காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 21

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Epi 22

நாட்கள் அதன் போக்கில் அழகாய் நகர இப்படியான காதல் காட்சிகள் ஆங்காங்கே அரங்கேரிய வண்ணம் இருந்தது. காலம் யாரோடு யாரை சேர்க்கும் யாரை கலங்கடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்த காதல் புறாக்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களும் அழுகைகளும் அதிசியங்களும் ஆச்சர்யங்களும் அவர்களுக்காக காத்திருக்கின்றன.

இங்கு காதலர்களின் நிலமை இப்படி இருக்க

காலத்தின் கட்டயத்தால் கைபிடித்த இரண்டு உள்ளங்களும் திருமணபந்தம் என்ற வார்த்தைக்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்று இருதுருவமாய் பிரிந்து ஒன்றொடு ஒன்று ஒட்ட மறுத்து நீயா நானா என்று குடுமிபிடி சண்டையை ஆரம்பித்து இருந்தனர்.

மறுவீடு சம்பிராயங்கள் எல்லாம் முடிந்து புகுந்த வீட்டிற்குள் பார்கவி அடியெடுத்து வைத்து இன்றொடு ஒரு வாரம் ஆகின்றது. இந்த ஒரு வாரத்தில் அவனோடு ஓராயிரம் மௌனயுத்தங்கள் நடத்திவிட்டாள் பார்கவி. அவனே அவளின் கண்களின் அசைவில் கொஞ்சம் இறங்கி போக நினைத்தாலும் பார்கவியின் வார்த்தைகள் அவனை சீண்டி விட்டு அவனின் வாயை கிளறி வாங்கி கட்டிக்கொள்வதையே வழக்கமாகி வைத்துக்கொண்டு இருக்கிறாள்.

இவள் வீட்டிற்கு வந்த முதல் நாளும் அப்படித்தான் அன்றும் நடந்து கொண்டாள்.

"வாமா கவி வாடா" என்று ஆசையை அழைத்து மருமகளை பக்கத்தில் அமர்த்திக்கொண்ட ஆதி அவளின் முகத்தில் சந்தோஷத்தை தேடியபடியே "என்னடா ஒருமாதிரி இருக்க கேஷவ் ஏதாவது சொன்னானா? சொல்லுடா" என்று மகனை பார்த்தபடியே பார்கவியிடம் விசாரிக்க

'ஏம்மா நீங்க வேற... அவ உம்முன்னு இருந்தா அதுக்கு நான்தான் காரணமா... சும்மாவே அவ ஆட்டத்தை பாக்க முடியாது இதுல நீங்க வேற அவன் சொன்னானா சொன்னானா ன்னு கேட்டுகிட்டு' என்று நன்றாய் முறைத்தபடி 'நான் சொல்லி அப்படியே வருத்தப்பட்டுடாலும்…. அவ ஒரு அடாவடிமா அவளபத்தி தெரியாம பேசுறிங்க... என்ன பவ்யமா உட்காந்து இருக்கா....' என்றான் மனதிறக்குள்.

கவி அவரின் முகம் பார்த்து தயங்கியபடியே "இல்லை அத்த அவங்க எதுவும் சொல்லல" என்றவளின் படபடப்பு மட்டும் குறைவேனா என்றது.

'அப்பாடா... பரவாயில்லை மகாராணி உண்மையை ஒத்துகிட்டாங்க' என்ற பார்வையோடு அவன் பார்த்து இருந்தான். திருமணம் முடிந்த கையோடு பிறந்த வீட்டுக்கு சென்றவள் அங்கே இலகுவாய் இருந்து இருக்க இங்கே புது இடம், புது வீடு, புதுமனிதர்கள் என புது வாழ்வில் தன்னை புகுத்தி கொள்ள கொஞ்சம் படபடப்புடன் இருந்தவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது விட்டாள் அழுதுவிடுபவள் போல்தான் இருந்தாள்

ஆதி அவளின் தெளிவில்லாத முகத்தை பார்த்ததும் "ஏன்டா ராஜாத்தி

பயமா இருக்கா…" என்றபடி அவளின் முகவாயை தொட்டு நிமிர்த்த கண்களில் இருசொட்டு நீர் உருண்டது. "அய்யோ கண்ணு அழகூடாது இங்க பாருடா அழதமா" என்று அவளின் கண்களை துடைத்துவிட்டு "இது உன் வீடு... நீ நீயா இருக்கலாம் டா... உனக்கு நான் மாமியார இருந்தாலும் என் மனசுல நீ மகளாதான் இருக்க" என்று அவளின் தலையை ஆதுரமாய் தடவிகொடுத்து அவளின் பயத்தை போக்க முனைந்தார் ஓரளவு வெற்றியும் கண்டார்.

கண்களில் ஒரு சிறு நம்பிக்கை பிறக்க உதடு லேசாய் பிரிந்து புன்னகைக்க அவளின் பயம் தேவையற்றது என புரிந்து முகமும் சற்று தெளிந்து இருந்து அதனை உறுதிசெய்ய "ம் இப்படித்தான் எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருக்கனும்" என்றார் திருஷ்டி கழித்து.

அவளின் கண்களில் நீர்நிறைந்ததை பார்த்தும் இவனுக்கும் மனம் சற்று பதறியதுதான் 'எதுக்கு இப்போ சம்பந்தம் இல்லாம அழுகறா' என்றபடியே நினைத்து இருந்தாலும் தாயின் வார்த்தைகளில் அவள் சிரிப்பை கண்டவன் 'சிரிச்சா கொஞ்சம் அழகாதான் இருக்கா' என்று மனம் நினைப்பதை அவனாலும் மறுக்க முடியவில்லை. வலிந்து அந்த எண்ணத்தை உதறியவன்

"நல்ல கிளாஸ் எடுக்குறிங்க மா மகன்னு ஒருத்தன் வந்து உட்காந்து இருக்கானே என்ன பா எப்படி இருக்கன்னு சம்பிராதாயத்துக்காகவது விசாரிச்சிங்களா" என்று பேச்சிக்கு கேட்டாலும் இந்த காட்சியை அவன் மனம் ரசித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

"மாமியர் வீட்டுக்கு போயிட்டு வந்த மாப்பிள்ளைய என்னடா விசாரிக்கரது" என்று சிரித்தபடியே அவனை கேலி பேசினாலும் மகனை பற்றி நினைக்கும் போது அவருக்கு பெருமையாய் தான் இருந்தது.

ராஜராமனும் தன் பங்கிற்கு "கவி இங்க நீ எதுனாலும் தயங்காம என்னையோ உன் அத்தையையோ கேட்கலாம் மா இது உன் வீடு அத நீ என்னைக்கும் மறக்காத நானும் உன் அப்பாவை போல தான்" என்று அன்பான வார்த்தைகளை கூற மனம் நெகிழ்ந்து போனால் பார்கவி .

"அம்மா எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு கார்த்திய ஆர்டருக்கு கொடேஷன் ரெடி பண்ண சொன்னேன் அனுப்பி இருப்பான் நான் மேல போறேன்" என்று கூறி கேஷவ் எழுந்து கொள்ள

"கொஞ்சம் இருடா ஏங்க நீங்க சொல்றிங்களா இல்ல நான்" என்று ஆரம்பிக்கவுமே இடையில் புகுந்து நிறுத்தியவர்

"நானே சொல்றேன் ஆதி" என்றவர் "கல்யாணத்துக்கு நம்ம செந்த பந்தம் பிரெண்ட்ஸ்ன்னு யாரையும் கூப்பிடல முக்கியனாவங்களையாவது கூப்பிட்டு ஒரு சின்ன பங்ஷன் மாதிரி வைக்கலாம்னு நீங்க ரெண்டுபேரும் என்ன சொல்றிங்க" என்று அவரின் கம்பீர குரலில்

மனையின் முகத்தை பார்த்தவன் அது இப்போதைக்கு வேண்டாம் கொஞ்ச நாள் என கேஷவ் கூறும் போதே

"ஏன் இப்போ வேண்டாம்" என்றனர் பெற்றவர்கள்.

"கல்யாணத்துல தான் ஜெயந்த் இல்ல ரிஷப்ஷலாவது அவன் இருக்கனும் மா" என்று ஆதியை பார்க்க

"இன்னும் 1 மாசம் இருக்கே பா அதுவரையிலும்" என்று இழுத்தார் ஆதி ராஜராமன் தான் மகனின் பார்வை மருமகளை தொட்டு வர உண்மையான காரணத்தை யூகித்தவர் "ம் அவன் வந்த ஒரு வாரத்தில் பங்ஷன் வஞ்சிக்கலாம். நான் மாணிக்கத்துக்கிட்ட பேசிக்கிறேன்". என்றதும் நிம்மதி பெருமூச்சி ஒன்று வெளியேற்றியபடி கேஷவ் மேலே செல்ல போக டைம் ஆயிடுச்சி கண்ணா சாப்பிட்டு போயிடு என்றார் ஆதி

உணவு உண்டதும் கேஷவ் அறைக்கு சென்றிட சிறிது நேரத்திலே பார்கவி

அவனின் அறைக்கு சென்றாள். சுற்றி முற்றி பார்வையை ஓட்ட அவன் இல்லாததை கண்டு குளியலறையில் இருப்பதை தெரிந்து கொண்டவள் அறையின் நீளம் அகலம் என்று அக்குவேர் ஆணிவேராய் ஆராய்ந்த படியே நடந்திருந்தாள். இவனுக்கும் நமக்கும் 7ம் பொருத்தமாதான் இருக்குமோ இவ்வளவு நீட்டா கீளானா வைச்ச தொலைச்சி இருக்கானே…. இவன போலவே பாத்துக்க நம்மலால முடியுமா??? என்று அவனின் அறையை கண்டு கொஞ்சம் அரண்டுபோனாள்.

அவ்வளோ பளிச்சென்று இருந்தது அங்கங்கே அழகிய புகைபடங்களும் அழகிய கலைபொருட்களும், ஒரு ரேக்கில் கதை புத்தகங்களும் அடுத்ததில் அவனுடைய கேமிரவும் இருக்க இப்படியும் அப்படியுமாய் தொட்டு பாரத்தாள். பின் என்ன நினைத்தாலோ தன் கூட்டுக்குள் அடைந்தது போல முகம் சோர்ந்து தரையில் கண் பதித்து இருந்தாள்.

கேஷவ் குளியலறையில் இருந்து வெளியே வரும் சததம் கேட்க. அதுவரை தரையில் கண் பதித்து இருந்தவள் அவன் பாதம் கீழே தெரியவும் அவனை கீழே இருந்து மேலாய் பார்த்ததும் அன்னிச்சையாக திரும்பி நின்று கொண்டாள்.

"ஏன் இப்படியே வர்ரீங்க?" என்று அவனை பார்த்து விட்ட சங்கடத்தில் எரிச்சலாய் பேச

அவள் செய்கையை கண்டவன் சற்று கேலியாகவே "ஏன் எப்படி வந்தேன்?" என்றான் வேண்டுமேன்றே.

'கேக்குறான் பாரு கேள்வி…. டேய் மண்ணாங்கட்டி எனக்கு ரொம்ப அன்னிசியா இருக்குடா உன்னை இப்படி பாக்க…' என்று உள்ளுக்குள் பொங்கியவள் " ம்... இப்படி அரைகுறை டிரெஸ்ஸோட" என்று திரும்பி நின்றபடியே பேச

'எல்லாம் நேரம் டி இதுக்கு மேல எப்படி நைட்டுல டிரெஸ் போடுவாங்க' என்று நினைத்தவன் இந்த டிரெஸ்சுக்கு என்ன என்றபடி கண்ணாடியை பார்க்க ஸ்லிவ்லெஸ் உள்பனியனும் அரைக்கால் பேண்டும் அணிந்திருந்தான். "பாக்குற உன் கண்ணுல தப்புன்னா நான் என்ன பண்ணமுடியும்? ஒரு ஆம்பளைக்கு இந்த டிரெஸ் கூட போட சுகந்திரம் இல்லையா"என்று அவளை வெறுப்பேற்றியவாறே வேறு டீ சர்ட்டை அணிந்தவன் கட்டிலில் சென்று ஒய்யாரமாய் கால் நீட்டி அமர்ந்து கொண்டு லேட்பாபில் மெயிலை செக் செய்து கொண்டிருக்க

அவள் சங்கடத்துடனே திரும்பவும் அவனை பார்த்ததும் தான் அப்பாடா என்று மூச்சி விடவும் தோனியது மறுநிமிடமே மீண்டும் அறையில் ஆராய்ச்சி பார்வை பார்த்தவளை விசித்திரமாய் பார்க்க

"என்ன ஏதாவது தொலைச்சிட்டியா சுத்தி சுத்தி தரையிலையே தேடிட்டு இருக்க.."என்று கிண்டலாய் கேட்க

'ஆமாடா என் மூளைய தொலைஞ்சிட்டேன்... இல்லட்டி உன் கூட மல்லுகட்ட எனக்கு என்ன பைத்தியமா'

என்று மனதிற்குள்ளே அவனுக்கு கவுன்டர் கொடுத்தாலும் "நான் எங்க படுக்கறதாம்" என்றாள் கடுப்பாய்.

"ச்சச்சோ என்று பாவம் போல உச்சிக்கொட்டியவன் " இவ்வளவு பெரிய கட்டில்ல உனக்கு இடம் இல்லாமையா போயிடும்" என்றவன் மீண்டும் அவளை பார்க்க

"என்ன நக்கலா" என்று இடுப்பில் கைகளை வைத்தபடியே கேட்டவள் "என்னால ஒரே கட்டில்ல எல்லாம் படுக்க முடியாது" என்று காட்டமாய் கூறிவிட்டு சுற்றி ஒரு முறை பார்த்தாள்.

அவளின் எண்ணவோட்டத்தை புரிந்தவன் போல "என்ன பாக்குற உங்க வீடு போல இங்கேயும் சோபா இருக்கும்னு பாத்தியா"? என்றதும் திடுக்கிட்டு தான் போனால் அவள் எண்ணிக்கொண்டு இருந்ததும் அதுவே அல்லாவா 'ஒரு சோபா கூட இல்லையே' என்றுதான் நினைந்திருந்தாள்

அவள் முகத்தின் செய்தியை படித்தபடியே "நேற்றுவரையிலும் இருந்திச்சி நாம எப்போ இங்க வறோன்னு தெரிஞ்சுதோ அப்பவே எடுத்து வெளியே போட சொல்லிட்டேன்." என்று சிரிக்கமலேயே சொன்னவன் "முடிஞ்சா கீழ படு" என்றவன் சிறிது இடைவெளி விட்டு "இல்ல இந்த கட்டில்ல படு எனக்கு ஆட்சேபனைய் இல்லமா நான் ரொம்ப தாராளம்" என்று சர்வசாதரணமாய் சொல்லிவிட

அவளுக்குதான் தலையே சுற்றுவது போல் இருந்தது தரையில் படுத்து பழக்கம் இல்லாதது வேறு அவன் மேல் கடுப்பை கிளப்ப "இவன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கான் இவன் எது சொன்னாலும் கேட்டுக்குனுமா போட" இவறுக்கு ஆட்சேபனை இல்லையாமே மூஞ்சிய பாரு" என்று அவனை பல்லிடிக்கில் கடித்து குதறியவள் ஒரு பெட்சிட்டை விரித்து தரையில் படுக்க அரைமணி நேரத்திற்கு மேல் படுக்கமுடியாமல் போனதுதான் அந்தோ பரிதாபம் புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வருவேனா என்று அவளை பாடாய்படுத்த மனதில் அவனை வறுத்துக்கொண்டே கட்டில் விளிம்பில் சென்று படுத்துக்கொண்டாள்.

படுத்தது என்னவோ விளிம்பில் தான் ஆனால் காலையில் அவன் மேல் மலர்குவியல் போல் இருந்தாள் கைகள் அவன் இடையை சுற்றி இருக்க முகமோ அவனின் மார்பை தலையணையாக்கி துயில் கொண்டிருந்தது. மெல்ல விழித்தவளின் காதுக்கு வெகு அருகே டிக் டிக் என சத்தம் கேட்கவும் மெல்ல எழுந்து பார்க்க அவளுக்கு பக்கென்னு இருந்தது ...

'அய்யோ கடவுளே எப்படி நான் இவன் பக்கத்துல வந்தேன் கேவலமா நினைச்சிருப்பானோ நம்மல?? இந்த கருமத்துக்குதானே நான் கட்டில்ல படுக்க யோசிச்சேன்... இவன் பாத்து இருப்பானோ இன்னும் எந்திரிக்கல டக்குன்னு எந்திரிச்சி ஓடிடு கவி.. ஏற்கனவே ஏதேதோ பேசுவான் இப்படியெல்லாம் படுத்துட்டு இருந்தோம்னு தெரிஞ்சா மானத்தை வாங்குவானே... என்று தனக்குதானே மனதில் பேசியவள் அடித்து பிடித்து எழுந்து கொண்டாள்.

இப்படியே நாள் ஒரு சண்டையும் பொழுது ஒரு சம்பவங்களும் நடந்த வண்ணமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.....

ஆனால் பெரியவர்களின் முன்னால் இந்த பூனையுமா பால் குடிக்குமா என்ற பாவையில் சுற்றிக்கொண்டு இருந்தாள். அத்தைக்கு செல்ல மருமகளாய் இருக்க அவளை தாங்கு தாங்கென்று தாங்கினார் ஆதி. மகள் இல்லாத குறையை மருமகளின் மூலம் தீர்த்துக்கொண்ட ஒரு அக்மார்க் மாமியாராய் நடந்து கொண்டார்.

"கவிமா கவிமா" என்று சமயலறையில் இருந்து ஆதி குரல் கொடுக்க

பூஜை அறையில் விளக்கு ஏற்றியபடி இருந்தவள் "இதோ வறேன் அத்தை" என்று சமையலறைக்குள் சென்றாள்.

"இந்தடா இதை கொண்டு போய் அவன்கிட்ட கொடுத்துடு போற அவசரத்துல ஒன்னுமே எடுத்துக்க மாட்டான்." என்றபடி அவளின் காபியை நீட்ட "கொடுங்க அத்த" என்றவள் "அத்த நான் நாளைல இருந்து காலேஜ் போகனும்" என்றாள் தயங்கியபடி

"ஆமா டா நானே கேக்கனும் நினைச்சேன் மறந்துட்டேன். உனக்கு இங்க இருந்து காலேஜ் பக்கமா தூரமா கவிமா"

"இங்க இருந்து கொஞ்சம் தூரம் தான் அத்த" என்றவள் "அவரு அவருகிட்ட நீங்க சொல்றிங்களா"? என்றாள் அவளாய் போய் சொல்லி அவள் மேல இருக்க கடுப்பில் வேண்டாம்ன்னு சொல்லிட்டான என்ன செயவது என்ற நினைப்பில் தான் அத்தையை துணைக்கு அழைத்து பேச வேண்டும் என்றாள்.

"கவிமா நான் அவன்கிட்ட சொல்றேன் எதுக்கும் அதுக்கு முன்னாடா நீ ஒரு வார்த்தை அவன் கிட்ட சொல்லிடுடா" என்றவர் போடா என்று அனுப்ப

அவனிடம் எப்படி பேசுவது என்று ஒத்திகை பார்த்தபடியே மேலே ஏரி வந்தவளின் கவனம் முழுவதும் அவள் சொல்லபோகும் விஷயத்திலேயே இருக்க எதிரில் திரும்பி நின்று கோப்புக்களை சரிபார்ததிருந்தவனை கவனிக்க தவறி அவன் மேல முழு காபியையும் அபிஷேகம் செய்தாள் பார்கவி.

அச்சோ என்று பதறியவள் சாரி சாரி என்று மன்னிப்பை கோர

அவனுக்கோ அவளிடம் போதும் போதும் என்றனது ஜான் ஏறினால் முழம் சறுக்குவது அவளிடம் சற்று நிதனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது எல்லாம் இதே மோல் ஏதாவது ஏடகூடமாய் செய்துவிடுவாள்.

"ஹேய்....... அறிவிருக்காடி" என்று அவளை பார்த்து கத்த

ஏன் இருந்தா எனக்கு தரபோறிங்கள என்று மைனட் வாய்ஸ் ஓடினாலும் "அதான் சாரி சொல்லிட்டேன்ல இப்போ எதுக்கு இப்படி கத்துரிங்க" என்றாள் கண்களை உருட்டி

அவனின் உடையை கழட்டிக்கொணடே "பின்ன கொதிக்க கொதிக்க காபில அபிஷேகம் பண்ணா இளிச்சிக்கிட்டே பேசுவாங்களா" என்றான் எரிச்சாலில்.

'போடா தடிமாடு வேணும்னே கொட்டுனா மாதிரி இல்ல பேசுறான் வார்ர கோவத்துக்கு உண்மையாவே ஒரு நாள் உத்ததான் போறேன்' என்று மனதில் எண்ணியவள் "நான் பாத்துதானே வந்தேன்.... நீயா எதிர்ல வந்து நின்னா நான் என்னடா பண்றது" என்றாள் அவனை முறைத்து.

"என்னது டா வா பண்றதை யும் பண்ணிட்டு கேட்டா நீதானேடா வந்தன்னு சொல்ற உன்னை என்ன செய்யறது" என்று அவளருகில் வர

"இங்க பாரு எதுனாலும் தள்ளியே நின்னு பேசு சும்மா சும்மா பக்கத்துல வந்து கடுப்பேத்தத" என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்தபடியே பின்னாள் செல்ல

பக்கத்தில் இருந்த துட்டை சுருட்டி அவள் மேல் போட்டு உடலை உடல் உறசாதவாறு அவளை பக்கத்தில் இழுத்தவன் இன்னொரு முறை ஏருக்கு மாறா பேசுனா பேசுற இந்த வாய்க்குதான் தண்டனை கிடைக்கும் பாத்துக்க" என்றதோடு அடுத்த உடையை எடுத்து அணிந்தவன் விடுவிடுவென ஆபீஸ் பேகுடன் கீழே இறங்கிவிட இவளுக்குதான் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. இப்போ இவன் என்ன சொல்லிட்டு போறான் வாயிக்கு தண்டனை னா பல்லை உடைச்சிடுவானோ…. இல்லை வாயை உடைப்பேன்னு சொல்லாம சொல்றானோ…. என்று யோசித்தபடி இருக்க அவன் கூறிய அர்த்த்தில் பார்கவி யோசிக்கவே இல்லை.

கேஷவின் அலுவலகம்

"கார்த்திக் என்ன கொடேஷன் அனுப்பி வைச்சிட்டு இவ்வளவு யோசிக்கிர"?

"நாம கரைக்ட்டான பாதைல தான் போறோமா கேஷவ் எதுக்கு ஜெய்கிட்ட ஒரு வார்த்தை" என்று சொல்ல

"கவலைபடாத கார்த்தி ஜெய்க்கு தெரியாம எதுவுமே இங்க நடக்காது... காலைலயே அவனுக்கு எல்லாம் சொல்லிட்டேன் எனக்கு லேசா ஒருத்தர் மேல டவுட் வந்து இருக்கு…. இது அந்த ஒன்னுமூலமாதான் ஊர்ஜிதம் ஆகும்ன்னு நான் நம்புறேன்.. என் கணிப்பு இப்போ தப்பா நடக்காது கார்த்தி கவலைபடாதே" என்று அவனுக்கு தைரியம் சொல்ல

அவன் தோளில் சிறிது அழுத்தம் கொடுத்து "எல்லாம் நல்லதா நடக்கும் கேஷவ் நமக்கு எவ்வளவு மென்ட்ல் டார்ச்சர்….. சே அதை கொடுத்தவன் எவன்னு கண்டுபிடிக்கனும் டா ஒவ்வொரு ஆர்டரும் முடிக்கும் போது அவ்வளவு டென்ஷனா இருக்கும். இப்போ என்ன பிராப்ளம் வருமோன்னு கொஞ்சம் கூட நிம்மதியே இல்லமா சுத்திட்டு இருப்போம்." என்று தன் ஆதங்கத்தை கொட்ட

"இது மட்டும் நிறுபணம் ஆகட்டும் அன்னைக்கு இருக்கு பெரிய அதிர்வேட்டு" என்று கூறும்போதே கேஷவின் மொபைல் ரிங் ஆனது "ஹலோ கேஷவ் இயர்"

"ஹாய் கேஷவ் நான் சக்தி மாச்சன்" எனவும்

"என்ன மச்சா சர்பிரைஸா கால் பண்ற… சொல்லு டா "என்று பேச

"உன்கிட்ட கொஞ்சம் பேசனுமே மாப்ள"

"என்கிட்டயா ம்… எங்க வரனும் மச்சான்"

சக்தி ஒரு காபி ஷாப்பின் பெயரை கூற ஒரு அரைமணி நேரத்துல வறேன் என்றவன் அழைப்பை துண்டித்தான்.

"என்ன மாப்பிள பேசனும்னு வரசொல்லிட்டு அமைதியா இருக்க" என்றான் கேஷவ்.

"பேசனும் தாண்டா ஆனா எப்படி ஆரம்பிக்கரதுன்னு தான் தெரியல"

"என்ன மாப்பிள ஏதாவது பெரிய விஷயமா"?

"ம் ஆமா மச்சான் உன் மாமனாரு சம்பந்தபட்ட விஷயம்"

"என்ன மாமா சம்மந்தபட்டதா என்ன மாப்பிள சொல்ற"?

"ம் ஆமாடா டா இது கொஞ்சம் காம்பிளிகேட்டான விஷயம்" அதான் என்று இழுக்க

அவன் முகத்தையே கேஷவ் பாத்திருக்க "உங்க மாமானருகிட்ட ஏதோ ரகசியம் இருக்குடா.. மந்திரி ஆளவந்தானோட ஆளு ஒருத்தன் இன்னைக்கு ஒரு கேஸ்ல என்கிட்ட மாட்டினான்…. அவன் சொன்னது எல்லாம் வைச்சி பார்த்த மாணிக்கம் சார் இப்போ பெரிய ஆபத்துல இருக்காமாதிரி இருக்கு" என்றதும்.

ஒரு நிமிடம் அதிரிச்சியானவன் "என்ன சொல்ற சக்தி அவன் அவன் என்ன சொன்னான்" என்றான் பதட்டத்துடனே

"அவனை போதைல இருந்தபோது தான்டா பிடிச்சோம் ஒரு கொலை கேஸ் அவன் மேல இருக்கு.. அவனை பிடிச்சபோ இங்க உங்க மாமானாரோட உயிருக்கும் ஆபத்து இருக்குன்னு தெரியுது டா அவன் சொன்ன சம்பவத்தை எல்லாம் சேர்த்து வைச்சி பாக்கும்போது அவர்கிட்ட ஏதோ ஒரு ரகசியம் இருக்கு மச்சி அவரை கொஞ்சம் பாதுகாப்பா இருக்கு சொல்லு அவரை கொல்லவும் ஆளை ஏற்பாடு பண்ணி இருக்காங்க போல அந்த ரகசியம் என்னனவது சொல்ல சொல்லுடா இது நான் தனியாவே டீல் பண்ணி இருப்பேன் பட் அவரு எதுக்கும் அசஞ்சி கொடுக்கமாதிரி தெரியலை ஒரு கம்ளைன்ட் கொடுத்ததான் என்னால பர்தரா மூவ் பண்ணி அவருக்கு போலீஸ் புரோடக்ஷன் கொடுக்க முடியும். சரி அதான் உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்" எனவும்

"தெங்கஸ் சக்தி மாமாகிட்ட இதுபத்தி பேசுறேன் என்னன்னு தெரிஞ்சிக்கிறேன்… இதை என்கிட்ட சொன்னதுக்கு ரொம்ப தெங்க்ஸ் டா" என்று சொல்லவும்

"விடு டா இது என் கடமை தெங்க்ஸ்லாம் வேண்டாம் ரெண்டு காபி சொல்லு" எனவும் டக்கென சிரித்து விட்டான் கேஷவ். அதன் பிறகு நண்பர்கள் சிறிது நேரம் பேசிவிட்டே சென்றனர்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 21
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN