part 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
டிக் டிக் டிக் என்ற கடிகார முள்ளின் சத்தம் கூட தெளிவாய் கேட்டுக்கும் அளவிற்கு அறையினில் நிசப்தம் சுழலும் நாற்காலியில் தலை சாய்த்து சீலிங்கையே வெறித்து இருந்தவனின் அறை கதவு தட்டும் ஓசை கேட்க மறுநொடியே கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் கார்த்திக்.

"என்ன கேஷவ் அதுக்குள்ள ஆபிஸ் வந்துட்ட புது மாப்பிள்ள ஒரு இரண்டு நாளவது லீவ் எடுத்து இருக்கலாம் ல… என்னடா அவசரம் உனக்கு?.." என்றபடி எதிர் சேரில் அமர்ந்தான் கார்த்திக்

முடிந்த மட்டில் கார்த்திக்கை முறைத்தவன்… ஒளிர்ந்து கொண்டிருந்த மானிட்டரில் கண்களை பதித்தவாறு "இந்த விஷயம் காட்டு தீயை விட வேகமா பரவுது போல!!! என்ற ஆச்சர்யபாவம் முகத்தில் கொண்டு உனக்கு எப்படி தெரியும்??" என்று கேட்டவனின் கண்கள் தப்பி தவறியும் அவன் பக்கம் திரும்பாது மானிட்டரிலையே நிலைத்து இருந்தது… பின்னே அவன் கேளி பேச்சுக்களையும் கிண்டலையும் எதிர்கொள்ள வேண்டி வருமே!!!

அவனின் அவஸ்த்தையை எண்ணி நகைத்தவன். "நேத்து தான்டா அம்மா போன் பண்ணி விஷயத்தை சொன்னாங்க… நடந்ததை நினைச்சி வாழ்க்கையே விணாக்கிடுவியோன்னு கவலைபட்டுட்டு இருந்தோம். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு டா... உங்க அண்ணன் கேக்கவே வேண்டாம் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறைதான்.... எவ்வளவு ஹேப்பியா இருக்கான் தெரியுமா...???

என்றவன் கூறியதும் கேஷவின் மனதில் கடந்தகால நினைவுகள் ஆக்கிரமிக்க தனலை அள்ளி கொட்டியது போல் முகம் தானய் இறுக்கம் கொண்டது…

அவன் முகத்தின் இறுக்கத்தை கவனம் கொள்ளமால் பேசிக்கொண்டே வந்தவன்,சட்டென அவன் முகம் பார்க்க தான் பேசிய தவறை உணர்ந்தவன் சூழ்நிலையை சமன் செய்ய "கல்யாணத்தை பார்க்க போனவன் கல்யாண மாப்பிள்ளை ஆகிட்டியே டா…. உன் கல்யாணத்தை உன்னால மட்டும் இல்லை யாரலையுமே மறக்கமுடியாத இன்சிடன்ட் டா…ஶ்ரீ சிட்டி ஹாட் டாபிக் நீயூசே உன்னோட திடீர் கல்யாணம் தான்டா... திடீர் மாப்புள்ள… என்றான் சிரித்தபடியே

கடந்த கால நினைவுகள் மனதினை உறுத்தி தவறு செய்து விட்டதை போல ஒரு குற்ற உணர்வினை கொடுத்த போதும் தன் மனைவியின் முகமும் ,அவன் கிண்டல் பேச்சும் அவனிடம் இருந்த இறுக்கத்தினை சற்று தளரச்செய்து அவனின் பேச்சுக்கு பதில் பேச வைத்தது "ஆஹாங் அவ்வளவு பேமஸ் ஆகிட்டேனா ….!?!" என்று நக்கல் கலந்த குரலில் கூறி அம்மா உங்களால முடிஞ்ச நல்லது எல்லாம் செய்றீங்க என்று உள்ளுக்குள் பற்களை கடித்து கூறிக்கொண்டு ம் "அப்புறம்" என்றான் சுரத்தே இல்லாமல்

"அப்புறம் என்னடா?… எங்கே ஹனிமூன் போறதா பிளான் பண்ணி இருக்கிங்க?? சிஸ்டர் எப்படி இருக்காங்க??" என்றான் கவியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவளில்

'ஹனி மூன் தானே அது எனக்கு நானே வைச்சிக்கிர செய்வினைக்கு சமம் டா… அவ ஆடுற ஆட்டத்துக்கு அவ கூட எங்கயும் போக கூடாதுன்னு முடிவு பண்ணிதானே இங்கே வந்து உட்காந்துட்டேன். இதோட நைட்டுதான் வீட்டுக்கு' என்ற மனதுடன் பேசிக்கொண்டு மானிட்டரில் இருந்து கண்களை எடுக்காதவன் "அதுக்கெல்லாம் இப்போ என்ன கார்த்திக் அவசரம் ஃபாக்டீரிலையும் வேலை இருக்கு… என் திருமணமே கலவரமா இருந்தது… எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும் அப்பறம் போகிறத பத்தி யோசிக்கலாம்" என்றான் சிலபல காரணங்களை அடுக்கி

"என்னடா இப்படி சொல்லிட்ட… கல்யாணம் ஆன புதுசுல போனாதான்டா அது ஹனிமூன். சிஸ்டரும் பீல் பண்ண கூடாது ல..." என்று அதற்கு அர்தமாய் விளக்க அந்த விளக்கத்திற்கு அக்னி பார்வை பார்த்தவன் "உன்னை நான் இப்போ ஹனிமுனுக்கு டிஸ்கிரிப்ஷனும் அவ என்ன நினைச்சுப்பானும்மா டா கேட்டேன்". என்றான் பற்களை கடித்துக்கொண்டு

"கேஷவின் கோபம் அவன் அறிந்த விஷயம என்றாலும் இந்த அர்த்தமற்ற எரிச்சல் அவனை விச்சித்திரமாக பார்த்துக் கொள்ளவைத்தது… அவனின் பார்வையில் இருந்து தப்பிக்க "கார்த்திக் அந்த மிஷினரி பத்தி ஏதாவது இன்பர்மேஷன் கேதர் பண்ணியா…?? உனக்கு இந்த சம்பவங்கள் முன்னுக்கு பின் முரணா இருக்குன்னு தெரியலையா கார்த்திக்…?? என்று பேச்சை திசைதிருப்பி கார்த்திகை சிந்திக்க வைத்து" ஓரக்கண்ணால் பார்த்துகொண்டான்.

கேஷவ்வின் பேச்சு முற்றிலுமாக அவனை திசைதிருப்பியது என்று சொல்ல தான் வேண்டும். கேஷவின் வார்த்தைகளில் பிராகசம் வந்தது போல் "நீ சொல்றது சரிதான் கேஷவ் சின்ன சின்ன ஆர்டர்ஸ் வரும்போது இல்லாம,கோடி கணக்கில் முக்கியமான ஆடர்ஸ் எடுக்கும் போதுதான் இதுபோல ப்ரபளம் வந்து இருக்கு…. இது ஜெய் இருக்கும் போதும் நடந்து இருக்கு… அப்போலாம் முழி பிதிங்கி வொர்க்கர்ஸ் டே நைட் ஷிப்ட் போட்டு செய்வாங்க.." என்று அந்த நாளைய நினைவில் கூறி "ஆனா நாங்க இந்த கோணத்துல யோசிக்கல.. நீ சொல்லும்போது கார்ன்பாமா இது யாரோட வேலையோன்னு தோனுது டா"என்று அவனும் படு தீவிரமாக கூறிக்கொண்டிருந்தான்

"ம்… ஓகே… சந்தேகம்னு யார்மேலயாவது உனக்கு இருக்கா கார்த்திக்"

அதில் தலையை தொங்கவிட்டவன் "பச் எனக்கு ஒரு ஐடியாவும் இல்லா டா எல்லாம் ரொம்ப நம்பகமான சின்சியரான வொர்க்கர்ஸ் டா… எப்படி அவங்க மேல சந்தேக பட முடியும்." என்றான் டேபிளில் இரண்டு கைகளையும் ஊன்றி தலைக்கு முட்டுகொடுத்து

"இது மாநிரியான நிகழ்வுகள் எத்தனை வருசமா நடந்திட்டு இருக்குன்னு தெரியுமா கார்த்திக்"

"கிட்டதட்ட மூனரை வருஷமா இதுபோல பிரச்சனைகள் வந்துட்டு போயிட்டுதான் இருக்கு கேஷவ்… ம்…உனக்கு யார் மேலயாவது டவ்ட் இருக்கா?" என்று அதே கேள்வியை கேஷவை பார்த்து கேட்கவும்.

"எனக்கும் நோ ஐடியா தான் பதில் கார்த்திக்…. ஆனா எனக்கு நம்ம ஆப்பீஸ் ஸ்டாஃப்ஸ் மேலதான் சின்னதா சந்தேகம்" என்றவன்
"தலைய ரொம்ப போட்டு உடைச்சிக்காத கார்த்திக் கண்டுபிடிப்போம் எங்க போயிட போறாங்க இன்னும் எவ்வளவோ இருக்கு அதுக்குள்ள சோர்ந்துட்டா எப்படி??" என்றான் அவனின் தளர்வை போக்க எண்ணி

"இன்னும் முடிக்க வேண்டிய ஆர்டர்ஸ் நிறைய இருக்குடா அதுல ஏதாவது கைய வைச்சிட்டா… இன்னும் சிக்கல் தானே??" என்றான் கார்த்திக் கலக்கமா…

"இதுல யாராலையும் கை வைக்க முடியாது கார்த்திக்… இன்னும் ஒரு மாசத்துக்குள்ள இந்த மிஷனரி எல்லத்துக்கும் கிளைம் பண்ணி நியூ மிஷின் இம்போர்ட் பண்ண வைக்கனும்.. பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ண சொல்லு, அதோட இன்னும் முடிக்க வேண்டிய ஆர்டர்ஸ் எவ்வளவு இருக்குன்னு ஒரு பைல் ரெடிபண்ணி கொண்டு வர சொல்லு… இனிதான் நம்மோட ஆட்டமே சூடுபிடிக்கும். பீ குயிக்" என்று அவனை துரிதபடுத்தியவன் அதோடு ஏதோ முக்கிய பைலை வைத்துக்கொண்டு அதில் முழ்குவது போல பாவனையில் ஈடுப்பட்டான்.

அவன் கூறிய முறைகளில் கவரப்பட்டவன் கடைசியாக நடந்துக்கொள்ளும் முறையும் செயலும் விச்சித்திரமாக இருக்கவே அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறிய கார்த்திக் அவன் கூறிய அனைத்தும் முடிக்க விரைந்தான்…

"அப்பாடா வெளியே போயிட்டான்…. இல்ல அவளை பத்தி கேட்டே என்னை ஒரு வழி ஆக்கி இருப்பான்" என்று வாய்விட்டு கூறியவன் அன்றைய வேலைகளில் முழ்கிய நிலையில் அலைபேசி தன் இருப்பை காட்டி அவனை அழுத்தது யார் நம்பர் புதுசா இருக்கு என்ற எண்ணத்தோடு காதிற்கு கொடுத்த கேஷவ் கம்பீர குரலில் "கேஷவ் இயர்ஸ் வூஸ் பீக்கீங்?" என்றான் மிடுக்காக

அந்த குரலில் கலந்திருந்த மிடுக்கும் கம்பீரமும் அவளை ஒரு நிமிடம் தாமதிக்க வைக்க "என்ன கன்னு சும்மா நிக்குற?.. தம்பி போனை எடுத்தாரா ?இல்லையா ?என்னாச்சி தங்கம் பேசு"என்று அருகில் இருந்த ராதா கவியை ஊக்கிக்கொண்டிருந்தார்.

"ஹலோ யாருங்க?? போன் பண்ணிட்டு சைலன்டா இருக்கிங்க?? ஹலோ ஹலோ.… ஹலோ… காட் வேலைய கெடுத்துக்கிட்டு இப்போ போனை வைக்கப்போறேன்" என்று போனை எரிச்சலில் அனைக்க போனான் கேஷவ்.

" ம்… ம்…. ம்ஹீம்… "என்று தொண்டையை கனைத்து தன்னை சரிபடுத்திக் கொண்டவள் "ஹலோ…" என்றாள் தடுமாற்றத்துடன்

அவளின் கனைப்பிலையே யார் என்பதை கண்டுக்கொண்டவன் வேண்டுமென்றே அவளை சீண்ட எண்ணம் கொண்டு "ஹலோன்னா யார் நீங்க… ?எதுக்கு போன் பண்ணிங்க..?" என்று அவளை அவசரபடுத்த

"என்னம்மா தம்பி போனை எடுத்தாரா??" என்று ராதா கேட்க இந்த அத்தை வேற கூடவே நின்னு கடுப்படிக்கிறாங்க பெரிய ஜில்லா கலெக்டர் கொஞ்சம் நேரம் கூட வைட் பண்ண முடியாதாக்கும் ரொம்ப பண்றடா நீ என்று பொருமியவள் பற்களை கடித்தபடியே "நா…. நான் கவி பேசுறேன்" என்றாள் ஒரு வழியாக.

ராதாவின் குரலும் சேர்ந்து கேட்டது அவனுக்கு 'வாடி என் அதிரடி ஆட்டோ பாம் என்ன பேச்சி பேசினா இப்போ என்ன வார்த்தை டைப் அடிக்குது வாயி இந்த வாயிதனடி நைட்டு அப்படி பேசினது இப்போ பேசுடி' என்று அருகில் இருக்கும் ராதாதவிடம் மாட்டிக்கொண்டு தன் மனையாள் படும் பாட்டை மனகண் முன் கொண்டு வந்து சிரித்தவன் "கவியா எந்த கவி" என்று சிறிது யோசிப்பவன் போல் மௌனம் சாதித்து "கவின்ற பேர்ல யாரையும் எனக்கு தெரியாது நீங்க எந்த கவி?" என்று அவளின் Bpயை ஏற்றி விட்டு வம்பு இழுத்தான்.

'திமிர் திமிர் உடம்பெல்லாம் திமிர் முஞ்சிய பாரு நல்லா பனைமரம் மாதிரி வளந்து இருக்கான்… நான் யார், என் பெயர் என்னன்னு தெரியாத… வீட்டுக்கு வா மவனே நடு மண்டைல நாலு போட்டு நான் யார்ன்னு தெளிய வைக்கிறேன்.. என்று உள்ளுக்குள் சூளுறைத்தவள் "நான் பார்கவி லாயர் மாணிக்கத்தோட பொண்ணு, நேத்து இந்த நேரத்துல ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டினிங்களே அந்த கவி பார்கவி" என்று வெட்கத்தில் சிவக்க வேண்டிய கன்னங்கள் அவன் மீது இருந்த கோபத்தில் சிவக்க அடக்கிய குரலில் அதே நேரம் சோபாவில் அமர்ந்து காய்களை நறுக்கியபடி இருந்த ராதா கவனிக்கிரார என்று அடிக்கண்ணில் பார்த்தபடியே உக்கிரமாய் வந்து கொட்டியது….

உள்ளூக்குள் அவள் கோவத்தை எண்ணி நகைத்தவன் மேடம் காளிக்கு பார்வட் ஆகிட்டாங்க போல என்று நினைத்தபடியே "ஓ…. உன் பேர் கவி ல சாரி மறந்தேபோயிட்டேன்…| என்று சாதாரணமாக கூறி "சரி லாயர் மகளே… எனக்கு எதுக்கு கால் பண்ணிங்க? இன்னும் நீங்க அந்த விஷயத்தை சொல்லல?" என்று அவளுக்கு நியாபக படுத்த

"அது.. அது.." என்று அவனிடம் தன் தன்மானத்தை விட்டு எப்படி சொல்வது என்று தயங்கி நின்றாள்.

"எது…" என்றான் கேள்வியாக

அவள் இன்னும் எதுவும் பேசாமல் மௌளனாகவே இருக்க காய்களை நறுக்கியபடியே இருந்த ராதா "என்ன கன்னு சொல்லிட்டியா தம்பி என்ன சொன்னாரு?" என கேட்டார்.

ம்….. என்று உள்ளுக்குள் நொந்தவள் நேரம் காலம் தெரியாம போட்டு படுத்துறாங்களே அவரை அந்த பேச்சு பேசிட்டு இப்போ நானே எப்படி வாங்கன்னு சொல்றது என்று கண்களை இறுக்க மூடி திறந்தவள் அழுத்தம் நிறைந்த குரலில் "வீட்டுக்கு சாப்பிட வரீங்களா?" என்றாள் விட்டேத்தியாக

தன் செவிகளை தீண்டிய சொற்கள் அவள் வாயில் இருந்து உதிர்ந்தது தானா நேற்று நைட்டு பேசினவ இவள் தானா என வியப்பில் இருந்தவன் "என்னது என்ன சொன்ன எனக்கு சரியா கேக்கல?" என்று மறுபடியும் சந்தேகமாய் கேட்டான் கேஷவ்.

இன்னும் மைக் வைச்சிதான் சொல்லனும் என்று சலித்தவள் கொண்டவள் "சாப்பிட வாங்க" என்றாள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து

அவள் கூறியதில் அதிசியத்தாலும் அவளிடம் கொண்ட கோவத்தால் "எனக்கு வேலை இருக்கு… நான் வர முடியாது" என்று பட்டென கூறியதும்

கைபேசியை ஒரு முறை எடுத்து பார்தது அதை முறைத்தவள் ராதா தன்னையே பார்த்திருப்பது உறைக்க அவருக்கு வேலை இருக்காம் என்றாள் கடமையாக

ஓ…. என்று மட்டும் கூறி தன் அதிருப்பதியை வெறியிட்டவர் "பாவம் புள்ள பசியா இருக்குமே!!" என்று தனக்கு தானே கூறிக்கொண்டு யோசனை செய்தவர் "சாப்பாடு கொண்டு வரட்டுமான்னு கேளு கன்னு" என்றார் கவியிடம்

அவர் பேசியது எதிர்முனையில் இருந்தவனின் காதில் துள்ளியமாய் விழுந்து அவனை புரையேற வைத்தது 'இவளை தனியா அதுவும் இந்த ஆபீஸ்லயா கடவுளே நடு ரோடுன்னு பாக்காம நார்நார கிழிச்சி தொங்கவிடுவா… இப்போ இந்த இடம்னா அவ பண்ற அலும்பலுக்கு அளவே இல்லாம போயிடும!!… நோ நெவர் அந்த சேன்ஸ் அவளுக்கு தரவே கூடாது… நாமா இப்போ பண்ண வம்புக்கு எல்லார் முன்னாடியும் நாம கொத்து பரோட்டா போட்டுவாளே' என்று மனைவியின் செயலை நினைத்து பீதியானவன் "ஒரு நிமிஷம் நீ என்ன சொன்ன வீட்டுக்கு சாப்பிடதானே கூப்பிட்டே?… வரேன் வந்து சாப்பிடுறேன்.. ஆபீஸ்க்குலாம் வரவேண்டாம்.. நானே வரேன்." என்று கூறி அவளின் பதிலை எதிரபார்க்காது அலைபேசியை அனைத்துவிட்டு ஒரு பைலை புரட்ட ஆரம்பித்தவன் அவள் மேல் கோவம் இருந்தாலும் ஏன் அவளிடமே மனம் வம்பு செய்து அதில் திளைக்க நினைக்கிறது என்ற எண்ணம் மேல் ஓங்கினாலும் அதையெல்லாம் ஆரயாமல் ஒதுக்கி வைத்து தன் வேலைகளை பார்ககலானான்.

அவனின் பதட்டம் நிறைந்த வார்த்தைகள் அவளறியமலையே இதழில் புன்னகை பூக்க வைக்க "சரியான மாங்க" என்று வாய்விட்டு கூறி விட "என்ன கவி மா என்ன சொன்ன" என்றார் ராதா

"அது …. அத்த… அவரே வரேன்னு சொல்லிட்டார்… இன்னைக்கு என்ன சமையல்ன்னு கேட்டார் அதான் மாங்காய் சாம்பார்ன்னு சொன்னேன்." என்று சமாளித்தவள் அவரிடம் இருந்து தப்பித்து அறைக்குள் சென்றுவிட்டாள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நேத்து நேத்துன்னு யோசிச்சி பேசுறாங்களே அப்படி என்னத்தான் நடந்தது நேத்துன்னு வாங்க பார்க்கலாமா….

அந்தி மாலை வேலையில் தோட்டத்தில் மூங்கில் சேரில் அமர்ந்தபடி சித்துவும் கேஷவும் பேசிக்கொண்டு இருக்க அங்கே வந்தார் மாணிக்கம்

"என்ன சுவாரஸ்மா பேசிரிங்க போல??" என்று அவரும் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

"வாங்க மாமா" என்றான் கேஷவ்

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள்" என்றான் சித்து

"கேஷவ் உன் ம்…. அதை திருத்தியவர் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்றார் மாணிக்கம்.

"மாமா என்ன புது மரியாதை நீங்க வாங்கன்னு... உங்களுக்கு நான் எப்பவும் போல உங்க பிரெண்டோட பையன் தான்... நீன்னே சொல்லுங்க" என்று அவரின் தயக்கத்தை போக்கியவன் கூடவே "நானும் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"என்று பிடிகை போட்டான்.

"சரி அங்கிள் நீங்க பேசிக்கிட்டு இருங்க அம்மா கொஞ்சம் வெளியே போகனும்னு சொன்னாங்க நான் போயிட்டு வந்துடுறேன் என்று சித்து எழுந்து கொள்ள சரி என்று இருவரும்.சம்மதமாய் தலையை ஆட்டினர்.

என்ன விஷயம் என்பதாய் கேஷவ் மாணிக்கத்தையே பார்த்திருக்க அது என் பொண்ண பத்திதான் என்று கூறினார்

காலைலருந்து அவளை பத்தியே பேசி பேசி என்னை ஒரு வழி ஆக்குறாங்களே என்று எண்ணம் இருந்தாலும் முகத்தில் அதை காட்டது அமர்ந்திருந்தான் கேஷவ்..

சந்தர்ப்பவசத்தால நீ கவிய கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி ஆகிடுச்சி… உனக்கும் ஆசை, கனவு, வரப்போற பொண்ணுன்னு எவ்வளவோ இருந்திருக்கும். எங்களோட நிலமைய காரணம் காட்டி உன்னை கார்னர் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிட்டான் என் நண்பன். என்று சற்றே இடைவெளி விட்டவர் கவி கொஞ்சம் துடுக்கான பொண்ணுதான் ஆனா சூழ்நிலைய புரிந்து நடந்துக்குவா இந்த கல்யாணத்துக்கு விருப்பமே இல்லாமதான் எங்களோட ஆசைக்காக சம்மதிச்சா… இந்த கல்யாணம் நின்னது எங்களுக்குதான் ஷாக்… இதை காரணம் காட்டியே கலாயாணத்தை வெறுத்துடுவான்னு தான் உன் விருப்பு வெறுப்பு பத்தின கவலை இருந்தாலும் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன் என்னை மன்னிச்சிடு கேஷவ்… என் பொண்ணுக்காக உன்னோட உன்னோட ஆசைய கேட்காம விட்டோம்…" என்று அவர் உணர்ச்சி நிறைந்த குரலில் கூற

அவர் மகளை பற்றி தான் கூற போகிறாறோ என்ற எண்ணத்துடன் கடமைக்காக அமர்ந்திருந்தவன் அவரின் கூற்றில் இருந்த அவளுக்கும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்ற வாசகம் அவன் மனதை ஏனோ குளிரவித்து அடுத்தநொடியே அவரின் பால் மனம் இளகி அவரை தேற்ற எண்ணம் கொண்டு

"மாமா என்ன இது உங்களவிட வயசுல சின்னவன் என்கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்கிரிங்க… எனக்கு கல்யாணம் மேல எல்லாம் அவ்வளவா விருப்பம் இருந்தது இல்லை… இன்பேக்ட் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு கனவுல கூட நினைச்சி பார்த்தது இல்லை அப்படி இருக்கும் போது ஆசை கனவு எல்லாம் எப்படி இருக்கும். சொல்லுங்க… சொல்லபோனா இந்த கல்யாணம் எல்லோருக்கும் சந்தோஷத்தை தான் கொடுத்துருக்கு.. வீணா மனசை போட்டு ஏன் குழப்பிக்கிரிங்க??" என்றான் அவரிடம்

"ரொம்ப தெங்கஸ் கேஷவ்.. அவ சின்ன பொண்ணு" என்று ஆரம்பிக்கவும்

"மாமா நான் பாத்துக்குறேன்".. என்று அவர் வார்த்தையை கத்தரித்து அவருக்கு நம்பிக்ககையை கொடுத்தவன் "நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"

"தாராளமா கேளு கேஷவ்" என்றார் மாணிக்கம்.

"இப்போதான் என் பிரெண்ட் இன்ஸ்பெக்டர் சக்தி போன் பண்ணன்"என்றதும் அவரின் முகம் மாறியது நீங்க ஏதோ மறைக்கிறிங்கன்னு ஆணித்தரமா நம்புறான்… யாரை மாமா காப்பாத்த டிரைபண்றிங்க? என்றான் கேள்வியாக

ம"றைக்கனும்னு இல்லை கேஷவ்…இன்னும் அதுக்கான வேளை வரல என்பதுதான் உண்மை…கண்டிப்பா சொல்றேன் பெரிய பெரிய பணமுதலைகள் சிக்க வாய்ப்பிருக்கு… இப்போ அதை பத்தி மட்டும் கேட்காதிங்க நானே நேரம் வரும்போது எல்லாம் சொல்றேன்".என்று கூறவும்

"சரிங்க மாமா ஆனா உங்களுக்கு எப்போ எந்த உதவினாலும் எங்கிட்டசொல்லுங்க மாமா." என்றான் மறுமகனாய்

நீலநிற ஆகாயம் இருள் எண்ணும் போர்வையை எடுத்து போர்த்திக்கொள்ள இரவும் நெருங்கியது

"மஞ்சு இதை நல்ல திக்க காய்ச்சி குக்குமபூ ஏலாக்கய் எல்லாம் போட்டு வை" என்றபடி ராதா ஒரு பால்பாத்திரத்தை தர

"ராதா அவ முஞ்சை உர்ன்னு தூக்கி வைச்சிருக்கா இப்போ இது தேவையா" என்றார் மஞ்சுளா

"மஞ்சு இது தேவை இல்லையான்னு ஆராய்ச்சி எல்லாம் பண்ணாதே… அவங்க வாழ்க்கை அவங்க எப்பவேனா தொடங்கலாம் அதுவரை நாம விலகி வைக்கனும்னு அவசியம் இல்லை… அவங்க முடிவெடுத்துக்கட்டும்… நாம செய்ய வேண்டிய முறைய செய்யலாம் இப்போ வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயம் இல்லை அவங்க மனசுலயும் எல்லார் போலதான் தனக்கும் திருமணம் நடந்துது இருக்குன்னு எண்ணம் வரனும்" என்றார்.

ராதாவின் கூற்றிலும் உண்மை இருப்பதை மஞ்சுவால் மறுக்கமுடியவில்லை… இனி நடப்பது நாரயணன் செயல் என்ற எண்ணம் கொண்டு மற்ற வேலைகளை பார்க்கலானார் மஞ்சு

கட்டில் முழுவதும் வண்ணமலர்களின் தோரணம் மலர் மஞ்சம், பால், பழம், ஊறுவத்தியின் மணம் என்று ஏகபோகமாய் அறையே தயார் நிலையில் இருக்க தனது லேப்டாப்பில் மெயில் ஐடியை செக் செய்து கொண்டிருந்தான் கேஷவ்.

கதவை திறக்கும் ஓசை கேட்டதும் பார்வையை அவள் புறம் திருப்பாது தடக்தடக்கும் மனதுடன் அமர்ந்திருந்தான்.

இளசந்தனநிறத்தில் மெல்லிய ஜரிகை இட்ட புடவை உடலெங்கும் தழுவி இருக்க, நேர் வகிடு எடுத்து தளர பின்னிய ஜடையில் மனதை கிரங்கடிக்கும் முல்லை பூ வாசம், காதில் குடையாய் கல்பதித்த ஜிமிக்கி, நானெறிய வில்லாய் இருந்த புருவங்களின் மத்தியில் சிறு கல்பதித்த சிவப்பு பொட்டு, மான் விழிகளில் மையெழுதி, ரோஜாவாய் மலர்நிதிருந்த இதழ்கள், வெண்சங்காய் இருந்த கழுத்தில் அணிந்த ஆபரணங்கள் அவளை வசிகரமாய் காட்ட மெல்ல நடந்து வந்தவள் மனதில் கலக்கம் சுழ்ந்து கொண்டது…

'பரிதபப்பட்டு பிச்சை போட்டது போல இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்துட்டியே ஆண்டவா!!!..' என்று நிந்தித்து கொண்டிருந்தவள் அவனிடம் தெளிவாய் பேசிவிடுவது என்று நினைத்துதான் அறைக்குள்ளே நுழைந்தாள்.

தனி அறை அவன் என்ன வேண்டுமாலும் செய்யாலாம் என்ற பயம் ஒரு புறம் நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற தைரியம் ஒருபுறமுமாய் இருபுறமும் ஊசலாடும் மனதுடன் அவனுக்கு முன்னால் போய் நின்றாள்..
 

Author: yuvanika
Article Title: part 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN