part 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வானத்தின் முழுமதியாய், அன்றலர்ந்த புதுமலராய் நின்றிருக்க, கன்னி அவள் கண்மணிகள் இரண்டும் காந்தமாய் ஈர்க்க, தலையில் சூடிய முல்லைப் பூவின் மணமோ மனதை புது சூழலுக்கு அழைத்துச் செல்ல அவள் அணிந்திருந்த மெட்டியின் ஓசை காற்றில் மிதந்து வர, தென்றல் காற்றினிலே அசைந்தாடும் அல்லிக்கொடி போல சிரம் தாழ்த்தி கைகள் சில்லிட நடுக்கம் கொண்ட மனதுடன் அன்ன நடை பயின்று வந்தவள் அவன் அமர்ந்திருக்கும் மெத்தையின் எதிர்புறம் வந்து நின்றாள்.

அவள் அறையில் நுழைந்ததுமே தலையில் சூடியிருந்த மலரின் வாசமும் அவள் அணிந்திருந்த மெட்டியின் ஓசையிலும் கேஷவின் மனதில் புது விதமான உணர்வுகள் குடியேறியது. கவியின் தந்தை கூறிய அவளுக்கும் இந்த திருமணத்திலும் அந்த மாப்பிள்ளையின் மீதும் பெரியதாக எந்த அபிப்ராயம் இல்லை என்பதே அவன் மனம் மாற போதுமனதாய் இருக்க இன்றைய நாளை நினைத்து சிறு ஆர்வம் கூட வந்தது அவனுக்கு, கவி வந்ததன் அறிகுறிகள் தெரிந்தாலும் அவள் புறம் தலை உயர்த்தாது முகம் பாராது அவள் அருகாமையிலே ஏற்படும் மாற்றத்தினின் காரணம் உணர்ந்து தறிகெட்டு ஓடும் மனதினை அமைதியின் பிடியில் அடக்கியபடி தனது கணினியில் பார்வையை தவழ விட்டு கட்டுக்கோப்பாய் அமர்ந்திருந்தான் கேஷவ்.

ம்….க்கூம் என்று கனைத்து அவன் திரும்புவான் என்று எதிரிபார்த்து நின்றிருந்தாள் அவன் மணவாட்டி. அவளின் கனைப்பில் தன் நிலை திரும்பியவன் அவளின் தோரனையிலையே அவளின் மனதினை படித்தவன் "வந்துட்டா ஆட்டோ பாம் அல்லி ராணி இப்போ என்ன பண்ண போறாளோ" என்று நினைத்தவன் ஏதோ ஏழறையை இழுக்க உள்ளாள் என்று மட்டும் அறிந்து மறந்தும் அவளை பாராது அமர்ந்திருந்தான்.

கேஷவ் அவளை பார்க்காமல் அமர்ந்திருந்ததை அவன் தன்னை அலச்சியபடுத்துவதாய் எண்ணியவள் 'கேடி கேடி…. காது ரெண்டும் டாமாரமா ஆகிடுச்சா…. சை…. எவ்வளவு நேரம் இப்படியே நிற்பது நிமிர்ந்து பாக்குரானா பாரு வளர்ந்து கெட்டவன்.'

என்று பொறுமியவள் வேண்டுமேன்றே அவனின் சிந்தனையை கலைக்க எண்ணி கையில் இருந்த பால் சொம்பை எடுத்து தரையில் பொத்தென்று போட அது தரைக்கு போவதற்குள் அவளையே உன்றி கவனித்திருந்தவன் அவள் சின்ன அசைவையும் வைத்து யூகித்தவன் திடுமென கை நீட்டி கீழே விழ இருந்த பால் சொம்பை பிடித்து சிதறிய துளிகள் தரையில் இருக்க சொம்பில் இருந்த மொத்த பாலையும் குடித்து முடித்து பக்கத்தில் வைத்தவன் இவ்வளவு தானா இன்னும் இருக்கிறதா என்ற பாவனை தாங்கி, அருகில் அவர்களுக்காக வைத்து இருந்த பழத்தில் ஒன்றை எடுத்து லேப்டாப்பை பார்த்த படியே கடித்தான். பார்வை என்னவோ கணினி திரையில் தான் பதிர்ந்திருந்தது ஆனால் அவன் கவனம் முழுதும் தன் சரிபாதி ஆனவளின் மீது படிந்திருந்தது.

அவளிடம் என்ன என்று கேட்பான் என்ற எண்ணத்தில் தான் இந்த வேலையே செய்தாள் ஆனால் அவனோ நீ என்ன வேண்டுமானாலும் செய் நான் இப்படித்தான் என்று இருக்கவே அவன் செய்கையில் சுறுசுறுவென கோவம் ஏற அவன் தன்னை அவமதிக்கிறான் என்ற எண்ணத்தில் அவனின் பக்கத்தில் வந்தவள் பழத்தினை பிடிங்கி தூர எறிந்து அவளை பார்க்க வேண்டும் என்று அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்…

பழத்தினை பிடிங்கி எறிந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவள் கோபம் முகம் கண்டு மனதில் ஏதோ ஒரு தாக்கம் அவள் ஆரஞ்சு சுளை இதழ்கள் கோவத்தில் துடிப்பதையும் மெல்ல அவன் மேல் உள்ள ஆத்திரத்தில் அதை கடிப்பதையும் பார்த்தவன் அவளின் அல்லி இதழ்களை சுவைக்க ஆவல் கொண்ட போதும் அவளின் கண்கள் காட்டிய கனலில் கொவ்வை பழமாய் சிவந்த கண்கள் பேசிய மொழியை அறிந்தவன் இவ இருக்க சூடுக்கு நம்மல பொசிக்கிடுவா போல ஏன் இப்படி ருத்ரதாண்டவம் ஆடுறா என்று நினைத்தவன் "உனக்கு என்ன பிரச்சனை ஹ…. ??? இப்போ என்ன பிரச்சனை??? எதுக்கு இப்படி ரியக்ட் பண்ணி கண்ணை உருட்டி உருட்டி பக்குறா?"என்றான் கட்டிலில் இருந்து சாவகசமாய் எழுந்து நின்று

"எனக்கு என்ன பிரச்சனை.…. நீதான் நீதான் எனக்கு முதல் பிரச்சனை" என்றவள் முக்கு நுனி விடைக்க "எனக்கு இருக்க பிரச்சனையே நீதான்" என்றாள். அவன் சட்டையையின் இரு பக்கமும் பிடித்து

அவளை புரியாத பாவனையில் பார்த்தவன் அவளின் இருக்கரங்களையும் சட்டையில் இருந்து எடுத்துக்கொண்டே "எனக்கு புரியல நான் உனக்கு பிரச்சனையா எந்த விதத்துல நான் உனக்கு பிரச்சனை" என்றான் கேள்வியோடு

அவனின் கைகளில் இருந்து கைகளை உறுவியபடி "ஆமா….. ஆமா……" என்று கத்தியவள் "நீதான் பிரச்சனை எதுக்கு என்னை கல்யாணம் பண்ண கல்யாணம் பண்ண சொல்லி கேட்டாங்கல்ல… புடிக்கலன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே… எதுக்கு எதுக்குடா என்னை கல்யாணம் பண்ண????" என்று அவனின் முன் நின்னு கண்கள் சிவக்க கேள்வி கேட்டவள் அவனை மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்க முறைத்தாள்.

'என்னது டா வா' என்று அதிர்ந்தவன் என்ன இவள் கல்யாணமேடையில் ஆயிரம் பேர் மத்தியில் வைத்துதானே அவளிடமும் சம்மதம் கேட்டு இந்த திருமணம் நடைபெற்றது இப்போழுது மொத்த பழியையும் என் தலைமேலே தூக்கி போடுகிறாளே என்று நினைக்க மனதிலிருப்பதே வார்ததைகளாக உருபெற "என்ன டி விட்டா பேசிகிட்டே போற?!?! உன்னை வலுக்கட்டாயமவா பந்தல்ல உக்கார வைச்சா தாலி கட்டினேன்??? உன்கிட்டயும் தானே இந்த கேள்வியை கேட்டாங்க இவனை கட்டிக்க சம்மதமான்னு…." என்று அவனும் அவளின் கைகளை பிடித்து வேகமாய் அவன் புறம் திருப்பி அவன் முகம் பார்க்க வைத்தான்.

அவனிடம் இருந்து திமிறி கைகளை வலுக்கட்டாயமாக தன் கைகளை இழுத்து கொண்டவள் "யூ…யூ… சீட்… இடியட் விடு என்னை விடு நான்சென்ஸ் என்னை தொட்டா அவ்வளவு தான்… என்ன செய்வேன்னே தெரியாது… விடு என்னை விடு…" என்று அவனிடம் இருந்து விலகினாள்

அதுவரை அவளிடம் வம்பு இழுத்துக் கொண்டு சுவாரசியமாய் அவளின் கோபத்தை வேடிக்கை பார்த்தவன் அவளை தொட்டதும் அவளிடம் ஏற்பட்ட சீற்றத்தில் கேஷவின் முகம் இறுகியது. அவளை பிடித்தவன் கைகள் அவளை தீயை தீண்டீனார் போல சட்டேன பின்வாங்கியது…

"அது மட்டும் தான் நீ பண்ணல உன்னை யாரு கேட்டவுடனே சரின்னு சொல்லி தலையாட்ட சொன்னது. என்னால தாலி கட்ட முடியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே" என்றாள் ஆத்திரத்துடன் "பெரிய தியாகி மாதிரி இத்தனை பேர் முன்னாடி சீன் போட்டுக்கத்தானே என்னை கல்யாணம் பண்ணி என வாழ்க்கையே நாசமாக்கின… உன்னை எனக்கு புடிக்கவே புடிக்காது… உன்னை என் அடி மனசுல இருந்து வெறுக்கிறேன்… ஐ ஹேட் யூ…. ஐ ஹேட் யூ..." என்று கத்தியவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

கோபத்தின் எல்லையில் இருந்தவன் கண்கள் மூடி ஒரு நிமிடம் மௌனம் காத்தான். அவனின் எல்லையில்லா கோபம் எத்தனை பெரிய ஆறாத வலிகளின் ரணங்களை கொடுத்துள்ளது என்று உணர்ந்தவன். அவளிடம் வாக்குவாதம் செய்து இன்னும் பெரிய பிரச்சனைகளுக்கு காரணியாய் அமைந்து விட கூடாது என்ற எண்ணத்தில்
அவளிடம் இருந்து விலகி சோபாவில் படுத்துக்கொண்டான்.

அவன் தன்னிடம் சண்டையிடுவான் கோபப்படுவான் என்று எதிர்பார்த்தவள் சட்டென அவன் கண்களை மூடி ஆழ மூச்செடுத்து சோபாவில் சென்று படுத்துக்கொண்டதும். ஒரு நிமிடம் நாம் இப்படி நடந்து கொண்டிருக்க கூடாதோ என்று நினைத்தவள், அடுத்த நிமிடமே அவன் எப்படி என்னை தொடலாம் என் கழுத்தில் தாலி கட்டலாம் என்று அவள் மனம் வீம்பு பிடித்தது.

"ஏன் உன்னை என்ன கை கால் கட்டியா மணவறையில் உட்கார வைச்சி இருந்தாங்க… நல்ல திடமா கல்லு கணக்கா தான இருந்த.. உங்க அம்மா மயக்கம் போட்டவுடனே அவன் கூனோ குருடோன்னு கூட பாக்கமா அவன் தான் மாப்பிள்ளைன்னு கைய நீட்டினவுடனே அவன்கூட மணவறையில உட்காந்தல… அவன் என்னமோ உன்னை புடிச்சிபோய் நீதான் வேனுமுன்னு அடம்பிடிச்சி உருகி உருகி தாலி கட்டினா மாதிரி பேசுறா?"என்று அவன் கேட்டே அதே கேள்வி அவளின் மனசாட்சி அவளை பார்த்து கேட்க

"பாதிக்கப்பட்டவ நானு நான் எப்படி கல்யாணம் வேண்டாம்னு சொல்ல முடியும்?!?!… அவன் சொல்லி எழுந்திரிச்சி இருக்கலாம் ல…" என்று அவள் தரப்பு நியாம் பேசி தன்மனதினை சமாதனபடுத்த முயன்றாள்.

"முடிஞ்சுது முடிஞ்சி போச்சி இனி பேசி பயன் இல்ல இதுதான் விதிச்சது இப்படியே இருந்து பழகிக்கோ… அவன் என்ன சொல்ல வந்தானோ ஆத்திரத்துல கண்டதையும் பேசி அவனையும் கோபபட வைச்சிட்ட" என்று மனசாட்சி அவளை இடித்துறைக்க

"சீ வாய மூடு…. வந்ததுலிருந்து அவனுக்கே சப்போர்ட் பண்ணிக்கிட்டு.. இங்க ஒருத்தி கிடந்து நரகவேதனைய அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு சமாதனம் சொல்ல துப்பு இல்ல அவனுக்கு கூஜா தூக்கர!?!"….என்று அதை தட்டிவைத்தவள் அவளும் சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள் புரண்டு புரண்டு படுக்க தூக்கம் தான் வருவேனா என்று அடம் பிடித்தது. வெகுநேரம் முழித்து இருந்தவள் பின் இரவில் கண் அயர்ந்தாள்.

மறுநாள் காலை அவளின் விழிப்புக்கு முன் எழுந்து தயாரகியவன் அவளின் புறம் கூட பார்வையை பதிக்காமல் அவனின் வேலை ஒன்றிலேயே குறியாய் இருந்தவன். மடிகணினியுடன் சோபாவில் தன் அலுவலக பணியினை துவங்கி விட்டான். அவள் எழாமல் வெளியே சென்றால், அனைவரின் பார்வையும் தன் மேல் விழும் என்பதால் அறையிலையே இருந்துவிட்டான் கேஷவ்.

பின்னிரவின் தூங்கியதின் பலனாக சற்று தாமதமாகவே கண்விழித்தவள் மெத்தையின் புரண்டு படுக்க அறையின் கோடியில் தன்வேலையே கண்ணாய் இருக்கும் மணாளனின் முதுகுப்புறம் தான் தெரிந்தது. அலங்கரிக்கப்பட்ட கட்டில், மெத்தையில் கசங்கிய பூ,எதிரில் மிடுக்காய் அமர்ந்திருந்தவன், என அனைத்தையும் மாறி மாறி பார்த்தவளின் இதயம் பந்தயகுதிரைக்கு நிகராய் ஒட்டமாய் ஓடியது… சுவர் கடிகாரம் 7.30 என காட்ட மெத்தையில் இருந்து இறங்கியவள் அவன் பார்வையில் படாமல் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
…………………..…….………………….……………………………….

தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களை பறிப்பதாய் கூறி வந்த தியா காலையில் இருந்து அவள் கண்களுக்குள் சிக்காமல் கண்ணாமூச்சி ஆடும் சித்துவின் நினைவில் நின்றிருந்தாள். எங்க போயிட்டான் காலைல இருந்து தேடுறேன் எங்கயும் காணும் ஒருவேள எனக்கு பயந்து ஊரை விட்டு ஓடிட்டானோ மவனே அப்படியெல்லாம் என்னை விட்டு ஓடி போக முடியாது டா ஏழு மலை ஏழு கடல் தாண்டி போனாலும் அங்கயும் வந்து உன்னை கட்டி இழுத்துட்டு வருவேன்டா என் அத்தை பெத்த ரத்தினமே என்று உள்ளுக்குள் சூளுறைத்தவள் அவளின் வார்த்தைகளிலே புன்னகை மிளிற நேற்று அவனிடத்தில் தன் காதலை சொல்லிய தருணத்தை நினைத்திருந்தாள்.

கவியை அலங்காரம் செய்துகொண்டிருந்த ராதா மஞ்சுவிடம் "சீக்கிரமே சித்துக்கு கூட நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிடனும்" என்று கூற

அதற்கு சிரித்த மஞ்சு "சொந்தத்துல ஏதாவது பொண்ணு பாத்து வைச்சி இருக்கியா ராதா"

"நீ வேற மஞ்சு அவரை காதலிச்சி கல்யாணம் பண்ணி வந்ததுதான்… அதன் பின் அவர்வீட்டு சைடும் சரி என் வீட்டு சைடும் சரி எங்களுக்கு பேச்சி வார்ததையே இல்லை நாங்க ஒரே சமூகமா இருந்தாலும் ஏழை பணக்காரம் வித்தியசம் வைச்சி என்னையும் அவரையும் அப்பவே சேத்துக்கல… நாங்களே தனியா ஒதுங்கிட்டோம் நீங்களாலம் தான் எங்க சொந்தம்… "என்றவர் இந்த மாதிரி கல்யாணம்லாம் பாக்குற போது நாங்க அனுபவிக்காத எல்லாத்தையும் சந்தோசத்தையும் அவனுக்கு கொடுத்து அதுல சந்தோஷபட நினைக்கிறோம் மஞ்சு வேற ஒன்னும் இல்ல" என்று கண் கலங்க

அவருக்கு ஆதாரவாய் தோள்கொடுத்த மஞ்சு "சீக்கிரமே ஒரு நல்லது நடக்கும் ராதா கவலைப்படாத" என்று தெம்பு கொடுத்தார் அக்காவின் பக்கத்தில் அவளுக்கு துணையாய் அமர்ந்திருந்த தியாவின் முகம் தான் ஒரு வண்டி சோகத்தில் முக்கியது போல் வாடி போய் இருந்தது.

இந்த மாதிரி கவிக்கு அலங்காரம் பண்ணும் போது சித்துக்கும் கல்யாணம் ஆகி அவன் பொண்டாட்டிக்கும் அலங்காரம் செய்யனும்னு ஆசையா இருக்கு மஞ்சு என்று சிரித்தபடி கூற

அவருக்கு அருகில் இருந்த தியாவிற்க்குதான் வயிற்றில் புளியை கரைத்தால் போல் ஆகியது 'அத்தை ஏன் நீங்க இப்படி பண்றிங்க??? அடிக்கடி என் வாழ்க்கையில் அனுகுண்டை தூக்கி போடுறதையே பாலிசியா வைச்சி இருக்கீங்களா முடியல….. இன்னும் இரண்டு வருஷத்துக்கு அப்புறம் தான் அவனுக்கு பொண்ணு பார்ப்பேன்னு சொல்லி இருக்கலாம்ல…. படிக்கிற பொண்ணு நான் படிப்ப பார்ப்பேனா!?!… இல்ல உங்க மக்கு மடசாம்பிராணி மகனை கரெக்ட் பண்ண பார்ப்பேனா!?!…. எனக்கும் டைம் கொடுக்கனும்ல அந்த மரமண்டைக்கு நான் எவ்வளவு சிக்னல் காட்டினாலும் புரியாது… என்னை பச்சை புள்ளைய பாக்குறது போலவே பாக்குறான்… அவனை மடக்கி என் வழிக்கு கொண்டு வரத்துக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்கே….' என்று தன் எண்ணத்தின் போக்கில் இருந்தவள் அதை 'இப்படியே விட கூடாது இன்னைக்கு பிள்ளையார் சுழி போடுவோம்' என்று யாருக்கும் தெரியாமல் அவனிருக்கும் இடத்தினை அறிந்து கொண்டவள் அவனை மொட்டை மாடிக்கு வர சொல்லி இவளும் சென்றாள்.

மொட்டை மாடியின் கைபிடி சுவரை இருகைகளால் பற்றியபடி தியா எதற்காக அழைத்தாள் என்று யோசனையுடன் காத்து இருந்தவன் அவ்வளவு என்ன அவசரம் அதும் யாருக்கும் தெரியாம இந்த நேரத்துல இங்க நின்னு பேச என்ன அவசியம் என்று யோசித்து யோசித்து அவனுக்கு மூளை குழம்பியதுதான் மிச்சம் அவன் சட்டை பையில் இருந்த அலைபேசி ஓசை எழுப்ப அதை எடுத்து சுவைப் செய்து காதில் பொருத்தியவன்

"சொல்லு மாச்சா…. என்னடா இந்த நேரத்துல..??!?."

"ஒன்னுமில்ல மாப்புள காலை ஓரே கலேபரமா இருந்துச்சே அதான் அங்க எப்படி சகஜ நிலைக்கு வந்தாச்சா" என்று விசாரிக்க

"ம் ஏதோ பரவாயில்லை டா… ஆனா கவிதான் கொஞ்சம் டிஸ்டரப்பா இருக்கா…" என்று கூற

"ஆமா டா விலகி பாத்துட்டு இருந்த நமக்கே ஒரு திரில்லர் மூவி பார்த்த மாதிரி இருக்கு… இதுல கிடநாப் ,ஆள் மாறட்டாம், கல்யாணத்துல கலவரம்ன்னு ரொம்ப படுத்திடுச்சி டா… அன்ட் இப்போ நம்ம பாஸ் எப்படி இருக்காரு" என்று கேஷவினை பற்றி விசாரிக்க

"ம் நல்லா இருக்காரு டா… நல்ல பிரெண்ட்லியா பேசுராரு… நல்ல டைப்பா தெரியுது… கவிக்கு ஆப்டான பர்சனாதான் எனக்கு தெரியுது" என்று கூறினான்.

"சரி மச்சி… ரொம்ப சந்தோஷம் கடவுள் போட்ட முடிச்சி இப்படிதான் நடக்கனும்னு இருக்க யாரல மாத்த முடியும்" என்று கோபி கூற

"என்ன மாப்புள தத்துவம்ல பேசுற… மழை வரப்போகுது" என்று அவனை கலாய்க

"ஹீ.. ஹீ... ஜோக்கா சிரிச்சிட்டேன் இனி சொல்லும் போது என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு உசார இருக்கேன்…" என்று இவனை காலை வாரிக்கொண்டிருக்கும் போதே மேலே வந்தவள் கைகள் சில்லிட இரண்டு கைவிரல்களையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிசைந்தபடி வந்தவள் அவன் திரும்பி இருக்க இது வேலைக்கு ஆகாது நாம் சொல்லிடனும் என்று மனதில் மந்திரம் போல் ஜபித்தவள்
ம்கூம் க்கூம் என்று தொண்டையை சரிபடுத்தி எச்சில் விழங்கி " உன் கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள்.

அலைபேசியின் மறுபக்கம் இருந்தவன் "யாரு மச்சி இந்த நேரத்துல???… அந்த அறுந்த வாலோட குரல் மாதிரி இருக்கு.." என்று கேட்க

"ம் ஆமா டா…" என்றபடியே திரும்பி போனை பிடித்தபடி நிற்க

அவனை பார்த்தும் அவளுக்கு தைரியம் வர கண்களால் யாரு என்று கேட்க "கோபி "என்று பதிலலித்தான் சித்து.

"அந்த எருமைக்கு நேரம் காலமே கிடையாது… நீ ஊர்ல இருந்து வந்தவுடனே தான் அந்த குரங்க பாக்க போற இல்ல… நைட்டுல கூட விடாம புடிச்சி தொங்கிட்டு இருக்குமா??"என்று அவன் காதுபட பேச

"மச்சி பேயி பேயி ஒன்று கேள்வி பட்டி இருக்கேன் அத அவ ரூபத்துல தான்டா பாக்கலாம்... மச்சி நான் காலைல பேசிறேன். இன்னும் லைன்ல இருந்தா என் குடும்பத்தை போன்லையே கிழிச்சி நார் நாரா தொங்க விடுவா வைக்கிறேன் டா" என்றவன் போனை அணைத்தான்.

"என்ன வது?? …. என்ன பேசனும்???..அதுவும் இவ்வளவு அவசரமா பேச வேண்டிய விஷயம் என்ன??" என்று கேட்க

"நீ லவ் பத்தி என்ன நினைக்கிற சித்து?"

"இதை கேக்கத்தான் இவ்வளவு அவசரமா வர சொன்னையா" என்றான் எரிச்சல் மேலிட

" முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில்"

"இதுல நினைக்க என்ன இருக்கு வது…. அது ஒரு பிலிங்கஸ் "

"அவ்வளவுதானா"

"வேற என்ன சொல்லனும்னு நினைக்கிற… இப்ப அதை பத்தி பேச என்ன அவசியம்" என்று கேள்வி கேட்க

"நான் ஒருத்தர லவ் பண்றேன்". என்று கூறவும் அதிர்ந்து போய் தியாவை பார்த்தவன்.

" என்ன தியா நீ சின்ன பொண்ணு உனக்கு ஏன் இப்படியெல்லாம் நினைப்பு போச்சி நீ இன்னும் படிக்கிற பொண்ணு… அங்கிள நினைச்சி பாத்தியா ஆண்டிய தான் நினைச்சியா அவங்க இதுக்கு கட்டாயம் ஒத்துப்பாங்களா ?? அந்த பையன் யாரு?? எந்த ஊரு ??என்ன பண்றான்?? என்று அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க

எதற்கும் அசராமல் இருந்தவள் "அவங்க எல்லாம் நினைக்கறது இருக்கட்டும்… நீ என்ன நினைக்கிற?" என்று கேட்க

"விவரம் தெரியாத சின்ன பொண்ணு மனச கெடுத்து இருக்கானே அவனை தான் போட்டு துவைச்சி எடுக்கனும்னு நினைக்கிறேன்" என்றதும்

"சித்து நான் லவ் பண்ற ஆள் யாருன்னு சொல்லவே இல்லையே "

"அதைதான் இவ்வளவு நேரமா கேக்குறேன்… சொல்லு…"

அவள் தன் கண்களை கைகாட்டி "இந்த கண்ணுக்குள்ள தான் அவரோட மொத்த உருவமும் இருக்கு என் கண்ணை நல்ல பாருங்க அவரு தெரிவாறு" என்று கூற

"ஸ்பா….. நீ நிறைய படம் பார்க்குறன்னு நல்லா தெரியுது... முதல்ல இந்த டைலாக்ஸ் விடுறதையெல்லாம் நிறுத்து... முதல்ல யார லவ் பண்ற அதை சொல்லு?" என்று அவளை திட்ட

அதில் சுணக்கம் கொண்டவள் அவள் கை விரல்களை ஒவ்வொன்றாய் மடக்கி ஆட்காட்டி விரலை அவன் புறம் திருப்ப நானா என்று வாயசைவில் கேட்டவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் சிலையாய் நின்றான்.

"ஹே…. ஹே….. ஹே… சித்து இங்க பாரு என்னடா இது இப்படி சிலை மாதிரி நிக்குற… டேய் என்ன பாருடா.. ".என்று.அவனை போட்டு உளுக்கவும் சுயநினைவு வந்தவன். "ஹேய் என்ன சொல்ற நீ ??"என்று நம்பாமல் அவளையே மறுமுறை கேட்டான்.

"நீ எத்தனை தரம் கேட்டாலும் என் பதில் இதுதான்.. நான் உன்னை தான் காதலிக்கிறேன் நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக்கனும்" என்றாள் திடமாக

"ஹேய் அறிவு இருக்கா உனக்கு…?!?! உன் வயசு என்ன?… என் வயசு என்ன… நீ இன்னும் சின்ன பொண்ணு உன் ஸ்டடிஸ் கூட இன்னும் முடிக்கல" என்று ஆத்திரத்தில் கத்தினான் சித்து.

"ஏன் உனக்கு கொஞ்சம் வேணுமா?…. என்று அவனை எதிர் கேள்வி கேட்டவள். "எல்லாம் எனக்கு லவ் பண்ற வயசுதான்.. என் காலேஜ்ல அவளவளுங்க எப்படி இருக்காங்க தெரியுமா??? நான் உன்னையே நெனச்சிக்கிட்டு எனக்கு வந்த எத்தனையோ பிரப்போசல்களை தூக்கி எரிஞ்சிருக்கேன் தெரியுமா???" என்று அவனிடம் தன்னை நிரூபீக்க அழுத்தமாக கூற

"அறைஞ்சேன் பல்லு முப்பத்திரெண்டும் கீழ விழுந்துடும்.. என்ன பேச்சி பேசுற??" என்று பற்களை கடித்தவன் "!உனக்கு எப்படி சொல்லி புரியவைக்க என்று தனக்கு தானே பேசியபடி அவளின் பக்கத்தில் சென்றவன் "வதுமா இங்க பாரேன்… என்னை பாரேன்". எனவும் எங்கையோ வெறித்தபடி இருந்தவள் அவன் முகம் பார்த்தாள்.

கண்களில் நீர் திரண்டு இருக்க இப்பவோ அப்பவோ கிழே விழவேன் என்றபடி இருந்தது "வது மா நீ இன்னும் சின்ன பொண்ணு டா.உன்னை நான் அந்த மாதிரி கண்ணோட்டத்துல பாத்தது இல்லடா சொன்னா புரிஞ்சிக்க கண்மணி" என்று ஆதுரமாய் கூற

அவனிடம் இருந்து விலகியவள் "நான் இன்னும் சின்னா பொண்ணா?… உன் நொல்ல கண்ணுக்கு மட்டும் தான் நான் அப்படி தெரிஞ்சி இருக்கேன். முண்டம் முண்டம் உனக்கும் எனக்கும் மிஞ்சி போனா 6வயசு தான்டா வித்தியாசம் நீ என்னை வயசு கம்மி கம்மி சொல்ற அப்போ உன்னை விட வயசுல பெரிய பொண்ணா இருந்தா தான் கட்டிப்பியா?…" என்று காட்டாமாய் கேட்டவள் அவனின் சட்டை காலரை பற்றி அருகில் இழுத்து நானும் இன்னும் இரெண்டு வருசம் போகட்டும் அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன் ஆனா உன் கல்யாணப் பேச்சை ஆண்டி எடுக்கவும் தான் இப்போ சொல்றேன் ஆண்டி கூப்புறாங்க ஆட்டுக்குட்டி குப்புடுறாங்கன்னு எந்த பொண்ணையாவது பாக்க போன உன் கண்ணை நோண்டி காக்காவுக்கு போட்டுடுவேன் என்ன புரிஞ்சிதா என்னைக்கு இருந்தாலும் நீ தான் எனக்கு புருசன் நான் தான் உன் பொண்டாட்டி" என்று அழுத்தமாக அவன் கன்னத்தில் ஒரு அச்சாரத்தை பதித்தவள் அங்கிருந்து சிட்டாய் பறந்து விட்டாள்.

அவளின் செய்கையில் ஒரு நிமிடம் விழித்தவன் தன்நிலைபெற குழுப்பத்துடன் நின்றிருந்தான் சித்தார்த்.

"தியா…. தியா……" என்று மஞ்சு அழைக்க

"இதோ வந்துட்டேன் மா… இன்னும் கொஞ்சம் இருக்கு" என்று கூறியபடியே தியா ஸ்டுலின் மேல் ஏறி மல்லி கொடியில் இருந்த பூக்களை பறிக்க நாற்காலியின் கால் அங்கிருந்த கற்களின் மேல் தள்ளுமுள்ளாய் ஆடிக்கொண்டிருக்க கொடிகளை பற்றியபடியே பூக்களை பறித்துக் கொண்டிருந்தவள் கைகளில் ஏதோ சுருக்கென்று குத்த ஆ.. என்று பந்தலில் இருந்து கையை எடுக்கவும் நிலை தடுமாறி விழ இருந்தவளின் கைகளை பிடித்து சரியாக நிறக்க வைத்தான் சித்து.

அவளின் அழகான் முத்து பல் வரிசைகள் தெரிய முல்லை பூவாய் சிரித்தவள் "டேங்ஸ் சொல்லுவேன்னு எதிர்பாக்காதிங்க இது உங்க கடமை… என்னை காலம்பூரா வைச்சி காப்பாத்த போறவரு இப்பத்துல இருந்தே தொடங்கிட்டிங்க மாமா…" என்று கூறியவள் வெட்கப்பட்டபட அவளை முறைத்து பார்க்கவும் "அப்படி பார்க்கதிங்க மாமா" என்று அவனின் கன்னைத்தை திருப்பி விட்டவளின் கையை அவன் தட்டிவிட சிந்துவை பார்த்து கண் அடித்தபடியே வீட்டிற்க்குள் நுழைந்துவிட்டாள் தியா.

'முடியலடா சாமி ஏன் இப்படி போட்டு வாட்டுறா' என்று எண்ணம் தோன்றி அவனை வாட்ட அப்படியே பக்கத்தில் இருந்த கருங்கல் பெஞ்சில் அமர்ந்துவிட்டான் சித்து.
 

Author: yuvanika
Article Title: part 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN