என்னடி மாயாவி நீ: 30

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 30

ஐந்து வருடம் கழித்து,

"அம்மா அம்மா எப்படி நீ அப்பா பக்கத்தில் தூங்குற? அம்மா அம்மா எந்திரி நானும் அக்காவும் தான் அப்பா பக்கத்தில் தூங்குவோம் நீ தூங்கக்கூடாது" என தன் தளிர் விரல்களால் வர்ஷித்தின் கை அணைப்பிற்குள் தூங்கும் ஆதிகாவை அடித்து எழுப்பினாள் வர்ஷித் ஆதிகா இணையின் இரண்டாவது ஆசை மகள் தமிழினி.

வர்ஷித்தே அரும்பாடு பட்டு தன் மகளை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து, "இல்லமா அம்மா தெரியாம என்மேல படுத்துருப்பாங்க நம்ம அம்மாதானே தூங்கட்டும்டா" என வர்ஷித் சமாதானம் செய்த பிறகே தமிழ் வெள்ளை கொடியை பறக்க விடுவாள். ஆனால் ஆதிகா அப்போதுதான் அவளை வெறுப்பேற்ற வர்ஷித்தின் மார்பு மேல ஏறி படுத்து இன்னும் இறுக்கியாக கட்டிக்கொண்டு தூங்குவாள். இது இன்று மட்டுமில்ல கிட்டத்தட்ட மூன்று வயது தமிழினிக்கு விவரம் அறிந்த நாள் முதல் நடக்கும் ஒன்று. தமிழ் கட்டுப்படுவது அவளது அக்காவான மலருக்கு மட்டுமே.

ஆதிகாவின் செய்கையை பார்த்து வர்ஷித், 'இந்த வாண்ட கூட சமாளிச்சிறலாம்.ஆனால், இவ்வளவு வயசாகியும் சின்ன பிள்ள கூட சண்டை போடும் இவளை என்ன செய்வது? 'என ஆதிகாவை பார்த்து புலம்புவான். இதுவும் அவனுக்கு வழக்கமாகி போன ஒன்றுதான்.

இக்காதல் ஜோடியின் ஆசை புதல்விகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். முதலில் மலர்மொழி, வீட்டில் எல்லாரும் மலர்மா எனவே அழைப்பர். அப்படியே வர்ஷித்தின் தாய் மலர்வேணியை உரித்து கொண்டு பிறந்தவள். வர்ஷித்தின் குணம் பழக்க வழக்கங்களை அவள் தன்னுடையதாக்கி கொண்டாள். சாந்தமான குணம் உடையவள். அப்பா என்றால் உயிர் அவளுக்கு. அம்மாவை விட்டு பிரியவே மாட்டாள். தாத்தா பாட்டி என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம். நடராஜன் இருவாரத்துக்கு ஒருமுறை வந்து போகும்போது அவரது மடியைவிட்டு இறங்கவே மாட்டாள். அவரும் வர்ஷித்திற்கு கொடுக்க முடியாத பாசத்தையெல்லாம் பேத்திக்கே கொடுத்தார். வர்ஷித்தும் ஆதிகாவும் எவ்வளவோ முறை "இங்கையே இருங்க" என நடராஜனிடம் கூறுவர். ஆனால் அவர் கேட்கவில்லை. "எனக்கு என்னுடைய ஊர்தான் வசதியாக இருக்கும்" என்று சொல்லிவிடுவார். பிருந்தாவும் மலரும் உற்ற தோழிகள் ஆகினர். விடுமுறை கிடைக்கும்போது வர்ஷித் குடும்பம் ஊருக்கு செல்வதும், ஊரிலிருந்து இங்கு வந்து செல்வதும் வழக்கமானது.

ஆதிகா மறுமுறை கருத்தரித்தபோது வர்ஷித் கைகளிலும் மனதிலும் தாங்கினான். இப்பொழுதும் வர்ஷித் பெண்பிள்ளையே கேட்க, மலரும் எனக்கு தங்கச்சி பாப்பாதான் வேணும் என கூறினர். அந்த நாட்களில் மலரும் ஆதிகாவை நன்றாக பார்த்து கொண்டு வர்ஷித் அருகில் இல்லாத குறையை தீர்த்து வைத்தாள். இவ்வாறு பல அன்புகளை கருவிலே பெற்று பிறந்தவள் தான் தமிழினி.

அவள் அப்படியே ஆதிகா போல முகஜாடை, குணம் பிடிவாதம் என எல்லாவற்றையும் அம்மாவிடமிருந்தே எடுத்து கொண்டாள். ஆதிகாவிற்கு தான் இதில் கொஞ்சம் ஏமாற்றம். அவள் இந்த குழந்தை வர்ஷித் போல பிறக்கணும் என ஆசை கொண்டாள். அக்குழந்தை ஆதிகா மாதிரி பிறந்து அவளது ஆசையை பொய்த்துப்போக வைக்க, 'வர்ஷித் போல ஒரு குழந்தையை பெற்றே ஆகவேண்டும்' என ஒரே முடிவாக இருந்தாள். ஆனால் இதற்கு வர்ஷித்தே தடையாக இருந்தான். அவள் அடம்பிடிக்கும்போது, "இனிமேல் நீ கஷ்டப்படுத்த பாக்க முடியாதுடி வேணடாம்" என மறுத்து விடுவான்.

தமிழினியும் மலர்போலவே தந்தை மீது அவ்வளவு பாசம் வைத்திருப்பாள். மலர் இயல்பாகவே மெச்சூர்டாக யோசிப்பாள். இதில் தங்கை வந்ததும் ஒரு தாயாகவே மாறினாள். தமிழ் பிறந்ததிலிருந்து இன்றுவரை மலரே அனைத்தையும் ஆதிகாவிடம் கேட்டு கேட்டு அவளுக்கு செய்வாள். இதை பார்க்கும்போது மலரின் குணத்தை நினைத்து ஆதிகா சந்தோச படுவாள்.

தமிழும் வளர வளர ஆதிகாவிடமும் நல்ல அன்பாகவே இருப்பாள். ஆனால் வர்ஷித் என வரும்போது இருவருமே அடித்துக்கொள்வர் அப்படியே ஆதிகா போல. ஆதிகா "வருமாமா" என கூப்பிடுவதால் தமிழும் "வருப்பா வருப்பா" என அழைப்பாள். அதுமட்டுமின்றி ஆதிகாவிடம், "நீ வெறும் மாமா" என தான் கூப்பிட வேண்டும் என சொல்ல இருவரும் சண்டை பிடித்து கொள்வர். மலர் வர்ஷித் பாடுதான் இதில் திண்டாட்டம். இருவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். இதுமட்டுமில்லாமல் "நீ வருப்பா கூட சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது" என தமிழ் பிடிவாதம் புடிக்கும்போது தான் ஆதிகாவும் வேணும் என்றே அவள் செய்யக்கூடாது என சொல்லும் விஷயத்தை அப்படியே செய்து வம்பிழுப்பாள். இவ்விருவரை சமாளிக்க வர்ஷித் மலரின் ஜீவன் வற்றி விடும்.

வர்ஷித் மலரிடம் முதலில், "நாள் முழுக்க அப்பாவால அம்மா கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலல. அம்மா நமக்காக தானே எல்லாம் செய்றங்க நாமதானே அவுங்கள பாத்துக்கணும். அதனால நீங்க தாத்தா பாட்டி கூட தூங்கினால் நான் அம்மாகூட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்" என கூற மலரும் ஒத்துக்கொண்டு இருவருக்கும் தனிமை கொடுப்பாள். ஆனால் தமிழ் வந்த பிறகு, மலர் தமிழை தாத்தாகூட தூங்க கூப்பிட்டால், தமிழ் தானும் போகாமல் மலரையும் போகவிடாமல் பிடித்து வைத்துக்கொண்டு, "அக்கா நாம அங்க போனால், அப்பாவை யார் பார்த்துக்கொள்வார்கள்? " என போக மாட்டாள். சில சமயம் ஆதிகா பக்கம் பேசாமல் வர்ஷித் தமிழ் பக்கம் பேசிட்டால் ஆதிகா கோபித்துக்கொள்வாள். தமிழை கடினப்பட்டு தூங்கவைத்து விட்டு ஆதிகாவிடம் படுத்துகொள்ளவான். அவளை சமாதானம் செய்வதா வர்ஷித்திற்கு கடினம். அவன் வழியில் அதை சரி செய்து விடுவான். ஒருபக்கம் இப்படியிருந்தால் மறுபக்கம் வர்ஷித் மகள்களின் அன்பை நினைத்து சந்தோசம் கொள்வான். அவனது சந்தோஷம்தானே ஆதிகாவிற்கு பேரானந்தம்.

வர்ஷித் வீட்டில் இல்லை என்றால் தமிழ் ஆதிகா ஒற்றுமையை பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள் இவ்விருவர்தான் அப்போது அப்படி சண்டை பிடிப்பார்கள் என்று. தமிழ் வர்ஷித் பக்கம் நின்றால் மலர் ஆதிகா மடியில் உட்கார்ந்து "நான் அம்மா பிள்ளை" என அம்மா பக்கம் நிற்பாள்.

இவ்விரு பேத்தி தான் உலகம் என வாழ்ந்தனர் சுப்பிரமணியம் வசந்தாவும். ஆதிகா வசந்தா இருவரிடமும் பிணைப்பு அதிகமாயிருந்தது. ஆதிகா வர்ஷித்தின் காதல் சொல்லவே வேணாம் நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக இம்மியளவும் குறையாமல் வளர்ந்தது. வர்ஷித்திற்கு அலுவல் வேலை நிறைய இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை எப்போதும் குறைக்க மாட்டான். குடும்பம் தானே அவனுக்கு பலம்.

அன்று வர்ஷித்தும் மலர்மாவும் சேர்ந்து தமிழினியிடம் பேசி சமாளித்து வர்ஷித் ஆதிகாவை மட்டும் வெளியே அழைத்து சென்றான்.


ஆதிகா என்னன்னவோ சொல்லி கேட்டுவிட்டாள் "எங்கே போகிறோம்" என. அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையை கூட ஆதிகாவால் வாங்க முடியவில்லை. அவள் சோர்ந்து போனதுதான் மிச்சம். கடைசியில் போகும்போது கேட்டு கொள்வோம் என விட்டுவிட்டாள்.

இருவரும் கிளம்பும்போது தமிழினி அம்மா அருகில் வந்து, "அம்மா இங்க பாரு உன்னைய நம்பித்தான் அப்பாவ அனுப்பிவைக்கிறேன். அப்பா என்ன கேட்டாலும் செய்யணும் சரியா நானும் வரலாம்தான் இருந்தேன் அப்பா ரொம்ப கெஞ்சி கேட்டாங்க அதுனாலதான் உன்னைய மட்டும் அப்பாகூட அனுப்பிறேன்" என பெரிய மனுசி போல பேசியவளை கண்கள் இடுங்கள் பொய் கோபத்துடன் முறைத்து பார்த்த ஆதிகாவை வர்ஷித், "வேணாம்டி நான் பாவம் கிளம்பும்போது உன் பொண்ணுகூட பிரச்சனை பண்ணாதடி" எனும் கெஞ்சல் மொழி தனிய வைத்தது.

குடும்பத்தாரிடம் விடைபெற்று இருவரும் காரில் பயணம் மேற்கொண்டனர். ஆதிகா, " மாமா கை கால மட்டும் கட்டிப்போட்டா பத்து பொருத்தமும் பக்காவ இருக்கும்" என தீவிரமாக சம்மந்தமே இல்லாமல் கூற வர்ஷித், "எதுக்குடி? என்ன சொல்ற? தெளிவா சொல்லேன்" என சொல்ல "ஆமா நீதான் எங்க அழைச்சிட்டு போறேன்னு சொல்லாம அழைச்சிட்டு போறியே, அதான் இப்போ என்ன கடத்திட்டு போற மாதிரி தான்டா இருக்கு" என வருத்தமாக கூறினாள். அதை கேட்டு பெரியதாய் சிரித்தவன், "ஏன்டி நான் ஏன் என்னோட சொந்த பொண்டாட்டிய கடந்த போறேன்? " என கேட்டான். அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு "மாமா ப்ளீஸ் சொல்லு மாமா எங்க போறோம்? எங்க அழைச்சிட்டு போற?" என வினாவ வர்ஷித்தும், சரி போனா போகுது என நினைத்து, "ஆதிமா நாம ஹனி மூன் போறோம்டி"என ஆசையாக சொல்ல அவனை பார்த்து புரியாமல் விழித்தவளிடம் "அதான்மா தேன்நிலவு தேன்நிலவு" என வெட்கத்தோடு விளக்கம் அளித்த வர்ஷித் திரும்பி ஆதிகாவை பார்த்தான். அவளின் முகபாவனை அவனின் பதிலை கேட்டு அஷ்டகோணலாக மாறி பிரதிலிப்பதை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தான். அவனது சிரிப்பை பார்த்து ஆசையாக அவனது முகத்தை தன் விரல் கொண்டு தடவினாள். "ஏன் மாமா ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகியாச்சு இப்போ இந்த தேன் நிலவு ரொம்ப முக்கியமா மாமா? " என அமைதியாக கேட்டாலும் வர்ஷித்தின் வெட்கம் தொற்றிக்கொண்டது. "இப்படி நீ வெட்க படும்போது ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகிட்டேனு நான் மறந்தறேன்டி" என அவன் முகத்தில் உள்ள அவளது கரத்தினை தன் கரத்தினுள் அடக்கி சொல்லி மேலும் அவளை வெட்கபடவைத்தான். "உன்கூட கொஞ்சம் அதிகமா நேரம் செலவிடணும்னு தோணுச்சுடி, எத்தனை பொண்ணுங்க நமக்கு பிறந்தாலும் என்னோட முழுநிம்மதி உன்கிட்டதான் இருக்குடி" என கூறியவனிடம் காதல் பார்வை வீசி அவனது தோள் மீது சாய்ந்து கொண்டாள். மறுநொடியே நிமிர்ந்து அமர்ந்து ஆதிகா, "மாமா ஹனி மூன்னா பிலைட்லல அழைச்சிட்டு போகணும் நீ என்ன கார்ல அழச்சிட்டு போற" என கண்களில் குறும்பு மின்ன கேட்க, "ஏன்டி நம்ம ஊருக்குள்ள போனா ஆகாதா, ஹனி மூன்னா வெளிநாடுதான் போகணுமா? " என அவளது கேள்வியில் நொந்தவனாய் கேட்க, அவள், "சரி பொழச்சுப்போ. ஆனால், நீ ரொம்ப கஞ்சன்டா" என முறுக்கிக்கொண்டு வம்பிழுக்க, "சரி நான் மத்ததுல கஞ்சனா இருந்தாலும் காதல்ல வாரி வழங்குற வள்ளல்டி உனக்கு அது தெரியாத என்ன "என அவளை பேச்சில் மடக்க அவள் தோல்வியை தழுவினாலும் அவனது காதலில் என்றும் ஜெயம் காணும் பட்டத்துராணி அவள் தானே.

பயணத்தில் இரவு தீர்ந்து காலை புலர்ந்தது. வர்ஷித்தும் ஆதிகாவும் வந்தடைய வேண்டிய இடத்தை அடைந்தனர். தூங்குன ஆதிகாவை எழுப்பி அவள் காரிலிருந்து இறங்கும்போதே அவளது கண்களை தன் கரம் கொண்டு மூடினான். அவள் ஏதும் புரியாமல், "என்ன மாமா?" என கேட்க அவள் காதுக்குள் "சும்மா வாடி கேள்வி கேட்காம" என கூறி அவ்விடத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கு நிற்க வைத்து கண்களிலிருந்து கைகளை எடுத்து அவளருகிலே நின்று கொண்டான். அவள் சுற்றி சுற்றி பார்க்க ஒரே கூட்டமாக இருந்தது. பார்க்கும் போதே சுற்றுலா தலம் என கண்டுபிடித்து தூக்க கலக்கத்தோடு, " இது என்ன இடம் மாமா? " என வர்ஷித்திடம் கேட்டவளின் முகத்தை நேராக திருப்பி பார்க்க வைத்து அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான்.

அவள் அங்கு பல செங்கதிர்களை பரப்பி ஆழியின் மடியிலிருந்து துயில் எழுந்து மஞ்சள் நிறத்தை அப்பிக்கொண்டு காட்சி அளித்த சூரியன் தந்த விடியலை பார்த்து விழிவிரித்து ஆச்சரியத்தில் பலநாள் கனவில் மட்டும் கண்டதை இன்று நேரில் பார்த்து நிஜமா இங்குதான் வந்திருக்கிறோமா? எனும் சந்தோஷத்தில் இருந்தவளின் காதில் மேலும் மகிழ்ச்சி ஊற்றெடுக்க "என் வாழ்வில் விடியல் தந்த மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டி" என வாழ்த்து கூறினான் வர்ஷித்.

அவ்விடம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் ஒருங்கே இடம்பெற்றிருக்கும் கடல் தான். அங்கு சூரிய உதயம் பார்க்கவே ஆதிகா ஆசைப்பட்டாள். அதுக்கு இன்று நிகழ்ந்துவிட்டது, நிகழ்த்திவிட்டான் அவளது மணாளன், அதுமட்டுமின்றி தன் பிறந்தநாளை நானே மறந்தபோதிலும் அவன் நினைவு வைத்து தன் மனதிற்கு பிடித்த இடத்திற்கு கூட்டி வந்து வாழ்த்தியுள்ளானே, தன்னை மகிழ்ச்சிகொள்ள வைக்கும் அவனது காதல் கண்டு அதிசயித்து ஆனந்த மிகுதியில் தன்னை வாழ்த்தியவனிடம் திரும்பி சுற்றம் பார்க்காமல் ஒரு நொடிக்குள் அவன் உதட்டில் சிறு முத்தம் இட்டாள்.

அவன் உணர்வதற்குள் ஆதிகா விலகினாள் வெட்கத்துடன். ஆதிகாவிற்கு அந்த இடத்திற்கு வந்ததை விட தன்னவன் தனக்காக இதனை செய்ததை நினைத்து மகிழ்ச்சிகொண்டு அவனது காதல் தனக்கு கிடைத்த பாக்கியம் என நினைத்தாள்.

அவள் அதனை ரசித்து பார்த்துக்கொண்டே, "நான் எதிர்பாக்கவே இல்ல மாமா" என வர்ஷித்திடம் கூற வர்ஷித்தும், " நானும் இத எதிர்பாக்கவே இல்லடி" என தன் உதட்டினை வருடிய படியே கூற அவள்" போடா" என செல்லமாக அவனது தோள்களை இடித்தாள்.

அந்த நாள் முழுதும் ஆதிகா வர்ஷித்தை விட்டு நகரவே இல்லை. அவனும் அவளை கைவலைக்குள்ளே வைத்திருந்தான். மகிழ்ச்சியாக அந்நாளை கழித்தனர். அங்கே தங்கி ஊர் சுற்றினர்.

அன்றிரவு உணவு முடித்து பால்கனியில் இருவரும் நின்று காற்று வாங்கிகொண்டிருக்க, "ஆதிகாவிடம் சந்தோசமா இருக்கியாடி? " என வர்ஷித் கேட்டான். ஆதிகா நொடியில் "இல்ல" என்றாள் வெறுமையோடு. "ஏன்? " என வர்ஷித் கேட்க "எனக்கு பர்த்டேக்கு கிப்ட் வேணும்" என கேட்டாள். அவன் முழித்து, "என்ன கிப்ட்டி வேணும்? "என கேட்க "பேபி வேணும்" என்றாள் சாதாரணமாக. "ஒரு தடவ சொன்னா நீ கேட்க மாட்டியாடி வேணாம்னா வேணாம் இது பத்தி இனிமேல் பேசாத" என அவன் கோபமாக கூற, "பேசுவேன் எனக்கு பேபி வேணும்" என பிடிவாதமாக கூறியவளின் கையை உதறிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான். அவள் அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கே நின்றாள். "பிடிவாதம் பிடிவாதம்" என முணுமுணுத்துவிட்டு அவளிடம் பேசவில்லை. அங்கே மௌனமொழி ஆட்சி செய்ய வர்ஷித்தே பேசினான். ஏனென்றால், ஆதிகாவை பற்றி தான் தெரியுமே அவள் பிடிவாதத்தில் எவ்ளோ நேரம் என்றாலும் அப்படியே இருப்பாள் என்பது.

"ஏன்மா அடம்பிடிக்கிற? " என அவனே இறங்கி வந்து கேட்க, "உன்னைய கொஞ்சுறதுக்கு உனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அதுபோல என்னையும் கொஞ்ச கெஞ்ச ஒரு பையன் வேணும்" என கூற அவன் சமளிக்கும்பொருட்டு "அது எல்லாம் முடியாதுடி உன்னைய கெஞ்சுறது கொஞ்சுறது நானாதான் இருக்கனும்" என கூறியவனிடம் "இதெல்லாம் நான் ஒத்துக்க முடியாது"என பிடிவாதமாக கூறினாள். சிறிது நேரம் கழித்து, "இது மட்டும்தான் காரணமா நீ பேபி வேணும்னு கேக்குறதுக்கு? " என வினாவியவனின் அருகில் சென்று அமர்ந்து "எனக்கு உன்ன மாதிரி ஒரு குழந்தை வேணும்டா, உன்னோட இந்த கண்ணு, இந்த மூக்கு, உன்னோட அழகான சிரிப்பு இதெல்லாம் அப்படியே உள்ள மாதிரி பேபி வேணும் அதுவும் பையன் தன் வேணும்" என கற்பனையில் வடிவம் தந்த குழந்தையை ரசித்து கூற அவளின் கற்பனையை கலைக்க முடியாமல், "என்ன ஆதிமா அதான் மலரும் தமிழும் இருக்காங்களேடி" என கேட்க "போடா மலர்தான் என்னோட பொண்ணு, தமிழ் அப்படியே என்ன போலவே பிடிவாதம் அதுவும் உன் விசயத்துல. ரெண்டுபேருக்கும் உன் சொல்தான் வேதவாக்கு அதனால பையன்தான் வேணும்" என அவள் கூற்றிலே விடாமல் கொடிபிடிக்க அவன் கல் போல அமர்ந்திருந்தான். "போடா, எப்போதான் என் பேச்ச நீ கேட்டிருக்க" என அவனை அடித்து எழ போனவளை கரம் பற்றி தடுத்து தன் மீது சரித்து, "இப்படி கோவிச்சிக்கிட்டு போன நீ கேட்ட பேபி வந்துருமாடி? " என கேட்டவனை விழிவிரித்து நம்பாமல் பார்த்தளை, "நீ கேட்ட பர்த்டே கிப்ட் வேணாமா? " என கேட்டு அவளை மார்போடு ஒன்றவைத்து ஆதிகா கேட்டதை செய்கிற வேளையில் மூழ்க ஆரம்பித்தான்.

நினைத்ததை சாதித்துவிட்ட களைப்பில் படுத்திருந்தவளிடம், "ஏன் ஆதிமா உனக்கும் தமிழுக்கும் ஒத்து போகமாட்டிக்குது? " என வர்ஷித் கேட்க, "அவ கிடக்குற மாமா நான் மட்டும் இப்போ உன்மேல தூங்குறேன்னு அவளுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் சாமியாடுவா" என கூறி சிரித்தாள் ஆதிகா. சிறியதாய் சிரித்தவன் "உண்மையிலே அவமேல உனக்கு கோபம் வராதாடி? "என கேட்டவனை விசித்திரமாய் பார்த்து "நீர் அடிச்சு நீர் விலகுமா மாமா, சும்மா அப்போப்போ அவளை வெறுப்பேத்துவேனே தவிர அவ மேல நான் கோபப்படுவேனா மாமா அவ இப்படி இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா உன்மேல பாசமா இருக்குறப்போ நீ சந்தோசமா இருப்ப உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம், நீ எப்பவும் இப்படித்தான் சிரிச்சிகிட்டே இருக்கனும் என கூறியவளின் நெற்றியில் முத்தமிட்டு அவனை மாற்றி காலம் முழுக்க காக்கும் அவனது மாயாவியின் காதலுக்குள் மாயமானான்.

நிம்மதிபூவை பறித்து வெறும்
பொட்டலை கொடுத்த உலகத்தில்
சோகமே சூறாவளியாய் தாக்க
விதியால் தனித்துவிடப்பட்டு
சோதனையின் வழிப்போக்கில்
பயணித்த என் வாழ்வை
உன் காதலால் மீட்டெடுத்து
இனிமையான பக்கங்களை புரட்டி
அதில் ஆனந்த பத்திகளை ஊற்றி
அழகுற தீபங்களை ஏற்றி
மலரவைத்துவிட்டாயேடி

என்னடி மாயாவி நீ...
 

Author: yuvanika
Article Title: என்னடி மாயாவி நீ: 30
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Romba nandri sago romba happya irruku ella episodekum reply pannirukinga kathaiya pathi nirai kurai aprm yaaru ithula ungalukku pudicha character nu sollunga ethavuthu mistake irrunthaalum sollunga... ithu enniya shine pannkia thevai padum again romba thanks jiii thodarnthu ella storykum aatharavu kodunga aprm intha sitela ennoda kavithaiyum post panniruken padichi paathutu karuthukalla pathivu pannunga jii
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN