யாசிக்கிறேன் உன் காதலை - 8

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖 யாசிக்கிறேன் உன் காதலை - 8💖

"என்ன விஷயங்க??", என்றார் அபிராமி.


"நம்ம ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா போடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம், இந்த தடவ முதல்மரியாதை நம்ம குணாவுக்குத் தான்", என்றார் நேசமணி சந்தோஷமாக. அனைவரின் முகமும் மலர்ந்தது அபி மற்றும் நேகா புரியாமல் முழித்தனர்.

"எனக்கு வேணா! கந்தன் அப்பாவுக்கு, வரதா அப்பாவுக்கு இல்லனா தம்பிகளுக்குப் பண்ணுங்கன்னு சொன்னேன், இவங்க யாருமே கேக்கவே இல்ல", என்றார் குணா லேசான வருத்தத்துடன் அப்பா மற்றும் தம்பியைக் காட்டி.

"அண்ணா..!! குணா..!! மாமா..!! உங்களுக்குத் தான் முதல்மரியாதை தரனும்", என்றனர் அம்மாக்கள் தங்கைகள் மற்றும் தம்பியின் மனைவிகள்.


"முதல் மாரியாத்தாவா?? ", என்றாள் அபி குழப்பமாக.

"அது முதல் மரியாதை அபி, அப்படின்னா என்ன??", என்றாள் நேகா திருத்தி.

"முதல் மரியாதைய முதல் மரியாத்தாவா மாத்திட்டியே!!", என்றான் நந்து கிண்டலாக.

"ஏய்!! போடா!", என்றாள் முறைப்புடன்‌.

"அபிமா!! முதல் மரியாதைனா இந்த மாதிரி கோவில் திருவிழால முண்டாசு கட்டி, அது என்னனா பட்டுத் துண்ட தலைல தலப்பா மாதிரி கட்டி மால மரியாதை எல்லாம் பண்ணுவாங்க மா", என்றார் நேசமணி விளக்கமாக அபியிடம்.

"பேபிடால்!! அபி குட்டி!! டாடிக்கு முதல் மரியாதை பண்றப்ப நிறைய ஃபேன்ஸ் வருவாங்க, அப்ப உங்க மீ ஃபைட் பண்ணுனா நீங்கதான் சரி பண்ணனும் ஓகே!!", என்றார் பொய்யான பயத்துடன்.


"ஓ...", என்றனர் சிறியவர்கள் கோரசாக. பெரியவர்கள் சிரித்தனர்.

"சரி! வரதா கந்தா திருவிழாவுக்கு தண்டோரா போட சொல்லு, காப்பு கட்டிட்டா யாரும் ஊற விட்டு போகக் கூடாது, அப்படியே பூசாரிக்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் போடச் சொல்லு", என்று நேசமணி பேசியவாறு தம்பிகளுடன் வெளியே சென்றார்.

"மாமா!! தாத்தா டாலு கேட்டதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணலன்னு தானே நீங்க ஏதோ பேசி சமாளிக்கிறீங்க?", என்றான் துரு மெதுவாக.


குணா துருவை அணைத்து விலகி," சரியா சொன்ன டா! உன் தாத்தா ஒரு ஒரு நாளும் ஏன்டா இங்க வந்தோம்னு ஃபீல் பண்ண வச்சுருவாரு போல, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் எப்போதுமே ஒத்துமையா இருக்கணும், எந்த மனக்கசப்பும் வரக்கூடாது", என்றார் தவிப்புடன்.

"அப்படி எல்லாம் எதுவும் நடக்காது மாமா" .


"ஆமா! குணாப்பா! எந்த பிராப்ளம் வந்தாலும் பாத்துக்கலாம், இப்படிலாம் நினைக்காதீங்க", என்றான் சந்தோஷ் சமாதானமாக.


"இல்ல சந்தோஷ்! உங்க தாத்தா சும்மா இருக்க மாட்டாரு, நாளைக்குத் திருவிழா வேற வரப் போகுது, அபிக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும், அதப் பார்த்து நேகா கேட்டா நீங்க எல்லாரும் அவளத் தானே தப்பா நினைப்பீங்க? ஆனா அவ பக்கம் யாரும் பார்க்க மாட்டீங்க", என்றார் வருத்தமாக.


"கண்டிப்பா அப்படி எல்லாம் நினைக்க மாட்டோம்", என்றனர் இருவரும். குணா சிரித்தார்.


"டாடி..! டாடி..!! உங்க கிட்ட ஒரு இன்பாட்டன் மேட்டர் சொல்லணும்", என்றாள் வேகமாக பக்கத்தில் வந்து.


"சொல்லுடா!", என்றார்.

"டாடி!! என் பேசன்ட் ஜெனி குட்டிக்கு ஹாட்ல ப்ராப்ளம் இருக்குமோனு டவுட் இருந்ததுல? இப்ப ரிப்போர்ட் வந்துருச்சு, எந்த ப்ராப்ளமும் இல்ல", என்றாள் சந்தோஷமாக.


"ரொம்ப ஹாப்பியா இருக்கு டா", என்றார் அவளை அணைத்து.

"ஆமா! எப்படி தெரிஞ்சது??", என்றார் அகிலா.


"நைட்ல இருந்து அதுக்காகத்தான் மெயில் செக் பண்ணிட்டே இருந்தேன், ஹாஸ்பிடல்ல இருந்து எனக்கு அனுப்பிட்டாங்க", என்றாள் குணாவிடம் இருந்து விலகி சிரிப்புடன்.


"ஜெனி இப்ப எப்படி இருக்கா??", என்றாள் அபி சந்தோஷமாக.


"ஷி இஸ் வெரி பைன்", என்றாள் சிரிப்புடன்.

"என்ன விஷயம்னு எங்களுக்கும் சொன்னா நாங்களும் சந்தோஷப்படுவோம்ல", என்றாள் சந்தியா ஆர்வமாக.

"ஜெனிக்கு இப்பதான் ஃபைவ் இயர்ஸ் ஓல்டு, அங்க எங்க ஸ்ட்ரீட்ல தான் அவ வீடும் இருக்கு, ஒரு நாள் அவ மயங்கி விழுந்துட்டா, அவளுக்கு ஹார்ட் பிராப்ளம் இருக்குமோன்னு எங்களுக்கு ஒரு டவுட்டு, நா ஒர்க் பண்ணுற ஹாஸ்பிடல்ல தான் அவள அட்மிட் பண்ணுனாங்க, க்யூட் பேபி!! எனக்கு அவள விட்டுட்டு இங்க வர மனசே இல்ல, ஹாஸ்பிடல்ல ரிப்போர்ட் வந்த உடனே எனக்கு அனுப்ப சொல்லிட்டு வந்தேன் அனுப்பிட்டாங்க", என்றாள் சிரிப்புடன்.

"இந்த வயசுல அவளுக்கு என்ன தெரியும்?? நல்ல வேலை ஒன்னும் ஆகல", என்று பாட்டிகள் மேலே பார்த்துக் கும்பிட்டனர்.

பிறகு அப்பாக்கள் வெளியே சென்றனர். அம்மாக்களும் பாட்டிகளும் உள்ளே சென்றனர். சிறுவர்கள் மட்டும் அங்கே இருந்தனர். "பேபிடால்!! உன்ன காணோம்னு தாத்தாகிட்ட சொன்னதும் எதுக்கு அவரு ஹால்ல இருக்குற ரூம்ம போய் பாத்தாரு? அதுதான் ஏன்னு புரியவே இல்ல", என்றாள் அபி யோசனையுடன். மற்றவர்களும் குழப்பமாகப் பார்த்தனர்.

"எந்த ரூம் ??".


"வா!!", என்று ஹாலுக்கு இழுத்துச் சென்று மரக்கதவு ரூமை காட்டினாள். சிறியவர்களும் பின்னாலேயே சென்றனர்.


"ஓ..... இதுவா? நீ வந்தல்ல? அன்னைக்கு இந்த ரூம்ல யாரோ சாந்திமுகூர்த்தமாம் அவங்களுக்காக வேணும்னு உள்ள ஏதோ பண்ணி வச்சிருந்தாங்க, உள்ள போய் பார்க்கலாம்னு போக போனப்ப வாட்ச்மேன் மாதிரி ஒரு தாத்தா ஸ்டிக்க வச்சு மிரட்டிட்டு உள்ள விடல", என்றாள் பாவமாக.

அபியைத் தவிர மற்றவர்கள் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்தனர். "யாரு???".


"அது தெரியல அபி, நீ வந்ததும் இத நா மறந்தே போயிட்டேன்".

"யாரு அந்த சாந்திமுகூர்த்தம்??", என்றாள் அபி மற்றவர்களிடம்.

"அது ஆள் இல்லடா, அது ஒரு ஃபங்ஷன்", என்றான் ரிஷி கிண்டலாக.


"ஐயோ!! இது கூட உங்க ரெண்டு பேருக்கும் தெரியல, உங்க ரெண்டு பேரையும் பெரிய ஆளுங்கல்லா நா நினைச்சேன், இது கூட தெரியாம இருக்கீங்க", என்றாள் மித்ரா கிண்டலாக.


"நீ ஒன்னும் சொல்ல வேணா, கோ!", என்றாள் நேகா முறைப்புடன்.

"ஹ்ம்ம்.. நீயே அப்படி கண்டுபிடிச்சுருவ பாரு", என்றான் நந்து கிண்டலாக.

"பேபி!! போன்ன குடு கூகிள்ல பார்க்கலாம்", என்று பேபிடால் கையில் இருந்த சந்தோஷ் போனை வாங்கிப் பார்த்தாள்.


"அபி!! சொல்லு இந்த நந்துபாய் காதுல சத்தமா விழுகுற மாதிரி சொல்லு, அவனுக்கும் மித்துக்கும் ஒரு மேட்டர் தெரிஞ்சுருச்சா ஏதோ பெரிய ஆளு மாதிரி பேசுறது, சொல்லு அபி சத்தமா??", என்றாள் பேபிடால் நக்கலாக. அபி மொபைல் பார்த்துக் கொண்டு மற்றவர்களைப் பார்த்து முழித்தாள்." சொல்லு அபி!! என்ன போட்டுருக்கு".

"அதுடா! பேபி! சாந்திமுகூர்த்தம்னா ஃபஸ்ட் நைட்", என்றாள் மெதுவாக. பேபிடால் மற்றவர்களைப் பார்த்து முழித்தாள். அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.


"சரி! சரி!! ரெண்டு பேரும் முழிக்காதீங்க", என்றான் சந்தோஷ் சிரிப்புடன்.


"மை டியர் பேபிடால்! டார்லிங்!!", என்று ரவீன் உள்ளே வந்தான். அவனை வரவேற்றனர்.


"நீ எதுக்கு இப்ப வந்த???", என்றாள் அபி கோபமாக.


"ஏன் வரக்கூடாதா?? சந்துகுட்டி!! மித்துகுட்டி!! இந்தாங்க ரெண்டு பேருக்கும்", என்று இருவருக்கும் கவரை கொடுத்தான்.


"தேங்க்யூ மாமா!! தேங்க்யூ அண்ணா!!", என்றனர் இருவரும் சந்தோஷமாக.


ரவீன் சிரிப்புடன் தலையை ஆட்டிவிட்டு," சொல்லு டார்லிங்!", என்றான் அபியிடம்.


"உனக்கு எத்தன தடவ கால் பண்ணுனேன் எடுத்துட்டியா??", என்றாள் முறைப்புடன்.

"சாரிடி!! ஆபீஸ் ஒர்க் வந்திருச்சு, அதுக்கப்புறம் ஆதி தியா கிட்ட பேசிட்டு இருந்தேன், ரெண்டு பேரும் இன்னும் இரண்டு நாள்ல வந்தாலும் வருவேன்னு சொன்னாங்க".


"ஓ....", என்றாள் முறைப்புடன்.


"எங்ககிட்ட இந்த விஷயத்தைச் சொல்லாம உன்கிட்ட சொன்னாங்களா?? இத நாங்க நம்பனுமா?? பொய்!!", என்று பேபிடால் அவன் முதுகில் அடித்தாள்.


"துரை சித்தப்பா தான் சொன்னாங்க, போதுமா?? விடு தாயே!!", என்று கும்பிடு போட்டான்.

"என்ன ஃப்ரெண்ட்ஸ் குள்ள ஃபைட் கிரியேட் பண்ண பார்க்குறீயா???", என்றாள் கோபமாக.


"ஐயோ!! அம்மா தாயே!! மலை இறங்கு, சாரி!! வேலை இருந்தது டி, சரி! வீட்டுக்கு வந்து பாக்கலாம்னு பண்ணல, டேய்! சமாதானம் பண்ண வாங்க டா!", என்றான் ஆண்கள் ஐந்து பேரையும் பார்த்து.


"என்ன மாம்ஸ்? இதுக்கேவா? அபிக்கா உன் கோபத்த அடிச்சு காட்டு, இரு நா போயி குச்சி எடுத்துட்டு வரேன்", என்றான் கிண்டலாக.


"கொண்டுவா நந்து", என்றாள் அபி வேகமாக. மற்றவர்கள் சிரிப்புடன் பார்த்தனர்.


"பேபிடால்!! ஹெல்ப் மீ!", என்றான் கெஞ்சலாக.


"எனக்கு என்ன வாங்கித் தருவ??", என்றாள் கிண்டலாக.


"லஞ்சமா??", என்றான் ரிஷி கிண்டலாக.


"ஆமா டா!! கிராதகி! சமயம் பார்த்து அடிப்பா, நீ கேக்குறத வாங்கித் தரேன்", என்றான் கெஞ்சலாக.


"அபி!! ரவீனுக்கு எத்தன டைம் கால் பண்ணுன?".


"ஃபைவ்!", என்றாள்.


"ஓகே!! அவன் மேல உனக்கு எவ்ளோ கோவம் இருக்கு??", என்றாள்.


"என்னைய காலி பண்ணாமல் விடமாட்டா போல!", என்றான் ரவீன் மெதுவாக. பக்கத்தில் நின்ற ஆண்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

"அவன காலி பண்ணுறளவுக்கு", என்றாள் ரவீனை முறைத்துக் கொண்டே.


"சரி! நீ கால் பண்ணதுக்கு அட்டென்ட் பண்ணல, பட் நேர்ல வந்து சாரி கேட்டு இருக்கான், உனக்கு வேற என்ன வேணும் அபி?! லீவ் இட்!", என்றாள் அவள் கன்னத்தில் முத்தமிட்டு.


அபியும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "ஓகே ரவீன்!! பொலச்சு போ", என்றாள் சிரிப்புடன்.


"டார்லிங்!! நைட் லேட்டா தான் உன் கால் பார்த்தேன், அதான் நேர்ல பேசலாம்னு வந்துட்டேன்", என்றான் அவளை லேசாக அணைத்து விலகி.


"இட்ஸ் ஓகே!! சாப்பிடலாம் வாங்க", என்று உள்ளே அழைத்துச் சென்றாள். பெரியவர்கள் ரவீனை வரவேற்றனர். அனைவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.


அபிராமி பாட்டி பேபிடாலுக்குப் பரிமாற வந்தார். "அத்த உங்க கைல என்ன பொங்கலா?? அத வைங்க", என்றாள் பார்வதியிடம்.


"குடுமா!! பொங்கல நானே வைக்கிறேன்", என்று பாட்டி பாத்திரத்தை வாங்கினார்.


"செல்வி மா!! எனக்கு தோச வேணும்! பொங்கல் வேணா!", என்றாள் அவரிடம். சிறியவர்கள் அனைவரும் புரியாமல் பார்த்தனர். பெரியவர்களும் முழித்தனர் பாட்டியைத் தவிர.


"சின்ன பாப்பா!! நானே ஊத்திட்டு வரேன்", என்று உள்ளே போனார்.


"மீ!! எனக்கு எதுவும் வேணா! ஐயம் கோயிங் டூ பெட்", என்று எழுந்தாள்.

"டாலு..!! பேபி டால்!!", என்றனர் சிறியவர்கள்.


"நைட் கூட சரியா சாப்பிடல, சாப்பிட்டு போ!", என்றார் அகிலா.

"தோசை ஊத்திட்டேன் இந்தா சாப்பிடு", என்று அபிராமி எடுத்து வந்தார்.


"பாட்டி!! அந்த தோசய சந்தோஷ்கு வைங்க, டாலு!! இங்க வா", என்றான் துரு கூர்மையான பார்வையுடன்.

"இரு சந்தோஷ்!! உனக்கு வேற தோச ஊத்திட்டு வரேன், பாப்பா இத சாப்பிடட்டும், நீ வந்து உட்கார்ந்து சாப்பிடு!", என்றார்.


"பாட்டி!! அவளுக்கு தோச வேணாம்னா நீங்க சாப்பிடுங்க", என்றாள் அபி சமாதானமாக.


"நா சாப்பிட்டேன் சின்ன பாப்பா!", என்றார். பேபிடால் கண்களை மூடி தன்னை கட்டுப்படுத்தினாள்.


"நேகா!! இட்ஸ் வெரி பேட்", என்றான் ரவீன் முறைப்புடன்.


"ரவீன்!! u have no idea what happened here a while ago( இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியாது)", என்றாள் முறைப்புடன்.

"இட்ஸ் ஓகே நேகா!! லீவு தட்!", என்றான் பொறுமையாக.

"டாலு!! கம் அண்ட் ஸிட் ஹியர்!", என்றான் துரு லேசான கண்டிப்பான‌


"தேவா!! ப்ளீஸ் டோன்ட் ஹர்ட் மீ!", என்று சொல்லிவிட்டு மாடிக்கு ஓடினாள்.

"நா வேணா அவள சமாதனம் பண்ணி கூட்டிட்டு வரட்டா?!", என்றார் அபிராமி.


"அத்த!! அவ சரியாயிடுவா, விடுங்க! உங்க மூட்டு வலில நீங்க மேல ஏறி போறீங்களா?? விடுங்க அவளே வருவா", என்றார் அகிலா சமாதானமாக.


"அம்மா!! அரிசி, பருப்புலா லிஸ்ட் போடணும் திருவிழாக்கு", என்றார் முல்லை.


"ஆமால?! சரி வாங்க!! போடலாம்", என்று பெரியவர்களுடன் உள்ளே சென்றார்.

"துரு!! அவளுக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல, அவள நீ பாட்டி கிட்ட பேச வைக்க ட்ரை பண்ணுவன்னு தான் ஓடிட்டா", என்றாள் அபி சமாதானமாக.

"அபி!! டாலுவ எப்படி சமாதானம் பண்றது??".


"அவ பாட்டிய மன்னிக்க மாட்டா, அது எனக்கு காலையிலயே தெரியும்", என்றாள் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டே.


"ஏன்??", என்றனர் அனைவரும் வேகமாக, துருவைத் தவிர. துரு யோசனையுடன் அபியைப் பார்த்தான்.

"ஏதாச்சும் ஒரு பிராப்ளம் வந்தா அவளே பேசி சரி பண்ணுவா, அந்த பிராப்ளுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருந்தா அவங்க கிட்ட பேச மாட்டா, பாட்டி இன்னைக்கு அவள ஒரு மாதிரி பேசிட்டாங்க, அதுல அவ ரொம்ப ஹர்ட் ஆயிட்டா, இப்போதைக்கு மன்னிக்க மாட்டா, அவங்க கையால சாப்பிடவும் மாட்டா, சரி நா போய் அவள அழச்சிட்டு வரேன்", என்று எழுந்தாள்.


"நீ இரு அபி, நா போறேன்", என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் மேலே சென்று, "டாலு!!", என ரூமில் நுழைந்தான்.


"இரு தேவா!! குளிச்சுட்டேன் வரேன்", என்றாள் சத்தமாக.

"சரிடா!!", என்று சோபாவில் உட்கார்ந்தான்.

மஞ்சள் நிற ஸ்கர்ட்டும் பிங்க் நிற டாப்புடன் முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள். "என்ன தேவா?? என்னைய பாட்டி கூட பேச வைக்க வந்தியா??", என்றாள் சிரிப்புடன்.


"நீ பேச வேணா!", என்று எழுந்து பக்கத்தில் வந்தான்.


"நீயா இத சொல்ற??", என்றாள் ஆச்சரியமாக.


"உன் கோவம் கரெக்டு தான், அதற்காக சாப்பிடாம இருக்க, நைட் ஒழுங்கா சாப்பிடல, இப்பவும் இல்லனா எப்படி??", என்றான் அவள் கையைப் பிடித்து.

"இல்ல தேவா!! எனக்கு பாட்டி பேசுனது ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏன் தேவா இவங்க இப்படி இருக்காங்க?? இவங்க இப்படி பேசுனா தாத்தாவ சொல்லவே வேணா, ஒரே ரூம்ல தூங்குனா தப்புதான் பண்ணுவாங்களா?? அதத் தவிர வேற எதுவும் இல்லையா??", என்றாள் கலங்கிய கண்களுடன்.


"டேய்!! குட்டிமா!! என்னடா அழுகுற? நீ அபிய விட அழுமூஞ்சா இருப்ப போல!!", என்றான் கிண்டலாக.


"பேச்ச மாத்துறீயா??", என்றாள் கண்ணீருடன்.


அவள் கன்னத்தில் கை வைத்து கட்டை விரலால் கண்ணீரைத் துடைத்து, "யாருக்காகவும் நம்மள நிரூபிக்கனும்னு அவசியமில்ல, நீ குழந்த மாதிரி, உன்ன அப்படி பேசுனது தப்புதான், நா தான் அதுக்கு தித்திட்டேன்ல விடு, பாட்டிய சாரி கேக்க சொல்லுறேன், நீ வந்து சாப்பிடு", என்றான் எதிர்பார்ப்புடன்.

"வேணா தேவா!! நா சாப்பிட வரேன், பாட்டி கிட்ட பேச சொல்லி கம்பெல் பண்ணக் கூடாது சரியா?!", என்றாள்.


"ஓகே மேடம்!! வாங்க!", என்று கீழே அழைத்து வந்தான். அவளுக்கு அபி பரிமாறினாள். அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.


"எல்லாம் எனக்கு இப்பதான் தெரிஞ்சது நேகி, லீவ் இட் ஆல்!", என்றான் அவள் கையைப் பிடித்து.


"ம்ம்.. ஓகே!!".

இரு நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. அபிராமி பாட்டியைத் தவிர மற்றவர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள். பேபிடால் சிறியவர்கள் உடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள்.துரு,விரு,ரிஷி, சந்தோஷ் நான்கு பேரும் வெளியே சென்றிருந்தனர். மற்றவர்கள் ஐந்து பேரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். "நானு அண்ணா மாமாலாம் நைட் ஷோ மூவி போவோம், செம்ம ஜாலியா இருக்கும்", என்றான் நந்து சந்தோஷமாக.

"இன்னைக்கு நைட்டு நாம போலாமா??", என்றாள் நேகா ஆர்வமாக.

"நைட் ஷோலாம் தாத்தா விடமாட்டாங்க, இவங்களே தெரியாம தான் போவாங்க, அதுவும் தாத்தா வயல்ல தூங்க போனா தான்", என்றாள் சந்தியா கிண்டலாக.


"ஆமா! நாம போக முடியாது, அம்மா விடமாட்டாங்க", என்றாள் மித்ரா அவசரமாக.


"நீங்க வரலனா போங்க, நாம போலாம்", என்றாள் மீண்டும் ஆர்வமாக.


"ஹ்ம்ம்.. உங்கள அழைச்சிட்டுப் போய் என் வாழ்க்கையில என்னையே மண்ண அள்ளிப் போட்டுக்கச் சொல்லுறீயா? போமா!!", என்றான் முறைப்புடன்.

"வேணா!! விடு பேபி!! இங்க எப்படி இருக்கும்னு தெரியாது வேணா", என்றாள் அபி.


நேகா நந்துவை பாவமாகப் பார்த்தாள். "நீ எப்படி பார்த்தாலும் அழைச்சிட்டுப் போக முடியாது, இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும், வீட்டுல யாருக்கும் தெரியாது", என்றான். நேகா குறுகுறுவென்று பார்த்தாள். " நீ சொல்றதுனா சொல்லிக்கோ, துரு மாமாவே சமாளிச்சுடுவாரு", என்றான் கெத்தாக.

"வவ்வ வவ்வவ..", என்று பழிப்பு காட்டினாள். குணா வருவதைப் பார்த்ததும் நேகா வேகமாகச் சென்று மூவிக்குப் போகக் கேட்டாள்.


"முடியாது பேபிடால்!! இங்க உனக்கு சுத்தப்பட்டு வராது, சோ, போகக்கூடாது! வேற என்ன வேணாலும் கேளு??", என்றார் சமாதானமாக.

"டாடி!! அப்ப இந்த மரக் கதவு ரூம் இருக்குல, அது வேணும், இத என் ரூம்மா மாத்திக்கிறேன்", என்றாள் வேகமாக.


"ஓ... போ!!", என்றார்‌.


"இது ஒன்லி நியூ மேரீட் கப்பிலுக்கு மட்டும் தான்", என்று உள்ளே வந்தான் சந்தோஷ். அவனுடன் மற்ற மூவரும் வந்தனர்.

"ஆமா டா! பேபிடால்!! இந்த ரூம் குள்ள நானே போனதுல்ல டா", என்றார் சிரிப்புடன்.


"மாமா!! பொய் சொல்லாதீங்க", என்றான் விரு கிண்டலாக.


"ஒரு தடவ தான் போயிருக்கேன் டா, அவ்ளோ தான்", என்றார் சிரிப்புடன்.

"நீங்கதான சொன்னீங்க டாடி", என்றாள் சிணுங்களுடன்.

"நா வாங்கித் தரத பத்தி சொன்னேன் டா, திருவிழா வேல வேற இருக்குப்பாரு, போன் வந்துருச்சு ஹலோ!", என்று போன் பேசிக் கொண்டே வெளியே சென்றார்.


"நாம மூவி போலாம், நைட் சோ, பிளீஸ்!!", என்றாள் கெஞ்சலாக.


"நோ பேபி!! இங்க வேணா", என்றாள் அபி அழுத்தமாக.

மித்ராவையும் சந்தியாவையும் பார்த்தாள். "நாங்க வரல", என்றனர் முடிவுடன்.


"என்ன நடக்குது இங்க??", என்றான் ரிஷி புரியாமல்.

"நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க, நா போய் அம்மா அத்த பாட்டி கிட்ட இந்த கவர எல்லாம் குடுத்துட்டு வரேன்", என்று துரு உள்ளே சென்றான்.


அங்கு நடந்ததை நந்து சொன்னான். "வேணா டா!! வீட்லயே மூவி பார்க்கலாம்", என்றான் சந்தோஷ்.


நேகா ரிஷி மற்றும் விருவை பார்த்தாள்."பிளான் பண்ணிட்டு நாம போகலாம் பேபிடால்", என்றான் ரிஷி.


"ஆமா! பேபிடால்!! எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்", என்றான் விரு. இருவரையும் பார்த்துச் சிரித்தாள்.


"டேய்!!", என்றனர் அபி மற்றும் சந்தோஷ்.


"சரி! சரி!! விடுங்க போலாம்! ஆமா! கைல என்ன கவரு?", என்றான் நந்து பேச்சை மாற்றி.

"ஓ!! இதுவா?? திருவிழாவுக்கு டிரஸ் உங்க எல்லாருக்கும் வாங்கிட்டு வந்தோம்", என்றான் சந்தோஷ். அனைவரும் சந்தோஷமாக வாங்கி வந்ததை அணைத்து நன்றி சொன்னார்கள், பேபிடால் சந்தோஷை மட்டும் அணைத்து விடுவித்தாள்.


"என்னடா? நீங்கலாம் கொடுத்திட்டிங்களா?? நா மட்டும்தான் தரலையா??", என்று துரு சிரிப்புடன் பெண்கள் நான்கு பேருக்கும் முதலில் ஒரு கவரைக் கொடுத்தான். அதே போல் ஆண்களுக்கும் ஒரு கவரைக் கொடுத்தான். ஒரே மாதிரி புடவையும் அதற்கு ஏற்றாற்போல் நகையும் பெண்களுக்கு இருந்தது. ஆண்களுக்கு ஒரே மாதிரி டிரஸ் இருந்தது. அனைவரும் சந்தோஷமாக அதை எடுத்துப் பார்த்தனர். "இது மித்துக்குட்டிக்கு", என்ற இன்னொரு கவரைக் கொடுத்தான்.


"தேங்க்யூ அண்ணா!!", என்று சிரிப்புடன் அணைத்து விலகினாள்.

சிரிப்புடன், "இது சந்துக்கு", என்று ஒரு கவரைக் கொடுத்தான்.


"தேங்க்யூ மாமா!!", என்று அணைத்து விலகினாள்.


அபியிடம் இரண்டு கவரைக் கொடுத்தான். "எனக்கு இரண்டா?? வாவ் தேங்க்ஸ் மாமா!!", என்று அவனை அணைத்து விலகினாள்.


துரு சிரிப்புடன் பேபிடாலை ஒற்றை புருவம் உயர்த்திப் பார்த்தான். "எனக்கு என்ன வாங்கி வந்த??", என்றாள் ஆர்வமாக.


"சொல்லனுமா? இல்ல பாக்கிறீயா??", என்றான் குறும்புடன்.

"இப்ப சொல்லு, அப்புறம் பார்க்குறேன்", என்றாள் ஆர்வமாக.

"நைட்ரஸ், ஸ்காட், டாப், டி- ஷர்ட், சுடி அப்புறம் டபாங்", என்று சிரிப்புடன் பல கவரை எடுத்து கொடுத்தான.


"இது எல்லாமே எனக்கா??", என்றாள் ஆச்சரியமாக.


"ம்ம்", என்று சிரிப்புடன் தலையை ஆட்டினான்.

பேபிடால் வாங்கிய கவரை கீழே போட்டுவிட்டு, "தேங்க்யூ தேவ்!!", என்று அவர் மார்பில் புதைந்தாள். அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.


துரு சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டு, "ஆர் யூ ஹாப்பி??", என்றான் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி.

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!! தேவ்!! இத நா மறக்க மாட்டேன்", என்றாள் கரகரத்த குரலில் கண்கலங்கியபடி.

"அட! நீ ரொம்ப ஸ்ட்ராங்னு நினைச்சேன், நீ இப்படி அழுமூஞ்சா இருக்க!", என்றான் கிண்டலாக.

வந்த கண்ணீரை அவன் மார்பிலே துடைத்து நிமிர்ந்து, " நா இல்ல
அபி தான் அழுமூஞ்சு", என்றாள் சிரிப்புடன். ஆண்கள் லேசாகச் சிரித்தனர்.


"வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி", என்று அவள் நெற்றியில் லேசாக முட்டிவிட்டு விலகினான்.


இதனை கோவமாக ஒரு ஜோடி கண்கள் பார்த்தது.


"நேகி!! இந்த கவர் எல்லாத்தையும் உன் ரூமுக்கு எடுத்து வந்து அடுக்கி வைக்கட்டா??", என்றான் ரிஷி கிண்டலாக.


"இதெல்லாம் நீ கேக்கனுமா? வா வா!!", என்றாள் சிரிப்புடன்.


"அடிங்க!! சும்மா கிண்டலுக்கு கேட்டா உடனே பண்ண சொல்லுவியா டி", என்று அடிக்க வந்தான்.


"ஓய்! போடா!!", என்று ஓடினாள். இருவரும் ஓடி பிடித்து விளையாட போய்விட்டனர்.


"துரு!! உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா", என்றான் சந்தோஷ் யோசனையுடன்.


"ஆமா! துரு!!", என்றான் விரு யோசனையுடன்.


"மாமா!! அண்ணா ரூமுக்குப் போய் பேசலாம்", என்றான் நந்து யோசனையுடன் மற்ற பெண்களைப் பார்த்து.

"சரி! சந்தியா!! ரிஷிய ரூமுக்கு வரச் சொன்னேன்னு சொல்லு", என்றான் துரு.


"சரி மாமா!! வா மித்து! அபி!!", என்று உள்ளே சென்றாள். மற்றவர்கள் மேலே சென்றனர்.


கோபமாகப் பார்த்த ஜோடி கண்கள் யார்?? என்ன பேசுவதற்காக அழைத்துச் செல்கின்றனர்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.....


💘யாசிப்பு தொடரும்💘.........
 

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN