மாயம் 16

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலின் பாஷை
கண்களுக்கு தெரியும்
காதலின் வாசம்
இதயத்திற்கு தெரியும்
காதலின் வடிவம்
காதல் கொண்ட
அந்த இரு
உயிர்களுக்கு மட்டுமே
தெரியும்...

தன் முன்னே ஶ்ரீ அமர்வதை உணர்ந்து வேடிக்கை பார்ப்பதை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப சிரித்தபடி இருந்தாள் ஶ்ரீ... அவளிடம் வேறு முகத்தை எதிர்பார்த்து இருந்தவனுக்கு அவளது சிரிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது...

அவனது குழப்பத்தை உணர்ந்தவள்

“என்ன அத்தான்... பேச வந்துட்டு எதுவும் பேசாம இருக்கீங்க...??” என்று அவள் புன்னகையை தவழவிட்டபடி தன் ஒற்றை புருவம் உயர்த்தி வினவ அதில் மொத்தமாக கவிழ்ந்தவன் ஆர்ப்பரிக்கும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி தெரியாது இடம் பொருள் மறந்து தன் இருக்கையில் இருந்து எழும்பி அவளை இழுத்து இதழ்களை சிறைசெய்தான்...

அவனது திடீர் தாக்குதலில் முதலில் தடுமாறியவள் பின் சுகமாய் அனுபவித்து அவனுள் கரைந்தாள்..இழுத்த வேகத்தில் அவளை விடுவித்தவன் அங்கிருந்து விறுவிறுவென சென்றுவிட்டான்...

அவன் சென்றது கூட உணராது இருந்தவள் ஏதோ தோன்ற கண்விழித்து பார்க்க அங்கு அவன் இல்லை... சற்றென சுற்றுப்புறம் உணர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அது காதலர்களுக்கான ப்ரத்தியோகமான இடம் என அங்கிருந்து ஜோடிகளின் அன்னியோன்யத்தில் அறிந்து கொண்டவள் ரிஷியை தேட அவன் அந்த ப்ளோரின் மறுகோடிக்கு செல்வதை கண்டவள் அவனை நோக்கி சென்றாள்....

அங்கு அமைந்திருந்த பால்கனி போன்ற இடத்திற்கு சென்று நின்றவன் அங்கிருந்த கம்பியை பிடித்தவாறு வெளியில் தெரிந்த காட்சியை வெறிக்கத்தொடங்கினான்...
அவனருகே சென்று ஶ்ரீ கைகளை கட்டிக்கொண்டு மறுபுறம் திரும்பி நின்றுகொண்டு அவனை இடித்தாள்..
.
அவன் மீண்டும் அங்கிருந்து செல்ல முயல அவனது கையை பற்றியவள்
“ஏன் சார் என்னை அவாய்ட் பண்ணுறீங்க... உங்களுக்கு இதில் விருப்பமில்லையா?? இல்லை என்னை பிடிக்கவில்லையா???” என்று கண்ணில் பயத்துடன் தயங்கி தயங்கி கேட்டவளை அள்ளி அணைத்துக்கொள்ள துடித்த மனதை அடக்கியவன் அவளது கண்ணில் தெரிந்த பயம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது... எப்போதும் குறும்பு கூத்தாடும் அவளது கண்கள் இரண்டாவது முறையாக அதே பயத்தோடு யாசிப்பதை கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று அவனை கொல்லாமல் கொல்வதாய் உணர்ந்தான்... ஆனாலும் அவளது பயம் கூட அவனை அவளது ரசிகனாக்க அவளை சீண்ட எண்ணியவன்...

“ஆமா பிடிக்கலை...” என்றவனின் பதிலில் உள்ளுக்குள் நொறுங்கியவளை காட்டிக்கொடுக்க கண்ணில் இருந்து நீர் வெளியேறத்தயாராக அதை மறைக்கும் முகமாக திரும்பிச்செல்ல முயன்றவளை கைபிடித்து தடுத்தவன் அவளை பார்த்து செல்லச் சிரிப்புடன் முறைத்தவாறு

“நீ என்னை சார்னு கூப்பிட்டது உன் அத்தானுக்கு பிடிக்கலை.. இப்படி க்ரைங் பேபியா இருக்கது இந்த அத்தானுக்கு பிடிக்கலை...”என்றவனை செல்லாம முறைத்தாள் ஶ்ரீ..

“பாரு இப்போ கூட முறைக்கிற... அதுவும் இந்த அத்தானுக்கு பிடிக்கலை...” என்று கண்ணடித்தவாறு கூறினான் ரிஷி..

“ஓ அப்படியா சரி நான் கிளம்புகின்றேன்..” என்றவாறு சென்றவளை ரிஷி பிடித்து இழுக்க அவன் மேல் வந்து மோதியவளை தன் கைகளால் அரணிட்டான் ரிஷி..

“என்ன மேடம் கோவிச்சிக்கிட்டீங்களா??? உங்க அத்தான் பாவம் தானே... கொஞ்சம் தயவு காட்டலாமே...” என்று அவளது கண்களை நோக்கியிருந்த அவனது பார்வை இதழ்களுக்கு இடம் மாறியிருந்தது... அவனிடம் சிறைப்பட்டிருந்தவள் விரும்பி அதனை ஏற்றுக்கொண்டாள்..

அவனது பார்வை இடம்மாறியதை உணர்ந்து எக்கி குனிந்திருந்த அவனது தலையில் முட்டியவள்
“லூசு அத்தான்... இப்படியா பப்ளிக்கில் ரொமன்ஸ் பண்ணுவ.. மானமே போகுது...”என்று செல்லமாக கடிந்தவளை பார்த்து சிரித்தான்...

“அடியேய் அம்முலுபேபி... உன் முட்டைக்கண்ணை உருட்டி பாரு சுற்றி யாராவது இருக்காங்களானு???” என்று அவனும் அவளது தலையில் செல்லமாய் முட்ட அப்போது தான் தாங்கள் இருக்கும் இடத்தில் யாருமே இல்லை என்று அறிந்தவள் அவனது நடவடிக்கைக்கான காரணத்தை அறிந்து கொண்டாள்...

“அத்தான் நீ செம்ம கேடிடா... அங்கு ஆட்கள் இருந்ததால் தான் என்னை இங்கு வரவைத்தாயோ... நானும் நீ என்னை கிஸ் பண்ணிட்ட அப்படீங்கிற கில்டி பீலில் நீ அங்கிருந்து வந்துட்டனு நினைத்தேன்... நீ வேற லெவல் அத்தான்...”

“ஹாஹா.. கண்டுபிடிச்சிட்டியா... எப்படி அமுல்பேபி இப்படி எல்லாத்தையும் கரெக்டா கண்டுபிடிக்கிற?? உனக்கு தெரியாமல் ஏதும் செய்யமுடியாது போலவே... சரியில்லையே...”

“நோ ஆப்ஷன்.. இதை தாங்கள் கடந்து தான் ஆக வேண்டும் ஸ்வாமி...” என்று சிரித்தவளது மூக்கை செல்லமாக திருகியவன்

“இந்த வாய் தான் இந்த அத்தானை கட்டிப்போட்டது... அமுல்பேபி பேசி பேசியே உன் அத்தானை கவுத்துட்டடி... எல்லாருக்கும் அவங்க லவரோட அழகு தான் சுழட்டி இழுத்ததுனு சொல்லுவாங்க.... ஆனா என்னோட கதையில என் அமுல்பேபியோட பேச்சு தான் அவளை லவ் பண்ண வைத்தது...” என்றவனின் பேச்சில் வாயடைத்து நின்றாள் ஶ்ரீ... அவளது பாவனையில் என்னவென்று வினயவன்

“அப்போ நீ என்னை லவ் பண்ணுறியா அத்தான்???” என்ற ஶ்ரீயின் கேள்வியில் கள்ளச்சிரிப்பு சிரித்தவன்

“இன்னும் உனக்கு புரியலையா அமுல்பேபி... சரி வா முதல் ரவுண்டில் இருந்து ஆரம்பிக்கலாம்..” என்று அவள் உதட்டை தன் ஒற்றை விரலால் வருடியவன் அவளை நோக்கி குனிய அவனிடம் இருந்து துள்ளி விலகினாள் ஶ்ரீ...

“அத்தான் நீ ரொம்ப மோசம்... இப்படியா பப்ளிக் பிளேசில் கிஸ் பண்ணுவ??” என்று சிணுங்கியவளை பார்த்து சிரித்தான் ரிஷி..

“என் பொண்டாட்டியை நான் கிஸ் பண்ணுவேன்...அதை கேள்வி கேட்க யாருக்கு தைரியம் இருக்கு??”

“ஹா.. உன் பொண்டாட்டிக்கு இருக்கு....” என்று சிரித்தவளை தன்னருகே இழுத்தவன் அவர்களுக்கு இடையே இருந்த இடைவேளியை கணத்திற்கு கணம் குறைக்க முயன்றான்.. அவனது கையிரண்டும் அவளது இடுப்பை வளைத்திருக்க அதில் கூச்சம் வரப்பெற்றவள்

“அத்தான் ப்ளீஸ்..” என்று முணுங்க அவன் தேனுண்ட வண்டானான்.... அவளது முணுங்கல் அவனை இன்னும் போதையாக்க அவனது அணைப்பு இறுகியது...
காதல் கரை கடந்து பாயும் வெள்ளமாய் அவனது விழிகளில் பாய அதனை தன் மைவிழிகளால் நோக்கியவளுக்கு அவனது தன் மீது கொண்டுள்ள காதலின் ஆழம் அவள் உயிர்வரை சென்று அவளுக்கு உணர்த்தியது... ஆனாலும் வார்த்தைகளால் கேட்கும் காதல் வார்த்தைகளின் சுகம் தனி என்றுணர்ந்தவள் அவன் வாய் வார்த்தைகளுக்காக ஏங்கி அவன் கண்களை நோக்க அதை உணர்ந்தவன் போல்

“ஓய் பொண்டாட்டி... இன்னுமா உனக்கு புரியலை... உன் அத்தான் இந்த அமுல்பேபியை நிறைய நிறைய லவ் பண்ணுறான்.... அவனோட அமுல்பேபி அவனுக்கு மனைவியா அவன் வீட்டுக்கு வரணும்னு ஆசைப்படுறான்... லைப் லோங் அவன் அமுல்பேபியை கதற கதற லவ் பண்ண விரும்புறான்... எப்பவும் அவனோட அமுல்பேபியை தன்னோட கைகுள்ள வைத்து கொஞ்சிட்டே இருக்க ஆசைப்படுறான்... அவனோட அமுல்பேபியை எப்பவும் ஹாபியா வைத்துக்கொள்ள ஆசைப்படுறான்... இப்படி ஒரு லிஸ்டே இருக்கு.... நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் உன் அத்தானுக்கு அவனோட அமுல்பேபியாக நீ எப்பவும் வேணும்.... அதுக்காக எந்த எக்ஸ்ரீமுக்கும் போக உன் அத்தான் ரெடி....ஆனா ஒரு கண்டிஷன் என்னோட அமுல்பேபி எப்பவும் அமுல்பேபியாக தான் இருக்கனும்... இந்த அத்தானுக்காக கூட அமுல்பேபி மாறக்கூடாது... இந்த கண்டிஷனுக்கு மட்டும் ஓகே சொல்லு... நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்....” என்றவனை பார்த்து முறைத்தாள் ஶ்ரீ...

“ஏன் ஶ்ரீ முறைக்கிற???”

“சார் கண்டிஷன் எல்லாம் போட்டு தான் ப்ரபோஸ் பண்ணுவீங்களோ...??”

“ஈஈஈஈ... சும்மா உல்லலாய்க்கு.... என் அமுல்பேபி தான் எல்லாருக்கும் கண்டிஷன் போடுவா... அவளுக்கு யாரும் போட முடியாது....”

“அதான் தெரியிதில்ல.... அப்புறம் என்ன??? அது சரி என்ன அய்த்தான் இப்படி மொக்கையா பிரபோஸ் பண்ணுற?? நான் உன்கிட்ட எவ்வளவு எக்ஸ்பெக்ட் பண்ணேன் தெரியுமா??? சோ டிஸ்ஸபொயின்டட்...”

“ஓய் அமுல்பேபி... உனக்கு இதுவே ஓவர்.. இன்னும் எக்ஸ்பெக்ட் பண்ணுறியா...? உனக்கு கோட்டா இவ்வளவு தான்... முடிந்தால் ஓகே சொல்லு... இல்லைனா கிளம்பி போயிட்டே இரு...”

“என்னடா சொன்ன...?? கிளம்பி போகவா... உனக்கு அவ்வளவு தூரம் குளிர்விட்டு போயிருச்சா... உன் மூஞ்சுக்கு நானே ஓவர்... இந்த லட்சணத்துல என்னையே போனு விரட்டுறியா??? உனக்கு ப்ரபோஸ் பண்ண தெரியாவிட்டால் ஒத்துக்கோ... உன்னை விட்டுர்றேன்.. ஆனா சும்மா சீனை போட்ட உன்னை டின் கட்டிடுவேன்... இவரோட விருப்பத்தை கேட்க நாங்க ஓடோடி வருவோமாம்... இவரு போடினு சொல்லுவாறாம்.... எங்களை பார்த்தா எப்படி இருக்கு...” என்று பொரிந்தவளை பார்த்து தன் உதட்டை குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை ரிஷி கொடுக்க அதில் ஆப் ஆகிவிட்டாள்...

“என்ன அமுல்பேபி அதுக்குள்ள டுயூனாகிட்டு இருந்த ரேடியோ ஆப் ஆகிருச்சி....???” என்று கிண்டலாய் வினவியவனை அடிக்க துரத்தினாள் ஶ்ரீ...
அவர்களது விளையாட்டை நிறுத்தும் பொருட்டு சிணுங்கியது ரிஷியின் அலைபேசி...

அவனை துரத்தியவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவன் மொபைலை காதிற்கு கொடுக்க
“அண்ணா பேசிட்டீங்களா??? அம்மா, அப்பா ,அத்தை , மாமா எல்லாரும் உங்க இரண்டு பேரையும் தான் எதிர்பார்த்துட்டு இருக்காங்க...” என்று ரித்வி கூற

“கூல் ரித்வி...” என்று அவன் பேசிமுடிக்குமுன் மொபைலை ரிஷியிடம் இருந்து பிடிங்கியவள்

“கொழுந்தனாரே.... நீங்க என்ன செய்றீங்கனா பெரிசுங்க எல்லாரையும் கூட்டிகிட்டு இடத்தை காலி பண்ணுறீங்க.... நானும் அத்தானும் இன்னும் கொஞ்சம் பேச இருக்கு.... அப்புறம் என்னை அத்தான் ட்ராப் பண்ணுவாருனு என் தாய்குலத்திடம் சொல்லிருங்க... நான் வச்சிடுறேன்...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள் தன்
ஒற்றைக்கையால் அவனின் மொபைலை நோண்ட அதை பார்த்திருந்தவன்

“என்ன அமுல்பேபி பொண்டாட்டியோட டியூட்டியை ஆரம்பிச்சிட்டியா..??” என்று அவன் சிரிக்க அவனை முறைத்தாள் ஶ்ரீ...

“எதுக்கு பேபி முறைக்கிற?? நீ செய்வதை தானே சொன்னேன்..”

“எனக்கு ஒரு டவுட்டு அய்த்தான்... நான் இன்னும் உங்களுக்கு ஓகே சொல்லவே இல்லை.. அதுக்குள்ள என்னை எப்படி வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டினு நீங்க சொல்லலாம்...??”

“நீ தான் ஆல்ரெடி ஓகே சொல்லிட்டியே....” என்று புதிர் போட

“நான் அப்படி ஏதும் சொன்னதா எனக்கு நியாபகம் இல்லையே..” என்று யோசித்தவளை

“அதானே... இதே நான் சொன்னதை கேட்டிருந்தா அச்சு பிசகாம நான் சொன்னதை அப்படியே ஒப்பிச்சிருப்ப... அதே நீ சொன்னதுனா அதுக்கு உல்டாவா உனக்கு எல்லாம் மறந்திடும்... சூப்பர் ஶ்ரீ.. சூப்பர்....”

“இப்போ எதுக்கு திடீர்னு ஶ்ரீனு சொல்லுறீங்க???”

“ஹேய் அதானே உன்னோட பெயர்....” என்று குறும்புடன் கேட்டவனிடம்

“இவ்வளவு நேரம் உங்களுக்கு அது நியாபகம் வரவில்லையா..?” என்று முறுக்கிக்கொள்ள

“அய்யோ அமுல்பேபிக்கு கோபம் வந்திருச்சி டா...”

“கிண்டல் பண்ணாம ஒழுங்கு மரியாதையா அப்படியே கூப்புடுங்க...”

“எப்படி ஶ்ரீ கூப்புடனும்??” வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான் ரிஷி...

“டேய் ரிஷி உனக்கு இவ்வளவு தான் மரியாதை... ஒழுங்கு மரியாதையா என்னை அமுல்பேபினு கூப்பிடு... இல்லைனா உன்னை கடித்து குதறிடுவேன் பார்த்துக்கோ...”

“பேபிக்கு கோபம் வருதுபா...”

“கடுப்பேத்தாமா நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு அய்த்தான்..”

“நீ என்ன கேட்ட...” என்றவனை முறைத்தாள் ஶ்ரீ..

“சரி முறைக்காத... நீ என்னை ஏன் அவாய்ட் பண்ணுறீங்க... என்னை பிடிக்கலையானு கேட்டதுலயே நீ என்னை ஓகே பண்ணிட்டனு எனக்கு புரிந்துவிட்டது.. இதுக்கு மேலே என்ன இருக்கு???” என்றவனது பதிலில் அவனின் அணைப்பிலேயே நாணிகோணி நின்றாள் ஶ்ரீ...

அதனை ரசித்தவன் பின் நியாபகம் வந்தவனாக
“சரி உன்னோட சி.ஐ.டி வேலை முடிந்துவிட்டால் என்னோட மொபைலை தரலாமே....” என்று தன் மொபைலை கேட்டவனிடம்

“அய்த்தான் எங்க உங்க கண்டாக்ட் லிஸ்டில் என்னுடைய பெயரை காணவில்லை... நீங்க என்னோட நம்பரை சேவ் பண்ணலையா??” என்று சோகமான குரலில் கேட்டாள் ஶ்ரீ..

“உன் நம்பர் என் காண்டக்ட் லிஸ்டில தான் இருக்கு ஆனா யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கு...” என்று புதிர்போட்டான் ரிஷி..
எவ்வாறேனும் கண்டுபிடித்திடவேண்டும் என்ற உத்வேகத்துடன் மீண்டும் அவன் காண்டக்ட் லிஸ்டை அலச பதில் பூச்சியம் தான்..சஸ்பென்ஸ் தாங்காத ஶ்ரீ

“ப்ளீஸ் அய்த்தான்.... சஸ்பென்ஸ் தாங்கலை... சொல்லுங்க ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள் ஶ்ரீ...

அவளது கெஞ்சலில் அவளை ரசித்து நின்றவன்
“கண்டாக்ட் லிஸ்டில் ரிஷி என்று காண்டக்ட் இருக்கும் பாரு...” என்று அவன் கூற அதை பார்த்தவள் அதில் தன் இலக்கம் பதியப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ரிஷியை பார்த்தாள்..

“என்ன அமுல்பேபி... என்ன போட்டுருக்கு.... வாசிக்கத்தெரியலையா இல்லை அர்த்தம் புரியலையா??”

“ என்ன நக்கலா?? நான் பி.ஜி முடிச்சவ அய்த்தான்...எனக்கா வாசிக்கத்தெரியலைனு கேட்குறீங்க....??”

“அப்போ உனக்கு புரியலை... அதானே...”

“அதே தான்...”

“சரி அதுல என்ன போட்டுருக்கு..??”

“ரிஷி ஹார்ட் தயா”

“இதுல உனக்கு என்ன புரியலை??”

“இந்த தயா எங்கயிருந்து வந்தது??”

“உன்னோட நேமில் இருந்து தான்...” என்று விளக்க அப்போது தான் அவள் பெயரில் இருந்த அந்த ஐந்து எழுத்துக்களை இணைத்து பார்த்தவளுக்கு அது தன் பெயரின் ஒருபாதி என புரிந்தது...

“டேய் அய்த்தான்... நீ இவ்வளவு புத்திசாலினு எனக்கு தெரியாமல் போயிருச்சே... என்னமா யோசிச்சிருக்க...”

“நீ எப்பவும் என்கூடவே இருக்கனும் அது பெயராக இருந்தாலும்...” என்றவனது வார்த்தைகளில் காதல் நிரம்பி வழிந்தது...

“எல்லாம் சரிதான் அய்த்தான்... ஆனால் நீ எப்போ என்னை காதலிக்க ஆரம்பிச்ச....??”

“அது ஒரு பெரிய கதை

“அப்போ நீ அதை நைட்டுக்கு சொல்லு... நானும் அந்த கதையை கேட்டுட்டே நைட் தூங்கிவிடுகிறேன்...” என்றவளை முறைப்பது இப்போது ரிஷியின் முறையானது...

“என்கதை இருக்கட்டும்... மேடம் எப்போ என்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணீங்க...?”

“நேற்று தான் அய்த்தான்...”

“என்ன அம்லு இப்படி சொல்லுற??”

“வேற என்ன அய்த்தான் சொல்லுறது..?? உண்மையை தானே சொல்லமுடியும்.....”

“ஐயோ கன்பியூஸ் பண்ணுறாளே....” என்று குழம்பியவனை பார்த்து சிரித்தவள் அவனோடு விளையாடிப்பார்க்க எண்ணி

“கண்டுபிடிங்க அய்த்தான்... நீங்க தான் பெரிய பிஸ்னஸ் புலியாச்சே... இதெல்லாம் உங்களுக்கு ஒரு விஷயமா??”

“ஏன் அமுல்பேபி இதெல்லாம் நியாயமா சொல்லு... ஒரு பொண்ணோட மனசுல என்ன ஓடுதுனு அந்த கடவுளேயே கண்டுபிடிக்க முடியாது... இதுல இந்த அற்பன் எப்படிமா கண்டுபிடிப்பான்..??” என்று பரிதாபமாக வினவியவனை பார்த்து சிரிப்பு பீறிட்டபோதும்

“அதெல்லாம் எனக்கு தெரியாது... நீங்க கண்டுபிடித்து தான் ஆகனும்... எனக்கு பசிக்குது... நாம பூட் கோட்டிற்கு போய் நம்ம வயிற்றை கவனிக்கலாம்” என்று அவள் முன்னே செல்ல

“இவ மட்டும் தான் இப்படியா.. இல்லை பொண்ணுங்க எல்லாமே இப்படி தானா??” என்று தனக்குள் வினவியவன் அவளை பின் தொடர்ந்தான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN