்டு சென்றான்.

பனியால் நனைந்திருந்த உடையை மாற்றி,உடலில் உஷ்ணம் ஏற்பட அறையின் வெப்ப நிலையில் மாற்றம் செய்தான்.சமயதிற்கு உதவ இல்லாமல் போன தம்பிகள் மீது அனிஷின் ஆத்திரம் திரும்பியது. மனதிற்குள்ளே இருவரையும் கறுவித் தள்ளினான்.
நிலமை இவ்வாறுயிருக்க,

அர்மிதா விஸ்லர் ஒலிம்பிக் பிலாஸாவில் ஐஸ் கேட்டிங்க் விளையாடிக்கொண்டிருந்தாள்.பல வருடங்களாய் ஸ்கேட்டிங்க் போகதவளுக்கு திரும்ப விளையாடத் தோன்றியது.காலில் ஸ்கேட்டிங்க் ஷூவை மாட்டிக் கொண்டவள், பிற பயணிகளுடன் கலந்து ஓடத்தொடங்கினாள்.
சில்லென்ற பனிக்காற்று முகத்தில் பட்டு சிலிர்ப்பை உண்டாக்க,அர்மிக்குள் பல காலமாய் ஒளிந்திருந்த குறும்பு அர்மிதா வெளிப்படத் தொடங்கினாள்.

ஆர்வமாய் ஓடிக்கொண்டிருந்தவள் பின்னால் ஒரு வலிய கரம் வந்து அவளின் சின்ன இடையை இலாவகமாய் பற்றியது.
அதிர்ந்து திரும்பியவள் பின்னே, நம்ம டாக்டர் அரவிந்தன் ராஜ்தான். கண்களில் கோவம் மின்ன,
அவனை உதறியவள் சிட்டாய் ஓட,அவளை விடாமல் அரவிந்தன் துரத்தினான்.அர்மி அளவிற்கு அரவிந்தன் ஸ்கேட்டிங்கில் தேர்ச்சி பெற்றவன் அல்ல, என்றாலும் அவளுக்கு தன் நிலையை புரிய வைக்க வேண்டிய நிலையில் அவன் இருந்தான்.

அவளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறியவன்,வழுக்கி விழுந்தான். பின்னே சத்தம் கேட்டு அர்மி திரும்பிப் பார்த்தாள். சிரிப்புவந்தது.
"மக்கு சாம்பிராணி..மக்கு சாம்பிராணி, அதான் வரலையே..அப்புறம் என்ன பெரிய ஹீரோவாட்டம் அலட்டல் உனக்கு?"அர்மி ஏளனமாய் அரவிந்தனைப் பார்த்தாள்.

கீழே விழுந்ததில் அடிப்பட்டிருக்கும் போலும், அரவிந்தன் வலியில் "நான் மக்குச்சாம்பிராணியோ , பால் சாம்பிராணியோ, அது இப்ப முக்கியம் இல்ல, ஹெல்ப் மீ அர்மி.வ்லிக்குது"அரவிந்தன் முகம் கோணுவதைப் பார்த்தால் அடி பலமாய் பட்டிருக்கும் போலும் , அர்மிதா பதறி விட்டாள்.

"ஐயாம் சாரி அர்வின்,கிட்டதான் காட்டேஜ், நாம போயிடலாம்."
அரவிந்தனின் ரோலர் ஷூவை கலற்றி விட்டு மெல்ல அவனை தன் தோள் மேல் கைக்கொடுத்து அணைத்தவாறு நடந்தாள். அவள் மனதில் பழைய கோவம் கூட இல்லை. தன்னால்தானே இவனுக்கு இப்படி ஆயிற்று என்று உள்ளம் மறுகினாள்.

இவர்கள் இவ்வாறு சொதப்ப,எதுவும் அறியாத மாயா கொண்டோலாவில் விஸ்லர் ப்ளாக்கொம்ப் பனி மலைகளைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டாள்.உலக பிரசித்திப் பெற்ற, கின்னஸ் விருது பெற்ற PEAK TO PEAK ல் பனிமுகடுகளை சுற்றிப்பார்க்க பிற பயணிகளுடன் கொண்டோலாவில் ஏறிக்கொண்டாள்.

மெல்ல மெல்ல அந்தரத்தில் இரும்பு கம்பிகளில் கொண்டோலா வழுக்கிக் கொண்டு முன்னேற,கண்களில் சிறு பிள்ளையின் குதூகலம் மின்ன மாயா இயற்கையை இரசித்தாள்.குளிர்க்காற்று நாசியை தடவ,ஜன்னலோரம் நின்றிருந்தவள் கண்களை மூடி அந்த நொடி சுகத்தை ஆழமாய் அனுபவித்தாள்.


அப்பொழுது மிக அருகில் "கண்களை மூடிக்கொண்டு எப்படி மாயா இந்த அழகை இரசிப்பே?,"திடுக்கிட வைத்தது மித்திரனின் குரலே.அதிர்ந்து விழித்தவள் தடுமாற,அவள் தோள் பற்றி மித்திரன் நிறுத்தி வைத்தான். கண்களில் சிறு கோவம் மின்ன, மாயா மித்திரனை ஏறிட்டாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN