யாசிக்கிறேன் உன் காதலை - 9

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாசிக்கிறேன் உன் காதலை - 9

"சரி சந்தியா ரிஷிய ரூமுக்கு வரச் சொன்னேன்னு சொல்லு" என்றான் துரு.


"சரி மாமா வா மித்து அபி" என்று உள்ளே சென்றாள். மற்றவர்கள் மேலே சென்றனர்.

"என்னடா கூட்டத்த கூட்டி வச்சிருக்கீங்க நா இப்பதான் நேகி கிட்ட விளையாடி கிளோஸாக்க போனேன் அது உங்களுக்கு பொறுக்காதே!" என்றான் ரிஷி துருவின் அறையில் நுழைந்ததும்.


"டேய்! அடங்குடா" என்றான் விரு.


"என்னடா துருவ ரவுண்டு கட்ட போறோமா??" என்றான் கிண்டலாக.


"வாய மூடுடா ரிஷி, துரு நீ என்னடா பண்ணிட்டு இருக்க?? நீ லவ் பண்றது யார டா??" என்றான் சந்தோஷ்.


"என்னடா இப்படி கேக்குற நா அபிய தான் லவ் பண்றேன் உங்களுக்கு தான் தெரியுமே" என்றான் துரு குழப்பமாக.

"ஆனா நீ நேகி கிட்ட ஏன்டா இவ்ளோ கிளோஸாகுற?? உன்ன பார்த்தா நீ நேகிய தான் லவ் பண்ற மாதிரி இருக்கு" என்றான் விரு.


"டேய்!! அவ குழந்த அவள போய் இப்படி சொல்ற எனக்கு தான் அபின்னு சின்ன வயசுலயே முடிவு பண்ணியாச்சு தானே".

"ஆமா துரு நேகி பேரழகி தான் அவள மாதிரி பொண்ண நாம பார்த்தது இல்ல தான்" என்றான் ரிஷி.


"ரிஷி டாலு ஆர்ப்பரிக்கும் அழகு அபி அமைதியான அழகு, எனக்கு அமைதியான அழகே போதும் டா டாலுவ நா குழந்தையா தான் பாக்குறேன், அவ இங்க அண் கம்பர்டபுள்லா இருக்க மாதிரி இருந்தா அதனாலதான்" என்றான் பொறுமையாக.


"நீ வேணா குழந்தையா பார்க்கலாம் துரு அவ வயசு பொண்ணு டா" என்றான் சந்தோஷ் பொறுமையாக. துரு யோசனையுடன் பார்த்தான்.

"துரு உன்ன பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் டா நேகிக்கு இன்னைக்கு நிறைய டிரஸ் வாங்கி கொடுத்த, நீ எவ்ளோ வேணாலும் வாங்கி கொடு பட் இப்ப ஏன் வாங்கி கொடுத்தன்னு தான் புரியல" என்றான் விரு யோசனையுடன். மற்றவர்களும் அதே கேள்வியுடன் துருவை பார்த்தனர்.

அபி வரும் அன்று குணாவிடம் நேகா பேசிய அனைத்தையும் சொன்னான். "அவ ரொம்ப பீல் பண்ணுனா டா நமக்கு தெரியும் தாத்தா இப்படி தான்னு இப்ப வந்த அவளுக்கு தெரியாது, அவ ஃபீல் பண்ணுனது கொஞ்சம் கஷ்டமா இருந்தது அதான் இப்படி ஸ்பெஷலா வாங்கி கொடுத்தேன்" என்றான் பொறுமையாக.

"சரி விடுங்க பேபிடால்னு சரியா தான் பெயர் வச்சுருக்காங்க அவ இன்னும் பேபியா தான் இருக்கா சின்ன புள்ள தான் நேகி" என்றான் நந்து சிரிப்புடன்.

"அது வேணா உண்மை தான் டா சரியான வாய் ஒரு வார்த்த சொல்ல முடியல அந்த வார்த்தைய அப்படியே பிடிச்சுகுறா" என்றான் ரிஷி சிரிப்புடன்.


"ஆமா டா நல்ல லிசனிங் பவர் அவளுக்கு" என்றான் விரு ஆச்சரியமாக.

"ஆமா" என்றனர் மற்றவர்களும்.


"நேகவதியம்மா நேகவதியம்மா" என்று வெளியே நின்று ஒருவர் சத்தமாக அழைத்தார்.


சத்தம் கேட்டு ஐந்து ஆண்களும் மாடியில் இருந்த பெரிய பால்கனி வழியாக கீழே பார்த்தனர்." யார் வேணும் உங்களுக்கு" என்றாள் சந்தியா வெளியே வந்து.


"நேகவதியம்மா இருக்காங்களா" என்றார்.


"நேகவதியம்மாவா வீடு மாறி வந்துட்டீங்களா??" என்றாள் யோசனையுடன்.


"இல்லமா அதான் வெளிநாட்டில இருந்து வந்து இருக்காங்களே அவங்க தான்" என்றார் இழுத்தப்படி.


"ஓ.. அபி.. நேகா.." என்று உள்ளே திரும்பி சத்தம் போட்டாள்.


"என்ன சந்தியா" என்று இருவரும் பின்னால் மாட்டுத்தொழுவத்தில் இருந்து சந்து வழியாக முன்னால் வந்தனர். மாடியில் இருந்து ஐந்து பேரும் கீழே பேசுவதை பார்த்தபடி நின்றனர்.


"யாரு வந்திருக்கா??" என்று மித்ரா வெளியே ஓடி வந்தாள்.


"தெரியல மித்து அபி.. நேகி.. உங்கள தான் இவரு கேட்டாரு" என்றாள் சந்தியா.


"யாரு நீங்க??" என்றாள் அபி குழப்பமாக.


"நா நேகவதியம்மா பார்க்கனும்".

"ஹேய்!! சந்து பொந்து எங்க மம்மியை பார்க்க வந்திருக்காங்க" என்றாள் நேகா.

"நீயும் இந்த நந்து பையன் மாதிரி கூப்பிட ஆரம்பிச்சிட்டியா?? ம்ம்.. ம்ம்.. அகிமாவ பார்க்க வந்தேன்னு சொல்ல வேண்டியதுதானே" என்றாள் அவரிடம்.

"நேகவதியம்மாவ தான் பார்க்க வந்தேன்" என்றார் முழித்துக் கொண்டே.


"அகிலா தான் எங்க அம்மா நேம்" என்றாள் பேபி டால்.

"ஐயோ!! நேகவதிகுறவங்களா" என்றார் இழுத்துக் கொண்டே.

"நா தான் நேகவதி என்னைய தெரியுமா உங்களுக்கு" என்றாள் குழப்பமாக.


"ரவீன் அய்யா கிட்ட சீம்பால் கேட்டீங்களாமே அதான் கொடுத்துவிட்டாங்க இந்தாங்க" என்று ஒரு பெரிய தூக்கு போனியை கொடுத்தார். அதை வாங்கிய அபியிடம் கொடுத்தாள்.

"ரவீன் இத குடுத்து அனுப்ப பணம் கொடுத்தாரா??".

"ம்ம்.. அம்பது ரூபா தந்தாரும்மா".

"அம்பது ரூபானா பீப்டி ருபீஸா" என்றாள் சந்தியாவிடம்.


"ஆமா" என்றாள்.

"ரவீன் வீடு எங்க இருக்கு??".

"மூணு தெரு தள்ளி இருக்கு".

"தெருவா ஓ.. ஸ்ட்ரீடா மூணு தெருக்கு அப்பறம் இருக்க வீட்டிலிருந்து இங்க வாங்கிட்டு வர ஐம்பது ரூபாய் தரனுமா??" என்றாள் புருவம் உயர்த்தி.

"அது வந்துங்கம்மா" என்று இழுத்தார்.


"சரி கல்யாணமாச்சா??" என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு. மற்றவர்கள் சுவாரஸ்யமாக பார்த்தனர்.


"ஆயிடுச்சுங்கமா" என்றார் தலையை சொறிந்து கீழே பார்த்துக் கொண்டே.


"எத்தன டைம் கல்யாணமாச்சு??" என்றாள் கிண்டலாக.

"ஒரு தடவ தாங்கமா" என்றார் தலையை சொறிந்து கீழே பார்த்துக் கொண்டே.

"அதுல சோகமோ ஆமா ஏன் கீழே பார்க்குறீங்க??".


"அது வந்துங்கம்மா" என்று மீண்டும் தலையை சொரிந்து கொண்டே.

"ஓ சையா?? சரி எத்தன பேபிஸ் அது வந்து குழந்தைங்க??" என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.


"மூணுங்கம்மா" என்று மீண்டும் தலையை சொரிந்து கொண்டே.

"போதுமா?? ம்ம்.. ஒரு நிமிஷம் இருங்க" என்று வேகமாக உள்ளே சென்று அங்கு பேசிக்கொண்டிருந்த குணாவின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்து," இந்தாங்க இது உங்க ஒய்ஃப்கு இது உங்க மூணு குழந்தைகளுக்கு" என்று இரண்டாயிரம் ரூபாயை கொடுத்தாள்.

"இல்லைங்கம்மா பரவாயில்ல" என்றார் தயங்கியபடி.


"உங்களுக்கு ஐம்பது ரூபாய் மட்டும்தான் அப்பறம் ஃபேமிலி பிளானிங்" என்றாள் சந்தியாவை பார்த்தபடி.


"குடும்ப கட்டுப்பாடு".


"ஆ.. குடும்ப கட்டுப்பாடு பண்ணுங்க இந்த பணம் உங்களுக்கு இல்ல உங்க ஃபேமிலிக்கு தான்" என்று தந்தாள்.

"நன்றி மா" என்று வாங்கிக் கொண்டார்.


"சீக்கிரமா பண்ற வழிய பாருங்க, அப்புறம் தலைய சொறியக்கூடாது" என்றாள் சிரிப்புடன்.


"சரிங்கம்மா" என்றார் தலையை சொறிந்து கொண்டே.


"விட மாட்டீங்களே! சரி கிளம்புங்க" என்றாள் சிரிப்புடன்
அவர் சென்றார். ஆண்கள் கீழே வந்தனர்.

ரவீன் கொடுத்தனுப்பிய சீம்பாலை நான்கு பேரும் தாழ்வாரத்தில் உள்ள சோபாவில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். "ஹேய்! நேகி உன்கிட்ட ஒருத்தேன் வந்து ஏதாச்சும் கொடுத்தா பேமிலி பிளானிங் பத்தி தான் பேசுவியா??" என்று விரு அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.

"ஹேய்! அடிக்காத மேன் நா பேசுனது எப்படி தெரியும்??" என்றாள் குழப்பமாக.

"ம்ம்.. நீ பேசுறத நாங்க எல்லாரும் மேல இருந்து பார்த்தோம்" என்று நந்து அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்பூனை எடுத்து சாப்பிட்டான்.

"ஓ... இது என்னோடது" என்று அவனிடம் இருந்து ஸ்பூனை பிடுங்கினாள்.

"என்ன நேகி உன்னோடது என்னோடதுனு பிரிச்சு பேசுற நம்மளோடதுன்னு சொல்லு" என்று ரிஷி அவள் கையில் இருந்த ஸ்பூனை பிடுங்கி சாப்பிட்டான்.

"ஹேய் நானே! ரவீன் கிட்ட லஞ்சமா கேட்டு இத வாங்குனேன், எல்லாத்தையும் நீங்களே சாப்பிடுறீங்க" என்றாள் பாவமாக. அபி ,சந்தியா, மித்ரா மூவரும் சிரித்தனர்.


சந்தோஷ் ரிஷியின் கையில் இருந்த ஸ்பூனை பிடுங்கி,"இந்தா குட்டிமா நீயே சாப்பிடு" என்று அவள் கிண்ணத்தில் இன்னும் சீம்பாலை வைத்தான்.

"நீ குட் பாய் சந்தோஷ் அதனால இந்தா" என்று அவனுக்கு ஊட்டினாள்.


"அடிப்பாவி இவ்ளோ தானா??" என்று விரு இன்னும் கொஞ்சம் சீம்பாலை வைத்தான்.


"நீயும் குட் பாய் இந்தா" என்று அவனுக்கு ஊட்டினாள்.


"இதுதான் விசயமா நேகி எனக்கு டீ" என்றான் ரிஷி பாவமாக.


"ஆமா நேகி எனக்கு" என்றான் நந்து.

"நா கேட்டது நைட்டு நடக்குமா??" என்றாள் ரகசியமாக இருவரிடமும்.


"எது??" என்று முழித்தனர்.


"லூசு நைட் சோ கேக்குறான்னு நினைக்கிறேன்" என்றான் விரு மெதுவாக.


ரிஷி மற்றும் நந்து நேகாவை பார்த்தனர். வேகமாக தலையை ஆட்டினாள்.மற்றவர்களுக்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். "டீல்" என்றனர்.


சிரிப்புடன் இருவருக்கும் ஊட்டினாள். மற்ற மூவரும் அவளுக்கு ஊட்டி விட்டனர் அங்கே நான்கு பேருக்கும் ஓர் இனிமையான நட்பு உருவாகியது."டேய்!! என்னங்கடா எங்கள விட்டுடுடீங்க" என்று சந்தோஷ் மற்றும் துரு பக்கத்தில் வந்தனர். அவர்களுக்கும் ஊட்டினாள். அவர்களும் இவளுக்கு ஊட்டினர்.


"ஐயோ!! ஸ்வீட் சாப்பிட்டே டெத் ஆயிடுவேன் போல இருங்க வரேன்" என்று நேகா கிச்சுனுக்கு வேகமாக ஓடினாள்.


"பேபிடால் என்ன வாமிட் பண்ண போறியா??" என்று அபியும் பின்னாலே ஓடினாள்.


"அடப்பாவிங்களா ஸ்வீட் சாப்பிட வச்சு வாந்தி எடுக்க வச்சுருவீங்க போல" என்றாள் சந்தியா கிண்டலாக.


"உனக்கும் வேணுமா??" என்றனர் கோரசாக.


"ஐயா சாமி உங்க பாசமே போதும் ஸ்வீட் எல்லாம் வேணா" என்று கும்பிடு போட்டாள்.


"மித்துக்குட்டி உனக்கு" என்றான் துரு.


"உன் மேல செம்ம கோவத்துல இருக்கேன் அண்ணா என்கிட்ட பேசாத" என்றாள் கோவமாக.

"ஏன்டா அண்ணா என்ன பண்ணுனேன்??" என்றான் குழப்பமாக. மற்றவர்களும் குழப்பமாக பார்த்தனர்.


"நீ அபி அண்ணிக்கு நிறைய டிரஸ் என்ன வேணாலும் வாங்கி கூடு நா சந்தோஷ பட்டுருப்பேன் ஆனா நீ நேகிக்கு வாங்கி கொடுத்து இருக்க, அவ வந்ததிலிருந்து ரொம்ப தான் அவள தாங்குற "என்றாள் கோபமாக.


"உனக்கு நம்ம தாத்தாவ பத்தி தெரியுமில்ல மித்து அவரு எப்போதுமே இந்த வீட்டோட மூத்த வாரிசுக்கு எவ்ளோ! முக்கியத்துவம் கொடுப்பாருன்னு நீ இந்த வீட்டோட கடைக்குட்டி உன்ன அவரு செல்லமா தான் பார்க்குறாரு ஆனா சந்தியாவ" என்றான் சந்தோஷ்.


"இல்லல்ல நேகா அங்க வளர்ந்த பொண்ணு மித்து அவளுக்கு இந்த வழக்கம் புரியாது, இங்க இருக்க நமக்கே இந்த விஷயம் கஷ்டமா இருக்கும், இப்ப வந்த நேகாக்கு இதெல்லாம் பார்க்க எப்படி இருக்கும்" என்றான் விரு.


"ஆமா என்ன நீ துரு மாமாவ கேள்வி கேட்குற அளவுக்கு வளர்ந்துடியா?? தாத்தா வந்ததும் அவர் கிட்ட சொல்றேன் இரு" என்றான் நந்து முறைப்புடன்.மித்ரா பாவமாக துருவை பார்த்தாள். துரு அவளை அணைத்து,"டாலு குழந்தை மாதிரி டா என்ன தான் படிச்சாலும் வளர்ந்தாலும் ரொம்ப சென்சிடிவா இருக்கா, தாத்தா அபிய எப்படி வரவேற்றாரு" என்றான் விலகி அவள் முகத்தை பார்த்து.

"தடபுடலாக வரவேற்றாரு" என்றாள் குழப்பமாக.

"அபி வந்த அன்னைக்கு டாலு குணா மாமா கிட்ட எனக்கு ஏன் இப்படி பண்ணல டிரஸ் ஜூவல்ஸ் எல்லாம் வாங்கித் தரலைன்னு ரொம்ப பீல் பண்ணி கேட்டா, குணா மாமா எவ்ளோ வருத்தப்பட்டாரு தெரியுமா அந்த இடத்துல டாலுவ அவரால சமாளிக்க முடியல, டாடி வாங்கித் தரேன்னு சொன்னாரு ஆனா டாலு கண்ணுல அந்த ஏக்கத்த பார்த்தேன், அதான் இன்னைக்கு அவளுக்கு நிறைய வாங்கி கொடுத்தேன் அதுனால தான் டாலு அழுதா" என்றான் விளக்கமாக. அனைவருக்கும் அப்பொழுதுதான் அனைத்தும் புரிந்தது.


"சாரி அண்ணா" என்றாள் பாவமாக.

"இட்ஸ் ஓகே டா".

சந்தோஷ் குணாவுக்கு திருவிழா அன்று முதல் மரியாதை செய்யலாம் என்று குடும்பத்தினருடன் செல்லும்போது குணா பேசியதை சொன்னான்." நேகி கொஸ்டின் கேப்பா அப்ப நாம அவள தப்பா நினைக்க கூடாது".


"தாத்தா சும்மாவே ஓவரா பண்ணுவாரு திருவிழா வேற அபிக்கும் ஸ்பெஷல் கவனிப்பு தான்" என்றான் ரிஷி சலிப்புடன்.


"ஆமா" என்று தலையாட்டினர்.

"என்ன எல்லாரும் ஆமா சாமி போடுறீங்க" என்று அபி வந்தாள்.


"டாலுக்கு என்னாச்சு??" என்றான் துரு வேகமாக.


"வாமிட் பண்ணுனாளா" என்றான் விரு.


"இல்ல ஸ்வீட் சாப்பிட்டால காரமா எதாச்சும் பண்ணி தர சொல்லி மீ பின்னாடியே சுத்துரா" என்றாள் சிரிப்புடன்.


"அடடா அப்ப காரமா ஸ்நாக்ஸ் வரும் போலயே!" என்றான் நந்து சப்புக்கொட்டி.


"அலையாத" என்று அவன் தலையில் தட்டினாள் சந்தியா.

"அப்ப நீ சாப்பிடாத" என்று சண்டை போட்டான்.

"அட சண்ட போடாதீங்க" என்றான் சந்தோஷ். இருவரும் அமைதியனர்.


"என்ன துரு மாமா பேபி டாலுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு எனக்கு ரெண்டு டிரஸ் தானா?? " என்றாள் அபி பொய்யான முறைப்புடன்.துரு முழித்தான். மற்றவர்கள் சிரித்தனர்.

"அது வந்து" என்று இழுத்தான்.

"அதா வந்துட்டியே சொல்லு சொல்லு, ஆமா நீ என்ன கேட்ட அபி" என்று கேட்டுக்கொண்டே பேபி டால் வந்தாள்.


"உனக்கு மட்டும் ஏன் நிறைய டிரஸ்னு கேட்டேன் பேபிடால்" என்றாள் துருவை பொய்யாக முறைத்துக்கொண்டே.


"மாட்டுனீயா நா தான் ஸ்பெஷல்னு சொல்லிடு" என்றாள் கண்ணடித்து.


"அப்படியா?? அப்படி வேற சொல்லுவியா மாமா" என்று சந்தியா சண்டைக்கு வந்தாள்.


"அவனுக்கு நா தான் ஸ்பெஷல்னு உங்களுக்கு தெரியாதா?? எனக்கு எதுக்கு ஸ்பெஷல் கவனிப்புனு கேளுங்க, நா உனக்கு ஸ்பெஷல் தானே தேவ் என்ன கரெக்டா சொல்லிட்டேனா??" என்றாள் கண்களில் குறும்பு மின்ன.

"அடியே நா எப்ப டி அப்படி சொன்னேன்?" என்றான் பாவமாக.


"நீ சொன்னா தான் தெரியுமா தேவ், மித்து நீயும் கேளு உன் அண்ணா கிட்ட, நீங்க மூணு பேரும் கேட்குற கேள்வில உங்களுக்கு நிறைய டிரஸ் வாங்கிட்டு வரணும் அப்படியே எனக்கு சில திங்ஸ் வாங்கிட்டு வரனும்" என்றாள் சிரிப்புடன்.

"அடிப்பாவி உனக்கு திங்ஸ் வாங்கணும்குறதுகாக தான் எல்லாரையும் ஏத்திவிடுறீயா" என்றான் ரிஷி சிரிப்புடன்.


"ஹேய்!! நாம இப்ப டீலிங் பார்ட்னர் நீ என் பக்கம் மேன்" என்றாள் சிரிப்புடன்.


"நாங்க எப்போதுமே உன் பாக்கம் தான் என்னடா" என்றனர் ரிஷி மற்றும் விரு கோரசாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே.


"என்ன டீலிங் பேபி டால்??" என்றாள் அபி.

"நாளைக்கு சொல்லுறேன் அபி".


"ஏன் நாளைக்கு தான் நல்ல நாளா??" என்றாள் மித்து கிண்டலாக.

"அதான் நாளைக்குனு சொல்லிட்டால கேட்க கூடாது, நீ வா நேகி" என்று நந்து அவளை(நேகா) பேசவிடாமல் இழுத்து சென்றான். மற்றவர்கள் சிரித்தனர்.


"ஏதோ! பிராடு வேல பாக்குதுங்க" என்றாள் சந்தியா.


"ஆமா தாத்தா கிட்ட மாட்டாம இருந்தா சரிதான்" என்றாள் அபி.


"அபி நீ வந்த அன்னைக்கு" என்று துரு மற்றவர்களிடம் சொன்னதை அவளிடம் சொன்னான்."அதனால தான் அவளுக்கு அப்படி வாங்குனேன்" என்றான் பொறுமையாக.


"ஐயோ! துரு மாமா நீங்க என்ன பண்ணுனாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும் ஐ நோ.. நா சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் இருங்க போன் பேசிட்டு வரேன் ஹலோ.." என்று பேசிக்கொண்டே அவள் அறைக்கு சென்றாள்.

"டேய்! துரு அண்ணா மாமா" என்றனர் கோரசாக.

"கொஞ்சம் கொஞ்சமா இடம் பிடிக்க ஆரம்பிச்சுட்ட உன் லவ் சக்சஸ் தான்" என்றான் சந்தோஷ் சந்தோஷமாக.


"அம் சோ ஹாப்பி" என்றான் சந்தோஷமாக.


"டிரீட் டிரீட்" என்றனர் கோரசாக.

"கண்டிப்பா வைக்கிறேன், இப்ப கிளையண்ட் மீட்டிங்கு டைமாச்சு வாங்க டா" என்று ஆண்களை அழைத்து சென்றான்.


அன்று இரவு பதினோரு மணி போல் வீடே அமைதியாக இருந்தது. நான்கு பேர் வீட்டின் காம்பவுண்ட் சுவரிலிருந்து வெளியே குதித்தனர். "எங்க போறீங்க??" என்றான் துரு காரில் ஸ்டைலாக சாய்ந்து கைகளை மார்போடு கட்டிக்கொண்டு. அவன் பக்கத்தில் சந்தோஷ் அவனைப் போலவே நின்றான்.


"துரு.. சந்தோஷ்.." என்று முழித்தனர்.


"சொல்லுங்க டா" என்றான் சந்தோஷ்.

"நைட் ஷோ முவிக்கு" என்றனர்.


"ஆமா இந்த பையன் யாரு?? புதுசா இருக்கான்" என்றான் சந்தோஷ்.


"யாருடா இவன்??" என்று துரு உற்றுப் பார்த்தான்.

"துரு சந்தோஷ் தெரியலையா??" என்றனர் மூவரும் சிரிப்புடன்.


"இல்லடா" என்றான் சந்தோஷ்.

"டேய்! உன் பாசமலர் தொங்கச்சிடா, டாலு என்ன கோலம் இது தலையில தொப்பி லிப்ஸிக்கு மேல மீசை" என்றான் சிரிப்புடன்.

"ஏய்! நேகி பையன் மாதிரியே இருக்குடா" என்றான் சந்தோஷ் ஆச்சரியமாக.


"இது என் டி ஷர்ட் ஜீன்ஸ், மத்ததெல்லாம் நந்துவோடது" என்றாள் தோழை குலுக்கியபடி.

"எப்படிடா இப்படி ரெடி பண்ணுனீங்க?" என்றான் துரு ஆச்சரியமாக.

"அது இது எல்லா நந்து ஓட ஐடியா தான், அங்க பசங்க மட்டும் தான் இருப்பாங்க அதனால தான் இப்படி" என்றான் விரு.


"எல்லா புகழும் நந்துக்கே!! இதுக்கே இப்படின்னா இன்னும் இருக்கு, நேகி நா சொல்லிக்கொடுத்தத எடுத்து விடு" என்றான் நந்து.


"போடா பேமானி, வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?? என்கிட்ட வச்சுக்கிட்ட மண்டைய உடைச்சு மாவிளக்கு போட்டுடுவேன் ஓடிடிடு" என்றாள் ஆக்சனுடன்.

"போதும்.. போதும்.." என்றான் சந்தோஷ்.


"டேய்! நல்ல விஷயம் சொல்லித் தராம என்னடா இது, டாலு இனிமே இப்படி பேசாத" என்றான் துரு.

நேகா நந்துவை பார்த்தாள். "அப்புறமா நா இன்னும் வேற சொல்லி தரேன்" என்றான். நேகா தலையை ஆட்டினாள். நந்துவை அனைவரும் முறைத்தனர்.

"துரு சந்தோஷ் நீங்க ரெண்டு பேரும் எப்படி வந்தீங்க??" என்றான் ரிஷி.


"நீங்க கூட்டு சேரும்போதே தெரிஞ்சு போச்சு, நா டிரஸ் குடுக்க போன கேப்ல என்ன நடந்ததுன்னு சந்தோஷ் சொன்னா நாங்க கெஸ் பண்ணி தான் இங்க வந்தோம்" என்றான் துரு.

"ஓ.. "என்றனர்.

"சரி வாங்க மூவி போலாம்" என்றாள் ஆர்வமாக.


"நேகி.. டாலு" என்றனர் இருவரும்.

"ப்ளீஸ்.. ப்ளீஸ்.." என்றாள்.


"சரி" என்று துருவின் காரிலேயே அழைத்துச் சென்றனர். பேபிடாலை ஆறுபேரும் அரணாய் காத்து மூவி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வந்தனர். காம்பவுண்ட் சுவர் ஏறி வீட்டிற்குள்ளே குதித்தனர்.


வீட்டின் முன்னால் விளக்கு போடப்பட்டது. அனைவரும் அதிர்ச்சியுடன் நின்றனர். நேசமணி கோவமாக அங்கு நின்று கொண்டிருந்தார். "தாத்தா" என்றனர் மெதுவாக.

"எங்க போயிட்டு வர்றீங்க??" என்றார் கோபமாக.


"சும்மா தாத்தா" என்றான் ரிஷி தயங்கியபடி.


"வாக்கிங் போனோம் தாத்தா" என்றான் நந்து வேகமாக.


"இந்த நேரத்துல வாக்கிங்" என்றார் கோபமாக.


"இல்ல அது வந்து தாத்தா" என்றான் துரு.


"இத நா உன்கிட்ட எதிர்பார்க்கல துருவா, உங்க எல்லாருக்கும் தண்டன இருக்கு, இப்ப போய் மொட்ட மாடியில பனியில் படுங்க, காலைல என்ன தண்டனைன்னு சொல்றேன், முன்னாடி பக்கம் வழியா போங்க வீட்டுக்குள்ள நுழைய கூடாது" என்றார் கோபமாக.

"ம்ம்.." என்று ஏழு பேரும் திரும்பினர்.


"ஆமா இந்த பையன் யாரு?? புதுசா இருக்கு" என்றார். அனைவரும் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றனர்.


அது பேபி டால் என்பதை தெரிந்தால் என்னாகும்?? துருவின் காதல் கைகூடுமா?? அடுத்து என்ன நடக்கும்?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.........


யாசிப்பு தொடரும்............
 

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 9
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN