❤️உயிர் 18❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திறந்தவன் யுகேந்திரன்தான் .கணவன் வருகை உணர்த்ததும்,சட்டென திரையிட்டிருந்த கண்ணீரைத் துடைத்தவள்,சாரியை சரி செய்தாள்.இதழோடு ஒட்டிய புன்னகையும் மனதோடு அப்பிய வலியுமாய் அவனை வரவேற்றாள்.

"அஞ்சலி என்னாச்சு உனக்கு?ஏன் இங்க உக்காந்திருக்க?கண்கள் சிவந்திருக்கே..அழுந்தியா?"
பரிவாய் ஒலித்தது அவன் குரல்.மனதிற்குள்,"பாவி,அங்க அவள கொஞ்சிட்டு இங்க வந்து நல்ல பிள்ளை மாதிரி சீன் போடறியா?"ஊமையாய் சீறியது அஞ்சலியின் மனம்.

''கொஞ்சம் தலைவலி மச்சி. ட்ராவல் பண்ணிட்டு வந்தோம்ல,அதான்"
ஆதரவாய் அவள் தலை வருடியவன் கண்களில் கள்ளத்தனம் கொஞ்சமும் தெரியவில்லையே.

"இப்போ பெட்டர் தானே மச்சி ,வா உன்னை ஒரு ஸ்பெசல் கெஸ்ட்டுக்கு அறிமுகப்படுத்துறேன்.பார்த்தால் அசந்திடுவே ''

"ஓ ரீட்டாவை அறிமுகப்படுத்த நினைகிறாயா?வீட்டுக்கு வாடி மகனே உனக்கு அங்க இருக்கு கச்சேரி"விஷமமாய் மனதிற்குள் கறுவிக் கொண்டாள் அஞ்சலி.

முகம் கழுவி தலை முடியை கோதி சரி செய்தவள் எதுவும் நடவாதது போல அவனை பின் தொடர்ந்தாள்.வெளியே வந்தவன் கரம் தன்னிச்சையாய் அஞ்சலியின் தோளை உரிமையாய் சுற்றிக் கொண்டது.

அதிர்ந்து போன அஞ்சலி அவன் கையை விலக்க முயன்று முடியாமல் அவன் முகத்தைப்பார்த்து அடிக்குரலில் சீறினாள்.
"யுகேன் என்ன இது புதுப்பழக்கம்,நாம என்ன லவ் பெர்ட்ஸ் ஆ?மொதல்ல கைய எடுங்க.எல்லோரும் பாக்கறாங்க''அவன் கண்களில் குறும்பு மின்ன

''யாரு பார்த்தா எனக்கு என்ன செல்லம்?இது புது பழக்கம் இல்லை..இனிமே இதுதான் உனக்கு நிரந்தரம்"அழகாய் கண்களை சிமிட்டினான்.கை அணைப்பை மேலும் இறுக்கினான்.

"யார் பாக்கறதுக்கு இவன் இப்படி வழியிறான்.அவள் முன்னுக்கு எதுக்கு இந்த ட்ராமா "அஞ்சலி மைண்ட் வாய்ஸ் ஒத்து ஊத, அவள் கண்கள் ரீட்டாவைத் தேடின.அதற்குள் பெயர் சூட்டும் விழா ஆரம்பிக்கவே அஞ்சலி கூடவே இணை பிரியாமல் யுகேந்திரன் பக்கத்திலே நின்றிருந்தான்.

ரொம்பவும் காதல் கொண்டு மணந்தவன் போல் இருந்தது அவன் செய்கைகள்.
இறுதலை கொள்ளி எறும்பாகிப் போனாள் அஞ்சலி.அவனை விலக்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல் தத்தளித்துப் போனாள்.

தொட்டிலில் வெண்னை குவியலாய் ,திராட்சை விழிகள் மின்ன படுத்திருந்த குணா பூவிழியின் வாரிசுக்கு கண்ணன் என பெயரிட்டனர்.அத்தை-மாமன் முறையாய் யுகேனும்-அஞ்சலியும்
அந்த சுட்டிக்கு செய்ய வேண்டியதையும் செய்தனர்.

குறும்புக்கார நண்பன் ஒருவன்"டேய் அடுத்து நம்ம யுகேன் தான் நமக்கு ட்ரீட் தர போறான்,இப்பவே எப்படி சிஸ்டர்கிட்ட வழியிறான் பாருங்க" கலாய்தான்.
அஞ்சலி முகம் சிவந்து போயிற்று.நடக்காத ஒன்றுக்கு ஆசைப்படும் இவர்களை என்ன
சொல்வது. இவன் வேற இப்படி ஓவர் சீன் போடறானே என்று மனதிற்குள் குமுறினாள்.

விழா முடியும் தருவாயில்,அவளே பொறுமையிழந்து
"எங்க உங்கள் ஸ்பெசல் கெஸ்ட்,கண்ணுல காட்டுங்க சார், எவ்ளோ நேரம்தான் இப்படி காத்துக்கிட்டு நிக்கறது? " கொஞ்சம் குத்தலாகவே கேட்டாள்.

"பொறுங்க அம்மணி, ஸ்பெஷல் கெஸ்ட் லாம் பொறுமையாகத்தான் பார்க்கணும் " மெல்ல அவள் கைப்பற்றி குணாவின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். பசுமையான புல் தரையில் கூழங்கற்களைப்பதித்து குணா பாதை செய்திருந்தான்.

இரு மருங்கிலும் சின்ன சின்ன மின்விளக்குகள் பொருத்தப்பட்டு பார்க்கவே அழகாய் இருந்தது.
செயற்கை ஊற்றில் இயற்கை தாமரைகளும் இதர செடிகளும் கண்களுக்கு விருந்தளித்தன.
அதை எதையும் நிதானமாக ரசிக்கும் நிலையில் அஞ்சலி இல்லையே.
நின்றிருந்த உருவம் ரீட்டா என்பதும் அஞ்சலிக்கு புரிந்தது போயிற்று.

''ஹாய் ரீட்டா,மீட் மை ஏஞ்சல் மிசர்ஸ் அஞ்சலி யுகேந்திரன்ராஜ்"ஸ்டைலாய்
அறிமுகப்படுத்தினான்.

இவன் ஏன் ரீட்டாவிடம் இப்படி அறிமுகம் செய்கிறான்? அவள் முகமும் அவ்வளவு சரி இல்லையே.சற்று முன் இருந்த எள்ளல் துள்ளல் எதுவும் இப்பொழுது இல்லையே. என்னவாயிற்று இவளுக்கு? அஞ்சலி கண்கள் கேள்வியாய் ரீட்டா மேல் படிந்தது.

நாசூக்காய் சிரித்த ரீட்டா,அமைதியாய் இருந்தாள்.
யுகேன் மேலும், " இவங்க எனக்கு ரொம்ப ஸ்பெசல் அஞ்சலி,என் லைப்பை திரும்ப தந்திருக்காங்க.என் காதல் உண்மைனு நிரூபிச்சிட்டாங்க.ஐயாம் சோ ஹாப்பி துடே."
அவன் மகிழ்ச்சியில் துள்ள,

"ஆமாண்டா கடன்காரா, திரும்ப உங்கிட்ட வந்துட்டா இல்ல, உனக்கு ஹாப்பியா தான் இருக்கும்டா கிராதகா " அஞ்சலி மைண்ட் வாய்ஸ் கடுப்பில் கதற, அவளோ ரீட்டாவை தான் மனதில் கொண்டு யுகேந்திரன் பேசுகிறானோ என்று முகம் வாடலானாள்.

" யெஸ் அஞ்சு.என் அஞ்சலி என்னை காதலிக்கிறானு இன்னிக்கு தெரிந்ததே இவங்க செஞ்ச நல்ல காரியத்தினால்தான்."

"இல்லாட்டி இவ்ளோ சீக்கிரம் என் தேவதை மனசை அறிந்திருக்க முடியுமா? "

குறும்பாய் அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN