படம் : கற்பூர முல்லை (1991) இசை : இளையராஜா பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், P.சுசீலா & K.S.சித்ரா பாடல்வரிகள்: வாலி

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்


பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக்கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
ஓ... ஓஓஓஓ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ


யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
ஓ... ஓஓஓஓ... புதுக்கதை அரங்கேறிடும்


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ

பூங்காவியம் பேசும் ஓவியம்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN