பகுதி 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"அண்ணி சூடா ஒரு கப் காபி, ஸ்டாங்க வேணும்" என்றபடி சமயலறை மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான் கண்ணன். பக்கத்தில் இருந்த காய்கறிகளை தூக்கி போட்டு பிடித்தபடி விளையாடிக் கொண்டிருந்தான்.

என்றும் இல்லாத திருநாளாய் அவன் சந்தோஷமாக இருக்க அவனின் புன்னகை அவளையும் தொற்றிக்கொள்ள அவனிடம் சற்று இயல்பாக ஷீலா பேசுவது இதுதான் முதல் முறை "என்ன கண்ணன் இன்னைக்கு செம ஜாலி பீல்ல இருக்கிங்க போல... வர சொல்லவே முகம் பிரகாசமா இருக்கு" என்று ராஜீவின் தம்பியிடம் விசாரணை நடந்திக்கொண்டே காபியை கலக்கி கொண்டிருந்தாள்....

"இந்த வருஷம் காலேஜ் முடிஞ்சதும் டெல்லில இருக்க பேமஸ் காலேஜ் ல மாஸ்டர் டிகிர பண்ணலாமுன்னு பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அப்ளை பண்ணி இருக்கோம் அண்ணி... அதான் கொஞ்சம் எக்சைட்மெண்ட்டா இருக்கு... ரொம்ப ஹெப்பியாவும் இருக்கு... சரி உங்களுக்கும் இந்த இயர் படிப்பு முடியுது இல்லையா நீங்க என்ன பண்ணலாமுன்னு இருக்கிங்க"

"கொஞச் நாள் வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன் கண்ணன்.. வீட்டில் வேலை நேரம் போக சும்மாதான் இருக்க போறேன் அதான்" என்று அவள் விளக்கம் தந்தாள்.

"சூப்பர் அண்ணி நல்ல வேலையா சூஸ் பண்ணுங்க" என்றபடி அவள் கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு குடிக்க போனான். "அமுதா அமுதா" என்று வாசலில் இருந்து குரல் வர யார் என்று பார்க்க ஷீலா செல்ல எத்தனித்தவளை "நீங்க வேலைய கண்டீன்யூ பண்ணுங்க அண்ணி நான் போய் பாக்குறேன்" என்றான் கண்ணன்.

கதவை திறந்ததும் "என்னடா அம்பி உங்க அம்மா எங்கடா' என்றபடி பத்து வீடு தள்ளி இருக்கும் அம்பூஜம் மாமி வந்து நின்றிருந்தாள்.

"அது வந்து மாமி" இருக்காங்கன்னு சொல்லலாமா இல்லன்னு சொல்லலாமா இது ஒரு லொடலொடா மாமி எதுக்கு வம்பு இல்லேன்னு சொல்லுவோம் என்று மனதில் கணக்கு போட்டு ஆராய்ந்தவன் "அம்மா வெளியே போயிருக்காங்க மாமி நைட்டுதான் வருவாங்க நான் வேனா அம்மாகிட்ட சொல்லி நாளைக்கு வரசொல்றேன்" என்று கூறி அவரின் பதிலை எதிர் பாக்கமலேயே கதவை அடைக்க போனான்.

அவன் கூற கூற அவரின் முகம் மாறி கொஞ்சம் முறைப்பாகவே "ஒஹோ... அப்படியா... அப்போ அது யாருடா அம்பி உங்க ஆத்து குளோனிங்கா?!" என்று அவனை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த அம்பூஜ மாமி பின்கட்டில் இருந்து உள்ளே வந்த அமுதாவை பார்த்து "பாருடியம்மா உன் புள்ளையாண்ட என்னை வெளியே போன்னு கழுத்தை பிடிச்சி தள்ளாத குறையா வெளியே தள்ளி கதவை அடைக்கிறான்" என்று அவனை பற்றி குற்றபத்திரிக்கை வாசிக்க

அய்யோ தெரிஞ்சிடுச்சே என்ற பரிதவிப்பு சற்றும் இன்றி "என்னம்மா இவ்வளவு நேரம் உள்ளையா இருந்த.. பாவம் மாமி வந்து உன்னை தேடிக்கிட்டு இருந்தாங்க... பாருங்க மாமி இந்த அம்மாவ உள்ள இருந்தேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... நீங்க எப்பவுமே இப்படித்தான் மா" என்று தாயின் மீதே குறை கூறியவன் "நீங்க வாங்க மாமி உங்காந்து பேசுங்கோ" என்றபடி விட்டாள் போதும் என்று சமயலறையின் உள்ளே ஓடி மறைந்தான்

சமையலறையில் வாசலில் நின்றபடி இதனை கண்ட ஷீலா "ஏன் கண்ணன் இப்படி பண்ணிங்க... அவங்க தப்பா நினைச்சிக்க போறாங்க" என்றபடி உள்ளே வந்து இருவருக்கும் காபியை கலந்து கொண்டிருந்தாள்.

"யாரு?? அந்த மாமியா??.... நெனச்ச நெனச்சிக்கிட்டு போட்டும். யார் வீட்டுல என்ன நடக்குது எங்க எதை பத்த வைக்கலாம்னு வேலையா வைச்சிருக்கு அதுக்கு போயி நல்லது நினைககிறிங்க... இங்க என்ன குண்டு தூக்கி போட்டு போக போகுதோ!!" என்று தனக்கு தானே கூறி வெளியே வர

"அவன் சின்ன பையன் மாமி, தப்பா நினைச்சிகாதிங்க சும்மா விளையாடுறான்" என்று அம்பூஜ மாமியை சமாதனபடுத்தி ஹாலில் அமர வைத்தார் அமுதா.

முகத்தில் வரவழைத்த புன்னகையுடனே "நேக்கு தெரியாத அமுதா உன் புள்ளையாண்டான பத்தி அவன் விளையாட்டு புத்திகாரன்" என்றவர் "நான் இப்போ எதுக்கு வந்தேன்னா நம்ம சாந்திநகர் காலனில 4 நாள் டூர் போராங்களாம் அதான் உன்னான்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்"

"பச் ... நான் எங்கயும் வரல மாமி" என்று சட்டேன கூறிவிட்டார்

"ஏன்டியம்மா" என்று தாவங்கட்டையில் கையை வைத்தபடி கேட்க

"இல்ல மாமி அது சரி வராது விட்டுடுங்க என்றார் அமுதா

"ஏன்டி அமுதா.... ஏன் சரிவராது??எதுக்கு வரலைன்னு சொல்ற"

"இல்ல மாமி மத்தவங்க வாயிக்கு அவள போக விரும்பல... வெளியே, தெருவுல நடக்க முடியுதா, இல்ல நல்லது,கெட்டதுல கலந்துக்க முடியுதா?? என்ன உன் புள்ளை யாரையே இழுத்துட்டு வந்துட்டானமேன்னு கேட்டு கேட்டு மானத்தை வாங்குறாங்க" என்றார் வெறுப்பாக

"அதான்டி நேக்கும் ஆச்சர்யாமா இருக்கு... உன் புள்ளையா ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்தான்னு... அவனா செய்து இருக்க மாட்டான்டி உன் புள்ள தங்கம் டி குனிஞ்ச தலை நிமிராம போறவன் என்ன நடந்துதோ என்ன மாயம் மந்தரம் பண்ணலோ??? நீ இப்படி அல்லோகலப்படுற" என்று அவரும் அவர் பங்கிர்க்கு எரிகின்ற தீயில் எண்ணையை வார்க்க

"என்ன பண்ணா என்ன மாமி???இவனுக்கு எங்க போச்சு புத்தி பெத்தவ ஒருத்தி உயிரோட இருக்கேன்னு கொஞ்சமாச்சி மதிப்பு இருந்துச்சா??? என் தலை எழுத்து எல்லார்கிட்டாயும் ஏச்சையும் பேச்சை வாங்குறேன்" என்று குனிந்து கொள்ள

இவர்கள் பேசியது இது எதுவும் தெரியாமல் வேலையே கண்ணாய் இருந்த ஷீலா மாமிக்கும் அமுதாவிற்கும் சேர்த்து காபி எடுத்துக்கொண்டு வந்து "இந்தங்க ஆண்டி" என்று நீட்ட

அவளை உறுத்து பார்த்தவர் பின்னாடியே வந்த கண்ணனௌ பார்த்து "ம்கூம் ஏண்டாப்பா கண்ணா இவதான் உன் மண்ணியா" என்றார் மாமி

"ஆமா மாமி எங்க அண்ணி அழகா மகாலட்சுமி மாதிரி இருக்காங்க ல" என்று அவன் ஷீலாவை புகழ்ந்ததும்

"ஆமா நீ கிறிஸ்டினுனா??பொட்டெல்லாம் வைக்க கத்துண்டியா?? இது சைவபிள்ளை வீடும்மா பாத்து நடந்துகோ.." என்று சொல்லவே அவளுக்கு முகம் வாடிப்போய் விட்டது.

சரியான கேடி இந்த மாமிக்கு போய் பரிதாபட்டிங்களே பாருங்க அது வேலைய ஆரம்பிச்சிடுச்சி என்று முனுமுனுத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

காபியை நீட்டிய படியே நிற்க "இல்லடியம்மா நேக்கு வேண்டாம்.
எங்க ஆத்துல கொஞ்சம் சுத்தம் பார்ப்பா அதுலயும் நீ மாமிசம் சாப்பிடவோ இல்லையோ அதான்" என்று முகத்துக்கு நேராய் பேச சட்டென வீழியில் நீர் திரையிட உள்ளே சென்று விட்டாள் ஷீலா

இதோ பாருடி அமுதா அவாளுக்கு எல்லாம் பார்த்துண்டு நீ ஏன் வரமா இருக்க... இருந்தாலும் உன் விருப்பபடி செய் எதுவா இருந்தாலும் நேக்கு ஒரு போன் பண்ணிடுன்னா நான் வறேன்" என்று வந்த வேலை முடிந்தது என்ற அவர் சென்றுவிட

"ஏம்மா அந்த மாமிக்கு நல்லதாவே பேச வராதா??? அவங்க அண்ணிய பாத்து என்னன்னவோ சொல்றாங்க நீங்க எதுவும் பேசாம அமைதியா இருக்கிங்க... இது கொஞ்சம் கூட நல்ல இல்ல அம்மா" என்று எரிந்து விழுந்தான் கண்ணன்.

"என்னடா நல்லா இல்ல... இப்போ ஏன் குதிக்கிற டா அவங்க ஒன்னும் இல்லாததை சொல்லலையே உண்மையதானே சொன்னாங்க" என்றார் காட்டமாய்

"தப்புமா" என்று தாயை பார்த்து கனிவாய் கூற

"பெத்த வயிறுடா கொதிச்சி போய் இருக்கேன்... ரணத்தை கிளறிடாதே அவ்வளவுதான் சொல்லிட்டேன்... நான் எவ்வளவு ஆசை பட்டு இருப்பேன் எப்படியெல்லாம் உங்களுக்கு செஞ்சு பாக்கனுமுன்னு எல்லாம் கனவா போச்சேடா சொந்தகாரங்க முன்னாடி தலைய குனிய வைச்சிட்டானே" என்று ஆதங்கத்தை கொட்டியவர் உள்ளே சென்று விட.

தன் அறையில் கட்டிலில் தலை கவிழ்ந்து கண்களில் நீர்திவளைகள் கன்னத்தில் உருள ஷீலா அமர்ந்திருந்தாள்

அவள் அமர்ந்திருந்த நிலையை கண்டவன் மனம் வருந்த அண்ணி என்று கதவை தட்டியவறே உள்ளே வந்தான் கண்ணன்.

முகத்தை துடைத்துக்கொண்டு இயல்பாக இருப்பாதாய் காட்டிக்கொண்ட ஷீலா எழுந்து நின்று "வாங்க கண்ணன்" என்றிட

"அண்ணி அந்த அணகோண்டா சொன்னதை நினைச்சி எல்லாம் பீல் பண்ணாதிங்க... அதுலெல்லாம் ஒரு ஆளுன்னு அதுக்கு பெரிய மதிப்பு கொடுக்குறா மாதிரி இருக்கும்". என்றவன் அது வர்றது ராஜீக்கும் எனக்கும் சுத்தமா பிடிக்காது வரும்போது எல்லாம் என்னை போட்டு கொடுத்துட்டு போகும் இன்னைக்கு நீங்க மாட்டிகிட்டிங்க" என்று அண்ணியை தெளிவிக்க முயன்றான் அது வேலை செய்யவே "அடுத்தவாட்டி வரும்போதே வாசல்ல வாழைபழ தோலை வைச்சி டீரிட்மெண்ட் கொடுத்துட வேண்டியதுதான் அந்த அணகோண்டவுக்கு" என்று கூற

அவன் சொல்வதை கற்பனையில் கண்டவள் சிரிப்பு வந்துவிட "ஹா... ஹா... கண்ணன் அப்படியெலலாம் எதுவும் செய்துடாதிங்க விடுங்க பீளிஸ் பாவம் வயசானவங்க" என்றவள் சரிங்க கண்ணன் நான் எதுவும் நினைக்கல இதை விட்டுங்க என்றவள் தன் வேலையை தொடர அவனும் மனநிறைவுடன் அறையை விட்டு வெளியேறினான்.
....................................................................

இளம் சிவப்பு நிற மெல்லிய சரிகையிட்ட புடவையில் சீராய் வெட்டபட்ட கூந்தல் மயில் தோகையென முதுகில் பரவியிருக்க ஈரமான கூந்தலை துவட்டியபடியே சிந்தனையின் பிடியில் இருந்தாள் கவி நேற்று அவள் நடந்து கொண்ட விதம் அவளுக்கே விச்சித்திரமாய் பட
அமைதியாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் முகம் பார்த்தாள்.

அப்போதுதான் அவன் படுத்து கொண்டிருந்த கோலம் கருத்தில் பதிய சோபாவில் உடல் குறுக்கி அவன் உயரத்திற்கு படுக்கமுடியாமல் படுத்து கிடந்தவனை பார்க்க கொஞ்சம் அவளுக்கு பாவமாகத்தான் இருந்தது.

முதல் நாள் இரவு அவன் கிட்ட வரும்போதே தட்டுதடுமாறி அடித்துகொண்ட இதயம் அவன் நெருங்கி நிற்கவும் தாவி எகிறி குதித்து வெளியே விழுந்து விடும் என்ற நிலையில் இருந்ததை நினைக்க "சே... சே... இவனுக்கு போயா பாவம் பாக்குறோம் சரியான திமிர் புடிச்சவன்" என்று மூளை மறுத்துறைத்தது.

"அவனுக்கு மட்டும் தான் திருமிரு இருக்கா உனக்கு இல்ல ம்.. எனக்கு எதுக்கு வம்பு சரி அதவிடு நேத்து அவன் சாப்பிட வரலைன்னு ஹாலுக்கும் வாசலுக்கும் நடையா நடந்தது அவன் சாப்பிட வரமாட்டன்னு தெரிஞ்சதுப் கோவபட்டது நீதானே" என்று மனது உண்மையை உறக்க கூற

"ம் அதை உன்னை கேட்டேனா....... எதை எதோட முடிச்சி போடுற சே" என்று மனதோடு மல்லு கட்டியவள் வாய்விட்டு கூறவும் தகவு தட்டும் ஒலி கேட்க தன் நிலை உணர்ந்தவள் அச்சச்சோ இன்னும் இவன் எந்திரிக்கலையே யாரவது பார்த்து விட்டாள் என்ன ஆகுமோ என்று பதட்டபட்டவள் விடுவிடுவென அவன் அருகில் சென்றாள்.

'எழுப்பலாம் வேண்டாமா கடவுளே சரி இவனை இப்போ எழுப்பறது முடியாத காரியம் வந்தவங்களே அப்படியே பேசி அனுப்பிடனும்' என்ற எண்ணத்தோடே கதவை திறந்தாள் கவி

"அம்மா நீங்களா" என்று விழித்தவள் அவர் உள்ளே வராதவாறு வெளியேவே கதவை மறைத்து நின்று கொண்டாள் "கவி இந்தாடா கண்ணு இதை எடுத்துக்கோ மாப்பிளைக்கு குடு" என்று காபி டிரேவை மஞ்சு கொடுக்க

"அம்மா நீங்க ஏன் மா வந்திங்க நானே வந்து இருப்பேன்ல" என்று எங்கே குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனே கூறினாள் பார்கவி.

அவளின் அச்சம் கலந்த படபடப்பு அவருக்கு வெட்கம் என்று வேறு விதமாய் தோன்ற உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர் இருக்கட்டும் டா இந்தா நீயும் எடுத்துக்கிட்டு மாப்பிள்ளைக்கும் குடு பாவம் தம்பி ரொம்ப லேட்டா வந்தாரு போல" என்று டிரேயை அவளிடம் கொடுத்தவர் மகளின் பதிலை எதிரிபார்த்து காத்திருந்தார்.

அவரை இங்கிருந்து அனுப்புவதிலையே குறியாய் இருந்தவள் அவரிடம் பதில் சொன்னால் தான் விடுவார் என்று உணர்ந்து "ஆமா மா லேட்டாதான் வந்தாரு ரொம்ப வேலை போல" என்று பக்கத்தில் இருந்து பார்த்தவள் போல கூறினாள் பார்கவி.

ஹோ... அப்படியாமா நைட்டு சாப்பிட்டாரா இல்லையாடா" என்று நடந்தது தெரியாததை போல அவர் கேட்க

"ம் சாப்பிட்டுதாம்மா தூங்கினாரு" என்று கூறவும் அவளின் பதிலில் திருப்தியுற்றவர் "சரிடா கண்ணு நான் கிழ போறேன் நீயும் தம்பியும் ரெடியாகி வாங்க அப்பாவோட பிரெண்ட் வர்ராங்களாம் என்று கூறிவிட்டு கிழே சென்றார்.

அப்பாடா அம்மா கண்டுபிடிக்கல என்று மனதிற்குள் குதுகலித்தவள் காபி டிரேயை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனை எப்படி எழுப்பலாம் என்று யோசனை செய்து கொண்டு அவனை பார்த்தவள் குறுக்கும் நேடுக்கமாக நடக்க அவளின் கொலுசில் எழுந்த தொடர் ஓசையில் அவன் லேசாய் முழுப்பு வந்துவிட அவனின் விழிகளுக்கு குட்டிபோட்டு பூனையாய் அங்கும் இங்கும் அலைபாயும் கண்களுடன் யோசனையுடன் நடை பயின்று கொண்டு இருக்கும் தன் மனைவியை காணவும் இவளின் தோரணை அவனுக்கு சிறுபிள்ளை தனத்தை நியாபகடுத்த இதழில் குறுநகை எற்பட்டது...

நான் கண்களை மூடுகையில் உன் கள்ள விழிகள் என்னை பார்ப்பதென்ன.....

உன் கருவிழிகளுக்குள் இருப்பது என்ன காந்தகமோ...
உன் கருமணிகளுக்குள் என்னை சிறையெடுப்பதற்கு...

நான் இருளின் தத்தளிக்கிறேன்...
உன் கருவிழிகளுக்குள் பல் வர்ணங்களை காண்பிக்கிறாய்....

நான் என்றோ உற்று நோக்கிய மீன் விழியே....
நீ எனக்குள் வந்து நீந்துவது என்ன....

நான் உனக்குள் தொலைவதில் என் மனம் நிறைகிறதே...... அது என்ன விந்தையோ......

அவன் மனதில் ஓடிய வரிகள் தனக்கு தானே சிரித்துக்கொண்டான் இவளை பார்த்து இந்த கவிதை தோனுதே என்ற அர்த்ததில்

அதே இளகுவான மனதினோடே என்ன மேடம் ஏதோ தீவிர சிந்தனைல இருக்க போல இருக்கு எப்படிடா இவனை கழட்டி விடலாம்னு பிளான் போடுறியா என்றான் கேலிகலந்த குரலில்

சட்டென அவன் குரல் கேட்கவும் அதிர்ந்து விழித்து அவனை பார்த்தவள்... அவனின் குரலில் கலந்த கேளி புரிய அதுக்கு எதுக்கு பிளான் பண்ணனும் உனக்கு என்று கூறி சட்டென அவன் முகம் பார்க்க அவனின் உஷ்ணபார்வை பார்த்தவள் சரி சரி உங்களுக்கு டென்ஷன் ஏத்தினா பத்தாது நீங்களே என்னை விட்டு போயிடுன்னு சொல்ல

ஹோ... அப்படி ஒரு எண்ணம் இருக்கா.... உன்னை விட்டுட்டு போய்டுவேன்னு நீ இன்னும் நினைக்கிறியா... ம் முயற்சி பண்ணுங்க மேடம் வாழ்த்துக்கள் என்றவன் தன் காலை நீட்டி மடக்கி நெட்டி முறிக்க சோபாவை விட்டு எழுந்து நின்றான்.. அவன் சட்டென எழுந்ததும் கவிக்கு அவன் நேற்று நின்ற கோலாம் மனதில் தோன்ற இதே பேச்சு தானே நேத்தும் பேசினேன் சுத்தம் உன் வஆயை வைச்சிக்கிட்டு கொஞ்சம் சும்மா இரு பார்கவி அவன் சீண்டினாலும் எந்த எதிரிவினையும் காட்டாதே

இவனோட மல்லுக்கு நின்னா எனக்குதான் பிபிய ஏத்துவான்... எதிர்த்து சண்டை போட்டா போடலாம் இவன் பண்ற வேலைக்கு மூச்சுதான் முட்டும் எதுக்கும் நாம கொஞ்சம் உஷாராதான் இருக்கனும் வேண்டா சாமி நான் கிழே போறேன் என்று முகத்தில் பலவித பவனைகளோடு உள்ளுக்குள் நினைக்க அவளின் முக மாறுதல்களையே பார்தது இருந்தவன்... அவள் எண்ண ஓட்டத்தை புரிந்தவன் போல "என்ன மேடம் நிமிஷத்துக்கு நிமிஷம் முக்ததுல எக்ஸ்பிரஷன் மாறுது இன்னைக்கு ஏதாவது உனக்கு பாடம் எடுக்கனுமா" என்று கேலி பேசியதும் சட்டென வெளியே ஓடி மறைந்தாள் பார்கவி.
____________________________________

அவளின் பட்டு வண்ண மேனியில் மோதிய முன் கற்றை முடியை சரிசெய்து கொண்டே "டேய் கிருபா ஏன்டா இவ்வளவு வேகமா போற?" என்று கத்தியபடி பின் இருக்கையில் இருந்து எழுந்தாள் மதுவந்தி

அவளின் கத்தலை சிறிதும் செவியில் ஏற்காமல் "ஏய் கொஞ்சம் அமைதியா வாடி... நீ எழுந்து என்னையும் கீழே தள்ளிவிட்டுடுவ போலிருக்கே" என்று அவளை அதட்டி அமரவைத்தபடி வண்டியின் வேகத்தை கூட்டினான் கிருபா என்கிற கிருபாகரன்.

அவனின் வேகம் கூட கூட அவள் உள்ளுக்குள் உதறல் எடுத்துக்கொண்டது. "வேணா கிருபா போலீஸ் ல மாட்டினா என்ன ஆகும்னு தெரியும்ல..." என்று அவனின் தோள்பட்டையில் கைவைத்து வேகத்தை கட்டுபடுத்த சொல்லி அழுத்தினாள்.

"கொஞ்ச நேரம் பேசாம வாடி.... இன்னும் இது சிட்டி லிமிட் குள்ள வரல என் டுமேட்டோ இப்போ அய்யா திறமைய பாரு" என்று அவனின் வீரதீர சாகசத்தை காட்டியபடியே ஒற்றை சக்கரத்தில் வீலிங் செய்து இரு கைகளையும் காற்றில் விரித்து விட்டபடியே வண்டியை ஓட்ட

அதில் பயந்து விழித்தவள் "கிருபா.... சனியனே.... என்னை கிழே இறக்கிவிடு உன்னை கொள்ளாமல் விடமாட்டேன். டேய் பட்டர் மண்டையா எனக்கு பயமா இருக்கு டா மூதேவி... இறக்கி விடு நீ எக்கேடோ கெட்டு தொலை என்னை விடுடா" என்று அவள் அலறல் சத்தத்தில் தான் அவளை இறக்கிவிட்டான்.

"நாயே நாயே நல்லபடியா சொன்னா கேக்கமாட்டியா?... தடிமாடே, பண்ணாட,பொறுக்கி..." என்று அவன் முதுகில் மொத்தியவள் பயத்துல என் உயிரே போயிடுறா மாதிரி இருந்துஞ்சிடா சனியனே என்று மறுபடி அவனை கைகளால் குத்தினாள்.

அவள் பயத்தில் படபடவென பேசியதை சிரிப்புடனே பார்த்து கொண்டிருந்த கிருபா,"என்ன மேடம் சொன்னிங்க எனக்கு சரியா கேக்குல.... இப்போ சொல்லுங்க" என்று காதை குடைவது போல் பாவனை செய்து காதில் கை வைத்து கேட்க

அவனை பார்த்து விழித்து கொண்டு இருக்கும் போதே என் கிட்ட என்ன சொன்ன உன்னை பயமுறுத்தவே முடியாதுன்னு சொன்னல பாத்தியா உன் வாயலையே எனக்கு பயமா இருக்கு இறக்கிவிடு கிருபான்னு சொல்ல வைச்சிட்டுடேன்... பெரிய ஜான்சி ராணி மாதிரில என்கிட்ட சவால் விட்ட" என்று மதுவந்தியை கடுபாக்கிக் கொண்டு வெற்றி சிரிப்பை சிரித்து கொண்டு இருந்தான் கிருபா...

(இது என்னடா இருக்கிற கேரக்டர்ஸ்லேயே சீன்ஸ் கம்மியா தான் வருது ஒவ்வொரு நாள் சுத்தம் யூடியே போடுறது இல்லை இதுல இதுவேற யாருடா இந்த நீயூ எண்ட்ரி தானே யோசிக்கிறிங்களா தெய்வங்களே.... சரியா சொன்னேனா.... மலேஷியாவுக்கு ஒரு அப்பாவி புள்ளைய அனுப்பினோமே நியாபகம் இருக்க அவனோட பகுதிக்கு தாங்க வந்து இருக்கும் சரி வாங்க நானே ரொம்ப நேரம் பேசிட்டேன் இப்போ கதைக்குள்ள போகலாம்.)

"பார்த்து கிருபா உன் அறிவு பொக்கிஷமா இருக்க வேண்டியது அடிக்கிற வெயில்ல மண்டைல இருக்க மூளை சைடுல உறுகி ஊத்திட போகுது" என்று சத்தமில்லாமல் அவனை வாரியவள்.. "இப்படி குரங்கு ஒத்தை காலை தூக்கி வித்தை காட்டுராப்போல பைக் வீலை தூக்கி சுத்தினா எப்பேர்பட்ட கொம்பனாய் இருந்தாலும் பயந்துதான் போவாங்க டா முட்டாள்... இதுக்கு இந்த இளிப்பு வேற சே... வாய மூடு சகிக்கல" என்று இருந்த கடுப்பிற்கு ஏகத்திற்கும் அவனை ஏசியவள்.

"சாய்ந்தரம் வந்து உன்னை அம்மாகிட்ட சொல்லி விட்டு ஒரு வாரத்துக்கு பைக்க தொடாதபடி உன்னை அலைய வைக்கல பாருடா" என்றபடியே அவனை சாடியவள் முன்னாள் நடக்க

"ஐய்...ய்யயோ..... என்று தலையில் கை வைத்து புலம்பியவன் என் குட்டி ராட்சசில என் செல்ல தங்கச்சி இல்ல இந்த ஒரு வாட்டி விட்டுடு செல்லம் அண்ணா இவினிங் பிக்கப்புக்கு கரெக்ட் டா வந்துடுறேன்" என்று அவளை தாஜ செய்து தலையில் ஒரு ஐஸ் பாரை வைத்து மேலும் அவளுக்கு ஐஸ்கிரீம்களை வாங்கி தருவதாய் கூறி சமாதனபடுத்த

"இன்னொரு முறை இந்த லம்பாடி கூத்து காட்டுறா மாதிரி வித்தை காட்டுற வேலையெல்லாம் வைச்சிக்கிட்ட.. அடுத்த செகன்ட் அம்மாகிட்ட சொல்லிடுவேன்" என்று அண்ணனை பயமுறுத்தினாள் மதுவந்தி

'குட்டச்சி ரொம்ப தான்டீ கொழுப்பு உனக்கு மூஞ்சியபாரு சின்ன அண்டா சைஸ்ல இருந்துகிட்டு என்ன ஆட்டம் ஆடுறா வாடி வீட்டுக்கு உனக்கு காபில காபித்துளுக்கு பதிலா சீக்காய் தூள் கொட்டுறேன்... பரங்கிகாய் மண்ட' என்று அவளை மனதில் திட்டிக்கொண்டே அவளின் முன்னே இளித்தபடி அந்த ஷிப்பில் விட்டுவிட்டு சென்றான் கிருபாகரன்.

மூவின மக்களும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாய் எந்த பாகுபாடும் அற்று எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்து நிற்கும் மலேஷிய மண்ணின் சொந்தகாரி மதுவந்தி.. அவளின் குடும்பம் மூன்று நான்கு தலைமூறைகளாக மலேஷிய மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்... அம்மா அண்ணன் அக்கா தங்கை தம்பி என்று பாசபறைவைகளின் சரணலயம். பாசத்திற்கும் பஞ்சமில்லாமல் வளர்ந்தவள் மதுவந்தி. 20 வயது பேரழகி சராசரிக்கும் சற்று உயரம் குறைவு அதனாலையே அவளின் அண்ணன் அவளுக்கு விதவிதமாய் பெயர் வைப்பான். இவளும் அவனுக்கு சலைத்தவள் அல்ல அவனுக்கு ஏற்ற வகையில் பெயர்களை சுட்டி அர்சசனைகளும நடத்தும் சுட்டி பெண் அருகில் உள்ள பல்கலைகழகத்தில் பயின்றபடியே சிம்கார்ட் விற்பணை நிலையத்திலும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் வேலைபார்த்து கொண்டிருக்கின்றாள்.

ஹாய் சீமா have a nice day என்று வாழ்த்தியபடியே தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் மதுவந்தி

ஹாய் மது you looking so cute ya என்று அவளின் வதனத்தை கண்டு பாராட்டியவள். என்ன இன்னைக்கு கொஞ்சம் லேட் போல என்றாள் அவளின் இருக்கையில் ஏதோ வேலையை பார்த்தபடி

அவளின் பாராட்டலில் சின்ன சிரிப்பை உதிர்த்தவள் ஆமா சீமா கொஞ்சம் லேட் ஆகிடுச்சி அங்கிள் ஏதாவது சொன்னாரா??? பட்டர் மண்டையன் இன்னைக்கு ஒரு வழி பண்ணிட்டான் என்று நினைத்தபடியே கூறினாள்.

அவளின் வருத்தத்தை கண்டவள் "ஹே.. மது டார்லிங் கூல் யா அங்கிள் எதுவும் சொல்லல... ம்ஹீம் சேம் தான் தேடிட்டு இருந்தான்" என்றாள் தயக்கமாக

"ஹோ... ஷிட் அவன் ஏன் என்னை தேடுறான்?!?..... ரொம்ப இரிட்டேட் பண்றான் சீமா என்னைக்கு எனக்கு பொறுமை பறந்து அங்கிள்கிட்ட சொல்ல போறேன்னு தெரியல" என்றாள் கண்களில் வெறுப்பை உமிழ்ந்தபடி

"நீ பொறுமை பொறுமைன்னு தள்ளி போடாத பேபி அவன் இன்னும் ஓவரா போவான் நேரம் பார்த்து அங்கிள்கிட்ட சொல்லிடு" எனறு வேலையை தொடர்ந்தாள் சீமா.

"ம்..."என்று சீமாவிடம் கூறியவள் 'இனியும் தள்ளிபோடுற எண்ணம் இல்ல இந்த இடம் சேஃப் தான் இங்க வேலை பார்க்க சரின்னு சொன்னாங்க இங்கயும் இப்படி ஒரு தொல்லைன்னு தெரிஞ்ச நிச்சயம் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிடுவாங்கே என்று மனதினுள் கவலையுற்றவள்

அண்ணா எவ்வளவு தான் தாங்குவான்.. அம்மாவுக்கு இனியும் கஷ்டம் கொடுக்க கூடாது என் படிப்பு செலவையாவது நானே பார்க்கலாம்னு தான் இன்னும் இங்க வறேன்.... இவன் தொல்லை தாங்கவில்லை என்று தலையில் தட்டிக் கொண்டவளை தடுத்து ஒரு குரல்.

ஹலோ எக்ஸ்கியூஸ் மீ குட் யூ பிளீஸ் ரீசார்ஜ் தீஸ் நம்பர் என ஆடவனின் குரலை கேட்க பெண்கள் இருவரும் அவனை பார்க்க தலையை தட்டிக்கொண்டவளின் கை அந்தரத்தில் நின்றது.

"எக்ஸ்கியூஸ் பீளிஸ்" என்று அவன் மறுமுறை அழைக்கவும் விழிகள் இரண்டும் அவன் தன் செயலை கண்டுவிட்டனே என்று படபடவென அடித்துக்கொள்ள அவனிடம்
"சுஷோர் சார்" என்று எண்ணை வாங்கியவள் சேவையை செய்து கொண்டிருந்தாள்.

அதே சமயம் அவனை பார்வையால் பருகி கொண்டிருந்தாள் சீமா 'டெய்லி எக்சர்சைஸ் பண்ணுவானோ... ஜிம் பாடி மாதிரி இருக்கான்... அவன் கண்ணு சோ ஸ்வீட் அப்படியே அல்லுது பார்க்கவே செமையா இருக்கானே... யாரு பெத்த புள்ளையோ அவங்க அட்ரஸ் தெரிஞ்ச இப்போவே அவன் வீட்டுல போய் உட்காந்துக்குவேன் என்னை கல்யாணம் பண்ணிக்கோ பேபின்னு" என்று மதுவந்தியின் காதை கடித்தபடி இருக்க

"நீ இப்படி பப்ளிக்கா வழியாத சீமா அவருக்கு தெரியபோகுது பார்த்த இந்தியன் மாதிரி இருக்கு தமிழா இருக்க போகுது என்று தோழியை எச்சரித்து அவன் பார்வை இப்போது தங்கள் பக்கம் திரும்பவும் திருதிருத்தபடி பார்வையை தாழ்த்திக் கொண்டவள் சேவையை தொடர

அவர்கள் இருவரது சம்பஷனைக்கும் தனக்கும் எதுவும் சம்பந்தம் இல்லாததை போல உடன் இருந்த நண்பனிடம் மறுபடி அளவளாவி கொண்டிருந்தின் அவன்

அவரையும் அவர் ஸ்டைலையும் பார்த்த தமிழ் மாதிரி தெரியல டார்லிங் செம ஹேன்சமா சார்மிங்கா இருக்கார்டி என்றவளின் குரல் குழைந்து ஒலித்தது.

"பச் ,பச்" என்று சீமா சிக்னல் கொடுத்து அவளை கைகளால் சீண்ட என்ன என்பது போல் பார்த்தாள் மதுவந்தி சற்று உள் சென்ற குரலிலேயே "கொஞ்சம் ஸ்லோவா பண்ணுடி" என்று கண்களில் இறஞ்சிட

"உன் லொல்லுக்கு அளவே இல்லையா...." என்று மனதில் அவளை வைய்தாலும் அடியேய் எவ்வளவு ஸ்லோவா பண்ணாலும் இதுக்கு 5 நிமிஷத்துக்கு மேல ஆகாதடி என்று அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது அவளுக்கு..... என்னமோ செய்து தொலை என்பது போல் சிறிது நேரம் கடத்தியவள் complete sir" என்று அடுத்து இருந்தவரிடம் சென்றுவிட்டாள்

ஹே.... ஜெயந்த் அந்த பொண்ணு விடாமா உங்களயே பார்த்துகிட்டு இருந்தது ஒரு சின்ன சிரிப்பை கூட உதிர்க்கம அந்த பொண்ண ஏமாத்திட்டிங்களே.... என்று கேலியை சுந்தபடி இருந்தது ஜெயந்தின் நண்பன் ஆல்வினின் குரல்.

ஜெயந்த் மலேஷியாவில் இருக்கும் தன் தொழில் முறை நண்பனான ஆல்வினை இன்று சந்தித்தான் அப்படியே அவனுடன் சில இடங்களை சுற்றிபார்க்க சென்றிருக்க இடையில் இந்த நிலையத்தை பார்க்கவும் ரீசார்ஜ் செய்து கொள்ளளாமே என்று வந்தவனைதான் சீமா பார்வையால் தொலைத்துக்கொண்டு இருந்தாள்.

"ஏன் ஆல்வின் ஏன் இப்படி என் மேல ஒரு எண்ணம் என்னை பார்த்த இன்னும் விடலை பையன் போல இருக்கா அந்த பொண்ணு ஏதோ ஈர்ப்பு ல.பேசுது இதையெல்லாம் போய் பெருசா எடுத்துக்க முடியுமா நான் அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டிட்டேன் பா... "என்றான் வசீகர சிரிப்போடு

உன்னை பார்த்த அப்படி ஒன்னும் வயசு ஆனா மாதிரி தெரியலையே ஜெயந்த்... இன்னும் காலேஜ் பையன் போல தானே அழகா மேன்லியா இருக்கிங்க... இப்போ கூட பாத்திங்களே அந்த பொண்ணு எப்படி பார்த்துட்டு இருந்துன்னு" என்று அவனுக்கு சான்றினை வழங்க

"ஹா... ஹா.. நீங்க ஒருத்தர் போதும் என்னை மாட்டிவிட...." என்று அழகாய் சிரித்தான்...

"அப்போ கல்யாணம் பண்ற ஐடியாலாம் இல்லையா ஜெயந்த்" இது ஆல்வின் தான் அவன் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டுவிட்டான்.

"கண்டிப்பா நடக்கும் ஆல்வின் என் அம்மா பார்த்த பொண்ணோடா" என்று ஜெயந்த் உறுதியாய் கூற காலம் அவனை பார்த்து சிரித்தது கொண்டிருந்தது நான் இருக்கையில் அதை நீ நிர்மானிக்கலாமா என்று ... நாளை நடப்பதை யாரறிவர் அவன் ஆட்டுவிக்கும் பொம்மைகள்.... பாடமும் அவனே பரிசும் அவனே.....

....................................................................

நேர்வகிடு எடுத்து பிரித்தார் போல இருந்த சீரான சாலையில் அதிநவீன ராக பைக் அவனிடம் படாதபாடுபட்டுக் கொண்டு சீறிபாய்ந்தது. மனதில் உழன்ற அத்தனை கோபத்தையும் ஒன்று கூட்டி பைக்கின் வேகத்தில் காட்டியிருந்தான் சித்தார்த்.

முகத்தில் அத்தனை இறுக்கம் இதுவரை சித்தார்த் யாரிடமும் கோபமுகம் காண்டியது இல்லை.. அவன் கோபத்தை கண்டவள் கொஞ்சம் அரண்டுதான் போயிருந்தாள். பரம சாதுவாய் இருந்தவனை காதல் எனும் மாய எழுத்துகள் கொண்டு கடுமையானவானாக
மாற்றி இருந்ததாள் பொண்ணவள்...

வித்தியா இன்று காலையிலையே ஆரம்பித்து விட்டிருந்தாள் அவளின் தகிடதத்தோம் வேலையை..... அவனின் முறைப்பையும் எதிர்ப்பையும் மிறி அவனுடன் தனியாகவும் வந்து விட்டாள். அவனின் இறுகிய தோற்றம் தான் அவளை கொஞ்சம் அச்சம் கொள்ள வைத்துது.

அவனை சைடு மிரரில் எட்டி பார்த்தவள் வரவழைத்த தைரியத்துடனே மாமா என்று அழைத்தாள்... அவள் குரலிலும் நடுக்கம் இருக்கத்தான் செய்தது இப்படியே இருந்து விட முடியாதே தன் மனதை அவனுக்கு எடுத்து உறைக்க வேண்டுமே என்ற எண்ணத்தோடே தானே காலையில் இருந்து அவனை படாத பாடுபடுத்தியது. எல்லாம் அவள் மனகண் முன் தோன்றி மறைந்தது.

அவளின் மாமா என்ற அழைப்பிலே உடல் இறுகி ஆக்ஸிலேட்டரை முறுக்கியவன் புயல் என சீறி பய இதை சற்றும் எதிர்பார்க்காதவள் பயத்தில் பிடமானத்திற்காக அவனின் இடையில கைவைத்து கட்டிக்கொள்ள

அவள் செயலில் அதிர்ந்தவன் எங்கு நிர்க்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் உடனே சடன் பிரேக் இட்டு நிறுத்தி இறங்கு என்று இறுகிய குரலில் கூறினான்.

வண்டியில் இருந்து இறங்காமல் நடந்த செயலுக்கான காரணத்தை விளக்க மாமா நான் என அவள் அரம்பிக்கும் முன்னே இறங்குடின்னு சொன்னேன் என்று அழுத்தமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்

அவள் தயக்கமாகவே தான் இறங்கினாள் என்ன ஆட்டம் ஆட போறானோ என்ற பயத்துடனே தான் இருந்தாள். ஆனால் அவனிடம் முகத்தில் கொஞ்சம் தைரியம் கொண்டது போல காட்டிக் கொண்டாள்

வண்டியில் இருந்து வேகமாக கீழே இறங்கியவன் தலையில் கைவைத்து அழுந்த கோதி கொண்டு கண்மூடி நிதானித்தான் கோவம் கொண்டு அவளை திட்ட கூடாது என்று நின்றவன். சில நிமிடங்கள் கழித்து பேசலானான். "உனக்கு என்னதான் வேணும் விது ஏன் இப்படி எல்லாம் பண்ற???" என்றான் தன்மையாகவே

'மாமா நீ எது பண்ணாலும் ஸ்டைல இருக்கு மாமா...' என்று மனதில் நினைத்தாள். சொன்னால அவனிடம் அதுக்கும் தனியாய் பாட்டு வாங்க வேண்டுமே மனதில் நினைத்தாலும் வாய் திறக்கவில்லை.

அவள் மௌனமாய் இருப்பதை பார்த்தவன் அவள் ரசனையான கண்கள் தன்னை விட்டு அகலாது இருக்க. ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்தான் நல்ல வேலை அது அவ்வளவாக ஜன நடமாட்டம் இல்லாத சாலை அதுவரையில் யாரும் அந்த சாலையில் இருக்கவும் இல்லை இதுவே ஒரு பெருத்த நிம்மதியாய் உணர்ந்தவன் அவளின் மோனநிலையை கலைக்கும் பொருட்டு

"வது...... உன்னைத்தான் கேக்குறேன்" என்றான் அதட்டல் குரலில்

அவன் குரலில் சற்றே அதிர்ந்து நிகழ் உலகத்திற்கு வந்தவள் "ஆஹ்.... மாமா" என்று விழி விரித்தாள்.

அவள் மாமா என்று விளித்த உடனே பற்களை கடித்து ஆத்திரத்தை அடக்கியவன் "மாமான்னு இன்னொரு முறை கூப்பிட்ட அறைஞ்சி பல்லையெல்லாம் தட்டிடுவேன் ராஸ்கல்... நானும் சின்னபொண்ணுன்னு ரொம்ப பொறுமையா பேசுறேன்" என்று இறுகிய குரலில் கூற

"அதுதான்.... அதுதான்... உங்க பிரச்சனை மாமா என்னை அந்த கண்ணோட்டத்துல பாக்குறிங்க உங்க பொண்டா...." கடைசி வாக்கியத்தை கூட முடிக்கவில்லை வித்தியாவின் கன்னத்தில் தீயை தீண்டியது போல எரிச்சல் மண்டியது.

சித்துதுவின் அறையில் கண்கள் குளமாக கன்னத்தில் கை வைத்து அவனையே விழியில் அதிர்வுடனே அவனை பார்த்து கொண்டிருந்தாள் வித்தியா அந்த பார்வையில் இவனா அடித்தது உனக்கு அடிக்க கூட தெரியுமா மாமா என்ற கேள்வியே நின்றதாய் இருந்தது

கலங்கிய விழிகளை கண்டவன் அய்யோ ஒரு குழந்தையை அடித்து விட்டோமே என்று மனது ரணமாக இதமாகவே சொன்னான் 'விதுமா உனக்கு ஒரு முறை சொன்னா புரியாலையா டா... மறுபடியும் மறுபடியும் அதேயே சொல்லிட்டு இருக்க... என்னை புறுஞ்சிக்க முயற்சி செய்டா..." என்று இதமாய் கூறினாலும் அவளை அடித்த குற்ற உணர்வில் பக்கத்தில் இருந்த மரத்தில் ஓங்கி குத்தினான் சித்தார்த்...

"அய்யோ மாமா...." என்று அவனின் கையை இறுக பற்றி அவனை தடுத்தவள் "அடி மாமா, நீ எவ்வளவு வேனாலும் அடிச்சிக்கோ... என்னை அடிக்க உனக்கு இல்லாத உரிமையா மாமா.... ஆனா என் மனசுல உன் மேல விழுந்த நினைப்ப அழிக்க முடியாது மாமா... அழிக்கவே முடியாது" என்றவள் விடுவிடுவென அங்கிறுந்து நடந்து போய்விட அவனுக்கு தான் அய்யோ என்றனது.
 

Author: yuvanika
Article Title: பகுதி 20
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN