இறால் கோலா உருண்டை | crispy prawn balls

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தேவையான பொருட்கள்

இறால் - 500 கிராம்
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் & வெங்காயம் ஒட்டு - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
பிரட்தூள் - 1/4 கப்
எண்ணெய்


செய்முறை

1. முதலில் இறாலை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கழுவிக்கொள்ளவும்

2. பிறகு இறாலை துண்டு துண்டாக வெட்டி வைக்கவும்

3. வெட்டி வைத்த இறாலில் தேவையான அளவு உப்பு,மிளகு தூள், சோயா சாஸ்,( இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் & வெங்காயம்) விழுது சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்

4. இந்த கலவையில் ஒரு முட்டை உடைத்து ஊற்றி அதில் சோள மாவு மற்றும் பிரட் தூள் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்

5. இந்த இறால் கலவையில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து பிரட் தூள்களை அதன் மேல் தூவி நன்கு உருட்டி வைக்கவும்

6. இந்த இறால் உருண்டைகளை பிரிட்ஜ்ல் வைத்து 20 நிமிடத்திற்கு குளிரூட்டவும்

7. 20 நிமிடத்திற்கு பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொறித்துவைத்துக்கொள்ளவும்


8. சுவையான மற்றும் மொறுமொறுப்பான இறால் கோலா உருண்டை தயார்
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN