நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

முன் ஜென்ம காதல் நீ - 4

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எது கனவு?எது நினைவு?

1598147073836.png

அருள்வர்மன் எச்சரிக்கையை பொருட்படுத்தாது அந்த குதிரையின் மேல் ஏறி வீசிறி எறியப்பட்டாள் மதியழகி சில கணங்கள் ஆகாயத்தில் இருந்து பின் கீழே விழுந்தாள். அவள் விழுந்த இடத்தை கண்டு ஆச்சரியப்பட்டாள் அது ஒரு கயிற்று ஊஞ்சல். கயிறுகளால் பின்னி கட்டப்பட்டிருந்தது. அதனால் அவளுக்கு அடி எதுவும் படவில்லை. பின்னால் இருந்து " தேவிக்கு காயம் ஒன்றும்மில்லையே " என கூறிக் கொண்டே வந்தான் அருள்வர்மன். " என்ன நகைப்பா என்னை பார்த்து தங்களுக்கு " என பொய் கோபத்துடன் கேட்டாள் அவள். அவனும் " தேவிகளை பார்த்து அடிமைகள் நகைக்க இயலுமா தேவி " என்றான் விஷமத்துடன். அவன் சொன்னதின் அர்த்தம் அவளுக்கு புரிந்தது இருப்பினும் " நானா உங்களுக்கா நான் இளவரசியின் தோழி நீங்கள் போட்டியில் வென்றால் நானும் ஏன் இந்த நாடே உங்கள் அடிமை " என்றாள். அவன் உடனே " அதனை பற்றி பிறகு பேசலாம் " என முடித்தான். " இப்படி செய்து விட்டதே உங்கள் புரவி " என்றாள் சற்று கோபமாக இவனும் " நான் சொன்னாதால் இதோடு விட்டான் இல்லை என்றால் கடினம் தான் உங்கள் நிலை " என்றான் அவள் கோபத்தை அதிகரிக்க " என்ன சொல்கிறீர்கள் " என்றாள் அவள். " ஆமாம் தேவி ஏற்கனவே இந்த புரவியை பற்றி நான் கூறினேன் நீங்கள் ஏற்கவில்லை நீங்கள் இங்கு வந்து இவன் மேல் அமர்ந்தது நான் சைகை காட்டினேன் அதனால் இவன் இந்த கயிற்று உஞ்சலில் ஏறிந்தான் இல்லை என்றால் தரையில் போட்டு கால்களால் புரட்டி எடுத்திருப்பான் " என்றான் அவளோ " நான் வந்தது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் தூங்கி கொண்டு தானே இருந்திர்கள் " என்றாள் " ஆமாம் தேவி நீங்கள் வந்த போது உறக்கம் தான் நீங்கள் வந்ததை கண்டு நான் கையில் வைத்திருந்த புறா என்னை எழுப்பியது நானும் உங்களை கவனித்தேன் நீங்கள் புரவி மேல் ஏற போவதை கண்டு அதற்கு மெல்லிய குரலில் கட்டளை இட்டேன் ஆகவே உங்களை இதோடு விட்டான் " என்றான். " புறா உங்களை எழுப்பியதா " என கேட்க " ஆமாம் தேவி இவன் தான் கிட்டு சாதாரண புறா இல்லை வீரர்கள் வளர்க்கும் ஒற்று புறா பல திறமைகள் கொண்டது " என்றான். அவள் " இது போட்டியில் பறந்த புறா தானே " என இகழ்ச்சியாக கேட்க இவன் புன்னகையுடன் " தேவி இன்றைய போட்டியில் நான் எப்படி வென்றேன் என நினைக்கிறீர்கள் " என கேட்டான். அவள் " உங்களை அரச குடும்பத்தார் வீழ்த்த சொன்ன புறாக்களை வீழ்த்தி வென்றீர்கள் " என்றாள் அவன் உடனே " சரி தான் அவர்கள் கேட்ட அத்தனை வண்ண புறாக்களும் எப்படி கூட்டத்தில் இருந்தன " என கேட்க " அது உங்கள் அதிஷ்டம் " என்றாள். அவன் " அது தான் இல்லை " என அவன் கூற" அப்படி என்றால் நடந்தது என்ன? " என்றாள் அவள் அவனும் " விளக்கமாக கூறுகிறேன் நேற்று நீங்கள் போட்டி பற்றி கூறியதும் பயந்தேன் அவர்கள் கேட்கும் புறா இல்லாவிட்டால் என்ன செய்வது என்று ஆகவே என் ஒற்றனை அழைத்து பல வண்ண புறாக்களை ஏற்பாடு செய்ய சொன்னேன் மேலும் நாங்கள் தகவல் பரிமாற பயன்படுத்தும் தூது புறாக்களை பயன்படுத்தி கொண்டோம். அரண்மனை உப்பரிகை பல தளங்களை கொண்டது அதில் புறாக்கள் கூட்டமாக வெளி வரும் தளத்திற்கு கீழே இவன் இருந்தான் வெளிவரும் புறாக் கூட்டத்தில் எந்த வண்ண புறா இல்லையோ இல்லை எந்த வண்ண புறாவை அரச மக்கள் கேட்கிறார்களோ அதனை இவன் தன்னிடம் இருக்கும் புறாக்களில் இருந்து எடுத்து அந்த கூட்டத்தில் கலந்து விடுவான் அனைத்து வீரர்களும் போட்டி மைதானத்தை கவனித்ததால் இவனை கவனிக்கவில்லை " என்றான். அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது அவன் எவ்வளவு தந்திரமாக செயல்பட்டுள்ளான் என்று ஆகவே கேட்டாள் " அப்படி என்றால் நீங்கள் போட்டியில் வெல்ல சதி புரிந்து உள்ளீர்கள் " என்றாள். " வைரத்தை வைரத்தால் அறுக்கலாம் தேவி இல்லாத புறாவை சொல்லி அடிக்க சொல்லி தோற்றதாக கூறினால் இப்படி தான் செய்ய வேண்டும் மேலும் இது சதியல்ல முன்னேற்பாடு " என்றான் அவளும் " நன்றாக தான் இருக்கிறது உங்கள் முன்னேற்பாடு " என்றாள் புன்னகையுடன்

" சரி தேவி அதனை விடுங்கள் புரவியில் ஏற வந்தீர்கள் அது நடக்கவில்லை என வருத்தமா? " என்றான் அவளும் " ஆமாம் " என்றாள் " இவன் உடனே சற்று பொறுங்கள் " என கூறி வாயை குவித்து சிறிய ஒளி எழுப்ப அந்த வெள்ளை நிற புரவி அருகே வந்தது அவன் உடனே " தேவி ஏறுங்கள் " என கூறி அதில் ஏற்றிவிட்டான் அவள் உடனே " வேண்டாம் மீண்டும் வீசிற போகிறது " என்றாள் சற்று பயத்துடன் இவன் " அச்சம் வேண்டாம் தேவி " என கூறி புரவியின் காதில் சில வார்த்தைகள் சொன்னான் உடனே அதுவும் புரிந்து கொண்டு செல்ல தொடங்கியது அந்த மணற்பரப்பை ஒரு சுற்று சுற்றி வந்து நின்றது பின் இவன் " நானும் உடன் வரலாமா " என்றான் விஷமத்துடன் அவளும் " வரலாம் " என்றாள் புன்னகையுடன் அவள் புரவியின் சேனை கயிறுகளை பிடித்திருக்க இவன் ஏறி அவள் பின்னால் அமர்ந்து கொண்டான். அவளின் உடலுடன் இவன் உடல் உரச இவனுக்கு என்னமோ செய்தது குறுகுறுப்புடன் அமர்ந்து கொண்டான். அவளும் இதே உணர்ச்சியில் தான் இருந்தாள். அந்த புரவி சிறுசிறு பள்ளங்களை தாவி குதிக்கும் போது இருவர் உடல்களும் ஒட்டிக் கொண்டு பிரிந்த அந்த சில கண இன்பம் இருவருக்கும் தேவையாக தான் இருந்தன. அவன் அவளின் காதோரம் " மதியழகி நான் ஒன்று சொல்ல வேண்டும் " என்றான். அவனின் மூச்சுக் காற்று காதோரம் பட்டதால் அவளின் கன்னங்கள் சிவந்தன. உடல் சிலிர்த்தது அப்பொழுது அவள் வாயில் இருந்து " ம்ம்ம் " என்ற ஒசை பெரும் மூச்சாக வெளி வந்தது. அவனும் " இதே போல் என் வாழ்வின் இறுதி வரை பயணப்பட வேண்டும் நீங்கள் என் தேவியாக இருக்க வேண்டும் நான் உங்கள் அடிமையாக இருக்க வேண்டும் " என்றான். உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பு அடங்கி அவள் காதில் வார்த்தைகள் கேட்க சில நொடிகள் ஆனது பின்பு அவள் மனதில் மகிழ்ச்சி ரேகைகள் ஓடியது. மனம் துள்ளியது. அதனிடையே மற்றொரு தடைபட்ட எண்ணம் தலை தூக்க மகிழ்ச்சி தடைபட்டது பின் புரவியை நிறுத்தி அதிலிருந்து இறங்கினாள். " நான் யோசித்து நாளைக்கு சொல்கிறேன் " என கூறிக் கொண்டே தன் இன்பகுறிகளை மறைத்துக் கொண்டு சென்றான்.

எத்தனையோ குழப்பங்களையும் எதிரியின் தந்திரங்களையும் எளிதாக பிரிந்துணரும் அருள்வர்மனின் மனது பெரிதும் குழம்பி போய் கிடந்தது. மதியழகியை பார்த்த நாளே பிடித்துவிட்டது அவளின் துணிவு அறிவு பேச்சில் இனிமை என ஒவ்வொன்றும் இவனை அவள்பால் இழுத்தன. அவள் தன்னிடம் பழகும் முறையே பார்த்து நிச்சயம் அவளும் தன்னை விரும்புகிறாள் என அறிந்து கொண்டு தான் இன்று அவளிடம் தன் காதலை சொன்னான். ஆனால் அவள் அப்படி சொன்னது ஏமாற்றமாக தான் இருந்தது ஆயினும் அதற்கு வெட்கம் கூட காரணமாக இருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டான். பின்னர் மறுநாள் எப்பொழுது வரும் அவள் எப்பொழுது வருவாள் என தன் புரவியிடமும் புறாவிடமும் பேசிக் கொண்டே பொழுதை போக்கினான். அடுத்த நாள் நடை பெற போகும் போட்டியை பற்றி எண்ணம் இல்லை. அந்த நாள் இரவும் வந்தது. வானில் மதியும் வந்தது. அதனினும் அழகாய் மதியழகியும் வந்தாள். இவன் அவளை எதிர்பார்ப்புடன் பார்க்க அவள் சாதாரணமாக பார்க்க அவள் சொன்னாள் " நீங்க நேற்று சொன்னதுக்கு நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை வீரரே " என்றாள் அவனும் ஏமாற்றமாக பார்க்க அவள் மேலும் " நீங்க தான் முடிவு எடுக்கனும் " என்றாள் அவன் உடனே " என்னோட முடிவை நேற்றே சொல்லிவிட்டனே " என்றான் அவள் " அதுவல்ல நாளை போட்டி மக்கள் கருத்துபடி நிச்சயம் வென்றுவிடுவீற்கள் அழகும் செல்வமும் செல்வாக்கும் வாய்ந்த இளவரசி உங்களுக்கு கிடைப்பாள் அதனை விடுத்து இந்த சாதாரண பணிப்பெண்னை எப்படி தாங்கள் விரும்புவீற்கள் " அவன் உடனே இகழ்ச்சி புன்னகை புரிந்தான். " நான் உங்களை விரும்பிய பின் எந்த இளவரசியும் எனக்கு தேவையில்லாதவள் தான் மேலும் அவள் என் நண்பனுக்கு உரியவள் ஆகவே தங்கள் ஐயம் தவறானது " என்றான் உறுதியுடன். " ஒரு வேளை நான் தான் அந்த இளவரசி என்றால் " என அவள் வாயில் இருந்து வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வந்தன. இவனுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. அவள் தான் இந்த போட்டிகளுக்கு காரணமான இளவரசி தன் நண்பனுக்காக வெல்ல வந்த இளவரசி தான் விரும்பும் தன்னை விரும்பும் இளவரசி இப்படி ஒவ்வொரு எண்ணங்களும் மனதில் ஏற மனது அனர்த்தம் அனர்த்தம் என சத்தம் இட இவன் தலை வலிக்க அறிவு குழம்ப தன் கண்களை விழித்தான் ஆதி. பழயவையின் நினைவுகள் போகாமல் புதியவற்றின் நினைவுகள் கிடைக்காமல் திகைத்து கண்களை கசக்கி கொண்டான். கண்களில் ஒளி இருந்தது ஆனால் தெளிவு இல்லை. எது கனவு?எது நினைவு? என புரியவில்லை.

ரோஸி அல்ல

கண்களை திறந்து பார்த்தான் ஆதி. இது வரை தான் கண்டது கனவு தான் என அவனுக்கு புரிந்தது. இந் நாள் வரை சில நிமிடங்களாக வந்து கொண்டிருந்த கனவு இப்பொழுது பெரும் கதையாக வருவதை கண்டு அதிசயித்தான். மியுசியத்தில் தன் கனவில் வரும் வாளை பார்த்தது தான் நினைவு இழந்தது என அனைத்தும் மெதுமெதுவாக நினைவிற்கு வந்தது.இவை அனைத்தையும் விட தான் கனவில் கண்ட காட்சிகள் அழுத்தமாக நினைவில் நின்றன. அப்பொழுது ஒரு கேள்வியும் மனதில் எழுந்தது இப்பொழுது நான் எங்கே இருக்கிறேன் என்று. சுற்றும் முற்றும் பார்க்க தான் இருப்பது ஒரு அறை என்பதும் படுத்திருப்பது மெத்தையின் கீழ் உள்ள கட்டில் என்பது புரிந்தது. அந்த அறை குளிர்சாதன வசதி கொண்ட அறை எனவும் தெரிந்தது வேறு எதுவும் தெரியவில்லை. தன் மொபைல் போன் பர்ஸ் என எதனையும் காணவில்லை ஆகவே தான் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என புரிந்தது. எழுந்திரிக்கலாம் என பார்த்தால் தலை மட்டும் அத்தனை கனமாக இருந்தது. தன்னால் கை கால்களை அசைக்க இயன்றாலும் தலையை மட்டும் அசைக்க முடியவில்லை அது மட்டும் வலித்தது ஆனால் தலையில் காயம் இல்லை. ஆகவே அப்படியே இருந்தான். சற்று நேரம் கழித்து வெளியே இருசக்கர வாகனம் வரும் சத்தம் கேட்க ஆர்வத்தை அடக்க இயலாது தலை வலியை தாங்கி கொண்டு எழுந்து அமர்ந்தான். அப்பொழுது உள்ளே மைக்கேல் வந்தான் " நண்பா சரியாகிருச்சா சந்தோஷம் டா " என கூறிக் கொண்டே வந்தான். இவனும் மகிழ்ச்சியுடன் "வாடா என்ன நடந்துச்சு எப்படி இங்கே வந்தேன் " என்றான். அதற்கு அவன் " நீ மியுசியத்துல மயங்குன இரண்டு நாள் முன்னாடி டாக்டர் கிட்ட போனா இது சாதாரண மயக்கம் தான் சரி ஆகும்னாரு ஆனா நீ எந்திரிக்கல உயிருக்கு ஆபத்து இல்லனு சொன்னாரு. எனக்கு பயமா போச்சு மிச்ச பசங்க எல்லாம் டூர் போய்ட்டாங்க நான் உன்ன மனோதத்துவ டாக்டர் கிட்ட கூட்டு போனப்ப அவர் பல டெஸ்ட் இது ஒரு மன வியாதியாம் கோடி கோடில ஒருத்தருக்கு இப்படி வருமாம் பேரு ரீபெர்த் மால்டிபில் பெர்ஸ்னாலட்டி டிஸ்ஸாடர் அதாவது ஒருவன் தன்னோட முன் ஜென்ம சம்மந்தமான பொருட்கள பார்க்குறப்ப அவன் மனசு அளவுல அந்த முன் ஜென்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுடுவானாம் அந்த வாழ்க்கை முழுவதும் அவனுக்கு கனவு போல இருக்குமாம் இங்க அவனோட உடல் மட்டும் தூக்க நிலையில இருக்குமாம். எப்ப அவன் மனசு ரொம்ப குழப்பம் இல்லனா பயமாகுதோ அப்ப நார்மல் ஆகிடுவாங்கலாம்னு சொன்னாரு நீ இப்ப தான் நார்மல் ஆகிருக்க " என்றான். இதனை கேட்டு ஆதிக்கு ஏசி அறையிலும் வேர்த்தது. ஆனால் பயத்தை வெளிக்காட்டாமல் கேட்டான் " இந்த யார் கிட்டையாவது சொன்னியா? " என கேட்க அவன் " இல்லடா உங்க அப்பா அம்மா யார் கிட்டையும் சொல்லல நாம பெங்ளூர்ல என்னோட மாமா பார்ம் கவுஸ்ல இருக்கோம்" என்றான். " உங்க மாமா எல்லாம் இங்க இருக்காரா " என அவன் கேட்க " இல்லடா இங்க அத பத்தி அப்புறம் சொல்றேன் நான் போயி டாக்டர கூட்டிட்டு வரேன் நீ ரெஸ்ட் எடு தண்ணியும் பழங்களும் இங்க இருக்கு சாப்பிடு சீக்கிரம் வரேன் " என சொல்லி கிளம்பினான். ஆதிக்கு வருத்தமாக இருந்தது தன் நிலை எண்ணி முன் ஜென்ம நினைவுகளாம் அந்த டாக்டர் சொல்வது சரியா ஆனால் அவர் சொல்வது போல் தானே தனக்கும் நடந்தது. அப்படி என்றால் நான் தான் அருள்வர்மனா என்ன நடக்கிறது எனக்குள். இது பெற்றோருக்கு தெரிந்தால் என்ன நினைப்பார்கள்? உண்மையில் தான் மன நோயாளியா? என பல கேள்விகள் மைக்கேல் வழக்கம் போல் பேசினாலும் அவன் இந்த மாளிகையை பற்றி எதையோ தன்னிடம் மறைப்பதாக தோன்றியது. அது கவலை அளிக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என எண்ணினான் அவன் அதனை பற்றி பேசும் போது அவன் முகத்தில் தென்பட்ட சோக ரேகைகளை நானைத்தான். எது எப்படியோ தன் கனவில் வந்த மதியழகியின் முகம் மீண்டும் மீண்டும் வந்தது இவ்வளவு அழகாக ஒரு பெண் இருக்க முடியுமா என எண்ணினான். பெண்களிடம் அவனுக்கு பழக தெரியாது யாரிடமும் பழகியது இல்லை. அழகை பார்த்து வியந்தது கூட கிடையாது ஆனால் கனவில் வந்த இந்த முகத்தை கண்டு ஆசை கொண்டான் ரகசியமாக இதனை வெளியே சொன்னால் தன்னை மனநோயாளி என நிச்சயம் செய்து விடுவார்கள் என நினைத்து சிரித்தான்.

டாக்டர் வந்தார் " ஹாய் ஐ எம் வருண் " என அறிமுகம் செய்து கொண்டு பேச தொடங்கினார். " நான் உங்களுக்கு எந்த டிரீட்மெண்டும் கொடுக்க போறது இல்ல சில அட்வைஸ் தான் தர போறேன். நீங்க கொஞ்சம் கனவு காணாம இருங்க உணர்ச்சி வசப்படாதீங்க மனச அமைதியா வைச்சுக்கோங்க மனசு ரொம்ப அழுத்தமான அது இப்ப இருக்குற நிகழ்கால நிகழ்வுகளையும் நினைவுகளையும் விட்டுட்டு ரொம்ப பின்னாடி அதாவது முந்துன ஜென்மம்னு அது நினைக்கிற கால கட்டத்துக்கு போயிறுது அதான் உங்க பிராபளம் மருந்து நான் கொடுத்தாலும் நீங்க கன்ரோலா இருக்குறது நல்லது " என கூறினார்." அப்ப எனக்கு நினைவுகள் எல்லாம் பொய்யா? " என ஆதி கேட்க " ஆமாம் இத உங்க பூர்வ ஜென்மமா நினைக்குறீங்க ஆனா உண்மையிலேயே இவை எல்லாம் நீங்க கேட்ட படிச்ச விஷயங்களோட மிச்சம் தானு அறிவியல் சொல்லுது ஆனா பூர்வ ஜென்ம நினைவுகள் சிலருக்கு வந்ததா சொல்லியிருக்காங்க அதுக்கு எல்லாம் ஆதாரம் இல்ல. அந்த நினைவுகள் எதுவாக இருந்தாலும் இதே மாறி இன்னும் இரண்டு தடவ நடந்தா பிரைன் டெத் கூட நடக்கலாம் சோ அத பத்தி எல்லாம் நீங்க யோசிக்காதீங்க " என்றார். இவனும் " சரி டாக்டர் " என முடிக்க அவர் சில மருந்துகளை கொடுத்து விட்டு கிளம்பினார். பின் ஆதி கேட்டான் மைக்கேலிடம் " டேய் இங்க வேற யாருடா இருக்கா " என கேட்க " அப்புறம் சொல்றேன் " என்றான் இவன் விடாமல் கேட்க " எங்க மாமாவோட மூத்த பொண்ணு இங்க இருக்கு " என்றான் அவன் உடனே " இத சொல்ல தான் வெக்கப்பட்டியா நான் ஓட்டுவெனா " என்றான் அவன் " இல்ல டா இந்த பிரச்சனையே வேற அவளுக்கும் நம்ம ஏஜ் தான் இருக்கும் நடந்த ஒரு ஆக்ஸிடண்டுல அவளுக்கு சுய நினைவு போச்சு நீ இப்ப இரண்டு நாளா இருந்த பாரு இப்படி தான் அவளும் இருக்குறா பல மாசமா மாமா அத்தைக்கு பிஸினஸ் தான் எல்லாம் அதனால அவள இங்க வைச்சு ஒரு வேலைக்கார அம்மாவ வைச்சு பாத்துக்குறாங்க " என முடித்தான். " ஒ சாருக்கு அந்த பொண்ண பிடிக்கும் போல சும்மா சொல்லு " என கேட்க " ஆமா டா அவ பேரு ரோஸி எனக்கு பிடிக்கும் " என சொன்ன அவனை " உனக்கு நிறைய பேர பிடிக்கும் ஸ்கூல் காலேஜ்ல எத்தன பேர சொல்லியிருப்ப " என சொல்லி சிரித்தான் " இது அப்படி இல்லடா " என்றான் இவனும் " சரி சரி விடு என்னால உன் டூர் தான் போச்சு " என்றான் அவன் " அது பிரச்சனை இல்லடா நீ நல்லா ஆனதே போதும் நீ ரெஸ்ட் எடு நான் போயி மாமா அத்தையை பார்த்துட்டு வாரேன் என சொல்லி கிளம்பினான். இவன் உடனே " நீ போ நான் போய் உன் ரோஸிய பார்க்குறேன் " என்றான். அவன் சோக புன்னகையுடன் " பாரு பாரு ஆனா அவ பேசமாட்டா அவள பாத்துக்க ஒரு ஆயாம்மா வரும் அவங்க கூட பேசு " என சொல்லி சிரித்து விட்டு கிளம்பினான்

இவன் சற்று நேரம் சிந்திதான் தன் நிலையை எண்ணி சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. தன் உடலை அசைத்து பார்த்தான் நன்றாக அசைந்தது. தலைவலியும் சற்று குறைந்திருந்தது. ஆகவே மெதுவாக எழுந்து நடக்க தொடங்கினான். அந்த வீடு அல்ல அல்ல மாளிகை வீட்டை சுற்றி தோட்டம் நீச்சல் தொட்டி ஊஞ்சல்கள் என அட்டகாசமாக இருந்தது. அந்த மகிழ்ச்சியானவற்றை பயன்படுத்த இயலாமல் அந்த வீட்டின் வாரிசு படுத்திருப்பதை நினைத்து வருந்தினான். ஒவ்வொரு அறையாக சுற்றினான். இறுதியாக அவள் இருந்த அறையை கண்டுபிடித்தான். அந்த அறையே சுத்தமாக இருந்தது. இலவம் பஞ்சு மெத்தை மேல் அழகாக படுத்திருந்தது ஒரு உருவம் தான் யார் என்ற சுயநினைவு இன்றி. இரண்டு நாட்கள் அவ்வாறு இருந்த எந்நிலையே பரவாயில்லை என எண்ணினான். அந்த உருவத்தை நினைத்து பரிதாபமும் கொண்டான். அருகே சென்று பார்த்தான் பெரும் அதிர்ச்சி கட்டிலில் இருந்த பெண் மிகவும் அழகாக இவன் கனவு அல்லது கடந்த காலத்தில் வரும் மதியழகி போலவே அச்சு அசலாக இருந்தாள். அதே முகம் அகன்ற நெற்றி குழி விழும் கன்னம் என மெய் சிலிர்த்து விட்டது இவனுக்கு பயத்தில் ஆச்சரியத்தில் அங்கிருந்து நகர முற்பட்டான் ஆனால் இவன் கையை ரோஸி பிடித்துக் கொண்டாள் இறுக்கமாக அசந்தே போய்விட்டான் பல மாதங்களாக சுய நினைவின்றி மருத்துவம் பயனளிக்காமல் உள்ள பெண் தன் கையை ஏன் பிடிக்க வேண்டும் தன் மதியழகியை போலவே ஏன் இருக்க வேண்டும் என பல கேள்விகள். இறுதியாக முடிவு செய்தான் தான் கனவு தான் காண்கிறோம் எனவே செல்வோம் என கையை உதறிக் கொண்டு நகர்ந்தான். அப்படி நகர்ந்த தடுமாற்றத்தால் கட்டில் அடியில் இருந்த ஒரு நோட்டில் இடித்துக் கொண்டான். எடுத்து பார்த்தால் டைரி. தூசி பிடிந்து போய் கிடந்தது. எடுத்து படிக்க தொடங்கினான் அது ரோஸியுடைய டைரியாக இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு படித்தான்.அதனை படிக்க படிக்க இவள் ரோஸி அல்ல தன் மதியழகி தான் என அவனுக்கு புரிந்தது. அதில் பின்வரும்மாறு எழுதியிருந்தது.
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இப்படி சஸ்பென்ஸ்ல எங்கள சுத்த விட்டுடிங்களே author ji😏😏🙄🙄😪😪
சீக்கிரம் அடுத்த epi கொடுங்க😍😍
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN