ஆழி சூழ்ந்த உலகிலே...6

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"அது எப்படி சொல்லரதுன்னு தெரியல. நான்... ஐம் இன் லவ் வித் யூ..." என்று திக்கித்தினரி தன் காதலை சக்தியிடம் கூறிய அர்ச்சனா அவனின் முகத்தை ஆராய அவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவளுக்கு சொல்லாமல் சொல்லியது அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று.
பலமணிநேரங்களாக சக்தியின் அன்பான செயல்களையே கவனிக்கும் பதின் பருவ மங்கையான அர்ச்சனாவிற்கு அவன் மேல் காதல் வந்தது அவ்வளவு பெரிய விஷயமல்ல. ஆனால் அரசு பொதுத்தேர்வு வரப்போகும் சமயத்தில், ராஜரத்தினம் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் காதல் கத்தரிக்காய் என மனசை அலைய விடுவது முற்றிலும் தவறான எண்ணம் என்றே சக்திக்கு தோன்றியது.
"நீங்க நல்லா யோசிச்சு நைட் பதில் சொல்லுங்க... ஒன்னும் அவசரம் இல்லை..." அவன் யோசிப்பதை பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல இருக்கையில் இருந்து எழ அவளை கைக்காட்டி தடுத்த சக்தி,
"நல்லா யோசிச்சு நைட் முடிவு சொல்லனும்... யோசிக்க ரொம்பவே நிறைய நேரம் கொடுத்து இருக்க..." என்றவனுக்கு பதிலாக ஒரு சிறிய புன்னகையை அளித்தாள்,
"அப்புறம் மனசு படபடப்பாவே இருக்கும்... எக்ஸாம்ஸ் வருது... படிக்க முடியாது இல்ல... அதான்..."
"அம்மணிக்கு பப்ளிக் எக்ஸாம் இருக்கிறது எல்லாம் நியாபகம் இருக்கா... சரி நீ ஸ்டேட் பஸ்ட் வந்தா நான் உன்ன லவ் பன்னரேன்..." என்று அசால்ட்டாக கூறியவன் அவளின் பயந்த விழிகளை பார்த்து என்ன நினைத்தானோ "அர்ஜூன் மாமா ஸ்டேட் பஸ்ட் வந்தாரு... அட்லீஸ்ட் நீ டிஸ்டிக் பஸ்ட் வா... நான் கண்டிப்பா உன்னை லவ் பன்னரேன்..." என்றவன் அவள் ஏதோ கூற வர கையை காட்டி தடுத்து அவனின் கைக்கடிகாரத்தை சுட்டிக்காட்டி கதவை பார்க்க எழுந்தவள் அமைதியாக வெளியே சென்றாள்.
‌ ‌ ராஜரத்தினம் மத்திய அரசு வங்கியில் பணியாற்றுவதால் அவரை இந்தியா முழுவதும் உள்ள பல கிளைகளுக்கு அடிக்கடி பணி மாறுதல் செய்து கொண்டே இருந்தனர். பிள்ளைகளின் படிப்பு கெடவேண்டாம் என்பதால் அர்ஜூனையும் அபிநயாவையும் அவர்களின் தாத்தா பாட்டியிடம் விட்டு விட்டார்.
கண்டிப்பு மிகுந்த தாத்தாவிற்கு பயந்தே அவர்கள் இருவரும் நன்றாக படிக்க, அர்ச்சனாவோ சிறு பெண் என கூறிக்கொண்டு தாய்தந்தையுடனேயே இருந்து நிரந்தர பள்ளி அமையாது கஷ்டப்பட்டு படித்தாள். படிப்பு கெடுகிறது என்று அவளால் தன் தாய் தந்தையை விட்டு பிரியவும் மனமில்லை. சுமாராக படிக்கும் அவளிடம், சக்தி மாநிலத்தில் முதல் மாணவியாக வரும்படி கூற அவன் சொல்லியதை மூன்று நிமிட பாடலில் செய்து முடிக்க அவள் ஒன்றும் சினிமாவில் நடிக்கவில்லையே...
தேர்ச்சி பெற்றால் போதும் என நினைப்பவளுக்கு முதல் மாணவியாக வருவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று என்று அப்போது அவளுக்கு தோன்றவில்லை. காதல் மேல் உள்ள நம்பிக்கையில் சக்திக்காக முயற்சி செய்வோம்... என்னால் முடியும் என நினைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை பல பேர் பல மாதங்களாக தங்களை தயார் படுத்திக் கொண்டு இருக்கும் போது கத்துக்குட்டி இவளால் ஒன்றும் செய்ய இயலாது என்று.
அர்ஜூனின் மனதில் காலையில் நடந்த விஷயங்களே நிழலாடியது.
"அஜூ... நம்ம சிவரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணுப்பா... அவ கூட நீ சேர்ந்து வாழரத நான் பார்க்கனும். அப்போ தான் இப்போ நான் உயிர் பிழச்சதுக்கு அர்த்தமே இருக்கும். உன் கைய காலா நினச்சு கேட்கரேன். அவளை விட்டு விளகிடாத..." என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் காற்றுக்காக தினற கதிகலங்கியவன் உடனே மருத்துவரை அழைத்து விவரம் கூறினான்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவரை நிதானத்திற்கு கொண்டு வந்து பிறகு நார்மல் வார்டில் மாற்ற கோரி பணியாளர்களிடம் கூறியவர் அர்ஜூனிடம் ஐ.சி.யு பில்லை கட்டிவிட்டு வரும்படி கூற வரவேற்பார்களிடம் பணம் கட்ட சென்றவன் காரில் இருந்து இறங்கி வந்த தன் அன்னையை பார்த்துவிட்டு அவர்களை அழைத்து வந்த சக்தியை பார்த்தவனுக்கு கோபமாக வந்தது.
'ராஜரத்தினம் கண்விழிக்கும்போது அவன் கூட இல்லையே... அவர் காற்றுக்காக திணறும் போது எங்கே சென்றான்....' என நினைத்து கோபம் கொண்டவனுக்கு தன் தந்தை அந்த நிலையிலும் சிவரஞ்சனிக்காக பேசியது வேறு இடிக்க என்னமோ நடந்து இருக்கிறது என யூகித்தவன் அவளை தேட அவள் வராதது இன்னும் கோபத்தை ஏற்படுத்தியதால் அவள் மனதை நோகடிக்க வேண்டும் என்றே அவளை தொலைபேசியில் அழைத்து அவ்வாறு பேசினான்.
ஆனால் அவள் விவாகரத்து கேட்டது அவன் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. தெரியாமல் கூட அவன் இதுபோன்று யோசித்தது இல்லை. ஏனெனில் அவன் வளர்ந்த சூழ்நிலை அப்படி. தற்போது அவனுக்கு கைப்பொருளை நழுவ விட்டது போல் இருந்தது. காதலி பிரிந்து சென்ற போது கூட 'அப்பாடா...' என்றே நினைத்தான். ஆனால் மனைவி பிரிய வேண்டும் என்று கூறியது அவனை பெரிதும் பாதித்தது. அந்த நிமிடம் அவள்மேல் அவனுக்கு இருந்த அத்தனை வெறுப்புக்களும் துணி கொண்டு துடைத்தார் போல் காணாமல் போய் அவள் பிரிந்துவிடுவாளோ என்ற ஏக்கமே மனதில் நிறைந்து இருந்தது.
அவன் என்றும் தவறாக நினைக்காத அவளிடம் வீசிய அவனின் கடும் சொற்கள் இன்று அவனுக்கு கசந்தது. அதற்காக அவளிடம் சென்று வாழ்க்கை பிச்சை கேட்கவும் அவன் விரும்பவில்லை.
‌ வாழ்க்கை பிச்சை கேட்கப்போகிறேனா... தற்போது நினைத்து பார்த்தவன் அவள் என்ன அவ்வளவு பெரிய ஆளா... என நினைக்க ஒரு இகழ்ச்சியான சிரிப்பு தான் வந்தது. ஒரே வார்த்தையில இப்படி ஆக்கிட்டாலே... என நினைத்தவன் எப்படியேனும் போகட்டும் என அவளை விட்டுவிட முடியவில்லை.
அருகில் அமர்ந்து இருந்த மகன் எதையோ நினைத்து சிரிப்பதும் திடீரென அதை நிறுத்துவதும் ஏதோ யோசிப்பதுமாக இருக்க அதை கவனித்த லட்சுமி என்ன என்று விசாரிக்க ஒன்றும் இல்லை என தலையாட்டியவன் ராஜரத்தினத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட அறையிலேயே லட்சுமியை விட்டுவிட்டு சற்று வெளியே நடக்கலாம் என நினைத்து வராண்டாவில் நடந்தவன் கண்களில் பட்டது அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து இருந்த அர்ச்சனா தான்.
‌‌. "அச்சு... என்ன நீ இன்னும் சோகமா இருக்க... அதான் அப்பா இப்போ நல்லாகிட்டாரே... ஒன்னும் இல்லடா..." என்றவன் அவளை தன் தோலில் சாய்த்து தலையை வருடி கொடுக்க அதில் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
"என்னால் முடியும்... முடியும்..." அர்ச்சனா மனதில் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்க அவளின் மூளை ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சம் படித்து வைத்து இருந்ததை அசைப்போட ஆரம்பித்து இருந்தது.
'கல்யாணம் ஆகிடுச்சு, ஏத்துட்டு வாழ்வோமா... அதுலாம் உன்னைத் தவிர வேற எந்த பெண்ணை மேரேஜ் பண்ணி இருந்தேன்னாலும் கண்டிப்பா செய்து இருப்பேன். ஆனா என் நேரம் உன்னை கட்டிக்க வேண்டியதா போச்சு...' வீட்டில் சிவரஞ்சனி அர்ஜூன் பேசிய வார்த்தைகளை அசைபோட்டு கொண்டு இருந்தாள்.
ஏன் அவனுக்கு தன்மீது இத்தனை வெறுப்பு என்று சத்தியமாக அவளுக்கு புரியவில்லை. வேறொரு பெண்ணை ஏற்க முடியும் என்பவனால் அவளை ஏற்க முடியாமல் புறக்கணிக்க என்ன காரணம் என்று அவளுக்கு தெரியவில்லை. தெரியாமல் கூட அவள் பிறருக்கு தீங்கு செய்தது இல்லை. அப்படி இருக்க, குறிப்பிட்ட அவளை மட்டும் ஒருவன் வெறுக்கிறான் என்பது அவளுக்கு புரியாத புதிய தகவல்.
ஏன் என்று கேட்கவும் அவள் தயாராக இல்லை. கேட்டு அவளின் பக்கம் தவறு இருந்தால் திருத்தி, மன்னிப்பு கேட்டு அவனுடன் மனமொத்த வாழ்வு வாழலாம்... ஆனால் இவ்வாறு பேசும் அவனிடம் தன்னிலை விளக்கம் அளிக்க அவளின் தன்மானம் இடமளிக்கவில்லை. விவாகரத்து கொடுத்து விட்டு நீ யாரையாவது கல்யாணம் பன்னிட்டு சந்தோஷமாக குடும்பம் நடத்து என்று அவன் போக்கில் விட்டுவிடவும் மனமில்லை. இடையில் ராஜரத்தினத்தின் உடல்நிலை வேறு... பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் கடவுளின் கையில் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு தன் வேலைகளில் மூழ்க ஆரம்பித்தாள்.
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...6
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN