அத்தியாயம் - 1.

"பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும்

விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு தும்பியடி

நான் உனக்கு

வாயுரைக்க வருகுதில்லை வாழி

நின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வான் ஒளியே சூறை

அமுதே கண்ணம்மா"

தன் தொலைப்பேசி அடிக்க யாரென்று பார்த்தாள் நம் இளவேனில்.

அம்மா!!!! என்னாச்சி இவ்வளவு சீக்கிரமா போன் போடறாங்க???!!! சரி பேசுவோம்.

அம்மா! என்னமா இவ்வளவு காலையில போன் போடற தூக்கம் வருதுமா.

வரும்! வரும் ! மணி என்ன ஆகுதுனு பாரு நல்ல உன் முட்டகண்ண திறந்து என்றார் சாரதா.

என்ன மணி 6 தான் இருக்கும். அம்மா மிட் நைட்ல டிஸ்டப் பண்ணாதிங்க! போய் உங்க கணவர்கிட்ட காதல் பண்ணுங்க சும்மா என்ன தொல்ல பண்ணிட்டு.

அடி கழுதமாடு வந்து இரண்டு விட்டனவை, கழுத மணி 8.45 ஆகுது டி.

உன்ன ஹாஸ்டல்ல விட்டது தப்பா போச்சு என்றார்.

வாட்! ஓ காட் எஸ்! அம்மா நீ முதல போன வை எனக்கு லேட் ஆய்டிச்சி பஸ்ட் ஆர் வேர வீ.டீ சார்து. சும்மாவே காத்துவான் அந்த ஆழு, பாய் மா என அவசரமாக போனை வைத்து தன் அருகில் உறங்கிக்கொண்டு இருக்கும் வாகினியை முறைத்தாள் இளா.

அடியேய்! மாடு எழுந்திருடி! மணி 9 ஆகுது . 9.30 க்கு வீ.டீ ஆர் டி.

ம்ம்ம்ம போலாம் மெதுவா என்றாள் வாகினி. உட்டன வை எரும ஏற்கனவே தந்த பனிஷ்மென்ட் நியாபகம் இருக்குல.

அய்யோ, என இருவரும் வாரிக்கொண்டு எழுந்து குளிக்கச்சென்றனர்.

சரி! அவங்க குளிச்சி மேக்கப் போடறத்துக்குள்ள ஒரு குட்டி முன்னுரை பாத்தர்லாம்.

சகாதேவன் - சாரதா தம்பதியோட இரண்டாவது பொண்ணு இளவேனில், பெயருக்கு ஏற்றமாறி சரியான கோபக்காரி. வயது 20

மூத்தவ பனிமலர் மனோத்தத்துவ மருத்துவர். வயது 23.

நாமக்கல்ல இருக்கிற ஒரு சின்ன கிராமம் தான் இளா ஊரு. சகாதேவனுக்கு முதல் தொழில் விவசாயம் தான் அப்புறம் தான் தமிழாசிரியர். சாரதா கணவருக்கு உதவிச்செய்யும் மனையாள். நல்ல உழைப்பாளி.

பனிமலர் சின்ன வயசுல இருந்து நல்ல படிப்பாளி. மனோத்தத்துவம் படிக்கறதுல ஆர்வம் னு சொன்னதால கோவைல உள்ள ஒரு பிரபலமான கல்லூரில படிச்சிட்டு இப்ப பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கா.

அடுத்து இளவேனில் சுட்டுப்போட்டாலும் படிப்பு வராதுனு சொல்லமுடியாது average க்கும் கொஞ்சம் கீழ. முண்டாசு கவியையும் சங்க இலக்கியமும் ரொம்ப பிடிக்கும்.

Disability studies and action படிக்கனும்னு ஆசை, ஆன ஒரு படுபாவி செய்த சதியால் பிடிக்காத வேதியியலில் தடுமாறி 3ஆம் ஆண்டு படிக்கிறாள்.

பிடிச்சத தா படிக்க முடியல பிடிச்ச ஊர்லயாவது படிப்போம்-னு வந்தியத்தேவனின் கால்தடம் படிந்த கொள்ளிடம் ஆறு ஓடும் திருச்சியில் உள்ள பிரபலமான கல்லூரியில் படிக்கிறாள்.

வாகினி! பசிக்குதுடி. அடிச்சன வை ஏற்கனவே லேட்னு இந்த ஆளு வேற முறைக்கிறான். சும்மா இருடி இல்லன குவான்டம் ல இருந்து எதன கேட்டுடப் போறான். நேத்து நியாபகம் இருக்குல.

அத என் செல்லம் நீ இருக்கல என்ன காப்பாத்த என்று சிரித்தாள் இளா.

ஆமா! எனக்கு தினமும் இதே வேலைத்தான். உனக்கு பயந்தே நான் தினமும் கிளாஸ் கவனிக்கவேண்டி இருக்கு.

பின்ன! வாகி நா சும்மாவா கிளாஸ் டாப்பர் ஆச்சே. சரி, ஐஸ் வைக்காத இந்த கிளாஸ் முடிந்தபின்பு கேண்டின் போலாம்.

என் செல்லக்குட்டி என்று கொஞ்சிக்கொண்டாள் நம்ம இளா.

கேண்டீனில் இளாவும் வாகினியும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு குரல்,'ஓய் வாகினி இங்க என்ன பண்ணிட்டு இருக்க கிளாஸ்க்கு போகமா' என்றது.

இருவருக்கும் திக் என்று ஆனது, ஐய்யோ மாட்டிகிட்டோம் டி . சி.ஏ சார் வாய்ஸ் மாதிரி இருக்கு.

சி.ஏ. சார் வாய்ஸ் இல்ல சி.ஏ.சார் தான் என்றாள் இளா. இவன் எங்க இங்க வந்தான் கிளாஸ்ல எங்கயோ கான்ப்பரன்ஸ் போறாங்கனு சொன்னாங்க! என்று மைண்டு வாய்ஸில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

இளா நீ இன்னைக்கு செத்த டி சும்மாவே ஆர்கானிக்ல மெக்கானிசம் போடுனு டார்ச்சர் பண்ணுவான். இப்ப சொல்லவா வேணும்.இன்னைக்கு மதியம் கிளாஸ் லா நம்ம தான் எப்பவும் போல முதல் பலி ஆடு . போச்சு போ என மனசுல புலம்பிக்கொண்டிருந்தாள் நம்ம இளா.

ஹல்லோ வாகினி உன்ன தான். கிளாஸ் போகாம என்ன பண்ணிட்டு இருக்க இங்க.

இல்ல சார் அது வந்து மார்னிங் இரண்டு பேரும் சாப்பிடுல அதான் சாப்பிட வந்தோம் என்றாள் வாகினி.

ஏன் சாப்பிடுல? தெரியுமே மார்னிங் 9.30 கிளாஸ்க்கு 9 க்கு எழுந்தா எப்படி?

என்றார் சி.ஏ.

சார்.......

Shut up வாகினி. நீ பஸ்ட் இயர்ல எப்படி இருந்த இப்ப எப்படி இருக்கனு பாரு. ஒரு கிளாஸ் கூட லீவ் எடுக்க மாட்ட. கிளாஸ்ல அவ்வளவு அட்டன்டிவ் ஆ இருப்ப. However you got first mark, your presence on the class nowadays goes very worst என்று வாகினியைத் திட்டிக் கொண்டிருந்தான் சி.ஏ.

எல்லாம் சேர்ர சேர்க்க அப்படி என்று இளாவைப் பார்த்து ஒரு லுக்கை விட்டார் நம்ம சி.ஏ.

சாரி சார். இனிமே கிளாஸ் கட் அடிக்க மாட்டோம் என்றாள் வாகினி.

இளாக்கு சுர் என்று கோபம் வந்தது. எதுவும் பேசாமல் கண்ணில் கண்ணீரோடு அமைதியாக நின்றிருந்தாள்.

எல்லாம் இவனால தா. நான் பாட்டுக்கு எனக்கு பிடிச்சத படிச்சிருப்பேன். இப்ப படிக்கல னு என்னமா சாடப் பேசிட்டு போறான் எருமமாடு. வீட்ல யாரு என் ஆசைக்கு மதிப்பு தரா எல்லாம் இந்த மாட்டைத் தான் தலையில வச்சிக் கொண்டாடுராங்க. இவன்ட மாட்டிட்டு நம்ம பனி என்ன பாடு பட போறாலோ. எப்படியோ பனி நல்ல படிப்பாளி, இல்ல இந்த படிப்பு பைத்தியம் ஒரு வழி பண்ணிடும், என்று மனசுல தன் அத்தைப் பெற்ற இரத்தினமான சி.ஏ.என்கின்ற சிங்காரவேலன் அமுதவானனை மனமாற திட்டிக்கொண்டிருந்தாள் நம்ம இளா.

அமுதனுக்கு இளாவின் முகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது. அவளை அழ வைத்த திருப்தி.

சரி ஒழுங்கா கிளாஸ்க்கு போங்க. அடுத்த தடவ எங்கயாவது பார்த்தேன் என்றால் டைரக்ட்டா HOD தா.

வேண்டாம் சார் இனிமே இப்படி பண்ணமாட்டோம். சாரி சார் என்றாள் வாகினி.

உன் பிரண்டு வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சி இருக்கா??? என்றான் அமுதன்.

ஏ !சாரி கேளு இளா பிளிஸ் டி என்றாள் வாகினி. அனல் பறக்கும் பார்வையால் பார்த்தவள் தோழிக்காக சாரி, we won't repeat this again என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டாள்.

இவ, பெரிய இவ ஒழுங்கா படிக்க துப்பில்ல திட்டுனா கோபம் மட்டும் வந்திடும் மேடம் க்கு . நீ வீட்டுக்கு வா யார்ட்ட போட்டு கொடுக்குனுமோ அங்க கொடுக்குறேன், என்று நினைத்துக்கொண்டு வாகினியைப் பார்த்து its okay, you may leave now vahini. என்றான்.

அமுதவானன் சிங்காரவேலன் - நம்ம இளாவோட அத்தை பையன்.

சிங்காரவேலன்- பானுமதி தம்பதியோட மூத்த பையன். சின்னவ சரண்யா . இளாவும் சரண்யாவும் ரொம்ப கிளோஸ் . சரண்யா இளா விட நல்ல படிச்சதால இப்ப 3 இயர் எம்.பி.பி.எஸ் படிக்கிறா சென்னையில,சொல்லப்போனா சரண்யாக்கு மருத்துவத்தவிட இங்கிலீஷ் லிட்., படிக்கனும் தான் ஆசை. பட், என்ன பண்ண நம்ம அமுதன் சார் நோ சொல்லிட்டார்.

அமுதன், நல்ல ஆறடிக்கும் குறையாத ஆண்மகன். படிச்சது எம்.எஸ்.சி., பி.எச்.டி இன் யு.எஸ் ., (வேதியியல்). வயது- 30.சொந்தமா யார் உதவியும் இல்லாம எக்ஸாம் கிளியர் பண்ணி திருச்சியில் இருக்கற அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆக இருக்கிறான்.

அப்பா சிங்காரவேலன் விவசாயி. அம்மா பானுமதி சமூக அறிவியல் ஆசிரியை. சின்ன வயசுலே மாரடைப்பால் சிங்காரவேலன் காலமாகிவிட்டார். பின்பு யார் உதவியும் இல்லாமல் தன் இரண்டு பிள்ளைகளையும் சிறப்பா வழிநடத்திட்டுவரார். அமுதனுக்கு தன் அம்மா தங்கை மாமா குடும்பம் இது மட்டும் தான் உலகம்.

பிடிச்சது விவசாயம். திருச்சி தான் சொந்த ஊர்.

அது ஏனோ தெரியாது அமுதனுக்கு படிப்பு தான் தங்களோட வாழ்க்கை திறனை இவ்வளவு தூரம் மதிப்பைக்கூட்டி இருக்குனு ஒரு நம்பிக்கை.

எப்பவும் இளாவுக்கும் நம்ம அமுதனுக்கு ஆகவே ஆகாது .முதல் காரணம் நீங்களே guessபண்ணி இருப்பீங்க. எஸ் படிப்பு, தென் வாய் அடிக்கிறது , அமுதனுக்கு இதுபிடிக்காது.

நம்ம இளா அவனுக்கு நேர் எதிர். எப்ப பாத்தாலும் சண்ட தான் . அதுவும் இந்த படிப்பு விசியத்துல இளாவ வேதியியல் எடுக்க வச்சதும் நம்ம ஐய்யாதான்.

மாமா, என்ன சொல்றா உங்க சின்னக்குட்டி(எரும மாடு மாறி இருக்கு சின்னக்குட்டியாம் கருங்குட்டினு வச்சிறுக்களாம் -மைண்டு வாய்ஸ்)

மாப்பள ஏதோ disabilities studies and actionனு படிப்பு இருக்காம் அதுதான் படிப்பேன் ஒத்த கால்ல நிக்குறா. என்னவாம் அதப்படிச்சிட்டு மேடம் என்ன சேவை செய்ய போறாளாம்.அவ கடக்கறா, மாமா நான் சொல்லறத கேளுங்க ஒழுங்கா பி.எஸ்.ஸி கேமிஸ்ட்ரி சேத்து விடுங்க படிச்சிட்டு அதுலே மேல படிக்கட்டும். எங்க காலேஜ்லே படிக்கட்டும் நான் பாத்துகிறேன், என்றான் .

அன்று மாறியது இளாவின் வாழ்க்கை . முன்பாவது சிறு சிறு சண்டைகளாவது போடுவர். இப்போது இளா அறவே பேசுவதை நிறுத்திக்கொண்டாள்.

ஏன் டி?? அப்படி ஓடி வந்த . பின்ன பசிக்கு சாப்பிட்டது ஒரு குத்தமா எப்படி திட்டிட்டுப் போறான் பாரு அந்த மாடு என்றாள் இளா.

ஏ!! அமைதியா பேசு. இது உன் வீடு இல்ல காலேஜ். சரி, விடு உன் அத்த பையன் தான. ஏ !!!!! டென்ஷன் ஆயிடுவேன் பாத்துக்கோ. ஆளும் மூஞ்சியும். பாவம் டி என் அக்கா எப்படி இந்த எருமைக்கிட்ட குப்பை கொட்டப் போறாளோ......

(இளாவக்கு எங்கே தெரிய போகுகிறது தன் மீதி வாழ்வின் தலைப்பு அமுதன் தான் என்று!!!!!)

தொடரும்.......

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.