❤️உயிர் 19❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தான் கேட்டது கனவா இல்லை நினைவா ? என்பது போல் அஞ்சலி யுகேனைப் பார்த்தாள்.
''யுகேன்..வந்து வந்து.."வார்த்தைகள் தொண்டைக்குழியோடு நின்று விட்டது அவளுக்கு .
"உன்னை அப்புறம் வீட்டுக்கு போய் வெச்சுகிறேன் மச்சி'' விஷமமாய் அஞ்சலியை நோக்கி கூறினான்.

'' வெல், உங்கிட்ட பேச எதுவும் இல்லை ரீட்டா,உன்னால நான் அனுபவிச்ச வலிகளும் இரணங்களும் போதுமே.காதல் புனிதமான உணர்வு,அத பணம் காசிற்கும்,பகட்டு வாழ்க்கைக்கும் பகடை காயாய் நீ உருட்டியது கூட தெரிஞ்சிக்காம காதலிச்சிருக்கேன்"

"உண்மையா உன்னை காதலிச்சேன்.பட் எல்லாம் பணத்திற்குனு நீ உணர்த்தினது,உன்னை மாதிரி வாழ்க்கையில நான் சந்திச்ச சில விட்டில் பூச்சிகள்,அஞ்சலி மாதிரி நல்ல பொண்ணுங்க இருக்காங்க என்பதையே மறக்க வெச்சிருச்சு."

"ஆழமான நட்பு,நம்பிக்கை,அன்புனு அவள் உலகம் அழகானது.அதில் எனக்கும் பங்கு தந்து என்னை சிரிக்க வெச்ச என் தேவதை.கடவுளுக்கு என்மேல கொஞ்சம் கருணை இருந்திருக்கும். என் வாழ்க்கைல இப்படியும் ஒருத்தி வசந்தமாய் வந்திருக்காளே "

"அவள் காதல் எனக்கு மட்டும் உரியதுன்னு இன்னிக்கு தெரிஞ்சிக்கிட்டேன்.அதுக்கு உனக்குத்தான் கோடி நன்றி சொல்லணும்"

"இனிமே யார் வாழ்க்கையிலும் காதல்னு சொல்லி விளையாடிராதே.எனக்கு கிடைச்ச மாதிரி தேவதை எல்லோருக்கும் கிடைச்சிடாது" அழுத்தமாய் ஒலித்தது யுகேனின் குரல்.

''கம் டார்லிங்"அஞ்சலி தோளில் கைப்போட்டவாறு ரீட்டாவை கடந்து நடந்தான்.
நடப்பது எதுவும் புரியாமல் அஞ்சலி மலங்க மலங்க விழித்தாள்.என்ன நடக்குது இங்க. நிஜமாவே தலை வலித்தது அவளுக்கு. அவர்களை எதிர்க்கொண்ட பூவிழியும் குணாவும் அர்த்தபுஷ்டியில் பார்த்தனர்.

"சாரி மச்சான்,நான் இன்னிக்கு கிளம்பியாகணும்.வீக் எண்ட் கேமரன் வந்து சேருடா"

"டேய் பொண்டாட்டி கிடைச்சதும் மச்சான் கழட்டி விடற பார்த்தியா? குணா கிண்டலடிக்க,

"இவன் வேற மனுஷன் அவஸ்தை புரியாம, டேய் காலகாலத்துல நடக்கறது நடந்து நீ செட்டில் ஆயிட்டே. என் ரூட் இப்போதானே க்ளியர் ஆயிருக்கு. உன் பையனுக்கு நா ஜோடி ரெடி பண்ண வேணாமா "யுகேன் இப்படி ஓபன் அ போட்டு உடைக்க, பெண்கள் இருவரின் பாடுதான் திண்டாட்டம் ஆயிற்று.

குணா சிரித்துக் கொண்டே வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தான் .சிறு தலையசைவுடன் அஞ்சலியும் அவர்களிடம் விடைப் பெற்றாள்.காரில் எதுவும் பேசாமல் இருவரும் மௌனமாய் வந்தனர்.மழை தூற, மெல்லிசை கசிய, அவனோடு முதல் முதலில் கணவன் என்ற நினைப்பில் அந்த பயணம் அஞ்சலிக்கு இனித்தது.

வீடு வந்ததும்,அலுப்பு தீர தலை குளித்த அஞ்சலி வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் உணர்ந்தாள்.புதுமையான இந்த உணர்வு அவளை ஏதோ செய்தது.அலமாரியில் யுகேன் விளையாட்டாய் வாங்கித் தந்ததிருந்த வெள்ளை நிற பருத்தி பைஜாமாவை உடுத்திக் கொண்டாள்.

இது வரை அதை அணிந்து கொள்ளும் எண்ணமே இல்லாதிருந்தவள்,
இன்று அவன் பதில் தந்த மகிழ்ச்சியில் அணிந்துக் கொண்டாள்.
வெளியே இடி இடிக்கும் ஓசை, மழை தூறல், கண்ணாடி ஓரம் அப்பியிருந்த பனி அஞ்சலியின் கவனத்தை ஈர்த்தது.

நீளக்கூந்தலை துவட்டாது,ஈரம் சொட்ட சொட்ட மெதுவாய் யுகேனின் அறையைக் கடந்து ஹாலுக்கு வந்தாள்.ஆரஞ்சு வண்ணம் உமிழும் கிரிஸ்டல் விளக்கை உயிர்ப்பித்து விட்டு,
கண்ணாடித் தடுப்பு சுவர் வழியே வெளியே தூறும் மழையை கண் மூடி இரசிக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது ,வலிய இரண்டு கரங்கள் பூத்துவலையால் தன் தலை முடி வருடுவதை உணர்ந்தாள்.

"ஹேய்,பூனைக்குட்டி,தலைய கூட துவட்டிக்காம இப்படிதான் மழையை இரசிப்பாங்களா?காய்ச்சல் வந்தால் எனக்குத்தானே கஷ்டம்''அவள் காதோடு ஸ்பரிசித்தது அவனது குரல்.

''நான் சிங்கக்குட்டியாக்கும், எனக்கு காய்ச்சல் வராதாம்" தலையை சிலுப்பினாள் அஞ்சலி.
"அதான் பார்த்தேனே என் சிங்கக்குட்டியின் வீரத்தை''இரு கைகளால் அவள் முகத்தை ஏந்தி தன் தலையை அவள் தலையோடு முட்டினான்.

பதிலுக்கு அஞ்சலியும் அவன் முகத்தை ஏந்தி முத்தமிடுவது போல் எம்பி நின்றாள்.
அவன் ஜென்ம சாபல்யம் அடைவது போல் கண் மூடி நின்றான்.இமைக்கும் நொடிகளில் அவனை அப்படியே விட்டு விட்டு அஞ்சலி ஓடினாள்.


வேவ்வ வேவ்வ என்று அழகு காட்டியவளை இரண்டே எட்டில் பிடித்து தன் கைகளுக்குள் சிறை வைத்தான்.அப்படியே அவளை அல்லாக்காய் தூக்கியவன் கண்ணாடி தடுப்போடு இணைந்திருந்த சோபாவில் சரிந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN