❤️உயிர் 8❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று அவளுக்கு ஜூரம் கண்டுவிட்டது.அவளுடைய ஆசை மழைக்கூட மோசம் செய்து விட்டது.கடும் வெயிலுக்கு பின் வரும் முதல் மழை உடலுக்கு நல்லதன்று என அஞ்சலி அறிந்திருந்தாலும்,மறு நாள் அனுவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் இருந்தது;

அதற்கு அவள் உடுத்த வேண்டிய கல்யாண பட்டுப்புடவையை நிழலில் உலர்த்த வேண்டி மாடியில் காய வைத்து விட்டு அனு பார்லருக்கு சென்று விட்டாள்.
மழை நீர் பட்டு புடவையை வீணாகிவிடும் என்ற பயத்தில் அஞ்சலி மாடிக்கு விரைந்தாள். நல்ல வேளை மழை தூறல் என்றாலும் அனுவின் புடவை மேல் லேசாகவே பட்டிருந்தது.ஆனால் அதனால் அஞ்சலிக்கு காய்ச்சல் கண்டுவிட்டது.

இரவில் கணவனுடன் பேசியவள் தனக்கு காய்ச்சல் என்பதைக்கூட மறைத்து விட்டாள்.அவசரத்திற்கு ஒரு பரசிட்டமாலை வாயில் போட்டுக் கொண்டு நாளைய விசேசத்தின் வேலைகளில் மூழ்கிப்போனாள்.

மறுநாள் யுகேனுக்கு அவசர மீட்டிங்க் என்பதால் வர இயலாது என்பதை இரவிலேயே அவளிடம் சொல்லியுருந்தான்.காலை வேளையில் மங்கள வாத்தியங்கள் சிஸ்டத்தில் இசைக்க தாலி கோர்க்கும் வைபவம் நிறைவேறியது.
இடையில் உடல்வேதனையும் பொருட்படுத்தாது கையில் குங்கும சிமிழுடன் அஞ்சலி நின்றிருந்தாள்.

அனு குங்குமம் எடுத்து தாலிச்சரடில் ஒற்ற கை வைக்கும் நேரம் அஞ்சலியை ஒரு பிஞ்சு இடித்துவிட்டு ஓடியது.நிலைத்தடுமாறியவளின் கையிலிருந்த குங்கும சிமிழும் கீழே விழுந்தது.அபசகுனமாய் நிகழ்ந்ததாய் எண்ணிய அனு ஆத்திரத்தில் அஞ்சலியை அறைந்தும் விட்டாள்.

பொறி கலங்கினாற் போல இருந்த அஞ்சலி எதன் மேலோ மோதி நிமிர்ந்தாள்.
அங்கே ஆத்திரத்தில் சிங்கம் போல் நின்றவன் யுகேந்திரனே.

'அனூ...'ஆத்திரத்தில் யுகேன் குரல் ஓங்கி ஒலித்தது
'இதோட நிறுத்திக்கோ!'

"அண்ணா..வந்து வந்து..'யுகேனின் கோவம் அனுவிற்கு பயத்தை உண்டு பண்ணியது.

'உங்க எல்லோரையும் நம்பித்தானே அஞ்சலிய இங்க விட்டுட்டுப் போனேன்.
வீட்டு மருமகளை இப்படி நடத்தும் நாகரீகம் எங்க கத்துக்கிட்டிங்க?

"உதய் என்ன இதெல்லாம்?இதுதான் நீ எனக்கு சொன்ன வாக்கா?
நா இத கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலடா!' யுகேனின் கோவம் உதய் மேல் பாய்ந்தது.

உதய்க்குமே அங்கு நடப்பது நம்பமுடியவில்லை.ஆத்திரத்தில் அனுவை முறைத்தான்.யுகேன் சிறிதும் தாமதியாது அஞ்சலியை அழைத்துக்கொண்டு காருக்குச் சென்றான்.அவன் பார்வை கடைசியில் ஒரு முறை உதய் மேல் படிந்து மீண்டது.

அவனைத் தடுக்கவோ எதுவும் கேக்கவோ கூட கமலம் முயற்சிக்கவில்லை.
ஏற்கனவே காய்ச்சலில் துவண்டிருந்த அஞ்சலி அங்கு நடந்த எதையுமே உணரும் நிலையில் இல்லை.

அவளை தோள் மேல் சாய்த்துக் கொண்டு ஸ்டேரிங்கை ஒரு கையால் இலாவகமாய் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
டாக்டர் குணா அவனுடைய பால்ய நண்பன்.சொந்தத்தில் மெடிக்கல் செண்டர் வைத்து வெற்றிகரமாய் நடத்தும் இளம் மருத்துவன்.

அஞ்சலியை அவனிடம் யுகேன் காண்பித்தான்.விரைந்து செயல்பட்ட டாக்டர் குணா,அஞ்சலிக்கு ட்ரிப்ஸ் ஏற்றி உறங்க ஒரு ஊசியும் போட்டான்.

'யுகேன்,கொஞ்சம் வெளிய வா,சிஸ்டர் ரெஸ்ட் பண்ணட்டும்.i need to talk to you man.'குணா யுகேனை அழைத்தான்.

'உனக்கு ரொம்ப வொர்க்க டா?உன் வைப்ப பார்த்துக்க கூட நேரம் இல்லையா?she is very weak.முகம் எல்லாம் வெளிறி போய் எப்படி இருக்காங்கனு பாரு.அப்படி என்னத்த சம்பாரிச்சு நீ எத சாதிக்க நினைக்கற ?'
நடந்தது எதுவும் தெரியாமல் குணா யுகேனை வறுக்கத் தொடங்கினான்.
குணாவிற்கு யுகேனின் அவசர கல்யாணம் விசயம் தெரியும்.
அவன் திருமணத்தில் கன்னக்குழி சுழிய கபடமற்று சிரித்த அஞ்சலியை அவனுக்கும் பிடித்துபோயிற்று.

ரீட்டாவை போல் இல்லாது பனித்தென்றலாய் இருந்த அஞ்சலி தன் நண்பனுக்கு ஏற்ற ஜோடி என குணா தீர்மானித்தும் விட்டான்.தேவதைப்போல் இருந்தவளை இப்படி பார்க்கவும் அவனுக்கு கஸ்டமாகிவிட்டது.

'எனக்கு என்ன சொல்றதுனு தெரியல குணா,அம்மாவுக்கு அஞ்சலிய பிடிக்கலை ,இந்த அனுவும் அவள மதிக்கல.

"இன்னிக்கு என் கண் முன்னாலயே அஞ்சலிய அடிச்சிட்டா.மனசால அஞ்சலி ரொம்ம வேதனைப்பட்ட மாதிரி எனக்கு பீல் பண்ணுது."

"இந்த உதய நம்பி அவளை விட்டுட்டு போனேன்.பட் ,அவனும் இப்படி பண்ணுவானு நான் நெனைக்கல'. என் சுயநலத்துக்கு அவளை பலியாகிட்டேன்," வேதனையில் யுகேனின் குரல் ஒலித்தது.

'ஹேய் யுகேன்,குடும்பம்னா ப்ரொப்பளம் வருவது சகஜம்டா.கொஞ்ச நாள் நீ அஞ்சுகூட கேமரன் மலைக்கு போய் இரு.காலம் எதையும் மாற்றும் வல்லமை படைச்சதுடா.போய் அஞ்சலிய பாரு'.டாக்டர் குணாவாய் யுகேனை மிரட்டினான்.
அங்கே ,வாடிய கீரைப்போல் இருந்த அஞ்சலியை பார்க்கவே யுகேனுக்கு கஸ்டமாய் இருந்தது.

தன்னால் தானே இந்த பெண்ணிற்கு இந்த நிலை என்ற குற்ற உணர்வும் மேலோங்கியது.யுகேனின் வலிய கரங்கள் அஞ்சலியின் பட்டு கூந்தலை மெதுவாக தடவின.கணவனின் ஸ்பரிசத்தில் கண் விழித்த அஞ்சலி அவனை நோக்கி புன்னகையித்தாள்.

'வெரி சாரி யுகேன்,நான் உன்ன கஸ்டப்படுத்திட்டேன்.
என்னாலதானே இவ்வளவு கஷ்டமும்,அத்தை,அனுகூட சண்டைபோட்டிங்களா?"
முணங்கலாய் வெளிப்பட்டது அவளுடய குரல்.இந்த நிலையிலும் தன் நலனை யோசிக்கிறாளே என்று யுகேந்திரன் வியந்தான்.

'ரிலாக்ஸ் ஏஞ்சல்,அவங்களை பத்தி இனி யோசிக்காதே,உன்ன அங்க விட்டது என் தப்புமா,ரொம்பவே பீல் பண்றேன்.இனிமேல் உன்னை கஷ்டப்பட விடமாட்டேன்.நாம நம்ம வீட்டுக்கு போலாம்மா."யுகேந்திரனின் வார்த்தைகள் அஞ்சலியின் கண்களை கலங்க செய்தன.

"இல்லடா,நான் உங்க அம்மா எதிர்ப்பார்த்த பொண்ணு இல்ல,அவங்களால அதை ஏற்றுக்க முடியாமதானே இப்படி பண்ணிட்டாங்க,இது மனித இயல்பு யுகேன்".
"தவிர அவங்க எனக்கும் அம்மாதானேடா,என்னால முடிஞ்சவரைக்கும் அவங்களுக்கு ஒரு நல்ல மருமகளா இருந்தேனு நினைக்கிறேன்."
"சாரி ,என்னால அப்படி நடந்துக்க முடியலையோனு இப்ப தோணுதுடா," கலங்கிய கண்களை யுகேனின் விரல்கள் மெலிதாய் துடைத்தன.

'இட்ஸ் ஓகே அஞ்சு,உன் தப்பு எதுமே இல்லடா.உன் நல்ல மனசு அவங்களுக்கு புரியலை,கண்டிப்பா ஒரு நாள் உன்னைபுரிஞ்சிப்பாங்க ஏஞ்சல்."வருத்தம் கண்களில் தெரிய பேசினான்.

யுகேனின் கவனிப்பிலும் டாக்டர் குணாவின் வைத்தியத்திலும் அஞ்சலி விரைவில் குணமானாள்.
கணவனுடன் கேமரன் மலைக்கு பயணமானள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN