தலைவர் ஊத்தப்பம்

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இன்னிக்கு காலையில ஒரு ஆறு மணி இருக்கும்.. குளிச்சிட்டு வந்து என் அக்கா என்னை உசுப்புனா.. நானும் கடுப்பா எந்திரிச்சு என்னன்னு கேட்டா.. "செவ்வாய், வெள்ளி ஆனா காலையிலேயே எந்திரிச்சு குளிக்கணும்னு தெரியாதா??"ன்னு கேட்டா.. நானும் அதர பதற எந்திரிச்சு குளிச்சிட்டு வந்தா என் வயித்துக்குள்ள பெருங்குடல் மிரட்டல் விட்டுச்சு.. "இப்ப திங்க எதாவது தரலை.. சிறுகுடலை உயிரோடவே பார்க்க முடியாது"ன்னு சொல்லிச்சு.. சரி காலையில திங்க டேஸ்டா எதாவது கிடைக்கும்னு கிச்சன் பக்கம் போனா நாறிப்போன ச்சீ.. முழிச்சு போன் தோசை மாவு தவிர எதுவுமே இல்லை.. கொஞ்ச நேரத்திலேயே அந்த புளிச்சு போன மாவை புதுபொண்ணு மாதிரி மாத்திட்டா..


தேவையான பொருட்கள்:

புளிச்சு போன தோசை மாவு- கொஞ்சமா
காரட்-2 அல்லது 3
வெங்காயம் - விருப்பத்திற்கேற்ப
இட்லி பொடி- கடையில் 1ரூ பாக்கெட் வாங்கிக்கலாம்..


செய்முறை:


1. முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும். பின் எண்ணெய் தடவவும்.. (அதிகமா இருந்தா நல்லது)


2. இரண்டு கரண்டி தோசை மாவினை ஊற்றி அனைத்து இடங்களையும் கவர் செய்யுமாறு வட்ட வடிவில் தேய்த்து விடவும்..


3. நறுக்கிய வெங்காயம் மற்றும் காரட்டை மெல்லமாக தூவவும்..


4. இட்லி பொடியை பரபரவென மேலே தூவவும்..அதன் மேல் இரண்டு கரண்டி நெய் அல்லது எண்ணெய் சிறிது சிறிதாய் ஊற்றவும்..


5. தோசையை அப்படி ஒரு பிரட்டு..இப்படி ஒரு பிரட்டு.. அதிகமாக வெந்து விட வேண்டாம்..


பின் குறிப்பு:


தொட்டுக்கொள்ள சட்னியோ சாம்பாரோ தேவையில்லை.. உப்பு,காரம் மற்றும் காய்கறிகள் அதிலேயே இருப்பதால் தேவை இருக்காது..
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யம்மா....😍😍
இந்த தோசையை சுட நீ explain செய்ததும்...🙄🙄🙄🙄 அதற்கு நீ வச்ச பெயரும் சூப்பர்...👌👌👌👌 இதற்காகவே செய்து சாப்பிடனும் போலவே💞💞💞💞💞🌺🌺🌺🌺🌺
 
OP
Min mini

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யம்மா....😍😍
இந்த தோசையை சுட நீ explain செய்ததும்...🙄🙄🙄🙄 அதற்கு நீ வச்ச பெயரும் சூப்பர்...👌👌👌👌 இதற்காகவே செய்து சாப்பிடனும் போலவே💞💞💞💞💞🌺🌺🌺🌺🌺
thalaivanna summava... india poora pamous ilaya??? hahahahh....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN