முன் ஜென்ம காதல் நீ - 5

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
1598754195627.png
குழப்ப ரேகைகள்

அந்த டைரியை எடுத்து படிக்க தொடங்கினான். நான் ஒரு இளவரசியாக இருக்கிறேன். அதுவும் அழகாக இருக்கிறேன் என பலர் கூறுகிறார்கள். சிறு வயது முதலே பல கட்டுபாடுகள் சிறையில் இருக்கும் கைதி போல் ஆனால் அவர்கள் வைக்கும் பெயர் பாசம் அனைத்திற்கும் சிகரமாக என்னை மணம் புரிய போட்டிகள். நொந்து விட்டது அந்த போட்டியில் பலர் தோற்று தங்கள் வாழ்க்கையை சிறையில் கழிக்கிறார்கள் கொடுமை. அரண்மனைக்கு வெளியே நான் ரசிக்க அனுபவித்து பெற பல அனுபவங்கள். ஆனால் எனக்கு அரண்மனை விட்டு செல்ல அனுமதி இல்லை. ஆகவே அவர்களை ஏமாற்றி வெளியே செல்ல தொடங்கினேன் என் தோழிகளுடன் மாதத்தில் சில நாட்கள் மட்டும் என் தோழிகளுடன். அங்கு காணும் அழகுகள் அருமை அருமை கடலும் வானும் இணையும் அற்புத இடம் அதற்கிடையே ஓடி முடியும் மணற்பரப்பு அதனை தாண்டி கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர் நீர் எங்கும் நீர். அதன் மேல் அந்த கடலை அடக்கியாளும் கப்பல்கள் அவை தாங்கி வரும் செல்வ குவியல்கள் முத்துகளும். உலகம் வியக்கும் வணிகம். அதற்கேன ஏற்பட்டுள்ள கடைத்தெருகள். பல பிரிவுகளாகபல தரப்பட்ட மக்களாக ஆயிரகணக்காணோர் அனைத்து வகை மாந்தரும் ஓரிடத்தில் கூடியதாக பிரமையை அளித்தது. மறுபுறம் தெரிந்தது என் நாட்டின் வீரம். பல தரப்பட்ட புரவிகள் அதனை அடக்கும் மாவீரர்கள் அதனை ரசிக்கும் மக்கள் கூட்டம் அதில் நானும். அங்கு வெறி கொண்டு மக்கள் கூட்டத்தில் புகுந்த புரவி அதனை தன் அதட்டாலாலே அடக்கிய மாவீரன். என்னை அவன்பால் இழுக்க நானும் பின் சென்றேன். அவனே அருள்வர்மன் பழக தொடங்கியவுடன் பிடித்துவிட்டது. பார்வையில் கூர்மை, புத்தியில் தெளிவு, பெண்களிடம் தூரம், பேச்சில் கண்ணியம் பார்வையிலும் கூட போட்டியில் வெல்வானா என்று தெரியவில்லை என் மனதினை வென்றுவிட்டான் மொத்தமாக பின் நடந்த போட்டிகளிலும் வென்றான். ஆனால் அவன் போட்டியில் பங்கேற்கும் காரணத்தை அறிந்து பயந்தேன் குழம்பினேன் நான் யார் என்பதினை அப்பொழுதே சொல்லியிருக்கலாம் ஆனால் விலக்கிவிடுவானோ என பயந்தேன். முதலில் போட்டியில் அவன் வெற்றியடையட்டும் என தள்ளி போட்டேன். ஆனால் இப்பொழுது அவன் அவசரப்பட்டுவிட்டான் தன் காதலை சொல்லியும் விட்டான் நானும் சொல்லிவிட்டேன் என்னை அறியாமல் நான் யார் என்பதினை. அவனும் குழம்பிவிட்டான் ஆனால் தெளிந்துவிடுவான் என தெரியும். ஆனால் அவன் எதனை காப்பான் தன் நட்பையா? இல்லை காதலையா?. இதனை விட பெரிய குழப்பம் நாளைய போட்டியில் எப்படி வெல்வான் தோற்றால் அவ்வளவு தான். இதுவரை வந்த அனைத்து போட்டியிலும் வென்றுள்ளான் ஆனால் இப்பொழுது அவன் மனம் குழம்பி போய் கிடக்கிறது. மறுநாள் போட்டி முதல் நாள் இரவில் அவனை தேடி சென்றேன் காணவில்லை அதே கடற்கரை சோலை அதே நிலவு அதே அலைகளின் ஓசை ஆனால் அவனை காணவில்லை. அவனின்றி அனைத்தும் வெறுமையாய். தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை திரும்பிவிட்டேன் கண்ணீரே துணையாய் கவலையே நிலையாய் முடிவு செய்து விட்டேன் மறுநாள் போட்டியில் அவன் என்னை ஏற்றாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவன் வெல்ல வேண்டும் இல்லை சுதந்திரமாக என்னை நீங்கி செல்ல வேண்டும் இல்லை என்றாலும் அவனை விடுவித்து அவன் தேசம் அனுப்புவேன். அவன் முக்கியம் எனக்கு என் காதலை விட.

மறுநாள் சூரிய உதயம் சற்று நேரம் கழித்து நடைபெற்றது. குழம்பிய எங்கள் மனங்களை போல வானிலை பனிமூட்டமாக காணப்பட்டது. அதே நிலை சற்று நேரத்தில் மாறினாலும் என் மனக்குழப்பம் மாறவில்லை அதே மனநிலையில் போட்டி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்திருந்தேன். போட்டி தொடங்கும் நேரம் நெருங்கியது ஆனால் என்னவன் வர தாமதமாகியது அவனும் கவலை தோய்ந்த அதே முகத்துடன் அங்கே வந்தான். போட்டி இரண்டு சுற்றுகளை கொண்டது. முதல் சுற்றில் கேள்விகள் கேட்கப்படும் முதல் தமிழ் சங்கத்தில் இயற்றப்பட்ட தமிழ் பாடல்களான பரிபாடல், மூதுனாரை, அகத்தியம் முதலியவற்றில் இருந்து. இதில் ஏதேனும் ஒரு நூலை படித்து முழுவதும் புரிந்து கொள்வதற்கு ஒரு ஆயுள் நிச்சயம் போதாது. இவற்றை படிப்பதற்காகவே தங்கள் ஆயுளையை அர்ப்பணம் செய்த பல அறிவுசார் சான்றோர்கள் கேள்விகள் கேட்க இவன் பதில் அளிக்க வேண்டும். ஏறத்தாழ நூறு அறிஞர்கள் சேர்த்து கேள்விகள் கேட்பார்கள். கேள்விகள் நூல்களில் மட்டும் இல்லாமல் சுயமாக சிந்திக்கும் வகையிலும் இருக்கும். அந்த சான்றோர் முழுவதும் திருப்தி அடைந்தால் மட்டுமே இவன் வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்படுவான். இல்லை என்றால் சிறை தான். தெளிந்த மனதுடன் இருந்தாலே வெல்வது பற்றி நினைப்பதே கடினம் இவனோ குழம்பி போய் உள்ளான். அலட்சிய புன்னகை தவழும் அவன் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் நான் பயத்து விட்டேன். போட்டி தொடங்கியது. என்ன ஆச்சரியம்? அரிய வினாக்கள் அனைவரும் வாயடையும் வகையில் அதிசய விடைகள் வாயடைந்து போனேன். என்னவன் எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் சிந்தை நன்றாக தான் இருக்கும். அவன் மேல் இருந்த காதல் அதிகமானது. போட்டி பல நாழிகைகள் தொடர்ந்தது. இருப்பினும் அவன் அசரவில்லை பிறரை தான் அசர வைத்தான். பல நுட்பமான கேள்விகள் மெய்சிலிர்க்க வைக்கும் பதில்கள் ஆச்சரியம் அதிசயம் இறுதியில் வெற்றி அவன் வசம். போட்டியின் இரண்டாவது சுற்று தொடங்கியது.

இந்த சுற்றில் ஒரு நீளமான கண்ணாடி பெட்டியில் 24 ஒரே மாதிரியான பெண் உருவ பொம்மைகள் வைக்கப்படும் அதில் ஒன்று மட்டும் உயிருள்ள பெண். மற்றவை அனைத்தும் பதுமைகள். போட்டியாளர் அந்த கண்ணாடி பெட்டியின் உள்ளே இருக்கும் பெண்னை பார்த்தே கண்டு பிடிக்க வேண்டும் ஒரு நாழிகைக்குள் இல்லை என்றால் அவர் தோற்றவர் தான்.உயிருள்ள பெண் மூச்சு பயிற்சி பெற்றவர் ஒரு நாழிகை சாதாரணமாக மூச்சை அடக்கி கொள்வார். போட்டி தொடங்கியது அச்சு அசலாக ஒரே உருவமாக இருக்கும் 24 பெண் உருவங்கள் கொண்ட கண்ணாடி பெட்டி மைதானத்தின் நடுவே வந்தது. போட்டிக்கான கால நேரம் தொடங்கியது. அருள்வர்மன் அந்த பேழையை சுற்றி சுற்றி வந்தான் ஒரு வித்தியாசம் கூட தெரியவில்லை. அனைவரும் ஒரே நிற உடை ஒரே நிறம் ஒரே தோரணை எதோ பிரதி எடுத்தார் போல். பல முறை அந்த பேழையை பார்த்தான் ஒன்று கூட மாறுபட்டது போல் தோன்றவில்லை ஏமாந்து தான் போனான். நாழிகை துளிகளும் ஓடி கொண்டே இருந்தன. பாதி நாழிகை கழிந்ததும் அரசர் " என்ன வீரனே நன்றாக பாருங்கள் " என்றார். இவனும் தேடினான். உரோம கால்கள் கூட ஒரு பிரதியிலும் காணப்படவில்லை தாம் தோற்று விட்டோம் என்றே முடிவு செய்தான். ஒரு நாழிகை முடிய போகும் தருவாயில் அரசர் " இன்னும் கால அவகாசம் வேண்டுமா? " என்றார். எனக்கு தெரியும் அதில் யார் பெண் என்று அவனை காக்க ஒரு சருகை எடுத்து யாரும் கவனிக்காத வண்ணம் அந்த பெண் மேல் ஏறிந்தேன் அவன் அதனை கவனிப்பான் என்ற எண்ணத்தில் ஆனால் அந்த சருகு பக்கத்தில் இருந்த பெண் மேல் வீழ்ந்தது. அவனும் அதனை கவனித்து ஒரு பதுமையை சுட்டிக் காட்டினான். என் இதயமே ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தி விட்டது. என்னால் அவன் தவறான பெண்னை காட்ட போகிறான் தோற்க போகிறான் என நினைத்தேன். துடித்தேன் என்ன செய்வேன். ஆனால் சபை ஆச்சரியத்தில் மூழ்க அந்த பெண்ணும் வெளியே வந்தாள். போட்டியில் வென்று விட்டான் அவன். பின் அவனை அழைத்து மேடையில் வைத்து கௌரவித்தார்கள் அவன் என் தந்தையிடம் ஒரு வேண்டுதலை வைத்தான் இந்நாள் வரை இந்த போட்டியில் தோற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று. அவரும் அதனை ஏற்றார் அது எதற்கு என்று எனக்கு தெரியும் தானே. தோற்றவர் அனைவரும் மைதானத்திற்கு நடுவே அழைத்து வரப்பட்டனர். அதில் அவன் கண்கள் கூட்டத்தில் துளவின தன் நண்பனை. நூற்றுக்கணக்கில் இருந்தவர்களிடையே தேடினான் ஆனால் அவனை காணவில்லை கஜவர்மனை இவன் முகத்தில் அதிகமான குழப்ப ரேகைகள். போட்டியில் வென்ற மகிழ்ச்சி போன இடம் தெரியவில்லை.

துரோகம்

போட்டி மேடையில் இருந்த அருள்வர்மனின் நிலை மிகவும் சங்கடமாக இருந்தது. போட்டியில் வென்றாகிவிட்டது ஆனால் வெற்றியின் பரிசு கிடைக்கவில்லையே தன் நண்பன் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் காணப்பட்டது. ஆனால் மதியழகி அதாவது இந்திர ராணியின் முகத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. என்னவன் வென்று விட்டான். போட்டியில் வெல்வதற்கு முன்பே என் மனதை வென்றவன் அல்லவா அவன். மக்கள் கூட்டத்தில் ஜயகோஷம் வானை பிளக்க என் அருகே வந்து நின்றான். என் தந்தை அவனை பற்றி விசாரிக்க அவனும் தான் ஏழு குன்ற நாட்டின் இளவரசன் என கூறினான். உங்கள் பெற்றோருக்கு நாங்கள் செய்தி அனுப்புகிறோம் நீங்கள் அரண்மனையிலேயே தங்கி கொள்ளுங்கள் என அனுமதி அளித்தார் அரசர். அங்கிருந்த அனைவரின் கண்களும் எங்கள் மீது தான் இருவரும் அருகாமையில் அமர்ந்திருந்தோம். இதற்கு முன்னரும் இருந்தோம் ஆனால் இப்பொழுது அனைவரும் அறிய என்னவன் எனக்கே உரியவன் ஆன நிமிடம். முகம் முழுவதும் சந்தோஷம். ஆனால் அவன் முகத்தில் குழப்பம் அதற்கு தான் காரணம் தெரியவில்லை. தன் நண்பனுக்காக வந்து இருக்கிறான் என தெரியும் ஆனால் குழப்பம் எதற்கு?... அவன் விருப்பப்படி போட்டியில் தோற்று சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்தாகிவிட்டது. அருள்வர்மனின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. தன் நண்பனுக்காகவும் அவன் விரும்பிய பெண்ணிற்காகவும் வந்து இருந்தான். ஆனால் விதி வசத்தில் அவன் விரும்பிய பெண்ணையே இவனும் விரும்பும் சூழல். காரணம் சூழ்நிலை தான். தன்னை மீறி நடக்கும் காரியங்களுக்கு மனிதர்கள் சொல்லும் காரணம் சூழ்நிலை. தன் வீரர்கள் பலர் அந்த வார்த்தையை தங்கள் கவன குறைவுக்கு காரணமாக சொல்லுவதை கேட்டு சிரித்து இருக்கிறான் எள்ளி நகையாடியும் இருக்கிறான் ஆனால் இப்பொழுது தானும் அந்த வார்த்தையே பயன்படுத்தியதை நினைத்து சிரித்தான். அவளை இந்திர ராணியாக பார்த்திருந்தாள் கனவிலும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான் ஆனால் அவன் சந்தித்தது மதியழகியாக சாதாரண பணிப் பெண்ணாக. அறிவுக்கு அவள் தனக்கானவள் அல்ல என புரிந்தாலும் மனதிற்கு மட்டும் அவளை விட்டுவிட இயலவில்லை ஆகவே முதலில் போட்டியில் வென்று தன் நண்பனை சுதந்திரம் ஆக்கிய பின் தன் நிலையை எடுத்து சொன்னால் அவன் நிச்சயம் புரிந்து கொள்வான். அவனுக்கு சுதந்திரத்தை கொடுத்து தான் தன் மதி விரும்பிய அழகி மதியழகியை மணம் புரியலாம் என எண்ணி இருந்தான். அந்த எண்ணப்படி தான் போட்டிக்கும் வந்திருந்தான் போட்டியில் வென்றாகிவிட்டது ஆனால் கஜவர்மன் எங்கே? தன் குழப்பத்திற்கு முடிவு சொல்பவன் எங்கே? என்ற கேள்வி மனதிலே உலவிக் கொண்டிருந்தது. தன் எதிரி நாட்டில் தன்னை பற்றியும் தன் நண்பனை பற்றியும் கூறுவது சுத்த மடத்தனம் என எண்ணி தன் நிலையையும் சொல்லாமல் அவர்கள் விருப்பப்படி அரண்மனையிலேயே தங்கி சற்று அமைதிக்காக உப்பரிகையில் நடமாடிக் கொண்டிருந்தான். போட்டி முடிந்த மாலை நேரத்தில் அப்பொழுது தன் பின்னால் நிழல் படர்வதை கண்டு திரும்பி பார்த்தான். அங்கே நின்றிருந்தாள் மதியழகி அதான் இந்திர ராணி அவள் உடையில் பெரிய மாற்றம் இல்லை எப்பொழுதும் அவனை காண வரும் அணியும் சாதாரண உடையையே அணிந்திருந்தாள் " என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் வீரரே " என கூறிக் கொண்டு அருகே வந்தாள் அவள் கூறிய பொய்யில் அவள் மேல் கோபம் இருந்தாலும் அமைதியாக சிந்தித்ததில் அவள் நிலை புரிந்தது தன் நண்பனுக்கும் தன் நிலையை புரிய வைத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தான் மேலும் தன் நண்பனை தேடும் முயற்சியில் அந் நாட்டில் அவளை தவிர தனக்கு வேறு யாரும் உதவ முடியாது என்பது நன்றாக தெரிந்தது. ஆகவே அவனும் சற்று வேடிக்கையாக " அதிசயத்தை வியந்து கொண்டு இருக்கிறேன் " என்றான் அவளும் " என்ன அதிசயம் கண்டீர் " என்றாள் அவன் உடனே " பணிப்பெண் உருவில் இளவரசி " என்றான் இகழ்ச்சியாக அவளுக்கு அவன் எந்த அர்த்தத்தில் கூறுகிறான் என்பது புரிந்தது ஆகவே சங்கடத்தால் சில கணம் அசைந்தாள் ஆயினும் " இளவரசி தான் விரும்புபவர்களுக்கு தான் விரும்பும் வண்ணம் காட்சியளிக்கிறாள் " என்றாள். அவன் புரிந்தும் " புரியவில்லையே தேவி " என்றான் அவள் " வீரனே நான் தங்களிடம் பணிப்பெண்னாக இருக்கவே ஆசைப்பட்டேன் ஆகவே அவ்வாறே காட்சியளித்தேன் " என்றாள் சற்று புன்னகையுடன் அதில் வெட்கமும் காணப்பட்டது. " தாங்கள் இளவரசியாக இருப்பதில் எனக்கு பெருமை தான் " என்றான் அவள் " ஏன் " என கேட்க " தேவி நான் பல நாடுகள் சுற்றியுள்ளேன் பல போர் கண்டுள்ளேன் யாரிடமும் தோற்றதும் இல்லை யாரும் என்னை ஏமாற்றியதும் இல்லை ஆனால் இங்கே தங்களிடம் எளிதாக ஏமாந்து விட்டேன். பணிப்பெண்னிடம் தோற்பதை விட இளவரசியிடம் தோற்பது என் கௌரவத்திற்கு நல்லது அல்லவா? " என்றான் அவன் குரலில் ஏமாற்றமும் காணப்பட்டது. அவன் சொன்னது வீண் பெருமை அல்ல என்பது அவளுக்கு தெரியும் ஏனென்றால் அவன் புகழும் பெயரும் வீரமும் எதிரி நாட்டில் கூட பெருமையாக பேசப்பட்டது. ஆகவே சொன்னாள் " நமக்குள் நடந்ததை நான் சொன்னால் தானே உங்கள் கௌரவத்திற்கு கேடு நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் தங்கள் கௌரவம் காக்கப்படும் மேலும் " என சொல்ல போனவள் தடுமாறினாள் அவன் " சொல்லுங்கள் தேவி " என கேட்க " கணவனின் பெருமையை காப்பது மனைவியின் கடமை தானே " என்றாள் பெரும் வெட்கத்துடன். அந்த வெட்கத்தில் அவள் கன்னங்கள் குங்கும சிவப்பாக சிவந்தன. அவனும் புன்னகையுடன் அவள் அருகே சென்று அணைத்துக் கொள்ள கையை மேலே போட்டான் அவளும் ஆசையுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அப்பொழுது சுயநினைவு வரப் பெற்றவனாக சற்று தள்ளி நின்றான் அவளோ " ஏன் என்பதனை போல? " அவனை பார்க்க " தேவி நான் உங்களை உயிராய் விரும்புவது உண்மை எப்படியும் நாம் ஒன்று சேருவோம் அதற்கு முன் என் கடமை உள்ளது என் நண்பனை கண்டு பிடிக்க வேண்டும் அவன் சம்மதத்துடன் நடக்க வேண்டும் நம் திருமணம் " என்றான் அதில் ஏமாற்றமும் காணப்பட்டது. அதை விட பெரியதாக உறுதி காணப்பட்டது. அவள் " சரி வீரரே தோற்றவர் அனைவரையும் விடுதலை செய்தாகிவிட்டது பின் என்ன? " என்றாள் அவன் " அதில் நண்பன் இல்லை தேவி " என்றான் அவள் உடனே " அப்படியா?" என்றாள் அவன் " ஆம் தேவி அவன் கிடைத்தால் உங்கள் நாடு பிழைத்தது இல்லை உங்கள் நாட்டால் அவன் நலத்திற்கு சிறிது கேடு நடந்திருந்தாலும் மொத்தமாக அழியும் உங்கள் தேசம். நான் நினைத்தால் கூட தடுக்க இயலாது " என்றான் அவள் உடனே " வீரரே போட்டில் பங்கேற்று தோற்பவர்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தவர்கள் ஆகவே அவர்களை மரியாதையுடனே நடத்துவோம் சிறையில் ஒரளவு வசதிகள் கூட உண்டு எளிய வேலைகளே வழங்கப்படும் " என்றாள். " சிறையில் இருந்து இதுவரை யாரேனும் தப்பி உள்ளார்களா? " என கேட்க அவள் " இல்லை சிறைச்சாலை காவல் மிகவும் பலமானது இது வரை அங்கிருந்து யாரும் தப்பியதும் இல்லை தப்பவும் இயலாது " என்றாள். பின் அவன் சிந்தனையில் ஆழ்ந்தான். எதுவும் புலப்படவில்லை அவன் தப்பி இருந்தால் தன்னையும் தன்னை சார்ந்தோரை தேடி வந்திருப்பான். இதுவரை அப்படி தகவல் இல்லை. பின் என்ன நடந்தது ஒரு வேளை தப்பி இந்த நாட்டில் தான் எங்கேயோ மறைந்து வாழ்கிறானா? அவ்வாறு இருந்தால் நான் போட்டியில் பங்கேற்பது தெரிந்து நிச்சயம் என்னை காண வந்திருப்பான். அதுவும் இல்லை பின் எங்கே அவன்? என பல சிந்தனைகள்.

அப்பொழுது ஒரு அவளும் உடனிருந்தாள். தூரத்தில் எதோ ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்த அவன் " தேவி என் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள் சீக்கிரம் " என்றான். அவளோ எதுவும் புரியாமல் அவனை பார்க்க " தேவி வீராவை மறக்க வேண்டாம் " என கூறிக் கொண்டே அவள் கையை பிடித்து தன் பின்னால் தள்ளி முன்னால் நின்றான். அப்பொழுது பறந்து வந்தது ஒரு கழுகு ஆவேசமாக கத்தியப்படி. அந்த பறவையை பார்க்கவே கொடூரமாக கருப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்தது அதுவும் அந்தி சாயும் அந் நேரத்தில் பயங்கரமாக தெரிந்தது. அதன் கண்களில் வெறி காணப்பட்டது. அது அவன் அருகே வர லாவகமாக அதன் கால்களை பிடித்து தலைகீழாக தொங்க வைத்து அதன் தலையை தடவிக் கொடுத்தான். பின் வலப்பக்க இறக்கையில் இரு தட்டு தட்டி பறக்க விட்டான். பின் தன் இடதுகையை காற்றில் நேராக நீட்ட அந்த கழுகு பறந்து வந்து அவன் கையில் அமர்ந்தது. சாந்தமாக காணப்பட்டது. அவன், " தேவி நீங்கள் வெளியே வரலாம் அங்கே சென்று விளக்கை எடுத்து வாருங்கள் " என்றான். " நடப்பவற்றை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த அவள் வெளியே வந்தாள். அவளை கண்டு கழுகு ஒரு முறை சிலிர்த்தது அவன் " அமைதியாக இரு " என அதனை அதட்ட அவள் பதுமை போல் சென்று விளக்கை எடுத்து வந்தாள். " தேவி இந்த கழுகு இப்பொழுது எனக்கு செய்தி கொண்டுவந்துள்து " என்றபடி அதன் இறக்கைகளை தடவ தொடங்கினான். அவளோ " செய்தியா புறாவில் தானே செய்தி வரும் " என பேச தொடங்கியவள். " அவசர காலத்தில் எங்கள் நாட்டில் இதில் தான் செய்தி அனுப்புவார்கள். இதனை நான் பிடித்த முறையில் தான் பிடிக்க வேண்டும் இல்லை என்றால் இதனை நெருங்குவோரின் கண்களை இந்த பறவை பறித்துவிடும். புதிய மனிதர்களை கண்டால் இதன் சீற்றம் அதிகமாகவும். ஆகவே தான் உங்களை விலக்கினேன். இதனை ஒரு முறை அமைதிபடுத்தினால் போதும் பின் அமைதியாக இருக்கும். " என கூறிக் கொண்டே அதன் இறகுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய துணியை எடுத்துதான். அதனை எடுத்ததும் பறவை பறந்து வந்து இவன் தோளில் அமர்ந்தது. அவள் உடனே " அப்படி என்றால் இதனை அமைதிபடுத்த தெரிந்தவர்களை தவிர பிறர் இந்த செய்தியை அடைய இயலாது " என்றாள். அவனும் புன்னகையுடன் " ஆமாம் தேவி எங்கள் நாட்டின் வழக்கங்களில் இதுவும் ஒன்று " என கூறிக் கொண்டே அந்த துணியை பிரித்தான் அது ஒரு அடி நீளம் பிரிந்தது அதனை அவள் எடுத்து வந்த விளக்கின் வெப்பத்தில் காட்ட எழுத்துகள் தெரிந்தன. அதனை படித்த அவன் " ஏமாற்றம் துரோகம் " என உச்சரித்தான் குழப்பத்துடன். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது.
 

Attachments

  • 1598754195627.png
    1598754195627.png
    605.8 KB · Views: 0
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN