மாயம் 5

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வசீகரிக்கும் உன்னை
வசீகரித்து
நான் வசீகரன்
ஆகும் நாள்
எப்போது???

“ஹாய் ரிஷி!!” என்று தன் நண்பனின் வருகையில் ஶ்ரீதான்யா பற்றிய எண்ணங்கள் தற்காலிகமாக பின்தள்ளப்பட தன் தோழனை வரவேற்பதில் தன் கவனத்தை செலுத்தினான்......

“வாடா அமெரிக்கா ரிட்டன்.. எப்படி இருக்க??? எங்கள எல்லாம் இன்னும் நியாபகம் வச்சிருக்கியே??” என்று உரையாடலை ஆரம்பிக்க

“ஏன்டா இப்படி ஓட்டுற?? ஏதோ காண்டக்ட் விட்டுப்போச்சு ... அதுக்காக இப்படி பேசும் போதெல்லாம் குத்தி காட்டுறியே??”

“டேய் இது நம்ம ஊரு வழக்கம் தானேடா...யாரெல்லாம் வெளிநாடு போயிட்டு வாராங்களோ அவங்களை அவங்க இருந்த நாட்டிலிருந்து ரிட்டன்னு தானேடா சொல்லுவோம்..... என்னமோ அமெரிக்காலேயே பொறந்து வளந்தவன் மாதிரி இப்படி ஒரு கேள்வி கேட்குற???”

“ஏன்டா டேய்??? எனக்கு ஒரு டவுட்டு டா ரிஷி... நீ நிஜமாவே பிசினஸ் மேனா?? இல்ல அப்படினு யாராவது வதந்தியை கிளப்பி விட்டுட்டாங்களா???”

“ஏன்டா இப்படி ஒரு கேள்வி??? எதுனால உனக்கு இப்படி ஒரு சந்தேகம்??”

“உன்னை பற்றி ஒவ்வொருத்தரும் ஆஹா ஓஹோனு சொல்லுறாங்க.... நீ என்னனா காலேஜ் டைமில் பண்ண சேட்டைகளை இன்னும் ரீபிளே பண்ணுறியே அதான் கேட்டேன்...”

“ஓ ஐ சீ... யூ வான்ட் மீ டு பீ சோ போமல்... ஓகே எஸ் யோர் விஸ்.... ஹவ் ஆர் யூ டுயீங்....?? இஸ் எவ்ரி திங் அன்டர் யோர் கண்ட்ரோல்..??”
“என்னடா என்னை அமெரிக்கா ரிட்டன்னு சொல்லிட்டு நீ அப்படி பேசுற?? வேணா டா... இந்த இங்கிலீஷை கேட்டு கேட்டு காது செத்து போச்சு....”

“இப்போ புரியிதா?? யாருகிட்ட எப்படி பேசனும்னு ஒரு வரைமுறை இருக்கு... நான் ஒரு பிசினஸ் மேன் அப்படீங்கிறதால எல்லார்கிட்டயும் பிசினஸ் பேச முடியாது..... அது தொடர்பாக பேசுறவங்ககிட்ட தான் அப்படி நடந்துக்க முடியும்... என் குடும்பத்துகிட்டயும் நட்புகளிடமும் நான் எப்பவும் ரிஷி தான்... நான் பிசினஸ் மேன் அப்படினு என்னோட அன்பையோ அணுகல் முறையையோ மாற்றிக்க முடியாது.... எனக்கு என்னோட குடும்பம், நட்புக்கு பிறகு தான் பிசினஸ்..... அதுனால நீ உன்னோட காலேஜ் டைம் ரிஷியா நினைத்து எப்பவும் போல பேசுறதுனா பேசு... ஓர் எல்ஸ்..”

“ஐயா சாமி ....நான் கேட்டது தப்பு தான்... வேணும்னா வாயில போட்டுக்குறேன்.... இப்போ ஆளை விடுடா சாமி”

“அந்த பயம் இருக்கட்டும்... சரி சொல்லு..லைப் எப்படி போகுது?? ஆண்டி அங்கிள் எல்லாம் எப்படி இருக்காங்க???”

“அம்மா அப்பா எல்லாம் சூப்பரா இருக்காங்க... லைப் சும்மா ஜெட்டு மாதிரி போய்கிட்டு இருந்திச்சி....”

“இருந்திச்சா??? அப்போ இப்ப என்னாச்சு??”

“அதுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடப்போறாங்கடா...”

“ஏன்டா ஏதும் ஓவர் ஸ்பீடில் டிராவல் பண்ணிட்டியா??” என்று ஹரியை ரிஷி பகிடி செய்ய அவனோ

“ஏன்டா என்னை பார்த்தா ஓவர் ஸ்பீடில் போறவன் மாதிரியா இருக்கு??”

“எப்படி டா இல்லனு சொல்ல முடியும்?? காலேஜ் டைமில் எப்பொழுதும் தங்களை சுற்றி மங்கையர் கூட்டம் வட்டமடித்து கொண்டிருந்தது ஊரறிந்த விடயமாயிற்றே நண்பா..” என்று ரிஷி நாடகப்பாணியில் ஹரியை கேலி செய்ய

“ஏன்டா சொல்ல மாட்ட...உன்னை பிரண்டா வச்சிருந்ததுக்கு எனக்கு காலேஜில் இருந்த பொண்ணுங்க எல்லாம் சிஸ்டர் ஆகிட்டாங்க... உன்னை கரெக்ட் பண்ண எல்லா பெண்ணுங்களும் என்னை அண்ணானு கூப்பிட தொடங்கிட்டாங்க.... இப்படி காலேஜ் பொண்ணுங்கிட்ட எல்லாம் பல்ப் வாங்குன என்னை பார்த்தா உனக்கு ஓவர் ஸ்பீடில் போறவன் மாதிரியா தெரியிது??”

“அப்போ நீ பிரமோஷன் வாங்கிட்டியா??”

“என்னடா பிரமோஷன்??”

“அது தான்டா சன்னியாசியா இருந்த நீ சம்சாரியா மாற பிரமோஷன் வாங்கிட்ட...”

“உனக்கு எப்படிடா தெரியும்?”

“நீ சொன்ன மாடிலேஷனை வைத்து நான் மட்டும் இல்ல.. சின்னப்புள்ள கூட சொல்லும்.....”

“சரி சரி... நீ இன்டலிஜன்ட் னு எனக்கு அடிக்கடி மறந்து போயிடுது....”

“சரி சொல்லு... சிஸ்டர் பெயரென்ன??? எங்க இருக்காங்க??”

“அவ பெயர் ப்ரீதா.... இங்க தான் நம் ஊருல ஏதோ ஒரு காமன்ட்சில் டிசைனரா வர்க் பண்ணுறா.... வீட்டுல பேசி ஓகே பண்ணிட்டாங்க...சோ எனக்கும் ஓகோ...”

“கங்கிராட்ஜ் டா... அது சரி வீட்டுல ஓகேனு சொன்னதால தான் உனக்கு ஓகேவா??? இல்ல வேற ஏதும் விஷயம் இருக்கா??”

“உனக்கு மட்டும் ஏன்டா இப்படி எல்லாம் டவுட் வருது??”

“இல்ல மச்சி... உன்னை அவ்வளவு சீக்கிரத்துல நம்ப முடியல.. அதான் கேட்டேன்”

“உன்ன மாதிரி ஒவ்வொருத்தனுக்கும் ஒரு நண்பன் இருந்தா வெளங்கிடும்..”

“அது இருக்கட்டும்... இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு... இந்த பிரபோசல் வீட்டுல உள்ளவங்க ஓகே பண்ணதா??... இல்ல நீ ஏதாவது தில்லு முல்லு வேலை பார்த்து வீட்டுல ஓகே பண்ண வச்சியா???”

“ஏன்டா என்னை பற்றி எவ்வளவு நல்லெண்ணம் உனக்கு?? என்ன பார்த்தா உனக்கு அப்படியா தெரியிது??”

“ பார்க்கிறவங்களுக்கு தெரியாது பழகினவங்களுக்கு தெரியும்..” என்று ஹரியை ரிஷி ஓட்டிக்கொண்டிருக்க அவனோ

“அப்படி என்ன என்கூட பழகி தெரிஞ்சிக்கிட்ட??”

“அதுவா நீ லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணேப்பேனு சபதம் எடுத்ததை தெரிஞ்சிக்கிட்டேன்..”

“அதுனால தான் இப்படி வளைத்து வளைத்து கேள்வி கேக்குறியா?”

“ஆமா .... சரி இப்போ நீ பதில் சொல்லு....”

“சரி உண்மைய சொல்லிர்றேன்... இது லவ் மேரேஜ் தான்..ஆனா வன் சைட்... ப்ரீதாவை ஒரு ஷாப்பிங் மாலில் தான் முதன்முதலாக பார்த்தேன்... அப்பவே அவ மேல ஒரு கிரஷ்....அதற்கு பிறகு என்னோட சித்தி பொண்ணு கல்யாணத்துக்கு வந்திருந்தா... அவ யாருனு அங்க இருந்தவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டேன்.... பிறகு அவளுக்கு பிரபோஸ் பண்ணலாம்னு போனேன்.. ஆனா அவ அக்சப்ட் பண்ணாம எங்க வீட்டுல பாக்குற மாப்பிளையைதான் ஓகே பண்ணுவேனு சொல்லிட்டா...நான் அதுக்கு பிறகு அமெரிக்கா போயிட்டேன்...அங்க இருந்து சித்தப்பாவை காண்டக்ட் பண்ணி அவரோட ஹெல்பில் இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டேன்...”

“ வாவ் சூப்பர் டா... பார்த்தியா நான் கரெக்டா தான் கெஸ் பண்ணியிருக்கேன்... சரி எப்போ கல்யாண சாப்பாடு போடப்போற??”

“இன்னும் டூ வீக்ஸ்சில்...”

“ஏன்டா டூ வீக்ஸ்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்போ தான் அமெரிக்காவில் இருந்து வர்றீயா??”

“ஐயோ இல்லடா... திடீர்னு டேட்டை பிக்ஸ் பண்ணிட்டாங்க.... ரிதுவோட பாட்டி கொஞ்சம் சீரியசா இருக்காங்கலாம்... அவங்களுக்கு ஏதும் நடப்பதற்கு முன் அவங்க பேரப்பிள்ளையோட கல்யாணத்தை பார்க்கனும்னு ஆசைப்படுறாங்க...அதான் இப்படி சடுனா டேட்டை பிக்ஸ் பண்ணிட்டாங்க... அதான் நான் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ரிதுவோட ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க... சின்னதா ஒரு என்கேஜ்மன்ட்டை அவங்க வீட்டுல நடத்தினும்னு சொன்னாங்க... அதெல்லாம் முடிச்சிட்டு நேற்று தான் வந்தேன்... கல்யாணம் ரிதுவோட பாட்டி ஆசைப்படி அவங்க ஊரிலேயே வைத்துக்கொள்ள கேட்டாங்க... அம்மாவும் ஓகேனு சொல்லிட்டாங்க... நாங்க இங்க ரிசப்ஷெனுக்கான வேலைய பார்க்கனும்..... அதான் உனக்கு இப்பவே சொல்லிட்டேன்...கல்யாண பிசியில சில நேரம் உன்னை காண்டக்ட் பண்ண முடியாம போயிருமோனு தான் ஊரிலிருந்து வந்தோன உன்னை மீட் பண்றேன்...”

“ஹாஹா... அதுவும் சரி தான்... நான் நாளைக்கு நைட் மலேசியா போறேன்...எப்படியும் வர வன்வீக் ஆகும்.... “

“பார்த்தியா??? நா எப்படி கரெக்டா வந்தேன்.... சரி கம்மிங் 14த் ஊருல கல்யாணம்.... இந்தா இன்விடேஷன்... மறக்காம வந்துரு... நான் அம்மா அப்பாவை ஈவினிங் இன்வைட் பண்ணுறேன்...நீ கட்டாயம் வந்துரு... சரி இப்போ நான் கிளம்புறேன்...” என்று கிளம்பத்தயாரான ஹரியை

“சரி நான் கட்டாயம் வர்றேன்... ஆனா ஒரு கண்டிஷன்....”

“என்னது”

“உனக்கு வெடிங் பிக்ஸானதுக்கு இன்னைக்கு என்னோட ட்ரீட்... சோ நீ லன்சை இங்க முடிச்சிட்டு தான் போகனும்....”

“அதுக்கு என்னடா.... நல்லாவே சாப்பிட்டு போவோம்... இன்னைக்கு லன்சிற்கு யாரு பர்சை காலி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. நீயே வாலண்டியரா வந்து மாட்டிக்கிட்ட... சோ ஹரி ஹாப்பி மச்சி....”

“நீ திருந்தவே மாட்டியாடா??”

“என்னடா பண்ண?? என்ன தான் கையில பணம் இருந்தாலும் நண்பன் பர்சை காலி பண்ணுற மாதிரி ஒரு சந்தோஷம் எங்கேயும் இல்லை....”

“நல்லா வருவீங்கடா டேய்...”

“தாங்கியூ.. இப்போ ஏதாவது ஓடர் பண்ணு....” என்றுவிட்டு ஹரி அவன் புறம் இருந்த மெனு காடை புரட்டத்தொடங்கினான்... இவ்வாறு நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த தன் நண்பன் ஹரியுடன் பகலுணவை உண்டவாறு சில பல நினைவுகளை பகிர்ந்துகொண்டு உண்டு முடித்தவன் அவனிடம் விடைப்பெற்று எழும்பியவன் கண்களுக்கு மீண்டும் விருந்தானாள் ஶ்ரீ...

அதுவரை பின்தள்ளப்பட்டிருந்த நியாபகங்கள் மீண்டும் படை யெடுத்தன... அவளது குரலை போல் அவளது வதனமும் அவளது செயல்களும் அவனை கவர்ந்திழுத்தது... அவன் அவளை கடக்கும் போது அவள் தன் நண்பர் பட்டாளத்துடன் அரட்டை அடித்துக்கொண்டும் இடையிடையே எழும்பி அவர்களை அடித்துக்கொண்டும் சிறு பிள்ளை போல் விளையாடிக்கொண்டிருந்தாள்.... தன்னை சுற்றி உள்ளவர்கள் நினைப்பதை பற்றி கவலைப்படாது தன்னையும் தன்னோடு வந்தவர்களையும் குதூகலப்படுத்த அவள் செய்த சேட்டைகள் அவனை மிகவும் கவர்ந்தது.... அவளது சேட்டைகளை தொடர்வது மட்டுமின்றி இடையிடையே தன் நண்பர்களை பார்த்துக்கவனித்து கொண்ட விதமும் அவனது கண்ணில் இருந்து தப்பவில்லை.... அவளது ஒவ்வொரு செயலையும் கண நேரத்தில் கவனித்தவன் அவள் தலை தன் புறம் திரும்புவதை உணர்ந்து தன் கூலர்சை எடுத்து மாட்டிக்கொண்டு வாயிலை நோக்கி நகர்ந்தான்...

வாயிலிற்கு விரைந்து வந்தவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு கார் நோக்கி சென்றவனின் நினைவில் அவளது சிரிப்பும் சேட்டைகளுமே நிரம்பியிருந்தது...
இதுவரை அழகான பெண்களை கண்டால் ரசித்துவிட்டு அக்கணமே அதை மறப்பவனுக்கு ஶ்ரீயின் அழகை விட அவளது செயல்கள் மீண்டும் அவனது ஞாபக கடலில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது... அதனால் அவனது மனம் நிதானம் இழந்து தவிக்க அடுத்து என்ன செய்வது என்று அறியாதவாறு அவன் தன்காரினுள் அமர்ந்திருக்க அவனது அலைபேசி ஒலித்தது... அதன் திரையில் அப்பா என்று விழுந்ததை பார்த்தவன் அந்த அழைப்பை எடுத்து பேச

“லஞ்சுக்கு வந்தேன் அப்பா.. இன்னும் அரைமணித்தியாலத்தில் அங்கு இருப்பேன்... பாய்...” என்றவாறு அழைப்பை துண்டித்துவிட்டவனது மனம் மீண்டும் நிதான நிலையை அடைய அவனது மூளை அடுத்த மீட்டிங்கிற்கான ஆயத்தங்களில் இறங்க மீண்டும் அவளது நியாபகங்கள் பின் தள்ளப்பட்டது....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN