part 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலையில் இருந்த மனநிலைக்கு நேர்மாறான மனநிலையில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்த ராஜீ ஏதேச்சையாய் சாலையில் இருந்த பள்ளத்தில் கவனிக்காமல் வண்டியை இறக்கி விட்டுவிட கவியின் சிந்தனையில் லயித்திருந்த ஷீலா பள்ளத்தில் இறக்கிய அதிர்ச்சியில் ராஜீவின் தோளை பற்றுவதற்குள் ஹெல்மேட்டில் முட்டிக் கொண்டதும் பதறிய ராஜீ வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

"அய்யோ… சே….. சாரி, சாரி..… சாரி ஷீலு ரொம்ப அடிபட்டுடுச்சா ரொம்ப வலிக்குதா" என்று பைக்கில் இருந்து இறங்கி அவளின் முன்நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டே "சாரிடா" என்றான் மிகவும் கெஞ்சலுடன்

அவனின் பதற்றத்தில் தன்னை தொலைத்தவள் அவனின் காதலை எண்ணி ரசித்தவள் "இல்ல ராஜீ ஒன்னுமில்லை லேசாதான் இடிச்சது" என்று அவள் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தவனின் கையை எடுத்து அவனை சமாதனப்படுத்திக் கொண்டிருத்தாள் ஷீலா

"இல்லடா …. என் மேலதான் தப்பு ஷீலு வண்டி ஓட்டும்போது கவனமா இருக்கனும் கொஞ்ச நேரத்துல என்னவாக இருந்துச்சி… பள்ளம் சின்னதா இருக்கவே போச்சி வேற ஏதாவது வண்டி வந்து நான் தடுமாறி இருந்தனா ………" என்று அதற்கு மேல் கூற முடியாமல் என்று தன்னை தானே தலையில் தட்டியவன் "கவி பத்தின நியாபகத்துல நான் அந்த பள்ளத்தை கவனிக்காம வண்டிய விட்டுட்டேன்." என்று அவளிடம் உண்மையான காரணத்தை கூறி மன்னிப்பு கேட்டான் ராஜீ

அவன் கவலையை பார்த்தவள் "விடுங்க பா…. பெரிசா அடியெல்லாம் ஒன்னும் இல்லை… உங்களை போல தான் நானும் அவளோட கல்யாண கலாட்டாவை தான் நினைச்சிட்டு உங்களை சரியா பிடிக்காம உட்காந்திருக்கேன்." என்று தன்மீதும் தவறு உள்ளது என்பதை தெரிவித்து அவனை சமாதனப்மடுத்த முயன்றாள் ஷீலா

தன்னைபோல தன் மனையாலும் அவளையே தான் நினைத்திருந்தாள் என்பதை கேட்டவன் "என்னால இதை இன்னும் கூட ஜீரணிச்சிக்க முடியல ஷீலு… ஒரு வேலை இந்த கல்யாணம் நடந்திருந்தா கவியோட ஃலைப் என்னவாகி இருக்கும். ஒரு அய்யோகியனால சின்னாபின்னமாக இருந்துச்சே" என்று வருத்தத்தோடு கூற

அவ ரொம்ப நல்ல பொண்ணுங்க எல்லாருக்கும் நல்லது தான் பண்ணி இருக்கா அவளுக்கு நல்லது தான் நடக்கும்… சேரவே முடியாதுன்னு இருந்த நம்ம ஃலைப்யே ரிஸ்க் எடுத்து சேத்து வச்சி நம்மல ஒன்னாகினவ அவளுக்கு ஒரு கஷ்ட்டமும் வராதுங்க நான் அதை பத்தி நினைக்கலை"

"அப்ப வேற!!!" என்றான் அவளையே பார்த்து

"அது அவளோட பெட்டர் ஃஹாப் பத்தியது… கவிய அந்த பொம்பள பேசினதும் எவ்வளவு கோவமா ஒன்னுக்கு பத்தா திருப்பி தந்தாரு அவரோட கண்ணுல ஏதோ ஒன்னு அது என்ன… என்ன…ஹாங் தவிப்பு அதை பாத்தேங்க அவள யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னற தவிப்பு"

"அப்போ நீ என்ன சொல்ல வர அவரு கவிய விரும்புராருன்னா?!"

"ம்… என்று இழுத்தவள் அது சரியா சொல்ல தெரிய ராஜீ…. பட் என் அஸம்ஷன் சரினா அவரு கவிய ஆழ் மனசுல இருந்து நேசிக்கிராரு கவிக்கு நல்ல ஃலைப்… அவங்க அப்பா பார்த்ததவிட நல்ல ஃலைப் கிடைச்சிருக்கு" என்று மகழ்ச்சியாய் கூறினாள் ஷீலா

"நடந்ததை கவி மறக்கனும்ல??? கூடவே???"என்று இழுக்க

"நிச்சயம் மறந்துடுவாங்க… அவ ரொம்ப தெளிவான பொண்ணு… சரியான முடிவை தான் எடுப்பா, எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று அவள் கூறினாலும் அவனின் கேள்வி நிறைந்த முகத்தை பார்த்தவள் "என்ன ராஜீ?" என்றாள்.

"இல்ல கவிக்கு வருங்கால கணவனை பத்திய எவ்வளவு கனவு இருந்து இருக்கும்… இல்லை எதிர்கால புருஷன்னு அவன் மேல ஆசையோ, இல்லை காதலையோ, வளர்த்துகிட்டு இருந்தா??" என்று கேள்வி எழும்ப

"நிச்சயம் இருக்காது".

"எப்படி சொல்ற?"

"அவளுக்கு காதல் பிடிக்கும் தான்… ஆனா அவ காதல்ல விழலை.. அவ கண்ணுல அதை இன்னும் நான் பாக்கல…" என்று அவள் உறுதியோடு கூற "நான் அடுக்கடுக்க அவகிட்ட மாப்பிள்ளைய பத்தி பல கேள்விகளை கேட்டு இருக்கேன்… அதுக்கெல்லாம் கீற்று மாதிரி ஒரு சிரிப்பை மட்டும் கொடுக்கிற உதடுகள் உண்மையான அவளோட நிலையை என்னிடம் சொன்னதே இல்லை ராஜீ… கல்யாணத்தை பற்றி கேட்டால் வெட்கபடவேண்டிய அவளின் முகம் குழப்பத்துல இருக்கும்." என்று அவனிடம் தான் கவியிடத்தில் கவனித்ததை பற்றி கூறினாள் ஷீலா….

"நீ என்ன சொல்ல வர்ர ஷீலு??… இந்த கல்யாணம் பிடிக்காமதான் சரி சொன்னாலா கவி"

"அது எனக்கு நிச்சயமா தெரியலைங்க… ஆனா அப்படி இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருக்கு"என்றவள் கையில் இருந்த வாட்ச்சை பார்க்க "ஹோ… காட் ரொம்ப நேரம் ஆகிடுச்சி அத்தை தனியா இருப்பாங்க வீட்டுக்கு போகலாம் வாங்க"

"ஏய்… என்னடி நாம பேசிக்கறதே கம்மி இதுல இப்போ நாம கவிய பத்தி மட்டும் தான் பேசினோம் கொஞ்சம் நேரம் கழிச்சே போலாம் டா" என்றான் பாவமாக

"விளையாடாதிங்க ராஜீ…. நாம கல்யாணத்துக்கு போயிட்டு உடனே வந்துடுறோம்னு தானே சொல்லிட்டு வந்தோம். இப்போ லேட்டா போனா அவங்க நம்மல கேக்கலானாலும் காணும்னு பதறிட மாட்டாங்களா?" என்று மாமியாரின் நிலையிலிருந்து யோசிக்க

"ஆமா… ஆமா… அப்படியே பதறிட்டாலும் என்னைக்கோ ஒருநாள் தான் வெளியே வர்ரோம். உடனே கிளம்பனும், கிளம்பனும்னு சொல்ற கல்யாணம் ஆகி இதுவரைக்கும் படத்துக்கு ரெண்டுபேரூம் போனதே இல்ல பக்கத்துலதான் உனக்கு பிடிச்ச ஹீரோவோட படம் ஓடுது போலாமா?" என்றான் ஆசையாய்

கணவனின் ஆசை புரிந்த போதிலும் இது சமயம் அல்ல என்று நினைத்து "பிளீஸ் ராஜீ" என்று அவள் கண்களை நயமாய் சுருக்கியவள் "இன்னொரு நாள் வீட்டுல சொல்லிட்டு வரலாம் பா அப்போதான் எனக்கும் நிம்மதியா இருக்கும். சொல்லிட்டு வரலியேன்னு மனசுல உறுத்தலும் இருக்காது" என்று அவனிடம் அவள் உள்ளத்தை கூற

அதில் கடுப்பானவன் "இன்னும் கொஞ்ச நாள் பாச்சிலராவே இருந்திருக்கலாம்… கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி ஓகே, அதுக்குன்னு சினிமா, பார்க், கோவில் போக கூடவா பர்மிஷன் வாங்கிட்டு போஙனும் ஆனாலும் மனுஷன காய விடுற போடி" என்று அவளை பார்த்து கடுப்பாய் கூறி பைக்கில் அமர்ந்தவனை தொடர்ந்து பின் சீட்டில் ஏறி அமர்ந்தவள் "இப்பவும் ஒன்னும் ஆகல கல்யாணம் ஆனதை மறந்துட்டு ஜாலியா இருங்க இப்போ நாம ரெண்டுபேரூம் லவ்வர்ஸ் சரியா ?"என்று அவனை மேலும் கடுபேத்த

"போதும் இன்னைக்கு கோட்டா முடிஞ்சிடுச்சி… இதுக்கு மேல கடுப்பேத்தின நடுரோடுன்னு கூட பாக்கமாட்டேன், எக்குத்தப்பா ஏதாவது பண்ணிடுவேன். வாயமூடிக்கிட்டு சைலண்டா உட்காரு" என்று அவளை மிரட்டியவனின் குரலில் எரிச்சல் துளியும் இல்லை
_______________________________

"மஞ்சு, மஞ்சு" என்று அழைத்துக்கொண்டே வந்த ராதா சமையலறையில் மஞ்சுளா இருப்பதை பார்த்ததும் "இங்க தான் இருக்கியா சரி மாப்பிளை பிரெஷ் ஆகிட்டாரான்னு கவிய பாக்க சொல்லனும் நீ சொல்லுறியா? இல்ல நான் சொல்லவா ?அவகிட்ட" என்றார் ராதா

சற்று தயங்கிய மஞ்சுளா எச்சிலை விழுங்கியபடி "நான் மாப்பிளைக்கு ரூம் காட்டுன்னு சொல்லும்போதே மூஞ்சியை அந்த காட்டு ,காட்டினா… இப்போ போய் அவரை கூட்டிட்டுவான்னு சொன்ன என்ன ஆட்டம் ஆடுவளோன்னு மனசு கிடந்து அடிச்சிக்குது ராதா". என்று மகளின் ஆட்டத்தை எண்ணி கலங்கினார் மஞ்சுளா

"இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா மஞ்சு? அவரை பார்த்துக்கர முக்கிய பொறுப்பு அவளுக்கு இருக்குன்னு நாம நியாபகபடுத்த வேண்டாமா?…அவளை ஒரு மணி நேரம் கூட சும்மா இருக்க விட கூடாது தனியா உட்கார்ந்து இருந்தா ஏதாவது யோசனையாவே இருப்பா… அதுக்குதான் சொல்றேன் நீ அமைதியா இரு நான் பாத்துக்குறேன் மத்ததை என்று அவர் பொறுப்பெடுத்துக் கொண்டார் ராதா.

"நீ சொல்றது புரியுது ராதா… ஆனா அவருகிட்ட இவ மூஞ்சில அடிச்சபோல பட்டுன்னு ஏதாவது சொல்லிட்டா!!!??… அவ குணம் தான் உனக்கு தெரியும் ல ???" என்றார் ராதாவிடம் தயக்கமாக

"ம்ஹிம்… இது எல்லாம் சரி பட்டு வராது… நான் போயி அவள அவர கூட்டுட்டு வர சொல்லி அனுப்புறேன். அவங்களா பேசுவாங்கன்னு பாத்தா நடக்காது... நாமாளா சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுக்கனும் நல்ல குணமான பையனாதான் தெரியுது ஏதோ நடக்ககூடாத சம்பவம் நடந்தா மாதிரி நீங்களே ஒரு சூழலை உறுவாக்காதிங்க… மாப்பிள்ளை வீட்டுல எவ்வளவு கலகலன்னு இருந்தாங்க ஆதிக்கா அதுபோல இல்லனாலும் முகத்தை தூக்கி வைச்சிக்காம இருக்கலாம்ல… அளாளுக்கு ஒருபக்கம் உர்ன்னு உட்காந்து இருக்கிங்க…" என்றவர் "பாலும் பழமும் எடுத்து வை மாப்புள பொண்ணு உட்காரவைச்சி கொடுக்கனும்" என்றதும்

"இதுலாம் இப்போ செய்யனுமா??? அவ என்றார் மஞ்சுளா

"இதை மாப்பிள்ளை வீட்டுலையே இரெண்டுபேரையும் உட்காரவைச்சி கொடுத்து இருக்கனும். மஞ்சு இவ மயங்கிட்டதால எதுவும் பண்ணமுடியாம போச்சு இங்க வந்தவுடனே செய்து இருக்கனும்... சரி வந்த அலுப்பு கொஞ்சம் போகட்டும்மேன்னு இருந்தேன். மணி ஆகுது நல்ல நேரம் போயிடப்போகுது நான் போறேன்". என்றவர் அத்துடன் பேச்சு முடிந்தது என்ற பாவனையுடன் கவியை அழைக்க சென்றார்….

அணிந்திருந்த நகைகளை கூட கழட்ட மறந்து கட்டிலில் சாய்ந்திருந்தாள் கவி கதவு தட்டும் சத்தம் கேட்க தங்கையை கண்களால் துழாவ குளியலறையில் வந்த சத்தம் தங்கையின் இருப்பைக் கூற எழுந்து கதவை திறந்தவள் ராதாவை பார்த்துதும் உள்ளே வர வழிவிட்டு விலகி நிற்க

"என்ன மா இன்னும் இப்படியே இருக்க….???? முகம் கூட கழுவாம??…" என்றவர் "வா இப்படி உட்காரு" என்று அவளை டிரெஸிங் டேபிளின் சேரில் அமரவைத்தவர் வாடிய பூவை தலையில் இருந்து எடுத்துவிட்டு அவளுக்கு தலை வாரி தளர பின்னளிட. குளியலறையில் இருந்து வெளியே வந்த தியா இதை பார்த்துக்கொண்டே முகத்தை துடைக்க அவளை பார்த்தவர் "என்னடி பார்வை ஒரு தினுசா இருக்கு?" என்று வினா எழுப்பியபடியே பின்னளிட்டு முடித்தவர் "போமா போய் முகத்தை கழிவிக்கிட்டு வா" என்று அனுப்பி வைத்தார்

அவரையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்த தியா இன்னும் பதில் சொல்லாமல் இருக்க "என்னடி எலி இன்னும் எந்த சவுண்டும் காணும்???" என்று அவளை கேட்க

"ம்…. என்று இழுத்தவள் இன்னைக்கு எலி மௌனவிரதம்.." என்று கூற "

என்னடி உளற மௌனவிரதம்னா எப்படி டீ பேசுவாங்க?" என்று அவர் புரியாமல் அவளிடமே கேள்வி எழுப்பினார்.

"ஹங்…. எங்க ஊர்ல மௌனவிரதம் இப்படி தான் இருப்பாங்க." என்று ஏறுக்கு மாறாய் அவரிடம் வம்பு அளந்து கொண்டிருந்தாள் தியா

"ஆமாடி இவ பெரிய லண்டன் ராணி… நாங்க பாக்காத ஊர்ல இவ இருக்கா பதிமூனு வருசமா குப்பை கொட்டின ஊருதாண்டி இது" என்று அவளை கன்னத்தில் இடித்தவர். "ஆமா அவ பாட்டுக்கு இப்படியே உட்காந்து இருக்காலே எதையாவது பேசி முகம் இழுவ வைசசி இருக்கலாம்ல?" என்று அவர் கடிந்துகொள்ள

"ஆஹா…. நான் சொன்னவுடனேதான் அவ எல்லாம் கேட்டு நடக்கராப்போல போங்க அத்த…ஏதாவது கவின்னு சொன்னாலே பீளீஸ் தீயா ன்னு டிராபீக் போலீஸ் மாதிரி கை காட்டி ஆப் பண்ணிடுறா… என்னை என்ன பேச சொல்றிங்க?" என்று அவளிடம் காலையில் இருந்து மல்லுகட்டியதை கூற தான் கவிக்கு கொண்டு வந்த பூவில் சிறிதளவை எடுத்து தியாவிற்கு வைத்து விட்டுக்கொண்டிருந்தவர் அவள் கூறியதில்

பக்கென்று சிரித்துவிட்டு "என் புள்ளைக்கிட்ட மட்டும் தான்டி உன் உதாறு எல்லாம் செல்லும் அதான் உன்னை பாத்தாலே அவன் மிரண்டு ஓடுறான். என்று கூற அதில் இல்லாத தன் சோளியின் காலரை தூக்கிவிட்டவள்

"அது தியாவா??? கொக்கா??? அந்த பயம் இருக்கட்டும் சொல்லி வைங்க என்னை பத்தி" என்றவள் தியா என்று அழைக்கும் மஞ்சுவின் குரல் கேட்க வரேன் மா என்று அன்னையிடம் துள்ளி ஓடினாள் அழகிய புள்ளி மானாய்...

கவி வெளியே வந்ததும் தான் கொண்டுவந்த பூவை அவளின் தலையில் சூடியவர்.. "ரெடியாகிட்டு மாப்பிள்ளைய போய் கூட்டி வாடா…" என்று கூற தூக்கி வாறி போட்டது கவிக்கு

ஏதோ வேற்று கிரக மனிதரை பார்ப்பது போல பேந்த பேந்த விழித்தபடி அவரையே பார்த்தபடி
நிற்க

கவி…. என்ன ஆச்சி ஏன் இப்படி முழிக்கிற என்று அவளை உலுக்கினார் ராதா

"அது அத்தை நான் எப்படி அவனை" என்று கூற வந்தவள் டக்கென உதடு மடித்து "அவரை" என்றாள்.

"ஹா… நீதான்டி கன்னு கூப்பிடனும்" என்றவர் கூற

'முடியாது மாட்டேன் நான் போய் அவனை கூப்பிட மாட்டேன் சரியான திமிரு புடிச்சவன்' என்று உள்ளுக்குள் திட்டியவள் "அத்தை நான் போக மாட்டேன்" என்று முடிவாய் கூறிவிட

"இங்க பாரு கவி நம்ம வீட்டுக்கு வந்த புள்ள…. நாலு பேரு இருக்க சபையில உங்க அப்பாரு மானத்தை காப்பத்தி உன்னை கைபிடிச்ச புள்ள டா அவரு இப்படி இருக்காதே டா" என்று அவர் பொறுமையாய் கூற

"நானா அவனை கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சினேன் விட்டு போக வேண்டியதுதானே…" என்றவள் "நீங்கதானே பண்ணி வைச்சிங்க நீங்களே போய் கூப்பிடுங்க" என்று ஆத்திரத்தில் பேசிவிட

"ஹோ…. அப்படியா உன்னை உன் மாமனார் கேட்டாரு இல்ல அந்த புள்ளைய கல்யணம் கட்டிக சம்மதமான்னு அப்பவே சொல்ல வேண்டியது தானே ஆந்த புள்ளைய கட்டிக்க புடிக்கலன்னு அப்போ ஏன்டி சும்மாவே இருந்த??"… என்று அவரும் எகிற

"அத்தை என் நிலமைய.."

"என்னடி உன் நிலமை அந்த பொறுக்கிய நினைச்சிட்டு கட்டிக்க முடிலன்னு இந்த புள்ளைய பழிவாங்குறியா?… நல்லயில்லடி இதெல்லாம்…" என்று அவர் கவியை கோபபடுத்த

"அத்தை…" என்று அழைத்தவள் "என்கிட்ட மட்டும் அந்த நாய விட்டு இருந்திங்க எனக்கு இருந்த வெறிக்கு அவனை அடிச்சே கொன்னு இருப்பேன்….. அவங்க அவங்க இஷ்டத்துக்கு என்னை பந்தாடுறிங்க ல??? இப்போ என்ன உங்களுக்கு அவனை நானே போய் கூப்பிடனும் அவளவுதானே போறேன் போய் கூப்பிட்டு தொலைக்கிறேன்" என்றவள் விடுவிடவென வெளியே செல்ல அவளை கை கைபிடித்து இழுத்து நிறுத்திய ராதா "என் கன்னு ல முகத்தை சிரிச்சாபோல வைச்சிட்டு போடா தங்கம்"என்று நெட்டி முறிக்க அவரை முறைத்தவள் "போடா கன்னு" என்று அவளை தாஜா செய்து அறைக்கு அனுப்பி வைத்தார் ராதா.

கதவுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கவி கதவை தட்டாமல் கையை வைப்பதும் எடுப்பதுமாகவே இருக்க வந்த 5 நிமிடங்களாகவே இதையே தொழிலாக செய்துகொண்டிருந்தவளை "என்ன கவி கூப்பிட்டியா?" என்ற ராதாவின் குரல் கதவை தட்டாமலையே உள்ளே செல்லவிட்டிருந்தது…. என்ன இவன்….. டோர கூட லாக் பண்ற பழக்கம் இல்லையா?" என்று அவனை சாடியவள்

"ஆமா நீ மட்டும் என்ன கதவை தட்டிட்டா வந்த"

"என் வீடு, என் ரூம், நான் யாரை கேக்கனும்?"

"ஹங்…… அப்படியா இதை நீ யாரும் இல்லம இருந்தப்போ சொல்லி இருந்தா ஓகே இங்கே இப்போ இருக்கரதே ஒரு ஆம்பள…. ஒரு ஆம்பள தனியா இருக்க ரூம்ல இப்படிதான் கதவை தட்டாம வருவியா??? என்று அவளே கேள்வி அவளே பதிலுமாக மாறி மாறி பேசிக்கொள்ள கேள்வி கேட்கும் தன் மூளையையும் மனதையும் அதன் தலையில் தட்டி அடக்கியவள் கண்ணளால் தன் மணாளனை தேட மெத்தையில் சாய்ந்தபடி கண்மூடி இருந்தவனை கண்டுகொண்டாள்…

கண்மூடி இருந்தவனின் அருகில் சென்று அவனை எப்படி அழைப்பது என யோசனையுடன் நின்றிருந்தவள் வளையல்கள் அடுக்கபட்டு இருந்த கைகளை பார்த்ததும் யோசனை வந்தவள் அதில் ஒலி எழுப்பி அவன் சிந்தனையை கலைக்க முயற்சி செய்யதாள். அது ஒன்றும் பலிக்காமல் இன்னும் உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தான் கேஷவ்.

அதிலும் தோல்வி வர ம்ஹிம்…. ம்…. ம்… என்று தொண்டை கனைக்க அதிலும் சிறிது அசைவு இல்லாமல் படுத்து இருந்தவனினை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது கவிக்கு….

அதே கோபத்துடன் அருகில் டேபிள் மேல் இருந்த பென் ஹோல்டரை தட்டிவிட அது தரையில் பட்டு விழுந்த சத்தத்தில் சட்டென கண்விழித்து பார்க்க சோபவை பார்த்த படி நின்றிருந்தவளை கேள்வியாய் பார்த்தான்.

பெரிய கேள்வி மன்னன் கண்ணாலையே கேள்வி கேக்குராரு என் நேரம் டா உன்னை என் கூட கோத்துவிட்டு வேடிக்கை பாக்குது நீ ஒரு சரியான முசுடுன்னு தெரியாம இங்க ஒரு கூட்டம் உனக்கு கொடி பிடிக்குதுடா என்று மனதுக்குள் எரிமலையாய் கொதித்து கொண்டிருந்தவள் வெளியே சாதரணமாக நிற்க

இவ எதுக்கு இரயில் என்ஜினுக்கு கரி அள்ளி போடுறாமாதிரி பொசுக்கு போசுங்குன்னு மூச்சி வாங்க நிக்குறா என்று பார்வையிட

அருகில் இருந்த சேரே பார்த்த படி இருந்தவள் "வெளியே கூப்பிட்டாங்க"என்று மொட்டையாக கூற

"ஹோ… சேர் உன்னை வெளியே கூப்பிட்டாங்களா!!! போயிட்டு வா" என்று நாற்கலிக்கு கட்டளை பிறப்பித்தவன் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு பழைய நிலைக்கே திரும்பி விட

ஆத்திரத்தில் இரண்டு கைகளையும் அவன் கழுத்திற்கு கொண்டு சென்றவள் சே… என்று விட்டு இப்போ எதுவும் பேச வேண்டாம் என்ற எண்ணம் கொண்டு சற்று தன்னை நிதானபடுத்திக் கொண்டவள்

"ம்…. வெளிய கூப்பிட்டாங்க" என்று கூற

"ஆஹ்….. கேக்கல… என்ன என்ன சொன்ன?" என்று மறுபடி கூற ஊக்க

"அது உன்னை" என்று கூறியவளின்

பேச்சை தடை செய்து "என்ன??? சரியா விழுகல???" என்று காதில் கைவைத்து அவன் கேட்க

சரியான செவிட்டு கருமம் என்று தனக்குதானே கூறிக்கொண்டவள் "உங்களை கூப்பிட்டாங்க" என்று பற்களை கடித்து வார்த்தைகளை தும்பினாள்..

ம்…. என்று இதழ் கோணிய சிரிப்புடன் இப்பதானடி வந்துருக்க இன்னும் இருக்குடி என்று உள்ளுக்குள் சிரித்தபடி வெளியேறினான் கேஷவ்.

போட போ….. எனகிட்ட நீ படாத பாடு படபோறடா என்றபடி அவன் பின்னே வந்தாள் பார்கவி.

"வாங்க தம்பி" என்று கேஷவை அழைத்தவர் இப்படி உட்காருங்க என்று இருக்கையை காட்டிவிட்டு "நீயும் பக்கத்துல உட்காரு கவி" என்று கூற பார்த்தாலே ஒரு பார்வை ஒரு நிமிடம் பத்திரகாளியின் மறு வடிவமோ எனும் அளவிற்கு கண்கள் இரண்டும் வெளியே தெரித்து விழுவது போல் முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் கவி

"ஏய் உட்காருடி என்று கண்ஜாடை பெரியவர்கள் காட்ட அதை கவனிக்காமல் இவன் பக்கத்திலையா என்று நின்றிருந்தாள்.

அவளின் முகமாற்றத்தினை கவனிக்காமல் இருந்த சித்து "ஹோய் என்ன யோசனை பா அம்மா சொல்றாங்க பார் உட்காரு" என்று கோஷவின் பக்கத்தில் அமர வைத்துவிட்டான்.

"டேய்… டேய்.. "என்று அவள் சித்துவிற்கு மட்டும் கேட்கும் குரலில் சீற அவனுக்கு காதுக்குள் விழுந்தால் தானே அவன் பக்கத்தில் உட்கார்ந்து பால்ய நண்பன் போல் கதை அளந்து கொண்டிருப்பவனை பார்க்க பார்க்க பத்திக்கொண்டு வந்தது கவிக்கு

"தம்பி இது நம்ம ஊர் வழக்கம் கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த முதல்ல பால் பழம் கொடுத்துடுதான் மத்த சம்பிரதாயத்தை ஆரம்பிப்பாங்க அதனால இதை" என்று அவர் காட்ட

இதை குடிக்னுமா ஆண்டி?? அதுக்கு எதுக்கு தயங்குறிங்க? கொடுங்க குடிக்கிறேன்". என்றவன் வாங்கியவுடன் "தம்பி,தம்பி நீங்களே குடிச்சிட கூடாது உங்க பொண்டாட்டிக்கும் கொடுக்கனும்" என்றதும் அவளை பார்த்தவன் அவள் முகத்தை பார்க்க பாவமாய் இருக்க துக்கியே குடித்து கொடுத்தான்.

அதை வாங்கி பருகியவள் "நீயும் குடிச்சிட்டு தம்பிக்கிட்ட கொடும்மா" என்று கூற இவளும் அதே போல குடித்து விட்டு அவனிடம் நீட்ட மூன்று முறை கொடுக்கப்பட்டது. "தம்பி இந்த பழத்தை கவிக்கு ஊட்டி விடுங்க"

"என்ன ஆண்டி நானா?"

"ம்… என்றவர் தயக்கமாக ஆமா தம்பி நீங்க தான்"

வேறு வழியில்லாமல் அவரிடம்.இருந்து பழம் வாங்கியவன் அவளுக்கு வாய் வரை எடுத்து செல்ல அவளின் முனுமுனுத்த உதடுகளை கண்டதும் 'ரொம்ப பேசுறடி உனக்கு இந்தெல்லாம் பத்தாதுடி பெரிய பலா சைஸ் பழமா வாங்கி வந்து அடைக்கனும். சரியான வாயாடி' என்று அவளுக்கு அடைத்து விட அவனை முறைத்துக்கொண்டே பழத்தை வாங்கி கொண்டாள்.

இவனுக்கான பழத்தை உரித்து வாயருகில் கொண்டு போக அவளுக்கு போக்கு காட்டி இப்படி அப்படியாய் யாருக்கும் தெரியாமல் வாயசைத்தவனை அவளை ஊட்ட விடாமல் திண்டாட வைத்தவனை யாருக்கும் தெரியாமல் இடுப்பில் நறுக்கென கிள்ள வலியில் ஆ என வாய்திறந்து ஒளி எழுப்புவதற்குள் திறந்த வாயில் பழத்தை வைத்து அடைத்து விட்டாள் அவனை மனதில் கருவியபடியே…..

இதுங்க இப்போவே இப்படி அடிச்சிகுதுங்களே இன்னும் போக போக என்னாகுமோ தெய்வமே இதுக்கு நான் பொருப்பு இல்லைங்கோ…….
 

Author: yuvanika
Article Title: part 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN