தாயுமானவன் 02

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நான் அறியா எனக்கே புரியா பல மாற்றம் என்னுள்ளே...
நீ யாரோ நான் யாரோ புரியா புதிராய் நம் நட்பு...
சொல்லிவிட துடிக்கும் இதயம் சொல்லாமல் மௌனம் காக்கும் இதழ்கள்...

இவன் தான் அவனோ என்னைக் கவர்ந்தவனோ...
என்னென்று சொல்வேன் உன்னில் நான் உணர்ந்த காதலை...

காதலே இதுதான் காதல் என்பதா...

சொல்லாமல் தட்டி விட்டான் என் இதயக்கதவினை...
நான் உணரும் முன்னே பறித்து விட்டான் என் இதய துடிப்பினை...

தினம் தினம் அவனின் நினைவுகள்...
பித்தாக்கும் அவனின் கனவுகள்...

புரிந்தும் புரியாத புதிராய் நித்தமும் இம்சிக்கும் இந்த உணர்வு...

உன் காதல் நான்
என்றான் அவன்...

நண்பனாக துணை வருவாயா என்று கேட்டு
நின்றேன் நான்...

நட்பென்ற மூன்றெழுத்தின் பின் மறைந்திருப்பது காதல்
என்ற
மூன்றெழுத்தோ...

கேள்வியோடு கறைந்தோடிய இரவுகள்...
அவன் குரல் கேட்க துடிக்கும் என்னுள் என்னைத் தொலைத்த உணர்வுகள்...

நீ யார் என் வாழ்வில் என்ற கேள்விக்கு விடை தருவாயா நண்பனே

(காதலனே)...

காதல்...

ஒவ்வொரு வாழ்விலும் பிரிக்க முடியா ஒரு சகாப்தம்...

தென்றலின் மீது காதல் சிலர்க்கு...
மயக்கும் மங்கையின் மீது காதல் பலர்க்கு...

வென்பனியாய் மனதை உரசி செல்கிறது காதல்...

************************************

ரவிவர்மனின் கைவண்ணத்தில் உருவான அந்த ஐந்தடி சிலை உயிர் பெற்று தன்னுள்ளே பல குழப்பங்களை சுமந்து சென்றது...

சில்லென வீசிய மலைச் சாரல் உடலை சிலிர்க்க வைத்தது.

எங்கும் நிலவிய நிசப்தம் மனதைத் திகிலடைய செய்தது...

சுற்றிலும் இருந்த அடர்ந்த காடு அச்சத்தைக் கொடுத்தது...

உடலை வருடி சென்றிடும் இளந்தென்றல் அவள் கருத்தில் பதியவில்லை...

நிழல் கவ்விய அந்த ஒற்றையடி பாதையால் அவளுள் அச்சம் ஏற்படவில்லை ...

இயற்கை அழகு அவள் கண்ணில் பதியவில்லை...

மனதில் புதைந்திருந்த குழப்பத்திற்கு விடை ஒன்று காண முடியாதா என்ற ஏக்கத்தில் நடை பயின்று கொண்டிருந்தாள் மயூரி...


பெயருக்கு ஏற்றார் போல் மயூர கண்கள்...

விழியின் வீச்சாலே பல கதைகள் பேசிடுவாள்...

தந்தை மரபணு வழியே வந்த மாநிரத்து யுவதியாக இருந்தாலும் பார்வைக்கு அவள் பேரழகி தான்...

திடமான மனதும் பிறரை எதிர்க்கும் குணமும்... இதயத்தில் சுமந்த அன்பும்...

மாயவிழியும் அவளை பேரழகியாகவே காட்டும்...

உடலை சுற்றியிருந்த கறுப்புநிற சுடிதார் அவளுக்கு மிகவும் பொருந்திபோயிருந்தது...


விடிந்தும் விடியாத காலை பொழுது...

தூக்கத்திலிருந்த கதிவரன் மெல்ல சோம்பல் முறித்துத் தன் துயில் கலைந்து அக்கிராமத்திற்கு ஒளி கொடுத்தான்...

வண்ண வண்ண பூக்கள் யாவும் சூரியனுக்கு தலை சாய்த்து கண்சிமிட்டின...

இருண்டு பயங்கராமாய் காட்சியளித்த அம்மலைக்கிராமம் இயற்கை அழகினை அள்ளி தெளித்து வசிகரமாய் புன்னகைத்தது...

மயூரி அக்கிராமத்திற்கு இன்றுதான் முதன்முதலாக வருகிறாள்... ஒற்றையாய் வருபவள் பலரைத் தன் சொந்தங்களாய் பெற போகிறாள்...

அவளின் வரவிற்கு முன்னாலயே அவளது விதி இக்கிராமத்தில் எழுதப்பட்டு விட்டதுவோ என்னவோ...


ஆகாஷ் அக்காலை வேளையில் இயற்கையை இரசித்தப்படியே மெதுஓட்டத்தில் ஈடுபட்டிருந்தான்...

சுற்றிலும் பூத்து குழுங்கும் பூக்களின் வசிகரத்தில் தன்னை மறந்தவளாக வந்து கொண்டிருந்த மயூவின் பாதையும் ஏதோ சிந்தனையில் எதிரில் வந்து கொண்டிருந்த ஆகாஷின் பாதையும் ஒருங்கே சங்கமித்தது... தன் எதிரில் வரும் ஆகாஷை கவனிக்க தவறிய மயூரி அவன் மீதே மோதி நின்றாள்...

ஆகாஷின் ஓட்டம் தடைப்பெற முகமறியா அந்த ஜீவனுக்கிடையே அழகிய போர் ஒன்று உருவாகியது...


(அப்புறம் என்ன ஹுரோயின் கிழ விழரத்துக்கு முன்னாடி நம்ம ஹுரோ மயூவ தன்னோடு அணைத்து தாங்கி கொள்ள வேண்டியது தானே😉😉😉

அது தான் இல்ல😣😣😣

கிழ விழட்டும்னு நின்னு வேடிக்க பார்த்தது மட்டும் இல்லாம அவள திட்டவும் செஞ்சான்😣😣😣

நான் தான் சொன்னன்ல நம்ம ஹுரோ ஹிட்லருக்கு தத்து பிள்ளனு😈😈😈)



"ஆர் யூ பிலைன்ட்??? கண்ணு தெரில உனக்கு ... முன்னாடி ஆள் வரறது தெரியாம இப்படிதான் வந்து மோதுவியா... இங்க வரரதுக்கு முன்னாடி கண்ண கலட்டி வெச்சிட்டு வந்துட்டியா???", என்று கத்தியவனின் மீது கோபம் வருவதற்கு பதிலாக ஒரு வித ஈர்ப்பு வந்தது...

இதற்கு முன்னதாக இவனை எங்கோ பார்த்தது போன்றதொரு பிரம்மை ஏற்பட்டது...
ஆகாஷை இமைக்க மறந்து பார்த்தாள் மயூ...

தனது தேஜசான முக அமைப்பால் அவளது முழு கவனத்தையும் கட்டி இழுத்தான் ஆகாஷ்...
அவன் தன்னை திட்டுகிறான் என்பது கூட கருத்தில் பதியாமல் போக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மயூ...

(மயூவும் பஞ்சு முட்டாய பார்க்குற மாதிரி அவனயே வெச்ச கண்ணு வாங்காம பார்த்தா😍🤤😍

அச்சசோ இந்த புள்ளையும் ஆகாஷ் மேல லவ்ல விழுந்துடுச்சா😜😜😜 வெய் பேபி வெய்😮😮😮 இவன் ஒரு ஆபத்தான மிருகம்😖😖😖
)


ஆகாஷ்...

யாவரையும் ஒரு முறையேனும் திரும்பி பார்க்க வைக்கும் ஆணழகன்... அதன் காரணமாகவோ என்னவோ அவன் யாரையும் குறிப்பாக பெண்களைத் தன்னிடம் நெருங்க விட மாட்டான்...

ஆகாஷின் பால் மயூ ஈர்க்கப்பட்டது என்னவோ ஒரு நிமிடம் மட்டுமே... விடாது அவளை முறைத்துக் கொண்டிருந்த அவனின் உஷ்ன பார்வையால் சட்டென்று கனவிலிருந்து தன்னை மீட்டெடுத்தாள்...

"ஹலோ மிஸ்டர்.. என்ன விட்டா பேசிட்டே போறிங்க???தெரியாம வந்து மோதுனதுக்கு இப்படிதான் திட்டுவியா??? ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியல... லூசாப்பா நீ??? ", என்றாள் மயூ சீற்றம் குறையாமல்...

(பின்ன நம்மாலு யாரு ஜான்சி ராணி பரம்பரைல😂😂😂)


'ஆஹா என்னடா இது வம்பா இருக்கு... பொம்பள புள்ள என்னமா வாய் அடிக்குது... இந்த ஊர்ல இது வரைக்கும் எனக்கெதுறா, என் முகத்த பார்த்து பேசறத்துக்கு யாருக்கும் துணிச்சல் இருந்தது இல்ல... இவ என்னா செதுக்கி வெச்ச பலூன் (எவ்ளோ நாள்தான் சிலைனு சொல்லி வர்ணிக்குறது😜😜😜 ) மாதிரி இருந்துட்டு என்னையே ஓட்டுறாலே...', என்பதாய் ஆகாஷின் மனசாட்சி அவனைக் கேலி செய்ய தொடங்கியது...
இதனால் மேலும் காண்டாகி போனான் அவன்...

(ஆஹா இதுவும் மோதல்ல ஆரம்பிச்ச காதலா ராசா நடத்துங்க நடத்துங்க😝😝😝)

"இட்ஸ் நோட் பண்ணி அட் ஆல்... என் மேல வந்து மோதுனது நீ... இப்ப என்ன குத்தம் சொல்லிட்டு நிக்குற... என்னைப் பார்த்த என்ன கேனப்பயன் மாதிரி இருக்கா..." என்று கர்ஜித்தான் அவன்...

"வெய்ட் வெய்ட்... இங்க நான் என்ன ஜோக் பண்ணிட்டா இருக்கன்... பண்ணியா இருக்கு கழுதையா இருக்குனு சொல்றதுக்கு... நீங்களா எதாச்சும் கற்பனை பண்ணிட்டு ஒலறாத சரியா... உங்க பார்த்தா கேனப்பயன் மாதிரி இல்ல பட் பேசுனா கான்போர்ம் பண்ணிடலாம்... எதோவொரு காட்டெரும தான் என்ன மேதிருச்சுனு நானே பயந்து போய் இருந்தன்... ஆளப்பாரு முன்னாடி யார் வரானு தெரியாம இப்டியா வந்து மோதுவ... நீ பரவால பனமரம் மாதிரி வளந்து போயிருக்க... கீழ விழுந்தாலும் அடி படாது... பட் நான் அப்படியா... குட்டி பேபி பாரு கைல லைட்டா ரத்தம் வேற வருது...", உதட்டை பிதுக்கி சொன்னவள் புரியாத விதத்தில் அவனை வசிகரித்துச் சென்றாள்...

"அப்போ என்ன எருமன்னு சொல்றியா???", ஆகாஷ் அடுத்த சண்டைக்கு தயாரானான்...

"இத நான் வெற தனியா சொல்லனுமா அதான் பார்த்தாலே தெரியுதோ... சரி சரி வழிய விடுங்கோ நான் என் ஆத்துக்கு போனும்...", என்றவள் ஆகாஷிடம் பழிப்பு காட்டிவிட்டு அவனைக் கடந்து தன் வழியே சென்றாள்...

ஆகாஷுடனான மோதலில் தன் மனக்கவலையிலிருந்து சற்றே விடுப்பட்டாள் மயூ... அவளது இயல்பான குறும்புத்தனம் வெளிப்பட ஆகாஷூடன் சரிக்கு சரியாக சண்டையிட்டாள்...

'கால நேரத்துல உலாவுற மோகினி பிசாசு எதாச்சுமா இருக்குமோ இது... மோகினி வெள்ளை டிரஸ்ல தான வரும் இவ என்னனா கருப்பு சுடில வந்துருக்கா... ஆகாஷு ஒழுங்கா இடத்த காலி பண்ணு... இவ என்னடா உன்னையே கடிச்சி திங்குற மாதிரி பாக்குறா.... ஓகே ஜூட்...', என்று எண்ணியவன் மயூவை முறைத்தவரே தன் ஓட்டத்தைத் தொடர்ந்தான்...



இன்று இவர்கள் பயணிக்கும் பாதை வேறு வேறாகினும் ஒரே நேர்கோட்டில் விரைவிலையே இணைவர்...


தாய்மை மிளிரும்...💜💜💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 02
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN