பாகம் 19 -முற்றும்

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அப்பொழுது மாயா "அங்கிள் இந்த வைர வசனம் உங்கள் பரம்பரை வசனமா? உங்கள் பிள்ளைங்க மூணு பேரும் இதே வசனத்தைத்தான் எங்ககிட்ட சொன்னாங்க." என கேட்க, அதற்கு பெரிதாய் சிரித்த சதாசிவம் "நான் கொஞ்சம் ரொமாண்டிக் பெர்சன் மா.லவ் மேரேஜ் வேற, அப்ப அப்ப உங்க அத்தைக்கிட்ட இப்படி எதாச்சும் டயாலாக் விடுவேன்.அது இவனுங்க எப்படி கத்துக்கிட்டானுங்கனு தெரியலேமா. பெசிக்கலி இவனுங்க மூனு பேரும் உங்க அத்தை மாதிரி,பட் பரவாயில்லை அப்பன் பேரை இந்த விஷயத்தில் காப்பாத்திட்டானுங்க." அவர் இல்லாத காலரை இழுத்து விட, பிள்ளைகள் மூவரும் அசடு வழிந்தனர்.

அடுத்து வந்த நல்ல முகூர்த்தத்தில் அரவிந்தன்-அர்மிதா, மித்திரன்-மாயா ஆகியோரின் திருமணம் விமரிசையாக நடந்தேறியது.
முதலிரவு அறைகளை சிம்மியும் அனிஷும் தயார் செய்ய,அவர்களுக்குத் தெரியாமல் மாயாவும் அர்மிதாவும் அனிஷின் அறையை அலங்கரித்து வைத்திருந்தனர்.

முதலில் அறைக்குள் நுழைந்த அனிஷ் திடுக்கிட,பின்னாலே வந்த சிம்மியும் திகைத்து நின்றாள்.தன் தோழிகளின் எண்ணம் புரிந்தது போல் சிம்மியின் கன்னம் வெட்கத்தில் சிவந்தது.அவள் அருகே வந்த அனிஷ் மென்மையாய் சிம்மியை அணைக்க , சிம்மி சிலிர்த்துப் போனாள். "என் மச்சினிங்க புத்திசாலிகள்,இந்த மாமா மனசு புரிஞ்சிக்கிட்ட தேவதைகள்,ஹ்ம்ம் புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரி "அனிஷ் அணைப்பை இறுக்கினான்.சிம்மி மறுப்பேதும் சொல்லாமல் அவன் மார்பு மேல் சாய்ந்தாள்.


மற்றொரு அறையில் அர்மிதா பால் குவளையுடன் அரவிந்தன் அறைக்குள் நுழைய, அவன் இவளுக்காய் காத்திருந்தான்.மெல்ல மெல்ல அன்ன நடை பயிலும் அர்மிதா அவனுக்கு வித்தியாசமாய் பட,வாய் விட்டு கேட்டே விட்டான். "வாவ் அர்மி செல்லம், கல்யாணம் ஆனதும் உனக்கும் வெட்கம் வருதே,நடையில ஒரு நளினம்,அழகால கொல்லுற போ"அரவிந்தன் வழிய, அர்மி மூக்கு கோவத்தில் சிவந்து விட்டது.

சேலை அர்மிக்கு பெரும் பிரச்சனையாக,அடிக்கடி கொசுவம் இடுப்பிலிருந்து நழுவி விடுவது அர்மிக்கு வாடிக்கையாய் நிகழ்வது. இன்றும் அதே கதிதான். கையில் பால் குவளை இருக்க,கொசுவம் நடக்க நடக்க நழுவும் நிலைக்கு வந்து விட்டது.அதனாலே மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.அவள் அவஸ்த்தை புரியாமல் அரவிந்தன் வம்பிழுக்க,கோவம் வந்து விட்டது அவளுக்கு.

"மவனே என் அவஸ்த்தை உனக்கு காமெடியா இருக்கா?சாரி கொசுவம் விழற மாதிரி இருக்குணு மெல்ல நடந்து வந்தா,உனக்கு வசனம் பேச வருது இல்ல" கொசுவம் முழுவதும் அவிழ்ந்து விழுவதையும் பொருட்படுத்தாமல் அர்மி அரவிந்தனின் வேட்டியை உருவ கை நீட்டினாள். விசயும் புரிந்து அரவிந்தன் கட்டிலைச் சுற்றி ஓட,அர்மிதா அவனை துரத்திப்பிடித்தாள்.காலோடு புடவை மாட்டிக் கொள்ள,அப்படியே அரவிந்தனோடு கட்டிலில் சரிந்தாள்.தனக்கு வாகாய் சரிந்தவளை அரவிந்தன் கட்டிக் கொள்ள,மெல்ல மெல்ல அவளை ஆராயும் பணியில் ஆழ்ந்துப் போனான். இவர்களின் அன்பு பரிமாற்றத்தில் அறை விளக்குகளும் அமைதியாய் உறங்கி விட, இரவு நேர மழைக்காற்று ஜன்னலை வருடிச் சென்றது.

மாயாவும் மித்திரன் அறைக்குள் நுழைந்தாள். பட்டு சாரி சரசரக்க,தளர்வாய் பின்னிய நீண்ட கூந்தலில் மல்லிகை சரம் தொங்க, அழகு தேவதையாய் மாயா மித்திரன் அறைக்குள் வந்தாள்.வந்தவள் அறைக்குள் மித்திரனைக் காணாமல் திகைக்க, திடிரென்று நீண்ட வலிய கரம் ஒன்று அவளை அப்படியே உயரத் தூக்கி, மெல்லிய அவள் இடையில் முத்தமிட்டன.மின்சாரம் பாய்வது போல இருந்தது மாயாவிற்கு.கையிலிருந்த பால் குவளை தவறவிட்டாள்.

அது அவளுடைய அன்பு கணவனை தலை முதல் கால் வரை அபிஷேகித்து விட்டது. "ஹேய் மாயா,என்ன இது அபிஷேகம்? இப்பதானேம்மா குளிச்சேன்?" மித்திரன் மாயாவை கீழே இறக்கி விட்டான். "நீங்க மட்டும் இப்படி இடுப்பில கிஸ் பண்ணலாமா? நான் தடுமாறிப் போய்தான் பால் கொட்டிருச்சுங்க" சொல்லிவிட்டு மாயா சிரித்தாள்.

"அது ஒன்னுமில்ல செல்லம்,ரொம்ப நாளாய் உன் இடுப்பு மேல எனக்கு ஒரு கண்ணு,இப்படி கிஸ் பண்ணனும்னு ஆசை.சொன்ன விடுவியா நீ?அதான் சின்ன ஸர்ப்ராய்ஸ்."இரு கைகளால் மாயாவைக் கட்டிக் கொண்டு கண்சிமிட்டினான்.
மாயா பொய் கோவம் காட்ட,மித்திரன் அவளை விடுவதாய் இல்லை.அவளை அப்படியே அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

"நான் மட்டும் தனியா குளிப்பேனா?கம்பனி குடுடி"மோகமாய் மித்திரன் கிறங்க மாயா வெட்கம் தாளாமல் தலைக் குனிந்தாள். வெளியே மழை தூறலிட,மித்திரனின் அறையில் 'ஒவ்வொன்றாய் திருடுகின்றாய் 'பாடல் சிஸ்டத்தில் கசிய ஷவரில் மாயாவையும் இழுத்துக் கொண்டான்.இரவின் மழை தரும் சுகத்தினில் ஆறு இதயங்களும் இல்லற ஜோதியில் இணைந்தன,மறு நாள் விஸ்லருக்கு ஹனிமூன் பயணத்தை உறுதி செய்து விட்டு.

💐முற்றும்💐
இதுவரை எங்களோடு பயணிச்ச அனைவருக்கும் நன்றி. இது என்னோட முதல் நீண்ட நாவல்.நிஜமா இப்டி நடக்குமானு கேட்டா அதுக்கு என்கிட்ட பதில் இல்லைங்க.கொஞ்சம் நிஜம், நிறைய கற்பனைகள் வெச்சு எழுதினது தான். அடுத்த கதையில் மீண்டும் உங்கள சந்திக்கிறேன். நன்றி
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN