இரு மாதங்களுக்கு முன்பு...
"காளி.... காளி.... காளி...." ஒரு கூட்டம் தொண்டை கிழிய காளி என்ற காளைக்கு ஆதரவாக கத்திக்கொண்டு இருந்தது. அதில் முக்கிய உறுப்பினரான சிவரஞ்சனி தன் சகோதரனை தேடிக்கொண்டே வாடிவாசலில் சீறிப்பாய காத்துக்கொண்டு இருக்கும் அவர்கள் வீட்டு காளையான காளியின் வரவை எதிர்நோக்கி கூச்சலிட்டு கொண்டு இருந்தாள்.
கோவைக்கு வடக்கே இருபது நிமிட பயண தூரத்தில் இருந்தது அந்த அழகிய கிராமம். தென்னை மரங்களால் சூழப்பட்ட அந்த கிராமத்தின் பெயர் அரசம்பாளையம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நீடித்து இருக்கும் அரசமரத்தினால் அப்பெயர் பெற்றது அந்த கிராமம். சிவா மற்றும் சக்தியின் பூர்வீகம். எவ்வளவு வசதிகள் வந்தாலும் அந்த கிராமத்தை விட்டு நகரங்களில் குடியேற அவர்களின் குடும்பத்தினர் என்றும் நினைத்து இல்லை.
அந்த ஊரில் தான் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து எப்பொழுதும் அங்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். சிவா மற்றும் சக்தியின் வீட்டுக்காளை பங்குபெற்று பல பரிசுகளை வாங்கிக்குவிக்கும்.
"அத்தான்... அந்த அவதார் குட்டி எங்க போனான்..." தன் அருகில் நின்றிருந்த அத்தை மகன் நிரஞ்சனிடம் சிவரஞ்சனி கேட்டாலும் அவளின் பார்வை என்னவோ காளியின் மீது தான் இருந்தது.
"அங்க பாரு... அவன் ரொம்ப நேரமா அந்த ஃபேமிலி கூட கடல போட்டுட்டு இருக்கான். எனக்கு என்னவோ அந்த பொண்ண ரூட்டு விடரானோன்னு தோனுது பாப்பா..." அத்தை மகன் காட்டிய திசையில் சக்தி ஒரு குடும்பத்தாரோடு சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். அந்த குடும்பத்தினர் சாட்சாத் நம் ஆர்ஜூனின் குடும்பத்தினரே...
"எந்த பொண்ணு அத்தான்... அந்த மஞ்ச காட்டு மைனாவா?..." சிவரஞ்சனி அர்ஜூனின் அருகில் மஞ்சள் நிற பட்டில் மங்களகரமாக நின்றிருந்த அவனின் தங்கை அபியை குறிப்பிட்டு கேட்க, "ம்ச்... அந்த தாவணி போட்ட தீபாவளிய சொன்னேன் பாப்பா..." காரணப்பெயர் வைப்பதில் நானும் சலைத்தவன் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக தாவணியில் நின்றிருந்த அர்ச்சனாவை குறிப்பிட்டு கூறினான் நிரஞ்சன்.
"அத்தான் காளி வந்துட்டான்..." என்று உற்சாகமாகிய சிவரஞ்சனி காளியின் ஒவ்வொரு அசைவுக்கும் மகிழ்வுடன் கத்தியபடி இருந்தாள். அவளை ரசித்து பார்த்த நிரஞ்சன் "வெற்றி வேல்.... வீரவேல் கத்துங்க அத்தான்..." என்ற சிவரஞ்சனியின் குரலில் நடப்புக்கு வந்தவன் விளையாட்டு மைதானத்தை நோக்கி பார்க்க காளி ஒருவனின் குடலை பிய்த்து எடுத்து இருந்தது.
நிரஞ்சன் "ஐயோ..." என்றபடி அடிபட்டவனை தூக்க ஓட சிவரஞ்சனி காளிக்கான பரிசை பெற கிளம்பினாள்.
"பாப்பா... பாப்பா... செத்த நில்லு... அங்க பாரு நம்ம சக்தி கூட ஒருத்தன் நிக்கிறான் இல்ல... அவன் எப்படி இருக்கான்..." மூச்சிறைக்க இந்த வயதிலும் வேக எட்டுக்களை எடுத்து வைத்து வந்த சிவரஞ்சனியின் பாட்டி சிவசக்தி அர்ஜூனை குறிப்பிட்டு கேட்க
"ஏய் கிழவி... கிழவன மேல அனுப்பி வச்சுட்டு, போற வர பையனலாம் ஜாலியா சைட் அடிச்சுட்டு இருக்கியா... உன் புள்ளட்ட மாட்டி விட்டுடுவேன்..." அவரின் வயதையும் பொருட்படுத்தாமல் அவள் எப்போதும் போல் அவரை கிண்டல் செய்ய, அவரும் பதிலுக்கு எப்பொழுதும் போல் நெடித்துக் கொண்டு "ஏய் மறுபேச்சு பேசம பதில சொல்லுடி..." என்றவர் அவளின் தாடையை பற்றி அர்ஜூன் புறம் திருப்ப முயல,
அவளோ அசையாது நின்று "அந்த வெள்ளை சட்டைகாரன் தான... அவன போய் எந்த பொண்ணாவது பிடிக்கலன்னு சொல்லுவாளா..." என்று அர்ஜூனை பார்க்காமல் கூறியவள் அங்கிருந்து விடைபெற
"அடியாத்தி... நாம அவளுக்கு தெரியாம பொண்ணு பார்க்க வர சொல்லி எட்டடி பாய்ந்தா இவ பதினாறு அடி பாயராளே..." என்று ஆச்சரியமாக நினைத்தவர் அப்பொழுதே அர்ஜூன் தான் சிவாக்கு என்று தீர்மானித்து விட்டிருந்தார்.
" ஹாய்... ஹாய்..." சக்தி, அர்ஜூன் மற்றும் அர்ஜூனின் குடும்பத்தார் நின்றிருந்த இடத்திற்கு வந்த சிவா அவர்களுக்கு பணிவாக புன்னகையுடன் ஹாய் என்று கூறிவிட்டு சக்தியிடம் வா என்று கண்ணை காண்பித்தாள்.
சக்தி அவர்களிடம் "இவ என்னுடைய அக்கா... சிவரஞ்சனி..." என்று கூற இடையில் தடுத்த சிவரஞ்சனி "மூன்று நிமிடம் தான் பெரியவள்..." என்று அவசரமாக கூறினாள். எப்போதும் நான்தான் பெரியவள் என்று சண்டை போடும் தன் சகோதரி இப்போது அவசரமாக அவ்வாறு கூறியது சக்தியின் மூளைக்கு வித்தியாசமாக பட அவளை கேள்வியாக பார்த்தவன் அவளின் முறைப்பில் ஒன்றும் புரியாமல் சிவரஞ்சனி பற்றி கூறினான்.
"என்னுடைய ட்வின் சிஸ்டர்... நம்ம ஸ்கூல்ல தான் இப்போ மேக்ஸ் டீச்சரா ஒர்க் பன்னறா... ரொம்பவேஏஏஏ அமைதியான பொண்ணு..." கடைசி வார்த்தைகளை அவன் அர்ஜூனிடம் இழுத்து கூறியதிலேயே அவனுக்கு தெரிந்தது சக்தி கூறுவது பொய் என்று. அதை உணர்ந்த அவர்கள் அனைவரும் சிரிக்க, சக்தி அவளிடம் இருந்து ஒரு அடியை பரிசாக பெற்றிருந்தான்.
"அங்க பாரு அபி... மாப்பிள்ளை மகிய சமாளிக்க கஷ்டப்படராரு. நீயும் போ..." என்று அபியை அவளது அன்னை லட்சுமி அவளது கணவரிடம் அனுப்பி வைக்க முனைய, அவளை முந்திக்கொண்ட அர்ஜூன் "நீ இரு அபி, நான் போய் பார்க்கரேன்..." என்றபடி அங்கிருந்து அர்ஜூன் கிளம்பினான். அவன் சென்ற பிறகு அவர்களின் அரட்டை சூடுபிடிக்க ஆரம்பித்தது.
" லட்சுமி... நல்லா இருக்கியாம்மா... " என்றபடி அங்கு வந்து சேர்ந்த சிவசக்தி பாட்டியை சக்தி மற்றும் சிவா ஆச்சரியமாக பார்த்தனர். அவர்களின் பார்வையை படித்த பாட்டி, "லட்சுமி நான் தூக்கி வளர்த்த பொண்ணுடா... என் பொண்ணு மாதிரி..". என்றவர் லட்சுமியை அணைத்து கொள்ள
" நான் நால்லா இருக்கேன்ம்மா... நீங்க நல்லா இருக்கீங்களா..." நீண்ட வருடங்களுக்கு பிறகு சிவசக்தியை பார்த்த லட்சுமிக்கு கண்கள் பனித்து கொண்டு வந்தது.
லட்சுமி அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர் தான். லட்சுமியின் பெற்றோர் தான் அர்ஜூன் மற்றும் அபியை பார்த்து கொண்டனர். அவர்களின் இறப்பிற்குப் பிறகு அந்த ஊரின் தொடர்பு முற்றிலும் அறுபட்டு இருந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சிவசக்தியை பார்த்த லட்சுமிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்னவோ உண்மை தான்.
"எனக்கு என்னடி குறை... கொள்ளு பேரன கூட பார்த்துட்டேன்... என்னுடைய பேரன் பேத்திக்கு கல்யாணம் முடிச்சுட்டன்னா நிம்மதியா போய் சேருவேன்..."
" கிழவி... இப்படிலாம் போரேன் வாரேன்னு பேசிட்டு இருந்த நானே உன்ன போட்டு தள்ளிடுவேன்... பாரு சக்தி பாட்டி பேசறத..." தன் சகோதரனையும் துணைக்கு அழைத்த சிவசக்தி தன் பாட்டியை கண்டிக்க தவறவில்லை.
"சும்மா இரு பாப்பா... மாப்பிள்ளை வீட்டார் முன்னாடி இப்படி பேசிகிட்டு..." என்றவர் ராஜரத்தினத்திடம் "என் பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னு நாங்க முடிவு பன்னதும் முதல்ல எனக்கு தோனினது நம்ம அர்ஜூன் தான். நல்ல திறமையான பையன்... உங்களுக்கு என் பேத்திய பிடிச்சு இருக்கா..." என்று விசாரித்தார்.
அவர் விசாரித்த போது தான் இந்த விஷயம் அறிந்த சிவரஞ்சனியும் சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பின் தூரத்தில் இருக்கும் அர்ஜூனை பார்க்க அபியின் மகளை தூக்கி வைத்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.
" எங்க எல்லாருக்கும் உங்க பேத்திய பிடிச்சு இருக்கு.
அர்ஜூனும் ஓகே சொல்லிட்டான். நீங்க வீட்டுல போய் பேசிட்டு முடிவு சொல்லுங்கம்மா... நீங்க எப்ப சொல்லறீங்களோ அப்போ நாங்க பொண்ணு பார்க்க வரோம்..." என்று ராஜரத்தினம் கூற சிவசக்தி பாட்டிக்கு மிகுந்த சந்தோஷம் இருந்தது. சக்தி சிவரஞ்சனியை பார்க்க அவளின் முகத்தில் பரவி இருந்த குழப்ப ரேகையே சொல்லாமல் சொல்லியது அவளுக்கு தன்னிடம் இருக்கும் மகிழ்ச்சி அவளிடம் இல்லை என்று...
உங்களுக்கு இப்பகுதி பிடித்து இருந்தால் தவறாமல் உங்கள் வாக்குகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளவும். நன்றி...

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.