❤️உயிர் 2❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டு வாசலில் புதிதாய் ஒர் ஹோண்டா சிவிக் வெள்ளை நிறத்தில் நின்றது.

'ஐக் மாமா எப்போ காரை மாத்தினார்.?

கேள்விக்குறியாய் ஒற்றை புருவத்தை உயர்த்தியவள் கேள்விக்கு பதிலாய் பார்வைக்கு புதிதாய் ஒரு ஆண்மகன் சிக்கினான்.

கோதுமை வண்ணத்தில் கூர் நாசியும்,பெரிய கண்களும், அழகாய் ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், சீராய் சீவப்பட்ட தலை முடியும்,பார்க்க ஆண் அழகனாய் இருந்தான்.

இவன் யாரானால் நமக்கென்ன, வந்த வேலையை பார்ப்போம் என அத்தை மாமாவை கண்களால் தேடினாள்.

அவளை அதிகம் அலைய விடாமல் அவளுடைய மோகன் மாமா வந்து விட்டார்.

"அடடே வாடா அஞ்சுக்குட்டி..மாமா இல்லாட்டி இந்த பக்கமே உன் சிங்கக்குட்டி எட்டிப்பார்க்காதோ.?

அவளுடைய சின்ன விவா காரை அப்படி கலாய்ப்பதில் அவருக்கு ஒரு சந்தோசம்.

அஞ்சலிக்கோ இந்த மாமா இப்படி புதிதாய் வந்திருப்பவன் முன் தன் மானத்தை வாங்க வேண்டுமான்னு தோனிற்று.

"போங்க மாமா ..நீங்க இல்லாம உங்க இல்லத்தரசிகிட்ட மாட்டிக்க எனக்கு இன்னும் நட்டு கழன்று போகலையே"

செல்ல குரலில் மாமாவிடம் அத்தை மைதிலியை அஸ்திரமாக்கினாள்.

"உன் கதை ஒலகத்துகே தெரியும் அஞ்சுமா,உனக்கு ஹொலிடே வந்தா தூங்கனும்,அதுக்காக என் அருமை மனைவிய உருட்டாதே கண்ணே, அப்புறம் சாப்பாடுக்கு தாளம் தான் போடணும் ".

மாமா காலை வாரிவிட சமயத்தில் அங்கு வந்த அத்தை அழகு காட்டினாள்.
புதியவன் முன் எதுவும் வேண்டாம்மென அஞ்சலியும் அமைதியாகி விட்டாள்.

அதுவரை அங்கு ஒருவன் இருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தது போல மோகன்,

"அஞ்சுமா மறந்திட்டேன் பாரு,இவர் யுகேந்திரன்,
என்னோட புது பிஸ்னஸ் பார்ட்னர்.போன மீட்டிங் கூட இவரோட டீலர்ஷ்ப் வெசிக்கத்தான்"மோகன் மாமா அந்த நெடியவனை அறிமுகப்படுத்த,

இயந்தரமாய் ஒரு புன்னகையை உதிர்த்தாள்.
அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.

"அப்புறம் அஞ்சுமா இவரு ரெண்டு வாரம் நம்ம கெஸ்ட் அவுஸ்லே தான் இருப்பாரு,அவருக்கு கொஞ்சம் ஷாப்பிங்க் செய்யனுமாம்,

இந்த ஊருக்கு அவரு புதுசு,உனக்குத்தான் போர்ட்டிக்சன் உள்ளங்கைல இருக்குமே.கொஞ்சம் துணையா போயிட்டு
வாடா."என்று சொன்னவரை அதிர்ந்து நோக்கினாள்.

இந்த மாமாவை பார்க்க ஆசையா ஓடி வந்தா எவன் கூடவோ கைடு வேலை பார்க்க
அனுப்பறாரே.

இதுக்கு வீட்ல தூங்கியிருக்கலாம்.
அஞ்சலி மனம் அல்லோல்பட்டது.

'யார் இவன்,இப்படி என் தூக்கத்திற்கு வேட்டு வைத்து உயிரை வாங்குகிறானே, கிராதகன் என்ற எரிச்சல் அஞ்சலியின் அடி மனதில் மண்டியது. பின் அவரே தொடர்ந்தார்.

"மாமாவுக்கு முக்கியமாய் ஒரு வெர்க்
இருக்குடா.. இந்த ஹெல்ப்ப மட்டும் பண்ணு.உனக்கு புடிச்ச நியூ ப்ராண்ட் காமிராவை வாங்கி தரேன்டா "

மாமாவின் offer ஐக் கேட்டதும் அஞ்சலியின் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தன.

"சரி மாமா' மெலிதாய் தலை அசைத்தவள்,

வந்தவனுடன் டௌனுக்கு பயணமானாள்.கடற்கரைக்கு பெயர் போன போர்ட்டிக்சன் மண் அவனை மிகவும் கவர்ந்தது.சுற்றிலும் நீல நிற கடலும்,கலவையாய் மக்களும் கண்ணுக்கு நிறைந்திருந்தனர்.

அதிகம் பேசாமல் அவனுக்கு வழி காட்டியவள் பெரிதாய் நின்ற ஷொப்பிங் மால்க்கு அவனை அழைத்துச் சென்றாள். விடு விடு வென பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தவளை அதிகம் பேசாமல் யுகேந்திரனும் பின் தொடர்ந்தான்.

காருக்குள் அமர்ந்தவள், அவன் பேச ஆரம்பிப்பதற்குள்
அவனை பார்த்து பொரிய தொடங்கினாள்.

'லுக் மிஸ்டர் யுகேந்திரன்,
நீங்க என்ன நெனச்சி இங்க வந்திங்கனு தெரியாது,பட் கல்யாணம் காதல்ன அதுக்கு நான் ஆள் இல்ல"

'என் மாமா எதுக்கு இப்படி பண்றார்னு எனக்குத் தெரியும். கல்யாணத்திற்கு பிறகு வர்ற காதல் மேல எனக்குத் துளியும் நம்பிக்கை இல்ல,
அது.. அது வெறும் கடமையுணர்வுல இவ என் பொண்டாட்டி ,
இவள பாத்துகிற கடமை எனக்கு இருக்குனு ஒரு ஆணும் அதே மாதிரி ஒரு பொண்ணும் சகிச்சு வாழறது எனக்கு பொருந்தாது,
பிடிக்கவும் இல்ல."

"நான் ஒரு விதவை.உயிராய் நேசிச்ச என் ஷிவேந்திரனை எமனுக்கு தூக்கி கொடுத்த பாவி. எங்களுக்கு கல்யாணம் நடக்க ஒரு நாள் இருந்த வேளை அஸ்த்தமனமாய் போச்சு என் வாழ்க்கை."

"இதுக்கும் மேல கல்யாணம் காதல்னு எனக்கு எதும் இல்ல',hope you understand this", இரண்டு பெரிய கண்ணீர் துளிகள் அஞ்சலியின் பட்டுக் கன்னத்தை நனைத்தன.

அவன் எதுவும் பேசாமல் காரை செலுத்த தொடங்கினான்.வாசலில் நின்ற அத்தையிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு
வந்துவிட்டாள்.
மறந்தும் கூட யுகேந்திரனை
அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மனது இரணமாகி விட்டிருந்தது.

நினைவில் கரைந்து போன அவளுடய ஷிவேந்திரன் மௌனமாய் அவள் மனதினை ஆக்கிரமித்தான்.
வருடங்கள் ஏழு ஓடினால் என்ன, ஊமையாகிப் போனவனின் நினைவுகள் அஞ்சலியின் மனதை பிசைந்தது.

கூடவே ஒரு வார்த்தை கூட கூறாது சிலை போல் அமர்த்திருந்தவனை நினைக்கையில் கோவம் தலைக்கேறியது.

"பெயரை பாரு யுகியோ யோகியோ..என் மூட்ட கெடுத்த பாவி"என மனதிற்குள் அவனை சபித்தாள்.
தொடரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN