❤️உயிர் 7❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார் அந்தபிரமாண்ட பங்களாவின் வாசலில் நின்றது.வரவேற்பறையில் நின்றிருந்த ஆளுயர பிள்ளையார் சிலை அவளை வரவேற்றது.ஆரத்தி எடுக்க வந்த ஆயாவை யுகேன் அஞ்சலிக்கு அறிமுகப்படுத்தினான்.

"அஞ்சலி இவங்க என்னை வளர்த்தவங்க,சீதாம்மானு பேரு.என் அப்பா வழி சொந்தம்னு வெச்சுக்கோயேன் .

"அம்மா அப்பா கூட தொழில் விசயமா அலையறப்ப நான் ,அனு இவங்க கண்காணிப்பில் வளர்ந்தவர்கள்'. பெருமையாய் சீதாம்மாவின் கைப்பற்றி அஞ்சலிக்கு அறிமுகப்படுத்தினான்.

தாய்மை நிறைந்த கண்களுடன் அவளை வரவேற்றவரை அஞ்சலிக்கு பிடித்துப்போயிற்று.
'ராஜா இப்படி ஷாக் நியூஸ் குடுப்பேனு நான் எதிர்ப்பார்கலடா,பொண்ணு உனக்கு ஏத்த மாதிரி இருக்காளே.அதுவும் அந்த கன்னக்குழி செம்மடா'.இன்னாள் பிள்ளைகள் பேசுவது போல் பேசும் அவரை ஆச்சர்யமாய் அஞ்சலி பார்த்தாள்.

'அது ஒன்னுமில்ல அஞ்சு, இந்த உதய் பயல் இப்படி பேச இவங்களுக்கு கத்துக்கொடுத்துட்டான்."சீதாம்மா சமையல் ரொம்பா ருசியா இருக்கும்,இந்த சாப்பாட்டு ராமன் நல்ல முழுங்கிட்டு "ஆண்டி இன்னிக்கு சமையல் செம்ம யா இருக்குனு டயலாக் விடுவான்.அது இப்படி அம்மாவையும் ஒட்டிக்கொண்டது.
சலுகையாய் அவர் தோளில் சாய்ந்து கொண்டே அஞ்சலியின் பார்வைக்கு அர்த்தம் கூறினான்.

"வா,அம்மாவையும்,பாட்டியையும் பார்த்துட்டு வரலாம்'.
அஞ்சலியின் கைப்பற்றி கமலத்தின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
கொஞ்சம் தடித்த சரீரம் வெண்பட்டில்,கம்பீரத் தோற்றதில் கமலம் அவளின் பார்வைக்கு கிடைத்தார்.

'அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க'அஞ்சலியுடன் யுகேன் கமலத்தின் கால்களில் விழுந்தான்.

'ம் ம் நல்லாயிருங்க நல்லாயிருங்கனு' சொல்லி விட்டு விருட்டென எழுந்து பால்கனிக்கு சென்று விட்டார்.அவர் கோவம் புரிந்தவன் போல் எதுவும் பேசாமல் அஞ்சலியுடன் அவன் தாய் வழி பாட்டி பர்வதத்தை பார்க்க கூட்டிச்சென்றான்.மகன் வயிற்றுப் பேத்தி மருமகள் ஆக முடியாமல் போன வருத்தம் அவர் முகத்திலும் தெரிந்தது.

இறுக்கம் தளராத முகத்துடன் அவரை பார்க்கவே அஞ்சலிக்கு பயமாய் இருந்தது.
காலில் விழுந்தவர்களை கவனியாது போல் இருந்த அவரது பாராமுகம் அஞ்சலிக்கு வலித்தது.வலிய ஏற்ற நாடகம் போல் இந்த திருமணம் .இருக்கும் வரை நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றே அவள் மனம் விரும்பியது.அலட்சியமாய் முகம் சுளித்த அனுவும் தன் திருமணம் நினைவில் கொண்டு செயற்கையாய் புன்னகையித்தாள்.இதை அவள் எதிர்ப்பார்த்ததுதான்.

அவளுக்கான அறையும் யுகேன் அறையோடு ஒட்டி அமைந்திருந்தது.கண்களுக்கு எல்லாமே விசாலமாய் தெரிய, மனித மனங்கள் மட்டும் குறுகி விட்டது போல் ஒரு எண்ணமும் அவளுக்குள் எட்டிப்பார்த்தது.

'அஞ்சலி,உனக்கு வேண்டியது எல்லாம் சீத்தாம்மா பார்த்துக்குவாங்க.
நான் வரும் வரைக்கும் பத்திரமா இருந்துக்குவியா?"
சிறு கவலையோடு வினவிய கணவனை நோக்கி முறுவலித்தாள்.

'இட்ஸ் ஒகேப்பா,நான் இருந்துப்பேன்.நீங்க பத்திரமாய் போய்ட்டு வாங்க.
எதும் அவசரம்னா கால் பண்ணுங்க'பண்மையில் அஞ்சலி அவனை அழைத்தது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

'ஹேய் இது என்ன வாங்க போங்கனுட்டு,எப்பவும் போல கூப்பிடு அஞ்சு.எனக்கு ஒரு மாதிரியா இருக்கு,"அஞ்சலிக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

'அட ஆமால்லே,அது வந்து அம்மா சொன்னாங்களா,மாப்பிள்ளையை மரியாதையா கூப்பிடனுமாம்,பழகிக்கிட்டா ஈஸின்னு சொன்னாங்களா,அதான் ஒரு ரெண்டு நாளைக்கு கஸ்டப்பட்டு இத பழகினேன்.

"நன்றிடா,இப்போதான் எனக்கு நிம்மதியா பீல் வருது' நிம்மதி பெருமூச்சு வந்தது போல் நடித்தாள்.யுகேனுக்கும் சிரிப்பு வந்தது.

'அம்மா தாயே,இந்த ரூம்ல எப்படி வேணும்னாலும் கூப்பிடு,ஆனா அம்மா முன்னுக்கு வேண்டாமே.அப்புறம் கதையே இல்ல'.சிரித்தவாறு அவளிடம் விடைப்பெற்றவன்,அந்த சின்ன குயில் கழுகு கூட்டில் மாட்டிக்கொண்டு வதைப்படும் என்று எண்ணவில்லைதான்.
மூன்று வாரங்கள் இந்தியாவில் வியாபார நிமித்தம் செல்பவனுடன் அஞ்சலியின் பெற்றோரும் பயணப்பட்டனர்.

தாய் தந்தையரை பிரிந்திருக்க அதிகம் நேராத காரணத்தினால் அவர்கள் பிரிவு அவளையும் வாட்டியது.அந்த பங்களாவில் அவளுக்கு துணை சீத்தாம்மா மட்டுமே.
வலிய சென்று அஞ்சலியே அனைவருக்கும் உதவிடுவாள். இந்திரியர் டிசைனிங் படித்திருப்பதால் தோட்டத்தையும் வேலையாள் துணையோடு மாற்றி அமைத்தாள்.

கமலமோ அல்லது அவருடைய தாயோ அஞ்சலியிடம் பேசுவது கூட இல்லை.
இருந்தாலும் அவர்களுக்கு வேண்டியவற்றை அஞ்சலி செய்ய தவறுவதும் இல்லை.
என் பிள்ளையை வலைச்சிட்டவ என்ற எண்ணம் கமலம் மனதிலும் ஆழமாய் மண்டிவிட்டது.
மதிக்கு என்ன பதில் சொல்வது கூட தெரியாது பெரிதும் தவித்துப்போனார்.
தன் இயலாமையை அஞ்சலி மீது ஆத்திரமாய் காட்டினார்.

யுகேனிடமிருந்து அஞ்சலியை பிரித்து மதியை சமயம் பார்த்து கட்டி வைக்க கூட அந்த தாய் மனம் துணிந்து விட்டது.அனு கல்யாணம் முடியும் வரை காத்திருக்கவேண்டுமே.எனவே அனுவின் கல்யாணத்திற்கு அவசரப்படுத்தினார்.
பிசினசில் பிசியாக இருக்கும் மகனிடம் ஒருவாறு பேசி விரைவில் உதய்-அனுமாலினி
திருமணத்தை நடத்தியும் விட்டார். அடிக்கடி அவுட் ஸ்டேசன் போவதால் உதயை k.lல் கிளையை பார்த்து கொள்ள வேண்டி அவர்கள் வீட்டிலேயே தங்க வைத்தும் விட்டான்.

'டே மச்சான்,உன்ன நம்பி நான் அஞ்சுவை விட்டுட்டு போறேன்,உன் தங்கச்சியை பார்த்துக்கோடா.கொஞ்ச நாள்தான்..இதெல்லாம் செட்டில் பண்ணிட்டு நான் அவ கூட என் கனவு மாளிகைக்கு போயிர்வேன்'.தீர்க்கமாய் பேசிய யுகேனை உதய் அணைத்துக் கொண்டான்.

'நீ தாராளமாய் எங்க வேணும்னாலும் போயிட்டு வா,அஞ்சு என் பொறுப்பு மச்சான்'.
அவனுக்குமே அந்த வீட்டில் அஞ்சலி படும் பாடு அறிய அதிகம் வழி இல்லையே.
நல்ல ஸ்தாபனம் அவர்களுடையது.கட்டிக்காக்கும் பொறுப்பை நண்பன் விட்டுச் சென்றிருக்கிறான்.

வேலை முடிந்து உதய் வீடு திரும்பும் பொழுது இரவு மணி 10.30க்கு மேல் ஆகிவிடும்.
காலையில் அஞ்சலியை பார்த்தால் புன்னகையிப்பான்.அவளுடைய காபிக்கு அவனும் அடிமையே.

'அஞ்சலி உண்மையை சொல்,உன் காப்பிய குடிச்சிட்டுதானே யுகேன் உன் கட்டிக்க ஒற்றை காலில் நின்றான்? "நல்ல கைப்பக்குவம் அம்மா உனக்கு, எனக்கும் இருக்கிறாள் பார் தர்மபத்தினி 3 in 1 காபியை குடி குடி என்று கொன்றே விடுவாள்."

அனுமாலினி அருகில் இருப்பதை மறந்து ஒரு காலை பொழுதில் ஜோக் அடித்து அன்று முழுதும் அவளிடம் மண்டகப்படி வாங்கியதை அடுத்து உதய் வாய் திறப்பதும் இல்லை.
இதுவே அனுவிற்கு அஞ்சலியை பிடிக்காமல் போக செய்தது.

அஞ்சலியின் இடை வருடும் கூந்தல்,சிறுத்த இடையும்,கன்னத்தில் சுழியும் குழியும் அனுவிற்கு பொறாமையை தூண்டியது.அனு அழகு என்றாலும்,
அஞ்சலி போல் நீள் கூந்தலும்,சிறுத்த இடையும் இல்லாதவள்.வெள்ளை மாவில் பிடித்து வைத்த பொம்மை போல் இருப்பாள்.நாகரிக உடைகளும் நுனி நாக்கு தமிழுமே அவளுடைய K.L பணக்கார வாழ்க்கை கற்றுத்தந்தது.அவளை போல் இருக்கும் மதியை அதனால்தான் அனுவிற்கு பிடிக்கவும் செய்தது.நளினமாய் முகத்தில் அனாவசிய ஒப்பனையின்றி புன்னகை ஒட்டிய அஞ்சலியை அவள் அதிகமே வெறுத்தாள்
.
அஞ்சலியை அது செய்,இது செய் என்று அவள் தாய் கமலத்தின் முன்னே ஏவுவாள்.எதுவும் பேசாமல் அனுவிற்கு வேண்டியதை அஞ்சலி தட்டாமல் செய்வாள்.அப்படியாகினும் அனு தன்னுடன் இயல்பாய் பழக மாட்டாளா என்ற நப்பாசை அவளுக்கு.செல்லில் தொடர்பு கொள்ளும் கணவனிடம் சந்தோசமாய் இருப்பதை போலவே காட்டிக்கொள்வாள்.சமயதில் சுடு சொற்களால் துளைக்கும் மாமியாரையும் பாட்டியையும் கூட அவள் அவனிடம் விட்டுக் கொடுத்ததில்லை.

'யுகேன் இன்னிக்கு நான் அத்தைய கூட்டிட்டு நம்ம தோட்டத்தில் உலா போனேன்,அத்தை நான் செய்த மாற்றங்கள் நல்லா இருக்குனு சொன்னங்கடா!.
ஆனால் அன்று நடந்ததோ அவளை வேதனைபடுத்தும் விதமாக அமைந்த ஒரு விசயமாகவேஇருந்திருக்கும்.

அந்த வீட்டில் அவளுக்கு நடக்கும் கொடுமையறிந்தும் எதுவும் செய்ய இயலா நிலையில் சீத்தாம்மாவும் இருந்தார்.
அவளுடைய வேதனைக்கு வடிக்கால் அந்த ஜீவன் மட்டுமே அங்கே இருப்பதாய் அஞ்சலி நம்பினாள்.அதிக மன உளைச்சல் உடலையும் பாதிக்குமே.அஞ்சலி உடல் மெலிந்தும் போனாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN