ஆழி சூழ்ந்த உலகிலே...9

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
'பார்க்க அழகாக இருக்கிறான் தான்... அதற்காக ‌தெரியாத ஒருவனை திருமணம் செய்து கொள்ள முடியுமா...பிறந்து வளர்ந்த ஊரை விட்டு குடும்பத்தை விட்டு எப்படி வேறு இடம் செல்வது...' என சிவரஞ்சனி தனக்குள் யோசித்தபடி இருந்தாள்.

அந்த நேரத்தில் அங்கு வந்த அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பச்சையப்பன் அவர்கள் இருவரையும் அழைக்க, அவருக்கு மனதினுள் நன்றி தெரிவித்த சக்தி, அர்ஜூனின் குடும்பத்தாரிடம் விடைபெற்று சிவரஞ்சனியை பச்சையப்பனுடன் அழைத்து சென்றான். அவர்கள் சென்ற இடம் அங்கு இருந்த இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த ‌அரசமரத்தின் அடியில். அவர்கள் இருவரின் பல நினைவுகள் நிறைந்த மரம் அது...

"அண்ணா... என்ன சொல்லுங்க..." பச்சையப்பனிடம் அவர் வந்த விஷயத்தை விசாரித்த சக்தி அவர் காளி பெற்ற மற்ற பரிசு பொருட்களை எப்படி கொண்டுவந்து வைப்பது என கேட்க அதை அவரையே எடுத்துக்கொள்ளும்படி கூறியவன் அவரை அங்கிருந்து அனுப்பிவிட, சிவரஞ்சனி இன்னும் யோசனையாக இருப்பதை கவனித்தவன் "ஷிவ்... கோல்ட் செயின் எங்க... காளி ஜெயிச்சது..."

"பச்சை அண்ணா பொண்ணு கழுத்துல போட்டு விட்டுட்டேன். காளி அவர் வளர்த்த காளை... அது அவருக்கு தான் சேரனும்..." என்றவள் "சக்தி... அந்த கிழவிட்ட எப்படியாவது சொல்லி இந்த சம்மந்தத்தை போகசொல்லுடா..."

"ஏன்டி... உனக்கு மாப்பிள்ளைய பிடிக்கலயா... ரொம்ப நல்லவர்... அவர் யாருன்னு உனக்கு தெரியலயா... நம்ம அர்ஜூன் அண்ணாடி..."

"அர்ஜூனா...? எனக்கு தெரிஞ்சது எல்லாம் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தான்..."

"ம்ச்... நாம செவன்த் படிக்கும் போது ட்டுவல்த் படிச்சாரே..." ஆர்வமாக கேட்ட சக்தியை பாவமாக பார்த்தவள்

"தெரியலைடா..." என்றாள்.

"ம்ச்...ஷிவ் நாம சிக்த்ஸ படிக்கும் போது இலெவன்த் படிச்சாங்களே..."

"நாம பிப்த்ஸ் படிக்கும் போது டென்த் படிச்சாங்களே..." என்று கோபமாக கூறியவள் "லூசு லூசு... நல்லா சொல்லரான் டீடெல்...நீ எப்படிடா டாக்டர் ஆன..." என்றாள்.

"ஐயோ கடவுளே... நாம சிக்த்ஸ் ஸ்டான்டர்ட படிக்கும் போது SPL ஆ இருந்தாங்களே... அர்ஜூன் அண்ணா... அர்ஜூன் விஜயன்..." என்று அவன் கூறியதும் தற்போது நினைவு வர பெற்றவள் சந்தோஷமாக தூரத்தில் இருந்த அர்ஜூனை பார்க்க அவனோ தொலைபேசியில் யாரிடமோ கடுகடுத்துகொண்டு இருந்தான். அவன் முகத்தில் இருந்த கடுகடுப்பு சிவரஞ்சனியை பயம்புறுத்த

"சக்தி... அவரு ஸ்கூல்லயே ரொம்ப ஸ்ரிக்ட்... ஓவர் படிப்ஸ் வேற... எனக்கு அதெல்லாம் செட்டாகாதுடா... அதோட உங்கள விட்டுட்டு என்னால எப்படிடா வெளியூர் போக முடியும்..."

"அப்போ நிரஞ்சன் அத்தான கட்டிக்கறயா... பக்கத்துலயே நம்ம வீடு..." என்று கேட்டவன் அவளின் முகம் அஷ்டகோணலாக மாறியதை பார்த்து திருப்தியுற்று

"ஷிவ்... அப்பா உன்னை நிரஞ்சனுக்கு முடிச்சிடலாம்னு நினைக்கிறாரு... அவர அத்தை ரொம்ப பிரைன்வாஷ் பன்னி வச்சு இருக்காங்க... உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆச்சு, அப்பரம் உன்ன வச்சு ப்ளாக் மெயில் பன்னி எனக்கும் அந்த நிக்கிக்கும் கல்யாணம் முடிச்சுடுவாங்க... அதோட என்னுடைய வாழ்கையே காலி... ஆனா நீ அர்ஜூன் அண்ணாவ கட்டிகிட்டன்னு வச்சுக்கோ நான் எப்படியாவது அவருடைய தங்கச்சிய கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்குவேன்... உனக்கு ‌நிரஞ்சனும் ஸ்ரீதர் மாதிரி ஒரு அண்ணாதான்னு எனக்கு தெரியும்... விருப்பம் இல்லாமல் அவன கட்டிட்டு வாழுறதுக்கு‌ நீ அர்ஜூன கட்டிகிட்டு நிம்மதியா வாழலாம்... யோசி... யோசிச்சு நல்ல முடிவா எடு...." பெரிய வசனம் பேசியவன் அவளை சிந்திக்க விட்டுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

நிரஞ்சன் மற்றும் நிக்கிதா இருவரும் சிவரஞ்சனியின் அத்தை பிள்ளைகள். நிரஞ்சன் சொந்தமாக சிமெண்ட் தொழிற்சாலை வைத்து இருக்கிறான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவனின் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்க, அவரின் தொழிலை அவனே முன்னின்று நன்முறையில் நடத்தி வருகிறான்.

நிரஞ்சன் நல்லவன், மாநிறமாக இருந்தாலும் அழகானவன் தான். ஆனால் சிவரஞ்சனிக்கு ஏத்தவனா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூறுவான் சக்தி. சக்தியை பொறுத்தவரை அவன் ஒரு அரைவேக்காடு... சிறிய பிரச்சினை என்றாலும் சமாளிக்க தெரியாமல் சக்தியின் தந்தை லிங்கத்தின் உதவியயே அல்லது சக்தியின் அண்ணன் ஸ்ரீதரின் உதவியையோ நாடுபவன். சக்தி தன் மாமாவாக முற்றிலும் எதிர்பார்ப்பது திறமையான நல்ல பையனை. அர்ஜூனை தவிர வேறு யாரும் அமையமுடியாது என்று தீர்மானித்து தான் சிவரஞ்சனியை மூளை சலவை செய்தான். மற்றபடி அவன் அர்ச்சனாவிற்காக எல்லாம் பேசவில்லை. பொதுவாகவே அவன் இளம் பெண்களை கண்டால் ஜொல்லிடுவது உண்டு. பத்தில் பதினொன்றாக சக்தி அர்ச்சனாவை நினைக்க, சிவரஞ்சனியோ பார்த்தவுடன் சக்திக்கு காதல் வந்துவிட்டதோ... என எண்ணி அர்ஜூனுடனான திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.

சிவரஞ்சனி அவ்வாறு நினைத்ததற்கும் காரணம் உண்டு... சக்தி ஒருமுறை தன் வாழ்க்கை துணையை பற்றிய கற்பனையை அவளிடம் கூறி இருக்கிறான். அடக்கமான அழகுடன் அமைதியாக இருக்க வேண்டும். பார்த்தவுடன் காதல் கொள்ள வேண்டும். அவளுடன் மட்டுமே திருமணம் பற்றிய பேச்சு இருக்க வேண்டும். மற்ற பெண்களை தெரியாமல் கூட திருமணம் செய்து கொள்ள போவதாக கூறமாட்டேன் என்று கூறி இருக்கிறான். இப்போது அர்ச்சனாவை திருமணம் செய்ய போவதாக சக்தி கூறியதும் சிவரஞ்சனி ஏமாந்து விட்டாள்.

அவள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சிவசக்தி பாட்டி தன் மகனிடம் அர்ஜூனை பற்றி கூறினார். முப்பது வயதில் கணவனை இழந்த சிவசக்தி தன் கணவன் தன் பெயரில் ஆரம்பித்து வைத்த பள்ளியை, அனுபவ அறிவை மட்டுமே வைத்து கொண்டு அதை திறம்பட நடத்தி இன்று முன்னணியில் இருக்கும் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக அதை கொண்டு வந்து பல ஏழை மாணவர்களுக்கும் இலவச கல்வியை அளித்த சிவசக்தி மீது அந்த குடும்பத்தினர் அனைவரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தனர். அதனால் அவர் பேச்சை தட்டாத லிங்கமும் உடனே சம்மதித்துவிட பெண் பார்க்கும் படலமும் மறுவாரமே நிறைவேற்ற பட்டது. குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ஜூனை பிடித்துவிட அன்றே மோதிரம் மாற்றப்பட்டு திருமணம் இன்னும் மூன்று மாதத்தில் என முடிவு செய்யபட்டது.

பெண்பார்க்க வந்து சென்று இதோடு பத்து நாட்கள் ஆகி இருந்தது. ஆனால் அர்ஜூனிடம் இருந்து ஒரு அழைப்பு கூட இன்னும் வரவில்லை. எல்லா பெண்களை போலவே அவளும் வருங்கால கணவனுடன் கடலைபோட ஆசைப்பட்டாள்.

அர்ஜூனின் எண்னை அவளின் கைப்பேசியில் பதிவு ஏற்றி இருக்கிறாள்தான். ஆனால் அவனை அழைத்து பேச தயக்கமாக இருந்தது. இன்னும் இரண்டரை மாதத்தில் திருமணம். இன்னும் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று நினைக்கும் போதே எதிர்காலத்தை நினைத்து வருத்தமாக இருந்தது அவளுக்கு. தயக்கத்தை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு ஒருமுறை அழைப்பு விடுத்தாள். ஆனால் ரிங் போக ஆரம்பித்ததும் கையெல்லாம் நடுங்க அதை அணைத்து விட்டாள். அவன் மிஸ்டு கால் பார்த்து விட்டு அழைப்பான் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிச்சம். வேலையில் எதாவது பிரச்சனையாக இருக்கும் என மனம் நினைத்தாலும் மூளையோ அவள் கையில் மோதிரத்தை அணிவிக்கும் போது இறுக்கமாக இருந்த அவனின் முகத்தையே நினைவு படுத்தியது.

‌. இருநாட்கள் கழித்து அவளின் கைப்பேசி எண்ணிற்கு ஒரு லேண்ட் லைன் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அது அர்ஜூன் தான் என தெரிந்து மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் அவன் கூறிய விஷயங்கள் அவளுக்கு தலைமேல் பாறாங்கல்லை போட்டது போன்று ஆயிற்று.

"மிஸ் சிவரஞ்சனி... இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லை. உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை... நான் வேற ஒரு பொண்ணை லவ் பன்னரேன்... சோ நீங்களே இந்த கல்யாணத்தை எந்த பிரச்சனையும் பன்னாமல் நிறுத்திடுங்க..." என்றவன் அவள் பேசுவதற்கு கூட இடம் அளிக்காமல் தொடர்பை தூண்டித்துவிட்டான்.
சிவரஞ்சனிக்கு மனதின் ஓரத்தில் ஒரு வலி ஏற்பட்டது மட்டுமின்றி தன் தன்மானம் சீண்டப்பட்டதை போன்று உணர்ந்தாள். அவள் ஒரு வார்த்தை கூறினாள் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவர். ஆனால் அதன் பிறகு அதே முகூர்த்தத்தில் நிரஞ்சனுடன் திருமணம் செய்து வைத்துவிடுவர் என்பது அவளுக்கு தெரியும்.
அர்ஜூனுடன் தன் மகளுக்கு திருமணம் என்று லிங்கம் அவரின் தங்கையிடம் தகவல் தெரிவித்ததும் அவர் வெகுண்டு எழுந்து விட்டார். அத்துடன் அவர் தன் அண்ணனிடம் பேசவில்லை. தற்போது திருமணம் நின்றால் இதை சாக்காக வைத்து கொண்டு கட்டாயம் நிரஞ்சனுடனான தன் திருமணத்தை மட்டுமின்றி நிக்கியுடனான தன் சகோதரனின் திருமணத்தையும் நடத்தி காட்டி விடுவார்... என பலவகையில் யோசித்தவள் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அவனே நிறுத்தி கொள்ளட்டும் என்று விட்டுவிட கடவுள் வேறொரு திட்டம் வகுத்து இருந்தார்.
திடீரென ஒருநாள் சிவசக்தி பாட்டி உடல்நலம் குன்றி போக அவரின் விருப்பப்படி அர்ஜூன் மற்றும் சிவரஞ்சனியின் திருமணம் குறித்த தேதிக்கு முன்பே அவசர அவசரமாக கோவிலிலேயே நடத்தப்பட்டது. அன்பு பேத்தியின் திருமணத்தை கண்குளிர பார்த்தவர் மறுநாள் காலையில் கண்விழிக்கவே இல்லை. மீளா நித்திரையில் ஆழ்ந்து இருந்தார்.
துக்க வீட்டில் புதுமண தம்பதிகள் நிறைய நாள் இருக்க வேண்டாம் என்று சிவரஞ்சனியின் குடும்பத்தினர் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்க முதலில் தன் பாட்டியின் நினைவில் உழன்று கொண்டு இருந்தவள் பிறகே கவனிக்க ஆரம்பித்தாள் அர்ஜூனின் ஒதுக்கத்தை. அவளாக எதாவது பேசினாள் முகத்தில் அடித்தாற் போன்று விருட்டென பேசுவான், சிடுசிடுவென எறிந்து விழுவான்.
ஆனால் அவன் என்றும் தன் கண்ணியம் தவறியதில்லை. பழிவாங்குகிறேன் என்று சினிமாவில் காட்டுவதை போன்று மூச்சு முட்ட குடித்து விட்டு அடித்ததில்லை, சிகரெட்டில் சூடு வைத்தது இல்லை, அவளின் சுண்டுவிரலை கூட தொட்டது இல்லை. முறைக்கும் மாமனாகவும், சிடுசிடு சின்ராசாகவும் இருப்பானே தவிர தரம் குறைந்த வார்த்தைகளை அவளிடம் பயன்படுத்தியது இல்லை. அதனாலேயே சிவரஞ்சனிக்கு வருத்தமாக இருந்தது. அநியாயமாக ஒரு காதல் ஜோடியை பிரித்து விட்டோமே என்று.
ஆனால் அவன் மருத்துவமனையில் இருக்கும் போது பேசிய பேச்சுக்கள் அவள் தன்மானத்தை சீண்டிவிட தன் குற்ற உணர்வை ஓரம் கட்டிவிட்டு அவனிடம் இருந்து தள்ளியே இருந்தாள்‌. ஆனால் அவளின் நேரம் ராக்கி மற்றும் ப்ரீத்திக்காக திரும்பவும் அவனுடனேயே அவளை பேசவைத்தது... ஆனால் புதிய சண்டை மூண்டது தான் மிச்சம் என்று அவள் நினைத்து கொண்டு இருக்க ராக்கியின் பிரச்சினையை சுமூகமாக முடித்துவிட்டு வந்திருந்தான் அர்ஜூன்.

- இப்பகுதி உங்களுக்கு பிடித்து இருந்தால் தவறாமல் உங்கள் வாக்குகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளவும்- நன்றி...
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...9
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN