மாயம் 15

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காண காத்திருக்கும்
கண்களுக்கு
காதல் பரிசளிப்பாயா
கண்ணழகி???

அன்று இரவு தன்னறையில் தமக்கையுடன் பேசியபடி இருந்தாள் ஶ்ரீ... இரவு உறங்குவதற்கு முன் அன்றைய நாள் நடந்த அனைத்தையும் தன் தங்கையிடம் ஒப்புவித்துவிடுவாள் ஶ்ரீ...
சிறுவயதில் அன்னையிடம் ஒப்புவிப்பதில் தொடங்கிய இந்த பழக்கம் இப்போது தங்கைக்கு மாறியிருந்தது.... இதனாலேயே சகோதரிகள் என்ற உறவை மீறி அவர்களிடையே ஒரு நட்புறவு நிலைப்பெற்றிருந்தது... அன்றும் அவ்வாறு உரையாடிக்கொண்டிருக்கையில் கதவை தட்டினார் ராஜேஷ்குமார்..

அவர் கதவை தட்டியதும் அது தன் தந்தை என்றுணர்ந்த இரு தமக்கைகளும் ஒரு சேர
“வாங்க அப்பா...” என்று அவரை உள்ளே வருமாறு கூறினர்...
உள்ளே வந்தவர் “என்னமா இரண்டு பேரும் இன்னும் தூங்கலையா???” என்று கேட்க

“இல்லைபா.. நாளைக்கு சண்டேல... அதான் தூக்கம் வர மாட்டேன்குது... அதான் சும்மா பேசிட்டு இருந்தோம்...” என்று அனு பதிலளிக்க

“அனு அம்மா உன்னை கூப்பிட்டாங்க.. என்னவென்று போய் கேட்டுட்டு வாமா...” என்று ராஜேஷ்குமாரின் கட்டளையில் அவர் ஶ்ரீயிடம் ஏதோ தனித்து பேச விரும்புகின்றார் என்றுணர்ந்த அனு அறைக்கதவை அடைத்துவிட்டு வெளியே சென்றாள்..

ஶ்ரீயிற்கு எதிரே அமர்ந்த ராஜேஷ்குமாரிடம்
“சொல்லுங்க அப்பா... என்ன விஷயம்...”

“ஶ்ரீ உனக்கு மேரேஜ் பிரபோசல் ஒன்று வந்திருக்கு... நீ என்னமா நினைக்கிற???” என்று தான் கேட்க வந்த விடயத்தை எந்த வித பூசல்களும் இல்லாமல் நேரே கேட்டுவிட ஶ்ரீயோ என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றாள். இதுநாள் வரை அதைபற்றி எந்தவித எண்ணமும் இல்லாமல் இருந்தவளிடம் திடீரென்று இந்த கேள்வியை கேட்டதும் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றாள்..
அவளது பாவனையிலேயே அவளது மனவோட்டத்தை புரிந்து கொண்ட ராஜேஷ்குமார்

“ஶ்ரீமா... நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது... நீ இன்னும் திருமணம் எனும் ஒரு விஷயத்தை பற்றி யோசித்ததில்லை என்று புரிகிறது..... நீ சின்ன பொண்ணு இல்லை... உனக்கும் உலகம் தெரியும்... இந்த உலகத்தை எதிர்கொள்வதற்கான போதுமான கல்வி அறிவை நாங்க உனக்கு கொடுத்திருக்கிறோம் என்று நம்புகின்றேன்.... எந்தவொரு விஷயத்திற்குமே அடுத்த கட்டம் என்று உள்ளது... ஆணிற்கோ பெண்ணிற்கோ அவங்களோட வாழ்க்கை வட்டம் பூர்த்தி அடைகிறது திருமணத்தில் தான்... சோ என் ஶ்ரீமாக்கும் அந்த பதவி உயர்வை கொடுக்கனும் என்று நாங்க விரும்புறோம்... நானும் அம்மாவும் எப்படி சந்தோஷமாக இன்றுவரை வாழ்கின்றோமோ அதேமாதிரி நீங்க வாழ்வதையும் நாங்க பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்... இது எங்க விருப்பமே தவிர எந்தவிதத்திலும் உன்னை நாங்கள் நிர்ப்பந்தப்படுத்தவில்லை....”

“அப்பா நீங்க இவ்வளவு சொல்ல வேண்டும் என்று இல்லை....நீங்க எது செய்தாலும் என்னுடைய விருப்பம் இல்லாமல் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும்... திருமணம் பற்றி எந்தவிதமான எண்ணங்களும் என் மனதில் இல்லை... அதான் திடீர் என்று நீங்க கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்.... ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..... நான் திருமணத்திற்கு தயாரா இல்லையா என்று இன்னும் எனக்கு தெரியவில்லை.... சோ என்னோட மைண்டை பிரிப்பேர் பண்ண எனக்கு கொஞ்சம் டைம் வேணும்பா...”

“ஓகே ஶ்ரீ... ஆனால் ஒரு சின்ன விஷயம்.. உனக்கு ஒரு பிரபோசல் வந்திருக்கு என்று சொன்னேனே.. அவங்களை நாம மீட் பண்ண வருகிறோம் என்று சொல்லியிருக்கின்றேன்...”

“அப்பா... நான்... இன்னும்..”

“ஶ்ரீமா அப்பா சொல்வதை முழுமையாக கேள்... இது ஜஸ்ட் மீட்டிங் தான்... ஒரு ரெஸ்டாரண்டில் தான் மீட் பண்ணுறதாக பிளான்... நீ பையனை பார்த்து பேசு.... உனக்கு பிடிக்கலைனா நாம இந்த பிரபோசலை கான்சல் பண்ணிடலாம்... சோ நோ வாரிஸ்... பையன் வீட்டில கேட்டதும் என்னால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை... அதான் இந்த மீட்டிங்கிற்கு ஓகே சொல்லிட்டேன்.... உன்னுடைய விருப்பத்தை மீறி இந்த அப்பா எதுவும் செய்ய மாட்டேன்.. ஓகேவா???” என்ற ராஜேஷ்குமாரின் யோசனைக்கு அரைமனதாய் சம்மதித்தாள் ஶ்ரீ.

“சரி ஶ்ரீமா.. நாளைக்கு மார்னிங் நாம பையன் பேமிலியை மீட் பண்ண போறோம்.. நீ ரெடியாகியிரு..”

“என்னப்பா நாளைக்கேவா....”

“ஆமா ஶ்ரீ.. பையன் நெக்ஸ்ட் வீக் பாரின் போறானாம்.... அதற்கு முதலில் மீட் பண்ணா நல்லா இருக்கும் என்று பையன் வீட்டில் கேட்டாங்க.... நீ சண்டே வீட்டுல இருப்ப அப்படீங்கிதால நானும் ஓகே சொல்லிட்டேன்...”

“சரி பா..” என்று வாய் வார்த்தைகளால் கூறிவிட்டு மனதிற்குள்

“அந்த லாடு லபக்கு தாசு இஷ்டப்படிதான் எல்லாம் செய்யனுமோ... இவரு பாரின் போறாராம்.. அதுனால நாம அவரை நாளைக்கு போய் பார்க்கனுமாம்... பெரிய சீமத்துரைனு நினைப்பு.. வாடிவா... நாளைக்கு மாட்டுவல.. அப்போ தெரியும்... இந்த ஶ்ரீ உன்னை விட பெரிய பிஸ்தானு... சீனா போடுற சீனு... வா... உன்னை வகையா வச்சி செய்றேன்...” என்று காய்ச்சி எடுத்தாள் ஶ்ரீ...

ராஜேஷ்குமார் சென்றதும் உள்ளே வந்த அனுவிடம் விஷயத்தை கூறினாள் ஶ்ரீ... மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தவளை அடக்கிவிட்டு தூங்குமாறு பணித்துவிட்டு அவளும் படுத்து உறங்கத்தொடங்கினாள்....
இங்கு ஶ்ரீயோ நிம்மதியாக தூங்க ரிஷியோ தூக்கமின்றி தவித்தான்....

**********************************************
மறுநாள் காலை தன் குடும்பத்துடன் கிளம்பினாள் ஶ்ரீ... ராதாவோ ஶ்ரீயை அட்வைஸ் என்ற பெயரில் ஶ்ரீயை கடுப்பேற்றிக்கொண்டிருந்தார்... ஏதோ பரீட்சைக்கு செல்லும் குழந்தையை போல் அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்த ராதாவை பார்த்த ஶ்ரீ
“அம்மா நீங்க நல்லா தானே இருக்கீங்க...??” என்று கேட்க

“இப்போ எதுக்கு இப்படி ஒரு கேள்வி...??” என்று ஶ்ரீயின் கேள்விக்கு மறு கேள்வி கேட்ட ராதாவிற்கு

“ மைக் பிடிக்காத குறையா பேசிட்டு இருக்கீங்களே.. அதான் கேட்டேன்...”

“என்ன ஶ்ரீ உன் நல்லாதுக்கு நான் சொல்லிட்டு இருந்தா நீ கிண்டலா பேசிட்டு இருக்க...”

“ஏன்மா நல்லா காலத்துலயே நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன்... இப்போ மட்டும் நான் கேட்டுபேன் என்று நீ எப்படி பேராசை படலாம்...??”

“ஶ்ரீ...” என்று பல்லை கடித்த ராதாவை சமாதானப்படுத்தினார் ராஜேஷ்குமார்...

“ராதா ஶ்ரீ சின்னபிள்ளை இல்லை... அவளுக்கு யாருகிட்ட எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும்... நீயும் டென்ஷனாகி அவளையும் டென்ஷனாக்காத...புரிந்ததா?? வாங்க இப்போ கிளம்பலாம்..” என்று ஶ்ரீ மற்றும் ராதாவை அழைத்துக்கொண்டு சென்றார் ராஜேஷ்குமார்...
ஹோட்டலில் தமக்கென ரிசவ் செய்திருந்த டேபிளில் அமர்ந்து மணமகன் வீட்டினருக்காக காத்திருந்தனர் ஶ்ரீயின் குடும்பத்தினர்...
அப்போது ராஜேஷ் என்று அழைத்துவாறு வந்த மணமகனின் தந்தையை பார்த்து அதிர்ந்துவிட்டாள் ஶ்ரீ...அவளது அதிர்ச்சிக்கு காரணம் அங்கு நின்றிருந்தது மூர்த்தியின் குடும்பத்தினர்.... அதாவது ரிஷியின் அன்னையும் தந்தையும் ரித்வியும்...

அவர்களை பார்த்தவளுக்கு பேச்சு எழவில்லை... இது அதிர்ச்சி என்பதை தாண்டி ரித்வியை கண்டதும் தான் எதிர்பார்த்தது வேறு இங்கு நடப்பது வேறு என்றுணர்ந்த மனம் ரித்வியை நோக்க அவனோ எந்தவித கவலையும் இன்றி சிரித்த முகத்துடன் இருந்தான்...
அவளது குழப்பத்திற்கு முக்கிய காரணம் மூர்த்தி மற்றும் சுபாவுடன் ரித்வி வந்திருந்ததே...இதை என்ன புதுவிதமான குழப்பம் என்று எண்ணியவளுக்கு ரித்வியின் முகபாவனை சந்தேகத்தை கிளப்பியது...அதிலிருந்து மொத்த குடும்பமும் தனக்கு ஏதோ சப்ரைஸ் என்ற பெயரில் ஏதோ செய்யப்போவதாக அறிந்து கொண்டவள்
“ஹாய் ஆண்டி... ஹாய் அங்கிள்...ஹாய் ரித்வி... எப்படி இருக்கீங்க?? என்ன இந்த பக்கம்...??” என்று வேண்டுமென்றே சப்ரைஸை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆரம்பித்தாள் ஶ்ரீ..

அவளது பேச்சு தோரணையில் அவள் உண்மையை அறிந்துகொண்டாள் என்றறிந்த ராஜேஷ்குமார் மூர்த்தியிடம்
“மூர்த்தி உன் மருமக உண்மையை கண்டுபிடிச்சிட்டா.... நம்ம பிளான் எல்லாம் ப்ளாப்...” என்ற ராஜேஷ்குமாரின் கூற்றில் அனைவரும் செய்வதறியாது முழித்தனர்..

“ எப்படி ராஜேஷ்.... உன்னை மாதிரியே என் மருமகளும் இருக்கா...?? எப்போ சப்ரைஸ் ப்ளான் பண்ணாலும் இப்படி கண்டுபிடித்து புஸ்ஸுனு மாத்திடுறா..” என்று மூர்த்தி கேட்க அதற்கு பதிலளித்தாள் ஶ்ரீ

“அங்கிள் இந்த சப்ரைஸ்னு சொன்னீங்களே.... அதை கெடுத்தது உங்க ரெண்டாவது பையன் தான்... ஐந்து ரூபாயிற்கு நடிக்க சொன்னா சார் ஐயாயிரம் ரூபாயிற்கு நடித்து டோட்டல் பிளானையும் கெடுத்துட்டாரு..” என்று ரித்வியை கோர்த்துவிட அவனோ இதோ அழுதவிடுவேன் என்ற ரீதியில் நின்றிருந்தான்...

“அங்கிள் ஒரு டவுட்டு...நான் இன்னும் உங்க மூத்த பையனுக்கு ஓகே சொல்லவே இல்லை..அதுக்குள்ள நான் எப்படி உங்களுக்கு மருமகள் ஆனேன்..” என்று ஶ்ரீ கேட்க

“ஶ்ரீ பெரியவங்க கிட்ட இப்படியா மரியாதை இல்லாமல் பேசுறது...”என்று ஶ்ரீயை கடிந்து கொண்ட ராதாவை தடுத்தார் சுபா..

“பாவம் அண்ணி... அவளை வையாதீங்க... அவள் கேட்பதில் என்ன தப்பு???” என்று சுபா ஶ்ரீயிற்கு வாதாட மூர்த்தியும் அதில் இணைந்து கொண்டார்..

“அதானே என் மருமகளுக்கு நான் அவளோட மாமா என்றும் சுபா அவளோட அத்தையென்றும் தெரியாத பட்சத்தில் அவளோட கேள்வி நியாயமானது தானே..” என்ற மூர்த்தியின் விளக்கத்தில் குழம்பிய ஶ்ரீ தன் தந்தையை பார்க்க அவளது குழம்பத்தை நீக்க முன்வந்தார் ராஜேஷ்குமார்.

“ஶ்ரீமா... மூர்த்தியும் சுபாவும் நமக்கு தூரத்து சொந்தம்...நானும் மூர்த்தியும் ஒரே ஊர்க்காரங்க... உனக்கு மூர்த்தி மாமா முறை வேண்டும்... உனக்கு சரசு அத்தையை தெரியும்ல... அவங்களோட ஹஸ்பண்டும் மூர்த்தி மாமாவும் கசின் பிரதர்ஸ்..” என்று அவர்களது உறவு முறையை விளக்கினார் ராஜேஷ்குமார்.

“வாவ்....இப்படி ஒரு விஷயத்தை நீங்க எனக்கு சொல்லவே இல்லையே பா... சாரி மாமா சாரி அத்தை... எனக்கு இப்படினு தெரியாது... தெரிந்திருந்தால் நான் அப்படி கேட்டுருக்கவே மாட்டேன்...” என்று மன்னிப்பு கோரினாள் ஶ்ரீ..

“அதுக்கு என்னமா..??? நீ தெரிந்துக்கொள்ள தானே கேட்ட...வேறெதும் தப்பா கேட்கவில்லையே..” என்று சுபா ஶ்ரீயை ஆறுதல் படுத்தினார்..

“அப்போ ரிஷி சாரும் ரித்வி அண்ணாவும் எனக்கு அத்தான் முறை வேண்டும்... ரித்வி அத்தான்..நீங்க கூட எனக்கு இதை பற்றி எதுவும் சொல்லவே இல்லையே...” என்று ரித்வியுடன் வம்படிக்கத்தொடங்க

“எனக்கே நேற்று இராத்திரி தான் இந்த விஷயத்தை சொன்னாங்க ஶ்ரீ....”

“சரி ரிஷி சா...சாரி அத்தான் எங்க...??” என்று கேட்டவளுக்கு அப்போது தான் தாங்கள் இங்கு வந்ததற்கான மூலக்காரணம் நியாபகம் வந்தது...

“அப்பா.... அப்போ நீங்க எனக்கு வந்த பிரபோசல் என்று சொன்னது ரிஷி அத்தானையா....??” என்று சற்று உள்ளே போன குரலில் தயங்கி தயங்கி ஶ்ரீ கேட்க தன் சிரிப்பை உதிர்த்து ஆம் என்று பதிலளித்தார் ராஜேஷ்குமார்.

அதை கேட்ட ஶ்ரீயிற்கு இன்னதென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு.. ரிஷியை சந்தித்த நாள் முதற்கொண்டு இது நாள் வரை அவனை ரித்வியின் அண்ணாக மட்டுமே எண்ணியவளுக்கு அவனுடன் பழகிய நாட்களில் அவனது ஆளுமை,குறும்புகள், நற்குணங்களை அறிய நேர்ந்த போது அவன் மேல் ஒரு மரியாதை உருவானது உண்மையே...அதை தாண்டி அவனை அவனறியாமல் அவள் சைட் அடித்த நாட்களும் உண்டு... ஆனால் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து அவளை ரிஷி மீட்டு வந்த அன்று மரியாதையை என்ற எல்லையை தாண்டி ஏதோவொரு உணர்வு ஊற்றெடுத்ததை அவள் உணர்ந்தாள்.. போலிஸ் ஸ்டேஷனில் அவனை கண்டதும் அவளுள் ஏதே ஒரு புதுவித நிம்மதியை உணர்ந்தாள் ஶ்ரீ...

அது அவன் தன்னை மீட்டு செல்வான் என்பதை கடந்து தன்கூட்டை அடைந்த பறவையின் நிம்மதியை அவள் மனம் தத்தெடுத்திருந்தது.... அந்த இக்கட்டான நிலையில் அவள் மனம் அதை சரியாக உணரவில்லை... ஆனால் நேற்று அவள் தந்தை திருமணம் பற்றி பேசியதும் அவளுக்கு நினைவில் வந்தது ரிஷியின் முகமே... அந்த நினைவு அவளுள் ஒருபுதுவித கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது... அக்கணமே ரிஷியின் மீது தனக்கு ஈடுபாடு உள்ளதென்பதை அறிந்து கொண்டவளுக்கு அவளது எண்ணப்போக்கில் பிடித்தமில்லை.... அவனது உயரத்தை எண்ணியவளுக்கு அவனது வாழ்க்கை துணை என்ற வரம் என்றும் தனக்கு கிட்டாது என்று முடிவெடுத்தவள் அந்த எண்ணத்தை தனக்குள்ளே புதைத்து கொண்டாள்...

ஆனால் அவள் மனதை கவர்ந்தவனே அவளது வாழ்க்கை துணையென பெரியவர்கள் நிச்சயித்திருந்தது அவளுள் இந்த உலகையே வென்ற களிப்பினை கொடுத்தது... ஆனாலும் ரிஷி இதற்கு முழு மனதாக சம்மதித்தானா என்ற கேள்வி எழும்பிய அடுத்த கணம் அவளுள் ஒருவித படபடப்பு ஏற்பட்டது....
தன் குழப்பத்தை நீக்கக்கூடியவன் ரிஷி மட்டுமே என்று உணர்ந்தவள் அவன் எங்கே என்று விசாரிக்க அங்கிருந்த கண்ணாடி தடுப்பிற்கு மறு புறமாக ரிஷி இருப்பதாக கூறினான் ரித்வி...

அங்கிருந்த சென்ற ஶ்ரீ அந்த கண்ணாடித்தடுப்பில் இருந்த கதவினை திறந்து கொண்டு ரிஷியை தேட அவனோ அங்கே ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்...
அவனுக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஶ்ரீ...
 

Vijaya

New member
நல்ல கதை ஸ்ரீயும் ரிஷி நல்ல ஜோடி பெருத்தம் அழகான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள் Smilie Rose:love::love::love:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN