தாயுமானவன் 03

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தென்றலின் மெல்லிசை என் தேகத்தை தீண்டிடும் பொழுதும்...
குயில்களில் பாடலிசை என்னைத் தழுவிடும் பொழுதும்...
உந்தன் நினைவுகள் மனதிலே...

அவன் தாயுமானவன்...


இரவு முழுதும் பனியில் நனைந்த பூக்கள் சூரிய ஒளியை ஆசையாய் அணைத்துக் கொண்டன...

நிலவன் தன் கடமையைச் செவ்வனே செய்துவிட்டு மேகத்தின் நடுவில் ஒளிந்துக் கொண்டான்...

சூரியன் தன் போர்வையை விட்டு விலகி தன் கடமையைச் செய்ய தொடங்கினான்...

சூரிய ஒளி பட்டு இயற்கை அன்னை புதுப்பெண்ணென மினுமினுத்தாள்...

அதைக் கண்ட மயூ பிரம்மித்து போனாள்...

"வாவ்.. வாட் அ பியூட்டி..." என்று தனக்குள்ளே ராகம் பாடியவள் தன் புகைப்பட கருவியைக் கொண்டு இறைவனின் பொக்கிஷத்தை அதனுள்ளே பதிக்க தொடங்கினாள்...

இயற்கையின் அழகில் தன்னை தொலைத்தவளாய் மயூ அலமு பாட்டி கூறிய வீட்டிற்கு வழியை கண்டறிந்து நடந்தாள்...

அம்முதாட்டி மட்டும் இல்லாவிடில் இன்று தான் எந்த நிலையில் இருந்திருக்க கூடும் என நினைத்தவளின் மனம் வெம்மையுற்றது...

ஆம் அவளது மனம் முழுதும் வியாப்பித்துள்ள கோபம், ஆற்றாமை, தப்பைத் தட்டிக் கேட்க முடியாத தனது கோழைத்தனம் என அனைத்தும் சேர்ந்து மயூவின் மனதை வெம்மையாக்கியது...

மயூ தன் கைப்பேசி காட்டிய வழியில் சென்றுக் கொண்டிருக்க அவளை ஒரு வயோதிக தம்பதியர் வழி மறைத்தனர்...

"அம்மாடி யாருமா நீ... நான் உன்ன இங்க பார்த்ததே இல்லையே... ஊருக்கு புதுசா??? யாரு வீட்டுக்கு வந்துருக்க மா???", கேள்வியோடு தன்னை நோக்கியவர்களைப் புன்னகையோடு பார்த்தாள் மயூ...

"ஆமா தாத்தா... இந்த ஊருக்கு நான் புதுசு தான்... அலமூ பாட்டிக்குத் தெரிஞ்ச பொண்ணு நான்... அவங்க வீட்டுக்கு தான் வந்துருக்கன்...", என்றாள் மயூரி...

"ஓஓ... அலமூக்கு தெரிஞ்ச பொண்ணா அம்மாடி நீ... வாம்மா... எப்டி இருக்க??? அலமூ எப்டி இருக்கா??? ரொம்ப வருஷமாச்சிமா அவள பார்த்து... இப்போ எங்க இருக்கா???", வரிசையாக கேள்வியை அடுக்கி கொண்டே போனார் அந்த பெண்மணி...

அறுபதுகளின் தொடக்கத்தில் இருப்பவர் போலும்... வயோதிகத்தின் சாயல் முகத்தில் தெரிந்தாலும் அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவருள் நிறைந்திருப்பதாகவே தோன்றியது...

தான் யாரென்று தெரியாவிடிலும் தன்னிடம் எவ்வளவு தன்மையாக பேசுகின்றனர்... அன்பாக விசாரிக்கின்றனர்... யாருமில்லை என்ற மன இறுக்கம் சற்றே தளர்ந்து நிர்மூலமான மனநிலை உருவாகியது அவளுக்கு...

"ஏய் புள்ள இப்போதான் நம்ம ஊருக்கு வந்துருக்கு... நீ என்னமோ நிக்க வெச்சி கேள்வி கேட்டுடு இருக்கியே... இனி கொஞ்ச நாளைக்கு நம்ம ஊர்ல தான இருக்க போது... அப்புறமா அலமூ பத்தி விசாரிக்கோ... நீ போமா... நேரா போய் வடக்காள திரும்புன்னா தனியா ஒரு வீடு இருக்கும் அது தான் அலமூ வீடு... நான் உன்னோட உதவிக்கு சாருவ வர சொல்றன்...", அவளிடம் சிநேக புன்னகையைச் சிந்தி சென்றனர் அத்தம்பதியினர்...

அவள் அலமூ பாட்டியின் வீட்டை வந்தடைந்த பொழுது கடிகார முள் எட்டைக் காட்டியது...
அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தது... வீட்டிற்கு வெளியே இருந்த சிறிய பூந்தோட்டமும் ஊஞ்சலும் மயூவின் கண்களைப் பறித்தன...

'இந்த சிட்டி லைப்ப விட்டுடு எங்கயாவது ஒரு குட்டி கிராமத்துக்கு போய் எந்த ஸ்ட்ரெஸ் இல்லாம அமைதியான வாழ்க்கை வாழனும்டா...' மயூவின் அப்பா ஏக்கத்தோடு கூறியவை அவளது செவிகளைத் தீண்டி சென்றது...

வெகு தூர பஸ் பயணம் அவளின் மனதையும் உடலையும் சோர்வுற செய்திருந்தமையால் நேரே சென்று கட்டிலில் விழுந்தாள்...

விழுந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்...

(பச்ச புள்ள பாவம் தூங்கட்டும் டிஸ்தப் பண்ணாதிங்க காய்ஸ்👀👀👀 தூக்கம் வந்தா நீங்களும் போய் தூங்குக போங்க👻👻👻)

நன்கு துயில் கொண்டிருந்தவளின் கனவில் தன் இறந்த காலம் நிழலாய் வருந்தது...

தனிமையில் எங்கோ அடைப்பட்டு கிடப்பதைப் போல் தோன்றியது...

தூக்கத்திலையே பற்றுகோலாய் ஏதாவது கிடைக்குமா என கைகலாய் துலாவினாள்...

அன்று அவள் அனுபவித்த கொடுமையைத் தடுத்து இவளுக்கு தோள் கொடுக்க யாருமில்லாது போனது போலவே இன்றும் தனித்து விடப்பட்டாள்...

முகத்தில் முத்து முத்தாய் வேர்வைத் துளிகள் அறும்பியது...

திடுக்கிட்டு எழுந்தவளின் வாழ்வே சூன்யமாக...

சுதந்திர பறவையாய் சுற்றி வந்த நாட்களை எண்ணி பார்கையில் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது...

ஆற்றுவோர் தேற்றுவோரின்றி சில நிமிடங்கள் அழுந்தாள்...
மனதில் புதைந்திருக்கும் வேதனைகள் அனைத்தும் கறைந்து போகும்வரை அழுதாள்...

பின் ஒரு வழியாக தன்னை நிலைபடுத்திக் கொண்டாள்...

சுவற்றில் புகைப்படமாய் இருந்த அவளது பெற்றோர் அவளைப் பார்த்து சிரிப்பது போன்று பிரம்மை ஏற்பட்டது...

'நீ அழதே மயூரி உன்னோடு நாங்கள் என்றும் நிழலாக இருப்போம்...', என்று சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது...

"ஐயோ கடவுளே இது எல்லாத்தையும் மறந்து ஒரு புது வாழ்க்கைய தொடங்கதான் நான் இங்கையே வந்தன்... இங்கையுமா... என்னோட கடந்த கால நிகழ்வு என்னை விட்டு போகவே போகாதா... நான் அது எல்லாத்தையும் மறக்கனும்... மயூ எல்லாத்தையும் மறந்துரு...", என்று தனக்குள்ளே முணுமுணுத்தவாறு தன் புகைப்படக்கருவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்...

கதவை திறந்ததும் சில்லென்ற காற்று அவள் முகத்தை உரசிச் சென்றது...

அவளை வரவேற்பது போலவே ஒரு இளம் பெண் வீட்டின் வெளியே ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்...

"அந்த தாத்தா சொன்ன சாருவா இருக்குமோ???", தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டவளின் விழிகள் அந்த புதியவளை மேலிருந்து கீழாக அளவெடுத்தது...

பார்த்ததும் நட்பு கொள்ள தூண்டும் முக அமைப்பு... மயூவைவிட ஒன்றிரணடு வயதே சிறியவளாய் இருப்பாள்...

"ஹாய்... யார் நீங்க??? உங்களுக்கு என்ன வேணும்???", என்று கேள்வி எழுப்பினாள் மயூ...

"ஹாய் அக்கா... என்கிட்ட நீங்க இங்க வர போறத அலமு பாட்டி சொல்லிருந்தாங்க... என் பேரு சாருமதி... இதுக்கு முன்னாடி இங்க தங்கிருந்தவங்களுக்கு நான் நிறைய ஹெல்ப் பண்ணிருக்கன்... உங்களுக்கும் எதாவது தேவைனா சொல்லுங்க..." என்றாள் அவள்...

"இப்போதிக்கு எனக்கு ஹெல்ப் எதுவும் வேணாம்... இந்த ஊர பத்தி A டூ Z சொல்றதுக்கு ஒரு ஆள்... அப்படியே என்கூட கடலை போடுறதுக்கு ஒரு ப்ரெண்ட்... என்ன பண்ணலாம்...", சற்று நேரம் தாடையில் விரல் வைத்து பலமாக யோசித்தவள்...

"ஓகே ஐடியா... நீயே எனக்கு ப்ரெண்ட் ஆகிரு...", என்றவளின் இதழ்கள் புன்னகையில் விரிய விழியில் குறும்புத்தனம் மின்னியது...

சாரு மயூவையே வியப்பாய் பார்த்து கொண்டு நின்றாள்...

(மம்மி பேய் சிரிக்குது👻👻👻 என்னை காப்பாத்து அப்டினு யோசிக்குறாளோ🤔🤔🤔)

"ஏய் என்ன பா அப்டி பார்க்குற... நான் ஒன்னும் லூசில்ல ஓகேவா... எனக்கு இந்த ஊர்ல யாரையுமே தெரியாது... தனியாவே இருக்க ரொம்ப போர் அடிக்கும்... நீயும் கூட இருந்தா ஊர் சுத்த வசதியா இருக்கும்... அதான் கேட்டன்..."
என்றாள் மென்னகையோடு...

"நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கிங்க மயூக்கா...", சாரு
மயூவை சாருமதிக்கு மிகவும் பிடித்திருந்தது... மயூவின் குழந்தை தனமான பேச்சு அவளைக் கவர்ந்தது...

"ஓகே மயூக்கா இன்னியிலேருந்து நம்ம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்... பட் இன்னிக்கு என்னால உங்க கூட வர முடியாதே... முக்கியமான வேல ஒன்னு இருக்கு... நாளைக்கு வேணா ஊர் சுத்த போலாம் சரியாக்கா???", சாரு

"ஏய் என்ன நீ... நம்ம தான் ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்ல... இன்னும் என்ன அக்கா காக்கா... மயூனே சொல்லு சாரு டார்லிங்... சாரு நீ இப்ப எங்க போறனு சொல்லு நானும் வரன்...", மயூ

"ம்ம்ம்... நானா... முக்கியமா ஒரு இடத்துக்கு போறன்... பட் உங்களுக்கு அந்த இடம் புடிக்காம போச்சினா??? அது எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்... நிறைய ப்ரெண்டஸ் இருக்காங்க...", சாரு கை விரித்து சைகை செய்தாள்...

"நோ பிரோப்ளேம் நானும் வரன் ... இங்க செம்ம போர்...", மயூ

"ஓகே வாங்க மயூக்கா போலாம்..." சாரு

"ஏய் இப்ப தானா சொன்னன்... மயூனு சொல்லுனு... நீ என்னடானா இன்னும் அக்கானு சொல்ற... உன்னலாம் என்ன பண்ணலாம்...", இடுப்பில் கை வைத்து முறைத்தவளின் கன்னத்தில் வலிக்காமல் கிள்ளினாள்...

"யூ ஸோ ஸ்வீட் அக்கா... எனக்கு அக்கா இல்ல... நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு... ஸோ இனிமே நீ தான் எனக்கு அக்கா ஓகே... ரொம்ப பீல் பண்ணாதா மயூக்கா... வா போலாம்...", கைபிடித்து இழுத்து சென்றவளை பின் தொடர்ந்தவள் சாரூவைப் பற்றிய அலசலில் இறங்கினாள்...

"ஆமா நீ என்ன படிச்சிருக்க சாரு..." மயூ பேச்சை தொடக்கி வைத்தாள்...

"நான் மேனேஜ்மென்ட்ல டிகிரி வெச்சிருக்கன் அக்கா... பட் இந்த ஊர விட்டு போவ மனசில்லாம இங்கயே இருக்கன்... என்னதான் சிட்டி லைவ் அது இதுனு வந்தாலும் நம்ம ஊர்ல சுதந்திரமா சுத்துற சுகம் கிடைக்காதுல... ஸோ எனக்கு இந்த ஊர்ல இருக்கதான் புடிச்சிருக்கு...", என்றவளின் முகம் மலர்ந்திருந்தது...

"ஏய் சூப்பர்பா... இந்த கிராமத்துல ஒரு நாள் இருக்கிற எனக்கே இத விட்டுடு போவ முடியுமானு தெரியலடா...", என்றவள் கண்களும் லேசாய் கலங்கிற்று...


இனி மயூவே நினைத்தாலும் அவளால் திரும்பி போக முடியாது என்று அவள் அறிந்திருப்பாளா...

வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்தின் பின்னும் விதி என்றொரு விடயம் மறைந்திருக்கிறது அதை அறிந்தவர் தான் இல்லை...

இதுவரை அவளை யார் ஆட்டு வித்திருந்தாலும் இனி அவள் வாழ்க்கைக்கு முழு பொறுப்பு விதியின் கபட நாடகம் மட்டுமே...




தாய்மை மிளிரும்... 💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 03
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN