மாயம் 4

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனவிலே தோன்றிய
விம்பம்
வாழ்நாள் முழுதும்
தொடரும் என்று
உணர்ந்தது
உன்னை பார்த்த
அந்த நொடி

கார் பார்க்கிங்கில் தனது பென்ட்லியை நிறுத்திவிட்டு டைன்மோர் என்று வாசலில் ஆளுயரத்திற்கு கம்பீரமாய் நின்றிருந்த பெயர்பலகையை தாண்டி வெவ்வேறு நிற குரோட்டன் செடிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்த சிறு நீரூற்று வாயிலினை மறைத்தவாறுயிருக்க என்றும் போல் அன்றும் அதனை பொருட்படுத்தாது கூலர்சை கழற்றி சட்டையின் முன் சொருகியவன் கேசத்தினை ஒரு கையால் கோதிவிட்டபடி அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலினுள் சென்றான் ரிஷி...
மின்தூக்கியின் உதவியுடன் புட்கோட் இருக்கும் தளத்திற்கு சென்றவனது கண்களில் ஶ்ரீயின் கும்பல் கண்ணில் விழுந்தது... அவர்களை தாண்டி செல்ல முயன்றவனின் காதில் ஶ்ரீயின் பேச்சு விழுந்தது...

“பப்ளி... இப்போ நம்மை பாஸ் பண்ணி போனவரு ரொம்ப ஸ்மார்ட்ல???” என்றவளது கேள்வியில் நொடி சிந்தனை கலந்தவன் மறுநொடியே எப்பவும் நடப்பது தான் இதழ்களை சிறிதளவு வளைத்துவிட்டு செல்லமுயன்றவனை கட்டிப்போட்டது ஶ்ரீயின் குரல்...

ஒரு நொடியே செவிகளை தீண்டி சென்ற அந்த குரல் அவனை கணப்பொழுதில் வசியம் செய்ய அதனை தொடர்ந்து கேட்கும் ஆவலில் அருகிலிருந்த மேசையில் அமர்ந்துவிட்டான்...அமர்ந்ததும் தான் அவனது மூளை அவன் செய்த செயலை இடித்துரைத்தது...
“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க??? காலேஜ் பையன் மாதிரி நடந்துக்குற?? நீ எதுக்கு வந்த என்ன பண்ணிட்டு இருக்க??”என்று அவனது மூளையோ நிதர்சனத்தை உணர்த்த முயல அதெல்லாம் கேட்பேனா என்ற ரீதியில் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் ரிஷி...

“யாரை சொல்ற ஶ்ரீ???” என்று கேட்டாள் ஹேமா.

“நமக்கு ஸ்ரெட்டா லெப்ட்டுல பொன்டி ப்ளூ கலர்ல வ்ரோன் பிராண்ட் சர்ட் போட்டுட்டு மொபைலை நோண்டிட்டு இருக்காரே... அவரைத்தான் சொல்றேன்...”

“ஶ்ரீ எனக்கு ஒரு டவுட்டு... சர்ட்டு கலரை சொல்லுற சரி... என்னமோ ஜவுளி கடைல பல வருஷம் வேலை செய்தவ ரேஞ்சுல இங்கயிருந்தே எப்படி கரெக்டா பிராண்ட் நேமையும் சொல்லுற??? ஒரு வேளை பார்ட்டைமா ஏதாவது ஜவுளி கடையில வேலை செய்றியா??” என்று எதிர் கேள்வி கேட்ட ஹேமாவிடம்

“அது எப்படி நான் கரெக்டா சொன்னேன்னு உனக்கு தெரியும்?? அப்போ நீயும் பார்ட்டைமா ஜவுளிக்கடையிலயா வேலை செய்ற???” என்று ஶ்ரீ பதிலடி கொடுக்க

“தப்புதாமா... தப்புதா... உன்னை கலாய்க்கிறதா நினைச்சு நான் ஒரு வார்த்த சொன்னது தப்பு தான்... மன்னிச்சிரு...”

“அந்த பயம் இருக்கட்டும்... இனிமே இப்படி கோக்கு மாக்கா ஏதாவது கேட்ப???”

“இல்லை தாயே....இதுக்கு பிறகும் உன்கிட்ட வாய்குடுத்த மாட்டிக்க எனக்கு என்ன பிராந்தமா???”

“இருக்கலாம்....”என்று கூறி ஶ்ரீ கண்சிமிட்ட ஹேமா முறைத்தாள்.

“முறைக்காத பப்ளி... சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. அவரு ஸ்மார்ட்டா இருக்காருல்ல???”

“இப்போ அதுக்கு என்ன பண்ண சொல்ற???”

“கேட்டதுக்கு பதில் சொல்ல சொல்றேன்...”

“ஏய் இதென்னடி வம்பா போச்சு.. அவரு ஸ்மார்ட்டா இருந்தா அதை அவர்கிட்ட போய் சொல்லு.. அதைவிட்டுட்டு என்கிட்ட ஓபினியன் கேட்டுட்டு இருக்க... உன் சைட்டடிக்கிற வேலைக்கு என்னை எதுக்கு கம்பனிக்கு கூப்பிடுற???”

“அதானே நான் எதுக்கு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்...??? அவர்கிட்டயே போய் சொன்னா மனுஷர் சந்தோஷப்படுவாரு.. இரு போய் சொல்லிட்டு வர்றேன்..” என்று எழுச்சென்ற ஶ்ரீயை கைபிடித்து தடுத்தாள் ஹேமா...

“அம்மா தாயே உனக்கு புண்ணியமா போகும்... பேசாம உட்காரு... சாப்பிட வந்த இடத்துல சாகசம் பண்றேன் பேர்வழினு ஏதும் ஏழரையை கூட்டிராத... இது நம்ம காண்டின் இல்லை... த்ரீ ஸ்டார் ஹோட்டல்.... நியாபகம் வச்சிக்கோ...”

“நீ சொல்லி நான் என்னைக்கு கேட்டுருக்கேன் பப்ளி...?? நான் அவர்ட போய் சொல்லத்தான் போறேன்.. நீ பார்க்கத்தான் போற...”

“ஐயோ இவ இன்னைக்கு ஹோட்டல்காரன்கிட்ட அடிவாங்கி குடுக்காம ஓயமாட்ட போல இருக்கே... டேய் ரவி என்னடா பேசாம இருக்க??? அவளை நிப்பாட்டுடா...” என்று ஹேமா ரவியை துணைக்கழைக்க

“ஹாஹா ஹோஹோ ஹிஹி காமடி காமடி.... நான்.... ஹாஹா... அவளை.... ஹிஹி...” என்று சிரித்தபடி உளறியவனை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் ஹேமா..

“அரை கிறுக்கையெல்லாம் ப்ரெண்டா வச்சுக்கிறவங்க நிலைமை இதுதான் போல.. ஏன்டா டேய் அவளை நிப்பாட்டுனா லூசு மாதிரி சிரிச்சிட்டு இருக்க...அவளோட சேர்ந்து உனக்கும் மண்டையில ஓடுற வயர் ஏதும் லூசாகிருச்சா..?? என்று ஹேமா எகிற ரவியோ

“யாரா பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட??”

“ஆ.. உன்னை பார்த்து தான்டா வெண்ணே...”

“ஐயோ உங்க ரெண்டு பேர் பஞ்சாயத்தையும் கொஞ்சம் நிப்பாட்டுங்க... இப்போ என்னோட விஷயத்துக்கு வாங்க...”

“அம்மாடி ஶ்ரீ உன்னால தான் இங்க பஞ்சாயத்தே வந்திச்சு... டேய் ரவி அவளை கம்முனு இருக்க சொல்லு.. இல்லைனா நான் என்ன பண்ணுவேனு...” என்று ஹேமா கூறிக்கொண்டிருக்கும் போதே எழுந்து சென்றாள் ஶ்ரீ.

“டேய் என்னடா அவ போய்ட்டா... நீயும் பேசாம பார்த்துட்டு இருக்க... இப்போ இந்த சுந்தரும் சஞ்சுவும் வந்த நான் என்னடா செய்வேன்??” என்று ஹேமா புலம்ப

“விடு ... பார்த்துக்கலாம்... சரி வா.. அங்க ஶ்ரீ என்ன பண்ணுறானு பார்க்கலாம்..”என்று ரவி கூற

“டேய் நீயெல்லாம்..... அவளை பத்தி தெரிஞ்சும் எப்படிடா இப்படி சொல்லுற??”

“சும்மா புலம்பாத ஹேமா... பெரிசா ஏதும் செய்ய மாட்டா... பயப்படாத... அவ பேசப்போன ஆளும் ஜாலி டைப் தான்.. அதுனால பயப்படாத...”

“ ஏதோ சொல்லுற..... எனக்கு தான் பக்குனு இருக்கு.... அம்மா தாயே நான் முழுசா வீடு திரும்புனா உனக்கு நெய் விளக்கு ஏத்துறேன்....” என்றொரு வேண்டுதலையும் வைத்துவிட்டு ஶ்ரீயை ரவியும் ஹேமாவும் கவனிக்க தொடங்கினர்.
இவர்களது சம்பாஷணையை கேட்டுக்கொண்டிருந்த ரிஷிக்கும் ஶ்ரீ என்ன செய்யப்போகிறாள் என்ற ஆர்வம் மேலோங்க அவளை தொடர்ந்து கவனிக்கத்தொடங்கினான் ரிஷி.

ஶ்ரீ அவள் காட்டிய திசையில் அமர்ந்திருந்த இளைஞரின் அருகில் சென்று

“எக்ஸ்கியூஸ்மி ப்ரோ... மே ஐ ஹேவ் த சீட்..” என்று கேட்ட அதுவரை மொபைலை நோண்டிக்கொண்டிருந்தவன் தலையுயர்த்தி பார்த்தான்.

“யா ஸுவர்....”

“தாங்ஸ் ப்ரோ... ஹாய் ஐயம் ஶ்ரீதான்யா... உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்... எனக்கு இந்த சுத்தி வளைச்சு எல்லாம் பேசத்தெரியாது... நேரடியாவே சொல்லிர்றேன்... நீங்க செம்மையா இருக்கீங்க... ஐ மீன் யு ஆர் லுக்கூங் சோ ஸ்மார்ட் என் ஹேண்ட்சம் ப்ரோ...”என்று ஶ்ரீ கூற அதில் சிரித்தவன்

“ஶ்ரீ இப்போ நீ என்கிட்ட சொன்ன கம்ப்ளிமண்டை கொஞ்சம் அவங்ககிட்டயும் சொல்லிடுமா..” என்று எதிரே வந்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை காட்டினான் அந்த இளைஞன்.

“யாரு ப்ரோ அவங்க??? உங்க கேள் ப்ரெண்டா...”

“முன்னாள் கேள் ப்ரெண்ட... இந்நாள் பியான்சி.... பின்னாள் மனைவி....” என்று அந்த இளைஞனும் கூறிமுடிக்க அப்பெண்ணும் அவர்களிருவரும் அமர்ந்திருந்த மேசையருகே வந்திருந்தாள்...

அவள் அருகே வந்ததும் ஶ்ரீ

“ஹாய் சிஸ்... ஐயம் ஶ்ரீதான்யா..யோர் குட் நேம் ப்ளீஸ்..” என்று ஶ்ரீ கேட்க முதலில் யாரென்று தெரியாமல் வேற்று பார்வையை வெளியிட்ட அப்பெண் மரியாதை நிமித்தம் சிரித்துவிட்டு

“ஹாய்... ஐயம் வினயா..” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட வினயா

“ஆதேஷ் யாரு இவங்க?? உங்க ரிலேட்டிவ்வா...??” என்று ஆதேஷிடம் வினவ அதற்கு ஶ்ரீ பதிலளித்தாள்.

“அதெல்லாம் இல்லை சிஸ்.. இப்போ ஒரு பைவ் மினிட்ஸ்க்கு முதலில் தான் அண்ணாவை எனக்கு தெரியும்....” என்று தான் அங்கு வந்த கதையை தன் மொழியில் ஒப்பித்தவளை ஆதேஷும் வினயாவும் ரசித்துக்கொண்டிருந்தனர்.

“ஏன்மா ஶ்ரீ போயும் போயும் இவரை ஸ்மார்ட் அன்ட் ஹேண்சம்னு சொல்லிட்டியே....”என்று வினயா போலி வருத்தத்துடன் கூற

“பார்த்தியா ஶ்ரீ....இதுக்கு தான் இவகிட்ட சொல்ல சென்னேன்...”

“நீங்க சொல்லுறதும் சரிதான் வினயா அக்கா...”

“என்னமா இப்படி கட்சி மாறிட்ட..”என்று ஆதேஷ் கேட்க

“பாவம் ஆதேஷ். உங்களை பக்கத்துல வந்து பார்த்த பிறகு தான் ஶ்ரீக்கு தன்னோட கம்ப்ளீமண்ட் தப்புனு புரிஞ்சிருக்கு. அதான் இப்படி...”

“எப்படிகா என்னோட மைண்ட் வாயிசை கரெக்டா கேட்ச் பண்ணீங்க??” என்று வினயாவுடன் ஶ்ரீயும் கூட்டணியமைக்க ஆதேஷோ

“சிறப்பு மிகச்சிறப்பு.... இப்படி தான் ஒரு பச்சை மண்ணை வச்சி புட்போல் விளையாடுறதா???” என்று ஆதேஷ் கேட்க ஶ்ரீயோ

“மண்ணை வச்சி புட்போல் விளையாடலாம்னு உங்களுக்கு எந்த ஸ்கூல்ல சொல்லிக்குடுத்தாங்க அண்ணா...??” என்று அப்பாவியாய் வினவிய ஶ்ரீயை கண்டு வினயா சிரிக்க ஆதேஷோ விழி பிதுங்கி நின்றான்..

“வேணாம் ஶ்ரீ... அண்ணா பாவம்...”என்று ஆதேஷ் கூற

“பாவமா தான் இருக்கு... ஆனா விடாதனு மனசு சொல்லுது... விட்டுருனு மூளை சொல்லுது. அதான் எது சொல்றத கேட்குறதுனு யோசிச்சிட்டு இருக்கேன்...” என்றவளுக்கு ஹைபை கொடுத்தாள் வினயா....

இவ்வாறு அவர்களுடன் சில விநாடிகள் வம்பழந்தவள் பின் கிளம்ப முற்படும்போது வினயா

“ஶ்ரீ ஒரு நிமிஷம்...” என்றுவிட்டு தன் கைப்பையில் வைத்திருந்த அந்த இன்விடேஷனை ஶ்ரீயிடம் கொடுத்தவள்

“ஶ்ரீ எங்க வெடிங்கிற்கு நீயும் உன்னோட ப்ரெண்சும் கட்டாயம் வரணும்.... உன்னோட காண்டக்ட் நம்பரை தா... நான் மற்ற பங்ஷனுக்கு உன்னை பர்சனலா இன்வைட் பண்ணுறேன்...” என்று தங்கள் திருமணத்திற்கு ஶ்ரீயிற்கு அழைப்பு விடுத்தாள் வினயா..

“அதுக்கு என்னகா.. வந்து ஜமாய்ச்சிரலாம்.. என்கூட வந்ததெல்லாம் வழிமேல் விழி வைத்து எனக்காக காத்துட்டு இருக்குங்க... நாம இன்னொரு நாள் பார்க்கலாம்... பாய் அக்கா... பாய் அண்ணா..”என்று அவர்கள் இருவரிடமும் விடைபெற்று தன் நண்பர் பட்டாளம் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றாள் ஶ்ரீ...
அதுவரை நேரம் இவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரிஷியிற்கு ஶ்ரீயை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.. அவளது குறும்புத்தனம் வெளிப்படையாக பேச்சு அனைத்தும் அவனை கவர்ந்திருந்தது...

அறிமுகமில்லாதவர்களை அவள் அணுகியவிதம் அவர்களுடன் நட்பு பாராட்டியவிதம் என்று அனைத்தும் அவனை கவரவே செய்தது...
ஏற்கனவே அவளது வசீகரக்குரலால் கட்டுண்டு இருந்தவனது மனம் மொத்தமாய் அவள் புறம் சாயத்தொடங்கியது... இந்த திடீர் மாற்றத்தில் விக்கித்து நின்றவனது எண்ணங்களை கலைத்தது நண்பனின் வருகை.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN