தாயுமானவன் 04

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலில் விழுந்து உன்
கண்களில் கலந்து...
உனக்காக மட்டுமே துடிக்கும் இதயத்தைச் சுமக்கையில்

அவன் தாயுமானவன்...

மயூவும் சாருவும் பல கதைகள் பேசினர்... தங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்... அதில் பல கேள்விகளை மயூதான் கேட்டாள்...

தன்னைப் பற்றிய தகவல்களை ஆழமாக மயூ பகிர தயங்குவதை உணர்ந்து கொண்ட சாருமதி அவளிடம் பொதுவான கேள்விகளையே கேட்டாள்...

அவர்களிடையே ஆழமான நட்பு அழகாய் மலர்ந்து மணம் வீசியது...

பேசிக்கொண்டே மாயூவைச் சாரு இரகசியம் என்று சொல்லிய இடத்திற்கு அழைத்து வந்தாள்...

"அதோ பாரு மயூக்கா... அந்த இடம் தான் என்னோட இரகசிய விசிட்டிங் ஏரியா...", கண்சிமிட்டி மயூவின் கைகளைக் கோர்த்துக் கொண்டாள் சாரு...

அந்த வட்டாரத்தை நெருங்கிடும் பொழுது மல்லி, ரோஜா, செண்பகம் போன்ற மலர்களின் வாசம் நாசியை நிறைத்தது... எங்கும் நிலவிய அமைதியான சூழ்நிலை மனதை ரம்மியமாக்கியது...

சொல்லெனா நிம்மதி மனதை ஆக்ரமிப்பதை மயூவால் உணர்ந்து கொள்ள முடிந்தது...

மயூவின் ரணமான மனதுக்கு அவ்வில்லம் அருமருந்தாய் விளங்குமென தோன்றியது அவளுக்கு...

ஆம் சாருமதி அவளை அழைத்துச் சென்ற இடம் அன்பு இல்லம் என்றழைக்கப்பட்ட முதியோர் இல்லத்திற்கு...

சிறுவயது முதலே ஒரு குழந்தையை எவ்வித குறையுமின்றி அன்பாய் பேணி காத்த பெற்றோரை எப்படிதான் முதியோர் இல்லத்தில் சேர்க்குமளவு துணிகின்றனர் பிள்ளைகள்... அப்படியா அவர்களின் மனம் கல்லாலானது... வளரும் வரை பெற்றோரின் நிழல் தேவையாய் இருக்கிறது... அதுவே சுதந்திரமாய் பறக்கும் நிலை ஏற்பட்டு விட்டால் தாய் தந்தையர் சுமக்க முடியா பாரமாய் மாறிவிடுகின்றனர்...

அம்முதியோர் இல்லத்தில் 'அன்பு இல்லம்' என தேக்கு மரத்திலான பெயர் பலகை தொங்கி கொண்டிருந்தது... அங்கு வருவோருக்கு அன்பென்ற ஒன்றை மட்டும் வாரி வழங்குவதால் தான் அவ்வில்லத்திற்கு அன்பு இல்லமென பெயர் சூட்டினறோ என்னமோ...

சாரு மிக இயல்பாக அதனுள்ளே சென்றாள்... மயூரி அவளைப் பின்தொடர்ந்து சென்றாள்...

சாருவின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் அங்கிருந்த முதியோர்கள்...

"வாம்மா சாரு எப்படி இருக்க???", என்று அன்பாக விசாரித்தார் சாரதாம்மா

"நான் நல்லா இருக்கேன் பாட்டிம்மா... நீங்க எப்படி இருக்கிங்க??? ரைட் டைம்க்கு மருந்து எடுத்துக்கிறிங்கலா???" பதிலுக்கு சாருவும் அவரின் நலம் விசாரித்தாள்...

"அதலாம் சரியான நேரத்துக்கு எடுத்துக்குறன் சாரு... நேத்தே வருவன்னு நினைச்சன்...", என்றவரின் குரல் கம்மியிருந்தது...

"சாரி பாட்டி... நேத்து கொஞ்சம் பிஸி... அதான் இன்னிக்கு வந்துட்டன்ல ஒரு கலக்கு கலக்கிடலாம் விடுங்க...", அவரை அன்போடு அணைைத்துக் கொண்டாள் சாரு...

"இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கியேடா...", சாரதாம்மா அவளுக்கு திருஷ்டி சுற்றி போட வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் அவளையே முறைத்துப் பார்த்தார்...

"ஹோய் பாட்டி.. எப்டி இருக்க? ஒரு வாரம் நான் இங்க வரலேனோன நல்லா ஸ்வீட் சாப்டியாம்ல நீ... இது உனக்கே நல்லாருக்கா???", என்று அவரை வம்புக்கு இழுத்தாள் சாரு...

(நல்லாயில்லனா சாப்டுவாங்கலா பேபி🙄🙄🙄கொஞ்சமாவது யோசிக்க வேணாமா😒😒😒 அச்சோ அச்சோ இந்த புள்ள இன்னும் வளராமலே இருக்காளே😂😂😂)

"அட போடி கூறு கெட்டவள... ஒரே ஒரு ஸ்வீட் சாப்டாலாம் ஒன்னும் ஆவாதுடி... அதுவும் இல்லாம நம்ம மித்ரா தான் ஆசையாய் கொடுத்தாடி... நீ சித்த நேரம் கம்முனு இரு... எனக்கு எல்லாம் தெரியும்..."

என்று நொடித்து கொண்டார் வசந்தரா...

"கேட்டுகிங்கலாப்பா சங்கதிய... இந்த பல்லு போன கிழவிக்கு எல்லாம் தெரியுமாமுல..."
சாரு வேண்டுமென்றே அவரை வம்புக்கு இழுத்தாள்...

"அடியே சும்மாரு சொல்லிப்புட்டன்... எப்போ பார்த்தாலும் என்னையவே சீண்டிட்டு இல்லாட்டி என்னவாம்...",
என்றார் அவர் பதிலுக்கு...

"ஆமாடி ஆத்தா நீ என்னோட முறைப்பையன் உன்ன வம்புக்கு இழுக்குறன்.. சரிதான் போவியா..." சிலுப்பிக் கொண்டாள் சாரு...

"விடு வசந்தி அவளே எப்போவாது தான் இங்க வர... வரும்போதுலாம் அவக்கூட சண்ட போடாட்டி என்ன???", சாரதாம்மா அவளுக்கு சாதகமாக வாதிட்டார்...

"அப்படி சொல்லுங்க சாரதாம்மா... இந்த கிழவிக்கு என்கிட்ட வம்பு இழுக்கலான தூக்கமே வராது... ", அம்மூதாட்டியிடம் பழித்துக் காட்டினாள் சாரு...

இவர்களிடையே நடைபெறும் கேலி கிண்டலை எட்டி நின்றபடியே இரசித்துக் கொண்டிருந்தாள் மயூ...

சாய்வாக ஒற்றை துணின் அருகில் நின்றபடியே அங்கு நடப்பதை தன் காமிராவில் பொக்கிஷமாக்கினாள்...

மயூவைப் பொருத்த மட்டில் ஒவ்வொரு புகைப்படமும் நினைவுச் சின்னங்கள்... வருங்காலத்தில் இல்லாதவரின் முகவரியை சொல்வதும், கடந்து போன நம் நினைவலைகளைச் சொல்லுவதும் புகைப்படங்களே...

நிகழ்காலத்தில் மயூவின் உடலிருக்க அவளது மனம் இறந்த காலத்தில் நிலைக்கொள்ளாமல் அலைய தொடங்கியது...

கடந்து போனதை நினைத்து வாடுவதில் எந்த பயனும் இல்லாவிடிலும் அவ்வப்போது நினைவுகள் நம் முன்னே மின்னி மறைவதைத் தடுக்க முடியாது...

"ஹாய் டியர்... யாரு நீங்க??? உங்கள நான் இங்க பார்த்ததே இல்லையே... உங்க பாட்டி யாரும் இங்க இருக்காங்களா??? அவங்கள பார்க்க தான் வந்திங்களா???",
மெல்லிசையாய் தீண்டிய குரலில் மயூ தன் நினைவுகளிலிருந்து வெளி வந்தாள்...

மயூவின் எதிரே பெண் ஒருவள் அவளைப் பார்த்தப்படி நின்று கொண்டிருந்தாள்...

"ஹாய் மித்து அக்கா. வந்தோனயே உங்க விசாரனை கமிஷன்ன ஆரம்பிச்சிட்டிங்களா???பாவம்கா இந்த புள்ள பயந்துடாது???", என்று கூறியவாரே இவர்களின் அருகே வந்து சேர்ந்தாள் சாரு...

"ஹேய் வாலு... உன்னதான் எதிர்பார்த்துட்டு இருந்தன்... என்ன மேடம் ஒரு வாரமா ஆளையே காணும்... ரொம்ப பிஸியோ... என்ன எதாவது லவ்ஸா???", கேள்வியாய் சாருவை நோக்கினாள் அவள்...

( ய்யா😑😑😑 உங்க சண்டைய அப்புறம் வெச்சிங்கோங்க 😣😣😣 இப்ப பக்கத்துல உள்ள புள்ளைய பாருங்க🙄🙄🙄)

"அப்படிலாம் ஒன்னும் இல்லகா... நீங்க வேற ஏன்கா இப்படி கோத்து விடுறிங்க... இத மட்டும் உங்க தம்பி கேட்டா என்னோட கதை கந்தல் ஆயிடும்... சரி சரி ரொம்ப மொக்க போடாதிங்க... இவங்க என்னோட புது ப்ரண்டு பிலஸ் அக்கா... நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்காங்க... இங்க யாரையும் அவங்களுக்கு தெரியாது... அதுனால நான் என் கூடவே கூட்டிட்டு வந்துட்டன்... இது மட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா???", சாரு அடுக்கி கொண்டே போக

"அம்மா தாயே உன் திருவாய கொஞ்ச மூடுறியா... எப்படிதான் இப்படி பேசிட்டே இருக்கியோ... உன் ப்ரெண்டுதான இவ... எவ்ளோ அமைதியா இருக்கா..." என்றவளை முறைத்தவள்

"அக்கா இது கொஞ்சம் ஓவர்... ஐ'ம் பாவம் விட்டுடுங்க...", என்றாள் சாரு சோகமான முகத்தோடு...

அவளின் பாவனையை பார்த்து மயூவும் மித்ராவும் வாய் விட்டு சிரித்தனர்... சாரு தனது கலக்கலப்பான குணத்தால் அனைவரையும் தன் பால் ஈர்த்து விடுவாள்...

"நீ மட்டுமே பேசிட்டு இருக்காதடி... உன் ப்ரெண்டையும் பேச விடு...", என்றாள் மித்ரா சிறு புன்னகையோடு...

"அக்கா திரும்ப என்ன கலாய்க்காதிங்க... நீ பேசு மயூக்கா... உன் பொன்னான வாய் மொழியில் உதிர்க்க போகும் முத்தான வார்த்தைக்கு ஆவலாக காத்திருக்கும் எங்களை ஏமாற்றி விடாதே மயூக்கா... பேசு மயூக்கா பேசு...", நாடக பாணியில் மயூவை வாரினாள் சாரு...

"ம்ம்ம்.... என்னோட பேர் மயூரி... நான் நாவல் கதாசிரியர்... எப்பையும் எதாவது லூசுதனமா கிரிக்கிட்டே இருப்பன்... இப்ப இங்க தனியா தங்கிருக்கன்... புதிய உறவுகள தேடிதான் நான் இங்க வந்துருக்கன்கா... முத நாள்ளே நீங்களும் சாருவும் கிடைச்சிருக்கிங்க... பார்ப்போம்கா காலம் தான் பதில் சொல்லனும்...", என்றவள் பெருமூச்சென்றை வெளியிட்டாள்...

பிறர் முன்னே பலவீனமாய் தெரியக்கூடாதென தன் சோகங்களை மனதின் ஆழத்தில் புதைத்து புன்னகையைத் தன் முகத்தில் தவழவிட்டாலும் மயூவே அறியாமல் அவளது கண்கள் மித்ராவிடம் பல கதைகள் பேசின...

ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் சுலபமாக அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வார்கள்... மித்ரா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன???

வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்தவள் தன் முன்னே இருக்கும் பெண்ணென எளிதில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது... அவளே மறக்க நினைக்கும் ஒன்றைத் தான் ஏன் நினைவு கூர்ந்து பண்பட்ட மனதை மீண்டும் ரணமாக்க வேண்டுமென்று எண்ணியவளாக,

"சூப்பர்டா... ரைட்டரா... அப்ப நிறையா கற்பன உலகத்துல வாழ்வையே... ரியலி கிரேட் டியர்... நான் மித்ரா... குழந்தை நல மருத்துவர்... அன்பு இல்லம் என்னோட மேற்பார்வையில தான் செயல்படுது... வெல்கம் டு திஸ் ஹெவன்...", என்றாள் புன்னகையுடன்...

"ஹேய்பா... அக்கா சொல்றத வெச்சு அவங்க பெத்த டாக்டர்னு நம்பிடாத... அக்கா டாக்டர் இல்ல பேபி அவங்க ஒரு ஜோக்கர்... டிரிட்மண்டுக்கு வரவங்க கிட்ட ஜோக் சொல்லி சிரிக்க வைக்கறதுதான் அக்காவோட வேல...", சாரு

(உன்னோட பெரிய ஜோக்கர் இங்க யாரு பேபி இருக்கா🤣🤣🤣 டம்மி பக்கிலாம் கமெண்ட் அடிக்குறாளே😏😏😏).

"உன்ன இங்க யாரும் கேக்கல பேபி.. வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்னு கேள்வி பட்டதில்லையா... நான் சின்ன பேபிஸ்க்கு டாக்டரா இருக்கன்... அங்க போய் மூஞ்ச உர்ருனு வெச்சிட்டு இருக்க முடியுமா?...

சரி சரி விட்டா நீ பேசிட்டே இருப்ப... நீங்க வந்து ரொம்ப டைம் ஆச்சுடா... இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிரும்... ரெண்டு பேரும் சிக்கிரம் வீட்டுக்கு போங்க...",
என்று இருவரையும் வழியனுப்பி வைத்தாள் மித்ரா...

எங்கும் இருள் சூழ்ந்திருக்க வானில் பௌர்ணமி நிலவு மட்டும் கண்சிமிட்டி ஜொலித்தது... அதைச் சுற்றி நட்சத்திரங்கள் ரிங்காரமிட்டு நர்த்தனமாடிக் கொண்டிருந்தன...

மயூ வானையே வெறித்தப்படி அமர்ந்திருந்தாள்... அவளின் கடந்து கால நினைவுகளை எண்ணி குமுறினாள்...

சந்தோஷத்தை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருந்த தன் குடும்பத்திற்கு என்னானது... அன்பான தன் பெற்றோர் ஏன் தன்னை அனாதையாய் விட்டு சென்றனர்...

உடன் பிறந்தவனாய் அண்ணனொருவன் இருந்தும் இன்று நிர்கதியாய் நிற்கும் தன் நிலையை எண்ணி நொந்தாள்...

நாணயத்திற்கு இரு பக்கம் போல் வாழ்வில் இன்ப துன்பம் வந்து செல்வது இயல்பால ஒன்றுதான்... தன் வாழ்வின் இந்த புதிய அத்தியாயத்தை எப்படி தொடங்குவது எப்படி முடிப்பது என தெரியாமல் தவித்தது பெண் மனம்...

"அம்மா அப்பா... என்னையும் உங்களோடவே கூட்டிட்டு போக வேண்டிதானா... ரொம்ப தனியா இருக்கன்மா... எனக்கு பயமா இருக்கு... ப்லீஸ் என்னை உங்க கூட கூட்டிட்டு போயிடுங்க..." அவளின் கன்னங்களில் உருண்டோடிய கண்ணீர்துளி மயூவின் மடியிலிருந்த டைரியில் கோலம் வரைந்தது...

என்று மயூ தனிமைக்கு தத்து பிள்ளையானாளோ அன்றே டைரியும் அவளுக்கு உற்ற தோழியாய் மாறியது... வெளியே சொல்ல முடியாத பல இரகசியங்களை அவள் புதைத்து வைப்பது இந்த டைரியில்தான்...

சுதந்திர சிட்டாய் சுற்றித் திரிந்த மயூரியின் வாழ்வில் நடந்த துர்சம்பவம் என்ன???

மயூ அவள் சோகத்திலிருந்து மீண்டு வருவாளா???

அவளை மீட்டெடுக்க ஆகாஷ் வருவானா???

அவள் வாழ்வில் புதைந்து போன இரகசியம் யாது???
தாய்மை மிளிரும்...💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 04
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN